ஒரு தம்பதிக்கு திருமணம் ஆகி பதினோரு ஆண்டுகளுக்குப்பிறகு ஓர் அழகான குழந்தை பிறந்தது. அவர்கள் இருவரும் மனமொத்த பிரியமான தம்பதி. அவர்களுக்கு அதிசயமாகப் பிறந்த அந்த குழந்தைச் செல்வத்தை செல்லமாக வளர்த்து மகிழ்ந்தனர்.
ஒருநாள், கணவர் மிக அவசரமாக தன் அலுவலகம் போகத்தயாரான நிலையில், வீட்டின் ஓரமாக மருந்து பாட்டில் ஒன்று மூடிதிறந்த நிலையில் இருக்கக் கண்டார்.
தான் அலுவலகம் புறப்பட ஏற்கனவே தாமதமாகி விட்டதால் தன் மனைவியிடம், அந்த பாட்டிலை நன்றாக மூடி, அலமாரியில் எங்காவது சற்று உயரமான இடத்தில் வைத்து விடுமாறு சொல்லிச்சென்றார்.
சமயலறையில் ஏற்கனவே பல்வேறு வேலைகளில் மூழ்கியிருந்த மனைவி தன் கணவர் சொன்னதை சுத்தமாக மறந்தே போய்விட்டாள்.
அந்த மருந்து பாட்டிலைக்கண்ட அவர்களின் இரண்டே வயதானக் குழந்தை அதன் நிறத்திலும் மணத்திலும் மயங்கி அதை அப்படியே முழுவதுமாகக் குடித்து விட்டது.
அந்த மருந்து பாட்டிலைக்கண்ட அவர்களின் இரண்டே வயதானக் குழந்தை அதன் நிறத்திலும் மணத்திலும் மயங்கி அதை அப்படியே முழுவதுமாகக் குடித்து விட்டது.
அந்த மருந்து, பெரியவர்கள் மட்டுமே அதுவும் மிகச்சிறிதளவே, சாப்பிட வேண்டியதொன்றாகையால், அதை முழுவதுமாக சாப்பிட்டுவிட்ட அந்தக் குழந்தைக்கு அதுவே விஷமாகி விட்டது.
மயக்கம் போட்ட குழந்தையை தாய் மிக வேகமாக ஆஸ்பத்தரிக்குத் தூக்கிச்சென்றும் அதை பிழைக்க வைக்க முடியாமல் போய்விட்டது.
மயக்கம் போட்ட குழந்தையை தாய் மிக வேகமாக ஆஸ்பத்தரிக்குத் தூக்கிச்சென்றும் அதை பிழைக்க வைக்க முடியாமல் போய்விட்டது.
இந்த துரதிஷ்ட சம்பவத்தால் அந்தத்தாய் கலங்கி ஸ்தம்பித்துப்போய் விட்டாள். தன் கணவர் முகத்தில் எவ்வாறு விழிப்பது? எனக் கவலையும் கொண்டாள்.
விஷயத்தைக் கேள்விப்பட்டு மிகவும் கலக்கத்துடனும் குழப்பத்துடனும் மருத்துவமனையை அடைந்த அவள் கணவர் தன் குழந்தை இறந்து கிடப்பதைப் பார்க்கிறார். மனம் பூராவும் அவருக்கும் மிகுந்த வேதனைகள் தான்.
மனைவியை நோக்கிய அவர் நாலே நாலு வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார். அந்த நாலே நாலு வார்த்தைகள் என்னவாக இருக்க முடியும்? சற்றே யோசியுங்கள்.
தன்னைக் கட்டிக்கொண்டு தன் மார்பின் மீது சாய்ந்து அழுது புலம்பும் தன் மனைவியின் கூந்தலை வருடிவிட்டபடி ”நான் இப்போதும் உன்னை நேசிக்கிறேன்” என்கிறார் அந்தக்கணவர்.
