என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

குறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்

பகுதி-9


குறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி
[ஸ்ரீமத் ராமாயணம்]
ஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தில் 11 ஆவது ஸ்கந்தத்தில் 5 ஆவது அத்யாயம் 33 ஆவது ஸ்லோகத்தில் [புத்யார்திகம்] ஸ்ரீராமரைப்பற்றி சொல்வதை வைத்துக்கொண்டு, ராமாயணத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி பக்தர்களின் குறைகளை எப்படிப்போக்குகிறார்? என்பதை கீழ்க்கண்டவாறு வர்ணித்து நம் போன்றோர்களுக்கு, ஸ்ரீராமரிடம் பக்தி ஏற்படும்படியும், ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாராயணம் செய்யும்படியும் ஊக்கம் கொடுப்பது வழக்கம்.  

1. தேவர்களுக்கு ராவணனிடம் இருந்த பயம் விஷ்ணு பகவான் அவர்களுக்கு அபயம் கொடுத்த உடனே நீங்கியது.

2.தசரதருக்குப் பிள்ளை இல்லையே என்ற குறை ராமாவதாரத்தால் நீங்கியது.

3.விஸ்வாமித்ரருக்கு யாகம் முடிக்கவில்லையே என்ற குறை ராமர் யக்ஞரக்ஷணம் செய்ததால் நீங்கியது.

4. தாடகாவதம் செய்து வனத்தை ரக்ஷித்தார்.

5. அஹல்யா சாப விமோசனம் மூலம் சதானந்தருக்கு தன் அம்மா அப்பா பிரிந்து இருக்கிறார்களே என்ற குறை நீங்கியது.
6. சிவ தனுசை முறித்து சீதா விவாஹத்தினால் ஜனக மஹாராஜனின் குறை நீங்கியது.

7. பாதுகைகளை அனுக்கிரஹித்து பரதனின் அபவாதம் நீங்கியது.


8. தண்டகாரண்ய பிரவேசத்தால் கர தூஷணாதி 14000 ராக்ஷஸர்களை வதம் செய்து, மஹரிஷிகளைக் காப்பாற்ற முடிந்தது.

9. விராதனுக்கும் கபந்தனுக்கும் சாப விமோசனம் அளித்தது. கழுகான ஜடாயுஸுக்கு மோக்ஷம் கொடுத்தது.

10. சரபங்கர், ஸுதீக்ஷணர், சபரி போன்றவர்களுடைய தபஸ் ஸ்ரீராமர் தரிஸனத்தால் முழுமை அடைந்தது.

11. ரிஷ்யமுக மலையில் ஒளிந்துகொண்டிருந்த ஸுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்து,  கிஷ்கிந்தா ராஜ்யமும், பத்னிலாபமும் கிடைக்கச் செய்தது.

12. வானரர்களுக்கு சீதாதேவி இருக்கும் இடத்தை சொன்னதும், சம்பாதிக்கு ரொம்ப வருஷங்களுக்கு முன் பொசுங்கிப்போய் இருந்த இறக்கைகளை முளைக்கச்செய்து குறை தீர்த்தது.

13.  ஸ்ரீராமர் கைங்கர்யத்திற்கு வந்த 
(i) ஸ்ரீ ஹனுமாரை ஸமுத்ர நடுவில் சத்கரித்ததனால் மைனாக மலைக்கு 
     இந்திர சாபம் நீங்கி ஸ்வஸ்தானம் போனது.


(ii) ஸ்ரீ ஆஞ்ஜநேயரால் லங்கினிக்கு சாபம் நீங்கியது.


14. ஹனுமாருடைய ராமபக்தியால் [ராம நாம மஹிமையால்] சமுத்ரத்தைத் தாண்டி சீதாதேவியை தரிஸனம் செய்துவிட்டு திரும்பி வந்ததால் ராமருக்கும் சீதாதேவிக்குமே நிம்மதி ஏற்பட்டது.15.விபீஷணனுக்கு சரணாகதி கொடுத்ததால் ராவணனால் ஏற்பட்ட அவமானம் நீங்கியது.   

16.   இந்த்ரஜித், கும்பகர்ணன் வதத்தால் தேவர்கள் பயம் நீங்கியது. ராவண வதத்தால் 14 உலகமும் நிம்மதி அடைந்தது.


