சிரித்து வாழ வேண்டும் !
[நான் சமீபத்தில் படித்த ஒரு சில
ஆங்கில ஜோக்குகளின் தமிழாக்கம் இவை - vgk]
ஆங்கில ஜோக்குகளின் தமிழாக்கம் இவை - vgk]
“மகனே, நான் உன்னை நேற்று அடித்தபோது நீ எவ்வாறு உன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டாய்?”
மகன்:
”நான் அப்போது உடனே கழிவறையைச் சுத்தம் செய்யச் சென்றேனே!” .
தந்தை:
”அது எப்படி உன் கோபத்தை கட்டுப்படுத்தி உன்னைத் திருப்தி படுத்தியிருக்க முடியும்?”
மகன்:
”தாங்கள் தினமும் பல் துலக்கும் ப்ரஷினால் அல்லவா அதை நான் நன்றாகத் தேய்த்து சுத்தப்படுத்தினேன்”
தந்தை:
”உனக்கு நீச்சல் தெரியுமா?”
மகன்:
“தெரியாது”
தந்தை:
”உன்னை விட ஒரு நாய் சிறந்தது. அதனால் நன்றாக நீந்த முடியும்”
மகன்:
“உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”
தந்தை:
”நன்றாகவே தெரியும்”
மகன்:
”அப்புறம் ஒரு நாய்க்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் இருக்கிறது?”
தந்தையும் மகனும் ஒரு மிருகக்காட்சி சாலையில் புலியை அடைத்து வைத்துள்ள கூண்டின் வெளியே நிற்கின்றனர்.
புலியின் வேகம், ஆற்றல், சக்தி, பலம், அதன் பாய்ச்சல், அதனால் ஏற்படக்கூடும் ஆபத்துகள் போன்ற எல்லாவற்றையும் தந்தை விபரமாக எடுத்துக்கூற, மகனும் உன்னிப்பாகவும் படு சீரியஸ் ஆகக் கேட்டுக்கொள்கிறான்.
புலியின் வேகம், ஆற்றல், சக்தி, பலம், அதன் பாய்ச்சல், அதனால் ஏற்படக்கூடும் ஆபத்துகள் போன்ற எல்லாவற்றையும் தந்தை விபரமாக எடுத்துக்கூற, மகனும் உன்னிப்பாகவும் படு சீரியஸ் ஆகக் கேட்டுக்கொள்கிறான்.
“அப்பா, எனக்கு ஒரு சிறு சந்தேகம் உள்ளது”
தந்தை:
“சந்தேகம் எதுவானாலும் உடனே கேட்டுத் தெரிந்து கொள்வதே நல்லது. கேள் மகனே கேள் !
மகன்:
அப்பா, ஒருவேளை இந்தப்புலி கூண்டிலிருந்து தப்பி வெளியே வந்து உங்களை அடித்து சாப்பிட்டு விட்டால் .................. ?
தந்தை:
“அதுபோல நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, தான்”
மகன்:
”அப்போ நான் எத்தனாம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்குப் போகணும்?”
பள்ளி அருகே போக்குவரத்து ஓட்டுனர்களுக்காக ஒரு விழிப்புணர்வு விளம்பரப் பலகை, மாணவர்களை விட்டு யோசித்து எழுதச் சொன்னார்கள்.
விஷமத்தனமான பையன் ஒருவன் எழுதியது:
வாகன ஓட்டிகளே!
தயவுசெய்து கவனமாக வண்டியை ஓட்டுங்கள்.
மாணவர்களைக் கொன்று விடாதீர்கள் !
ஆசிரியர்கள் வரும் வரைக் காத்திருங்கள் !!
ஆசிரியர்:
”நீ ஒரு மிகப்பெரிய பணக்கார கோடீஸ்வரன் எனக் கற்பனை செய்து கொண்டு உன் வாழ்க்கைச்சரித்திரத்தை எழுது”.
[ஒரு பையன் மட்டும் ஒன்றும் எழுதாமல் பேசாமலேயே உட்கார்ந்திருக்கிறான்]:
ஆசிரியர்:
”ஏன் இன்னும் நீ எதுவும் எழுதாமல் அமர்ந்திருக்கிறாய்?”
அந்தப்பையன்:
நான் இப்போது மிகப்பெரிய பணக்கார கோடீஸ்வரனாக்கும்!
நான் என் செக்ரெட்டரியின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
அவள் வந்த பிறகு நோட்ஸ் டிக்டேட் செய்து எழுதச்சொல்வேன்!
ஒரு மாணவன் கேட்கும் நியாயமான கேள்வி:
ஒரேயொரு ஆசிரியரால் எங்களுக்கு
அனைத்துப்பாடங்களையும்
சொல்லித்தர முடியவில்லை!
பிறகு எப்படி ஒரு மாணவனால் மட்டும்
அனைத்துப்பாடங்களையும்
கற்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்?
PUNCTUATION IS POWERFUL
ooooooooooo
ரசிக்கும்படி இருந்தது. ஆசிரியர் பற்றிய மாணவன் ஜோக் அருமை.
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ரசித்து சிரித்தேன்.
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை.... ரசித்தேன்..
பதிலளிநீக்குபங்க்ச்சுவேஷன் டாப்.கேட்டதும் கேட்காததுமா சிரிக்கவெச்சு இது ஒரு பொன் மாலைப் பொழுதுன்னு பாட வெச்சுட்டீங்க விஜிகே.
பதிலளிநீக்குமுதல் ஜோஜ் 2012 இன் பெஸ்ட் ஜோக்.சிரித்து முடியலே வி ஜி கே சார்.
பதிலளிநீக்குசூப்பர் ஜோக்ஸ் சார்! நன்றாக ரசித்தேன்,அதுவும் அந்த பங்க்சுவேஷன் ஜோக் ......... க்ளாஸ் சார்!
பதிலளிநீக்குஅதுக்கேத்தாப்ல ஸ்மைலிஸும் டாப் செலெக்ஷன்!
எல்லா ஜோக்குகளுமே நல்லா இருக்கு
பதிலளிநீக்குYou have gone from serious to Jokes.
பதிலளிநீக்குO.K. this is also nice.
viji
ஜோக்கா இது? நிஜம்மா யாரோ அப்பா, பிள்ளை பேசிக்கிறாங்கன்னு நினைச்சுட்டேன்!!!
பதிலளிநீக்குஅசத்தலான நகைச்சுவை..
பதிலளிநீக்குமிருகக்காட்சிச்சாலைக்குப் போன பிள்ளை காரியத்தில் கண்ணா இருக்கானே :-)
Hahahahahahaaa......
பதிலளிநீக்குNice jokes...
பகிர்வும் புகைப்படங்களும் அருமை!
பதிலளிநீக்குவணக்கம்! நல்ல தலைப்பு! தலைப்புக்கேற்ற நல்ல நகைச்சுவை !
பதிலளிநீக்குவணக்கம் ஐயா,
பதிலளிநீக்குசிரிக்கத் தூண்டினாலும்
சிந்திக்கவும் தூண்டுகிறது..
ஒரு மகனிடம் ஒரு தந்தை எவ்வாறு
நடந்துகொள்ள வேண்டும் என்ற
சிந்தனையையும் தெளிவு படுத்துகிறது.
பகிர்வுக்கு நன்றிகள் பல ஐயா.
nalla sirippu!
பதிலளிநீக்குsirappu!
"விசித்திர அப்பனும் .... விபரீதப் பிள்ளையும் !"
பதிலளிநீக்குசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்கள்..
அப்பாக்கள்
அறிந்துகொள்ளவேண்டிய
அருமையான பகிர்வுகள்..
"விசித்திர அப்பனுக்கு ....
பதிலளிநீக்குவிபரீதப் பிள்ளை !!
நியாயம் தானே !
விதை ஒன்று போட
சுரை ஒன்றா முளைக்கும் ??"
நல்ல நகைச்சுவை.
பதிலளிநீக்குரசித்து சிரித்தேன்.
