என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 22 பிப்ரவரி, 2012

பக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-6


பக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]


ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்தோத்திரத்தில் 22, 25, 52 ஆவது ஸ்லோகங்களில் வேத அத்யயனம் செய்து கர்மமார்கத்தில் இருப்பவர்களும், காய்ந்த இலைகளை உட்கொண்டு வனத்தில் இருக்கும் முனிவர்களான, வியாசர், சுகர், வசிஷ்டர் போன்ற ரிஷிகளும் இந்த பகவன் நாமாவை [கோவிந்த, தாமோதர, மாதவ என்று] சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஸ்ரீவிலவமங்கலாசார்யார் நன்றாகப் பாடியிருக்கிறார்.    

விஹாய நித்ராமருணோதயே ச விதாய க்ருத்யாநி ச விப்ரமுக்யா: !
வேதாவஸாநே ப்ரபடந்தி நித்யம் கோவிந்த தாமோதர மாதவேதி !!

ப்ரவாலஸோபா இவ தீர்ககேஸா: வாதாமபுபர்ணாஸநபூததேஹா: !
மூலே தருணாம் முநய: படந்தி கோவிந்த தாமோதர மாதவேதி !!

பஜஸ்வ மந்த்ரம் பவபந்தமுக்த்யை ஜிஹ்வே ரஸஞ்ஜே ஸுலபம் மநோஜ்ஞம் !
த்வைபாயநாத்யைர்முநிபி: ப்ரஜப்தம் கோவிந்த தாமோதர மாதவேதி !!

ஸ்ரீ நாரதர் பக்தி சூத்திரத்தில் “யதாவ்ரஜகோபிகானாம்” அதாவது, கோபிகைகளின் பக்திதான் உயர்ந்தது என்று சொல்லியிருக்கிறார். ஸ்ரீ நாராயண பட்டத்ரியும் ஸ்ரீமந் நாராயணீயம் 76 ஆவது தசகத்தில் உத்தவர் கோகுலத்திற்குச் சென்று கோபிகைகளின் அபார கிருஷ்ண பக்தியைக் கண்டு புகழ்ந்ததை ”கோபிகாப்யோ நமஸ்து” என்று சொல்லியிருக்கிறார்.   

இதிலிருந்து கோபிகைகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணனிடம் எப்படி பக்தி வந்து வளர்ந்து, முற்றி பகவத் அனுபவம் கிடைத்தது என்பதை தெரிந்துகொண்டு நம் வாழ்க்கையிலும் அந்த மாதிரி பக்தி வளர பகவத் க்ருபையால் முயற்சி செய்ய வேண்டும். கோபிகைகளின் பக்தியை இதன் அடுத்த பகுதியில் பார்ப்போம். 
தொடரும்

19 கருத்துகள்:

 1. // கோபிகைகளின் பக்தியை இதன் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
  //

  தொடருங்கள். காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. கோவிந்த தாமோதர மாதவேதி !!

  இந்த அருமையான துதியை பாகவத சப்தாகத்தின் ஒவ்வொரு நாளும் சொல்லி மகிழ்வோம்...

  பதிலளிநீக்கு
 3. ”கோபிகாப்யோ நமஸ்து

  மற்ற ஞானிகளின் பக்தியை விட தன் பாத தூளிகளை சேகரித்து அனுப்பி தங்களுக்குப் பாவம் சம்பவித்தாலும் பரவாயில்லை பகவான் நலமடைந்தால் போதும் என்ற தாய்மை நிரம்பிய வாத்சல்ய கோபிகைகளின் பக்தி உயர்வானது என்று பகவானே சொல்லியிருக்கிறாரே

  பதிலளிநீக்கு
 4. பால் உணவுப் பொருளாகவும் மருந்தாகவும் ஒருங்கே பயன்படுவது போல ரச்மாகவும் படிக்க இனிமையாகவும் அமைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 5. பசுவும் கன்றும்,
  ய்சோதையும் இனிமை கண்ணனுமாக மங்களம் பொங்கும் மகத்தான படம் அருமை !.

  பதிலளிநீக்கு
 6. கோவிந்தா,தாமோதரா,மாதவா..

  கோபிகைகளின் பக்தியை பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. கோபிகைகளின் பக்தியை தெரிந்து கொள்ள ஆவல்...

  பதிலளிநீக்கு
 8. நல்ல கைங்கர்யம் செய்கிறீர்கள் .வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 9. [கோவிந்த, தாமோதர, மாதவ என்று நாள் தோறும் சொல்வோம் கோவிந்தனின் அருள் பெறுவோம்.
  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 10. பகவத் நாமாவைப் போல் இனிதானவை இவ்வுலகில் இல்லை என்றுதான் ஞானிகள் கூறுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 11. ஒவ்வொருவர் வீட்டிலுமே கூட குழந்தைகளுக்கு பகவானின் பெயர்களைத்தானே வைக்கிறார்கள் நம்மை அறியாமலேயே எத்தனை முறை ஆண்டவன் பெயர் சொல்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் June 1, 2015 at 6:04 PM
   //ஒவ்வொருவர் வீட்டிலுமே கூட குழந்தைகளுக்கு பகவானின் பெயர்களைத்தானே வைக்கிறார்கள். நம்மை அறியாமலேயே எத்தனை முறை ஆண்டவன் பெயர் சொல்கிறோம்//

   ஆமாம். கோவிந்தா, கோபாலா, ராமா, கிருஷ்ணா, சிவகாமி, கோமதி, காமாக்ஷி என்றே பெயர் வைத்து அழைக்கிறோம். அதுவே நல்லது. அதைச்சுருக்கி கோமு, சோமு கோபு ராமு என்றெல்லாம் அழைக்கவே கூடாதுதான். ஆனாலும் அப்படியெல்லாம்கூட அழைக்கிறார்களே, நாம் என்ன செய்வது? சொல்லுங்கோ.

   நீக்கு
 12. எங்கும் நிறை பரப்ரும்மம் அம்மா என்றழைத்து உன் தோளில் சாய்ந்து உன்னை மகிழச் செய்ய என்ன தவம் செய்தனை யசோதா.

  பதிலளிநீக்கு
 13. அந்த பசு கன்னுகுட்டி படம் ரொம்ப அளகுங்கோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 17, 2015 at 5:54 PM

   //அந்த பசு கன்னுகுட்டி படம் ரொம்ப அளகுங்கோ.//

   அவற்றை வேண்டுமானால் நீங்க ஓட்டிக்கிட்டுப் போங்க. :)

   நீக்கு
 14. கோபிகை களின் ஆத்மார்த்தமான பக்திக்கு ஈடுஇணையே கிடையாதுதான் விவரமாக தெரிந்து கொள்ள காத்திருக்கோம்.

  பதிலளிநீக்கு
 15. எல்லாமே பிரம்ம லிபில இருக்கு...புரியாட்டியும் பவர்ஃபுல்...

  பதிலளிநீக்கு