17. ராமர் திரும்ப வந்து ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டதால் பரதனுக்கும், அயோத்தி ஜனங்களுக்கும் ராமரைப் பிரிந்து 14 வருஷங்கள் இருந்த குறை நீங்கியது.18. யுத்தம் முடிந்த பிறகு தசரதர் கைகேயிக்கும், பரதனுக்கும் கொடுத்த சாபங்களை வாபஸ் வாங்க வைத்தது.


19. ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் செய்துகொண்டு லோகத்தை ரக்ஷித்தார். அயோத்தி ஜனங்கள் “ராம ராம ராம” என்று எப்போதும் சொல்லிக்கொண்டு பொறாமை முதலிய துர்குணங்கள் இல்லாமல் நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.


20. ராமசரிதம் ம்ருத சஞ்சீவினி ஆகும். எவ்வளவோ சிரமங்கள் நீங்கியிருக்கிறது. உதாரணம்:


i) ஸ்வயம்ப்ரபை குகையிலிருந்து வானரர்கள் வெளிவர முடிந்தது.
   
ii) சமுத்ரத்தின் நடுவில் சுரஸை, ஸிம்ஹிதையிடம் ராமர் கதையை  
      ஹனுமார் சொல்லி மீண்டு வருதல்.    
  
iii) சீதாதேவிக்கு அசோகவனத்தில் ராமகதையைச் சொல்லி நிம்மதியைக் 
       கொடுத்தவர் ஸ்ரீ ஆஞ்ஜநேயர்.

iv) யுத்த காண்டத்தில் யுத்தத்தின் நடுவில் நிறைய இடங்களில் 
      ராமகதையைச் சொல்லுகிறார்கள் - ஜயம் அடைகிறார்கள்.


   


21. ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தாலும், ஸ்ரவணத்தாலும் பக்த ஜனங்கள் இந்தக் கலி யுகத்திலும் ஐஸ்வர்யம், புத்ரலாபம், நீண்ட ஆயுள் எல்லாம் அடைந்து மனம் சாந்தியுடன் விளங்கலாம். 


ராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.  தொடரும்

31 கருத்துகள்:

 1. ராமசரிதம் ம்ருத சஞ்சீவினி ஆகும்.

  எத்தனை ந்த்தனை குறைகளை போக்கி அபயம் அளித்திருக்கிறது ராமசரிதம்..

  பதிலளிநீக்கு
 2. ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தாலும், ஸ்ரவணத்தாலும் பக்த ஜனங்கள் இந்தக் கலி யுகத்திலும் ஐஸ்வர்யம், புத்ரலாபம், நீண்ட ஆயுள் எல்லாம் அடைந்து மனம் சாந்தியுடன் விளங்கலாம்.

  அமிர்தமயமாய் வர்ஷித்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 3. ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தாலும், ஸ்ரவணத்தாலும் பக்த ஜனங்கள் இந்தக் கலி யுகத்திலும் ஐஸ்வர்யம், புத்ரலாபம், நீண்ட ஆயுள் எல்லாம் அடைந்து மனம் சாந்தியுடன் விளங்கலாம்.
  By reading this full post of yours, I can get the benifit of மனசாந்தி.
  i attainted the happiness of reading Ramayana by this post.
  thanks sir.
  viji

  பதிலளிநீக்கு
 4. ராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

  ஆனந்தமயமான பயனுள்ள பகிர்வுகள்.. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 5. பயனுள்ள பகிர்வு. வாழ்த்துகள்..

  அன்புடன் எம்.ஜே.ராமன்

  பதிலளிநீக்கு
 6. ராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.//

  உண்மைதான் சார்.

  ராமச்சந்திர மூர்த்தி பாதம் பணிந்தேன்.
  படங்கள் எல்லாம் காவியம்.

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவும், படங்களும். யெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே. பாராட்டுகள் ஐயா.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 8. ராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

  நிஜம் தான். நான் தினம் சுந்தர காண்டம் பாராயணம் செய்கிறேன். அதன் பலனை உணர்கிறேன்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 9. அழகான படங்களோடு, நிறைய, தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 10. ராமாயணத்தை ஒரே பதிவில் முடித்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 11. ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை.அதனை பதிவில் வெளியிட்டவிதம் அருமை

  பதிலளிநீக்கு
 12. 20 வதே வரிகளில் ராமாயணம்.. அருமை.
  ஜெய் ஸ்ரீராம்...

  பதிலளிநீக்கு
 13. பழனி.கந்தசாமி said...
  //ராமாயணத்தை ஒரே பதிவில் முடித்து விட்டீர்கள்.//

  ஐயா,
  இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவு ஒன்று மட்டும், ஸ்ரீமத் ராமாயணம் பற்றியதே. இன்று 25/02/2012 இரவு வெளியிடப்பட உள்ளது.