அன்புடன் எம்.ஜே.ராமன்
அத்தனையும் அருமை. ரசித்தேன்.
பதிலளிநீக்குநல்ல ஜோக்ஸ்!
பதிலளிநீக்குஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகைதந்து ரஸித்து/சிரித்து/சிந்தித்து மகிழ்ந்ததாகக் கருத்துகள் சொல்லியுள்ள என் அன்புக்குரிய
பதிலளிநீக்குதிருவாளர்கள்:
==============
01. விச்சு Sir அவர்கள்
02. பழனி.கந்தசாமி Sir அவர்கள்
03. ரிஷ்பன் Sir அவர்கள்
04. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்
05. சுந்தர்ஜி Sir அவர்கள்
06. ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி Sir அவர்கள்
07. தி.தமிழ் இளங்கோ Sir அவர்கள்
08, மகேந்திரன் Sir அவர்கள்
09. சீனி Sir அவர்கள்
10. மணக்கால் ஜே.ராமன் Sir
11. சென்னை பித்தன் Sir அவர்கள்
மற்றும்
திருமதிகள்:
===========
01. ஸாதிகா Madam அவர்கள்
02. ராஜி Madam அவர்கள்
03. லக்ஷ்மி Madam அவர்கள்
04. விஜி Madam அவர்கள்
05. அமைதிச்சாரல் Madam அவர்கள்
06. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்
07. மனோ சாமிநாதன் Madam அவர்கள்
08. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்
09. கோவை2தில்லி Madam அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன் தங்கள்,
vgk
Nalla jokes sir :)
பதிலளிநீக்குpunctuation-really powerful--காரஞ்சன்(சேஷ்)
பதிலளிநீக்குpadma hari nandan said...
பதிலளிநீக்குNalla jokes sir :)//
Thank you very much, Sir.
Seshadri e.s. said...
பதிலளிநீக்குpunctuation-really powerful--காரஞ்சன்(சேஷ்)//
Thank you very much, Sir.
எல்லா ஜோக்குமே சிரிக் வச்சது
பதிலளிநீக்குலயா பள்ளியில் இன்று FATHER"s DAY கொண்டாடினார்கள். இன்று பொருத்தமாக அப்பா, பிள்ளை ஜோக்ஸ்.
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை. நன்றி.
நல்ல வாப்பா நல்ல புள்ள. இன்னா கேள்விக இன்னா பதிலுக. பயபுள்ள பொளச்சிகிடும்
பதிலளிநீக்குmru October 20, 2015 at 11:27 AM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்.
//நல்ல வாப்பா நல்ல புள்ள. இன்னா கேள்விக இன்னா பதிலுக. பயபுள்ள பொளச்சிகிடும்//
:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, முருகு :)
அந்தப் பிழைக்கத்தெரிந்த பயபுள்ள நம்ப முருகு மாதிரியே இருப்பான் போலிருக்குது. :)
நல்ல நகைச்சுவைதான். எங்கயாவது இதுபோல அப்பனும் பிள்ளையும் இருப்பாங்க போல.
பதிலளிநீக்கு”நீ ஒரு மிகப்பெரிய பணக்கார கோடீஸ்வரன் எனக் கற்பனை செய்து கொண்டு உன் வாழ்க்கைச்சரித்திரத்தை எழுது”.
பதிலளிநீக்கு[ஒரு பையன் மட்டும் ஒன்றும் எழுதாமல் பேசாமலேயே உட்கார்ந்திருக்கிறான்]:
ஆசிரியர்:
”ஏன் இன்னும் நீ எதுவும் எழுதாமல் அமர்ந்திருக்கிறாய்?”
அந்தப்பையன்:
நான் இப்போது மிகப்பெரிய பணக்கார கோடீஸ்வரனாக்கும்!
நான் என் செக்ரெட்டரியின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
அவள் வந்த பிறகு நோட்ஸ் டிக்டேட் செய்து எழுதச்சொல்வேன்! // குபீர் சிரிப்பை வரச்செய்தது. எல்லாமே சூப்பர்...