என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

எளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்

ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-2


எளிமையாய் வாழ்ந்து காட்டிய மஹான்
ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாஸ்வாமிகள் காட்டிய வழியில் அநாதியான நமது இந்து மதத்தின் தர்ம நெறியில் வழி நடந்து ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமந்நாராயணீயம் மற்றும் பல க்ரந்தங்களை தினமும் அனுஸந்தானம் செய்து அக்கொள்கைகளையே தமது ஜன்ம லாபமாகக் கருதி வாழ்ந்து கட்டியவரும், ஸ்ரீ மஹாபெரியவாளின் திருவாக்கினால் ஆசியுடனும் அன்புடனும் ஸ்ரீ ஆங்கரை கல்யாணராம பாகவதர் [பூர்வாச்ரம நாமதேயம்] என்று அழைக்கப்பட்ட மஹான்,  ஸ்ரீ பார்த்தசாரதி க்ஷேத்ரமான சென்னை திருவல்லிக்கேணியிலேயே 50 வருஷங்கள் வாழ்ந்துவந்து, பணமோ கூட்டமோ சேர்க்காமல் பகவானிடத்தில் ஞான வைராக்யத்தை வேண்டிப் பெற்று முடிவில் 14.07.1992 அன்று ஸந்நியாஸ ஆஸ்ரமத்தை ஏற்றார். 

1973 முதல் 1991 வரை 19 வருஷங்கள் ஒவ்வொரு வருஷமும் கோகுலாஷ்டமி சமயத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவாளின் உத்தரவுப்படி ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ மூல பாராயணமும் உபந்யாசமும் ஸ்ரீ மஹா பெரியவாள் முன்னிலையில் செய்யும் பாக்யத்தை ஸ்ரீ ஸ்வாமிகள் பெற்றவர். 

ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணமும், ஸ்ரீமத் சுந்தரகாண்ட ஏகதின பாராயணமும், ஸ்ரீமந் நாராயணீயப் பாராயணமும் ஸ்ரீ மஹா பெரியவாள் ஸந்நிதியில் செய்தவர்.

படித்தவர், பாமரர், ஏழை, பணக்காரர் என்ற எந்த வேறுபாடின்றி தம்மிடம் வந்த அனைவருக்கும், இறைவன் பேரால் ஆறுதல் அளித்தவர். “சிவ சிவ” “ராம ராம” என்ற பகவானின் நாமங்களை தனிமையில் இடையறாது, மனமுருகி, ஜபித்து வந்தாலே “பற்றுகள் ஒழிந்து பகவானை அடையலாம்” என்று எளிமை வழியில் உயர்வடைய உபதேசித்து வந்தார். 

அநேக ஆப்தர்கள் ஹிருதயத்தில் பக்தி, ஸ்ரத்தை, அனுஷ்டானம் என்னும் தீபத்தை ஏற்றிவிட்டும் ஸ்ரீமத் பாகவத, ஸ்ரீமத் ராமாயண, ஸ்ரீமந் நாராயணீய பாராயணம் மற்றும் மஹான்களால் அருளிச் செய்யப்பட்ட ஸ்தோத்ரங்கள் பாராயணம் என்னும் ஸத்ப்ரவிருத்தியை ஏற்படுத்திவிட்டு, 19.01.2004 [சுபானு வருஷம், தை மாதம், ஐந்தாம் தேதி, கிருஷ்ண த்ரயோதசி] அன்று ஸித்தி அடைந்தார்.

அம்மஹானின் அதிஷ்டானம் திருச்சி ஜில்லா [திருச்சி-கரூர் மார்க்கத்தில்] திருச்சியிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் பழூர் கிராம அக்ரஹாரத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மஹானின் அதிஷ்டானத்தில் ஸ்ரீமஹாலிங்கமூர்த்தி ப்ரதிஷ்டை செய்து, தினசரி பூஜை ஆராதனை செய்து வர ஏற்பாடு செய்துள்ளது. அந்த மஹான் அனுதினமும் சுமார் 35 வருஷங்கள் பூஜை செய்து வந்த ஸ்ரீகுருவாயூரப்பன் விக்ரஹமும், ஸ்ரீ காஞ்சி பெரியவாளின் பாதுகைகளும் இதே அதிஷ்டானத்தில் பிரதிஷ்டை செய்து, தினசரி பூஜையும் நடந்து வருகிறது.

ஸ்ரீ ஸ்வாமிகள் ப்ரம்மீபூதராய் ஸித்தி அடைந்து அதிஷ்டானத்தில் ஸான்னித்யத்துடன் இருந்து வருகிறார்.     

