About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, June 14, 2015

நினைவில் நிற்போர் - 14ம் திருநாள்

2
ஸ்ரீராமஜயம்
============

அன்புடையீர், 

அனைவருக்கும் வணக்கம். 

01.06.2015 முதல் 05.07.2015 வரை தொடர்ச்சியாக ஐந்து வாரங்களுக்கு வலைச்சர ஆசிரியராக பணியாற்ற நினைத்திருந்தேன். அதற்கான 35 பதிவுகளையும் நான் முன்கூட்டியே திட்டமிட்டு வடிவமைத்து என்னிடம் தயார் நிலையில் (As Composed Drafts) வைத்துக்கொண்டும் இருந்தேன். 

ஆனால் ஒருசில நிர்பந்தங்களால், நெருக்கடிகளால், கட்டுப்பாடுகளால் என்னால் அங்கு, என் போக்குப்படி, ஏற்கனவே நான் திட்டமிட்டிருந்தபடி, முழுச்சுதந்திரமாக செயல்பட இயலாமல் போன காரணத்தால், இன்று 14.06.2015 முதல், வலைச்சர ஆசிரியர் பதவியிலிருந்து என்னை நானே விலக்கிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை என்றாலும், என் வழக்கப்படி ’எல்லாம்  நன்மைக்கே’ என மிகச்சுலபமாக எடுத்துக்கொண்டு விட்டேன்.  

இருப்பினும் நான் ஒருவேளை அங்கு வலைச்சர ஆசிரியராக  35 நாட்களுக்கும் நீடித்திருந்தால், யார் யாரை அடையாளம் காட்டி சிறப்பிக்க நான் நினைத்திருந்தேனோ, அவர்கள் பற்றிய பதிவுகள் இந்த என் வலைத்தளத்தினில் ‘நினைவில் நிற்போர்’ என்ற புதிய தலைப்பினில், தொடர்ந்து தினமும் வெளியிடப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
-ooooooooo-


நினைவில் நிற்கும்

பதிவர்களும், பதிவுகளும்

14ம் திருநாள்

14.06.2015


73. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

எத்தனை எத்தனை இராமன்-37
ஹாங்காங் நோவாவின் கப்பல்-38


 கண்ணாடிப்பாலமும் தொட்டிப்பாலமும்-39
74. செல்வி. யுவராணி தமிழரசன் அவர்கள்
வலைத்தளம்:  கிறுக்கல்கள்

கத்தியின்றி ரத்தமின்றி
இன்னும் இருக்கிறார்கள்
எங்கே (எவற்றை) விலைபேசுகிறோம் நாம்75. திருமதி. புவனா அவர்கள்
வலைத்தளம்: அப்பாவித் தங்கமணி
பிரசவ வைராக்யம்
என் உயிர் நின்னதன்றோ
ராங் காலும் ரங்கமணியும்.... :)
’ஜில்லுன்னு ஒரு காதல்’ ... பகுதி-1


 


76. திருமதி. மாலதி அவர்கள்
வலைத்தளம்: மாலதியின் சிந்தனைகள்


பித்தம் தெளிந்தேன்
என் இதயத்தில் உயர்ந்து நிற்கிறாய்
இலக்கணத்தைப் படைப்போம் வா
77.  திருமதி.  தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்
வலைத்தளம்: முகிலின் பக்கங்கள்சிந்தனைக்கு ஓர் விஷயம்'விதிமுறைகள்’ என்ற சொல்லை யார் மூலம் எப்போது  நான் கேட்டாலுமே, உடனே எனக்கு பலத்த சிரிப்பு மட்டுமே வருவது உண்டு.

அரசாங்கமோ, நீதிமன்றங்களோ, காவல்துறையோ கொண்டுவரும் ஒருசில கடுமையான விதிமுறைகள்கூட, சமயத்திற்குத் தகுந்தாற்போல, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல, ஆளுக்குத் தகுந்தாற்போல, காலத்திற்கு ஏற்றார்போல அவர்களாலேயே அவ்வப்போது, அவற்றை மாற்றிக்கொள்வதோ அல்லது தளர்த்திக்கொள்வதோ நாம் நடைமுறையில் மிகவும் நன்றாகவே அறிந்ததுதான். 

பொதுவாக ’விதிமீறல்’ என்பதே அந்த விதிமீறலால் வேறு யாருக்கும் எந்த விதத்திலாவது பாதிப்புகள் இருந்தால் மட்டுமே, அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்’ என்ற விதிமுறையையே நாம் எடுத்துக்கொள்ளலாம். 

நம் தமிழ்நாட்டில், அன்று ஒருநாள் இது கட்டாயப்படுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் இது கட்டாயப்படுத்தப்பட்டது. இன்று அதாவது இப்போது நடக்கும் இந்த ஜூன் மாதம் இதை அணிய வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை என்று உள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் அணிய வேண்டிய கட்டாயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் என்றாவது ஒருநாள் அது கண்டுகொள்ளப்படாமல், விட்டாலும் விடப்படலாம். எதுவுமே எப்போதுமே நாம் உறுதியாகச் சொல்வதற்கு இல்லை.

இந்த ஒரு சின்ன, ஆனால் அதே சமயம் விபத்து நேர்ந்தால், நம் தலைக்கும் உயிருக்குமே பாதுகாப்பு அளிக்கக்கூடிய மிகப்பெரிய, விதிமுறையையேகூட எவ்வளவு தடவை தளர்த்திக்கொண்டுள்ளார்கள்? எவ்வளவு தடவை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்? என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே.  

அதனால் ‘விதிமுறைகள்’ என்ற பெயரைச்சொல்லி, அனைவரும் விரும்பி வரவேற்கும், ஒரு நற்செயலைத் தடுக்க நினைப்பதெல்லாம் .... எங்கும் எதிலும் ‘சும்மா’ ஒரு நொண்டிச் சாக்கு மட்டுமே என்று நினைக்கத்தோன்றுகிறது !மீண்டும் நாளை சந்திப்போம் !என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

98 comments:

  1. நல்ல ஒரு யோசனை.. எழுதுங்கள்...
    வந்து பார்க்கிறேன். இனிய வாழ்த்து.

    ReplyDelete
    Replies
    1. @kovaikkavi

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  2. தங்கள் பாணி தொடரட்டும்.

    எனக்கு ஒரு சந்தேகம். வலைச்சரம் இரண்டு மாதங்கள் நின்று போயிருந்ததே? அப்போது இந்த விதிமுறைகள் எங்கே போயிருந்தன?

    ReplyDelete
    Replies
    1. @பழனி கந்தசாமி

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
    2. எனக்கு ஒரு சந்தேகம். வலைச்சரம் இரண்டு மாதங்கள் நின்று போயிருந்ததே? அப்போது இந்த விதிமுறைகள் எங்கே போயிருந்தன?///

      இரண்டு வாரங்கள் நின்றிருந்த சமயத்தில் பதிவர்கள் இல்லாததால் விதிமுறைகளும் நின்று விட்டது. ஆனால் ஆசிரியர் பொறுப்பேற்க வரும் பதிவர்களுக்கு விதிமுறைகள் என ஒரு மின்னஞ்சல் அனுப்புவோம். தாங்களும் ஆசிரியர் பொறுப்பேற்ற சமயத்தில் தங்களுக்கும் அனுப்பியுள்ளோம் ஐயா...

      Delete
  3. இன்றைய நினைவில் நிற்போர் அறிந்தவர்கள் .அவர்களுக்கு வாழ்த்துக்கள். விதிமுறைகள் சில நேரம் முள்கிரீடம் போல ஐயா! தங்களின் திட்டமிடல் பகிர்வு தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. @தனிமரம்

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  4. அப்பாவித் தங்கமணி அறிந்த பதிவர். மற்ற இருவரும் புதியவர்கள். வாழ்த்துகள் ஸார்.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம்

      ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  5. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    விதிமுறைகள் : (நேரம் கிடைக்கும் போது) ஒரு பதிவு எழுதுகிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. @திண்டுக்கல் தனபாலன்

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  6. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.

    // 01.06.2015 முதல் 05.07.2015 வரை தொடர்ச்சியாக ஐந்து வாரங்களுக்கு வலைச்சர ஆசிரியராக பணியாற்ற நினைத்திருந்தேன். ….. ….. ….

    ஆனால் ஒருசில நிர்பந்தங்களால், நெருக்கடிகளால், கட்டுப்பாடுகளால் என்னால் அங்கு, என் போக்குப்படி, ஏற்கனவே நான் திட்டமிட்டிருந்தபடி, முழுச்சுதந்திரமாக செயல்பட இயலாமல் போன காரணத்தால் …. … //

    எதிர்பார்த்ததுதான். வலைச்சரத்தில் ஒருசில பதிவுகளின் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டேன். நினைவில் நிற்போர் – என்ற தங்களது புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்.

    நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
    நடப்பதையே நினைத்திருப்போம் – கவிஞர் கண்ணதாசன்.

    மீண்டும் வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. @தி. தமிழ் இளங்கோ

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
    2. எதிர்பார்த்ததுதான். வலைச்சரத்தில் ஒருசில பதிவுகளின் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டேன். ////

      அதை தான் அவரின் வலைச்சர மறுமொழிகளில் பகிர்ந்தேன் தமிழ் இளங்கோ ஐயா...

      Delete
  7. அன்புள்ள V.G.K அவர்களுக்கு மீண்டும் வணக்கம்.

    சகோதரி யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள்) அவர்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். வேலைப் பளு காரணமாக முன்புபோல் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.

    சகோதரி தமிழ்முகில் பிரகாசம் (முகிலின் பக்கங்கள்) அவர்களது கவிதைகளையும் மற்றும் பெண்ணியம், பெரியாரியல் சார்ந்த கட்டுரைகளையும் அடிக்கடி படிப்பதுண்டு.

    சகோதரிகள் திருமதி புவனா (அப்பாவி தங்கமணி), திருமதி மாலதி (மாலதியின் சிந்தனைகள்) ஆகியோரது வலைத்தளங்கள் சென்றதில்லை. இனிமேல் சென்று பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. @தி. தமிழ் இளங்கோ

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், அனைத்துக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். :)

      Delete
  8. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @ADHI VENKAT

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  9. எனது வலைப்பூவினை அறிமுகம் செய்து சிறப்பித்தமைக்கு நன்றிகள் பல ஐயா.

    ReplyDelete
    Replies
    1. @Tamilzhmuhil Prakasam

      //எனது வலைப்பூவினை அறிமுகம் செய்து சிறப்பித்தமைக்கு நன்றிகள் பல ஐயா.//

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      Delete
  10. இது நல்ல ஐடியாதான். தங்களின் உழைப்பு வீண் போகாமல் பயன்படும். நானும் தொடர்ந்து வருகிறேன். நல்ல நல்ல பதிவர்களையும் நல்ல பதிவுகளையும் உங்கள் புண்ணியத்தில் தெரிந்து கொள்கிறேன். தொடர்கிறேன். வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
    Replies
    1. @S.P.Senthil Kumar

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  11. இன்றைக்கு தங்களது நினைவில் நிற்கும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களது 5 கவிதைகளையும் படித்தேன். அருமை. அருமை.அதிலும் அந்த ‘புலிக்கு கொடுத்த முத்தம்’ மிக அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி June 14, 2015 at 11:20 AM

      //இன்றைக்கு தங்களது நினைவில் நிற்கும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!//

      வாங்கோ சார், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      //தங்களது 5 கவிதைகளையும் படித்தேன். அருமை. அருமை. அதிலும் அந்த ‘புலிக்கு கொடுத்த முத்தம்’ மிக அருமை. வாழ்த்துக்கள்!//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சார். :)

      Delete
  12. வலைச்சர இதழ்கள் இரண்டு மூன்று பார்த்தவுடன் இது மாதிரி நிகழும் என்று எதிர்பார்த்தேன்

    ReplyDelete
    Replies
    1. G.M Balasubramaniam June 14, 2015 at 11:22 AM

      //வலைச்சர இதழ்கள் இரண்டு மூன்று பார்த்தவுடன் இது மாதிரி நிகழும் என்று எதிர்பார்த்தேன்.//

      தங்களைப்போன்ற ஒரு சிலரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

      Delete
  13. எங்கேயும், எப்போதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. இங்கேயும் தொடர்ந்து வந்து படிக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. kg gouthaman June 14, 2015 at 12:46 PM

      //எங்கேயும், எப்போதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. இங்கேயும் தொடர்ந்து வந்து படிக்கின்றேன்.//

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். :)

      Delete
  14. Replies
    1. அப்பாவி தங்கமணி June 14, 2015 at 12:55 PM

      //மிக்க நன்றி சார்//

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். :)

      Delete
  15. அன்பின் அண்ணா அவர்களுக்கு வணக்கம்..

    இறைவன் அருளால் - எல்லாம் நன்மைக்கே..
    இது - தங்களுக்கான ஆடுகளம்!.. அடித்து விளையாடுங்கள்!..

    ஆயினும் - தங்கள் நலனிலும் கவனம் கொள்க..

    அன்னை அகிலாண்டேஸ்வரி அருகிருப்பாளாக!..

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜூ June 14, 2015 at 2:57 PM

      //அன்பின் அண்ணா அவர்களுக்கு வணக்கம்..//

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //இறைவன் அருளால் - எல்லாம் நன்மைக்கே..
      இது - தங்களுக்கான ஆடுகளம்!.. அடித்து விளையாடுங்கள்!..//

      :))))) தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். :)))))

      //ஆயினும் - தங்கள் நலனிலும் கவனம் கொள்க.. //

      ஆகட்டும். என் மீதுள்ள தங்களின் தனி அக்கறைக்கு என் நன்றிகள்.

      //அன்னை அகிலாண்டேஸ்வரி அருகிருப்பாளாக!..//

      இங்கு என் வீட்டுக்கு மிக அருகிலேயே தான் இருக்கிறாள் திரு ஆனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள். அதையும் விட மிக அருகே எப்போதும் என் மனதினிலும் வீற்றிருக்கிறாள். எனக்கென்ன கவலை? :))))) மிக்க நன்றி.

      Delete
  16. அங்கே இல்லேன்னா இங்கே.
    எங்கே இருந்தாலும் உங்களுக்கே எங்கள் ஓட்டு, ஆதரவு எல்லாம்.

    நினைவில் நிற்போருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya June 14, 2015 at 2:59 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா :)

      //அங்கே இல்லேன்னா இங்கே. எங்கே இருந்தாலும் உங்களுக்கே எங்கள் ஓட்டு, ஆதரவு எல்லாம்.//

      ஆஹா, என் பிரியத்திற்கும், மரியாதைக்கும் உரிய ‘ஜெ’யின் அன்பும் ஆதரவும் இருக்க எனக்கென்ன கவலை? :)))))))))))))))))))

      [ இங்கு என் தளத்தில் தாங்கள் வோட்டுப்போட வேண்டிய தொல்லையே இருக்காது, ஜெயா. கருத்துக்களை மட்டுமே வரவேற்று மகிழ்பவன் நான். ]

      //நினைவில் நிற்போருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்//

      :))))) மிக்க நன்றி. தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. :)))))

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  17. 35 நாட்களுக்கும் எழுத வேண்டியதை தயார் நிலையில் வைத்திருப்பது அறிந்து மலைத்துப் போனேன். வலைச்சர ஆசிரியர் பொறுப்பிலிருந்து பாதியிலெயே விலகினாலும், விடுபட்டுப் போனவர்களை அறிந்து கொள்ள இந்தத் தொடரைத் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. .யுவராணி தமிழரசன் எழுத வந்த புதிதில் எனக்கு விருது கொடுத்துச் சிறப்பித்தார்கள். அவர்கள் ஏனோ 2013 க்கு பிறகு எழுதுவதில்லை, விரைவில் அவர்கள் பதிவுலகம் திரும்ப வேண்டும். தமிழ் முகில் அவர்களைத் தெரியும். மற்றவர்கள் புதியவர்கள். எல்லோருக்கும் இனிய வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Kalayarassy G June 14, 2015 at 4:19 PM

      வாங்கோ, வணக்கம்.

      //35 நாட்களுக்கும் எழுத வேண்டியதை தயார் நிலையில் வைத்திருப்பது அறிந்து மலைத்துப் போனேன்.//

      ஓரளவுக்கு Semi Finished ஆக மட்டுமே, அனைத்தையும் முன்னதாகவே திட்டமிட்டு தயார் செய்து வைத்துக் கொண்டுள்ளேன். பிறகு அவ்வப்போது மேலும் சற்று மெருகேற்ற முடியுமா என யோசித்து அன்றாடம் வெளியிட்டு வருகிறேன். அதுதான் என் வழக்கமும் கூட.

      //வலைச்சர ஆசிரியர் பொறுப்பிலிருந்து பாதியிலேயே விலகினாலும், விடுபட்டுப் போனவர்களை அறிந்து கொள்ள இந்தத் தொடரைத் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. //

      :) சந்தோஷம், மிக்க நன்றி. :)

      //யுவராணி தமிழரசன் எழுத வந்த புதிதில் எனக்கு விருது கொடுத்துச் சிறப்பித்தார்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள்.

      //அவர்கள் ஏனோ 2013 க்கு பிறகு எழுதுவதில்லை, விரைவில் அவர்கள் பதிவுலகம் திரும்ப வேண்டும்.//

      என்னிடம் மிகவும் பிரியமும் பாசமும் கொண்டவர்கள். தங்களைப்போலவே வங்கிப்பணியில், என் ஆசிகளுடன் என்னிடமிருந்து ஒரு எழுதுகோல் [பேனா] தரச்சொல்லி கேட்டு வாங்கிக்கொண்டு, சமீபத்தில் 2013 இல் வங்கிப்பணியில் சேர்ந்தார்கள். இப்போது கொஞ்ச நாட்களாக ஏனோ என் தொடர்பு எல்லைக்குள் வரக்காணோம். ஒருவேளை அலுவலக வேலைகளில் மூழ்கி இருக்கலாம். நேரம் கிடைக்காமல் இருக்கலாம்.

      //தமிழ் முகில் அவர்களைத் தெரியும். மற்றவர்கள் புதியவர்கள். எல்லோருக்கும் இனிய வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!//

      :))))) மிக்க நன்றி. தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. :)))))

      நன்றியுடன் கோபு

      Delete
  18. தொடருங்கள் ஐயா
    தொடர்க் காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. @கரந்தை ஜெயக்குமார்

      :) தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி :)

      Delete
  19. தங்கள் வலைத்தளம் மறுபடியும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்ததற்கும் தொடர்ந்து பதிவர்கள் அறிமுகம் இங்கே நடைபெறுவதற்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மனோ சாமிநாதன் June 14, 2015 at 6:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்கள் வலைத்தளம் மறுபடியும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்ததற்கும் தொடர்ந்து பதிவர்கள் அறிமுகம் இங்கே நடைபெறுவதற்கும் இனிய வாழ்த்துக்கள்!//

      :) தங்களின் அன்பான வருகைக்கும். ஆதரவான ஆறுதலான உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் என் மனமாந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். :)

      Delete
  20. இன்று அறிமுகமாகி இருக்கும் அணைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. @Saratha J

      :) தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி :)

      Delete
  21. திட்டமிட்டு எல்லாம் தயார் செய்ததன் பின் இருந்த உழைப்பு வீணாகக் கூடாதுதான்.தொடருங்கள்.தொடர்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. சென்னை பித்தன் June 14, 2015 at 8:08 PM

      வாங்கோ, நமஸ்காரம் சார்.

      //திட்டமிட்டு எல்லாம் தயார் செய்ததன் பின் இருந்த உழைப்பு வீணாகக் கூடாதுதான். தொடருங்கள். தொடர்கிறோம்//

      :) தங்களின் அன்பான வருகைக்கும். ஆதரவான ஆறுதலான உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும், என் மனமாந்த இனிய அன்பு நன்றிகள், சார். :)

      Delete
  22. 14-ஆம் திருநாள் இனிதே அமைந்திருந்தது.
    பங்கு பெற்ற பதிவர்களுக்கு நல்வாழ்த்துகள்...

    சில பதிவுகள் சென்று வந்தேன்.
    ..
    .

    ReplyDelete
    Replies
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      :) தங்களின் அன்பான வருகைக்கும். ஆதரவான ஆறுதலான உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும், அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும், சில பதிவுகளைச் சென்று பார்த்ததாகச் சொல்வதற்கும் என் மனமாந்த இனிய அன்பு நன்றிகள். :)

      Delete
  23. எல்லாம் தயார்படுத்திக் கொள்ளும் உங்கள் உழைப்பும் நேர்மையும் வியக்க வைக்கிறது.. இல்லை.. மலைக்க வைக்கிறது.

    விதிமுறைகள் விவரம் புரியவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை June 14, 2015 at 8:46 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //எல்லாம் தயார்படுத்திக் கொள்ளும் உங்கள் உழைப்பும் நேர்மையும் வியக்க வைக்கிறது.. இல்லை.. மலைக்க வைக்கிறது.//

      அடடா, தன்யனானேன். :)

      //விதிமுறைகள் விவரம் புரியவில்லையே?//

      அதுபற்றி எனக்கே இன்னும் ஒன்றும் சரிவரப் புரியவில்லை. அது போகட்டும். தாங்கள் கடந்த 13 நாட்களாக வலைச்சரப்பக்கம் வந்திருந்தாலோ, அல்லது அதில் 9ம் திருநாள் மற்றும் 10ம் திருநாள் பதிவுகளில் நான் நம் நண்பர் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் பின்னூட்டங்களுக்கு அளித்துள்ள பதில்களை மட்டுமாவது படித்திருந்தாலோ, தங்களுக்கு ஓரளவு மட்டுமாவாது புரிந்திருக்கக்கூடும். இதோ அதற்கான இணைப்புகள்:

      http://www.blogintamil.blogspot.in/2015/06/9.html

      http://www.blogintamil.blogspot.in/2015/06/10.html

      அன்புடன் VGK

      Delete
    2. விதிமுறைகள் விவரம் புரியவில்லையே?///

      அப்பாதுரை ஐயா... இப்பதிவில் எனது மறுமொழிகளை பாருங்கள்... விஷயம் என்னவென்று தாங்கள் தெளிவாக அறிவீர்கள்

      Delete
  24. இதை நான் எதிர்பார்த்தேன் ஐயா! விதிமுறைகள் குறித்து தங்கள் ஆதங்கம் புரிகிறது ஆங்கிலத்தில் ஏ.ஜி கார்டினர் எழுதிய சிறுகதை ஒன்று ப்ளஸ் ஒன் துணைப்பாடமாக வந்தது. அதுவும் நினைவுக்கு வருகின்றது. இன்றைய அறிமுகங்கள் அனைவரும் நான் அறிந்தவர்கள் என்பதில் மகிழ்ச்சி! தொடருங்கள் உங்களின் உழைப்பு வீணாக வேண்டாம். வீணாகாது. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @‘தளிர்’ சுரேஷ்

      வாங்கோ, வணக்கம்.

      :) தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். :)

      Delete
  25. ஆனால் ஒருசில நிர்பந்தங்களால், நெருக்கடிகளால், கட்டுப்பாடுகளால் என்னால் அங்கு, என் போக்குப்படி, ஏற்கனவே நான் திட்டமிட்டிருந்தபடி, முழுச்சுதந்திரமாக செயல்பட இயலாமல் போன காரணத்தால்,/////

    இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த பதிவர்கள் அனைவரும் கவனிக்க...
    நீங்கள் ஆசிரியர் பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்த பின்னர் என்னிடமிருந்தோ அல்லது சீனா ஐயாவிடமிருந்தோ வலைச்சர விதிமுறைகள் என ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அந்த மின்னஞ்சலை சற்று சிரமம் பாராது எடுத்துப் பாருங்கள் நண்பர்களே. அதில் உள்ள வரிகளை மாற்றியோ, இவருக்கென தனியாக புதிய விதிமுறைகளை புகுத்தவில்லை. இவரை வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்திய சமயத்தில் எங்களால் விதிமுறைகள் என்ற தனி மின்னஞ்சல் அனுப்ப மறந்து விட்டோம். அந்த தவறுக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். ஆனால் இவருக்கு வலைச்சரத்தில் இப்படித்தான் எழுத வேண்டும் என கண்டிப்பாக தெரிந்திருக்கும். வலைச்சரத்தின் தொடர் வாசகர் இவர் அறியாதவரா நீங்கள்?மேலும் வலைச்சரத்தில் நூற்றுக்கும் அதிகமாக அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர் நான் என சொல்லியுள்ளார். அதோடு வலைச்சர பொறுப்பேற்க பல பதிவர்களை பரிந்துரை செய்து எங்களுக்கு உதவியுள்ளார். அவர்களை பொறுப்பேற்க இவர் அழைக்கும் போது வலைச்சரத்தில் இப்படித்தான் எழுத வேண்டும் என சொல்லாமலா இருந்திருப்பார்?
    சரி, அதை விடுங்கள்..

    ReplyDelete
  26. மறுமொழித் தொடர்ச்சி...

    வலைச்சர பதிவுகள் பெரும்பாலும் படிக்கும் இவர் (ஏனெனில் இவரை அதிக முறை அறிமுகம் செய்யப்பட்டது என்பதை படித்து கண்டறிந்ததால்) அந்த ஆசிரியர்கள் முதல் நாள் பதிவில் மட்டுமே தங்களைப் பற்றி குறிப்பிட எங்களுக்கு அனுமதி தந்துள்ளார்கள் என அவர்களே எழுதியிருப்பார்கள். அதை இவர் பார்க்காமலா/படிக்காமலா இருந்திருப்பார்? ஒருசிலர் தங்களின் அறிமுக பதிவை கடைசி பதிவாக எழுதியிருப்பார்கள். அவர்களே நாளை முதல் புதிய பதிவர்களை/பிடித்த பதிவர்களை அறிமுகம் செய்கிறோம் என்றும் எழுதியிருப்பார்கள். அந்த வரிகளை பார்க்காமலா/படிக்காமலா இருந்திருப்பார்? இவருக்கு வலைச்சர விதிமுறைகள் கொஞ்சம் கூட தெரிந்திருக்காது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா பதிவர்களே? சரி அதையும் விடுங்கள்..

    ReplyDelete
  27. மறுமொழித் தொடர்ச்சி...
    வலைச்சரத்தில் இவரது பதிவுகள் சில வெளியானவுடன் கீழ்க்கண்ட வரிகள் அடங்கிய மின்னஞ்சலை அனுப்பினேன்
    ///சென்ற 01-06-2015 திங்கட்கிழமை முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்று ஆர்வமுடன் பதிவுகளை எழுதி வருகிறீர்கள்.

    அதில் முதல் பதிவில் உங்கள் வலைப்பூ பற்றியும், உங்களைப் பற்றியும் எழுதியிருந்தீர்கள்.
    அதற்கடுத்து தாங்கள் வலைச்சரத்தில் எழுதி வரும் பதிவுகளிலும், உங்களின் வலைப்பூ பற்றி எழுதியும், லிங்க் கொடுத்தும் வருகிறீர்கள். அது வலைச்சர விதிமுறைப்படி தவறானது (விதிமுறை 4இல் பார்க்கவும்) கீழே விதிமுறைகள் உள்ளது (சீனா ஐயா ஏற்கனவே அனுப்பியிருப்பார் என நினைக்கிறேன். இருந்தாலும் இங்கே பகிர்கிறேன்).

    மேலும் நீங்கள் எழுதியுள்ள வலைச்சர பதிவுகளில் பெரும்பாலும் பதிவர் பெயர், வலைப்பூ, சில இடுகை தலைப்பு, மற்றும் அதன் URL லிங்க் மட்டுமே உள்ளது. அதிலும் சிலரது வலைப்பூ தினமும் வருகிறது. இவ்வாறு எழுதுவது என்பது மிக மிக எளிது. இப்படி எழுதினால் ஒருவரே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எழுதலாம். இவ்வாறு எழு வேண்டும் எனில் பதிவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு ஆர்வமுடன் வருவார்கள். ஆனால் உங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் மற்ற பதிவர்கள் எழுதியுள்ள பதிவுகளை பார்க்கவும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் விதவிதமான தலைப்புகளில் விதவிதமானவர்களை அறிமுகம் செய்துள்ளார்கள். இவ்வாறு எழுத வேண்டி தான் பலரும் வலைச்சரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க தயங்குகிறார்கள், அதோடு அவர்களுக்கு நேரமின்மையும் (தேடுதலுக்கான நேரம் மிகுதியாவதால்) காரணமாக அமைகிறது.
    வெறும் வலைப்பூ பெயரும், லிங்க் மட்டும் தருவதற்கு ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் ஒதுக்கினாலே போதுமானதே? (சிலர் மட்டும் வலைச்சர விதிமுறைக்கு பொருந்தாமல் எழுதியிருக்கலாம்.) ஆனால் வலைச்சரத்திற்கு என சில விதிமுறைகள் வலைச்சரம் ஆரம்பித்த நாள் முதலே உள்ளது (விதிமுறை 5 - 8 வரை) பார்க்கவும்.

    மேலும் இதர விதிமுறைகளை பார்க்கவும். அதன்படி பதிவுகளை எழுதி வெளியிடவும்.

    வலைச்சரத்தில் இணைதல் மற்றும் பதிவு எழுதுவதில் சந்தேகம் ஏற்படின் கீழ்கண்ட இணைப்பில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

    தாங்கள் பதிவின் தலைப்பு தனியாகவும், அதன் லிங்க் அடுத்த வரியில் தனியாகவும் தருகிறீர்கள். அதனை அந்த தலைப்பிலேயே வரும் படி எவ்வாறு தர வேண்டும் என கீழுள்ள இணைப்பில் உள்ளது. பார்த்து அறிந்து கொள்ளுங்கள்

    வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!!
    http://www.tamilvaasi.com/2013/10/tips-for-valaicharam-blog-authors.html
    ////

    இந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள எதுவுமே என்னால் செய்ய இயலாது எனவும், புதிதாக தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள இயலாது எனவும், எனக்கு மட்டும் என் போக்கில் பதிவு எழுத அனுமதி தாருங்கள் எனவும் பதில் அனுப்பினார்.
    நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அவரது பதிவுகள் ஒவ்வொன்றிலும், கட்டுரைக்கு ஏற்ற படங்கள், நகரும் படங்கள், அடுத்தடுத்த பத்திகளை பிரிக்க gif படங்கள் என பகிரும் இவர் இந்த நுட்பத்தை மட்டும் அறிய மாட்டேன் என சொல்வது சரியா? அதற்கு அந்த உதவிப் பதிவை படித்திருக்கலாம் அல்லது தனியாக கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமே? ஆனால், அவரால் அது போல செய்ய இயலாது என தெரிந்தவுடன், சரி பரவாயில்லை உங்கள் வழக்கத்திலேயே பகிருங்கள் என சொன்னோம். சரி அதையும் விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே, விதிமுறைகளை மேலே பகிர விடுபட்டு விட்டது. அவற்றை இங்கே பகிர்கிறேன்.. ஏற்கனவே வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த பதிவர்கள், உங்களுக்கு நாங்கள் அனுப்பியிருந்த விதிமுறைகள் அடங்கிய மின்னஞ்சலை சிரமம் பாராது தேடி பாருங்கள். அவற்றிலும் இங்கு பகிர்ந்தவற்றிலும் மாறுதல்கள் இருக்கிறதா என??

      இதோ விதிமுறைகள் : (ஆசிரியர் பொறுப்பேற்க )

      1. தங்களின் சொந்த வலைப்பூவிற்கு ஒரு வார காலம் ஓய்வு கொடுத்தாலும் சரி - அங்கு தொடர்ந்து இடுகையிட்டாலும் சரி -

      2. திங்கள் காலை 6 மணி ( இந்திய நேரம் ) முதல் - அடுத்த ஞாயிறு மாலை 6 மணி ( இந்திய நேரம் ) வரை வலைச்சரத்தில் எழுதலாம்.

      3. வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்கும் வலைப்பதிவர் அந்த ஒரு வாரத்தில் குறைந்தது ஏழு இடுகைகள் முதல், விருப்பப்படி அதிகபட்சம் எத்தனை இடுகைகள் வேண்டுமானாலும் இடலாம்.

      4. முதல் பதிவாக இடும் அறிமுக இடுகையில் தங்கள் சொந்த வலைத்தளம் / வலைப்பதிவுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து கொள்ளலாம். தங்களின் முக்கியமான பழைய இடுகைளுக்கு சுட்டி கொடுத்து குறிப்பும் தரலாம்.

      5. மற்ற பதிவர்களின் இடுகைகளில் படித்ததில் பிடித்த, கவர்ந்த பதிவுகளைப் பற்றி, மற்றவர்களுக்கு பரிந்துரைக்க விரும்பும் பதிவுகளை, பலருக்கும் பயன்படும் பதிவுகளை எல்லாம் அறிமுகம் செய்யலாம்.

      6. புதிதாக பதிவுலகிற்கு வந்துள்ள வலைப்பூக்களை அறிமுகம் செய்து தொகுத்து ஒரிரு இடுகைகள் இடலாம்.

      பெரும்பாலும் குறிப்பிட்ட இடுகையை சுட்டிக்காட்டி அந்த அறிமுகம் அமைவது நல்லது.

      7. துறை வாரியாகவும் மற்றபடி கற்பனைக்கேற்றபடியும் தொகுப்புகளை வழங்கலாம்.

      8. அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு இடுகையும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.

      9. ஆசிரியராக இருக்கும் வலைப்பதிவருடைய சொந்த வலைப்பதிவின் தலைப்புகள் வலைச்சரத்தின் இடது பக்கப்பட்டியில் அந்த வாரம் முழுவதும் திரட்டப்படும்... அந்தந்த பதிவர் தரும் அதிகபட்சம் மூன்று செய்தியோடைகளுக்கான பதிவுகள் அந்த வாரத்தில் திரட்டப்படலாம்.

      10. விதிமுறை என்று பார்த்தால் சாதி, மத விவாதங்களை ஊக்குவிக்கும் பதிவுகளைக் குறிப்பிட்டு சுட்டி தருவதை மட்டும் தவிர்ப்பது நலம். மற்றபடி வானமே எல்லை...

      11. உங்கள் கற்பனைக்கேற்ற வடிவத்தில் கட்டுரையாக வடிக்கலாம். கதைபோல தொகுக்கலாம். அந்தந்தப் பதிவுகளின் குறிப்புகளோடு சுட்டிகள் இடம் பெறுவது அவசியம்.

      12. அறிமுகப் படுத்துவதைத் தவிர, அறிமுக இடுகைகளைப் பற்றிய செய்திகளைத் தவிர, அறிமுகம் செய்ய விரும்பும் இடுகைகளின் தன்மைகளைப் பற்றிய பொதுவான / இடுகைவாரியான கருத்துகளைத் தவிர வேறு செய்திகள் இடம் பெறாமால் இருத்தல் நலம்.

      Delete
  28. மறுமொழி தொடர்ச்சி..

    அவரது அறிமுகத்தை அடுத்தடுத்த பதிவுகளில் தொடர வேண்டாம் என சொன்னதற்கு. நான் ஏற்கனவே ட்ராப்டில் பதிவு செய்து விட்டேன் எனவும், அவற்றை அழிக்க முடியாது எனவும், தனக்கு மட்டும் ஸ்பெஷல் விதிவிலக்கு அளிக்குமாறும் சொன்னார். அதைத் தான் நாங்கள் வேண்டாம் என சொன்னோம். ஆனாலும் அதற்கடுத்தும் அவரது சுய பதிவுகள் பகிரப்பட்டு வந்தது. நண்பர்களே, அவர் ட்ராப்டில் இருந்து நகல் எடுத்து வலைச்சரத்தில் பதியும் பொழுது நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரது பதிவுகளை மட்டுமாவது அழித்திருக்கலாமே? முடியாத செயலா அது?? ஆனால் ஒரு தேதியைக் குறிப்பிட்டு அன்று முதல் பகிர மாட்டேன் என சொல்லியிருந்தார். நண்பர்களே சும்மா அதை ஒரு நொண்டிச் சாக்கு எனக் கருதியாவது அப்பதிவிலேயே நீக்கியிருக்கலாமே?? கடினமான செயல் அல்ல அது. சரி, அதையும் விடுங்கள்...

    ReplyDelete
  29. மறுமொழி தொடர்ச்சி..

    தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற பொழுதிலும் தொடர்ந்து ஐந்து வாரத்திற்கு எழுத அனுமதி கேட்ட போது அப்போதே வலைச்சர விதிமுறையை தளர்த்தி அனுமதி வழங்கினோம். வலைச்சரத்தில் அவருக்காக நான் பகிர்ந்த அறிமுகப் பதிவை பாருங்கள். இவ்வாறு எங்களின் அனைத்து விதிமுறைகளையும் இவர் பதிவெழுதுவதற்காக நாங்கள் விட்டுக் கொடுத்தால், இவ்வளவு நாட்களாக எங்களின் விதிமுறைகளுக்கு இணங்கி வலைச்சரத்தை அழகாக தொடுத்தவர்களின் உழைப்பிற்கு நாங்கள் என்ன பதில் சொல்வது???? அவர்கள் தங்களின் சொந்த வலைப்பூவில் எழுதும் பாணியை மாற்றி வலைச்சரத்திற்கு என புதிய பாணியை உருவாக்கி எழுத எத்துனை சிரமப்பட்டு இருப்பார்கள்? ஏனெனில் அவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மிகுந்த பாக்கியமாக, பெருமையாக கருதுவதால் தான்....

    நன்றி நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு,

      வாருங்கள், வணக்கம்.

      ஏற்கனவே வலைச்சர ஆசிரியராக பணியாற்றி இருந்த பல பதிவர்களுக்கும், இனி வலைச்சர ஆசிரியர்களாக பணியாற்ற விரும்பக்கூடிய பல பதிவர்களுக்கும் பயன்படும் விதமாக, பல கருத்துக்களை மேலே மிகவும் விரிவாகவும் அழகாகவும் எழுதியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      இருப்பினும் என் 9ம் திருநாள் மற்றும் 10ம் திருநாள் பதிவுகளில் தாங்கள் எழுதியுள்ள பின்னூட்டங்களிலும், அதற்கான என் பதில்களிலும் உள்ள சில முக்கியமான விஷயங்கள் இதில் தங்களால் இங்கு குறிப்பிட்டுச்சொல்ல விடுபட்டுப்போய் உள்ளன என நான் நினைக்கிறேன்.

      இதில் சந்தேகங்கள் கேட்டுள்ள பல பதிவர்களும், அவற்றையும் முழுமையாக அறிந்து கொள்ளட்டும் என அதன் இணைப்புகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.

      http://www.blogintamil.blogspot.in/2015/06/9.html

      http://www.blogintamil.blogspot.in/2015/06/10.html

      வலைச்சரத்தில் யார் ஆசிரியராக பணியாற்றுகிறார்கள் என்பது முக்கியமல்ல. வலைச்சரம் எப்போதும் போல தொடர்ச்சியாக புதுப்பொலிவுடன் [நடுவில் சற்றும் தொய்வேதும் இல்லாமல்] இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அதனால் மட்டுமே நான் அதனை எடுத்துச் செய்ய முன்வந்தேன். ஏதோ என்னால் முடிந்தவரை, எனக்குத் தெரிந்தவரை செயல்பட்டேன். வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்துவிட்டேன். அது நல்லபடியாக, நடுவில் நிற்காமல் Break Down ஆகாமல் தொடர்ந்து ஓடினால் எனக்கும் அதில் மிகுந்த மகிழ்ச்சி மட்டுமே.

      என் தளத்தினில் தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்கும் பயன்படக்கூடிய மிக நீண்ட கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      என்றும் அன்புடன்
      VGK

      Delete
  30. வலைச்சரத்தில் தங்களின் பதிவிற்கு நான் எழுதிய மறுமொழிகளை நண்பர்கள் அறிந்து கொள்ள சுட்டியை தருகிறீர்கள். சுட்டியை சுட்ட அவர்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். இதோ இங்கேயே எனது மறுமொழியை பேஸ்ட் செய்கிறேன்...

    ///தமிழ்வாசி பிரகாஷ்Tue Jun 09, 07:53:00 PM
    வணக்கம் ஐயா...
    தாங்கள் கடந்த சில நாட்களாக வலைச்சரத்தில் பதிவுகளை அறிமுகம் செய்து வருகிறீர்கள். அதில் வலைச்சர விதிமுறைகளை மீறி சில பதிவுகள் உள்ளது. அது பற்றி தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு பதிலாக தாங்கள் சீனா ஐயாவிடம் பேசி ஸ்பெஷல் பெர்மிசன் வாங்கியதாக சொல்லியிருந்தீர்கள். அது பற்றி சீனா ஐயாவிடம் ஆலோசித்தே இந்த மறுமொழியை பதிகிறேன் என்பதை தங்களுக்கு அறிவிக்கிறேன்... நான் சொல்லிய விதிமுறைகளில் ஒன்றைக் கூட மேற்கண்ட பதிவில் தாங்கள் பின்பற்றவில்லை. வலைச்சரத்தின் முக்கிய விதிமுறைகள் ஒன்றைக் கூட சரியாக பின்பற்றாத காரணத்தால், வலைச்சர விதிமுறைகளை மற்ற வாசகர்கள் அறிந்து கொள்ள இங்கே மறுமொழியாக பதிகிறேன்.

    தாங்கள் கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளில் 4 - 8 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆனாலும் தாங்களின் உடல்நலன் கருதி தங்களின் சொந்த வலைப்பூ சுட்டிகளை இனியும் வர இருக்கும் வலைச்சர பதிவுகளில் பதிய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    இதோ விதிமுறைகள் : (ஆசிரியர் பொறுப்பேற்க )

    1. தங்களின் சொந்த வலைப்பூவிற்கு ஒரு வார காலம் ஓய்வு கொடுத்தாலும் சரி - அங்கு தொடர்ந்து இடுகையிட்டாலும் சரி -

    2. திங்கள் காலை 6 மணி ( இந்திய நேரம் ) முதல் - அடுத்த ஞாயிறு மாலை 6 மணி ( இந்திய நேரம் ) வரை வலைச்சரத்தில் எழுதலாம்.

    3. வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்கும் வலைப்பதிவர் அந்த ஒரு வாரத்தில் குறைந்தது ஏழு இடுகைகள் முதல், விருப்பப்படி அதிகபட்சம் எத்தனை இடுகைகள் வேண்டுமானாலும் இடலாம்.

    4. முதல் பதிவாக இடும் அறிமுக இடுகையில் தங்கள் சொந்த வலைத்தளம் / வலைப்பதிவுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து கொள்ளலாம். தங்களின் முக்கியமான பழைய இடுகைளுக்கு சுட்டி கொடுத்து குறிப்பும் தரலாம்.

    5. மற்ற பதிவர்களின் இடுகைகளில் படித்ததில் பிடித்த, கவர்ந்த பதிவுகளைப் பற்றி, மற்றவர்களுக்கு பரிந்துரைக்க விரும்பும் பதிவுகளை, பலருக்கும் பயன்படும் பதிவுகளை எல்லாம் அறிமுகம் செய்யலாம்.

    6. புதிதாக பதிவுலகிற்கு வந்துள்ள வலைப்பூக்களை அறிமுகம் செய்து தொகுத்து ஒரிரு இடுகைகள் இடலாம்.

    பெரும்பாலும் குறிப்பிட்ட இடுகையை சுட்டிக்காட்டி அந்த அறிமுகம் அமைவது நல்லது.

    7. துறை வாரியாகவும் மற்றபடி கற்பனைக்கேற்றபடியும் தொகுப்புகளை வழங்கலாம்.

    8. அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு இடுகையும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.

    9. ஆசிரியராக இருக்கும் வலைப்பதிவருடைய சொந்த வலைப்பதிவின் தலைப்புகள் வலைச்சரத்தின் இடது பக்கப்பட்டியில் அந்த வாரம் முழுவதும் திரட்டப்படும்... அந்தந்த பதிவர் தரும் அதிகபட்சம் மூன்று செய்தியோடைகளுக்கான பதிவுகள் அந்த வாரத்தில் திரட்டப்படலாம்.

    10. விதிமுறை என்று பார்த்தால் சாதி, மத விவாதங்களை ஊக்குவிக்கும் பதிவுகளைக் குறிப்பிட்டு சுட்டி தருவதை மட்டும் தவிர்ப்பது நலம். மற்றபடி வானமே எல்லை...

    11. உங்கள் கற்பனைக்கேற்ற வடிவத்தில் கட்டுரையாக வடிக்கலாம். கதைபோல தொகுக்கலாம். அந்தந்தப் பதிவுகளின் குறிப்புகளோடு சுட்டிகள் இடம் பெறுவது அவசியம்.

    12. அறிமுகப் படுத்துவதைத் தவிர, அறிமுக இடுகைகளைப் பற்றிய செய்திகளைத் தவிர, அறிமுகம் செய்ய விரும்பும் இடுகைகளின் தன்மைகளைப் பற்றிய பொதுவான / இடுகைவாரியான கருத்துகளைத் தவிர வேறு செய்திகள் இடம் பெறாமால் இருத்தல் நலம்.

    நன்றி...

    ReplyDelete
  31. மேற்கண்ட எனது மறுமொழிக்கு வை.கோ ஐயா பகிர்ந்த மறுமொழியையும் இங்கே பகிர்கிறேன்...

    ////வை.கோபாலகிருஷ்ணன்Tue Jun 09, 08:44:00 PM
    அன்பின் தமிழ்வாசி பிரகாஷ்,

    வணக்கம்.

    தங்கள் மின்னஞ்சல் நேற்று 08.06.2015 அன்று கிடைத்ததும், நம் அன்பின் சீனா ஐயா அவர்களிடம் நான் உடனடியாக தொலைபேசியின் மூலம் பேசி அவரும் என்னிடம் ஒத்துக்கொண்டதால் மட்டுமே,
    இந்தப்பதிவினை (09.06.2015) வழக்கம் போல என் பாணியில் நான் வெளியிட்டுள்ளேன்.

    //ஆனாலும் தாங்களின் உடல்நலன் கருதி தங்களின் சொந்த வலைப்பூ சுட்டிகளை இனியும் வர இருக்கும் வலைச்சர பதிவுகளில் பதிய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.//

    என் உடல்நலம் கருதி விதிமுறைகளை சற்றே தளர்த்திக்கொடுத்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இதை மட்டும் நான் 11.06.2015 முதல் கவனத்தில் கொள்கிறேன்.

    11.06.2015 முதல் என் சொந்த வலைத்தளப்பதிவுகள் ஏதும் வலைச்சரத்தில் இடம் பெறாது என்பதை தங்களுக்கு மட்டுமல்லாமல் வலைச்சர வாசகர்கள் அனைவருக்கும் இதன் மூலம் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    வை. கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  32. வலைச்சரத்தில் அவரின் மற்றொரு பதிவில் நான் பகிர்ந்த மறுமொழி...

    ////தமிழ்வாசி பிரகாஷ்Wed Jun 10, 10:20:00 AM
    வலைச்சர நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளின்படி
    நாளை 11.06.2015 முதல் என் சுய அறிமுகப்பதிவுகள் மட்டும்
    இங்கு வலைச்சரத்தில் வெளியிடப்பட மாட்டாது
    எனத் தெரிவித்துக்கொள்கிறேன். :( ////////

    வணக்கம்....
    மேலே தாங்கள் குறிப்பிட்டுள்ள படி நாங்கள் சொன்ன விதிமுறைகள் புதியது என குறிப்பிட்டு உள்ளீர்கள். இதுவரை எத்தனையோ பதிவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கிறார்கள். அவர்கள் பலரும் உங்களுக்கு நண்பர்கள் தான். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வலைச்சர விதிமுறைகள் என்னவென்று?
    அதே போல வலைச்சரத்தில் அவர்கள் எவ்வாறு எழுதியிருந்தார்கள் எனவும் கேட்டுப் பாருங்கள்?
    உங்களுக்கென (அ) இந்த வாரம் முதல் நாங்கள் வலைச்சர விதிமுறைகளை மாற்றி அமைத்தது போல குறிப்பிட்டு வலைச்சர வாசகர்களுக்கு எங்களின் மீதான நம்பிக்கையை சற்று குறைத்தது போல உள்ளது.
    நீங்கள் மூத்த பதிவர், பலமுறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவரிடம் இருந்து இப்படி வலைச்சர விதிமுறைகளை குறை சொல்லி வரிகள் வரும் என எதிர்பார்க்கவில்லை.

    மேலும் மேற்கண்ட பதிவில் முதல் அறிமுகப் பதிவர் உங்களது வலைச்சர பதிவுகளில் பல முறை வந்துள்ளது. அதுவும் வலைச்சர விதிமுறைக்கு பொருந்தாது. ஏற்கனவே வலைச்சர ஆசிரியர்களாக இருந்த உங்களது நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

    மீண்டும் இங்கே வலைச்சர விதிமுறைகளை பகிர்கிறேன்
    4. முதல் பதிவாக இடும் அறிமுக இடுகையில் தங்கள் சொந்த வலைத்தளம் / வலைப்பதிவுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து கொள்ளலாம். தங்களின் முக்கியமான பழைய இடுகைளுக்கு சுட்டி கொடுத்து குறிப்பும் தரலாம்.

    5. மற்ற பதிவர்களின் இடுகைகளில் படித்ததில் பிடித்த, கவர்ந்த பதிவுகளைப் பற்றி, மற்றவர்களுக்கு பரிந்துரைக்க விரும்பும் பதிவுகளை, பலருக்கும் பயன்படும் பதிவுகளை எல்லாம் அறிமுகம் செய்யலாம்.

    6. புதிதாக பதிவுலகிற்கு வந்துள்ள வலைப்பூக்களை அறிமுகம் செய்து தொகுத்து ஒரிரு இடுகைகள் இடலாம்.

    பெரும்பாலும் குறிப்பிட்ட இடுகையை சுட்டிக்காட்டி அந்த அறிமுகம் அமைவது நல்லது.

    7. துறை வாரியாகவும் மற்றபடி கற்பனைக்கேற்றபடியும் தொகுப்புகளை வழங்கலாம்.

    8. அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு இடுகையும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.
    ********************

    நீங்கள் வேறு வலைப்பூவில் மாதிரி எழுதி வலைச்சரத்தில் பேஸ்ட் செய்து ஒவ்வொரு பதிவும் வெளியிட்டு வருகிறீர்கள். அப்படியிருக்கையில் இந்தப் பதிவிலும் நீங்கள் நினைத்திருந்தால் உங்களது சுய வலைப்பூ பதிவுகளை தவிர்த்து இருக்கலாம். ஆனால் நாளை என நோட்டீஸ் கொடுத்து உள்ளீர்கள். ஆனாலும் இத்தகைய பதிவுகளை எங்களால் அனுமதிக்க முடியாது. எனவே வலைச்சரத்தில் மேலே எங்களது ஓடும் வரிகளின் படி தங்களது சுய அறிமுக பதிவைத் தவிர்த்து மற்ற பதிவுகளில் உங்களது சுய பதிவுகளை (வலைச்சர பொறுப்பாசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றே) நீக்குகிறேன். (இனி புதியதாய் ஆசிரியர் பொறுப்பேற்க வரும் பதிவர்கள் உங்களது பதிவை முன்மாதியாக எடுத்துக் கொள்வார்கள் எனக் கருதி)/////

    ReplyDelete
  33. மேற்கண்ட எனது மறுமொழிக்கு வை.கோ ஐயா அவர்கள் பகிர்ந்த மறுமொழி கீழே..

    ////வை.கோபாலகிருஷ்ணன்Wed Jun 10, 12:02:00 PM
    தமிழ்வாசி பிரகாஷ் Wed Jun 10, 10:20:00 AM

    *வலைச்சர நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளின்படி நாளை 11.06.2015 முதல் என் சுய அறிமுகப்பதிவுகள் மட்டும் இங்கு வலைச்சரத்தில் வெளியிடப்பட மாட்டாது எனத் தெரிவித்துக்கொள்கிறேன். :( ////////

    //வணக்கம்....//

    இனிய நண்பர் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு, வணக்கம்.

    //மேலே தாங்கள் குறிப்பிட்டுள்ள படி நாங்கள் சொன்ன விதிமுறைகள் புதியது என குறிப்பிட்டு உள்ளீர்கள். இதுவரை எத்தனையோ பதிவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கிறார்கள். அவர்கள் பலரும் உங்களுக்கு நண்பர்கள் தான். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வலைச்சர விதிமுறைகள் என்னவென்று?//

    இவைகள் எல்லாம் வலைச்சரத்தின் பழைய விதிமுறைகளாகவே இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, நான் முதன் முதலாக வலைச்சர ஆசிரியராக இப்போது மட்டுமே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதால் இவை எதுவும் என் கவனத்திற்கு யாராலும் ஒருபோதும் கொண்டுவரப்படவில்லை. 08.06.2015 அன்று தாங்கள் அனுப்பிவைத்த மின்னஞ்சல் செய்திகள் மூலம் மட்டுமே, இதில் இவ்வளவு கெடுபிடிகள் உள்ளன என்பதை ஓரளவுக்கு நான் அறிந்துகொண்டேன்.

    //அதே போல வலைச்சரத்தில் அவர்கள் எவ்வாறு எழுதியிருந்தார்கள் எனவும் கேட்டுப் பாருங்கள்?//

    ஏற்கனவே வலைச்சரத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சில பதிவர்கள் (வலைச்சர ஆசிரியர்கள்) ஏற்கனவே அந்த வாரம் முழுவதும் அவர்களின் சொந்த வலைத்தளப் பதிவுகளை சுய அறிமுகமாகக் காட்டியுள்ளார்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அதேபோல வாரம் முழுவதும் ஒரே பதிவரின் பதிவுகளை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள வலைச்சர ஆசிரியர்களும் உள்ளனர். ஒருவேளை அவை விதிமீறல்களாக அப்போது இருந்த வலைச்சர நிர்வாகிகளால் கருதப்படாமல் அனுமதிக்கப்பட்டும் இருக்கலாம். OK .... Past is Past. அதனால் மட்டுமே, அவற்றின் இணைப்புகளை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை.

    >>>>>/////

    ReplyDelete
  34. அவரது மறுமொழி தொடர்ச்சி..

    ////வை.கோபாலகிருஷ்ணன்Wed Jun 10, 12:09:00 PM
    //உங்களுக்கென (அ) இந்த வாரம் முதல் நாங்கள் வலைச்சர விதிமுறைகளை மாற்றி அமைத்தது போல குறிப்பிட்டு வலைச்சர வாசகர்களுக்கு எங்களின் மீதான நம்பிக்கையை சற்று குறைத்தது போல உள்ளது.

    நீங்கள் மூத்த பதிவர், பலமுறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவரிடம் இருந்து இப்படி வலைச்சர விதிமுறைகளை குறை சொல்லி வரிகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. //

    இல்லை. அப்படி ஏதும் நினைத்து நான் குறிப்பிடவே இல்லை. என் தற்போதைய உடல்நிலையை உத்தேசித்து தாங்கள் எவ்வளவோ விட்டுக்கொடுத்துப்போய் இருக்கிறீர்கள் என்பதைத்தான் என்னால் நன்றியுடன் உணரமுடிகிறது. அதற்கு மீண்டும் என் நன்றிகள்.

    தாங்கள் இப்படியெல்லாம், ’வலைச்சர விதிமுறைகளை’ நான் ஏதோ குறை சொன்னதாக எடுத்துக்கொள்வீர்கள் என நானும் எதிர்பார்க்கவில்லை.

    >>>>>///

    ReplyDelete
  35. அவரது மறுமொழி தொடர்ச்சி..

    /////வை.கோபாலகிருஷ்ணன்Wed Jun 10, 12:13:00 PM
    //மேலும் மேற்கண்ட பதிவில் முதல் அறிமுகப் பதிவர் உங்களது வலைச்சர பதிவுகளில் பல முறை வந்துள்ளது. அதுவும் வலைச்சர விதிமுறைக்கு பொருந்தாது. ஏற்கனவே வலைச்சர ஆசிரியர்களாக இருந்த உங்களது நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். //

    நாளை முதல் அந்தக்குறிப்பிட்ட பதிவரின் பெயரும், வலைத்தள முகவரியும், Profile Photo வும் இடம்பெறாமல் வேறு தலைப்பிட்டு கொடுக்க உத்தேசித்துள்ளேன். இதைமட்டும் தயவுசெய்து வலைச்சர நிர்வாகம் ஏற்றுக்கொண்டு உதவிட வேண்டுமாய் அன்புடன் கோரிக்கை வைக்கிறேன். ஏற்கனவே இதுபற்றி குறிப்பாக நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களிடமும் நான் சொல்லியுள்ளேன் என்பதை இங்கு மீண்டும் நினைவூட்டுக்கொள்கிறேன்.

    >>>>>///

    ReplyDelete
  36. அவரது மறுமொழி தொடர்ச்சி..

    /////வை.கோபாலகிருஷ்ணன்Wed Jun 10, 12:15:00 PM
    //*********

    மீண்டும் இங்கே வலைச்சர விதிமுறைகளை பகிர்கிறேன்

    4. முதல் பதிவாக இடும் அறிமுக இடுகையில் தங்கள் சொந்த வலைத்தளம் / வலைப்பதிவுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து கொள்ளலாம். தங்களின் முக்கியமான பழைய இடுகைளுக்கு சுட்டி கொடுத்து குறிப்பும் தரலாம்.

    5. மற்ற பதிவர்களின் இடுகைகளில் படித்ததில் பிடித்த, கவர்ந்த பதிவுகளைப் பற்றி, மற்றவர்களுக்கு பரிந்துரைக்க விரும்பும் பதிவுகளை, பலருக்கும் பயன்படும் பதிவுகளை எல்லாம் அறிமுகம் செய்யலாம்.

    6. புதிதாக பதிவுலகிற்கு வந்துள்ள வலைப்பூக்களை அறிமுகம் செய்து தொகுத்து ஒரிரு இடுகைகள் இடலாம்.

    பெரும்பாலும் குறிப்பிட்ட இடுகையை சுட்டிக்காட்டி அந்த அறிமுகம் அமைவது நல்லது.

    7. துறை வாரியாகவும் மற்றபடி கற்பனைக்கேற்றபடியும் தொகுப்புகளை வழங்கலாம்.

    8. அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு இடுகையும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.

    ********************//

    மிக்க நன்றி. இவை இனி வரப்போகும் வலைச்சர ஆசிரியர்களும் தங்களின் கவனத்தில்கொண்டு செயல்பட மிகவும் உதவியாக இருக்கும்.

    >>>>>////

    ReplyDelete
  37. அவரது மறுமொழி தொடர்ச்சி...

    //// வை.கோபாலகிருஷ்ணன்Wed Jun 10, 12:17:00 PM
    //நீங்கள் வேறு வலைப்பூவில் மாதிரி எழுதி வலைச்சரத்தில் பேஸ்ட் செய்து ஒவ்வொரு பதிவும் வெளியிட்டு வருகிறீர்கள். அப்படியிருக்கையில் இந்தப் பதிவிலும் நீங்கள் நினைத்திருந்தால் உங்களது சுய வலைப்பூ பதிவுகளை தவிர்த்து இருக்கலாம். ஆனால் நாளை என நோட்டீஸ் கொடுத்து உள்ளீர்கள். ஆனாலும் இத்தகைய பதிவுகளை எங்களால் அனுமதிக்க முடியாது.//

    ஆம். நான் எந்த ஒரு வேலை அல்லது பொறுப்பினை ஏற்றுக்கொண்டாலும், முன்கூட்டியே திட்டமிட்டு அவற்றை ஓரிடத்தில் தனியாக அழகாக வடிவமைத்துக்கொண்டுதான், பிறகு அவற்றை வெளியிடுவது வழக்கம்.

    இப்போது அநேகமாக தினமும் பலமணி நேரங்கள் ஆஸ்பத்தரிக்குச் சென்று மருத்துவரைப் பார்த்துவிட்டு வரவேண்டிய சூழல் நாளுக்கு நாள் எனக்கு அதிகரித்துக்கொண்டே இருப்பதால், எனக்கு புதிதாக வலைச்சரத்தில் எழுத, போதிய நேர அவகாசம் இல்லை. அதனால் முன்கூட்டியே திட்டமிட்டு இவற்றை ஓரளவு ’மாதிரிப் பதிவுகளாக’ ஆக்கி, தயார் நிலையில் என்னிடம் வைத்துக்கொண்டு விட்டேன். அதனால் மட்டுமே இன்றைய என் பதிவினில் திடீர் மாற்றங்களை என்னால் உடனடியாகக் கொண்டுவர இயலவில்லை. அதனால் நாளை முதல் செய்வதாகக் கேட்டுக்கொண்டேன். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

    >>>>>////

    ReplyDelete
  38. அவரது மறுமொழி தொடர்ச்சி...

    ///// வை.கோபாலகிருஷ்ணன்Wed Jun 10, 12:20:00 PM
    //எனவே வலைச்சரத்தில் மேலே எங்களது ஓடும் வரிகளின் படி தங்களது சுய அறிமுக பதிவைத் தவிர்த்து மற்ற பதிவுகளில் உங்களது சுய பதிவுகளை (வலைச்சர பொறுப்பாசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றே) நீக்குகிறேன். //

    முதல் நாள் என் சுய அறிமுகப்பதிவினிலேயே இவ்வாறு நான் குறிப்பிட்டுள்ளேன்:

    -=-=-=-=-=-

    நான் என் வலைத்தளத்தினில் எழுதி வெளியிட்டுள்ள சிறுகதைகளும், இதர ஆக்கங்களும் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவைகளாகும். அவற்றில் சிலவற்றை மட்டும் இந்த வலைச்சரத்தில் தினமும் அவ்வப்போது கொஞ்சமாக குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

    பதிவின் நீளம் கருதி என் சுயபுராணங்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு விடைபெறுகிறேன். நாளை முதல் தினமும் மற்ற பிரபல பதிவர்களில் சிலரை மட்டும் அடையாளம் காட்டிட விரும்புகிறேன்.

    -=-=-=-=-=-

    அதில் நான் சொல்லியுள்ளபடியே, தொடர்ந்து அடுத்துவந்த 10 நாட்களுக்கும் என் சுய அறிமுகப்பதிவுகளை அன்றாடம் இறுதியில் காட்டி வந்தேன்.

    இனி அவ்வாறு செய்யாமல் தங்களின் வழிகாட்டுதல்களை ஏற்று, அந்த இடத்தில் வேறு ஒரு புதிய பதிவரை நாளை 11.06.2015 முதல் அடையாளம் காட்டி சிறப்பிக்கலாம் எனவும் இப்போது முடிவெடுத்து விட்டேன்.

    அதனால் இதுவரை நான் வெளியிட்டுள்ள பதிவுகளை (PAST IS PAST) ‘போனது போகட்டும்’ என நினைத்து, அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும் என விட்டுவிடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அவற்றில் எதையாவது தாங்கள் நீக்குவதற்கு பதிலாக என்னையே கூட வலைச்சர ஆசிரியர் பதவியிலிருந்து, உடனடியாக நீக்கிவிட்டாலும் நல்லது. எதையும் நான் மகிழ்ச்சியுடன் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்.

    ஏற்றுக்கொண்டபடி 35 நாட்களும் ஆர்வத்துடன் வலைச்சர ஆசிரியர் பணியினை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதே இன்னமும் எனது விருப்பமாக உள்ளது என்பதையும் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நான் நாளை முதல் என் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்களில் நீடிப்பதா வேண்டாமா என்பதை வலைச்சர நிர்வாகம் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

    கடந்த 10 நாட்களில் வலைச்சரத்திற்கான வாசகர்களின் வரவேற்புகள் அவர்கள் தினமும் அளித்துள்ள கணிசமான தமிழ்மண வாக்குகள் + ஏராளமான பின்னூட்டங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

    வலைச்சரம் தொடர்ந்து பொலிவுடன் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும்.

    என்றும் அன்புடன் VGK/////

    ReplyDelete
  39. நண்பர்களே...
    மேற்கண்ட மறுமொழிகளையும் பாருங்கள்....
    இவரின் இந்தப் பதிவையும் வாசியுங்கள்...
    அதில் ஹெல்மெட் கதையையும் வாசியுங்கள்.

    பிறகு என் மறுமொழிகளையும் வாசியுங்கள்....

    வலைச்சர ஆசிரியராக இருந்த பதிவர்களுக்கு அளித்த விதிமுறையை இவருக்கு அளித்தது தவறா?

    அதன்படி பதிவெழுத சொல்வது எங்களின் கடமை தானே?

    பதிவில் தவறுகள் இருப்பின் திருத்துவது (அறியாத விசயங்களை) என்பது அவருக்கு எங்கள் பக்கமிருந்து அளிக்கும் உதவி தானே?

    வலைச்சரம் இரண்டு மாதம் பதிவர்கள் இல்லாத காரணத்தால் நின்று போனது தன்கள் அனைவரும் அறிந்ததே...
    அதற்கு தானாக முன் வந்து ஆசிரியர் பொறுப்பேற்ற வை.கோ ஐயா எப்படி எழுதினாலும் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?

    வலைச்சரம் ஒன்றும் அவரின் தளம் அல்லவே?

    ஏற்கனவே ஆசிரியராக இருந்த உங்களுக்கு தெரியும் தானே? எப்படி எழுத வேண்டும் என?

    சிலர் விதிமுறைப் படி எழுதாமல் இருந்த சமயம் நானோ சீனா ஐயாவோ பதிவை சரி செய்யுமாறு மின்னஞ்சலிலோ அல்லது அலைபேசி வாயிலாக அறிவித்து இருப்போமே? உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

    வலைச்சரம் மீண்டும் தொடர வேண்டும் என ஆவல் தெரிவித்த அனைவருமே விரும்புவது, வலைச்சரத்திற்கென உள்ள பதிவுகள் பகிரும் முறைக்காகவும், புதிய பதிவர்களை அடையாளம் காணவும், சிறந்த பதிவுகளை அடையாளம் காணவும் தானே?

    அவ்வாறு எழுதச் சொல்லியது உங்களுக்காகத் தானே என்பதை அறிவீர்களா?

    புதியதாய் பொறுப்பேற்க வருபவர்கள் இவரது வலைச்சர பதிவை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டால் அது தவறான முன் மாதிரியாக இருக்குமே என நாங்கள் எச்சரிக்கை செய்தது வலைச்சர வாசகர்களான உங்களுக்காகத் தானே?

    வலைச்சரம் மறுபடியும் மலர வேண்டும் ஆவல் கொண்ட நீங்கள் யாரேனும் எங்களுக்காக ஒரு வரி கூட எழுதவில்லையே? ஏன் நண்பர்களே?

    இந்தப் பதிவில் தமிழ் இளங்கோ ஐயா அவர்களும், GM. பாலசுப்பிரமணியம் ஐயா மட்டுமே வை.கோ அவர்களின் வலைச்சர பதிவுகள் தவறான முறையில் எழுதப் பட்டது என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். உங்களுக்காவது தவறு என தெரிந்ததே... மிக்க நன்றி...

    ReplyDelete
  40. 'விதிமுறைகள்’ என்ற சொல்லை யார் மூலம் எப்போது நான் கேட்டாலுமே, உடனே எனக்கு பலத்த சிரிப்பு மட்டுமே வருவது உண்டு.

    அரசாங்கமோ, நீதிமன்றங்களோ, காவல்துறையோ கொண்டுவரும் ஒருசில கடுமையான விதிமுறைகள்கூட, சமயத்திற்குத் தகுந்தாற்போல, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல, ஆளுக்குத் தகுந்தாற்போல, காலத்திற்கு ஏற்றார்போல அவர்களாலேயே அவ்வப்போது, அவற்றை மாற்றிக்கொள்வதோ அல்லது தளர்த்திக்கொள்வதோ நாம் நடைமுறையில் மிகவும் நன்றாகவே அறிந்ததுதான்.

    பொதுவாக ’விதிமீறல்’ என்பதே அந்த விதிமீறலால் வேறு யாருக்கும் எந்த விதத்திலாவது பாதிப்புகள் இருந்தால் மட்டுமே, அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.////

    ஆமா... இவருக்காக எங்களின் எல்லா விதிமுறையையும் தளர்த்த வேண்டுமா?

    அப்புறம் எதுக்கு பதிவர்களை பொறுப்பேற்க சொல்லி சரம் தொடுக்க வேண்டும்?

    ஓப்பனாக வலைச்சரத்தை மாற்றி யாரும் எப்படி வேண்டுமானாலும் பதிவுகளை எழுதிக் கொள்ளுங்கள் என சொல்லிவிடலாம் போல... அப்படி சொன்னால் கோபு தளம் வலைச்சரத்தில் இயங்கும்.. நீங்களும் கோபு தளம் வராமல் அங்கேயே வரலாம்...

