என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 17 மார்ச், 2012

இயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா


இயற்கை அழகில் ’இடுக்கி’ 
 இன்பச் சுற்றுலா

By 
வை.கோபாலகிருஷ்ணன்”மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற தலைப்பில் ஓர் தொடர்பதிவினை 09.03.2012 முதல் 15.03.2012 வரை 7 நாட்களுக்கு தினம் ஒரு பகுதி வீதம் வெளியிட்டிருந்தேன். 


அந்தத் தொடர்பதிவுக்கு அவ்வப்போது வருகை தந்து நல்ல பல கருத்துக்களைக் கூறி என்னை உற்சாகப்படுத்திய கீழ்க்கண்ட அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வருகை தந்தவர்கள் பட்டியல் இதோ இங்கே:


திருமதிகள்:

01. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்
02.இராஜராஜேஸ்வரி அவர்கள்
03. மனோ சாமிநாதன் அவர்கள்
04. லெக்ஷ்மி அவர்கள்
05. ஸாதிகா அவர்கள்
06. விஜி அவர்கள்
07. ஆச்சி அவர்கள்
08. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
09. கோவை2தில்லி அவர்கள்
10. அமைதிச்சாரல் அவர்கள்
11. ஷக்திப்ரபா அவர்கள்
12. மாதேவி அவர்கள்
13. கோமதி அரசு அவர்கள்
14. மீரா அவர்கள்
15. சாகம்பரி அவர்கள்
16. மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
17. யுவராணி தமிழரசன் அவர்கள்
18. கீதமஞ்சரி அவர்கள்
19. கோவை மு. சரளா அவர்கள்
20. சந்திரகெளரி அவர்கள்
21. ஆசியா ஓமர் அவர்கள்
22. சந்திரவம்சம் அவர்கள்

திருவாளர்கள்:

01. வெங்கட் நாகராஜ் அவர்கள்
02. மதுமதி அவர்கள்
03. E.S. சேஷாத்ரி அவர்கள்
04. ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள்
05. அன்பின் சீனா ஐயா அவர்கள்
06. ஸ்ரீனிவாஸன் ராமகிருஷ்ணன் அவர்கள்
07. சேகர் அவர்கள்
08. ’அவர்கள் உண்மைகள்’ அவர்கள்
09. ரிஷபன் அவர்கள்
10. ஜீவி ஐயா அவர்கள்
11. ரமணி அவர்கள்
12. G. கணேஷ் அவர்கள்*****
13. ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள்
14. கே.பி. ஜனா அவர்கள்
15. சென்னை பித்தன் ஐயா அவர்கள்
16. கே.ஜி. கெளதமன் அவர்கள்
17. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்
18. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
19. “என் ராஜபாட்டை” - ராஜா அவர்கள்
20. மணக்கால் M.J. ராமன் அவர்கள்*****
21. ஜி.எம். பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள்
22. புலவர் சா. இராமாநுசம் ஐயா அவர்கள்
23. D. சந்திரமெளலி அவர்கள்
24. T N முரளிதரன் அவர்கள்
25. அப்பாதுரை ஐயா அவர்கள்
26. பழனி. கந்தசாமி ஐயா அவர்கள்
27. தமிழ் இளங்கோ அவர்கள்*****
28. ஜாஃப்பர் அவர்கள்

ஏழு நாட்களுக்கும் தொடர்ச்சியாக எல்லாப் பகுதிகளுக்கும் வருகை தந்து சிறப்பித்த கீழ்க்கணட ஒரு சிலருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்:


  அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் 

[பகுதி-1 க்கு மட்டுமே, மிகவும் அதிசயமாக 11 முறைகள் வந்து பின்னூட்டமிட்டு அசத்தியிருந்தீர்கள், ஐயா!;)))))))))))   


Ref: http://gopu1949.blogspot.in/2012/03/1.html ] மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஐயா.]

 திரு. ஜீவி ஐயா அவர்கள்

[என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தாங்களே, சிரமத்தைப் பார்க்காமல், தினமும் வருகை தந்து ஆசீர்வதித்தது. எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும், மனதுக்கு மிகவும் திருப்தியாகவும் இருந்தது, ஐயா!  திரு. ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள்


[என் இந்தத் தொடர் பதிவினை தங்களின் முகநூலுக்குக் [Face Book] கொண்டு சென்றுள்ளதாக கூறியிருந்தீர்கள். அதற்கு என் நன்றிகள், ஐயா] 

 திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்

[தினமும் அள்ளி அள்ளி அக்ஷயபாத்திரம் போல பின்னூட்டமிட்டு உற்சாகம் கொடுத்திருந்தீர்கள்!  அவை என்னை மிகவும் மகிழ்வித்தன!;))))) ]

 திருமதி ஸாதிகா அவர்கள்

[பின்னூட்டத்துடன் மட்டும் நில்லாமல் மின்னஞ்சலிலும் அல்லவா இந்த என் பதிவினைப்பற்றி ஏராளமான தகவல்களை தாராளமாகப் பகிர்ந்து கொண்டீர்கள் ! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ;))))) ]


 திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்

[ பன்முகத்திறமையாளரான உங்களை எனக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியதே, தாங்களாகவே முன்வந்து 04.02.2012 அன்று எனக்குக் கொடுத்த விருதாகிய  THE VERSATILE BLOGGER AWARD அல்லவா! 

தங்கள் கையால் முதன் முதலாக இந்த 2012 ஆம் ஆண்டு எனக்களிக்கப்பட்ட அந்த விருதுக்கும், அதன்பின் வலைப்பதிவுகள் மூலம், நமக்குள் இந்த மிகக்குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள பாசம் மிகுந்த நட்புக்கும், நான் கடவுளுக்கு மிகவும் நன்றி கூறிக்கொள்கிறேன். 

தங்களின் கலைத்திறன் எனக்கு மிகவும் வியப்பளிப்பதாகவும், குறிப்பாக தஞ்சாவூர் பெயிண்டிங் ஓவியங்கள் என் மனதை மயக்குவதாக உள்ளன. மனமார்ந்த பாராட்டுக்கள் ! ;)))))).

தங்களின் தஞ்சாவூர் ஓவியங்களில் ஏதாவது ஒன்றையாவது, தாங்கள் வரையும் போது கூடவே நானும் அமர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பிராப்தம் எப்படியோ! ] திருமதி விஜி அவர்கள்

[முதலில் பதிவர் மணிராஜ் அவர்களின் பதிவுகளைப் அன்றாடம் படிக்கச்சென்ற நாம் ஒருவருக்கொருவர் வலைப்பதிவினில் அறிமுகமானோம். 


பிறகு நான் வெளியிட்ட ’ஸத் விஷயங்கள்’ பற்றிய பதிவுகளின் மூலம் தங்களைப் பற்றியும், பகவத் க்ருபையால் தங்களுக்குக் கிடைத்துள்ள விசேஷ தெய்வானுக்கிரஹங்கள் மற்றும் தனிச்சிறப்புகள் பற்றியும், எனக்கு அறியச் செய்தீர்கள். 


அதன்பின் ஸ்ரீராமதூதனான ஸ்ரீ ஹனுமனால் நமக்குள் எத்தனை எத்தனையோ மகிழ்ச்சிப் பகிர்வுகள் ஏற்படலானது. ;))))) 


தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பின்னூட்டம் இட்டு அசத்தி வருகிறீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ;))))) ] 

 திருமதி கோவை2தில்லி அவர்கள்

[விருப்பப்படுவோர் அனைவருக்குமே பொதுவாக நான் கடைசியில் கொடுத்துள்ள என் அழைப்பை, தங்களுக்கென்றே ஏற்றுக்கொண்டு பதிவிடத் துணிந்துள்ள, தங்களுக்கு என் பாராட்டுக்கள். நன்றிகள். தாங்கள் தொடரப்போகும் தொடர்பதிவினை படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் ] 

 திருமதி கோமதி அரசு அவர்கள்

[தங்கள் பெயரிலேயே ’அரசு’ உள்ளது.  அசத்தலான தங்களின் பின்னூட்டங்களால் அரசாட்சியே செய்கிறீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. ]  

 திருமதி சாகம்பரி அவர்கள்

[ பல மாதங்களாக என் பதிவுகளில் உங்களைப் பார்க்க முடியாமல் போனதில் எனக்கு மிகவும் மன வருத்தமே. 


இருப்பினும் ’பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், கல்வி’ பற்றிய பதிவு என்பதனாலோ என்னவோ, கொடிமின்னல் போல பளிச்சென்று தோன்றி, இந்த என் தொடர்பதிவுக்கு வருகை தந்து பெருமை சேர்த்து விட்டீர்கள். 


கல்விதுறையில் உயர்ந்த நிலையில் பணியாற்றும் தங்கள் வருகை என்னை மிகவும் மகிழ்வித்தது.


அதுவும் ஒரே நாளில் இந்தப்பதிவின் அனைத்துப் பகுதிகளையும் தொடர்ச்சியாக ஒரே மூச்சில் படித்துள்ளீர்கள். 


மிக்க மகிழ்ச்சி, ரொம்ப சந்தோஷம். ;))))) ]

 திருமதி ஷக்திப்ரபா அவர்கள்

[ என்னை இந்தத் தொடர்பதிவிட தூண்டிவிட்ட ஷக்தியே நீங்கள் அல்லவா! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான் ;)))))))) ]


 திருமதி B.S. ஸ்ரீதர் [ஆச்சி] அவர்கள்


[கடைசி 2 பகுதிகளுக்கு மட்டும் தனியாக மெயில் மூலமாக அன்புடன் அழகாக பல தகவல்களை, உரிமையுடனும் நகைச்சுவையுடனும் தெரிவித்திருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. பிறந்தகம் போய்விட்டு, வெற்றியுடன் சந்தோஷமாகத் திரும்பி வாருங்கள். மனமார்ந்த ஆசிகள் ]***** நான் கல்வி கற்ற “தேசிய கல்லூரி உயர்நிலைப்பள்ளி”யிலேயே வெவ்வேறு காலகட்டங்களில் படித்தவர்களான கீழ்க்கண்ட மூவரும் இறுதிப்பகுதியான பகுதி-7 க்கு வருகை புரிந்து பல நல்ல தகவல்களை மிக உருக்கமாக பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொளகிறேன்.

1) மணக்கால் திரு. M.J. ராமன் அவர்கள்.

இவர் என்னைவிட 5 வயதுகள் பெரியவர். 1961 SSLC யில் திருச்சி ஜில்லா அளவில் முதல் மதிப்பெண் எடுத்து, தங்கப்பதக்கம் பெற்றவரும் கூட. இவர் என் [பெரியம்மாவின்] அம்மாவின் கூடப்பிறந்த அக்காவின் பெண் வழிப்பேரன் என்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்போது இவர் மும்பையில் வசிக்கிறார்.

2) திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்:

இவர் என்னைவிட 5 வயதுகள் சிறியவர். 1971 இல் SSLC அதே பள்ளியில் படித்ததாக எழுதியுள்ளார். 

நான் படித்த பள்ளியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே வளர்ந்துள்ள மிகப்பெரிய அரசமரம்+வேப்பமரம், நம் தேசபிதா மஹாத்மா காந்தி அவர்களின் திருக்கரங்களால் நடப்பட்டவை என்பதைத் தன் பின்னூட்டத்தில் நினைவு கூர்ந்துள்ளார். நானும் இதை பள்ளியில் படிக்கும்போது கேள்விப்பட்டுள்ளேன். ஏனோ பதிவினில் அதை எழுத மறந்து விட்டேன்.  

இந்த திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் திருச்சிக்காரராக இருந்தும், பதிவராக இருந்தும், இதுவரை எனக்கு எந்தவித அறிமுகமும் இல்லாதவராகவே இருந்து வந்துள்ளார். அவரின் முதல் வருகையும் இரண்டு பின்னூட்டங்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தந்தன. மிக்க நன்றி, ஐயா.3) திரு. G. கணேஷ் [தற்சமயம் செளதி அரேபியாவில் பணியாற்றுகிறார்]


இவர் என்னைவிட 21 ஆண்டுகள் சிறியவர். 

