படங்கள் சொல்லும் பாடங்கள்
[ 1 ]
[ 1 ]
உன்னிடம் எவ்வளவு வளங்கள்
எவ்வளவு எண்ணிக்கையில்
உள்ளன என்பது முக்கியமல்ல.
உன்னிடம் உள்ள வளங்களை நீ
எவ்வாறு உபயோகிக்க வேண்டும்
என்பதே உனக்குத் தெரியாவிட்டால்
எவ்வளவு வளங்கள் இருந்தும்
அவை உனக்குப் போதவே போதாது தான்.
-oOo-
எவ்வளவு எண்ணிக்கையில்
உள்ளன என்பது முக்கியமல்ல.
உன்னிடம் உள்ள வளங்களை நீ
எவ்வாறு உபயோகிக்க வேண்டும்
என்பதே உனக்குத் தெரியாவிட்டால்
எவ்வளவு வளங்கள் இருந்தும்
அவை உனக்குப் போதவே போதாது தான்.
-oOo-
மேலே உள்ள படத்தைப்பாருங்கள்
ஒரே ஒரு ஏணியை சுவற்றில் சாய்த்து
அதில் சுலபமாக ஏறி மதில் சுவற்றிற்கு
மறுபக்கத்தைக் காணலாம்
என்று தெரியாதவரின் காலடியில்
நூற்றுக்கணக்கான ஏணிகள் இருந்து என்ன பயன்?
அவர் மேலும் உயரம் வேண்டுமென்று நினைத்து,
மேலும் சில ஏணிகளைக்கூட
கடையில் வாங்கி வந்து
அவற்றையும் ஏற்கனவே உள்ளவற்றின்
மேல் படுக்க வைக்கலாம்.
-oOo-oOo-oOo-oOo-oOo-
[ 2 ]
ஒரு தவறு உங்களை அனுபவசாலியாக்குகிறது
அந்த அனுபவம் உங்கள் தவறுகளைக் குறைக்கிறது
தவறுகளின் மூலம் தான், தாங்கள் பாடம் கற்க முடிகிறது
பிறகு மற்றவர்கள் தங்களின் வெற்றிகளிலிருந்து
அதே பாடத்தைக் கற்கிறார்கள்.
-oOo-
இரண்டுமே நல்ல கருத்துகள்...
பதிலளிநீக்குகருத்திற்கேற்ற நல்ல படங்கள்....
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
இரண்டு நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி!!
பதிலளிநீக்குஅன்புள்ள...
பதிலளிநீக்குஉறரணியின் பணிவான வணக்கங்கள்.
லீப்ஸ்டர் பிளர்க்
இது ஒரு ஜெர்மானிய விருதாகும். இதன் பொருள் மிகவும் பிடித்த - என்பதாகும். இந்த விருதை பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த 7 விஷயங்களைக் குறிப்பிட்டு இவ்விருதைத் தங்களுக்குப் பிடித்த 5 பதிவர்களுக்குப் பகிர்ந்துகொளள்வேண்டும். இது தெரியாமல் நான் இரு தினங்களைக் கடத்திவிட்டேன். எனக்கு விருதைப் பகிர்ந்துகொண்டவர்கள் பதிவுகளில் சென்றுபார்க்கும்போதுதான் இவ்விவரம் எனக்குப் புரிந்தது (முன்ன பின்ன விருது வாங்கியிருந்தால்தானே?) எனவே இதனைத் தாமதமாகப் பகிர்வதற்கு எனக்கு விருது வழஙகியவர்களும் விருதைப் பகிர்ந்து கொள்ள இருப்பவர்களும் பொறுத்துக்கொள்க.
பகிர்வதற்கு முன்னர் இதனை எனக்குப் பகிர்ந்தவர்களுக்கு மீண்டுமொருமுறை எனது அன்பின்நிறைவாய் நன்றிகள்.
நான் இவ்விருதைப் பகிர்ந்துகொள்ளவிருக்கும் பதிவர்களுக்கு இரண்டு அன்பான வேண்டுகோள்கள்.
1, கணிப்பொறியின் தொழில்நுட்பம் எனக்கு இன்னும் நிறைய பிடிபடவேண்டியுள்ளதால் தயவுசெய்து இவ்விருதைத் தாங்களே காப்பி செய்து உங்கள் பதிவுகளில் இட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.
2, இவ்விருதை அன்புடன் ஏற்கவும் வேண்டுகிறேன்.
நன்றிகள்.
எனக்குப் பிடித்தவை ஏழு.
1. கடைசிவரை நண்பனாய் இருந்து இறந்துபோன
அப்பா.
2. எப்போதும் இடையூறில்லாமல் வாசித்தல்.
3. என்னுடைய படைப்புலகில் தடையில்லாமலும
எப்போதும் உதவவும் காத்திருக்கும் என் மனைவி
என் மகன்.
4. அதிகாலை ரயில் பயணத்தில் எல்லோரும் உறங்க
நான் மட்டும் விழித்திருந்து அனுபவிக்கும் அந்த
தனிமை
.
5. கடவுள் வழிபாடு,
6.. குழந்தைகள்.
7. தமிழ்மொழியின் இலக்கியங்கள்.
பகிர்தல் நேரம்
1, எல்லாவற்றையும் கடந்து இன்றுவரை சிறு முரணும்
இல்லாமல் என்னோடு படைப்புலகில் நட்புகாட்டிவரும்
என் நண்பன்...உடன்பிறவா சகோதரன்...உணர்வான
எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன்....
நண்பன் மதுமிதா - க்கு..
2. இடைவிடாமல்...துவண்டுவிடாமல்...அப்படி நாங்கள்
துவள்கிற தருணங்களில் உரையாடி,,தன்னுடைய
பன்முகத் திறனால் பளிச்சென்று,,,உறவுகளை
மேன்மையுறச் செய்யும் படைப்பாளி..
என் உடன்பிறவாச் சகோதரன் ரிஷபனுக்கு...
3. பழக ஆரம்பித்தது ஒருசில வருடங்கள் என்றாலும்
மனதிற்குப் பிடித்த அதேசமயம் தெரியாத புதுமை
களைப் பகிர்ந்துகொள்ளும் தோழர் இரா.எட்வின்
அவர்களுக்கு...
4. கவிதைகளில் ஒரு உயிர்ப்பும்...உணர்வும்...சொல்
தேர்வும்,, மனதிற்கு இதமும்....ஆழமும் என
இயங்கிக் கொண்டிருக்கும் சைக்கிள் மிருணாவிற்கு...
5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்
வகையான சுவையான பதிவுகளை அள்ளித்தரும்
வைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்
அவர்களுக்கு...
அனைவரும் என் அன்பின் விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வாய்ப்பை உருவாக்கியவர்களுக்கு மறுபடியும் நன்றிகள்.
ஆஹா..அருமையான படத்திற்கு ஏற்றார்ப்போன்று வெகு அருமையான வாழ்கை தத்துவ்ங்கள்.
பதிலளிநீக்குஅன்புக்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியர் திரு ஹரணி ஐயா அவர்களுக்கு,
பதிலளிநீக்குஅன்பான வணக்கங்கள்.
தங்கள் மூலம் இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள விருதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் தங்கள் vgk
Nice thoughts..
பதிலளிநீக்குதவறுகளின் மூலம் தான், தாங்கள் பாடம் கற்க முடிகிறது
பதிலளிநீக்குபிறகு மற்றவர்கள் தங்களின் வெற்றிகளிலிருந்து
அதே பாடத்தைக் கற்கிறார்கள்.
முன்னால் செல்பவன் தடுக்கிவிழுந்தால் பின்னால் வருபவர் பாடமாக எச்சரிக்கையுடன் கட்க்கவேண்டும் என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை அருமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..
தவறுகளின் மூலம் தான், தாங்கள் பாடம் கற்க முடிகிறது
பதிலளிநீக்குபிறகு மற்றவர்கள் தங்களின் வெற்றிகளிலிருந்து
அதே பாடத்தைக் கற்கிறார்கள்.
முன்னால் செல்பவன் தடுக்கிவிழுந்தால் பின்னால் வருபவர் பாடமாக எச்சரிக்கையுடன் கட்க்கவேண்டும் என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை அருமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..
5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்
பதிலளிநீக்குவகையான சுவையான பதிவுகளை அள்ளித்தரும்
வைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்
அவர்களுக்கு...