-o-o-o-o-o-o-

அனேக பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க ஸ்ரீ ஸ்வாமிகள் உபந்யாசத்திலும், பாராயணத்திலும் பக்த ஜனங்களின் மனது உயர்ந்து பக்தி வளர்வதின் பொருட்டு அருளிச்செய்த சில முக்கியக் கருத்துக்களை, ஸ்வாமிகளுடன் கூடவே இருந்து 47 வருஷங்கள் கைங்கர்யம் செய்து வந்தவரான திருவல்லிக்கேணி ஸ்ரீ ஜானகிராமன் அவர்களால் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றை இதன் அடுத்து வரும் பகுதிகளில் நாம் பார்ப்போம்.


-o-o-o-o-o-o-

இந்த மிகச்சிறந்த மஹானை அவருடைய பூர்வாஸ்ரமத்திலும், பிறகு அவரின் ஸந்நியாஸ ஆஸ்ரமத்திலும், ஆண்டுதோறும் சென்னை திருவல்லிக்கேணிக்குச் சென்று தரிஸிக்கவும்,அவருடன் நெருங்கிப் பழகவும் அடியேன் பாக்யம் பெற்றிருந்தேன். என்னுடன் ஒரு தனி வாத்சல்யத்துடன் பழகி, என்னுடைய எவ்வளவோ பிரச்சனைகளுக்கு மிகச்சுலபமான தீர்வுகள் சொல்லியருளிய மிகச்சிறந்த குருநாதராகத் திகழ்ந்தவர். இன்றும் எங்கள் மனதில் நிலைத்து நிற்பவர்.  

இந்த மஹான் ஸித்தியடைந்த நன்நாளில், அவரை புறப்பாட்டு ஸ்வாமி போல அமர வைத்து, மாலை மரியாதைகளுடன், ஏராளமான பக்தர்களும், பஜனை கோஷ்டிகளும், வைதீக வேதவித்துக்களும் பல்வேறு மந்த்ர கோஷங்களுடன், பழூர் அக்ரஹாரத்தில் பிருந்தாவனப் பிரவேஸம் செய்வித்த நேரம் அடியேன் அங்கு கூடவே இருந்து அனைத்தையும் ஆரம்பம் முதல் கடைசிவரை, முற்றிலும் காணும் பாக்யமும் பெற்றேன். 

அவரை அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்த குழியில் இறக்கிய நேரம், அவரின் கருணையினாலும், மிகச்சுலபமான வழிகாட்டுதலாலும், தங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக்கொண்டு, இறைவழியில் ஈடுபட்டு, மனநிம்மதியுடன் வாழ்க்கையில் பல்வேறு பயன்களை அடைந்த பக்தர்கள் பலரும், தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளைக்கழட்டி அவர் மேனியில் அர்ப்பணித்தனர்.  பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரம்,  கருடபக்ஷி ஒன்று அவரின் அதிஷ்டானப்பகுதியை நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துப்போனேன்.  

ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் தீவிர பக்திகொண்டிருந்த ஸ்வாமிகளை வைகுண்டம் கூட்டிப்போகவே அந்த கருடன் புறப்பட்டு வந்திருப்பதாக என்னால் நன்கு உணர முடிந்தது. 

அன்புடன்
vgk

-o-o-o-o-o-o-o-


22.01.2012 அன்று 
ஸ்வாமிகளின் எட்டாம் வருஷ 
ஆராதனை மஹோத்ஸவம் 
பழூர் அக்ரஹாரத்தில் உள்ள 
ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.

16 வேத விற்பன்னர்கள் 
கலந்து கொண்டு சிறப்பித்தனர் 


ஸ்ரீ மஹாபெரியவாளுடன் 
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்அதிஷ்டான நுழைவாயில்


ஸ்ரீ ஸ்வாமிகள் பல்லாண்டு காலம் 
பூஜை செய்துவந்த 
ஸ்ரீ குருவாயூரப்பன் விக்ரஹம்


 அதிஷ்டானத்தில் 
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 
சிவலிங்கம்

-oOo-


தொடரும்

29 கருத்துகள்:

 1. தொடரட்டும் தகவல்கள்! நன்றி!
  காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 2. நல்ல தகவல்களுக்கு நன்றி.... தொடருங்கள்....

  பதிலளிநீக்கு
 3. பாகவதர்களை பற்றி படித்து தெரிந்து கொள்வதற்கே பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
  தொடர்ந்து எழுதுங்கள் படித்து பயன் பெறுவதுடன் புண்ணியமும் சேர்த்துக்கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. எங்களுக்கெல்லாம் இதனை பகிர்ந்து கொண்டு எங்களையும் மகிழ்விப்பதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.

  பதிலளிநீக்கு
 5. எழுத்தில் புலப்படுகிறது நெஞ்சத்தின் நெகிழ்ச்சி. நினைவுகளின் பகிர்வுக்கு மிகவும் நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 6. மிக அருமை கோபால் சார்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 7. நல்ல தகவல்கள். தொடர்ந்து இது போல் தாருங்கள் சார்.

