About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, February 29, 2012

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of 8 ]ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-13


ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை
பகுதி 2 of  8


4. சுந்தரகாண்டம் முழுவதும் ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் மஹிமையை வர்ணிப்பது தான். முதல் ஸர்கத்தில் மஹேந்திரமலை மேல் ஏறி மிகப்பெரிய உருவத்தை எடுத்துக்கொண்டும், கர்ஜனை செய்துகொண்டும், மலைகளைக் கால்களால் மிதித்ததில் மலைப்பாறைகள் நொறுங்கி நாலா பக்கங்களும் சிதறிற்று. 

ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் திருவடிகளை பூஜிப்பவர்களுக்கு மலைபோல கஷ்டங்கள் வந்தாலும், மலை நொறுங்குவது போல உடனடியாக நீங்கிவிடும் என்பதைக் காட்டுகிறது.    

5. ராமபாணம் போல் ஆஞ்ஜநேயர் சமுத்திரத்தின் மேல் போகிறார் என்று வால்மீகி முனிவர் சொல்வதிலிருந்து ராமபாணம் எப்படிக் குறி தப்பாதோ அப்படிச் சுலபமாக சமுத்திரத்தைத் தாண்டி அக்கரை போய்ச்சேர்வார். 


பாணத்தை ஒருவர் குறிவைத்து நாண்கயிறு ஏற்றினால் தானே போகும்! அதேபோல் தானாகப் போகவில்லை; ஸ்ரீராமரின் க்ருபையால் தான் இந்த அகண்ட சமுத்திரத்தை என்னால் தாண்ட முடியும் என்று ஆஞ்ஜநேயர் எண்ணினார்.


தான் செய்கிறோம் என்ற கர்வமில்லாமல் வினயத்துடன் இருப்பவர்களால் தான் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  


6. சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு வம்ச அரசனான சகரனால் உண்டாக்கப் பட்டதால், ஸ்ரீராமருடைய காரியமாய் வரும் ஹனுமாருக்கு உதவி புரிய நினைத்து கடலில் மூழ்கியிருக்கும், மைனாக மலையைத் தூண்டிவிட்டு, மேலே எழும்பி வரும்படிச் செய்து, ஆஞ்ஜநேயரை மலைமேல் உட்கார்ந்து இளைப்பாறச் செய்து, கிழங்குகள் பழங்கள் முதலியன அவருக்குக் கொடுத்து ஸத்கரிக்கும்படி சொன்னார்.


மைனாக மலையும் மேலே எழும்பிவந்து,  ஹனுமாரை இளைப்பாறி விட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டது. வாயு பகவானால், மைனாக மலை இந்திரனிடமிருந்து காப்பாற்றப் பட்டதால், வாயு குமாரருக்கு உதவி செய்ய தானும் கடமைப்பட்டிருப்பதாக மைனாக மலையும் நினைத்தது.


ஆனாலும் ஸ்ரீ ஹனுமார் என்ன நினைத்தார் தெரியுமா?


ராம பாணத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்கிற காரணத்தினால் மைனாக மலை மேல் தான் இளைப்பாறக்கூடாது. ராம பாணம் குறி தப்பாது. அதன் வேகத்தை மைனாக மலை தடுக்க முயற்சி செய்கிற மாதிரி ஆகிவிடும். ராமபாணத்தின் மதிப்பையும் குறைப்பதாக ஆகி விடும். உப்புக்கடலின் நடுவே பலவிதமான கிழங்குகளும் பழங்களும் கிடைப்பது ஒரு பெரிய ஆச்சர்யம் தான். 


நம் போன்றவர்கள் ஏதாவது உபாசனம் செய்து வரும்போது ஸித்திகள் வரும். அதில் நாம் மனதை வைத்துவிடக்கூடாது. அவ்வாறு மனதை வைத்துவிட்டால் நமக்கு பகவத் அனுபவம் கிடைக்காமல் போய் விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


பகவத் க்ருபைக்குப் பாத்திரமானவர்களை மனைவி, புத்திரர், உறவினர் ரூபத்தினாலும், ஸித்திகள் மூலமாகவும் தொந்தரவு கொடுத்து, மேலே ஏறி வரவிடாமல் இருப்பதற்கு, தேவதைகள் பெரிதும் முயற்சிப்பார்கள்.


ராம பக்தனுக்கு, சமுத்திர ராஜன் தூண்டுதலில், மைனாகமலை ஸ்ரீ ஹனுமனைத் தன்னிடம் ஸத்கரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கே, இந்திரன் தன் சாபத்தை விலக்கிக்கொண்டு, தன்னிடம் இனிமேல் பயம் இல்லாமல் சுதந்திரமாக எங்கும் சஞ்சரிக்கலாம் என்று மைனாக மலைக்கு வரம் கொடுத்து விட்டார்.


இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது:


ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்.

தொடரும்
இதன் அடுத்தடுத்த பகுதிகள் 
01.03.2012 முதல் 07.03.2012 வரை 
தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு 
மேல் வெளியிடப்படவுள்ளன.
அன்புடன் vgk 

30 comments:

 1. //ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்.//
  அருமை.
  தொடர்ந்து படித்துப் பயன் பெற காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 2. மிக நல்ல ஆன்மீக பகிர்வு

  ReplyDelete
 3. ஆன்மீகப் பதி அற்புதம்!

  காரஞ்ச்ன்(சேஷ்)

  ReplyDelete
 4. ஆன்மீகப் பதிவு அற்புதம்! நன்றி!