என் அளவற்ற அன்பிற்கு இன்றும் பாத்திரமாக உள்ள, என் மூத்த சகோதரி [பெரிய அக்கா] அவர்களுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். 6 Sons + 2 Daughters. 

இந்த G. கணேஷ் என் பெரிய அக்காவுக்கு, ஆறாவது பிரஸவத்தில் பிறந்தவன். பிள்ளைகளில் ஐந்தாவதாகப் பிறந்த பிள்ளை. மிகவும் கெட்டிக்காரன். தாய்மாமனாகிய என்னிடத்தில் அன்று முதல் இன்று வரை மிகவும் பிரியமாக உள்ளவன். 

 

வலைப்பதிவு ”மாத்தியோசி”
பெயர்: G. கணேஷ் 

அவர் எழுதியுள்ள பின்னூட்டம்:


கணேஷ் said...
இந்த பதிவை தொடர்ந்து மிக நுணுக்கமாக படித்தவர்களுக்கு இறுதியில் கண் கலங்காமல் இருந்தால் அது ஆச்சர்யமே!
இப்பொழுது நிறைய பேர் வெவ்வேறு காரணங்களால் கல்லூரி படிப்பு தொடர முடியாதவர்கள், அஞ்சல் வழியில் சேர்ந்து விட்டு பாதியில் விட்டு விடுகின்றனர். 
அவர்களுக்கு இந்த பதிவே ஒரு வழிகாட்டி.

மொத்தத்தில் இந்த வலைப்பூவே ஒரு பல்கலை கழகம்!

 பள்ளியில் படிக்கும் போது நம்மை இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள் அல்லவா! 

“மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்று சொல்லி, இந்தத் தொடர்பதிவின் மூலம் பள்ளி நாட்களுக்குச் சென்று வந்த நாமும் இப்போது எங்காவது இன்பச் சுற்றுலாவுக்குச் சென்று வந்தால் தானே நல்லது! 

வாருங்கள்! நாம் எல்லோரும் சேர்ந்து கேரளாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ’இடுக்கி’ க்குச் செல்வோம் இப்போது .......................  பதிவர்களின் வருகைக்காகவே பச்சையில்
பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளதே!


என் பெயர் ’படையப்பா’ இல்லை
ம..லை..ய..ப்..பா !


சொன்னால் நம்பமாட்டீர்கள்! 

நான் தான் 
“ஆட்டுக்கார அலமேலு”வில் 
நடித்த ராமு!


பச்சை மரம் ஒன்று!
இச்சைக்கிளி ரெண்டு!!


புதிய வானம் .. புதிய பூமி .. 
எங்கும் பனி மழை பொழிகிறது!


என் பெயர் பச்சையம்மா !
இது இறைவன் இட்ட பிச்சையம்மா!!சும்மா பார்த்துவிட்டுப் போனா போதாது, 
போய் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கணும்!
குளிக்க ஆசையுள்ளவங்க 
சீக்கரமா குளிச்சிட்டு வாங்க!

டிபன் ரெடியா இருக்கு!!அன்புடன்
vgk

50 கருத்துகள்:

 1. பாராட்ட வார்த்தை தேடுகிறோம் தங்கள் பதிவுலக சாதனையை!

  பதிலளிநீக்கு
 2. பிரமாதமான இடுகை. இடுக்கி இயற்கை எழில் கொஞ்சுகிறதே....வாய்ப்பு கிடைத்தால் சென்று வர வேண்டும் என்று தோன்றுகிறது.

  விருந்து வேறு தடபுடலாக இருக்கு சார். காபியை மட்டும் விட்டு விட்டு மீதியெல்லாத்தையும் எடுத்துகிறேன்.
  காபி இதுவரை நான் குடித்ததில்லை....

  பதிலளிநீக்கு
 3. ”மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்று சாதனை படைத்த பயனுள்ள அருமையான மலரும் நினைவுகளைப் பகிர்ந்து அதற்கான நன்றி அறிவிப்பு விழாவும் விருந்துடன் அளித்துக் களிக்கச்செய்ததற்கு மனம் நிறைந்த இனிய பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றியும்..

  பதிலளிநீக்கு
 4. “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்று சொல்லி, இந்தத் தொடர்பதிவின் மூலம் பள்ளி நாட்களுக்குச் சென்று வந்த நாமும் இப்போது எங்காவது இன்பச் சுற்றுலாவுக்குச் சென்று வந்தால் தானே நல்லது!

  அருமையாக புத்தம்புது பச்சை எழில் நிறைந்த பூமியில் சுற்றுலாவுடன் மரம் வளர்க்கவேண்டும் என்கிற விழிப்புணர்வும் விருந்தோடு அமிர்தமாகப் பொழிந்த அருமையான பகிர்வுகளும் , படங்களுக்கும் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. இடுக்கியை இடுகையில்
  இடுக்கிக் கொண்டுவந்து
  மிடுக்காய் பகிர்ந்திருக்கிறீர்கள்..
  இனிய பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 6. பள்ளி அனுபவத்தில் இன்ப சுற்றுலா இல்லாமலா!

  இடுக்கி இன்பசுற்றுலாவிற்கு ஏற்ற இடம் தான்.

  என் பெயர் விளக்கத்திற்கு நன்றி.

  பிரமாதமான விருந்து தான் ஆதி போல் காப்பியை தவிர மற்றவைகளை எடுத்துக் கொண்டேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் வை,கோ

  பள்ளை அனுபவம் முடிந்த கோயோடு இன்பச் சுற்றுலா - இய்றகை அழகு கொஞ்சும் இடுக்க்கிகு அழைத்துச் செல்கிறீர்கள் - நன்றி - படங்கள் அத்தனையும் அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. இடுக்கி பற்றிய இடுகை அற்புதம்
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 9. சிறு வயது நினைப்பில் தோய்ந்த பள்ளிக் கால நினைவுகளை, ஒரு சுற்றுலாவுடன் நிறைவு செய்யும் எண்ணம் உங்கள் மனத்தில் தோன்றியது ரொம்பவும் அருமை! சொகுசு பஸ்ஸில் கூட்டிச் சென்று, இயற்கையின் பச்சைக் கம்பள விரிப்பில் இளைப்பாற வைத்து, ஒன்று பாக்கியில்லாமல் என்று அறுசுவை விருந்தை அள்ளிப் பருக வைத்து..
  உங்கள் மனம் போல் எல்லாமே நிறைந்த அனுபவம் ஆகிவிட்டது.