  பதிலளிநீக்கு
 8. முதல் பதிவையும் படித்தேன்,இந்த பதிவில் தாங்கள் பகிர்ந்துள்ளதும் இந்த காலத்தில் நிகழந்ததுதானா என நம்பமுடியவில்லை.

  பதிலளிநீக்கு
 9. நல்ல பகிர்வு.

  நல்ல தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரம், கருடபக்ஷி ஒன்று அவரின் அதிஷ்டானப்பகுதியை நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துப்போனேன்.

  ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் தீவிர பக்திகொண்டிருந்த ஸ்வாமிகளை வைகுண்டம் கூட்டிப்போகவே அந்த கருடன் புறப்பட்டு வந்திருப்பதாக என்னால் நன்கு உணர முடிந்தது.

  அற்புதமான உணர்வுப்பூர்வமான பகிர்வுகள்..

  பதிலளிநீக்கு
 11. இந்த மகானை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் தீவிர பக்திகொண்டிருந்த ஸ்வாமிகளை வைகுண்டம் கூட்டிப்போகவே அந்த கருடன் புறப்பட்டு வந்திருப்பதாக என்னால் நன்கு உணர முடிந்தது.


  எத்தனை பக்திப்பூர்வமான உணர்வு ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி February 4, 2013 at 2:03 AM
   *** ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் தீவிர பக்திகொண்டிருந்த ஸ்வாமிகளை வைகுண்டம் கூட்டிப்போகவே அந்த கருடன் புறப்பட்டு வந்திருப்பதாக என்னால் நன்கு உணர முடிந்தது.***

   //எத்தனை பக்திப்பூர்வமான உணர்வு//

   தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், என் பக்திபூர்வமான உணர்வுகளைப்பற்றிய புரிதலுக்கும் மிக்க நன்றீங்க. ...

   நீக்கு
 13. ஆதி
  கோவிந்தர தாமோதர ஸ்வமிகள் தொகுத்து வழங்கிய ஸ்லோகங்கள் தினமும் படிக்கும் பாக்கியம் பெற்று உள்ளேன். அதை மேலும் வாங்கி பலருக்கு இலவசமாக விநியோகிக்க ஆசை. அத்தனை ஸ்லோகம்களும் ரத்தினம்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shobraj97 February 12, 2014 at 10:08 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

   //ஆதி
   கோவிந்தர தாமோதர ஸ்வமிகள் தொகுத்து வழங்கிய ஸ்லோகங்கள் தினமும் படிக்கும் பாக்கியம் பெற்று உள்ளேன். அதை மேலும் வாங்கி பலருக்கு இலவசமாக விநியோகிக்க ஆசை. அத்தனை ஸ்லோகம்களும் ரத்தினம்கள்.//

   இதைக்கேட்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த ஸத்குரு அவர்களின் க்ருபையால் தாங்கள் நியாயமாக ஆசைப்படுவது எல்லாம் நல்லபடியாகவே நடக்கட்டும். வாழ்த்துகள்.

   நீக்கு
 14. பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரம், கருடபக்ஷி ஒன்று அவரின் அதிஷ்டானப்பகுதியை நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துப்போனேன்.

  இந்த சம்பவத்தைப்படித்ததும் நாங்களும் மெய் சிலிர்த்துப்போனோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 29, 2015 at 6:06 PM

   **பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரம், கருடபக்ஷி ஒன்று அவரின் அதிஷ்டானப்பகுதியை நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துப்போனேன்.**

   //இந்த சம்பவத்தைப்படித்ததும் நாங்களும் மெய் சிலிர்த்துப்போனோம்.//

   :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

   நீக்கு
 15. அற்புதமான பதிவிற்கு நன்றி.

  //**பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரம், கருடபக்ஷி ஒன்று அவரின் அதிஷ்டானப்பகுதியை நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துப்போனேன்.**//

  படிக்கும் போதே மென் சிலிர்க்கிறது.

  பதிலளிநீக்கு
 16. ????? நீங்க பளகிய யாரோ ஒரு சாமிய பத்தி சொல்லி வாரிக. பெரிய பெரிய மஹான்களோட பளகலா உங்களுக்கு நல்ல வாய்ப்பு கெடச்சிருக்கு

  பதிலளிநீக்கு
 17. ஸ்ரீ ஸ்வாமிகளின் பிருந்தாவன பிரவேசத்தின்போது நீங்களும் அந்த இடத்தில் இருந்தது, கருட பஷி பறந்தது எல்லாமே மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வுகள்

  பதிலளிநீக்கு
 18. நல்ல பகிர்வு..உன்னதப் படங்கள்..மஹானின் படத்தை வெளியிட்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு