என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 22 பிப்ரவரி, 2012

பக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-7


பக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]குழந்தை ஸ்ரீகிருஷ்ணனை கோகுலவாசிகளான - கோபிகைகள், முதன் முதலில், யசோதா தேவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று தான் பார்க்க வந்தார்கள். 

ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் ஆத்மஸ்வரூபமானதால் அவர்கள் மனதை கவர்ந்து விட்டான். அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையைப் பார்க்க யசோதா தேவியின் வீட்டிற்கு கோபிகைகள் வந்து கொண்டிருந்தார்கள். 

வீட்டு வேலைகளையும், பர்த்தா, குழந்தைகள், மாடு கன்றுகளையும் கவனித்துக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணனையும் பார்க்க வந்தார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணனே அவர்கள் வீடுகளுக்குச்சென்று அனேக லீலைகள் புரிந்து மேலும் அவர்கள் மனதைக்கொள்ளை கொண்டார்.

ஸ்ரீ கிருஷ்ணன் பகலில் மாடுகள் மேய்க்கப் போய்விட்டு சாயங்காலம் வருவதற்குள் அவன் ஞாபகமாகவே இருந்தார்கள். எப்போது திரும்பி வருவான் என்று காத்துக்கொண்டு இருந்துவிட்டு அவன் வந்த உடன், கோபிகைகள் பார்க்க வந்து விடுவார்கள்.

அவனைப் பார்க்காமல் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக அவர்களுக்குத் தோன்றியது. பால் கறக்கும்போதும், தயிர் கடையும் போதும், இதர வீட்டு வேலைகள் செய்யும் போதும் ஸ்ரீ கிருஷ்ணன் ஞாபகமாகவே இருந்து கொண்டும் அவன் லீலைகளைப்  பாடிக்கொண்டும் நாட்களைக் கழித்து வந்தார்கள். 

Evolution இல் gradual ஆக [படிப்படியாக] பக்தி வளர்ந்து கொண்டு வந்து வீட்டு வேலைகளை சரிவர செய்ய முடியாமலும், அவற்றை சரிவர முடிக்க முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணனை பார்க்க ஓடி வந்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணனின் வேணு கானத்தைக் கேட்டவுடன் அவர்களது மனது அவனிடம் போய்விடும். நாட்கள் ஆக ஆக பக்தி முற்றியவுடன், பர்த்தா, குழந்தைகள், வீட்டு வேலைகள் முதலியவற்றை விட்டு விட்டு பகவானிடம் சென்றார்கள். ஸ்ரீ பகவான் ராசலீலையை அனுபவிக்க வைத்தார்.
ப்ரம்மானந்தத்தையும் அனுபவிக்கும் படி செய்தார். யக்ஞ பத்னிகள் பகவானைப் பார்க்காமலேயே அவன் செய்த பால லீலைகளைப்பற்றி கேட்டே பக்தி உண்டாகி அவனிடம் சென்றார்கள்.  

ஸ்ரீமத் நாராயணீயத்தில் 52 தசகங்களில் [37 to 88] ஸ்ரீகிருஷ்ண சரித்திரத்தை சொல்லியிருக்கிறார். இதில் பால லீலைகள் மட்டும் 34 தசகங்களில் பாடியிருக்கிறார். இதிலிருந்து பாலலீலைகளுக்கு எவ்வளவு முக்யத்வம் கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளை கேட்டும், படித்தும், நினைத்தும் வந்தால் பக்தி வளரும். ஸ்ரீ சுகர், ஸ்ரீ சதாசிவ ப்ரமேந்திரர், ஸ்ரீ நாராயண தீர்த்தர் போல் பல மஹான்கள் ஞானிகள் ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளில் மூழ்கி நிறைய பாட்டுக்கள் பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பக்தி மார்க்கம் தொடரும்

24 கருத்துகள்:

 1. பக்தி மார்க்கத்தில் நானும் பயணிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. Evolution இல் gradual ஆக [படிப்படியாக] பக்தி வளர்ந்து கொண்டு வந்து வீட்டு வேலைகளை சரிவர செய்ய முடியாமலும், அவற்றை சரிவர முடிக்க முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணனை பார்க்க ஓடி வந்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணனின் வேணு கானத்தைக் கேட்டவுடன் அவர்களது மனது அவனிடம் போய்விடும்.
  அருமை! தொடரட்டும் உங்கள் பக்தி மார்க்கம்!

  காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 3. அருமை....

  தொடரட்டும் உங்கள் பக்தி பகிர்வுகள்....

  பதிலளிநீக்கு
 4. பால லீலைகளை ரசித்தவண்ணம் நானும் தொடர்கிறேன். அழகாகக் கொண்டுசெல்கிறீர்கள் தொடரை. பாராட்டுகள் வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 5. பல மஹான்கள் ஞானிகள் ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளில் மூழ்கி நிறைய பாட்டுக்கள் பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது./

  அழகான எளிமையான பலலீலைகல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 6. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் ஆத்மஸ்வரூபமானதால் அவர்கள் மனதை கவர்ந்து விட்டான்

  ஆத்மார்தமான ஈர்ப்பு பகவானுடன் ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்த அற்புதம்..