முற்றிலும் எதிர்பாராதவிதமாக அந்தக்கணவர் அப்படிச் சொல்லிய வார்த்தைகளும், அவளிடம் அவர் அவ்வாறு அப்போது நடந்து கொண்டதும் மிகவும் விசித்திரமாகவே தான், இதைப்படிக்கும் நம் எல்லோருக்குமே இப்போது உணர முடியும்.
இதில் உள்ள மற்ற விஷயங்களை அறிவுபூர்வமாக சற்றே உற்று நோக்கி உட்புகுந்து சிந்திப்போமா !
குழந்தையோ இறந்து விட்டது. இனி யார் என்ன செய்தாலும் அதனை உயிர்பிக்க முடியாது என்பது நன்கு தெரிந்து விட்டது. அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில், அந்தத்தாயின் மீது மட்டும் பழிபோடுவதோ, குற்றம் சுமத்துவதோ சரியில்லை என்பதை அந்தக் கணவர் அந்த நேரத்தில் மிகவும் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்.
அந்தக்கணவரே, தான் அலுவகம் செல்லுவதற்கு முன்பு, தானே அந்த பாட்டில் மருந்தை மூடி வேறு எங்காவது உயரமான இடத்தில் பத்திரப்படுத்தி விட்டுச் சென்றிருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தாரேயானால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கவே வாய்ப்பு இல்லை.
தன் ஒரே குழந்தையை இழந்துவிட்டத் துயரம் அந்தத் தாய்க்கும் இருக்குமல்லவா! அவள் மீதே பழிபோட்டு குற்றம் சுமத்துவது எந்தவிதத்தில் நியாயமாகும்?
அவளின் அப்போதைய மனம் புண்பட்ட சூழ்நிலையில் அவளுக்குத்தேவை கணவனின் அன்பும், இரக்கமும், ஆறுதலும், சமாதானமும், தயையும், அனுதாபமும் மட்டுமே.
அதைத்தான் அந்தக் கணவரும் அப்போது அவளுக்குத் தந்து உதவினார்.
அவளின் அப்போதைய மனம் புண்பட்ட சூழ்நிலையில் அவளுக்குத்தேவை கணவனின் அன்பும், இரக்கமும், ஆறுதலும், சமாதானமும், தயையும், அனுதாபமும் மட்டுமே.
அதைத்தான் அந்தக் கணவரும் அப்போது அவளுக்குத் தந்து உதவினார்.
மேலும் நம் சிந்தனைக்கு:
நாம் சிலநேரங்களில் குடும்ப உறவுகளிலோ, அலுவலகத்திலோ, நடந்துவிட்ட ஒரு செயலுக்கு யார் மீதாவது பழிபோடவும், பொறுப்பை நமக்குத்தெரிந்த அடுத்தவர் யார் மேலாவது சுமத்தி விடுவதிலுமே நம் நேரத்தைச் செலவிடுகிறோம்.
மனித உறவுகளின் மகத்துவத்தை உணர்ந்து மனமார்ந்த அன்புசெலுத்தி ஆதரவு அளிக்கத் தவறிவிடுகிறோம்.
உண்மையான அன்பு செலுத்துதலின் சுலபமான வழிகளில் மிகச்சிறந்த ஒன்று நாம் பிறரை ’மன்னிப்பது’ என்பதே ஆகும். மன்னித்தலை விட சுலபமான வழிகள் இந்த உலகில் வேறு எதுவும் உண்டா?
பிறரின் மனக்காயங்களையும், வலிகளையும், வேதனைகளையும் அதிகரித்துப் பெருக்கி விடாமல் ’மன்னித்தல்’ என்ற மகத்தான செயலின் மூலம் அறவே போக்கிடுவோம்.
பிறரின் மனக்காயங்களையும், வலிகளையும், வேதனைகளையும் அதிகரித்துப் பெருக்கி விடாமல் ’மன்னித்தல்’ என்ற மகத்தான செயலின் மூலம் அறவே போக்கிடுவோம்.
