என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 6 மார்ச், 2012

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 8 of 8 ]
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-19ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை
பகுதி 8 of  8
23. கீழ் குறிபிட்டுள்ள ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் 12 நாமாக்களை, வீட்டை விட்டு வெளியில் போகும்போதும், கார் ஸ்கூட்டர் முதலியவற்றை ஓட்ட எடுக்கும் போதும், இரவில் படுக்கும்போதும் சொல்ல வேண்டும்.


ஹனுமான் அஞ்ஜனாஸூனு: 
வாயுபுத்ரோ மஹாபல:
ராமேஷ்ட: 
பல்குணஸக: 
பிங்காக்ஷ: 
அமிதவிக்ரம:
உததி க்ரமணஸ்சைவ சீதாசோக வினாசன: 
லக்ஷ்மண ப்ராணதாதாச தசக்ரீவஸ்ய தர்பஹா!
த்வாதசைதானி நாமானி கபீந்த்ரஸ்ய மஹாத்மண:
ஸ்வாபகாலே படேந்நித்யம் யாத்ராகாலே விசேஷத:
தஸ்யம்ருத்யு பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத் !
அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித!


அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித! என்கிற ஸ்ரீ ஆஞ்ஜநேயர் நாமத்தை தினம் 336 முறை ஜபிக்கவும். 3 லக்ஷம் முறை ஜபித்தால் காரிய ஸித்தி ஏற்படும். 

24. ஸ்ரீமத் சுந்தர காண்டத்தின் கடைசி ஸர்க்கமான 68 ஆவது ஸர்க்கத்தின் முடிவில் வரும் கீழ்க்கண்ட அழகான ஸ்லோகத்தைப் படித்தால் பரம க்ஷேமம் ஏற்படும் என்று ஸ்ரீ ஸ்வாமிகள் கூறுவார்கள்.

”சுந்தரே சுந்தரீம் சீதாம் அக்ஷதாம் மாருதேர்முகாத்
ஸ்ருத்வா ஹ்ருஷ்டஸ்ததை வாஸ்து ஸ ராம: ஸததம் ஹிருதி” 

பொருள்: மிக செளந்தர்யத்துடன் கூடிய சீதாதேவியைப் பற்றிய விஷயத்தை ஆஞ்ஜநேயர் முகமாகக்கேட்டு ஆனந்தமடைந்த ஸ்ரீ ராமர் அந்த ஆனந்தத்துடன் எங்கள் ஹ்ருதயத்தில் எப்போதும் பிரகாசிக்கட்டும்.


  

25. ஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்ரீமத் சுந்தர காண்ட பாராயணம் முடிந்த பிறகு ஸ்ரீ ராமர் ஆஞ்ஜநேயரை கெளரவித்த யுத்த காண்டத்தின் முதல் ஸர்கத்தைப் படித்துவிட்டு, ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தை பாராயணம் செய்து பூர்த்தி செய்வார்.   

யுத்த காண்ட முதல் ஸர்க்கம் - ஸ்லோகம் 14

“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமத:”

ஆஞ்ஜநேயர் மகத்தான காரியத்தை முடித்து விட்டு சீதாதேவியைக் கண்டு பேசிய விஷயத்தை சொன்னதைக் கொண்டாடி, அவரை கெளரவிக்க, ஸ்வாமி ஸ்ரீ ராமர்  ராஜ்யத்தில் இல்லாமல் வனத்தில் இருப்பதால், சன்மானம் செய்யக் கையில் ஒன்றுமில்லையே என்று நினைத்து, ஆஞ்ஜநேயரை அப்படியே ஆலிங்கணம் செய்து கொண்டார். 


ஸ்ரீ ஆஞ்ஜநேயருக்கு இதற்குமேல் என்ன சன்மானம் வேண்டும்? மிகப்பெரிய அனுபவம்! பகவான் தன்னையே கொடுத்து விட்டார்!!

பகவத் கைங்கர்யம் செய்பவர்களுக்கு ஸாயுஜ்யமே கிடைக்கும்!!! 


