About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, February 28, 2012

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of 8 ]



ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-12


ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை 
பகுதி 1 of  8




ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு ஸ்ரீமத் சுந்தர காண்டத்தில் உள்ள பக்தியின் பெருமை சொல்லில் அடங்காது. தன் வாழ்நாட்களில், சுந்தர காண்டத்தில் எவ்வளவு ஸ்லோகங்கள் உள்ளனவோ அவ்வளவு முறைகள் அதாவது சுமார் 3000 ஆவர்த்திகள், தினம் முழுகாண்டத்தையும், ஸ்ரீகுருவாயூர், காஞ்சீபுரம், திருப்பதி, திருத்தணி, நாமக்கல் போன்ற க்ஷேத்ரங்களிலும் மற்றும் அநேக ஆஞ்ஜநேயர் கோயில்களிலும் ஆத்மார்த்தமாக பாராயணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ”ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாவுகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது”  என்று உமாசம்ஹிதையில் ஸ்ரீபரமேஸ்வரன் கூறுகிறார்.

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் பெருமைகளைப்பற்றி ஸ்ரீ ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களிடம் சொல்லியிருப்பதில் முக்கியமான சிலவற்றை கீழே பார்ப்போம்:

1. உமா சம்ஹிதை என்ற புத்தகத்தில் ஸ்ரீ பரமேஸ்வரனே உமாதேவியிடம் சொன்ன ஒரு ஸ்லோகம்:-


ஈஸ்வர உவாச:-

“கிம்பஹூத்தேன கிரிஜே யாம்ஸித்திம் படனான்னர:
ஸ்ரீமத் சுந்தரகாண்டஸ்ய ந லபேத ந ஸாஸ்தி ஹி”  

“ஸ்ரீமத் சுந்தரகாண்ட பாராயணத்தால் மனிதனுக்கு கிடைக்காத ஸித்திகளே இல்லை” என்று பொருள்.


2. ஒரு சமயம் ஸ்ரீ மஹா பெரியவாளிடம் ஒரு வேத பிராமணர், தான் வயிற்று வலியால் ரொம்ப சிரமப்படுவதாகவும், எந்த ஒரு வைத்தியனாலும் குணம் தெரியவில்லை என்று சொன்னபோது, ஸ்ரீ மஹாபெரியவாள், ”ஸ்ரீமத் சுந்தரகாண்டத்திலிருந்து ஒரு ஸர்க்கம் தினம் போஜனத்திற்கு முன் பாராயணம் செய்யேன்” என்று சொல்லி அருளுகிறார். அவரும் இந்த மாதிரி பாராயணம் செய்து, வியாதியிலிருந்து பூர்ண குணமடைந்து விட்டதாக ஸ்ரீபெரியவாளிடம் திரும்ப வந்து சொல்கிறார். 


”சுந்தரகாண்டத்தில் ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு மந்த்ரம்” என்றும் அவரிடம் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் சொல்லியிருக்கிறார். 


3. ஸ்ரீமத் சுந்தர காண்டத்தின் முதல் ஸ்லோகத்தின் முக்கிய கருத்து ஸ்ரீ ஆஞ்ஜநேயர் ஆசார்யன் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜீவாத்மாவான ஸ்ரீ சீதா தேவியை பரமாத்வாவான ஸ்ரீ ராமருடன் சேர்த்து வைக்கிறார். 


ஆசார்யனின் கடமை பூர்வாச்சார்யார்கள் சென்ற வழியைப்பின்பற்றி ஜீவாத்மாவின் பக்தியைப்பற்றி பரமாத்மாவிடம் எடுத்துச்சொல்லியும், பரமாத்மாவின் பரமகல்யாண குணங்களை ஜீவாத்மாவுக்கு எடுத்துச்சொல்லியும் இரண்டு பேரையும் சேர்த்து வைப்பது தான்.


ஆச்சார்யன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக்குறிக்க ஸ்ரீ ஆஞ்ஜநேயர் பெரிய காளை மாடு போலவும், பெரிய சிங்கம் போலவும் இருக்கிறார் என்று வால்மீகி முனிவர் வர்ணிக்கிறார். 


காளை மாடு கடும் வெயில், மழையைப் பற்றி கவலைப்படாமல் நிமிர்ந்து நடைபோடும். சிங்கம் கம்பீரத்துடன் எல்லாக் காட்டு மிருகங்களுக்கும் தலைவனாய் இருக்கும். 


ஆசார்யன் தனக்கு வரும் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல், தைர்யமாக இருந்து கொண்டு, தன்னிடம் வரும் பக்தர்களை தன் உபதேசத்தால் பகவானை அடைய உதவி புரிய வேண்டும். 