நம் இன்றைய உறவுகளையும் நட்புக்களையும் மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாப்போம். அவர்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக ஆதரவாக இருப்போம்.
நாம் எல்லோருமே இந்த நல்ல குணங்களை நம் வாழ்க்கையில் வளர்த்துக்கொண்டால், உலகில் இன்றுள்ள ஏராளமான பிரச்சனைகள் மிகவும் குறைந்துவிடக்கூடும்.
பிறர் மீதுள்ள சந்தேகங்கள், பிறரைப் பற்றிய குறுகிய மனப்பான்மைகள், அவநம்பிக்கைகள், பொறாமைகள், மன்னிக்க விரும்பாமை முதலியவற்றை நாம் உடனே விட்டொழிப்போம்.
பிறருக்காக நம் சுயநலத்தையும், பிறர் மீது நமக்குள்ள தேவையில்லாத பயத்தையும் போக்கிக்கொள்வோம்.
பிறருக்காக நம் சுயநலத்தையும், பிறர் மீது நமக்குள்ள தேவையில்லாத பயத்தையும் போக்கிக்கொள்வோம்.
இவ்வாறு நம்மை நாமே சற்றே மாற்றிக்கொள்ளும் போதும், விட்டுக்கொடுக்கும் போதும். எதுவுமே நாம் இதுவரை நினைத்து வந்தது போல அவ்வளவு ஒன்றும் கஷ்டமானவைகள் அல்ல என்பதை நாமே உணர முடியும்.
Never seek intention behind others' mistakes
’I LOVE YOU DARLING !’
என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் படித்தது.
மட்டுமே என்னால் செய்யப்பட்டது - vgk
இந்த துரதிஷ்ட சம்பவத்தால் அந்தத்தாய் கலங்கி ஸ்தம்பித்துப்போய் விட்டாள்.//
பதிலளிநீக்குஅந்தத்தாய் மட்டுமல்ல.கதையை வாசிப்போரும்தான்.\
அவளின் அப்போதைய மனம் புண்பட்ட சூழ்நிலையில் அவளுக்குத்தேவை கணவனின் அன்பும், இரக்கமும், ஆறுதலும், சமாதானமும், தயையும், அனுதாபமும் மட்டுமே.
//
அனைத்து மனிதர்களுக்குமே இந்த பரந்த மனப்பானமை இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
சிந்தனைக்கு என்று எழுதப்பட்ட ஒன்பது பாராக்களும் பொன்னெழுத்தில் பொரிக்கப்படவேண்டியவை.மனதில் இருத்திக்கொள்ள வேண்டியவை.
சிறந்த ஒரு எழுத்தைத் தமிழாக்கி அழகுறத் தந்தமைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குமனம் கலங்கும் முடிவாக இருப்பினும் சிந்திக்கவும் மனதை செப்பனிடவும் கூடிய பதிவு.ஆங்கிலத்தில் இருந்ததை தகுந்த மாற்றங்களுடன் தமிழாக்கம் செய்து தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு....
பதிலளிநீக்குதவறு யாருடையது என்று யோசித்து, இருக்கும் வாழ்க்கையை நரகம் ஆக்கிக் கொள்வதில் அர்த்தமில்லை.....
ஆங்கிலத்தில் இருந்து நல்ல தமிழில் மொழிபெயர்த்துத் தந்தமைக்கு நன்றி சார்.
வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள கருத்துக்கள். வெளியிட்ட உங்களுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குnalla pakuthi!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு வை.கோ சார்.இந்த புரிதல் ஆச்சரியப் பட வைக்கிறது.உயிரோட்டமான மொழிபெயர்ப்பு.சிந்தனைக்கு சிந்திக்க வைத்தது.
பதிலளிநீக்குபிரமாதமான கட்டுரை.. பாடம். சின்ன விஷயம் பெரிய விஷயம் எதுவுமே நடந்த பிறகு விஷயமே இல்லை என்று உடனே புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளும் முதிர்ச்சி அரிது.
பதிலளிநீக்குஇறந்த காலம் விடுத்து நிகழ்காலத்து வாழ்வை நிலைக்கச் செய்யும் அருமையான அறிவுரை. உறவுகளின் பெருமை அவற்றைப் பேணுவதில்தானே இருக்கிறது? ஒரு அற்புதமான கதையையும் அவசியமான அறிவுரையையும் அழகுத் தமிழில் வழங்கியமைக்குப் பாராட்டுகள் வை.கோ. சார்.
பதிலளிநீக்குநல்லதொரு விஷயத்தைத் தமிழ்ப்படுத்தி பகிர்ந்தமைக்கு நன்றி ஸார்! நல்ல புரிந்துணர்தலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சூழ்நிலையை அலசும் முதிர்ச்சியான மனமும் வாய்த்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இவற்றுக்கு மனதில் ஆசையே உண்டாகி விட்டது.
பதிலளிநீக்குநேசித்தல் எந்தச் சூழ்நிலையிலும் அவசியம். கதை அருமை. அதற்கான தலைப்பும் அசத்தல்.
பதிலளிநீக்குஅருமையான அனைவருக்குமான
பதிலளிநீக்குஅருமையான பதிவு
நிச்சயமாக இந்தக் காலச் சூழலில் அனைவரும்
அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டிய
தெய்வீகப் பண்பு இது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
இந்த சிறுகதை பலர் கண்களை திறக்கும் .
பதிலளிநீக்குயோசித்துப்பார்த்தால் பல தவறுகள் unintentional ஆகத்தான் நடக்கின்றன...
மாற்ற முடிந்தால் மாற்றலாம்...
முடியாவிட்டால் மேலும் நம்மையும் அடுத்தவரையும் ரணப்படுதாமல் வாழ்கையை நடத்திக்கொண்டு போக வேணும்...
தவறுகளை postmortem செய்து பழி சுமத்தி சண்டை வளர்த்துவது நஷ்டத்தை/தவறை மாற்றுவதில்லை...அதன் வேதனயை பல மடங்கு அதிகரிக்கிறது...
நாம் சிலநேரங்களில் குடும்ப உறவுகளிலோ, அலுவலகத்திலோ, நடந்துவிட்ட ஒரு செயலுக்கு யார் மீதாவது பழிபோடவும், பொறுப்பை நமக்குத்தெரிந்த அடுத்தவர் யார் மேலாவது சுமத்தி விடுவதிலுமே நம் நேரத்தைச் செலவிடுகிறோம்.
பதிலளிநீக்குஉண்மையான அன்பு செலுத்துதலின் சுலபமான வழிகளில் மிகச்சிறந்த ஒன்று நாம் பிறரை ’மன்னிப்பது’ என்பதே ஆகும்
மிகவும் பயனுள்ள கருத்து
VGK அவர்களுக்கு வணக்கம்! பெரியவர்களின் அலட்சியத்தால் சிறு குழந்தைக்கு நேர்ந்த கதி.படிப்பவர்களுக்கு ஒரு பாடம். குழப்பம் இல்லாத எளிமையான மொழிபெயர்ப்பு. தொடருங்கள்.
பதிலளிநீக்குபிறர் மீதுள்ள சந்தேகங்கள், பிறரைப் பற்றிய குறுகிய மனப்பான்மைகள், அவநம்பிக்கைகள், பொறாமைகள், மன்னிக்க விரும்பாமை முதலியவற்றை நாம் உடனே விட்டொழிப்போம்.
பதிலளிநீக்குநல்லதொரு விஷயத்தை தமிழாக்கம் செய்து தந்திருக்கீங்க சார்.
பதிலளிநீக்குஅந்த குழந்தையின் முடிவு மனதை கனக்க வைத்தாலும், போனவர் திரும்பி வரப்போவதில்லை, இருக்கும் வாழ்வை நரகமாக்க வேண்டாம், என்று அந்த கணவர் அந்த நேரத்தில் மிகச்சரியாக நடந்துள்ளார்.