தன் வாழ்க்கையை மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டியவரும், ஸ்ரீ ஆஞ்ஜநேயர் மேல் தீவிர பக்தி கொண்டு வாழ்ந்தவருமான சத்குரு ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளால் மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களை மனதில் கொண்டு, ஸ்ரீமத் சுந்தர காண்டத்தை முடிந்தவரை தினமும் பாராயணம் செய்து, ஸ்ரீராமச்சந்த்ர மூர்த்தியின் அருளுக்குப் பாத்திரமாகி, எடுத்த காரியத்தில் வெற்றியுடனும், ஆயுள் ஆரோக்ய செளக்யங்களுடனும் விளங்கி ஜன்மலாபத்தை அடைய வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொள்ளப்படுகிறது.


oOo
 சுபம் 
oOo

  oooooooOooooooo


மேற்படி ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு பற்றி “ஆங்கரை ஜ்யோதி” என்ற தலைப்பில் K.S. இராகவ அய்யங்கார் என்பவர் 07.02.2005 இல், ஒரு சிறிய புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். 

ஸ்ரீ ஸ்வாமிகள் ஸித்தியடைந்து முதல் ஆண்டு நிறைவு ஆராதனையை உத்தேசித்து அந்தப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

என்னால் இந்தப்பதிவுக்கு சுபம் என்று மேலே போட்டபிறகே, அந்தப் புத்தகத்தைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இந்த மஹானுடன் எனக்கும் அவ்வப்போது நல்ல பரிச்சயம் உண்டு என்பதாலும், அவருடைய கொள்கைகளையும், உண்மையான பக்தி ஸ்ரத்தைகளையும் நன்கு அறிந்தவன் என்பதாலும், அந்தப் புத்தகத்தை நான் வாசிக்கும் போது, பல இடங்களில் என்னை அறியாமல், கண்ணீர் விட்டு அழுதேன். அவ்வளவு ஒரு வைராக்யத்துடன் வாழ்ந்த மஹான், ஆங்கரை ஸ்ரீ கல்யாணராம பாகவதர் என்று பூர்வாஸ்ரமத்தில் அழைக்கப்பட்ட ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். 

அந்தப் புத்தகத்தின் 16 to 18 பக்கங்களில் உள்ள ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கூறிக்கொண்டு முடிக்க விரும்புகிறேன்:

இந்த மஹானின் பூர்வாஸ்ரப்பெயர்: கல்யாணராமன்.  பால்ய வயது. ஸ்ரத்தையுடன் விரும்பிக் கூப்பிடும் இடங்களுக்கு மட்டும் சென்று ஸ்ரீமத் சுந்தரகாண்ட பாராயணம் செய்து விட்டு வருவார்.  

அதுபோல சிதம்பரம் போய்விட்டு, ரயில் ஏறி திரும்ப சென்னைக்கு செல்ல இருக்கிறார். கூடவே இந்த ”ஆங்கரை ஜ்யோதி” என்ற புத்தகம் வெளியிட்டவரான ஸ்ரீ K.S. இராகவ அய்யங்கார் அவர்களும் ஸ்ரீ கல்யாணராமன் அவர்களுடனேயே இருந்திருக்கிறார்.

சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் வேறொரு மிகப் பிரபலமான உபன்யாசகர் இவரை சந்திக்கிறார். ஸ்ரீ கல்யாணராமன் அவர்களைப்பார்த்து அந்தப் பிரபலம் சொல்கிறார்:

“நீங்கள் நிறைய படித்தவர். வாக்கு வன்மை இருக்கிறது. நீங்கள் நன்றாக ஸோபிக்க வேண்டும் என்றால், பிரமுகர்கள் மற்றும் பொது மக்களை அனுசரித்து, அவர்கள் ஆதரவை தேடிக் கொள்ள வேண்டும்” என்று ஆலோசனை கூறுகிறார்.

அதற்கு ஸ்ரீ கல்யாணராமன் அவர்கள் பதில் கூறுகிறார்:

“நீங்கள் எனக்கு ஆலோசனை கூறியதற்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை ஸ்ரீ நிகமாந்த தேசிகர் அவர்கள் அருளிய வைராக்ய பஞ்சகத்தின் முதல் ஸ்லோகம் தான் எனக்கு எப்போதுமே வழிகாட்டி” என்று சொல்லி விட்டு, அந்த ஸ்லோகத்தின் முதல் அடியையும் [கீழே குறிப்பிட்டுள்ளது] சொல்கிறார்.

க்ஷோணி கோண சதாம்ச பாலன கலா
துர்வார கர்வானலா - க்ஷுப்யத் க்ஷுத்ர
நரேந்த்ர சாடு ரசனா - தந்யான் ந மன்யா மஹே
தேவம் ஸேவிது மேவ நிச்சுனு மஹே யோசெள தயாளு; புரா
தாநா முஷ்டி முசே குசேல முநயே [முநயே]
தத்தேஸ்ம விச்தேசதாம் -


ஸ்லோகத்தின் பொருள்: 

இந்தப்பெரிய பூமண்டலத்தில் ஏதோவொரு தெருக்கோடியில் ஒரு சிறு பூமியை ஆளும் கர்வம் மிக்க அரசனைப் புகந்து பெறும் செல்வம் ஒன்றும் பெரிதல்ல. 

பக்தி ஸ்ரத்தையுடன் கொண்டுவந்து அளித்த ஒரு பிடி அவலுக்காக ’சுதாமா என்கிற குசேலருக்கு’, குபேரனுக்கு சமமான செல்வத்தை அளித்த தயாநிதியான எம்பெருமானை மட்டுமே ஸேவிக்க உறுதி கொண்டுள்ளேன். 
   
இதிலிருந்து ஸ்ரீ கல்யாணராமன் என்பவரின் லக்ஷ்யம் தெரிய வருகிறது. பிரமுகர்கள், பொதுமக்கள் இவர்களின் ஆதரவைத்தேடி உபந்யாசம் செய்து பொருள் ஈட்டுவதை விட, ஸுலபமாக ஸ்ரத்தையாக வந்து கேட்க ஆசைப்படும் ஆஸ்திகர்கள் முன்னிலையில் மட்டும், பகவத் கதா பிரவசனம் செய்து, தானும் ஆத்ம லாபம் அடைந்து, அவர்களும் பகவத் கதா ஸ்ரவனம் செய்யும்படி “ஸ்ரவண தானம்” என்கிற உயர்ந்த தானத்தைச் செய்வது, உயர்ந்த தர்மம் என்ற லக்ஷ்யத்தைக் கடைபிடித்தார் என்பது தான்.  

இங்கு கூற வேண்டிய இன்னும் ஒரு அம்சம், ஸ்ரீ கல்யாணராமன் அவர்களை பிரவசனத்திற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு எந்த கண்டிஷனும் கிடையாது. 


பணத்தைப்பற்றியே பேச்சும் கிடையாது. தனக்குக் கிடைத்ததை எவ்வளவு என்று எண்ணியும் பார்க்காமலேயே, அங்கு இருக்கும் வைதீகர்களுக்கும், வித்வான்களுக்கும் தாராளமாக ஸன்மானமாக அளித்து விடுவார். இந்த விஷயம் அவருடன் நெருங்கிப்பழகிய ஆப்தர்களுக்குத் தான் தெரியும். 

ஆரம்ப காலத்தில் பல ஆப்தர்களுக்கு இது விஷயம் மிகுந்த வருத்தத்தைத் தந்தது. ’ஸ்ரீ கல்யாணராமன் அவர்களுக்கு நிறைய தனம் வசூலாக வேண்டும்; அவர் செளகர்யமாக இருக்க வேண்டும்’ என்பதே அந்த ஆப்தர்களின் ஆசையாக இருந்தது. 

காலப்போக்கில் ஸ்ரீ கல்யாணராமன் அவர்களின் வைராக்யத்தையும், பகவத் பக்தியையும் அவர்களும் நன்கு புரிந்து கொண்டனர். அவரிடம் அவர்களின் பக்தியும் மரியாதையும், கூடவே நன்கு வளர்ந்து வரலாயிற்று. 

=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=

மிகச்சமீப காலத்தில் வாழ்ந்தவரான இவரைப்போன்று பணத்தாசையே கொஞ்சமும் இல்லாமல், ஆத்மலாபத்திற்காகவே ஸ்ரீமத் பாகவதமும், ஸ்ரீமத் ராமாயணமும், ஸ்ரீமந் நாராயணீயமும், ஸ்ரீமத் சுந்தரகாண்டமும் பாராயணமாகவும், கதா பிரவசனமாகவும் [விளம்பரம் ஏதும் செய்யாமல், அனாவஸ்யக் கும்பலைக் கூட்டாமல்] கூறிய மஹான்களைக் காண்பது மிக மிக அரிது.  


[ அடுத்து நாளை 07.03.2012 மாலை 4 மணிக்கு வெளியிட இருக்கும் ஒரே ஒரு பகுதியில் ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டோத்ர சதநாம ஸ்தோத்ரம் + பலஸ்ருதி பற்றி கூறிவிட்டு, இந்த மஹானின் திவ்ய சரித்திரத் தொடரை முடித்துக்கொள்ள இருக்கிறேன்.  ]

அன்புடன்
vgk 
25 கருத்துகள்:

 1. அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித!

  என்கிற ஸ்ரீ ஆஞ்ஜநேயர் நாமத்தை தினம் 336 முறை ஜபிக்கவும். 3 லக்ஷம் முறை ஜபித்தால் காரிய ஸித்தி ஏற்படும்.

  அருமையான காரிய சித்தி ஸ்லோகப் பகிர்வுக்கு நன்றிகள ஐயா...

  பதிலளிநீக்கு
 2. பக்தி ஸ்ரத்தையுடன் கொண்டுவந்து அளித்த ஒரு பிடி அவலுக்காக ’சுதாமா என்கிற குசேலருக்கு’, குபேரனுக்கு சமமான செல்வத்தை அளித்த தயாநிதியான எம்பெருமானை மட்டுமே ஸேவிக்க உறுதி கொண்டுள்ளேன்./

  அபாரமான பக்தி சிரத்தையும் மனஉறுதியும் கொண்டஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பற்றிய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. ஆத்மலாபத்திற்காகவே ஸ்ரீமத் பாகவதமும், ஸ்ரீமத் ராமாயணமும், ஸ்ரீமந் நாராயணீயமும், ஸ்ரீமத் சுந்தரகாண்டமும் பாராயணமாகவும், கதா பிரவசனமாகவும் [விளம்பரம் ஏதும் செய்யாமல், அனாவஸ்யக் கும்பலைக் கூட்டாமல்] கூறிய மஹான்களைக் காண்பது மிக மிக அரிது.

  மிக அரிய உயர்ந்த மஹான்களைத் தரிசிக்க கிடைத்த அற்புதப் பகிர்வுகள்..

  பதிலளிநீக்கு
 4. I noted down the slokas. I think many would also be.
  Thanks for posting such a nice post.
  I think, with Gods grace only I am able to read the post.
  Thanks again.
  viji

  பதிலளிநீக்கு
 5. பணத்தைப்பற்றியே பேச்சும் கிடையாது. தனக்குக் கிடைத்ததை எவ்வளவு என்று எண்ணியும் பார்க்காமலேயே, அங்கு இருக்கும் வைதீகர்களுக்கும், வித்வான்களுக்கும் தாராளமாக ஸன்மானமாக அளித்து விடுவார். இந்த விஷயம் அவருடன் நெருங்கிப்பழகிய ஆப்தர்களுக்குத் தான் தெரியும்.

  அம்மாதிரி மனிதர்களைப் பார்ப்பது இப்போது அரிது. அதனால்தான் அவர்கள் மகான் !

  பதிலளிநீக்கு
 6. இந்தப்பெரிய பூமண்டலத்தில் ஏதோவொரு தெருக்கோடியில் ஒரு சிறு பூமியை ஆளும் கர்வம் மிக்க அரசனைப் புகந்து பெறும் செல்வம் ஒன்றும் பெரிதல்ல.


