என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 29 டிசம்பர், 2015

நேயர் கடிதம் - திரு. ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்


  

 



காரஞ்சன் (சேஷ்)
திரு. E.S. சேஷாத்ரி அவர்களின்
நேயர் கடிதம் 





முதற்கண் பின்னூட்டமிடும் போட்டியை அறிவித்து, பங்கேற்க வாய்ப்பளித்த, வள்ளல் திரு. வைகோ சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

நான் முதன் முதலில் 2011ல் தீபத்திருநாள் வாழ்த்துக் கவிதையை பதிவிட்டபோது, என் வலைப்பக்கத்தில் வந்து வாழ்த்தியவர் திரு. வைகோ அவர்கள்! அன்று முதல் தொடர்ந்து, என் படைப்புகளை வாசித்து கருத்துரையைப் பகிர்ந்து செல்வார்!

அவருடைய வலைப்பக்கத்திற்கு நான் சென்ற போது வாசித்த  “சாதாரணமானவன்தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.” என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன!

அவர் தன்னுடைய படைப்புகளில் எப்போதும் ஒரு தனி முத்திரை பதித்து வருபவர் என்பதில் ஐயமில்லை! தொடர்பதிவுகளில் அவரின் சிறுவயது அனுபவங்கள், பள்ளி நாட்கள், அவரின் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை எல்லாம் மிக அழகாகப் பதிவு செய்திருப்பார்!

ஆன்மிகப் பதிவுகளை அவர் தொகுத்தளித்த விதம் என்னை மலைக்க வைத்தது! அயராத உழைப்பும், பன்முகத் திறமையையும் நான் பார்த்து வியந்த தருணங்கள் பல உண்டு!

இவரின் சிறுகதைகளில் ஏதோ ஒர்  ஈர்ப்பு இருப்பதை சிறுகதைப் போட்டியில் பங்கேற்றபோது நான்  உணர்ந்தேன். அன்றாட வாழ்வில் நாம் அனைவருமே சந்திக்கும் சில நிகழ்வுகள் கூட இவர் கைவண்ணத்தில், எண்ணத்தில் கதையாக மலர்ந்ததைக் கண்டு வியக்கிறேன்! எளிய நடையும், தெள்ளிய ஓட்டமும், அருமையான கதைக்கருவும் அனைவரையும் கவர்ந்திழுத்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை! உண்மையில் இவர் சாதிக்கப் பிறந்தவர்தான் ! இவரது சாதனைகள் மென்மேலும் பெருகி, இன்னும் இவர் புகழின் சிகரம் தொட ஆவல்!

என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு படைப்பும் அதை படிப்பவருக்குள், அதனூடே தானும் பயணிப்பது போன்ற உணர்வை அளித்து, மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதை அவர் படைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம்! 

நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்திருக்கிறது! கதைகள் வாயிலாக நகைச்சுவையை நேர்த்தியுடன் வெளிப்படுத்துவது மிகவும் சிரமமான செயல். முதலில் அந்தக் காட்சியை  நம் மனக்கண்முன் நிறுத்தி நம்மை உணரவைத்து, மகிழ்விக்க வேண்டும். அதில் திரு வைகோ சார் அவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதில் ஐயமில்லை.

சிறுகதை விமர்சனப் போட்டி  அறிவிக்கப்பட்டவுடன் இவரது சிறுகதைகளை விமர்சிக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா? என ஒரு தயக்கமும், ஐயமும் என்னுள் ஏற்பட்டது. நான் அவருடைய இரசிகனாகவே அவரது படைப்புகளை அணுகி, என் மனதில்  ஏற்பட்ட தாக்கங்களை, கிளர்ந்தெழுந்த உணர்வுகளை  விமர்சனம் என எழுதி அனுப்பினேன்! 

பெரும்பாலான கதைகளுக்கு என் விமர்சனமும் ஏதோ ஒரு பரிசுக்குத் தெரிவானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! சில கதைகளுக்கு பங்கு பெற்ற அனைவருக்குமே போனஸ் பரிசுகள் வழங்கியது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. என்பெயரிலும் ஒரு விருதை அறிவித்தது எனக்கு மேலும் மகிழ்வூட்டியது!

பரிசுபெற்றவர் குறித்த விவரங்களை அறிவித்து, பரிசுத் தொகையினையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்த பாங்கு போற்றுதற்குரியது!.

நன்றி மறவாத பண்பு!

தன் படைப்புகளைப் பாராட்டியும், விமர்சித்தும் வந்த பின்னூட்டங்களுக்கு மிகவும் விரிவாக பதிலளித்து, நன்றி கூறும் பாங்கு போற்றிப் பின்பற்றுதற்குரியது! 

பின்னூட்டமிட்டவர்களைப் பற்றிய விவரங்களைத் தனிப்பதிவுகளாக வெளியிட்டு (அழகிய படங்களுடன் அதிலும் அந்தக் கிளி ஆஹா! அசத்திவிட்டீர்கள்!) அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினீர்கள் என்பதில் ஐயமில்லை!

பின்னூட்டமிடும்போது தவறி ஏற்பட்ட எழுத்துப் பிழைகளைக்கூட நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டுவதில் வல்லவர்! ஒருமுறை சிரித்து மகிழ்ந்தோம் என எழுதுவதற்குப் பதிலாக “ இரித்து மகிழ்ந்தோம்!” என தட்டச்சு செய்து விட்டேன்! அதற்கு அவர் அனைவரும் சிரித்து மகிழ்ந்தபோது நீங்கள் மட்டும் இரித்து மகிழ்ந்ததை எண்ணி நாங்கள் சிரித்து மகிழ்ந்தோம் எனக் குறிப்பிட்டு என்னைச் சிரிக்க வைத்துவிட்டார்!

மற்றொரு பதிவில் அருமையான கதை என்பதற்குப் பதில் “கருமையான கதை!” என தட்டச்சு செய்து விட்டேன்! உடனே அவர் “என் பெயரில் கிருஷ்ணன் இருப்பதால் அது கருமையான கதையாகி விட்டதோ” எனக் கேள்வி எழுப்பி என்னைத் திணறடித்து விட்டார்!

எந்த ஒரு பதிவுக்கும் அவர் விவரங்களைச் சேகரித்து, தொகுத்து, மிக எளிமையாக அழகிய படங்களுடன் (உதாரணத்திற்கு “கலக்குங்கோ!” என்று ஊக்கமளித்து ஒரு குட்டி யானைப் படமிட்டிருப்பார் பாருங்கள்!) நம் அனைவரையும் கவர்ந்திழுத்து விடுகிறார் திரு வைகோ சார்!



பயணக் கட்டுரைகள், அந்தந்த இடத்திற்கு நாமும் அவருடன் பயணிப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி காட்சிகளை நம் கண்முன் நிறுத்திவிடுகின்றன! அதற்காக அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்!

'அள்ளிக்கொடுத்து வாழ்பவன் உள்ளம் ஆனந்தப் பூந்தோப்பு!' 
'என்றும் நல்லவர் வாழ்வில் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு!' 

எனும் கவிஞரின் வரிகள் இவருக்குக் கச்சிதமாய்ப் பொருந்துகின்றன!