  மிக்க நன்றி, கோபு சார்!

  பதிலளிநீக்கு
 10. ரொம்ப நேரம் செலவிட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. பஸ், கட்டுச்சோறு எல்லாம் ரெடியா வெச்சிருக்கீங்க. இன்பச்சுற்றுலாவுக்கு நாங்களும் ரெடி :-)

  பதிலளிநீக்கு
 12. அப்பப்பா..நன்றி சொல்வதில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது.எவ்வளவு அருமையாக நினைவு கூர்ந்து உள்ளீர்கள்..

  பின்னூட்டம் இட்டவர்களை எல்லால் இடுக்கி சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதுமட்டுமில்லாமல்,அறுசுவை உணவு படைத்து அசத்தி வீட்டிர்கள்.

  நாளுக்கு நாள் பதிவில் புதுமை புகுத்தும் வி ஜி கே சாருக்கு ஜே.

  பதிலளிநீக்கு
 13. VGK அவர்களுக்கு வணக்கம்! என்னைப் பற்றியும் தங்கள் வலைப் பதிவில் குறிப்பிட்டு இருப்பது தங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. வலைப் பதிவை தொடங்கிய ஆரம்பத்தில், நான் எனது Profile – இல் எனது ஊர் திருச்சி என்பதைக் கொடுக்கவே இல்லை. அண்மையில்தான் கொடுத்தேன். இதற்கு முன்னர் இரண்டு தடவை உங்கள் பழைய பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுத்து இருக்கிறேன். உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி! இதற்குக் காரணமான திருச்சி, தேசிய உயர்நிலப் பள்ளிக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 14. VGK அவர்களுக்கு வணக்கம்! இடுக்கி பற்றிய வண்ணப் படங்கள் அருமை! எனக்குப் பிடித்த அத்தனை இனிப்பு வகைகளும் நாவில் எச்சில் ஊறச் செய்து விட்டன.

  பதிலளிநீக்கு
 15. அது டிபன் இல்லை! பல்சுவை விருந்து!

  பதிலளிநீக்கு
 16. இன்ப சுற்றுலாவும் விருந்தும் அமர்க்களமாக ஆனந்தமாக இருந்தது நன்றி

  பதிலளிநீக்கு
 17. என்னைப் பற்றியும் தங்கள் வலைப் பதிவில் குறிப்பிட்டு இருப்பது தங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. மிக்க மகிழ்ச்சி! இதற்குக் காரணமான திருச்சி தேசிய உயர்நிலப் பள்ளிக்கு மிக்க நன்றி!சுருக்கமாக சொன்னால் அந்த காலம் ஒரு பொற்காலம்.முக்கியமாக ஸ்ரீ நாகரத்ன சர்மா அவர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்த வேதம், ஸ்தோத்ரங்கள் என் வாழ்க்கையில் கிடைத்த அற்புதமான பரிசு.
  அன்புடன் எம்.ஜே.ராமன்.

  பதிலளிநீக்கு
 18. beautiful!
  என்னவோ இடுக்கினாரே காணோமேனு பாத்துக்கிட்டே வந்தா.. அசத்தும் படங்கள். போனதே இல்லை சார்.

  பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு - நீங்க தான் முதல்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. பள்ளிக் காலங்களின் மலரும் நினைவைத் தொடர்ந்து பசுமை சுற்றுலா குளுமையோ குளுமை. என்னைப் போன்ற சாப்ட்டு பிரியர்களுக்கு நாக்கில் எச்சில் ஊற காரணமும் வேண்டுமோ? கண்ணுக்கும் மனதுக்கும் நல்ல விருந்தளித்த Gopu sir -க்கு , மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. நேர இடுக்கினில் இடுக்கியை பற்றிய இடுகையை படித்தேன்.

  இடையராத இன்பம் .

  இருக்கின்ற இட்டிலியை இடுக்கியை பிடித்து இரு அடுக்கினில் அடுக்கி
  ,இடுக்கினில் இலையையும் இடுக்கி ,

  இனிக்கப் பேசும் இருபத்து பேர்களை பேரூர்தியில் அமர்த்தி ,

  இஷ்டப்படி இருக்கையை மடக்கி,

  இருபத்து கிலோ மீட்டரில் ஊர்தியை இயக்கி,

  இடுக்கியின் இயற்கையை இயன்ற மட்டும் ரசித்து

  இடையினில் இளைப்பாறி இட்டிலியை விழுங்கி ,

  வடையையும் கடித்த கையோடு

  பொங்கும் காபியை இரு மடக்கில் குடித்தால்

  இறையுலகம் காண்போமே !!

  பதிலளிநீக்கு
 21. மைசூர் பாகுவிலிருந்து ஐஸ்க்ரிம் வரை நீங்கள் அனுப்பிய எதுவும் இங்கு இன்னும் வந்து சேரவில்லை.ஹூம்ம்ம்ம்ம்ம்ம்

  தங்களின் நன்றிக்கு எந்து நன்றிகள்

  பதிலளிநீக்கு
 22. ஹையா! எனக்கு தோசை....fruit salad...icecream...ரொம்ப நாள் கழிச்சு தோசை சாப்பிட்டா கூட சுடச் சுட fresh ஆக இருக்கே!

  பதிலளிநீக்கு
 23. எப்போதாவது வரும் மின்சாரம், Dash Board கடந்த பத்து நாட்களாக திறக்கவில்லை - எனவே நிறைய பதிவுகள் படிக்க முடியவில்லை. மின்னஞ்சலில் வரும் இணைப்புகளை மட்டும் படிக்க முடிகிறது. நிறைய பதிவுகளில் மின்னஞ்சல் முகவரி பதிவதற்கான வசதி இருப்பதில்லை. அருமையான பதிவுகள். மனப்பூர்வ வாழ்த்துகள் ஐயா.
  நான் 1965 வருட SSLC யுடன் படிப்பு முடிந்தது. கணக்கில் 100, புக் கீப்பிங்கில், Secretarial Practice இல் பள்ளியில் முதல் இடம். படிக்க வைக்க வசதியில்லை. மே 28இல் வேலைக்கு சென்று விட்டேன். மாத சம்பளம் 30 ரூபாய்.