    ReplyDelete
  41. Replies
    1. Chitra June 15, 2015 at 5:47 AM

      WELCOME !

      //Nice. Congratulations!//

      :) Thank you Chitra :)

      Delete
  42. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்’ என்ற விதிமுறையையே நாம் எடுத்துக்கொள்ளலாம்.

    நம் தமிழ்நாட்டில், அன்று ஒருநாள் இது கட்டாயப்படுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் இது கட்டாயப்படுத்தப்பட்டது. இன்று அதாவது இப்போது நடக்கும் இந்த ஜூன் மாதம் இதை அணிய வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை என்று உள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் அணிய வேண்டிய கட்டாயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் என்றாவது ஒருநாள் அது கண்டுகொள்ளப்படாமல், விட்டாலும் விடப்படலாம். எதுவுமே எப்போதுமே நாம் உறுதியாகச் சொல்வதற்கு இல்லை.

    இந்த ஒரு சின்ன, ஆனால் அதே சமயம் விபத்து நேர்ந்தால், நம் தலைக்கும் உயிருக்குமே பாதுகாப்பு அளிக்கக்கூடிய மிகப்பெரிய, விதிமுறையையேகூட எவ்வளவு தடவை தளர்த்திக்கொண்டுள்ளார்கள்? எவ்வளவு தடவை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்? என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே. ////

    நான் எப்போதும் ஹெல்மெட் அணியும் பழக்கம் உள்ளவன். என்னை நேரில் கண்ட பதிவர்களுக்கு தெரியும். எனக்கு எனது குடும்பம் முக்கியம்... நான் என்றாவது ஹெல்மெட் எடுத்துச் செல்ல மறந்து விட்டாலும், வீட்டில் உள்ளவர்கள் நியாபகப்படுத்தி எடுத்து தருவார்கள். அது தான் குடும்பத்தில் அனைவரின் நலன், பாதுகாப்பு பேணல் என்பது...

    அதே போல வலைச்சர குடும்பம் முக்கியம். அதற்காக விதிமுறையை நாங்கள் கண்டு கொள்ளக் கூடாதா?

    கோர்ட்டில் வழக்கில் வாதாடுவதற்கு இரு தரப்பினரும் தத்தம் நியாயத்திற்கு பல உதாரணங்கள் எடுத்து முன் வைப்பார்கள். அநியாயம் வெற்றி பெற்றாலும் அவ்வழக்கை உற்று நோக்கும் நடுநிலை தரப்பினருக்கு தெரியும் எது நிஜம் என்று. என்ன ஒன்று, அவர்களால் வாதிட முடியாது.

    நம்மூரிலும், வெளிநாட்டிலும் ஹெல்மெட் விதிமுறை இருந்தாலும் அவற்றை விதி மீறுவது என்பது நம்மூர் ஆட்களுக்கு கை வந்த கலை தானே?

    ReplyDelete
  43. அதனால் மட்டுமே நான் அதனை எடுத்துச் செய்ய முன்வந்தேன். ஏதோ என்னால் முடிந்தவரை, எனக்குத் தெரிந்தவரை செயல்பட்டேன். வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்துவிட்டேன். அது நல்லபடியாக, நடுவில் நிற்காமல் Break Down ஆகாமல் தொடர்ந்து ஓடினால் எனக்கும் அதில் மிகுந்த மகிழ்ச்சி மட்டுமே.////

    ஹா... ஹா..... உங்களுக்கு முன்னமே என்னில் உணர்வது வலைப்பூ பதிவர் காயத்ரி தேவி அவர்கள் வலைச்சரம் தொடுக்கவும், மறுமலர்ச்சிக்காகவும் முன் வந்தார். ஆனால் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் தான் ஆசிரியர் பொறுப்பேற்ற காரணத்தால் நான் மீண்டும் அவரை பொறுப்பில் அமர்த்த மறுத்து விட்டேன். அது பற்றி சொல்ல வேண்டிய சூழ்நிலையை இங்கே நீங்கள் வைத்துள்ளீர்கள். அவர் மட்டுமல்ல, ஸ்கூல்பையன் அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்தது எப்போது தெரியுமா? ஏப்ரல் மாதத்தில். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் அவருக்கு வந்த திடீர் பணிச்சுமை காரணமாக அவரால் அப்போது தொடர இயலவில்லை என்பதையும் இங்கே முன் வைக்கிறேன். சமீப காலத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த பலரும் திரும்ப ஆசிரியர் பொறுப்பேற்க ஆர்வம் தெரிவித்தார்கள். நாங்கள் தான் மீண்டும் மீண்டும் அவர்கள் பொறுப்பேற்பதை விரும்பவில்லை. எங்களால் முடிந்த அளவுக்கு எண்களின் முன்னோர் அளித்த விதிமுறையையும், வலைச்சர சாராம்சத்தையும் கட்டிக் காப்பதே எங்கள் பணி....

    ReplyDelete
  44. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    சார் நாங்களும் சென்ற வருடம், நண்பர் தமிழ்வாசி அவர்களின் அழைப்பின் பேரிலும் சீனா ஐயா அவர்களின் அழைப்பினாலும், ஒரு இக்கட்டானச் சூழலில் பொறுப்பேற்றோம். அப்போதும் இதே விதிமுறைககள்தான். அப்போது கீதா பிரயாணத்தில்...துளசி பாலக்காட்டில் அவருக்கு கணினி வசதி இல்லாததால் எங்களுக்கும் லிங்க் கொடுப்பது அவ்வளவாகச்க் தெரியவில்லை. அந்தப் பணியின் மூலம் அதையும் கற்றுக் கொண்டு இப்போது அதைச் செய்து வருகின்றோம் எங்கள் தளத்தில்.
    தங்களின் பதிவுகளை வலைச்சரத்தில் பார்த்த போது வலைச்சரம் மாறியுள்ளதே என்று தோன்றியது. எங்களுக்கும் வேலைப்பளு அதிகமாகிவிட்டது.

    இதுவும் கடந்து போகும்...சார்....

    தங்களின் பதிவுகளைத் தொடர்கின்றோம் ..

    மிக்க நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. @Thulasidharan V Thillaiakathu

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பலவித அனுபவக்கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      எனக்கு இன்னும் கணினி அறிவு முழுமையாக ஏற்படவில்லை. பிறர் சொல்வதை, அவர்கள் கொடுக்கும் லிங்குகளைப்பார்த்து, படித்து, அப்படியே டக்குன்னு புரிந்துகொள்ளும் சக்தியும் என்னிடம் அதிகம் இல்லை.

      நாம் தனியே அமர்ந்து ஏதாவது செய்யப்போய் அது வேறு ஏதாவது ஆகி சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயமும் எனக்கு அதிகம் உண்டு.

      இது எனக்கு முதல் அனுபவமாகி விட்டது. இனிமேல் தான் யாரிடமாவது அவர்களையும் அருகே அமரச்சொல்லி, கணினியில் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப் பொறுமையும், நேர அவகாசமும் உள்ளவர்கள் கிடைப்பதும் அரிதே.

      முக்கியமாக HTML Link ஐ URL ஆக ஒரே வரியில், வார்த்தையில் கொண்டுவருவது எப்படி என்று எனக்கு இன்னும் தெரியாது. வீடியோக்களை பதிவுகளில் எப்படி இணைப்பது என்பதும் தெரியாது.

      ஆரம்பத்தில் 2011 ஜனவரி முதல் ஜூன் வரை நான் வெளியிட்ட பதிவுகள் எதிலும் படங்களே ஏதும் இருக்காது. ஏனெனில் எனக்கு அதை எப்படி இணைக்க வேண்டும் என்றே தெரியாமல் இருந்தது. அதன்பிறகு 2011 ஜூலை மாதம் தான் அதை ஒருவரிடம் கற்றுக்கொண்டேன். OK Sir. பார்ப்போம்.

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  45. வணக்கம் ஐயா.
    திட்டமிட்டு தொகுத்து வைத்து பகிரும் உங்கள் பணியைப் பாராட்டும் அதே நேரத்தில் உங்கள் கருத்தோடு மாறுபடவும் செய்கிறேன் ஐயா. நானும் மூன்று முறை வலைச்சர ஆசிரியராக இருந்திருக்கிறேன். இதே விதிமுறைகள் சொல்லப்பட்டு அதைப் பின்பற்றியும் எழுதியிருக்கிறேன். நாம் தெரியாமல் மாற்றி எழுதி அதை நிர்வாகத்தினர் சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்வதே சரி என்பது என் கருத்து. ஒவ்வொருவரும் தங்கள் சுதந்திரத்திற்கு எழுத நினைத்தால் வலைச்சரம் சரமாக இருக்காது. விதி மீறல் எங்கும் இருக்கிறது, இங்கு இருந்தால் என்ன என்று மூத்தவர் நீங்கள் சொன்னால் எப்படி ஐயா?
    உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 15, 2015 at 8:43 AM

      //வணக்கம் ஐயா.//

      வாங்கோ, வணக்கம்.

      //திட்டமிட்டு தொகுத்து வைத்து பகிரும் உங்கள் பணியைப் பாராட்டும் அதே நேரத்தில் உங்கள் கருத்தோடு மாறுபடவும் செய்கிறேன் ஐயா.//

      அதனால் பரவாயில்லை. அதை நான் மனதார வரவேற்கிறேன், மேடம்.

      //நானும் மூன்று முறை வலைச்சர ஆசிரியராக இருந்திருக்கிறேன்.//

      சந்தோஷம். பாராட்டுகள். வாழ்த்துகள்.

      //இதே விதிமுறைகள் சொல்லப்பட்டு அதைப் பின்பற்றியும் எழுதியிருக்கிறேன். நாம் தெரியாமல் மாற்றி எழுதி அதை நிர்வாகத்தினர் சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்வதே சரி என்பது என் கருத்து.//

      நான் முதல் முதலாக இப்போதுதான் வலைச்சர ஆசிரியர் ஆகியுள்ளேன். நம்பினால் நம்புங்கள் ..... இதில் உள்ள விதிமுறைகள் விஷயம் எனக்கு உண்மையிலேயே முன்கூட்டியே தெரியாது. அவர்களும் எனக்கு முன்கூட்டியே அனுப்ப மறந்துவிட்டார்கள் என்பதே உண்மை. பிறகு 08.06.2015 அன்று மின்னஞ்சல் மூலம், குறிப்பிட்ட என் ஒருசில விதிமீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டு என் கவனத்திற்கு முதன்முதலாக கொண்டுவரப்பட்டது.

      தற்போது எனக்குள்ள உடல்நிலை பாதிப்புகளால், என்னால் ஏற்கனவே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட சுமார் 200 வரிசை நம்பர்களும் கொடுக்கப்பட்ட பட்டியலை திடீரென மாற்ற இயலாத காரணத்தால், அவற்றை மாற்றிக்கொள்ள நான் ஓரிரு நாட்கள் மட்டும் அவகாசம் கேட்டிருந்தேன்.

      அதற்கும் ஒத்துக்கொள்ள மறுத்ததுடன், நான் 10.06.2015 வரை வெளியிட்டிருந்த பதிவுகளில் சிலவற்றை (அதாவது என் அன்றாட சுய அறிமுகப்பதிவுகளை மட்டும்) அவர்களின் விதிமுறைப்படி நீக்கி விட்டார்கள்.

