என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 4 மார்ச், 2012

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]



ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-17



ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை
பகுதி 6 of  8




18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32

“ஸீதா தர்ஸன ஸம்ஹ்ருஷ்டோ ஹனுமான் ஸம்வ்ருதோ பவத்”

ஸ்ரீ சீதாதேவியைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியால் ராமலக்ஷ்மணர்களை மனதால் நமஸ்கரித்து, ராக்ஷஸீகள் தன்னை பாராமலிருப்பதற்காக அனுமார் மரத்தின் இலை மறைவில் தன்னை மறைத்துக்கொண்டார்.

நமக்கு ஒரு ஸித்தி [ பகவத் தரிஸனம், அனுபவம் ] ஏற்பட்டால் அதை வெளியில் பறைசாற்றாமல் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆஞ்ஜநேயர் இங்கு காண்பிக்கின்றார்.



19. ஸ்ரீமத் சுந்தர காண்டத்தில் தினசரி பாராயணமாக வைத்துக்கொள்ள வேண்டிய ஸ்லோகங்கள்:-

இந்த 4 ஸ்லோகங்களையும் சுந்தரகாண்ட பாராயணத்தில் ஒவ்வொரு ஸர்கமும் பூர்த்தி ஆன பிறகு சொல்லி வந்தால் வாழ்க்கையில் எல்லாக் கோணங்களிலும் வெற்றியடைவது நிச்சயம்.

ஸர்க்கம்: 42 - ஸ்லோகம் 33 முதல் 36 வரை:

a) ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மண ஸ்சமஹாபல:
    ராஜா ஜயதி சுக்ரீவ: ராகவேணாபிபாலித:

b) தாஸோஹம் கோஸலேந்திரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண:
    ஹனுமான் சத்ரு ஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ:

c)  ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதி பலம் பவேத்
     சிலாபிஸ்து ப்ரஹரத: பாதபைஸ்ச ஸஹஸ்ரஸ:

d) அர்தயித்வா புரீம் லங்காம் அபிவாத்ய ச மைதிலீம்
    ஸம்ருத்தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வ ரக்ஷஸாம்   

விரோதி ராஜ்யமான லங்கையில் ராக்ஷஸர்கள் கூட்டம், தன்னிடம் சண்டைக்கு வரும்போது, தனியாக ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் ராமனுடைய ப்ராக்ரமத்தையும் ராமதாஸனுடைய பெருமையையும் எடுத்துச்சொல்லி கர்ஜிக்கிறார். 

ராக்ஷஸர்கள் ஆயுதங்களுடன் எதிர்க்கும்போது, ஹனுமாருக்கு ஆயுதம், மரங்களும் கற்பாறைகளும் தான். 

’லங்காபுரியை’ கதிகலங்கச்செய்து சீதாதேவியை வணங்கி, [ஒருவரும் இல்லாதபோது மறைவாக வந்து ராவணன் தேவியை அபகரித்துச் சென்றது போல இல்லாமல்] எல்லா ராக்ஷஸர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ”வந்த காரியம் கைகூடியவனாகச் செல்லப்போகிறேன்” என்று கர்ஜித்தார். 

20. ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் 51 ஆவது ஸர்கத்தில் வரும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஆவர்த்தி செய்தால் HEAD INJURY போன்ற GRIEVOUS INJURY குணமாகிவிடும்.

“ஸர்வான் லோகான் ஸுஸம் ஹ்ருத்ய ஸபூதான் ஸசராசரான் 
புனரேவ ததா ஸ்ரஷ்டும் சக்தோ ராமோ மஹாயஸ:

21. ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தை வரிசையாகத் தொடர்ந்து படிக்க முடியாதவர்கள் சுப சகுணங்களை வர்ணிக்கும் 29 ஆவது ஸர்க்கத்தை மட்டுமாவது தினம் பாராயணம் செய்து வருவது நல்லது.




தொடரும்

21 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு.... தொடருங்கள்.... தொடர்ந்து கொண்டிருக்கிறேன்....

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது....