  பக்தி ஸ்ரத்தையுடன் கொண்டுவந்து அளித்த ஒரு பிடி அவலுக்காக ’சுதாமா என்கிற குசேலருக்கு’, குபேரனுக்கு சமமான செல்வத்தை அளித்த தயாநிதியான எம்பெருமானை மட்டுமே ஸேவிக்க உறுதி கொண்டுள்ளேன்.

  //என்ன ஒரு திடமான கொள்கை- இது போன்ற மகான்களுடன் இருந்ததே பெரும் பாக்யம்!

  தொடருக்கு நன்றி!

  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 7. நல்ல பகிர்வு.....

  நல்ல விஷயங்களைத் தொடர்ந்து சொல்லி வரும் உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீ ஆஞ்ஜநேயருக்கு இதற்குமேல் என்ன சன்மானம் வேண்டும்? மிகப்பெரிய அனுபவம்! பகவான் தன்னையே கொடுத்து விட்டார்!!

  பகவத் கைங்கர்யம் செய்பவர்களுக்கு ஸாயுஜ்யமே கிடைக்கும்!!!//

  பகவான் தன்னையே கொடுத்தபின் என்ன வேண்டும்!

  பணத்தைப்பற்றியே பேச்சும் கிடையாது. தனக்குக் கிடைத்ததை எவ்வளவு என்று எண்ணியும் பார்க்காமலேயே, அங்கு இருக்கும் வைதீகர்களுக்கும், வித்வான்களுக்கும் தாராளமாக ஸன்மானமாக அளித்து விடுவார். இந்த விஷயம் அவருடன் நெருங்கிப்பழகிய ஆப்தர்களுக்குத் தான் தெரியும். //

  மகானைப் பற்றி தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவின் மூலம் நன்றி சார்.

  படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
 9. மனம் சஞ்சலப் படும் சமயங்களில் "சுந்தர காண்டத்தை" படித்தால் தெளிவு பிறக்கும். சாரமுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 10. அருமையான அமுதமான தகவல்களை பகிர்ந்தப் பதிவு...

  ஸ்ரீ கல்யாணராமன் என்பவரின் லஷ்யம் என்பதோடு அது ஞானிகளின் லஷ்ணமும் கூட....

  அருமையானத் தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 11. பகவான் தன்னையே கொடுத்து விட்டார்!!

  பகவத் கைங்கர்யம் செய்பவர்களுக்கு ஸாயுஜ்யமே கிடைக்கும்!!!

  அபாரமான மகிமைமிக்க பயனுள்ள பகிர்வுகளுக்கு நன்றிகள் ஐயா..

  பதிலளிநீக்கு
 12. மகானைப் பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது சார். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 13. //ஆஞ்ஜநேயர் மகத்தான காரியத்தை முடித்து விட்டு சீதாதேவியைக் கண்டு பேசிய விஷயத்தை சொன்னதைக் கொண்டாடி, அவரை கெளரவிக்க, ஸ்வாமி ஸ்ரீ ராமர் ராஜ்யத்தில் இல்லாமல் வனத்தில் இருப்பதால், சன்மானம் செய்யக் கையில் ஒன்றுமில்லையே என்று நினைத்து, ஆஞ்ஜநேயரை அப்படியே ஆலிங்கணம் செய்து கொண்டார்.
  //

  aahaa!!!

  பதிலளிநீக்கு
 14. //ஸ்ரீ ஆஞ்ஜநேயருக்கு இதற்குமேல் என்ன சன்மானம் வேண்டும்? மிகப்பெரிய அனுபவம்! பகவான் தன்னையே கொடுத்து விட்டார்!!
  //

  ஆஹா!!

  //என்னால் இந்தப்பதிவுக்கு சுபம் என்று மேலே போட்டபிறகே, அந்தப் புத்தகத்தைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இந்த மஹானுடன் எனக்கும் அவ்வப்போது நல்ல பரிச்சயம் உண்டு என்பதாலும், அவருடைய கொள்கைகளையும், உண்மையான பக்தி ஸ்ரத்தைகளையும் நன்கு அறிந்தவன் என்பதாலும், அந்தப் புத்தகத்தை நான் வாசிக்கும் போது, பல இடங்களில் என்னை அறியாமல், கண்ணீர் விட்டு அழுதேன். அவ்வளவு ஒரு வைராக்யத்துடன் வாழ்ந்த மஹான், ஆங்கரை ஸ்ரீ கல்யாணராம பாகவதர் என்று பூர்வாஸ்ரமத்தில் அழைக்கப்பட்ட ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.
  ///

  ஆழ்ந்த மரியாதைகள்...

