என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

பக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-8


பக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]
ஆகையால் கோபிகைகள் மாதிரி நாமும் பக்தி செய்ய வேண்டும். நாமும் முதலில் பெரியோர்கள் ஆசார்யர்கள் சொல்வதைக் கேட்டு சிறுவயதிலிருந்தே பகவத் பஜனத்தை [நாம சங்கீர்த்தனம், ஸ்தோத்ர பாராயணம், நாம் ஜபம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் நாராயணீயம் பாராயணம் செய்வது] செய்ய ஆரம்பிக்க வேண்டும். 

அதில் ருசி ஏற்பட்டு மேலும் மேலும் செய்யத்தூண்டும். வளர்ந்து வரும் போது முதலில் 10, 15 நிமிஷம் நாம ஜபம், பாராயணங்கள், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் கொஞ்ச நேரம் செய்து வருவோம்.  பிறகு நாளாக நாளாக பஜனத்தை அதிக நேரம் செய்ய வேண்டும் என்று தோன்றும்.    


பகவத் க்ருபையால் பஜன நேரத்தை Increase செய்துகொண்டு 1 மணி நேர நாமஜபம், நிறைய ஆவர்த்தி விஷ்ணு ஸஹஸ்ரநாமம் [10, 21, 51 ஆவர்த்திகள்] gradual ஆக நாள் முழுவதும் எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் பகவ்ந் நாம ஸ்மரணம் மனதில் இருந்துகொண்டு பகவானின் ஞாபகமாகவே இருக்கலாம்.

இந்த மாதிரி பகவத் பஜனத்தை அதிகமாக்கிக்கொண்டு வந்தால் லெளகீக விஷயங்கள், பத்னி, புத்ரன், புத்ரி, பதவி, பணம் இவைகளில் ஆசை குறைந்து கொண்டு வந்து, பக்தி முதிர்ச்சியடைந்து ஜீவன் முக்தி நிலையை பகவத் க்ருபையால் கோபிகைகள் மாதிரி அடையலாம். கோபிகைகளின் பக்தியை ஆதர்சமாக கொள்ள வேண்டும்.   

கோபிகைகளும் முதலில் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு பகவானிடம் ஈடுபட்டார்கள். இதுதான் ஸ்ரீமத் பாகவதத்தின் தாத்பர்யம். வேறு [கர்ம, ஞான] மார்க்கங்களுக்கு நம் உழைப்பு நிறைய தேவைப்படும். 100% உழைக்க வேண்டும்.


ஆனால் பக்தி மார்க்கத்தில் பகவத் க்ருபை: 33 + 1/3% 


பகவானின் மங்கள ஸ்வரூபத்தில் மனதைக்கவரக்கூடிய தன்மை 33 + 1/3%


[ பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் மங்கள ஸ்வரூப வர்ணனை ஏற்கனவே ”தெய்வம் இருப்பது எங்கே?” என்ற பதிவினில் கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_19.html  ]   


மீதி  33 + 1/3% மட்டும் நம் உழைப்பு  இருந்தால் போதும்.


பக்தி மார்க்கம் ஆரம்பத்திலிருந்தே நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். பக்தி மார்க்கத்தின் சிறப்பு இப்படிப்பட்டது. ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், நாம் பகவானிடத்தில் சிறிய குழந்தையாக இருந்து பக்தி செய்வதன் பெருமையை “இச்சா-உபாயம்”; ”கிருபா-சாதனம்”; ”பலம்-மதுரம்”  என்று ஒரு மஹான் வர்ணித்திருப்பதாகச் சொல்லுவார்.


குழந்தைகள் ஆசைப்படுவதை பெற்றோர்கள் தெரிந்துகொண்டு அன்பினால் [கிருபையால்] எவ்வளவு சிரமமாக இருந்தாலும் நடத்தி வைப்பதுபோல பகவான் நமக்கு எது ஹிதமோ அதை நாம் கேட்காமலே கொடுப்பார். 


அதன் பலன் மதுரமாக இருக்கும். நமக்கு மோக்ஷத்தையே வழங்குவார். நாம் செய்ய வேண்டியது பகவத் பஜனம். நாமஜபம் ஒன்றே. அதுவே எல்லாவற்றையும் கொடுக்கும்.  
-oooOooo-[இந்தத் தொடரின் அடுத்த பகுதி 
ஸ்ரீமத் ராமாயணம் பற்றியது.
நாளை வெளியிடப்பட உள்ளது]

21 கருத்துகள்:

 1. குழந்தைகள் ஆசைப்படுவதை பெற்றோர்கள் தெரிந்துகொண்டு அன்பினால் [கிருபையால்] எவ்வளவு சிரமமாக இருந்தாலும் நடத்தி வைப்பதுபோல பகவான் நமக்கு எது ஹிதமோ அதை நாம் கேட்காமலே கொடுப்பார். //

  ஆம், நிச்சியமாய் நமக்கு எது தேவையோ அதை நிச்சியமாய் நாம் கேட்காமலே கொடுப்பார் இறைவன்.

  அருமையான பகிர்வு சார்.

  பதிலளிநீக்கு
 2. உண்மை தான்...நாமஸ்மரணத்திற்குத் தான் எத்தனை வலிமை!!