    பதிலளிநீக்கு
  2. படங்கள் மிக அழகு..
    மனசுக்கு ஹிதமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. “ஸர்வான் லோகான் ஸுஸம் ஹ்ருத்ய ஸபூதான் ஸசராசரான்
    புனரேவ ததா ஸ்ரஷ்டும் சக்தோ ராமோ மஹாயஸ:


    ரோக நிவர்த்தி தரும் அருமையான ஸ்லோகப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. ள் சுப சகுணங்களை வர்ணிக்கும் 29 ஆவது ஸர்க்கத்தை மட்டுமாவது தினம் பாராயணம் செய்து வருவது நல்லது.

    சுபமே நல்கும் சிறந்த சுந்தரமான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  5. நமக்கு ஒரு ஸித்தி [ பகவத் தரிஸனம், அனுபவம் ] ஏற்பட்டால் அதை வெளியில் பறைசாற்றாமல் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆஞ்ஜநேயர் இங்கு காண்பிக்கின்றார்.

    அழகான தத்துவப் பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  6. Really great for telling to read particular surgam for particular purpose.
    I feel lucky to read this. Thanks sir.
    viji

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பதிவு.

    //ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தை வரிசையாகத் தொடர்ந்து படிக்க முடியாதவர்கள் சுப சகுணங்களை வர்ணிக்கும் 29 ஆவது ஸர்க்கத்தை மட்டுமாவது தினம் பாராயணம் செய்து வருவது நல்லது.//

    மிகவும் முக்கியமான ஸ்லோகங்கள்,ஸ்ர்கங்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  8. கண்ணைப் பறிக்கும் வண்ணப்
    படங்கள் அழகோ அழகு!
    நலமா ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  9. சுந்தர காண்டம் பற்றி சுந்தரமான பகிர்வுகளை அளித்தற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  10. நல்ல படங்களுடன் அருமையான பகிர்வு.
    நம் மன வியாதி, உடல் துன்பத்தைப் போக்க வல்லது.
    வாழ்வில் எல்லா நலங்களையும் அள்ளி தருபவை அல்லவா!
    நன்றி.

    நான் ஊருக்கு போய் வந்து கொண்டு இருக்கிறேன், அதனால் சில பதிவுகள் விட்டுப் போய் விடுகிறது.
    தொடர்ந்து வருகிறேன் , நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நல்ல விஷயங்கள்.தொடர்ந்து தாருங்கள் சார்.

    பதிலளிநீக்கு
  12. //நமக்கு ஒரு ஸித்தி [ பகவத் தரிஸனம், அனுபவம் ] ஏற்பட்டால் அதை வெளியில் பறைசாற்றாமல் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆஞ்ஜநேயர் இங்கு காண்பிக்கின்றார்.
    //

    புது விளக்கம். சிந்திக்க வைத்தது...... நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சுந்தர காண்டம் பாராயணம் ஒரு ஆஞ்சனேயர் கோவிலில் செய்தால் புண்ணியம் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் பயன் தரும் பதிவுகளாக கொடுத்து வரீங்க.

    பதிலளிநீக்கு
  15. நல்ல தகவல்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ?????--- படங்கலா நல்லாருக்குது. மிடிலா மிடிலா கமண்டு போட மிடியாம போகுதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 19, 2015 at 2:30 PM


      //?????--- படங்கலா நல்லாருக்குது. மிடிலா மிடிலா கமண்டு போட மிடியாம போகுதே//

      அதனால் பரவாயில்லை. மிடிலா மிடிலா போட முடியாட்டியும் ஒரு ஓரமாகப்போடுங்கோ, போதும். :)

      நீக்கு
  17. முதல் படம் அசத்தலாக இருக்கு. நல்ல நல்ல விஷயங்கள் அதிக அளவில் தெரிந்து கொள்ள முடிகிறது

    பதிலளிநீக்கு
  18. 20. ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் 51 ஆவது ஸர்கத்தில் வரும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஆவர்த்தி செய்தால் HEAD INJURY போன்ற GRIEVOUS INJURY குணமாகிவிடும்.// சிலர் மிரக்குலஸாக உயிர்பிழைப்பது நெருங்கியவர்களின் வேண்டுதல்களால்தான்..

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ஐயா. எனக்கு 1 முதல் 9 சர்கம் வரையிலான ஸ்லோகங்களை கொடுக்க முடியுமா?

    நன்றி
    ராஜேஷ்

    பதிலளிநீக்கு