ஸ்ரீ ஆஞ்ஜநேயரை பூஜித்தால் நமக்கு இந்த அரிய லாபம் கிடைக்கும்.








தொடரும் 

21 comments:

  1. இவ்வாறு ”ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாவுகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது” என்று உமாசம்ஹிதையில் ஸ்ரீபரமேஸ்வரன் கூறுகிறார்.


    மிக அருமையான விளக்கம்...

    ReplyDelete
  2. ஸ்ரீ ஆஞ்ஜநேயரை பூஜித்தால் நமக்கு இந்த அரிய லாபம் கிடைக்கும்.

    சிறப்பான பின்பற்றி பயனடைய வேண்டிய பகிர்வுகள்..

    ReplyDelete
  3. சுந்தரகாண்டத்தில் ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு மந்த்ரம்” என்றும் அவரிடம் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் சொல்லியிருக்கிறார்.

    அருமையான கருத்துகள்.. பாராட்டுக்கள் பகிர்வுக்கு...

    ReplyDelete
  4. சுந்தர காண்டத்தில் ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு மந்திரம்....

    உண்மை....

    சுந்தரகாண்டத்தின் அருமை-பெருமைகளை உங்கள் பகிர்வு மூலம் அறிந்து கொள்ள ஆவலுடன்... காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  5. Very nice post.
    Waiting for further in this.
    viji

    ReplyDelete
  6. ஆவலுடன் காத்திருக்கிறோம்!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  7. பக்திமயம். பரவசம். ஆனந்தம். தொடருங்கள். காத்திருக்கிறோம்.
    அன்புடன் எம்.ஜே.ராமன்.

    ReplyDelete
  8. ஓரே நாளில் சுந்தர காண்டம் பாராயணம் மிகவும் உயர்ந்த பலன்களை கொடுக்ககூடியது. மிகவும் நல்ல பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  9. அருமை.....ரொம்ப நன்றி.

    ReplyDelete
  10. அருமையான சத் விஷயப்பகிர்வு....ஆஞ்சநேயரை பார்க்கவே மனதுக்கு இதமாக இருக்கிறது...

    ReplyDelete
  11. சுந்தர காண்டத்தின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  12. ”சுந்தரகாண்டத்தில் ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு மந்த்ரம்”//

    மந்திரம் நமக்கு மா மருந்தாய் இருந்து நோய் நொடிகளை போக்கும் உண்மை.

    மேலும் சுந்தரகாண்டத்தின் மகிமை அறிய ஆவல்.

    ReplyDelete
  13. ஆஞ்சநேயரைத்துதித்தால் வாழ்வில் எல்லா வளமும் உண்டாகும்னு சொல்வாங்க. ஹனுமான் சாலீஸா ன்னு ஒரு ஹ்லோகம் இருக்கே. அது பதிவுல போடமுடியுமா?????

    ReplyDelete
  14. சுந்தர காண்டம் நிறைய முறை படித்திருக்கிறேன்.

    ஆனால் இன்று இந்த பதிவைப் படித்ததும் மீண்டும், மீண்டும் படிப்பேன்.

    கொஞ்ச நாட்களாகத்தான் சனிக்கிழமை தோறும் அனுமனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறோம் நானும், எங்க ஆத்துக்காரரும்.

    ReplyDelete
  15. ????? இதுபோல மந்திரமெல்லா சொல்லிகினா ஒடம்பு வேதன தீருமா.

    ReplyDelete
    Replies
    1. mru October 18, 2015 at 6:04 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //????? இதுபோல மந்திரமெல்லா சொல்லிகினா ஒடம்பு வேதன தீருமா.//

      பக்தி + சிரத்தை + நம்பிக்கையுடன் சொன்னால் உடம்பு வேதனை எல்லாம் தீரும் என்றுதான் சொல்கிறார்கள். :)

      Delete
  16. ஜீவாத்மா பரமாத்மா தத்துவம் ஆஞ்சனேயர் லாயிலாக சொல்லியிருப்பது சிறப்பு. சுந்தர காண்டம் பாராயணம் பண்ணினால் எல்லா நன்மைகளும் நம்மை வந்து சேரும்.

    ReplyDelete
  17. “கிம்பஹூத்தேன கிரிஜே யாம்ஸித்திம் படனான்னர:
    ஸ்ரீமத் சுந்தரகாண்டஸ்ய ந லபேத ந ஸாஸ்தி ஹி”

    “ஸ்ரீமத் சுந்தரகாண்ட பாராயணத்தால் மனிதனுக்கு கிடைக்காத ஸித்திகளே இல்லை” என்று பொருள்.// அனுபவப்பூர்வமான உண்மை..

    ReplyDelete