சிறந்த படைப்பாளியாகவும், கருணை உள்ளம் கொண்டவராகவும், அனைவரையும் பாராட்டி ஊக்கமளித்து உயர்விக்கும் எண்ணம் கொண்டவராகவும் திகழும் இவரிடமிருந்து எளியேனாகிய சிறியேன் நானும் பரிசுகளைப் பெற்றது என் பாக்கியமே!

இதுவரை இவர் அறிவித்த போட்டிகளில் பங்கேற்று பரிசுபெற்ற அனைவருக்கும் இத்தருணத்தில் நான் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இறையருளால் அவர் இன்னும் பல்லாண்டு எல்லா வளங்களுடன் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்! நன்றி!

என்றும் அன்புடன்,

 


சேஷாத்ரி.






அன்பு நண்பர் திரு. சேஷாத்ரி அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் தங்கள் மனம் திறந்து எழுதி அனுப்பியுள்ள இந்த நேயர் கடிதம் எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அதற்கு தங்களுக்கு என் முதற்கண் நன்றிகள்.

சென்ற 2014ம் ஆண்டு, தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு என் வலைத்தளத்தினில் நடைபெற்ற சிறுகதை விமர்சனப்போட்டிகள் பலவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் தாங்கள் கலந்துகொண்டு, தங்கள் பாணியில், தனித்திறமையுடன், மிகச்சிறப்பாக விமர்சனங்கள் எழுதி, தங்களின் தரமான எழுத்துக்களால் போட்டியின் நடுவர் அவர்களைக் கவர்ந்து, பல்வேறு பரிசுகளும் விருதுகளும் வாங்கிக்குவித்திருந்தீர்கள். போட்டி எண்கள்: VGK-25 முதல் VGK-40 வரை தொடர்ச்சியாக 16 முறைகள் ஏதோவொரு பரிசுக்குத் தங்கள் விமர்சனங்கள் தேர்வாகி சரித்திர சாதனை படைத்திருந்தன. 

இவ்வாறான பல திறமைகள் வாய்ந்த தங்களுக்கு இந்த 100% பின்னூட்டமிடும் புதிய போட்டியில் வெற்றி கிட்டியுள்ளதில் எனக்கு ஆச்சர்யம் ஏதும் இல்லைதான்.  இருப்பினும் மிகக்குறுகிய காலத்தில் பின்னூட்டமிட்டு முழுவதும் முடித்து, வெற்றி பெற்றுள்ள சாதனையாளர்களாகிய கடைசி நால்வரில் தங்களின் பின்னூட்டங்கள் தனிச்சிறப்பாக அமைந்து என் மனதை மகிழ்வித்துள்ளன. 

அதுவும் குறிப்பாக கீழ்க்கண்ட என் பதிவுகளை நன்கு திறனாய்வு செய்து, மனதில் வாங்கிக்கொண்டு, மிகச்சுருக்கமாகவும், அதே நேரம் மிகச் சுவையாகவும் தாங்கள் அளித்துள்ள பின்னூட்டங்கள் என்னை மிகவும் மனம் மகிழச்செய்துள்ளன. 

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Seshadri e.s. has left a new comment on your post "VGK 05 ] காதலாவதுகத்திரிக்காயாவது !": 
கண்ணில் படுபவைகள் கதைகளாக உருவெடுக்கின்றன. வாழ்வில் பார்வையில் காணும் மாந்தர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், கதை வடிவம் பெறுகின்றன. இந்தச் சம்பவ வெளிப்பாடுகள் மாந்தர்க்கு வழிகாட்டிகளாகின்றன. வைப்பதில் கோவானவர் பாலனம் செய்வதில் கண்ணபெருமானுக்குச் சளைத்தவர் அல்ல என்பது அவரின் ஒவ்வொரு கதையிலும் தெளிவாகின்றது. கொடுப்பதெல்லாம் முத்துக்களே! சொத்தைகள் ஏதுமில்லை! கதைக்கும்திறன் தந்த இறைவனுக்கு நன்றி! நீங்கள் சமைப்பதும் அருமை! பரிமாறுவதும் சுவைஞர்களுக்கு மகிழ்வளிப்பது. அறுசுவை உண்டி தோற்கும், ஒண்பான்சுவை படைப்புகள் தொடர்க! சுவைஞர்கள் மிகுக! விசிறிகள் உங்களுக்குக் குளிர் தென்றலாக அமைக! இந்தக் கதைப்பூ மணக்கிறது! தேன் பிலிற்றுகின்றது! வாடாததாக நீடுகின்றது! இது என்றும் புகழ் மகுடம் சூட்டும்! 


ooooooooooooooooooooooooooooooooooooooooooo

Seshadri e.s. has left a new comment on your post "VGK 06 ]உடம்பெல்லாம் உப்புச்சீடை": 
கண்ணனின் குழல் செய்த பாக்கியம் போல கதாசிரியரின் எழுதுகோலும் பெரும்பேறு பெற்றுள்ளது. அன்று கடைந்தபோது ஆலமும், அமுதமும் தோன்றியதாம். இவர் மூளையில் சிந்தனையால் கடைந்தபோது அமுதமே கிடைக்கின்றதே! இது எப்படி? இறைவன் கொடுத்த வரமே! மூதாதையர்களின் அனுக்கிரஹமே. சென்றவர் ஐவர். வந்தவர் ஒருவர். கண்டவர் ஒரு தம்பதியர். மற்றும் வித்யார்த்திகள் 50 ஆக 58 கதாபாத்திரங்கள் இக்கதையில் உலவுகின்றனர். நமக்கு சிந்தைக்கு விருந்தாகின்றனர்.

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே !": 
தனது மகனின் தேர்வான மருமகளைப் பார்த்தபோது மனதில் விரிந்த காட்சிப் பிரதிபலிப்பு அற்புதம். அவர்கள் வீட்டிற்குச் சென்றதும், பெண்ணுடைய அம்மாவைப் பார்க்க நேர்கையில் அவள் தன்னால் விரும்பப் பட்டவள் என்று அறிந்தபோது, தான் விரும்பியவள் தன்னையே மறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து மனம் வருந்தி தாங்கொணாத் துயருற்றதையும், தலை திருப்பி நின்றதையும் தத்ரூபமாய் விளக்கியது தரமானதொரு நடை.



இளைஞனாய் இருந்தபோது தன்னம்பிக்கையுடனும், விரும்பியது கிடைக்காதபோது, கிடைத்ததை விரும்பி ஏற்று இனிய முறையில் இல்லறம் நடத்தியதிலும், தன்னை விரும்பியவளைச் சந்திக்க நேர்ந்தபோது, கண்ணியமாய் நடந்து கொண்ட விதத்திலும், தான் விரும்பியவள் தன்னிலை மறந்த நிலையில் இருப்பினும் அவள் பெண்ணை விரும்பிய தன் பிள்ளையின் காதலை ஏற்று அதற்குச் சம்மதம் சொல்லும் தந்தையாய் விளங்கும் இடத்திலும் கதாநாயகன் நம் நெஞ்சங்களில் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்துவிடுகிறார். 

ooooooooooooooooooooooooooooooooooooooooooo

Seshadri e.s. has left a new comment on your post "VGK 11 ] நாவினால்சுட்ட வடு": 
எந்த ஒரு கருத்தும், அது வெளிப்படும் விதம், சூழல் இவற்றைப் பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும். நாவடக்கம் எந்தச் சூழலிலும் அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்தக் கதைக்கு “நாவினால் சுட்ட வடு” என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. 