  பதிலளிநீக்கு
 24. VGK சார் ,
  மிக அருமையான தொடருக்கு சிகரம் வைத்தாற்போல இடுக்கி சுற்றுலா அட்டகாசம்...கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி...(அதுவும் நல்ல மார்ச் வெயில் வேளையில்...)
  பிக்னிக் விருந்து சூப்பர் ...
  என்னைப்பற்றி இவ்வளவு சிலாகித்து எழுதியதைப் படித்து ஆச்சிரியப்பட்டேன்...
  நன்றி ...

  பதிலளிநீக்கு
 25. Sir, This is the 6th or 7th time I am coming here to read the post and read it also.. Each and everytime going without posting anything.
  I felt as if I was gone to the excurtion. Then the eatables. Wow
  Navil neer uravaithuvitterkal.
  Pallikku pin churulla......
  Rasithu padithen sir.
  viji

  பதிலளிநீக்கு
 26. இந்த என் நன்றி அறிவிப்பு பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, சுற்றுலாவில் கலந்துகொண்டு சிறப்பித்த உங்கள் அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 27. இடிக்கிக்கு அத்தனை பதிவாளர்களையும் அழைத்து சென்று, பல்சுவை விருந்து கொடுத்துள்ளீர்கள்! அத்தனை பேரும் ரொம்பவம் கொடுத்து வைத்தவர்கள்தான்!

  இடிக்கியின் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளுக்கு உங்கள் இரண்டு வரி காமெண்டுகள் அற்புதம்!

  நல்லகாலம் தாமதமாக வந்தாலும், தவற விடவில்லை நான்!

  பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ranjani Narayanan December 19, 2012 12:07 AM
   //இடிக்கிக்கு அத்தனை பதிவாளர்களையும் அழைத்து சென்று, பல்சுவை விருந்து கொடுத்துள்ளீர்கள்! அத்தனை பேரும் ரொம்பவம் கொடுத்து வைத்தவர்கள்தான்!//

   வாருங்கள் திருமதி ரஞ்ஜினி மேடம். வணக்கம்.

   மிகப்பிரபலமான தாங்கள் தங்களின் BUSY SCHEDULE லினால், எங்களுடன் சேர்ந்து சொகுசுப்பேருந்தில் வரமால், PLANE பிடித்துத்தனியாக வந்துள்ளது எங்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது. வாருங்கள் ... உங்களை இங்கு இடுக்கியில் பார்த்ததில் சந்தோஷம். உங்களுக்காகவே நாங்கள் எல்லோரும் வெயிட்டிங் ....

   //இடிக்கியின் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளுக்கு உங்கள் இரண்டு வரி காமெண்டுகள் அற்புதம்!//

   ரொம்பவும் சந்தோஷம் மேடம்.

   //நல்லகாலம் தாமதமாக வந்தாலும், தவற விடவில்லை நான்!//

   தவறாது வருகை தந்து சிறப்பித்துள்ள தங்களுக்கு என் தலையாய நன்றிகள்.

   //பாராட்டுக்கள்!//

   நன்றி, நன்றி, நன்றி.

   அன்புடன்
   VGK

   நீக்கு
 28. சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர் அது எப்படி என்ன மறந்தீங்க. கோவமா வருதே. அந்தக்கோவதுலேயே உங்க இடுக்கி சுற்றுலா படிச்சேன். படங்களும் பகிர்வும் நல்லா இருந்துச்சு. எனக்கு சரியா ரசிக்க முடியல்லே. கோவம், வருத்தம் எல்லாம் ஆட்டிப்படைக்குது.எனக்கு பித்த நுரை பொங்கும் காபி, ஸ்வீட்ட்ஸ் எல்லாம் இருந்தும் கூட என்னால ருசிக்கமுடியல்லே.தொண்டைல துக்கம் பந்துபோல அடைச்சுட்டு இருந்துச்சிஇப்படி பின்னூட்டம் போட்டவர்களையும் பெருமைப்படுத்தியது உங்களால மட்டும் தான் முடியும். பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் April 3, 2013 at 10:15 PM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

   //சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர் அது எப்படி என்ன மறந்தீங்க.//

   அது சமயம் [17.03.2012] நீங்க பிறக்கவே இல்லையாக்கும். இல்லாவிட்டால் மறப்பேனா?

   //கோவமா வருதே. அந்தக்கோவதுலேயே உங்க இடுக்கி சுற்றுலா படிச்சேன்.//

   கோச்சுக்காதீங்கோ. என் பேத்தியிடம் ஒரு நாள், அவங்க அப்பா அம்மாவின் கல்யாண போட்டோ ஆல்பத்தைக்காட்டினேன். அவள் உங்களைப்போலவே கோச்சுக்கிட்டா. அதாவ்து அந்த ஆல்பத்தில் ஒரு இடத்தில் கூட அவள் போட்டோ இல்லவே இல்லையாம். அதனால் கோச்சுக்கிட்டா. இது எப்படி இருக்கு?
   அதுபோலவே இருக்கு நீங்க சொல்வதும் ;)))))

   //படங்களும் பகிர்வும் நல்லா இருந்துச்சு. எனக்கு சரியா ரசிக்க முடியல்லே. கோவம், வருத்தம் எல்லாம் ஆட்டிப்படைக்குது.//

   கவலையே படாதீங்கோ. என்னுடைய ஒவ்வொரு பழைய பதிவுகளாகப்படிச்சுக்கிட்டே வரீங்கோ. அப்படியே ஒவ்வொன்றுக்கும் கருத்து சொல்லிக்கிட்டேயும் வரீங்கோ. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   என்றைக்காவது ஒரு நாள் என் பதிவுகள் அனைத்துக்கும் கருத்தளித்துள்ள ஒரே நபர் “பூந்தளிர்” மட்டுமே என்ற பெருமையை அடையப்போகிறீர்கள். அன்று நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீங்களே பாருங்கோ!