இந்த கதையை நான் முன்பே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் அதை தமிழில் படிக்கும் போது நன்றாகவே எழுதியிருக்கீறிர்கள் . மேலும் முடிவாக மேலும் நம் சிந்தனைக்கு என்ற பகுதியும் நன்றாகவே இருக்கிறது
பதிலளிநீக்குதமிழாக்கம் இயற்கையாக சுவையாக...
பதிலளிநீக்குஇந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள
பதிலளிநீக்குதிருமதிகள்:
===========
01. ஸாதிகா Madam அவர்கள்
02, ராஜி Madam அவர்கள்
03. ஆசியா ஓமர் Madam அவர்கள்
04. கீதமஞ்சரி Madam அவர்கள்
05. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்
06. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்
07. கோவை2தில்லி Madam அவர்கள்
திருவாளர்கள்:
=============
01. சென்னை பித்தன் Sir அவர்கள்
02. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்
03. பழனி. கந்தசாமி Sir அவர்கள்
04. சீனி Sir அவர்கள்
05. அப்பாதுரை Sir அவர்கள்
06. கணேஷ் Sir அவர்கள்
07. விச்சு Sir அவர்கள்
08. ரமணி Sir அவர்கள்
09. ரிஷபன் Sir அவர்கள்
10. தி.தமிழ் இளங்கோ Sir அவர்கள்
11. 'அவர்கள் உண்மைகள்' அவர்கள்
12. கே.பி. ஜனா Sir அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன் தங்கள் vgk
I think I am late.
பதிலளிநீக்குBut very nice post.
Howmany husbands do like this?
If a person is really behaving like this.............
He is divine.
Let us also try to be divine.
viji
வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்குviji said...
//I think I am late.
But very nice post.
Howmany husbands do like this?
If a person is really behaving like this.............
He is divine.
Let us also try to be divine.
viji//
தாங்கள் தாமதமாக வந்துள்ளதற்கு நானும் ஒரு காரணம் என்பதை நான் நன்கு அறிவேன்.
தங்களைப் போலவே என்னிடம் விரும்பிக் கேட்டுக்கொண்ட, மிகவும் நெருக்கமான ஒருசிலருக்கு மட்டும் (மொத்தமாகவே 5 நபர்களுக்கு மட்டுமே) நான் அனுப்பிவந்த, என் புது வெளியீடுகள் பற்றிய மெயில் தகவல்களை 24.03.2012 முதல், ஒருசில காரணங்களால், முற்றிலும் நிறுத்தி விட்டேன்.
ஒருவருக்குக்கூட என் வெளியீடுகள் பற்றி தகவல் ஏதும் 24.03.2012 முதல் என்னால் அனுப்பப் படவில்லை.
இருப்பினும் டேஷ் போர்டு மூலம் பார்த்து நிறைய பேர்கள் அவர்களாகவே வந்து கருத்துக்கள் கூறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.
தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
அன்புடன் vgk
எப்படி நான் இந்த பதிவை மிஸ் பண்ணிட்டேன் ???
பதிலளிநீக்குநான் தினமும் மெயில் செக் செய்வேன் அதனால் மெயில் மூலம் கண்டிப்பா புதிய பதிவுகள் லிங்க் தரவும் .
மனதை நெகிழ வைத்த சம்பவம் .கணவன் மனைவி மட்டுமன்றி ,குழந்தைகளிடமும் இப்படியான பொறுமையை கடைபிடித்தால்
இல்வாழ்க்கை சொர்க்கம்தான் .
மொழிபெயர்ப்பு மற்றும் மேற்கோள்கள் சிந்தனையை தூண்டிய வரிகள் அனைத்தும் மிக மிக அருமை .
angelin said...
பதிலளிநீக்கு//எப்படி நான் இந்த பதிவை மிஸ் பண்ணிட்டேன் ???