குழந்தையில்லாமல் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொருவர் வெவ்வேறுவிதமான ஆலோசனைகளையும், சம்ப்பிரதாயமான தீர்வுகளையும் சொல்லும்போதும், பிறர் பார்வையில் அவர்கள் ஒரு காட்சிப்பொருளாக ஆக நேர்கையில் அவர்களின் மனவேதனை எப்படியிருக்கும் என்பதை தனக்கே உரித்தான பாணியில் எடுத்துரைத்த கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மடிக்கணினி உடையாததைப்பற்றி மகிழ்வடைந்த கணவர் தன் மனைவியின் மனம் உடைந்ததை உணராதது கொடுமை! 

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 12 - ’உண்மை சற்றே வெண்மை !’": 
பசுக்கள் வளர்ந்து, கருவுற்று, கன்றுகளை ஈன்று பண்ணையாகி விட்டாலும் தனக்கென்று ஒரு வரன் மட்டும் இன்னும் அமையவில்லை என அப்பெண் தன் உள்ளக் குமுறலை வெளிக்காட்டும் இடமும், இரவு நேரங்களில் சில பசுக்கள் ஒருமாதிரி கத்தும்போது அவைகளால் தம் உணர்வை வெளிப்படுத்த முடிவதாகவும், தன்னால் அவ்வாறு வெளிப்படுத்தமுடியாதென எண்ணும் இடமும் எல்லோர் மனதிலும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதே சமயம் பெற்றோர் தன் மகளுக்கு உரிய வரன் கிடைக்கவில்லையே என கவலைப்படுவதாக அமைத்ததிலிருந்து அவர்களின் பொறுப்புணர்ச்சியும் வெளிப்படுத்தப் படுகிறது.

"பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. " எனத் தொடங்கும் வரிகளில் கதையின் முடிச்சு ஆரம்பமாகிறது.

சமுதாயத்தில் அதுவும் நடுத்தர மற்றும் வறுமையில் வாழ்பவர்களிடையே இதுபோன்ற குறைபாட்டுடையவர்களின் மனநிலையையும் அவர் படும் துயரங்களையும் விளக்கி இது ஒரு நோயே அல்ல, குறைபாடுதான் என்பதை விளங்க வைக்க முயற்சித்ததும் அருமை. 


ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 13 - வந்து விட்டார்வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி ’மூ...": 
பேட்டியெடுக்கும் விதமாக இவர் கேட்கும் கேள்விகள் சிரிப்புடன் கூடிய சமுதாயச் சீர்திருத்தத்திற்கான சிந்தனைகள். ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அவ்வளவு விரைவில் அதிலிருந்து வெளிவந்து விட முடியாது. அதை அவர்கள் ஏதோ ஒரு காரணம் கூறி நியாயப்படுத்தவும் செய்வார்கள். பெரியவர்களிடம் காணப்படும் பழக்கங்கள், பிஞ்சு நெஞ்சங்களில் ஆழமாய்ப் பதிந்துவிடும். ஆதலால் பெற்றோர்களும், பெரியோர்களும் நற்பழக்கங்களைக் கடைபிடிப்பது அடுத்த தலைமுறை வளம்பெற அவசியம் எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாகக் காட்சிகளும் கேள்விகளும் அமைக்கப்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது.



இனி பொடிபோடும் நபர்களைப் பார்க்கும்போதும், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வலம் வரும் வேட்பாளர்களைப்பார்க்கும் போதும் ஒருகணம் ’எழுச்சியான வ.வ.ஸ்ரீ‘ நம்கண்முன் நிற்பார் என்பதில் ஐயமில்லை.

இக்கதையைப் படிப்பவர்களின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தையும், விழிப்புணர்வையும், தன் நகைச்சுவை உணர்வால் சிரிப்பலைகளையும் ஏற்படுத்திய கதாசிரியர் நம் அனைவரின் உள்ளம் கவர்ந்த கள்வனாகி விடுகிறார். அவருக்கு என் எழுச்சியான பாராட்டுகள்!

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 14 - நீ ..........முன்னாலே போனா .......... ...": 

இக்கதை உணர்த்தும் உண்மைகள் மற்றும் சமுதாயச் சிந்தனைகள்.

1. மரணம் என்பது நிலையானது. அது வரும் நாள் யாருக்கும் தெரியாதது! எனவே வாழும் காலத்தில் மகிழ்வுடனும், வருவதை ஏற்று எதிர்கொள்ளும் திறனும் கொண்டிருத்தல் அவசியம்.



2. ஒருவருக்கொருவர் புரிந்தும், விட்டுக்கொடுத்தும் வாழ்தல்தான் வாழ்க்கை! நிலையா இளமை ஓடி, முதுமை கூடும்போது, இனிதாய் அதை எதிர்கொள்ள இது உதவும்.

3. நோய்வந்துவிட்டால், அதை எண்ணி துவண்டுவிடாமல், இயன்றவரை அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் கவலையில்லமல் இருக்கலாம். அந்நோய் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அறிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

4. பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. உரிய முறையில் அவர்களிடம் அன்பு பாராட்டி, நல்லவர்களாக அவர்களை வளர்த்து ஆளாக்கினால் மட்டுமே, பின்னாளில் அவர்கள் பெற்றோர்களிடமும் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள்.

5. ஒருவரின் செயல் , மற்றவரின் பார்வைகளில் மாறுபட்டும் தோன்றலாம். உண்மை வெளிப்படும்போது உலகம் ஒருமனதாக அதை ஏற்றுக்கொள்ளலாம்.

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த அத்தம்பதிகள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை!

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 17 - சூ ழ் நி லை": 
இன்றைய அவசர உலகில், பிஸினஸ் நிமித்தமாய் பயணத்திலேயே பாதி நாட்களைக் கழிக்க நேர்ந்திடும் கணவனுக்கும், குடும்பத்தைப் பராமரித்துக் காக்கும் மனைவிக்கும் இடையே, மனம் விட்டுப் பேச முடியாமற் போவதால் ஏற்படும் புரிதல் குறைபாடுகளை விளக்கும் வண்ணம் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகையில் அவர்களிடையேயான அன்பு வலுப்பெறுகிறது. உறவும் பகைபோல் தெரியும், அது உண்மை விளங்கிடத் தெளியும் என்பதை கதைக்கு அருமையான சூழ்நிலையைக் கருவாக எடுத்துக் கையாண்டு, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலையை கடைசியில் ஏற்படுத்தி மனைவிக்கு தன் கணவன் மிகச் சிறந்தவன்தான் எனும் தெளிவை ஏற்படுத்தி முடித்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 18 - ஏமாற்றாதே ! .... ஏமாறாதே .... !!": 
இந்தக் கதையை, படக்கதையாக்கி, தொடக்கக் கல்வி மாணாக்கர்களுக்குப் பாடமாக வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

இன்றைய உலகில் பலராலும் பலர் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி விடுகிறது. மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை ஏமாற்று வேலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கத் தவறவில்லை.

கதைக்கான கரு, அதற்கேற்ற பாத்திரப் படைப்புகள், கோவையான நடை, இடையிடையே தவறான செயல்களுக்குத் தீர்வுகள் என அனைத்தும் நிறைந்த தரமான ஒரு சிறுகதையைப் படைத்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நன்றி! 