லீப்ஸ்டர் பிளர்க் விருது பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
காலடியில் நூற்றுக்கணக்கான ஏணிகள் இருந்து என்ன பயன்?
பதிலளிநீக்குஅறுக்க தெரியாதவனிடம்
அம்பது அறுவாளாம் என்ற்
அருமையான அனுபவமொழிகள் பாடங்கள் சொல்லும் படங்களாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..
கருத்துச் சுரங்கமாக அருமையான பகிர்வுகள் பயனுள்ளவை. நன்றிகள்..வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஇரண்டு நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி!!
பதிலளிநீக்குexcellent posts.wonderful thoughts...Thanks for sharing.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு,மீண்டும் விருது பெற்றுள்ளமைக்கு வாழ்த்துகள் சார்.
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - படமும் கர்த்தும் அருமை - பின் பற்ற வேண்டிய அறிவுரைகள். தமிழாக்கம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்கு
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
First congragulations for the award.
பதிலளிநீக்குNext the theme is very nice.
viji
இரண்டுமே நல்ல கருத்துக்களை நமக்கு வலியுறுத்துகிறது.
பதிலளிநீக்குமீண்டும் விருது பெற்றதற்கு வாழ்த்துகள் சார்.....
படங்களும் கருத்துகளும் அருமை. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇரண்டு படங்களும் அதற்கேற்ற கருத்துக்களும் மிக அருமை .
பதிலளிநீக்குஅதுவும் ஏணி படம் பற்றிய சிந்தனை கருத்து மிக மிக அருமை
நன்றி நல்ல பாடங்கள் :)
பதிலளிநீக்குபல நூறு செய்திகளை ஒரு படம் தெளிவாக தெரிவிக்கிறது.
பதிலளிநீக்குஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகிய கருத்துக்கள் கூறி வாழ்த்தி சிறப்பித்துள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன் தங்கள் vgk
நல்ல தத்துவங்கள். தன்னிடம் உள்ளவற்றைப் பயன்படுத்தத் தெரியாதவன் அறிவற்றவன் ஆவான்.
பதிலளிநீக்குநல்ல கருத்துள்ள படங்கள் தகவல்கள். ஏறி வந்த ஏணியை எட்டெ உதைப்பதுதூனே நடகுகெறது
பதிலளிநீக்குபூந்தளிர் May 28, 2015 at 10:53 AM
நீக்கு//நல்ல கருத்துள்ள படங்கள் தகவல்கள்.//
மிக்க மகிழ்ச்சி + நன்றி.
//ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது தானே நடக்கிறது//
நான் ஒருபோதும் அவ்வாறு செய்வது இல்லை. நான் ஏறிவந்த ஏணிப்படிகளை என்றும் தெய்வமாக நினைத்துக் கும்பிடுபவன் மட்டுமே. :)
சந்தேகமானால் இதோ இந்த என் 200வது பதிவினை மீண்டும் போய்ப்பாருங்கோ:
http://gopu1949.blogspot.in/2011/12/2011.html
அறுக்க மாட்டாதவன் கையில் 58 கத்தி.
பதிலளிநீக்குஅதே மாதிரி முதல் படத்தில் உள்ள அறிவாளியின் கால்களின் கீழ் பல ஏணிகள். ஒரே ஒரு ஏணியிலேயே ஏறி அந்தப் பக்கம் போயிருக்கலாமே.
வாய்ப்பு கிடைக்கும் போது உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.
நல்ல கருத்துக்களுக்கு நன்றி.
படமும் கருத்தும் ரொம்ப நல்லாகீது.
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைக்கும்போது பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது முதலில் உணற வேண்டும். நல்ல படங்கள் நல்ல கருத்துகள்.
பதிலளிநீக்குஅற்புதமான படங்கள் + கருத்துகள். முதல் படம் நானே எழுத எடுத்துவைத்துள்ளேன்..
பதிலளிநீக்குRAVIJI RAVI December 2, 2015 at 8:06 PM
நீக்கு//அற்புதமான படங்கள் + கருத்துகள். முதல் படம் நானே எழுத எடுத்துவைத்துள்ளேன்..//
மிக்க மகிழ்ச்சி. எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளவும். :)