ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-4
அழகான நெற்றி
ஊர்த்வ திலகம்
வளைந்த புருவங்கள்
தாமரஸ நேத்ரம்
குளிர்ந்த கடாக்ஷம்
காதுகளில் குண்டலம்
பருத்த கன்னங்கள்
உன்னத நாசிகை
திவ்யாதர பிம்பம்
சுந்தரமந்தஹாஸம்
கழுத்தில் சங்கிலி, புலிநகம்
கைகளில் கங்கணங்கள்
விரல்களில் ரத்தின மோதரங்கள்
இடுப்பில் தங்க அரைக்ஞான்
பட்டுகெளபீணம் (திகம்பர வேஷம்)
பாதங்களில் தண்டை கொலுசு ஜல்ஜல் என்ற சப்தம் கொடுக்கிறது
நீலமேகச்யாமலன்
மனதைக்கவரக்கூடிய திவ்ய ரூபம்.
மிருகமாகவோ, தேவனாகவோ, அசுரனாகவோ, மனிதனாகவோ இருந்தாலும் யாருக்குமே அனுக்கிரஹம் செய்வார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதையின் 18 ஆவது அத்யாயத்தின் 61 ஆவது ஸ்லோகத்தின்படி**, பகவான் ஒவ்வொருவரின் ஹ்ருதயத்திலும் வாசம் செய்கிறார். ஆனால் நமக்கு அவர் தெரியவில்லை. காரணம் நம் ஹ்ருதயத்தில் அழுக்குகள் ஜன்ம ஜன்மாவாக நிறைய சேர்ந்திருக்கிறது. அவைகள் துடைக்கப்பட வேண்டும்.
[அர்ஜுனா! ஈஸ்வரனானவன் எல்லாப்பிராணிகளையும் யந்த்ரத்தில் மாட்டியவை போல, மாயையினால் ஆட்டுவித்துக் கொண்டு, எல்லாப் பிராணிகளுடைய ஹிருதயத்திலும் தங்கி நிற்கின்றான். ]
**
”ஈஸ்வர: ஸர்வபூதானாம்
ஹ்ருத்தேஸே(அ)ர்ஜுன திஷ்டதி !
ப்ராமயன் ஸர்வபூதானி
யந்த்ராரூடானி மாயயா !!
நமக்கு விருப்பு வெறுப்பு இருப்பதினால் காரியங்கள் செய்கிறோம். பாபங்கள் ஏற்படுகிறது. பாப கர்மாவின் பலன் மீண்டும் ஜன்மா எடுக்கிறோம். திருப்பித்திருப்பி ஜன்மா எடுத்து பாபங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். ஜன்ம சக்ரத்தை அறுப்பதற்கு பகவத் கதைகளைக்கேட்டு பகவானை சிந்திக்க வேண்டும்.
சிரஸில் மயில் தோகை
குடிலகுந்தலம் நெற்றியை மறைக்கிறது
அழகான நெற்றி
ஊர்த்வ திலகம்
வளைந்த புருவங்கள்
தாமரஸ நேத்ரம்
குளிர்ந்த கடாக்ஷம்
காதுகளில் குண்டலம்
பருத்த கன்னங்கள்
உன்னத நாசிகை
திவ்யாதர பிம்பம்
சுந்தரமந்தஹாஸம்
கழுத்தில் சங்கிலி, புலிநகம்
கைகளில் கங்கணங்கள்
விரல்களில் ரத்தின மோதரங்கள்
இடுப்பில் தங்க அரைக்ஞான்
பட்டுகெளபீணம் (திகம்பர வேஷம்)
பாதங்களில் தண்டை கொலுசு ஜல்ஜல் என்ற சப்தம் கொடுக்கிறது
நீலமேகச்யாமலன்
மனதைக்கவரக்கூடிய திவ்ய ரூபம்.
பக்தியின் பெருமையை வர்ணிக்கும் போது:-
பகவானுக்கு, தான் அனுக்கிரஹம் செய்யும் போது பக்தி இருந்தால் போதும்.
மிருகமாகவோ, தேவனாகவோ, அசுரனாகவோ, மனிதனாகவோ இருந்தாலும் யாருக்குமே அனுக்கிரஹம் செய்வார்.
இதைக்காட்டுவதற்கு மிருகமான கஜேந்திரன், வானரனான சுக்ரீவன், பக்ஷியான ஜடாயூ, கரடியான ஜாம்பவான், அசுரபாலகனான ப்ரஹ்லாதன், ஐந்து வயதுச் சிறுவனான துருவன், வேடனான குகன், வேடஸ்த்ரீயான சபரி, அசுரணான விபீஷணன் இவர்கள் எல்லோருக்கும் வித்யாசமில்லாமல் அனுக்கிரஹம் செய்திருக்கிறார்.
கபடமில்லாத பக்தியைத்தான் பகவான் பார்க்கிறார் என்பதை இந்தக் கதைகளிலிருந்து தெரிந்து கொண்டு நாம் பக்தி செய்தால் பகவானை அடையலாம் என்ற நம்பிக்கை பிறக்கும்.
பகவத் சரித்திரம், லீலைகள், ஸ்தோத்ரங்கள், ரூபவர்ணனம், பகவந்நாமாக்கள் அடங்கியது தான் ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம் போன்ற இதிகாச புராணங்கள். இவைகளின் நோக்கமே, நாம் பகவத்ரூபத்தை த்யானம், நாம சங்கீர்த்தனம் செய்து உய்ய வேண்டும் என்பதுதான். வேறு ஒன்றும் காரணம் இல்லை. கதை சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் ஒரே மாதிரி பலன் பகவத் அனுக்ரஹம்.
இந்த காலத்தில் இந்த மாதிரி உபந்யாசங்களைக் கேட்க வசதி குறைவாக இருப்பதால், பக்தர்கள் பகவத் கதையை அடிக்கடி மனனம் செய்து [திருப்பித் திருப்பி நினைத்துப் பார்த்து] வருவது நல்லது. தங்கள் க்ருஹத்திலேயே ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம் க்ரந்தங்களை பாராயணம் செய்து வந்தால் பகவத் அனுக்ரஹத்தை சுலபமாக அடையலாம்.
இந்த காலத்தில் இந்த மாதிரி உபந்யாசங்களைக் கேட்க வசதி குறைவாக இருப்பதால், பக்தர்கள் பகவத் கதையை அடிக்கடி மனனம் செய்து [திருப்பித் திருப்பி நினைத்துப் பார்த்து] வருவது நல்லது. தங்கள் க்ருஹத்திலேயே ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம் க்ரந்தங்களை பாராயணம் செய்து வந்தால் பகவத் அனுக்ரஹத்தை சுலபமாக அடையலாம்.
-o-o-o-o-o-o-
இதன் அடுத்தடுத்த பகுதிகளில்
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருளியுள்ள
“பக்தி மார்க்கம்” ;
”ஸ்ரீமத் ராமாயணம்” ;
“ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸம்தாத்ரத்தின் மஹிமை”
“ஸ்ரீமத் சுந்தர காண்டத்தின் அபார மஹிமை” ;
“ஸ்ரீக்ருஷ்ணாஷ்டோத்தர சதநாமஸ்தோத்ரம்”
முதலியன பற்றிய அரிய தகவல்கள்
சிறு சிறு பகுதிகளாக தரப்பட உள்ளன.
தொடரும்
நமது ஹ்ருதயத்தின் அழுக்கை துடைத்தால் பகவான் தெரிவார்.பஹவத் அனுகிரஹத்திற்கு பக்தி மட்டுமதான் தேவை. பகவானுக்கு எல்லோரும் ஒன்றுதான்//
பதிலளிநீக்குமிக சிறப்பான விளக்கம்.