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 19 - *எ ட் டா க் க(ன்) னி க ள்* !": 
கனிகள் தொங்கும் மரங்களின் படத்தோடு, “எட்டாக் க(ன்)னிகள்”கதை தொடங்குகிறது. யாருக்குக் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதோ? எனும் கேள்வியை நம்முள் எழுப்பி, கதைக்குள் இழுத்துச் செல்கிறது.



பொருத்தம் மனதிலும் உடலிலும் வேண்டும். “என்னை மாதிரி பசங்களைப் பார்த்தா பிடிக்காது, பார்க்கப் பார்க்கத் தான் பிடிக்கும்” படிக்காதவனின் தனுஷின் வசனம், கதாநாயகனின் படத்தைப் பார்த்ததும் நம் ஞாபகத்திற்கு வருகிறது. கவலைப் படாதே சகோதரா! உனக்கு எட்டும்கனியாக, ஜாடிக்கேற்ற மூடியாக, ஒருவள் நிச்சயம் உனக்காக விரைவில் கிடைப்பார் என ஆறுதல் சொல்லத் தோன்றுகிறது.

ஈட்டி எட்டியமட்டும் பாயும். பணம் பாதாளம் வரையில் பாயும். பணத்தை இழக்க விரும்பாத அக்கா கொக்கு தான்! 

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 22 - வ டி கா ல்": 
கூட்டுக் குடும்பமுறை சிதைந்து, தனிக்குடும்பங்கள் பெருகி வரும் இந்நாளில் தன் மன வேதனைகளை, மகிழ்வான தருணங்களின் நினைவுகளை, கடந்தகால அனுபவங்களை, நிகழ்கால நிகழ்வுகள் குறித்த தம் கருத்துகளை பகிர்ந்துகொள்ள ஆளில்லாத அல்லது இருந்தும் கேட்கத் தயாரில்லாத நிலையில்தான் இத்தகு முதியவர்கள் வடிகால் தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது.



இன்றைய குடும்ப நிலையை யதார்த்தமாகச் சொல்லிப்போன ஆசிரியரின் திறன் வியக்க வைக்கிறது. பொருளீட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பார்த்து பேசிக்கொள்ளும் நிலையே குறைந்து அலையும் நிலை. பள்ளிப்பாடம் பாரமாகி, போட்டி நிறைந்த உலகமாகி, மதிப்பெண் ஒன்றே தகுதியை நிர்ணயிக்கும் நிலையில் அதை அடைய புத்தகத்திற்குள் புதைந்து, விளையாட்டை மறந்து, கிடைக்கும் சிறிது நேரத்தையும் கணினி அல்லது தொலைக்காட்சியில் தொலைத்து நிற்கும் இன்றைய குழந்தைகள், வயதான முதியவர்கள் இருமுவதும், தும்முவதும் கூட இவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் நிலையாக உள்ளதை அருமையாக எடுத்துரைக்கிறார்.

இந்த இடத்தில் முதியோர் இல்லம் குறித்து நான் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதியோர் இருக்கும் இல்லங்கள் பெருகட்டும்.

முதியோர் இல்லங்கள் பெருகாமலிருக்க! 

ooooooooooooooooooooooooooooooooooooooooooo

Seshadri e.s. has left a new comment on your post "VGK 26 - பல்லெல்லாம்பஞ்சாமியின் பல்லாகுமா?": 
பல்மருத்துவரிடம் சென்றவுடன் அவர் பட்ட பாடுகள் அனைத்தும் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டவிதம், பல்வேறு பல்டாக்டர்களிடம் இக்கதையை எழுதுவதற்காகக் குறிப்புகள் சேகரித்திருப்பாரோ என எண்ணவைத்து விடுகிறது.



படங்கள் வேறு ஆங்காங்கே பல்மருத்துவமனையில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்துவிடுகிறது. பல்லை சுத்தம் செய்யும் படத்திற்கு ஒலியும் சேர்ந்திருந்தால் நிச்சயம் நாம் பயந்திருப்போம்.

போலிப் பற்களைக் கட்டிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் போலியான டாக்டரிடம் சென்றதுதான் தவறு. முகம் அழகு பெறும், வாய்நாற்றம் ஆகிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணச் சென்று, அடுக்கடுக்காக பல இன்னல்களைச் சந்தித்து, பொறுமையுடன் அவற்றைத் தாங்கியும் பலனளிக்கவில்லை என அறிகையில் பஞ்சாமி மீது நமக்கு இரக்கம் ஏற்பட்டுவிடுகிறது.

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 27 - அவன் போட்டகணக்கு !": 
வலையில் சிக்கிய பறவை, கடவுள் போட்ட கணக்கைப் புரிந்து கொள்ள முடியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் கணக்காசிரியர், ஆடிப்போன உள்ளத்துடன் இருக்கும் ப்யூனை சிம்பாலிக்காக மணியுடன் ஆடும் பள்ளிக்கூடம் என சூழ்நிலைகளை விளக்கிட நேர்த்தியான படத்தேர்வுகள். ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளை உணரவைத்து விடுகிறது.



எளிமையான பாத்திரங்கள் மூலம், கோர்வையாகக் கதையை நகர்த்தி, “அவன் போட்ட கணக்கை அவனியில் யாரறிவார்?”, “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!” எனும் தத்துவத்தை நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். நமக்கும் இதற்குப் பின்னாலும் ஏதோ ஒரு கணக்கை இறைவன் வைத்திருப்பான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்கேற்றார்போல் காற்றில் மிதந்து, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை! நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை” எனும் காலத்தால் அழியாத கவியரசரின் பாடல் வரிகள் நம் காதுகளில் ஒலிக்கிறது. நல்லதொரு படைப்பைத்தந்த கதாசிரியருக்கு என் பாராடுகளுடன் நன்றி கலந்த வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 28 - வாய் விட்டுச்சிரித்தால் .... !": 
பல தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்வை, சற்று மிகைப்படுத்திய நகைச்சுவையுடன் கதையாக்கி, நம்மை இதுகுறித்துச் சிந்திக்கத் தூண்டும் கதாசிரியர் பாராட்டுக்குரியவர். நோய்க்கேற்ற மருத்துவமனையை நாடச்சொல்லி இந்நாளில் திருவள்ளுவர் இருந்திருந்தால் ஒரு குறளை நிச்சயம் எழுதியிருப்பார் என எண்ணத் தோன்றுகிறது.



இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டுமா என்ற எண்ணம் கோபியின் மனதில் எழுவது மட்டுமல்ல, நம்முள்ளும் இதுபோன்ற மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

கொரியர் ஆசாமியாக, திரு. மனோபாலா அவர்களும், கோபியாக திரு. வடிவேலு அவர்களும் இந்தக் கதையை நகைச்சுவைக் காட்சியாக நடித்தால் எப்படி இருக்கும் என எண்ணும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரித்து சிரித்து வயிறுவலித்தது. 

நல்லதொரு நகைச்சுவைப் படைப்பின் மூலம் நம் சிந்தனையைத் தூண்டி விட்ட கதாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 29 - அட்டெண்டர்ஆறுமுகம்": 
ஒரு நல்ல நிர்வாகி தன்னிடம் பணியாற்றும் கடைநிலை ஊழியரின் கருத்துக்களைக் கூடக் கேட்டறிந்து, அதில் ஏற்புடையவற்றைப் பரிசீலித்து ஆவன செய்ய முயன்றால், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடத்தில் நன்மதிப்பைப் பெறுவதோடு மட்டுமன்றி, அந்தக் கம்பெனியோ அல்லது அலுவலகமோ ஒரு நல்ல உயர்வைப் பெறும் என்பதில் ஐயமில்லை.



பாத்திரத்தை மனதில் பதிய வைப்பதில் ஆசிரியரின் திறன். அட்டெண்டர் ஆறுமுகத்தின் தோற்றத்தை நான்கே வரிகளில் நயம்பட உரைப்பதன் மூலம் வெளிப்படுகிறது..

இன்பம் என்பது துன்பத்தோடு கூடியது. வாழ்வில் இன்பத்திற்கு பணமும் அவசியம். தேவைக்கேற்ப பொருளீட்ட எந்தப் பணியில் இருந்தாலும் திறம்பட செயலாற்றி, நேரிய வழியில் செயல்பட்டு நம் கடமையில் தவறாது இருத்தல் ஒன்றே போதுமானது. பிறர் நம் பதவி குறித்தோ, செயல் குறித்தோ விமர்சிப்பதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

உள்ளத்தனையது உயர்வு. எனவே தாழ்வு மனப்பான்மை அகற்றி, திறம்பட செயலாற்றி வரும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்தினால் உயர்வு நிச்சயம் என்பதை எளிமையான கதாபாத்திரங்களின் துணைகொண்டு, கோர்வையாகவும், ஆழமாகவும் உணர்த்திச் செல்கிறார்.

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 30 - மடிசார்புடவை"
மடிசார் புடவை” எனும் தலைப்பும், மாமி வேடத்தில் கமலஹாசனின் படமும் இது ஒரு பிராமணக் குடும்பம் சார்ந்த கதை என்பதை உணர்த்திவிடுகிறது. மடிசார் புடவை உடுத்திக்கொள்ளும் பழக்கமுடைய, இப்படி என்றால் அப்படி என்றும், அப்படி என்றால் இப்படி என்றும் கூறும் சுபாவமுடைய அத்தை கம் வருங்கால மாமியாரை, எப்படிக் கவர்ந்தார் அவரின் வருங்கால மருமகள் என்பதை மருமகளே எடுத்துரைப்பதாக எழுதப்பட்ட அற்புதமான கதை. 



கதாபாத்திரங்கள் யாருக்குமே பெயர் வைக்காமல், அத்தனை பாத்திரங்களையும் நமக்கு மாமியாரின் மனதினைக் கவர்ந்து வெற்றி கண்ட மருமகள் வாயிலாகவே அறிமுகம் செய்யும் ஆசிரியரின் யுக்தி பாராட்டுக்குரியது. தொய்வில்லாமல் கதையைத் தொடர்ந்து படிக்க வைத்துவிடுகிறார் கதாசிரியர். 

மாமியாரின் மனம் கவர்ந்த மருமகள் பாத்திரத்தைப் படைத்த கதாசிரியர் அனைத்து மகளிராலும் போற்றப்படுவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள். 

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 31 - முதிர்ந்தபார்வை": 
பெற்றோரின் மனபாரத்தையும், மகனின் மனபாரத்தையும், மருமகளின் மனபாரத்தையும், சம்பந்தி வீட்டாரின் மனபாரத்தையும் நீக்கவே கல்யாணியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகளின் பாரமோ? இந்த பாரம் மகிழ்ந்து சுமக்கும் பாரம் அல்லவா! அனைவரின் பாரத்தையும் நீக்கிய குருவாயூரப்பனுக்கு துலாபாரம் என்பது துல்லியமான ஒரு முடிவு. அதையும் ஜோசியனே சொல்லிச் சென்றதாகக் காண்பித்ததும் அருமை.



“என்ன பிள்ளை பெற்றாளோ? என்ன பெயர் வைத்தாளோ?” எனும் கேள்வியை நம்முள் எழுப்பி விடையறியுமுன்னே கதை முடிந்துவிடுகிறது.

“பார்வை ஒன்றே போதுமே” என நான் பாடி விடைபெறும் வேளையில் என் பார்வையில், கண்ணீரில் துவங்கி, களிப்பில் முடியும் வண்ணம் கதைபடைத்த ஆசிரியர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாகத் தோன்றுகிறார். அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

ooooooooooooooooooooooooooooooooooooooooooo

Seshadri e.s. has left a new comment on your post "VGK 32 - ச கு ன ம்": 
மக்களிடையே மண்டிக்கிடக்கின்ற மூடநம்பிக்கைகளில் சகுனம்பார்ப்பதும் ஒன்று. இதனால் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான பாதிப்புகளை விளக்கி, இதுகுறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஒரு நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கையேற்படுத்தும் நல்லதொரு சகுனமாகவும் தெரிகிறது. 

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே !": 
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கல்வி பெறுவதில் நல்ல முன்னேற்றம் கண்டு, நல்ல விழிப்புணர்வுடன் ஆண்களை விட மிகுந்த திறமை பெற்றவர்களாய்த் திகழ்ந்தாலும், பெண்கள் உழைப்பதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கான தைரியத்தை, திறமையை பெற்றிருந்தாலும், அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்தில் வாய்ப்பளித்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் தடையாய் இல்லாமல், அவர்கள் வாழ்வில் பீடுநடை போட பேருதவியாய் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் சமுதாயச் சிந்தனையோடு படைக்கப்பட்டுள்ள கதை.

பிற மொழிகளிடையே வெறுப்புணர்வு பாராட்டாமல், அவற்றை அறிந்து கொள்ள முயலுதல் நன்று என்பதையும் நன்கு உணர்த்தும் கதை.



ஆனால் சில ஆண்கள் மனதில் மட்டும் பெண்கள் குறித்த பார்வை இன்னும் மாறவில்லை. “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை” என்று முழுமனதுடன் நம்பினால் மட்டுமே பெண்கள் நிறைய வெற்றிகளைப் பெற முடியும். பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்காத சமுதாயம், நாகரிகமான சமுதாயமாக இருக்க முடியாது என்பதை அழகாய் உணர்த்திச் செல்கிறார் கதாசிரியர்.

அருமையான கதை! நன்றி ஐயா! 


ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK-39 - மா மி யா ர்": 
இக்கதையில் மாமியாரின் மன ஓட்டத்தை மருமகள் புரிந்து கொள்ளாத நிலையைக் கருவாக அமைத்து கதை அமைத்த பாங்கு பாராட்டத்தக்கது.



மருமகள் மீது தனக்கிருக்கும் அக்கறையை தன் சம்பந்தி அம்மாளிடம் அழகாக எடுத்துரைத்து, அவர் மூலமே அதை மகளுக்குப் புரிய வைக்கும் பாங்கு புதுமை. சம்பந்திகளுக்குள்ளும் புரிதல் இருந்ததை நமக்குப் புரிய வைத்துவிட கதாசிரியர் கையாண்ட யுத்தி இது.

வாழ்க்கையில் சாதாரணமாக கணவன் மனைவிக்குள்ளோ, மாமியார் மருமகள் இடையேயோ ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அணுகி விடைதேடினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை அழகாக விளக்கிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! 

ooooooooooooooooooooooooooooooooooooooooooo


Seshadri e.s. has left a new comment on your post "VGK-40 - மனசுக்குள்மத்தாப்பூ [பகுதி-1 of 4]": 
இடைவிடாத(!?) சிந்தனையுடன் இருக்கும் மனநல மருத்துவமனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ, பிரசவத்திற்காகப் பிரிந்து செல்லும் தன் மனைவியைக் கொஞ்சுவதாய்க் கதையைத் துவங்கி, பிரசவ வலி வந்ததாய்க் காண்பித்து கதையை நிறுத்தி, நமக்குள் விறுவிறுப்பைக் கூட்டி அடுத்த பகுதிக்குச் செல்கையில் அது வெறும் கனவு எனக் காண்பிக்கையில் சற்றே ஏமாற்றம் அடைந்தாலும் அடுத்தது என்ன? எனும் எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது. அனுவின் வீட்டு மாடிப் போர்ஷனில் மனநலமருத்துவர் மனோ (என்ன பெயர்ப் பொருத்தம்!) வாடகைக்குத் தங்கியுள்ள விவரம் அதன்பிறகுதான் நமக்குப் புரிகிறது. தொடர்வோம்! 

Seshadri e.s. has left a new comment on your post "VGK-40 - மனசுக்குள்மத்தாப்பூ [பகுதி 2 of 4]": 
மனோ காணும் கனவு பிராதிதம் (ஆசைப்பட்டவற்றைக் காணுதல்) எனும் வகையோ என எண்ணத்தோன்றுகிறது. குடியிருக்கும் வீட்டில் உள்ள அனு, அவனின் மனம் கவர்ந்த பெண்ணாகி, மார்கழிப் பனியும் அவனின் நடைப்பயிற்சிக்குத் தடை போட, எண்ணத்தில் நிறைந்தவளைக் கண்டு இரசிக்க நவீன பைனாகுலர் சகிதம் ஜன்னலோரம் நித்தம் ஆஜராகிவிடுகிறான் மனோ.



அவனுடைய பார்வையில் அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு விஷயத்தில் பைத்தியம்தான் என விவரிக்கும் இடத்தில் விரியும் பட்டியலைப் படிக்கையில் நமக்கும் பைத்தியம் பிடித்துவிடும் போல் உள்ளது. மனிதரில் இத்தனை வகை பைத்தியங்களா? என வியக்க வைக்கிறது. “கோலப்பைத்தியம்” என அனுவை நினைத்த மனோவும் அவள் கோலத்தை இரசிக்கும் பைத்தியமாகிவிடுகிறான். அவளின் கோலம் அவன் மனதுள் அழியாக் கோலமாகிவிடுகிறது. அன்புக்கோலமாகிவிடுகிறது. 

Seshadri e.s. has left a new comment on your post "VGK-40 - மனசுக்குள்மத்தாப்பூ [பகுதி 3 of 4]": 
மணவாழ்வை எதிர்நோக்கி, அனுவுக்கு மங்கல நிகழ்வு நடைபெற உள்ள நிலையிலும் இனி இந்த வாய்ப்பு தனக்கு இனி கிடைக்காதே என எண்ணி மனோ மறுபடியும் அடுத்த நாள் காலையில் பைனாகுலர் சகிதம் ஆஜராவதாகக் காண்பித்ததும் நமக்குள் ஒரு நெருடல்! பைனாகுலர் வழியாகப் பார்க்கையில் ஆறடி நீள கருநாகம் அவளுக்குப் பின்னால் படமெடுத்தாடுவதைப் பார்த்ததும் அதிர்ந்து, பைனாகுலரை எறிந்துவிட்டு, அவளைக் காப்பாற்ற விரைந்து, அவளைக் கட்டியணைத்துத் தூக்கிக் காப்பாற்றி அந்த நாகத்தைக் காண்பித்ததும் அவள் “அம்மா” என்று அலறியதைக் கேட்டு ஆச்சர்யத்தில் மகிழ்ந்து, நமக்குள்ளும் ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிடுகிறான் மனோ.

அதன் பின் அதைப் பார்த்த பால்காரப் பையன் சாட்சியாகி, பஞ்சாயத்தில் வழங்கிய தீர்ப்பால் அதிர்ந்த மனோவை அலார மணிச் சத்தம் எழுப்பிவிட, அத்தனையும் கனவு என அறிந்ததும் நமக்கும் மீண்டும் இவையாவும் கனவுதானா? என்ற எண்ணம் ஏற்பட்டு எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது. கதை முடிவை நோக்கி பயணிக்கத் துவங்குவதை உணர்த்தும் வண்ணம் தான் கண்ட கனவுகள் அனைத்தும் பலித்ததை மனோ நினைவுகூர்வதாக அமைத்தது புலப்படுத்திவிடுகிறது. 

Seshadri e.s. has left a new comment on your post "VGK-40 - மனசுக்குள்மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவ...": 
இனியென்ன! “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?, “கண்ணெதிரே தோன்றினாள்!” என்றும் “உறவோடு விளையாட எண்ணும் கண்கள் உறங்காது உறங்காது கண்ணே!” என மனோ இடைவிடாமல் பாடி மகிழ வாழ்த்துவோம்! அடுத்த தீபாவளி அவர்களுக்குத் தலை தீபாவளியாகட்டும்! 

திருப்பங்கள் நிறைந்த காதல் கதையைப் படைத்த கதாசிரியரும் இனி இதுபோன்று பல கதைகள் பிரசவிக்க மன்னிக்கவும் பிரசுரிக்க வாழ்த்துவோம் வாரீர்! 

நன்றி! =====சுபம்!==== 




-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


ஒரு பின்னூட்டம் என்பது, பதிவுக்குச் சம்பந்தப்பட்டதாக, எப்படி அழகாகவும், அருமையாகவும், சுவையாகவும் எழுதப்படலாம் என்பதற்கு, மேலே குறிப்பிட்டுள்ள, என் பதிவுகளில் உள்ள தங்களின் பின்னூட்டங்களே மிகச்சிறந்த முன்னுதாரணங்களாகும்.  :)

100% பின்னூட்டமிடும் போட்டியில் கலந்துகொண்டு எனக்கு மனம் நிறைவாக இவ்வாறு தாங்கள் பின்னூட்டங்கள் கொடுத்துள்ளதற்கும், சிறப்புச் சாதனையாளரான தங்களுடன் இந்த என் புதிய போட்டி நல்லபடியாக நிறைவு பெற்றதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

 


அன்புடன் VGK


oooooooooOooooooooo



இந்த 100% பின்னூட்டமிடும் போட்டியின்
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய
அறிவிப்பு அடுத்ததாக வெளியிடப்பட உள்ளது.

31.12.2015 அன்று 
காணத்தவறாதீர்கள்

என் நிலை அறிவிப்பு

கடந்த ஐந்து நாட்களாக எனக்கு நெட் கிடைத்தும், மெயில் பகுதி வேலைசெய்தும், என் ப்ளாக்கர் மட்டும் சுத்தமாக வேலை செய்யவில்லை. என் பதிவையோ பிறர் பதிவுகளையோ என்னால் ஓபன் செய்து நேரிடையாகப் பார்க்கவோ, பின்னூட்டமிடவோ, பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவோ என்னால் இயலவில்லை. 