  அதன் பிறகு ஒரே ஒரு பதிவு ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை பற்றியது.

  அதன் பிறகு வரும் எட்டு பதிவுகள்
  ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமைகள் பற்றியது.

  இந்தத்தொடரின் நிறைவுப்பகுதியாக [பகுதி 20] ஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரங்கள், வெளியிடப்படவுள்ளன.

  அநேகமாக தினமும் இரவு சுமார் 8 மணிக்கு மேல் வெளியிடத்தான் நினைக்கிறேன். மின்தடைகள்+நெட் கிடைக்காமல் இருத்தல் போன்ற ஒருசில தவிக்க முடியாத குறைகளை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி போக்கிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. பிராப்தம் எப்படியோ, அதன்படி நல்லதே நடக்கட்டும்.

  தொடர்ந்து வருகை தாருங்கள்.
  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 14. அழகான படங்களோடு, நிறைய, தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 15. //ராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.//

  அழகான வரிகள் சார்.

  ராமனின் பாதங்களை சரணடைகிறேன்.

  பதிலளிநீக்கு
 16. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 17. உங்கள் பின்னுட்டத்தில் இத்தனை முன் திட்டங்களுடன் இருப்பது கண்டு வியந்து போனேன்.மின்சார பகவான் அருள் புரியட்டும்,

  பதிலளிநீக்கு
 18. ராமாயணம் எத்தனை தடவை கேட்டாலும் ஆனந்தம்தான்.

  பதிலளிநீக்கு
 19. நன்றி....ராமனால் சுகப்பட்டவர்கள் பலர்... இறைவனும் இறைவியும் தான் மிகுந்த அல்லல்களுக்கு உள்ளாயினர் :(

  பதிலளிநீக்கு
 20. படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு. நானும் ஏதோ எப்பவோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன் போல இருக்கு. அதனாலதான் உங்க நட்பு உங்க மூலமா சத் விஷயங்கள் படிக்க கிடைக்குது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் June 1, 2015 at 6:25 PM
   படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு. நானும் ஏதோ எப்பவோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன் போல இருக்கு. அதனாலதான் உங்க நட்பு உங்க மூலமா சத் விஷயங்கள் படிக்க கிடைக்குது.//

   மிகவும் சந்தோஷம். நம் நட்பு இதுபோலவே எப்போதும் மேலும் நல்ல வலிமையுடன் தொடரட்டும். :)

   நீக்கு
 21. பிரமாதமான பட்டியல்.

  தன்யனானேன்.

  இப்ப படிச்சது பின்னூட்டம் கொடுக்க.

  இனி எப்பொழுதும் படிப்பேன். நான் உய்ய.

  பதிலளிநீக்கு
 22. பதிவெல்லா படிச்சாட்டுதா வாரன். கொஞ்ச கொஞ்ச வெசயங்க வெளங்கிக்க ட்ரை பண்ணுரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 18, 2015 at 5:41 PM

   //பதிவெல்லா படிச்சாட்டுதா வாரன். கொஞ்ச கொஞ்ச வெசயங்க வெளங்கிக்க ட்ரை பண்ணுரன்//

   சரி, சரி, ரொம்பவும் கஷ்டப்படாதீங்கோ, முருகு. மிக்க நன்றிம்மா.

   நீக்கு
 23. ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதயே உங்கள் செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையீ... இந்தப்பாட்டு நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாட்டு. ஃபுல் ராமாயணமும் அந்தப்மாட்டில் அடங்கிடும் இப்படி பாட்டின் மூலமாகவோ உபன்யாசங்களின் மூலமாகவோ ராமர் கதையை சொல்பவர் கேட்பவர் அனைவருக்குமே புண்ணியம் கிடைக்கும். அதுவும் சுந்தர காண்டம் பற்றி எவ்வளவு உயர்வாக சொல்லி இருக்காங்க. அப்படி உன்னதமான விஷயங்கள் அடங்கிய ராமாயண பெருமைகளை பகிர்ந்ததற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 24. அருமை...குறைகளை நீக்கியது...படங்களே நிகழ்வுகளை உணர்த்துகிறது.

  பதிலளிநீக்கு
 25. All benefits can be attained by Ramayana. Well described. Thanks, Raman.R

  பதிலளிநீக்கு