ஸ்ரீ கிருஷ்ண வர்ணனை அபாரம்.குழந்தை கிருஷ்ணனை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு.
தொடருங்கள்,சார்.பகவத் அனுகிரஹத்தினை பெற காத்திருக்கிறோம்.
தொடருகிறேன்.கண் சிமிட்டும் கிருஷ்ணர் மிக அழகு.
பதிலளிநீக்குமனதைக்கவரக்கூடிய திவ்ய ரூபம் அலங்கார ரூப வர்ண்னை அழகாய் இருக்கிறது...
பதிலளிநீக்கு"தெய்வம் இருப்பது எங்கே ?"
பதிலளிநீக்குஅது இங்கே !! வேறெங்கே
அருமையான பகிர்வுக்குப் பாரட்டுக்கள்..
எல்லாப்பிராணிகளையும் யந்த்ரத்தில் மாட்டியவை போல, மாயையினால் ஆட்டுவித்துக் கொண்டு, எல்லாப் பிராணிகளுடைய ஹிருதயத்திலும் தங்கி நிற்கின்றான். ]
பதிலளிநீக்குஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா...
ஆட்டுவிப்பவனும் ஆடுபவனும் நீயே நீயே கண்ணா.. கண்ணா...
அரிய தகவல்கள் அபாரமாகத்தந்த
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுகளுக்கு நன்றி.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
Aha!
பதிலளிநீக்குarumai.
miga arumai.
Waiting to read your post with thrust.
I love love and more love the kutty krishna blinking his eyes with me.
viji
Aha!
பதிலளிநீக்குarumai.
miga arumai.
Waiting to read your post with thrust.
I love love and more love the kutty krishna blinking his eyes with me.
viji
"கபடமில்லாத பக்தியைத்தான் பகவான் பார்க்கிறார்"
பதிலளிநீக்குஅது உண்மை தான்; இந்தக் காலத்திற்கு ஒத்துவருவதில்லை!
கண்சிமிட்டும் கண்ணன் அழகோ அழகு!!
பதிலளிநீக்குகபடமில்லாத பக்தியைத்தான் பகவான் பார்க்கிறார் என்பதை இந்தக் கதைகளிலிருந்து தெரிந்து கொண்டு நாம் பக்தி செய்தால் பகவானை அடையலாம் என்ற நம்பிக்கை பிறக்கும்.//
பதிலளிநீக்குபக்தி செய்து பகவானை அடையலாம்
உண்மை.உண்மையான பக்திக்கு கடவுள் நிச்சியம் அருள்புரிவார்.
கண்சிமிட்டும் கண்ணன் அழகு.
நல்ல இறை செய்திகள்!
நன்றி.
பகவான் ஒவ்வொருவரின் ஹ்ருதயத்திலும் வாசம் செய்கிறார். ஆனால் நமக்கு அவர் தெரியவில்லை. காரணம் நம் ஹ்ருதயத்தில் அழுக்குகள் ஜன்ம ஜன்மாவாக நிறைய சேர்ந்திருக்கிறது. அவைகள் துடைக்கப்பட வேண்டும்.
பதிலளிநீக்கு"கருணை நிறைந்த உள்ளம்
கடவுள் வாழும் இல்லம்" எனும் கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வ்ந்தது!
அருமையான பதிவு!
-காரஞ்ச்ன்(சேஷ்)
நன்றி. பாகவதம் ..... ஒன்று போதும்
பதிலளிநீக்குநன்றி. பாகவதம் ..... ஒன்று போதும்
பதிலளிநீக்கு//கபடமில்லாத பக்தியைத்தான் பகவான் பார்க்கிறார்//
பதிலளிநீக்குஉண்மையான வார்த்தைகள்.
படங்களில் கிருஷ்ணர் அழகோ அழகு...
மனதில் பகவத் நாமாவைப் பாராயணம் செய்வது ஒன்றே மனதின் மாசைப்போக்க சிறந்த வழி.