காட்சியளித்து வரும் டேஷ் போர்டு மூலம் க்ளிக் செய்து முயற்சித்தாலும் ....... This webpage is not available ERR_CONNECTION_TIMED_OUT Google Chrome could not load the webpage because gopu1949.blogspot.in took too long to respond. The website may be down, or you may be experiencing issues with your Internet connection. என்று மட்டுமே காட்சியளித்து தொடர்ந்து வெறுப்பேற்றி வருகிறது.

இந்த இன்றைய பதிவு ஏற்கனவே Compose செய்து Draft ஆக என்னிடம் சேமித்து வைத்திருந்ததை, முன்னோட்டமாகக்கூட (Trial Post) என்னால் பார்க்க இயலாத நிலையில், அப்படியே மிகவும் கஷ்டப்பட்டு, பயந்துகொண்டே வெளியிட்டுள்ளேன். அது சரியாக, படங்களுடன் என் தளத்தில் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளதா என்பதைக்கூட என்னால் திறந்து சரி பார்க்க முடியாமல் உள்ளது. இது உங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே. -- VGK

என்றும் அன்புடன் தங்கள்,


வை. கோபாலகிருஷ்ணன்

33 கருத்துகள்:

  1. உணர்வுபூர்வமான ஒரு கடிதம். அருமையும் கூட...உங்களுக்கும் அவருக்குமான எழுத்தின் மூலம் உருவான ஒரு அந்நியோன்ய பந்தமும் தெரிகின்றது தெளிவாய்.

    “சாதாரணமானவன்தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.” // திரு சேஷாத்ரி அவர்களுக்கு..இந்த வரிகள் உங்களை மட்டுமல்ல எங்களையும் கவர்ந்தது என்றால் மிகையல்ல.
    நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் சார் நீங்கள். அதனால் எதையும் பாங்குற தவறையும் கூட வெளிப்படுத்துவதில் தேர்ந்தவராக இருக்கின்றீர்கள்.

    கலக்கும் அந்தக் குட்டி யானை அழகோ அழகு! கலக்குங்கள் சார்!

    வாழ்த்துகள் தங்கள் இருவருக்குமே!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பானதோர் கடிதம். சேஷாத்ரி அவர்களுக்கும் தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அடி ஆத்தாடியோவ்..... இம்மாம் பெரிய பதிவு. நேயர் கடதாசி நல்லா எளுதி இருக்காக. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. திரு சேஷாத்ரி அவர்களின் நேயர்கடிதம் ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க. வாழ்த்துகள். உங்களின் பல பதிவுகளுக்கு அவர் எழுதியிருந்த பின்னூட்டங்களையும் இங்கு பகிர்ந்து கொண்டது போல மற்ற சாதனையாளர் களின் பின்னூட்டங்களில் தாங்கள் ரசித்ததை போட்டிருக்கலாமே அவர்களை அறிமுகப் படுத்தபட்டிருந்த பதிவுகளில். நெட் ப்ராப்ளம் இன்னும் சரி ஆகலியா.

    பதிலளிநீக்கு
  5. திரு சேஷாத்ரி அவர்கள் நேயர் கடிதம் மிகச் ஞசிறப்பாக எழுதி இருக்காங்க. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். நேயர் கடிதமும் சுவாரசியமான பின்னூட்டங்களும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. திரு சேஷாத்ரி அவர்களின் நேயர் கடிதம் பின்னூட்டங்கள் எல்லாமே நன்றாக இருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமுங்கோ நீங்க எங்கட குருஜி பத்தி சொல்லினது அல்லாமே கரீட்டுங்கோ. நானு எம்பூட்டு தப்பு பண்ணிகிட்டா கோட ஈசியா எடுத்துகிடுவாக. அல்லார் கிட்டாலயும் ஒரே போல பளகிடுவாங்க.

      நீக்கு
    2. engada guruji yoda neenga romba varusama friend. neraya parisu la vangi irukiha naa la onnume illa big zero

      நீக்கு
    3. ongada commend la supera keedu. eniku ipudila elutha varthila

      நீக்கு
    4. immam periy therama saliga kooda ennaiyum guruji peruma paduthitanga.

      நீக்கு
  8. சேஷாத்ரி சார் நீங்க கூட2011-லதா தீபத்திருநாளுல பதிவு எளுத ஆரம்பிச்சீங்களா எங்கட குருஜி கூட 2011- ல தா ஆரம்பிச்சாக. அவுக தா மொதகா வந்து பிட்டு வாழ்த்து சொல்லினாகளா சூப்பருல்லா.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்,
    அவரின் கடிதம் அருமை,தங்களின் பதிலும் தான்,அவரின் பின்னூட்டங்கள் அனைத்தும் அருமை, தொடர்புடைய வார்த்தைகள். பதிவு நல்லா இருக்கு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அருமையான பாராட்டை தங்களுக்கு அன்புடன் நல்கியுள்ளார்... மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. என் உள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை அப்படியே நேயர் கடிதமாக அனுப்பியிருந்தேன். அதை ஏற்று, வெளியிட்ட திரு வைகோ சார் அவர்களுக்கு மிக்க நன்றி!
    ஒவ்வொரு கதையையும் படிக்கும் போது என்னுள் எழுந்த உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தேன். விமர்சனம் எழுதும்போது ஒரு இரசிகனாக எழுதினேன். அவருக்குப் பிடித்த பின்னூட்டங்களைத் தொகுத்து வழங்கி இந்தப் பதிவில் வெளியிட்டது என்னை மிகவும் நெகிழச் செய்துவிட்டது! மீண்டும் ஒருமுறை இதற்காக என் உளமார்ந்த நன்றிகள் சார்! என்னுடைய கடிதத்தைப் படித்துப் பாராட்டியுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  12. எல்லாவற்றையும் முழுமையாகப் படிக்க முடியவில்லை. எழுத்துக்கள் ரொம்பப் பொடியாக இருந்தன/இருக்கின்றன! படித்த அளவில் திரு சேஷாத்ரி உணர்வு பூர்வமாய்ப் பகிர்ந்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள். அதைத் தொகுத்து கொஞ்சமும் அயராமல் வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துகள். இவ்வளவெல்லாம் பாடுபட்டுச் செய்ய என்னால் எல்லாம் முடியுமா என்றும் யோசித்தேன். நிச்சயமாய் முடியாது. உங்கள் ஈடுபாட்டுடன் கூடிய கடமை உணர்வு, அர்ப்பணிப்பு போற்றத் தக்கது. உண்மையில் பரிசுக்கும் பாராட்டுக்கும் தாங்களே உரியவர்.

    பதிலளிநீக்கு
  13. திரு சேஷாத்ரி அவர்களின் அஞ்சலையும், அவர் தங்கள் பதிவில் இட்ட பின்னூட்டங்களையும் படித்த பின் இவருக்கு பரிசு இல்லையென்றால் வேறு யாருக்கு? என்ற எண்ணமே என் மனதில் ஓடியது. பின்னூட்டங்களை இரத்தின சுருக்கமாக பொருள் பொதிந்து தந்திருப்பது அவரின் எழுத்து மற்றும் திறனாய்வு புலமையை வெளிப்படுத்துகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு சேஷாத்ரி அவர்களே!
    அவரது அஞ்சலையும் பின்னூட்டங்களையும் பகிர்ந்த தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. பின்னூட்டமிடும் போட்டியின் வெற்றியாளரான
    திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  15. சேஷாத்ரி சாருக்கு என் பாராட்டுகள்! உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. கோபு அண்ணா, உங்க வெற்றி எங்க இருக்கு தெரியுமா, எங்க நீங்க திருச்சி மலைக்கோட்டை மாதி நிமிர்ந்து நிக்கறேள் தெரியுமா, தெரிஞ்சுக்கோங்கோ.