  என் க்ருஷ்ணின் அழகே அழகு!

  பதிலளிநீக்கு
 3. 33 + 1/3% மட்டும் நம் உழைப்பு இருந்தால் போதும்.


  பக்தி மார்க்கம் இனிமையாய் பயன் தருவது போல அருமையான் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. [கர்ம, ஞான] மார்க்கங்களுக்கு நம் உழைப்பு நிறைய தேவைப்படும். 100% உழைக்க வேண்டும்.

  பக்திமார்க்கமே எளிமையானது..

  ம்ற்றமார்க்கங்களில் முழுமையடையாவிட்டால் சற்றும் பலன் கிடைக்காமல் மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்க நேரிடும் சிரமம் உண்டு...

  பதிலளிநீக்கு
 5. நாமஜபம் ஒன்றே எல்லாவற்றையும் கொடுக்கும்.

  மதுரமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 6. //பக்தி மார்க்கம் ஆரம்பத்திலிருந்தே நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும்.//

  உண்மை.பகவத்நாமாவிற்கு உள்ள வலிமையை மிக அழகாக சொல்லியிருகீங்க. மிகச்சிறப்பான பதிவு.

  பதிலளிநீக்கு
 7. ஆமா உண்மையிலும் உண்மைதான் நாம ஸ்மரணத்திற்கு எத்தனை வலிமை

  பதிலளிநீக்கு
 8. தொடருகிறேன்,முழுவதும் ஆன்மீகத்தில்,பக்திய்ல் அழைத்துச்செல்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 9. குழந்தைகள் ஆசைப்படுவதை பெற்றோர்கள் தெரிந்துகொண்டு அன்பினால் [கிருபையால்] எவ்வளவு சிரமமாக இருந்தாலும் நடத்தி வைப்பதுபோல பகவான் நமக்கு எது ஹிதமோ அதை நாம் கேட்காமலே கொடுப்பார்
  Ahawhat a ward.
  Nice post sir.
  viji

  பதிலளிநீக்கு
 10. பகவன் நாமாவை எப்போது ஜபித்துக் கொண்டிருந்தால் மன அமைதி கிடைக்கும். மனமும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 11. கோபிகைகளின் பக்தியை ஆதர்சமாக கொள்ள வேண்டும்.

  இருப்பதிலேயே கடினம் கோபிகைகள் போல பக்தி செய்வது.

  பதிலளிநீக்கு
 12. குறிப்பறிந்து தேவைகளைத் தீர்ப்பவனே இறைவன்.

  பதிலளிநீக்கு
 13. நல்ல நல்ல விஷயங்களை எங்களுக்கு சொல்லி வரீங்க. நல்ல விஷயங்கள் படிக்கவும் கேட்கவும் கூட ஒரு கொடுப்பினை வேணுமில்லயா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் June 1, 2015 at 6:20 PM
   //நல்ல நல்ல விஷயங்களை எங்களுக்கு சொல்லி வரீங்க.
   நல்ல விஷயங்கள் படிக்கவும் கேட்கவும் கூட ஒரு கொடுப்பினை வேணுமில்லயா?//

   நிச்சயமாக. எதற்குமே நமக்கு ஒரு கொடுப்பினை வேண்டும்தான் :) அது எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சாதகமாக அமையாமல் போய்விடுகிறது.

   நீக்கு
 14. //குழந்தைகள் ஆசைப்படுவதை பெற்றோர்கள் தெரிந்துகொண்டு அன்பினால் [கிருபையால்] எவ்வளவு சிரமமாக இருந்தாலும் நடத்தி வைப்பதுபோல பகவான் நமக்கு எது ஹிதமோ அதை நாம் கேட்காமலே கொடுப்பார். //

  பின்ன இதுவரைக்கும் கேக்காமயே எவ்வளவோ நல்ல விஷயங்கள கொடுத்திருக்காரே.

  பதிலளிநீக்கு
 15. எங்காளுகளுக்கெல்லா உருவ வளிபாடு ஏற்புடயதில்ல. நீங்க போட்டிருக்கும் கொளந்த படம்லா நல்லா இருக்குது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) தெரியும். அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா. :)

   நீக்கு
 16. கர்ம ஞான மார்க்கம் உயர்வானதுதான்.வீட்டை கவனிக்காமல் கோவில் சத்சங்கமே கதியாக இன்றய கால கட்டத்தில் எப்படி இருக்க முடியும் நம்மால என்ன முடியுமோ அதைப்பண்ணணும் .

  பதிலளிநீக்கு
 17. ஏதோ உங்க புண்யத்துல நாங்களும் கொஞ்சம் எடுத்துக்குறோம்...இரண்டாம் படம் அழகு..

  பதிலளிநீக்கு
 18. //நாம் செய்ய வேண்டியது பகவத் பஜனம். நாமஜபம் ஒன்றே. அதுவே எல்லாவற்றையும் கொடுக்கும்.// செய்யக்கூடாதவற்றை செய்வதும் செய்ய வேண்டியவைகளை செய்யாமல் இருப்பதும் கெடுதலே!

  பதிலளிநீக்கு