பதிலளிநீக்கு//பக்தியைத்தான் பகவான் பார்க்கிறார் என்பதை இந்தக் கதைகளிலிருந்து தெரிந்து கொண்டு நாம் பக்தி செய்தால் பகவானை அடையலாம் என்ற நம்பிக்கை பிறக்கும்.
பதிலளிநீக்குபகவத் சரித்திரம், லீலைகள், ஸ்தோத்ரங்கள், ரூபவர்ணனம், பகவந்நாமாக்கள் அடங்கியது தான் ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம் போன்ற இதிகாச புராணங்கள். இவைகளின் நோக்கமே, நாம் பகவத்ரூபத்தை த்யானம், நாம சங்கீர்த்தனம் செய்து உய்ய வேண்டும் என்பதுதான். வேறு ஒன்றும் காரணம் இல்லை. கதை சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் ஒரே மாதிரி பலன் பகவத் அனுக்ரஹம்.//
எதையுமே கதை மூலமாகச்சொன்னால்தானே மூளையில் பதிகிரது.
பூந்தளிர் May 29, 2015 at 6:15 PM
நீக்கு**பக்தியைத்தான் பகவான் பார்க்கிறார் என்பதை இந்தக் கதைகளிலிருந்து தெரிந்து கொண்டு நாம் பக்தி செய்தால் பகவானை அடையலாம் என்ற நம்பிக்கை பிறக்கும்.
பகவத் சரித்திரம், லீலைகள், ஸ்தோத்ரங்கள், ரூபவர்ணனம், பகவந்நாமாக்கள் அடங்கியது தான் ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம் போன்ற இதிகாச புராணங்கள். இவைகளின் நோக்கமே, நாம் பகவத்ரூபத்தை த்யானம், நாம சங்கீர்த்தனம் செய்து உய்ய வேண்டும் என்பதுதான். வேறு ஒன்றும் காரணம் இல்லை. கதை சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் ஒரே மாதிரி பலன் பகவத் அனுக்ரஹம்.**
//எதையுமே கதை மூலமாகச்சொன்னால்தானே மூளையில் பதிகிறது.//
காட்சிகளை நேரில் கண்ணால் பார்ப்பதைவிடவும், நான் கதை மூலமாகச் சொல்வதுதான் தங்களுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். :)
தங்களின் அன்பு வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.
இந்த காலத்தில் இந்த மாதிரி உபந்யாசங்களைக் கேட்க வசதி குறைவாக இருப்பதால்//
பதிலளிநீக்குஆனால் இன்று வசதி அதிகமாகி விட்டது அண்ணா.
YOU TUBE ல் யாருடைய உபந்யாசத்தை வேண்டுமானாலும் கேட்கலாம் நமக்கு நேரமும், கேட்க வேண்டும் என்ற உத்வேகமும் இருந்தால்.
நேற்று கூட திருமதி விசாகா ஹரியின் கிருஷ்ண லீலா ஹரி கதை கேட்டு அனுபவித்தேன்.
கண்ண சிமுட்டுர கிருஷ்ணரு சூப்பராகீதுங்க.
பதிலளிநீக்குmru October 17, 2015 at 3:12 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//கண்ண சிமுட்டுர கிருஷ்ணரு சூப்பராகீதுங்க.//
:) மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி :)
எதையுமே கதை ரூபத்தில் கேட்கும் போது மனதில் நன்றாக பதிந்து விடுகிறது. அதையெல்லாம் தெரிந்து கொள்ள நம்மிடம் ஒரு ஆர்வம் இருக்க வேண்டும். கண் சிமிட்டும் கிருஷ்ணர் அழகோ அழகு.
பதிலளிநீக்குபகவானுக்கு, தான் அனுக்கிரஹம் செய்யும் போது பக்தி இருந்தால் போதும். // இப்ப இருக்குற பல கமர்ஷியல் விஷயங்களை இன்டைரக்டா குத்துரமாதிரி இருக்கு..
பதிலளிநீக்கு