    ஒருத்தர் அருமையா ஒரு நேயர் கடிதம் எழுதினா அதை பிரசுரிச்சுட்டு, அதை தூக்கி சாப்பிட்டுடறமாதிரி அலங்காரம் பண்ணி உங்க வலைத்தளத்துல போட்டுடறீங்க.

    கடிதம் எழுதினவர் நெகிழ்ந்து போயிடற மாதிரி அவரோட பின்னூட்டங்களில் நச்சுன்னு இருக்கற பின்னூட்டங்கள எடுத்துப் போட்டு அசத்திடறேள்.

    HATS OFF TO YOU.

    பதிலளிநீக்கு
  17. சேஷத்ரியின் மனம் திறந்தகடிதமும்,தங்கள் பதிலும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  18. சாதனை செய்து பரிசும் பெற்று தனது எண்ணங்களை ஆழகாய் மடலில் தந்த திரு. காரஞ்சன் அவர்களுக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  19. //“சாதாரணமானவன்தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.” என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன//இந்த வரிகள்தான் என்னையும் முதலில் ஈர்த்தது!!
    //இவரின் சிறுகதைகளில் ஏதோ ஒர் ஈர்ப்பு இருப்பதை சிறுகதைப் போட்டியில் பங்கேற்றபோது நான் உணர்ந்தேன். அன்றாட வாழ்வில் நாம் அனைவருமே சந்திக்கும் சில நிகழ்வுகள் கூட இவர் கைவண்ணத்தில், எண்ணத்தில் கதையாக மலர்ந்ததைக் கண்டு வியக்கிறேன்!// வாத்யாரின் ஃபேன்ஸ் கிளப்பில் பலருக்கும் இந்த உணர்வு உண்டு. நல்லதொரு நேயர் கடிதத்திற்கு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்!!! நான் முன்பொரு பதிவில் குறிப்பிட்டபடி ஒன்பதாம் வள்ளல் வாத்யாருக்கு நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
  20. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அழகான பல கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

    திருவாளர்கள்:

    துளஸிதரன் V தில்லையக்காது அவர்கள்
    வெங்கட் நாகராஜ் அவர்கள்
    ஸ்ரத்தா ஸபுரி அவர்கள்
    ஆல் இஸ் வெல் அவர்கள்
    ஸ்ரீனிவாசன் அவர்கள்
    கே பி ஜனா அவர்கள்
    ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்
    வே. நடனசபாபதி அவர்கள்
    மோகன்ஜி அவர்கள்
    சென்னை பித்தன் அவர்கள்
    அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
    ரவிஜி ரவி அவர்கள்

    செல்வி. முருகு அவர்கள்

    திருமதிகள்:

    பூந்தளிர் அவர்கள்
    மஹேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள்
    கீதா சாம்பசிவம் அவர்கள்
    இராஜராஜேஸ்வரி அவர்கள்
    ஜெயந்தி ரமணி அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  21. நண்பர் சேஷாத்ரி அவர்களின் மனந்திறந்த மடல் கோபு சாரின் சிறுகதைகளின் பெருமை பேசுவதோடு, கோபு சாரின் தனிப்பட்ட குணநலன்களையும் குறிப்பிட்டுப் பெருமை சேர்க்கிறது என்றால், அதற்கான கோபு சாரின் பதிலோ அதனினும் சிறப்பாய் சேஷாத்ரி அவர்களின் பின்னூட்டக் கருத்துரைகளைச் சுட்டி பின்னூட்டங்கள் எப்படி இருக்கவேண்டுமென்பதை மிக அழகாக சொல்லி சிறப்பு சேர்க்கிறது. இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி January 13, 2016 at 6:40 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நண்பர் சேஷாத்ரி அவர்களின் மனந்திறந்த மடல் கோபு சாரின் சிறுகதைகளின் பெருமை பேசுவதோடு, கோபு சாரின் தனிப்பட்ட குணநலன்களையும் குறிப்பிட்டுப் பெருமை சேர்க்கிறது என்றால், அதற்கான கோபு சாரின் பதிலோ அதனினும் சிறப்பாய் சேஷாத்ரி அவர்களின் பின்னூட்டக் கருத்துரைகளைச் சுட்டி பின்னூட்டங்கள் எப்படி இருக்கவேண்டுமென்பதை மிக அழகாக சொல்லி சிறப்பு சேர்க்கிறது. இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  22. திரு சேஷாத்ரி அவர்களின் நேயர் கடிதம் வெரி இண்ட்ரஸ்டிங்க. அவரின் பின்னூட்டங்களும் ரொம்ப நல்லா இருக்கு. திறமை சாலிகளை தேடிக்கண்டு பிடித்து விருது பரிசு வழங்கி உற்சாகப்படுத்தும் உங்களின் அணுகுமுறை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராப்தம் January 17, 2016 at 10:06 AM

      வாங்கோ, வணக்கம்.

      //திரு. சேஷாத்ரி அவர்களின் நேயர் கடிதம் வெரி இண்ட்ரஸ்டிங்க். அவரின் பின்னூட்டங்களும் ரொம்ப நல்லா இருக்கு. திறமை சாலிகளை தேடிக்கண்டு பிடித்து விருது பரிசு வழங்கி உற்சாகப்படுத்தும் உங்களின் அணுகுமுறை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும்கூட வெரி இண்ட்ரஸ்டிங்க் ஆக ரொம்ப நல்லாத்தான் இருக்குது. வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      நீக்கு
  23. நம்ம பக்கம் வரலியே??? ரிஷபன் சார் பக்கம்ஃபாலோவரா இணைச்சுகிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராப்தம் January 17, 2016 at 5:33 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நம்ம பக்கம் வரலியே???//

      அதுபற்றி எனக்கு ஏதும் தகவலும் வரலியே ! :)

      //ரிஷபன் சார் பக்கம் ஃபாலோவரா இணைச்சுகிட்டேன்//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. நல்லதொரு காரியம் செய்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

      நீக்கு
  24. மிக அருமையான விமர்சனக் கடிதம். நாங்கள் உங்களிடம் கண்டு வியந்த ஒவ்வொரு குணத்தையும் உங்கள் மனத்தையும் சிலாகித்து எழுதி இருக்கின்றார் திரு சேஷாத்ரி. அவருக்கும் உங்களுக்கும் ஒரு சேர வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan February 6, 2016 at 12:12 AM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //மிக அருமையான விமர்சனக் கடிதம். நாங்கள் உங்களிடம் கண்டு வியந்த ஒவ்வொரு குணத்தையும் உங்கள் மனத்தையும் சிலாகித்து எழுதி இருக்கின்றார் திரு சேஷாத்ரி. அவருக்கும் உங்களுக்கும் ஒரு சேர வாழ்த்துகள் :)//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபால்

      நீக்கு