   //எனக்கு பித்த நுரை பொங்கும் காபி, ஸ்வீட்ட்ஸ் எல்லாம் இருந்தும் கூட என்னால ருசிக்கமுடியல்லே.தொண்டைல துக்கம் பந்துபோல அடைச்சுட்டு இருந்துச்சி //

   இவர்களுக்கெல்லாம் படத்தில்தான் SKC தரப்பட்டுள்ளது. உங்களுக்கு மட்டும் நிஜமாகவே மிகப்பெரிய TREAT தருவேனாக்கும் . அதனல் துக்கப்படாதீங்கோ, ப்ளீஸ்.

   //இப்படி பின்னூட்டம் போட்டவர்களையும் பெருமைப்படுத்தியது உங்களால மட்டும் தான் முடியும். பகிர்வுக்கு நன்றி//

   தங்களின் அன்பான வருகைக்கும், உணர்ச்சி பூர்வமான அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், பூந்தளிர்.

   Thank you ..... Thanks a Lot.

   நீக்கு
 29. அன்பின் வை.கோ - மறுமொழி இங்கு போட்டேனே -சில விநாடிகள் முன்னால் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிற்தோ ? பரவாய் இல்லை - பொறுத்திருக்கிறேன். வெளியிடுக. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) July 5, 2014 at 11:23 AM

   வாருங்கள் என் அன்பின் திரு சீனா ஐயா அவர்களே !
   வணக்கம்.

   //அன்பின் வை.கோ - மறுமொழி இங்கு போட்டேனே -சில விநாடிகள் முன்னால் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிற்தோ ? பரவாய் இல்லை - பொறுத்திருக்கிறேன். வெளியிடுக. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   ஏற்கனவே இதில் தங்களின் மேலான கருத்துக்களை 17.03.2012 அன்றே பதிவு செய்துள்ளீர்கள். இப்போது ஏதும் புதிய கருத்துக்கள் எனக்கு வரவில்லையே ஐயா. மட்டறுத்தலுக்காகவும் ஏதும் காத்திருக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன், ஐயா.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 30. அன்பின் வை.கோ - 17.03.2012 அன்று கருத்துகளை பதிவு செய்திருக்கிறேன் என நினைவூட்டியதற்கு நன்றி - அதில் தட்டச்சுப் பிழைகள் அதிகமிருப்பதினால் சரி செய்து மறுபடி இங்கு வெளியிட்டேன். அம்மறுமொழி என்ன ஆயிற்று - தெரியவில்லை - கணினி என்னுடன் டூ விட்டு விட்டு - சோதிக்கிறது. பரவாய் இல்லை

  பிழை திருத்தி இங்கு வெளியிடுகிறேன்.


  அன்பின் வை,கோ

  பள்ளி அனுபவம் முடிந்த கையோடு இன்பச் சுற்றுலா - இயற்கை அழகு கொஞ்சும் இடுக்கிக்கு அழைத்துச் செல்கிறீர்கள் - நன்றி - படங்கள் அத்தனையும் அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) July 5, 2014 at 11:47 AM

   அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா.

   //அன்பின் வை.கோ - 17.03.2012 அன்று கருத்துகளை பதிவு செய்திருக்கிறேன் என நினைவூட்டியதற்கு நன்றி - அதில் தட்டச்சுப் பிழைகள் அதிகமிருப்பதினால் சரி செய்து மறுபடி இங்கு வெளியிட்டேன். அம்மறுமொழி என்ன ஆயிற்று - தெரியவில்லை - கணினி என்னுடன் டூ விட்டு விட்டு - சோதிக்கிறது. பரவாய் இல்லை.//

   கணினி இதுபோல நம்மை அடிக்கடி சோதித்துத்தான் வருகிறது ஐயா. உண்மை தான். மறுப்பதற்கு இல்லை.

   அதனால் இப்போதெல்லாம் பிறருக்குப் பின்னூட்டங்கள் கொடுப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டுள்ளேன்.

   அப்படியே ஆத்மார்த்தமாக சிலருக்கு மட்டும் கொடுக்கும்போது தாமதம் ஆனாலும் பரவாயில்லை என தனியாக அவற்றை [என் கருத்துக்களை] ஓரிடத்தில் தட்டச்சு செய்து, சேமித்து வைத்துக்கொண்டே, பிறகு அனுப்பி வைக்கிறேன். மீண்டும் அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவை மிகவும் உபயோகமாக உள்ளன.

   //பிழை திருத்தி இங்கு வெளியிடுகிறேன்.//

   அடாடா, எவ்வளவு பிரியமும் சிரத்தையும் என் மீது. வியந்து போகிறேன், ஐயா. ;)

   //அன்பின் வை,கோ

   பள்ளி அனுபவம் முடிந்த கையோடு இன்பச் சுற்றுலா - இயற்கை அழகு கொஞ்சும் இடுக்கிக்கு அழைத்துச் செல்கிறீர்கள் - நன்றி - படங்கள் அத்தனையும் அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.//

   நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பிறகு, தங்களின் அன்பான வருகை, அதுவும் என் மிகப்பழைய பதிவு ஒன்றுக்கு ;))))) அசந்து போனேன்.

   மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி.

   தற்சமயம் வாராவாரம் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ யில் பரிசு பெற்றுவருபவர்களையும், முடிந்தால் என் தளத்திற்கு வருகை தந்து பாராட்டுங்கள், ஐயா. தங்களின் வருகையும் வாழ்த்துகளும் அவர்களையும் மேலும் உற்சாகப்படுத்தக் கூடும் ஐயா.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 31. அன்பின் வை.கோ - தொடர்பதிவுகளில் முதல் பதிவினிற்கு மட்டுமே மறுமொழி - அதுவும் பதினொரு மறுமொழி இட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள் - இரண்டாவது பதிவினிலும் மறுமொழி 11.03.2012 அன்று இட்டிருக்கிறேன். தங்களின் கவனத்திற்கு வர வில்லை போலும். பரவாய் இல்லை - மீதமிருக்கும் மற்ற பதிவுகளையும் படித்து இரசித்து மகிழ்ந்து மறுமொழிகள் இட்டு விடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 32. cheena (சீனா) July 5, 2014 at 12:10 PM

  அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம். மீண்டும் வருகைக்கு மீண்டும் நன்றிகள்.