  //மிகச்சமீப காலத்தில் வாழ்ந்தவரான இவரைப்போன்று பணத்தாசையே கொஞ்சமும் இல்லாமல், ஆத்மலாபத்திற்காகவே ஸ்ரீமத் பாகவதமும், ஸ்ரீமத் ராமாயணமும், ஸ்ரீமந் நாராயணீயமும், ஸ்ரீமத் சுந்தரகாண்டமும் பாராயணமாகவும், கதா பிரவசனமாகவும் [விளம்பரம் ஏதும் செய்யாமல், அனாவஸ்யக் கும்பலைக் கூட்டாமல்] கூறிய மஹான்களைக் காண்பது மிக மிக அரிது.
  //

  நன்றி...இப்பகிர்வின் மூலமே இவரைப் பற்றி கேள்வியுற்றேன்.

  பதிலளிநீக்கு
 15. very nice post sir.thanks for sharing.

  (got some problem with my computer and broadband connection.I will read in detail after getting it repaired.)

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. venkatachalam March 10, 2014 at 11:42 AM
   நல்ல பதிவு,//

   மிக்க நன்றி. சந்தோஷம். எல்லோருக்கும் அனைத்து மங்களங்களும் உண்டாகட்டும். ;)

   நீக்கு
 17. பணத்தாசை கூடாதுதான். ஆனாலும் லௌகீகவாழ்வில் பொருளில்லாதவனுக்கு மதிப்பில்லையே?

  பதிலளிநீக்கு
 18. உங்கள் மூலமாக அற்புதமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் நாங்க எல்லாருமே புண்ணியவான்கள் ஆயிட்டோம்

  பதிலளிநீக்கு
 19. “நீங்கள் நிறைய படித்தவர். வாக்கு வன்மை இருக்கிறது. நீங்கள் நன்றாக ஸோபிக்க வேண்டும் என்றால், பிரமுகர்கள் மற்றும் பொது மக்களை அனுசரித்து, அவர்கள் ஆதரவை தேடிக் கொள்ள வேண்டும்” என்று ஆலோசனை கூறுகிறார்.

  அதற்கு ஸ்ரீ கல்யாணராமன் அவர்கள் பதில் கூறுகிறார்:

  “நீங்கள் எனக்கு ஆலோசனை கூறியதற்கு நன்றி. என்னைப் பொருத்தவரை ஸ்ரீ நிகமாந்த தேசிகர் அவர்கள் அருளிய வைராக்ய பஞ்சகத்தின் முதல் ஸ்லோகம் தான் எனக்கு எப்போதுமே வழிகாட்டி” என்று சொல்லி விட்டு, அந்த ஸ்லோகத்தின் முதல் அடியையும் [கீழே குறிப்பிட்டுள்ளது] சொல்கிறார்.//

  உண்மையிலேயே மிகப் பெரியவர் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.

  அவர் அடி பணிகிறேன்.

  பதிலளிநீக்கு
 20. வரிசயா நல்ல வெசயங்க சொல்லிகினே வாரீக. நல்லாருக்குது

  பதிலளிநீக்கு
 21. நிறைய நிறைய நல்ல விஷயங்கள் படிப்பதால் மனதில் ஒருவித அமைதி கிடைப்பது போல இருக்கு இப்ப போட்டிக்காக படிப்பதால ஆழ்ந்து உள் வாங்கி படிக்க முடியவில்லை பிறகு கண்டிப்பாக நிதானமாக எல்லாவற்றையம் படிக்கவருவேன்

  பதிலளிநீக்கு
 22. ஓடுகிற ஓட்டத்தில் படித்தாலும் ஓரளவு பலனாவது கிட்டுமென நினைக்கிறேன். அதன் ஒரு பகுதி - உங்களையும் சேரும்...

  பதிலளிநீக்கு