      இதனால் ஒவ்வொரு பதிவிலும் (2nd to 10th June) நான் ஏற்கனவே கொடுத்திருந்த SERIAL NUMBER CONTINUATION ஏதும் இல்லாமல் அவை ஆக்கப்பட்டுவிட்டன. அவைகள் நீக்கப்பட்ட அன்றே அதாவது 10ம் தேதியே நான் விலகிவிடத் தயாராகத்தான் இருந்தேன். பிறகு என்னை 13.06.2015 வரை மட்டும் தொடருமாறு ஒரு அன்புக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதனால் நானும் அதனை ஏற்றுக்கொண்டு, 13.06.2015 வரை தொடர்ந்து விட்டு, அன்றுடன் வலைச்சர ஆசிரியர் பதவியிலிருந்து விடை பெற்றுக்கொண்டேன்.

      11.06.2015 முதல் 13.06.2015 வரைகூட அவர்களின் வழிகாட்டுதல்களின்படி என் அன்றாட சுய அறிமுகப்பதிவுகள் ஏதும் இல்லாமல்தான் பதிவுகள் வெளியிட்டுள்ளேன். இவ்வாறு இதில் நடந்ததையெல்லாம் நான் மிகத்தெளிவாகவும் உண்மையாகவும் தங்களிடம் இங்கு சொல்லியிருக்கிறேன்.

      //ஒவ்வொருவரும் தங்கள் சுதந்திரத்திற்கு எழுத நினைத்தால் வலைச்சரம் சரமாக இருக்காது. விதி மீறல் எங்கும் இருக்கிறது, இங்கு இருந்தால் என்ன என்று மூத்தவர் நீங்கள் சொன்னால் எப்படி ஐயா?//

      தங்களின் தங்கமான கருத்துக்களை நான் அப்படியே மதித்து இப்போது ஏற்றுக்கொள்கிறேன். திடீரென்று சற்றும் எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்டதொரு நிகழ்வால் வந்த குழப்பத்தில் நானே ஒருவேளை தவறாக ஏதும் சொல்லியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளவும்.

      தங்கள் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      //உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்.//

      ஆகட்டும் மேடம். தங்களின் இந்த அக்கறைக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் VGK

      Delete
    2. நடந்ததை அறிந்து என் கருத்தைச் சொன்னேன், அவ்வளவே ஐயா. குழப்பங்கள் தீர்ந்தால் மகிழ்ச்சி தான். தவறு, மன்னிப்பு என்று எதற்கு ஐயா? என் கருத்து உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

      Delete
    3. தேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 16, 2015 at 1:12 AM

      வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்வளிக்கிறது.

      //நடந்ததை அறிந்து என் கருத்தைச் சொன்னேன், அவ்வளவே ஐயா. குழப்பங்கள் தீர்ந்தால் மகிழ்ச்சி தான்.//

      எனக்கும் அதுபோலவே மகிழ்ச்சிதான்.

      //தவறு, மன்னிப்பு என்று எதற்கு ஐயா?//

      ஏதோ ஒரு வேகத்திலோ, அவசரத்திலோ, ஆத்திரத்திலோ, குழப்பத்திலோ நாம் நம்மை அறியாமலேயே, தவறுகள் செய்துவிடவும் வாய்ப்புகள் அமைந்து விடுவது உண்டு. அவ்வாறு ஒருவேளை என் பக்கத்தில் தவறுகள் நேர்ந்து இருப்பின், அதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்வது ஒன்றே மகத்தான செயல் என நான் எப்போதும் நினைப்பவன்.

      //என் கருத்து உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.//

      இல்லை. இல்லவே இல்லை.

      சற்றும் என்னைப் புண் படுத்தவே இல்லை. என்னை மேலும் பண்படுத்தியே உள்ளன. அதற்காக மீண்டும் என் நன்றிகள். - vgk

      Delete

  46. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கட்கும் திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்கட்கும் ஒரு வேண்டுகோள். நடந்ததை மறப்போம். இனி இது பற்றி விவாதித்து வீணே மேலும் மனக் கசப்பு அடையவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி June 15, 2015 at 10:51 AM

      வாங்கோ, வணக்கம்.

      //திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கட்கும் திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்கட்கும் ஒரு வேண்டுகோள். நடந்ததை மறப்போம். இனி இது பற்றி விவாதித்து வீணே மேலும் மனக் கசப்பு அடையவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.//

      மிக்க நன்றி, சார். எனக்கும் நம் இனிய நண்பர் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் கிடையவே கிடையாது. நான் யாரிடமும் விரோதம் வைத்துக்கொள்பவனும் கிடையாது. நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் நண்பர்கள் மட்டுமே.

      நான் ஒருவேளை அவரிடத்தில் இருந்தால்கூட அவர் செய்வது போலவேதான் என்னாலும் செய்திருக்க முடியும்.

      அதனால் அவர் ’வலைச்சரம்’ என்ற ஒரு உயரிய இயக்கத்தின் நிர்வாகக் குழுவின் சார்பினில், அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப, இயங்க வேண்டியிருப்பதால் அவரை நான் தவறாகவே இன்னும் இப்போதும் நினைக்கவே இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      தங்களின் அன்பு வருகைக்கும் அழகான நல்லதொரு கருத்தினைச் சொல்லியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      நன்றியுடன் VGK

      Delete
  47. என்ன சொல்வது ஏதேதோ நிகழ்ந்துவிட்டிருக்கிறது.
    எனினும் சோர்வடையாமல் தாங்கள் தொகுத்த அறிமுகப்பதிவர்களை தங்கள் வலையில் தொடர்வது குறித்தும் மகிழ்வே தொடருங்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. @சசி கலா

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  48. பிறவேலைகளை முடிக்கவேண்டிய அவசியத்தில் இருந்ததால் சில நாட்களாக வலைப்பக்கம் வரவே முடியவில்லை. இப்போது இந்த பதிவும் பின்னூட்டமும் பார்த்துதான் விஷயங்கள் புரிகின்றன. வலைச்சரம் விதிக்கு தங்கள் பதிவுகள் பொருந்தாத நிலையில் அவற்றை தங்கள் வலையிலேயே வெளியிடுவதென்ற முடிவுக்கு வந்தது மிகவும் மகிழ்வளிக்கிறது. இவ்வளவு உழைப்பும் வீணாகாமல் உரியவரைப் போய்ச் சேர்வதால் அவர்களுக்கும் நல்ல உற்சாகமும் தூண்டுதலும் தருவதாக இருக்கும். இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். பதிவுகளை ஒவ்வொன்றாக சென்று பார்க்கிறேன். தங்களுடைய மனந்தளராத முயற்சிக்குப் பாராட்டுகள் கோபு சார்.

    ReplyDelete
    Replies
    1. @கீத மஞ்சரி

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான பல கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  49. முனைவர் பழனி.கந்தசாமி அவர்களது “வலைச்சரம் பற்றிய ஒரு கண்டனம்” http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_20.html என்ற பதிவினில் நான் எழுதிய கருத்துரை இது.


    /// இந்த பதிவைப் பார்த்த பிறகுதான் ஒரு மிகப் பெரிய விவாதமே அய்யா திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களது வலைத்தளத்தில் நடைபெற்று இருப்பதைப் பார்த்தேன். திரு V.G.K அவர்கள் ஆர்வமாக வலைச்சரம் ஆசிரியர் பணி செய்ய தானாகவே முன்வந்தார். வலைச்சரத்தில் உள்ள சில விதிமுறைகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்றதும் விலகிவிட்டார்.

    ஆனால் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எங்கே வலைச்சரத்தை மற்றவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கத்தில், வலைச்சர நிர்வாகிகளில் ஒருவர் என்ற முறையில் நிறையவே எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பல பின்னூட்டங்களை திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எழுதி இருக்க வேண்டியதில்லை.

    நினைவுக்கு வந்த ஒரு காட்சி திருவிளையாடல் படத்தில் (தருமி நகைச்சுவை) பாண்டியன் அரசவையில் புலவர் நக்கீரனும் இறையனாரும் சூடாக விவாதம் செய்யும் போது , மன்னன் செண்பகப் பாண்டியன் சொல்வதாக ஒரு வசனம்

    ”புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்கு சர்ச்சை தேவைதான். அது சண்டையாக மாறிவிடக் கூடாது.”

    எது எப்படி இருந்த போதிலும் , இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே..
    த.ம. 4 ///

    ReplyDelete
    Replies
    1. @தி.தமிழ் இளங்கோ

      தங்களின் வருகைக்கும் புதியதொரு தகவலுக்கும் நன்றி.

      //இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே.. //

      OK Sir. Thanks for your kind advise. Accepted. - vgk

      Delete
  50. அன்பின் ஐயா !
    எது எவ்வாறு இருப்பினும் நீங்கள் இன்று எடுத்துக்கொண்ட முடிவினைக் கண்டு நானும் மகிழ்ச்சியடைந்தேன் வாழ்த்துக்கள் !தங்கு தடையின்றி எண்ணம்போல் அறிமுக திருநாட்கள் தொடரட்டும் இனிக்கும் மாங்கோ ஜூஷ்போல் இணைக்கும் பதிவுகள் மனத்தில் உறையட்டும் .மென்மேலும் என் இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கே உரித்தாகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. அம்பாளடியாள் June 15, 2015 at 11:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      அன்பின் ஐயா ! எது எவ்வாறு இருப்பினும் நீங்கள் இன்று எடுத்துக்கொண்ட முடிவினைக் கண்டு நானும் மகிழ்ச்சியடைந்தேன் வாழ்த்துக்கள் ! தங்கு தடையின்றி எண்ணம்போல் அறிமுக திருநாட்கள் தொடரட்டும். இனிக்கும் மாங்கோ ஜூஷ்போல் இணைக்கும் பதிவுகள் மனத்தில் உறையட்டும். மென்மேலும் என் இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கே உரித்தாகட்டும் .//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகள் + கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். நாளை 16.06.2015 மட்டும் முடிந்தால் என் வலைப்பக்கம் வாங்கோ. நிச்சயமாக ஸ்பெஷல் மாங்கோ ஜூஸ் தங்களுக்குக் கிடைக்கும்.

      அன்புடன் VGK

      Delete
  51. வணக்கம், நான் எப்படியோ படிக்காமல் விடுபட்டுபோய்விட்டது, இப்படிதானா?
    தாங்கள் 35 நாட்களுக்கும் தொகுத்துள்ளது மகிழ்ச்சி,
    தொடருங்கள், தொடர்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  52. @mageswari balachandran

    :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

    ReplyDelete
  53. அதனால் ‘விதிமுறைகள்’ என்ற பெயரைச்சொல்லி, அனைவரும் விரும்பி வரவேற்கும், ஒரு நற்செயலைத் தடுக்க நினைப்பதெல்லாம் .... எங்கும் எதிலும் ‘சும்மா’ ஒரு நொண்டிச் சாக்கு மட்டுமே என்று நினைக்கத்தோன்றுகிறது !
    உண்மை. உண்மை. முற்றிலும் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றிகள்.

      Delete
  54. மாலதி June 18, 2015 at 2:07 PM
    ஐயா விற்கு பணிவான வணக்கங்கள் உங்களின் தளத்தில் என்னை பதிவு செய்து இருந்தீர்கள் .உலா பூர்வ பாராட்டுகளும் நன்றியும்.

    { மேற்படி பின்னூட்டம் 18ம் திருநாள் பதிவினில் இடம் பெற்றுள்ளது. http://gopu1949.blogspot.in/2015/06/18.html }

    ReplyDelete
  55. எத்தனை அறிமுகங்கள்..!
    அத்தனைக்கும் வாழ்த்துகள்...!!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:05 PM

      //எத்தனை அறிமுகங்கள்..!
      அத்தனைக்கும் வாழ்த்துகள்...!!//

      வாங்கோ மேடம். வணக்கம்.

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)

      Delete