  //அன்பின் வை.கோ - தொடர்பதிவுகளில் முதல் பதிவினிற்கு மட்டுமே மறுமொழி - அதுவும் பதினொரு மறுமொழி இட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள் - இரண்டாவது பதிவினிலும் மறுமொழி 11.03.2012 அன்று இட்டிருக்கிறேன். தங்களின் கவனத்திற்கு வர வில்லை போலும். பரவாய் இல்லை - மீதமிருக்கும் மற்ற பதிவுகளையும் படித்து இரசித்து மகிழ்ந்து மறுமொழிகள் இட்டு விடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

  ஐயா தாங்கள் அனைத்துப்பகுதிகளுக்கும் வருகை தந்து நிறைய கருத்துக்கள் அளித்துள்ளீர்கள். 100% Attendance. அதனால் மட்டுமே தங்களை சிறப்பித்து நான் இந்தப்பதிவினில் தங்கள் பெயரினை முதன்மைப்படுத்தி கொண்டு வந்துள்ளேன்.

  நான் எதையும் எப்போதும் மறப்பவனே அல்ல. ஒவ்வொருவரின் ஒவ்வொரு கருத்துக்களையும் பொக்கிஷமாக நினைத்து மகிழ்பவன் மட்டுமே.

  என் இந்தப்பதிவினில் உள்ள கீழ்க்கண்ட வரிகளை தயவுசெய்து மிண்டும் படித்துப்பாருங்கள், ஐயா.

  oooooooooooo

  ஏழு நாட்களுக்கும் தொடர்ச்சியாக எல்லாப் பகுதிகளுக்கும் வருகை தந்து சிறப்பித்த கீழ்க்கணட ஒரு சிலருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்:


  அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்

  [பகுதி-1 க்கு மட்டுமே, மிகவும் அதிசயமாக 11 முறைகள் வந்து பின்னூட்டமிட்டு அசத்தியிருந்தீர்கள், ஐயா!;)))))))))))


  Ref: http://gopu1949.blogspot.in/2012/03/1.html ] மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஐயா.]

  oooooooooooo

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 33. அன்பின் வை.கோ - தங்களீன் மறுமொழி கண்டேன் - விளக்கத்திற்கு நன்றி - எனது தவறுதலான புரிதலுணர்வின் தாக்கமே என்னுடைய மறுமொழியும் தவறாக வந்து விட்டது. வருந்துகிறேன்.

  அன்பின் வை.கோ - நூற்றுக்கு நூறு - அனைத்துப் பதிவுகளையும் படித்து இரசித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இட்டு வந்தேன் - இச்செயலையும் தாங்கள் பெருந்தன்மையுடன் பாராட்டி இப்பதிவினில் முதனமைப் படுத்தி இருக்கிறீர்கள்

  இனிமேல் சற்று அதிக கவனம் செலுத்துகிறேன்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) July 5, 2014 at 1:58 PM
   அன்பின் வை.கோ - தங்களீன் மறுமொழி கண்டேன் - விளக்கத்திற்கு நன்றி - எனது தவறுதலான புரிதலுணர்வின் தாக்கமே என்னுடைய மறுமொழியும் தவறாக வந்து விட்டது. வருந்துகிறேன்.

   அன்பின் வை.கோ - நூற்றுக்கு நூறு - அனைத்துப் பதிவுகளையும் படித்து இரசித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இட்டு வந்தேன் - இச்செயலையும் தாங்கள் பெருந்தன்மையுடன் பாராட்டி இப்பதிவினில் முதனமைப் படுத்தி இருக்கிறீர்கள்

   இனிமேல் சற்று அதிக கவனம் செலுத்துகிறேன்.

   நல்வாழ்த்துகள்
   நட்புடன் சீனா //

   அதனால் பரவாயில்லை அன்பின் திரு சீனா ஐயா அவர்களே. தங்களுக்கு இப்போதெல்லாம் பல வேலைகள் என தங்களின் மெயில் மூலம் அறிந்து கொண்டேன். இதுபோன்ற தவறுகள் சகஜம் தானே.

   நேற்றுகூட தங்களை நான் நினைத்துக்கொண்டேன். இதோ இந்தப்பதிவுக்கு நான் அளித்த பின்னூட்டங்களில்

   http://jaghamani.blogspot.com/2014/07/blog-post_4.html

   முடிந்தால் பாருங்கள். நன்றியுடன் கோபு [VGK]

   நீக்கு
 34. பதில்கள்
  1. பூந்தளிர்June 5, 2015 at 11:19 AM
   (((( !!!

   WHY ??????

   மேலே நான் என் பதிலில் என்ன சொல்லியிருக்கிறேன்னு பாருங்கோ. இதோ ரிபீட் செய்துள்ளேன்:

   //என்றைக்காவது ஒரு நாள் என் பதிவுகள் அனைத்துக்கும் கருத்தளித்துள்ள ஒரே நபர் “பூந்தளிர்” மட்டுமே என்ற பெருமையை அடையப்போகிறீர்கள். அன்று நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீங்களே பாருங்கோ! //

   இப்போ சந்தோஷமா ? மீண்டும் ஸ்மைலியை ஒழுங்காப் போட்டு அனுப்புங்கோ :) ப்ளீஸ்

   நீக்கு
  2. பூந்தளிர்June 5, 2015 at 11:19 AM
   (((( !!!

   WHY ??????

   மேலே நான் என் பதிலில் என்ன சொல்லியிருக்கிறேன்னு பாருங்கோ. இதோ ரிபீட் செய்துள்ளேன்:

   //என்றைக்காவது ஒரு நாள் என் பதிவுகள் அனைத்துக்கும் கருத்தளித்துள்ள ஒரே நபர் “பூந்தளிர்” மட்டுமே என்ற பெருமையை அடையப்போகிறீர்கள். அன்று நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீங்களே பாருங்கோ! //

   இப்போ சந்தோஷமா ? மீண்டும் ஸ்மைலியை ஒழுங்காப் போட்டு அனுப்புங்கோ :) ப்ளீஸ்

   நீக்கு
 35. ’இடுக்கி’ புகைப்படங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சி.

  அந்தத் தின்பண்டங்களின் புகைப்படங்கள்.
  ஹி,ஹி,ஹி, நாக்கு ஊறுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya June 18, 2015 at 3:51 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா. :)

   //’இடுக்கி’ புகைப்படங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சி.
   அந்தத் தின்பண்டங்களின் புகைப்படங்கள். ஹி,ஹி,ஹி, நாக்கு ஊறுது.//

   தங்களின் அன்பான வருகைக்கும், குளிர்ச்சியான கருத்துக்களுக்கும், நாக்கு ஊறும் ஹி,ஹி,ஹி க்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 36. குளு குளுன்னு இடுக்கில பச்சையம்மாவைப் பார்த்து ஏகத்துக்கு பாராட்டிட்டு 'பொறந்தா இப்படிப் பட்ட இடத்துல மரமாப் பொறக்கணும்' அப்படியே நின்னுகிட்டு இந்த பச்சையம்மாவை ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்னு சொல்லாமல் நினைச்சுக்கிட்டே வந்து பார்த்தா, இப்படிப் பார்த்ததுக்கெல்லாமா செம ட்ரீட் தருவாங்க.....இங்க பாருய்யா....! என்று ஆச்சரியத்தொடே ஒண்ணு ஒண்ணா களேபரம் பண்ணிட்டு ஏப்பம் விட்டுட்டு திருப்பிப் பார்த்தா.....அய்யா ஐஸ்கிரீமோட நிக்கிறாரு....! நமக்கு வேண்டாம்பா.....நான் இந்த விளையாட்டுக்கு வரலே.....இடுக்கியப் பார்த்தமா வந்தமான்னு இருக்கணும்...இப்படி சக்கரை வியாதிக்கு விருந்து வைக்கக் கூடாதுன்னு...எடுத்தேன் பாருங்க ஒரு 'ஜூட்'......இதோ இன்னும் மூச்சு வாங்குது...! ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது...இடுக்கி ஸோ இம்ப்ரெஸிவ்..! இதயத்தை இடுக்கி போட்டு இழுத்துகிடுச்சி..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெயஸ்ரீ ஷங்கர் July 4, 2015 at 4:21 PM

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. :)

   //குளு குளுன்னு இடுக்கில பச்சையம்மாவைப் பார்த்து ஏகத்துக்கு பாராட்டிட்டு 'பொறந்தா இப்படிப் பட்ட இடத்துல மரமாப் பொறக்கணும்' அப்படியே நின்னுகிட்டு இந்த பச்சையம்மாவை ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்னு சொல்லாமல் நினைச்சுக்கிட்டே வந்து பார்த்தா, இப்படிப் பார்த்ததுக்கெல்லாமா செம ட்ரீட் தருவாங்க.....இங்க பாருய்யா....! என்று ஆச்சரியத்தொடே ஒண்ணு ஒண்ணா களேபரம் பண்ணிட்டு ஏப்பம் விட்டுட்டு திருப்பிப் பார்த்தா.....அய்யா ஐஸ்கிரீமோட நிக்கிறாரு....! நமக்கு வேண்டாம்பா.....நான் இந்த விளையாட்டுக்கு வரலே.....இடுக்கியப் பார்த்தமா வந்தமான்னு இருக்கணும்...இப்படி சக்கரை வியாதிக்கு விருந்து வைக்கக் கூடாதுன்னு...எடுத்தேன் பாருங்க ஒரு 'ஜூட்'......இதோ இன்னும் மூச்சு வாங்குது...! ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது...இடுக்கி ஸோ இம்ப்ரெஸிவ்..! இதயத்தை இடுக்கி போட்டு இழுத்துகிடுச்சி..!//

   தங்களின் அன்பான வருகைக்கும், இதயத்தை இடுக்கி போட்டு இழுத்துவிடும், விரிவான இம்ப்ரெஸிவ் ஆன பல நகைச்சுவைக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றீங்க !

   //எடுத்தேன் பாருங்க ஒரு 'ஜூட்'......இதோ இன்னும் மூச்சு வாங்குது...! //

   அடப்பாவமே ! என் இந்தப்பதிவினால் உங்களை மூச்சு வாங்க ஓட விட்டுட்டேனா. வெரி வெரி ஸாரிங்கோ :)

   நீக்கு
 37. குருஜி படங்கலா சூப்பரோ சூப்பரு ஒரொரு படம் பத்தியும் தனிதனியா கமண்டு போடபணும்போலகீது. எனக்கு இதுபோலலா சுற்றுலா போயி இயற்கய ரசிக்க ரொம்ப இஸ்டம். எட்டப்பு படிக்கேல பக்கத்தால இருக்குர கொடுமுடின்னு ஒரு ஊருக்கு பிக்னிக் கூட்டி போனாக. பெரிய ஆறு நெறய தண்ணி ஓடுது. ஆம்பும பசங்கலா நீச்ச அடிச்சுகிட்டு குளிச்சானுவா. பொட்ட புள்ளலா வேடிக்க பாத்துகிட்டு கால் மட்டும் நனைச்சோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 7-8 வருடங்கள் முன்பே கொடுமுடிக்குப்போய்ட்டு வந்தீங்களா? அதுவும் நல்லதோர் இடம்தான் என்று கேள்விப்பட்டுள்ளேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   நீக்கு
 38. வருகை தந்தவர்களுக்கும் நன்றி சொன்ன விதம் அழகு. இடுக்கி சுற்றுலா படங்களும் விழிப்புணர்வு பகிர்வும் சிறப்பு பள்ளி நாட்களில் சுற்றுலா கூட்டிப்போனால் அடுத்த நாளே அது பற்றிய கட்டுரை எழுத ஸ்கூலில் சொல்லி விடுவார்கள் கட்டுரை எழுத பயந்தே சிலபேர் சுற்றுலாவுக்கே வரமாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 39. படங்களே இன்பச் சுற்றுலா சென்று வந்த உணர்வை ஏற்படுத்துகின்றன...அழகு!!

  பதிலளிநீக்கு