நான் தினமும் மெயில் செக் செய்வேன் அதனால் மெயில் மூலம் கண்டிப்பா புதிய பதிவுகள் லிங்க் தரவும்.
மனதை நெகிழ வைத்த சம்பவம் .கணவன் மனைவி மட்டுமன்றி ,குழந்தைகளிடமும் இப்படியான பொறுமையை கடைபிடித்தால்
இல்வாழ்க்கை சொர்க்கம்தான் .
மொழிபெயர்ப்பு மற்றும் மேற்கோள்கள் சிந்தனையை தூண்டிய வரிகள் அனைத்தும் மிக மிக அருமை.//
அன்புள்ள நிர்மலா,
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
கோபு
உஷா அன்பரசுJanuary 27, 2013 at 7:12 AM
பதிலளிநீக்குvery nice!//
THANKS A LOT FOR YOUR "VERY NICE" COMMENT, TEACHER.
GOPU.
:)
பதிலளிநீக்குகணவன் மனைவியின் உண்மையான அன்பு இப்படித்தான் இருக்க வேண்டும்
பதிலளிநீக்குBE PRACTICAL என்கிறீர்கள்.
பதிலளிநீக்குஉண்மைதான்.
ஒன்று நடந்த பின் ஒருவரை ஒருவர் சாடுவதை விடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். சொல்லுவது எளிது. கடை பிடிப்பது சிரமம் தான்.
மன்னிப்போம், மறப்போம் மற்றவர் குற்றங்களை.
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின்
தீதுண்ட்டே மன்னும் உயிர்க்கு
அந்த வலியான நேரத்துலயும் அந்த புருசன்காரவுக நடந்துகிட்டது நல்லா இருந்திச்சி
பதிலளிநீக்குmru October 20, 2015 at 11:17 AM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//அந்த வலியான நேரத்துலயும் அந்த புருசன்காரவுக நடந்துகிட்டது நல்லா இருந்திச்சி//
எந்த ஆபத்தினையும் எச்சரிக்கையாக நாம் இருந்து ’வரும்முன் காக்க வேண்டும்’. பிறகு பேசி என்ன பயன்?
எல்லாக் கணவர்மார்களும் இந்தக்கதையில் வரும் கணவர் போல, அதுபோன்ற துயரமான நிலைமையில், பக்குவமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்பதும் உண்மை.
அந்தக்குழந்தையோ போய்விட்டது மனைவியை கடிந்து கொளுவதால் போன உயிர் திரும்ப வருமா. நாமே அந்த மருந்து பாட்டிலை மூடி மேலே வைத்திருக்க வேண்டும். கணவனின் சிந்தனைகள் சிலிர்க்க வைக்கிறது.
பதிலளிநீக்குபிறரின் மனக்காயங்களையும், வலிகளையும், வேதனைகளையும் அதிகரித்துப் பெருக்கி விடாமல் ’மன்னித்தல்’ என்ற மகத்தான செயலின் மூலம் அறவே போக்கிடுவோம்.
பதிலளிநீக்குநம் இன்றைய உறவுகளையும் நட்புக்களையும் மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாப்போம். அவர்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக ஆதரவாக இருப்போம்.// இன்றைய தினத்தில் தேவையான கருத்து. கதையின் முடிவு நியாயமானது.
//மனித உறவுகளின் மகத்துவத்தை உணர்ந்து மனமார்ந்த அன்புசெலுத்தி ஆதரவு அளிக்கத் தவறிவிடுகிறோம்.
பதிலளிநீக்குஉண்மையான அன்பு செலுத்துதலின் சுலபமான வழிகளில் மிகச்சிறந்த ஒன்று நாம் பிறரை ’மன்னிப்பது’ என்பதே ஆகும். மன்னித்தலை விட சுலபமான வழிகள் இந்த உலகில் வேறு எதுவும் உண்டா?
// உண்மை! அருமை!