  பதிலளிநீக்கு
 7. யக்ஞ பத்னிகள் பகவானைப் பார்க்காமலேயே அவன் செய்த பால லீலைகளைப்பற்றி கேட்டே பக்தி உண்டாகி அவனிடம் சென்றார்கள்.

  யாக யக்ஞங்கள் செய்த பர்த்தாக்களை விட யகஞ பத்னிகளே உயர்வாக பேசப்படுகிறார்கள்..

  பதிலளிநீக்கு
 8. பாலலீலைகளுக்கு எவ்வளவு முக்யத்வம் கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.

  பாகவதத்திலும், நாராயணீயத்திலும் பால்லீலைகளே மனம் கொள்ளைகொள்ளும் வகையில் அழகாக அமைந்திருக்கும்..

  பதிலளிநீக்கு
 9. //ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளை கேட்டும், படித்தும், நினைத்தும் வந்தால் பக்தி வளரும். //

  அருமை.
  தொடருங்கள் பக்தியைப்பற்றி, நாங்களும் பயன் பெறுகிறோம்.

  பதிலளிநீக்கு
 10. ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளை கேட்டும், படித்தும், நினைத்தும் வந்தால் பக்தி வளரும். ஸ்ரீ சுகர், ஸ்ரீ சதாசிவ ப்ரமேந்திரர், ஸ்ரீ நாராயண தீர்த்தர் போல் பல மஹான்கள் ஞானிகள் ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளில் மூழ்கி நிறைய பாட்டுக்கள் பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//

  இவர்கள் எல்லாம் எழுதிய பாடல்கள் தான் பக்தி மார்க்கத்தை வளர்த்து இருக்கிறது. அவர்களுக்கும், அதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 11. கிருஷ்ணனின் பால லீலைகளை நாங்களும் படித்து ரசிக்கிறோம்... தொடருங்கள் சார்.

  பதிலளிநீக்கு
 12. பக்தி முற்றினால் பைத்தியமாவார்கள் என்று சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
 13. இப்ப நான் இருக்கும் இடத்தில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் 60- வயசான ஒரு அம்மா திவ்யபிரபந்தம் படிதுது அர்த்தமும் சொல்லி வராங்க. கிருஷ்ணரோட குழந்தைப் பருவத்திலேந்து ஆரம்பித்து அழகா சொல்லி வராங்க. இந்த பதிவு படித்ததும் அதுதான் நினைவில் வந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் June 1, 2015 at 6:16 PM
   இப்ப நான் இருக்கும் இடத்தில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் 60- வயசான ஒரு அம்மா திவ்யபிரபந்தம் படித்து அர்த்தமும் சொல்லி வராங்க. கிருஷ்ணரோட குழந்தைப் பருவத்திலேந்து ஆரம்பித்து அழகா சொல்லி வராங்க. இந்த பதிவு படித்ததும் அதுதான் நினைவில் வந்தது//

   கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் அதனை கேட்க நேரில் வரணும் போலவும் ஆசையாக உள்ளது. :))))

   நீக்கு
 14. அந்த இரண்டாவது படம் அபூர்வமான படம். அருமை.

  லயாக்குட்டிக்கு கிருஷ்ணன் கதை தினமும் சொன்னதன் விளைவு:

  ஒரு நிச்சயதார்த்தத்தில் ஹரிகெசநல்லூர் வெங்கட்ராமனின் மகன் கிருஷ்ண பிரசாத்தை சந்தித்த போது, “லயாக்குட்டி, இதுதான் கிருஷ்ணா மாமா” என்று சொன்னேன். அதற்கு அவள் “மாமா நிறைய வெண்ணை சாப்பிடுவாளா” என்று கேட்டாள்.

  நல்ல வேளை “மாமா வெண்ணை திருடுவாளா”ன்னு கேக்காம இருந்தாளேன்னு சந்தோஷப் பட்டேன். ,

  பதிலளிநீக்கு
 15. @Jayanthi Jaya

  //நல்ல வேளை “மாமா வெண்ணை திருடுவாளா”ன்னு கேக்காம இருந்தாளேன்னு சந்தோஷப் பட்டேன். ,//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)))))))))))))))

  பதிலளிநீக்கு
 16. பொம்புள ஆளுகலா கோலாட்டம் போடுராங்களா. படம் நல்லா கீது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 17, 2015 at 6:00 PM

   //பொம்புள ஆளுகலா கோலாட்டம் போடுராங்களா. படம் நல்லா கீது.//

   அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரேம பக்திகொண்ட கோபியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்.

   நீக்கு
 17. கோபியர்கள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் பக்தி கொண்ட விதம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீமத் நாராயணியம். நாலாயிர திவ்ய பிரபந்தம் பக்தி நூலில் கூட ஸ்ரீகிருஷ்ணரின் குழந்தை பருவம் உன்னதமாக விவரிக்கப்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
 18. முதல் மற்றும் மூன்றாம் படங்கள் அருமை. நல்ல பகிர்வு...

  பதிலளிநீக்கு