  ReplyDelete
 5. ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் திருவடிகளை பூஜிப்பவர்களுக்கு மலைபோல கஷ்டங்கள் வந்தாலும், மலை நொறுங்குவது போல உடனடியாக நீங்கிவிடும் என்பதைஅருமையாகக் காட்டிய பகிர்வுகளுக்கு நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 6. சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு வம்ச அரசனான சகரனால் உண்டாக்கப் பட்டதால், சமுத்திரத்திற்கு சாகரம் என்றும் பெயர் ஏற்பட்டது...

  ReplyDelete
 7. நம் போன்றவர்கள் ஏதாவது உபாசனம் செய்து வரும்போது ஸித்திகள் வரும். அதில் நாம் மனதை வைத்துவிடக்கூடாது. அவ்வாறு மனதை வைத்துவிட்டால் நமக்கு பகவத் அனுபவம் கிடைக்காமல் போய் விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

  பெரும்பாலும் ஸித்திகள் பெற்றவர்களை மற்றவர்கள் புகழ்ந்து பாராட்டுக்களாலே தூங்கச்செய்து கர்வம் கொள்ளசெய்து முன்னேற்விடாமல் செய்துவிடுவார்கள்...

  ReplyDelete
 8. ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்.


  முத்தாய்ப்பான அழகான வரிகள் ..

  நிறைவான பயன்மிக்க பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 9. சுருக்கமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. தொடர்கிறேன்.

  ReplyDelete
 10. ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்.//

  உண்மை உண்மை.

  நல்ல பகிர்வு சார்.
  நன்றி.

  ReplyDelete
 11. ரொம்ப புதுமையான விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டேன்...ரொம்ப பிடித்த பதிவு....மிக்க நன்றி...

  //தான் செய்கிறோம் என்ற கர்வமில்லாமல் வினயத்துடன் இருப்பவர்களால் தான் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
  //

  ஆஹா!


  //பகவத் க்ருபைக்குப் பாத்திரமானவர்களை மனைவி, புத்திரர், உறவினர் ரூபத்தினாலும், ஸித்திகள் மூலமாகவும் தொந்தரவு கொடுத்து, மேலே ஏறி வரவிடாமல் இருப்பதற்கு, தேவதைகள் பெரிதும் முயற்சிப்பார்கள்.

  ///

  ஆஹா!!

  ReplyDelete
 12. அருமையான பணி.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 13. நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது சார். நன்றி.

  ReplyDelete
 14. ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்
  Sure I will follow it.
  Thankyou for activating me and others by your writing Sir.
  viji

  ReplyDelete
 15. சுந்தரகாண்ட பாராயணம் மிகுந்த மன நிம்மதி தர வல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

   அன்புடையீர்,

   வணக்கம்.

   31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுவரை, 2011 ஜனவரி முதல் 2012 பிப்ரவரி வரையிலான 14 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   என்றும் அன்புடன் VGK

   Delete
 16. சுந்தர காண்டம் பாராயண மகிமையே தனிதான். அனைவருக்கும் பயன் படும் விதமாக பதிவுகள் கொடுக்குரீங்க.

  ReplyDelete
  Replies
  1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 பிப்ரவரி வரை முதல் பதினான்கு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 17. //ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்.//

  அருமையான வரிகள்.

  அனுமனைத் தொழுது சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

   அன்புள்ள ஜெயா,

   வணக்கம்மா !

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 பிப்ரவரி வரை, முதல் பதினான்கு மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 18. இன்னாலாமோ நல்ல வெசயங்கலா சொல்லிகினு வாரீக. நீங்க இன்னா சொல்லினீங்கனு மத்தவங்க நல்லாவே வெளங்கிகினாங்க கமண்டு மூலமா வெளங்கிகிட்டன்

  ReplyDelete
  Replies
  1. mru October 18, 2015 at 6:08 PM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //இன்னாலாமோ நல்ல வெசயங்கலா சொல்லிகினு வாரீக. நீங்க இன்னா சொல்லினீங்கனு மத்தவங்க நல்லாவே வெளங்கிகினாங்க கமண்டு மூலமா வெளங்கிகிட்டன்//

   தாமதமாக வருவதால் பிறரின் கமெண்ட்ஸ்களையும் சேர்த்து படிக்க முடிவது ஓர் உபரியான ஆதாயம் உங்களுக்கு. எப்படியோ கொஞ்சமாவது விளங்கினால் சரியே. வருகைக்கு நன்றிம்மா.

   Delete
  2. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

   அன்புள்ள (mru) முருகு,

   வணக்கம்மா !

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன், 2011 ஜனவரி முதல் 2012 பிப்ரவரி வரை, முதல் பதினான்கு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

   Delete
 19. ராமாயணத்தில் ஸ்ரீராமருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொட்க்கப்பட்டிருக்கொ அதுபோல ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் முக்கியத்துவம்.கொடுத்திருக்காங்க. எங்கெங்கெல்லாம் ராமாயண கதை நடக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் ஒரு ஓரமா உட்கார்ந்து கதை கேட்டுக்கொண்டிருப்பதாக சொல்வார்கள்.

  ReplyDelete
 20. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 பிப்ரவரி மாதம் முடிய, என்னால் முதல் 14 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 21. தான் செய்கிறோம் என்ற கர்வமில்லாமல் வினயத்துடன் இருப்பவர்களால் தான் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். // இந்த எபிசோடுக்கு இது ஒண்ணே போதும். கலக்கல்.

  ReplyDelete
 22. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  239 out of 750 (31.86%) within
  7 Days from 26th Nov. 2015.
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

  அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 பிப்ரவரி மாதம் வரை, என்னால் முதல் 14 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 23. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 பிப்ரவரி மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 14 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete