என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்



ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான 
”ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்” 
வாழ்க்கை வரலாறு



ஸங்கீத மும்மூர்த்திகள்


’ஜனனாத் கமலாலயே’ என்பதாக பிறந்தாலே முக்தி ஏற்படும் ஸ்ரீ புரம் என்னும் திருவாரூரில் பிறந்து, ’கர்மா’ ’பக்தி’ ’ஞானம்’ என்ற மூன்று வழிகளிலும் பகவானை உபாஸித்த ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள் + ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆகிய மூவரும் ஸங்கீத மும்மூர்த்திகள் என அழைக்கப்படுகின்றனர்.

வைதீஸ்வரன் கோயில் ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமியின் அருளால் ஸ்ரீ ராமஸ்வாமி தீக்ஷிதருக்கு மூத்த குமாரராக ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கி.பி. 1775 ஆம் ஆண்டு மன்மத வருஷம் பங்குனி மாதம் கிருத்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார். 

ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி

தனது தந்தையிடமே காவ்யம், நாடகம், வ்யாக்ரணம், ஸங்கீதம் முதலியவற்றை கற்றுணர்ந்தார். திரு. சின்னையா முதலியார் என்பவரின் ஆதரவோடு சென்னை மணலியில் வஸித்து வந்த தீக்ஷிதரை, ஸ்ரீ சிதம்பரநாத ஸ்வாமிகள் என்பவர் தன்னுடன் காசி யாத்திரைக்கு அழைத்துச்சென்றார். அவருக்கு ஸ்ரீ வித்யா தீக்ஷை தந்து மந்த்ர உபதேசமும் செய்து வைத்தார்.

அங்கு ஹிந்துஸ்தானி ஸங்கீதம் கற்று, தொடர்ந்து 5 வருஷம் மந்த்ர ஜபம் த்யானம் செய்து ஸித்தி செய்த ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு ஒரு நாள் கங்கையில் ஸ்நானம் செய்து அர்க்யம் கொடுப்பதற்காக கைகளால் ஜலத்தை எடுக்கும்போது ”ஸ்ரீராமா” என்னும் மந்த்ரம் பதித்த ஓர் அழகான வீணை தட்டுப்பட்டது. 

அதை தன் குருநாதரிடம் காண்பிக்க, “இது தெய்வத்தால் தரப்பட்ட தெய்வீக வீணை; நீ திருத்தணி சென்று முருகனை உபாஸனை செய்” என்று ஆணையிட்டு திருத்தணிக்கு அனுப்பி வைத்தார். 


 
திருத்தணி முருகன்

 



’குருகுஹா’ என்னும் நாமாவைச்சொல்லிக்கொண்டே திருத்தணி மலையில் ஏறிக்கொண்டிருந்த ஸ்ரீ தீக்ஷிதரின் எதிரில் தோன்றிய ஒரு முதியவர் [முருகன்] ”வாயைத்திற” என்று சொல்லி கற்கண்டை, ஸ்ரீ தீக்ஷிதரின் வாயில் போட்டு மறைந்து போனார். 

அந்த க்ஷணமே ஸ்ரீ தீக்ஷிதரின் வாக்கிலிருந்து ’ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி’ என்று நாதவாணி துள்ளி வந்தது. அதுமுதல் ”குருகுஹ” என்னும் முத்திரையைப் பதித்து ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினார். 

பற்பல க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை சென்ற ஸ்ரீ தீக்ஷிதர் வாக்கிலிருந்து அந்தந்த க்ஷேத்ரங்களின் தெய்வ சக்தியே, க்ஷேத்ர [தல] மஹிமைகளைப் பாடல்களாக வெளிவரச்செய்தன.



கி.பி.1835 ஆம் ஆண்டு, தீபாவளியன்று, 
மீனாக்ஷியின் கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டே
 ’சிவேபாஹி சிவேபாஹி’ 
என்னும் நாமாவைச் சொல்லிக்கொண்டே 
ஸ்ரீ அம்பாளின் சரணத்தை அடைந்தார் ஸ்ரீ தீக்ஷிதர்.    


-oOo-


[ சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஜயந்தி 
27.03.2012 செவ்வாய்க்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது.]




27.03.2012 செவ்வாய்க்கிழமை
மேலும் சில விசேஷங்கள்


1) லக்ஷ்மீபஞ்சமி - ஸ்ரீபஞ்சமி

சுக்லாய மத2 பஞ்சம்யாம் சைத்ரே மாஸி சுபா4நநா
ஸ்ரீர் விஷ்ணுலோகான் மாநுஷ்யம் ஸம்ப்ராப்தா
கேசவாக்2ஞயா, தஸ்மாத் தாம் பூஜயேத் தத்ர ய்ஸ்தம்
லக்ஷ்மீர் ந முஞ்சதி 
[ஸ்மிருதி கெளஸ் 92]

ஸ்ரீ விஷ்ணுவின் ப்ரேரணையால் தேவர்களும் அஸுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலிலிருந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றிய நன்நாளே ஸ்ரீபஞ்சமி அல்லது லக்ஷ்மி பஞ்சமி எனப்படுகிறது. 

சைத்ரமாத சுக்லபக்ஷ பஞ்சமியான இன்று ஸ்ரீ விஷ்ணுவுடன் ஸ்ரீ லக்ஷ்மீ தேவியை பூஜை செய்து மல்லிகைப்பூவால் லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து லக்ஷ்மீ ஸ்தோத்ரம் சொல்லிப் ப்ரார்த்தித்தால் லக்ஷ்மீ கடாக்ஷம் ஏற்படும். ஏழ்மை விலகும்.  

2) ஹய [குதிரை] பூஜை


ஹயம் என்றால் குதிரை. குதிரையை பூஜிக்க வேண்டிய நாளே ஹய பஞ்சமீ. அதாவது தேவாஸுரர்கள் மந்தரமலையை மத்தாக்கி வாஸுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது கடலிலிருந்து ”உச்சைஸ்ரவஸ்” என்னும் [பறக்கும் சக்தியுடைய] தேவக்குதிரை தோன்றிய நாள் தான் சைத்ர சுக்ல பஞ்சமி. 

இன்று குதிரையை (சில கந்தர்வர்களுடன் சேர்த்து) பூஜித்து, குதிரைக்கு கொள்ளு தான்யத்தை சாப்பிடத்தர வேண்டும். இதனால் நீதிமன்ற வ்யவஹாரங்களில் (சத்ருக்களிடமிருந்து) வெற்றி கிட்டும். வியாபார லாபமும் ஏற்படும். 



[சமீபத்தில் ஒரு ஆன்மிக மாத இதழில் படித்த செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளேன்]




சுபம்

42 கருத்துகள்:

  1. குருகுஹா’ என்னும் நாமாவைச்சொல்லிக்கொண்டே திருத்தணி மலையில் ஏறிக்கொண்டிருந்த ஸ்ரீ தீக்ஷிதரின் எதிரில் தோன்றிய ஒரு முதியவர் [முருகன்] ”வாயைத்திற” என்று சொல்லி கற்கண்டை, ஸ்ரீ தீக்ஷிதரின் வாயில் போட்டு மறைந்து போனார்.

    அந்த க்ஷணமே ஸ்ரீ தீக்ஷிதரின் வாக்கிலிருந்து ’ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி’ என்று நாதவாணி துள்ளி வந்தது. அதுமுதல் ”குருகுஹ” என்னும் முத்திரையைப் பதித்து ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினார்.

    சிலிர்க்கிறது படிக்கும்போதே.

    பதிலளிநீக்கு
  2. பாற்கடலிலிருந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றிய நன்நாளே ஸ்ரீபஞ்சமி அல்லது லக்ஷ்மி பஞ்சமி எனப்படுகிறது.

    ஆன்மீக தகவலுக்கு நனறி

    பதிலளிநீக்கு
  3. இவரது கீர்த்தனைகள் அப்பப்பா... ஆனந்தம். அவரைப் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வரலாற்றில் நான் அறிந்திராத சில விஷயங்களையும் அறிந்து கொண்டேன்.
    அது தவிர 27/03/12 அன்று உள்ள விஷேஷங்கள் எனக்கு புதிய தகவல்.அதைப் பற்றியும் கூறி எடுத்துரைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. தீக்ஷிதர் கிருதியில் மரகத வல்லி பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.அதையும், மறைந்த சங்கீத மேதை மஹாராஜபுரம் அவர்கள் பாடிக் கேட்க வேண்டும்.சொல்லவே வார்த்தைகள் இல்லை.காம்போதி மனம் கரைக்கும்.

    பதிலளிநீக்கு
  6. ஹரி ஹ்ருதய வாஸினி,மோகினி என்ற வரியில் மனம் பக்தியில் மூழ்கும்

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்! பக்தியோடு தங்களால் எழுதப்பட்ட ஸ்ரீ முத்துஸ்வாமி தீஷிதர் பற்றிய வரலாறு தெரிந்து கொண்டேன். கடம் வாசிப்பவர் படம் பார்த்ததும், திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் எனக்கு எட்டாம் வகுப்பு ஆசிரியராக இருந்த கடம் சுந்தரராஜன் ( T.S.S ) சார் ஞாபகம் வந்தது. நன்றி!

    பதிலளிநீக்கு
  8. மும்மூர்த்திகளின் வரலாற்றை சுவையாக் தொகுத்து அத்துடன் பஞ்சமீயின் சிறப்பையும் சொன்னீர்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான பணி ஒன்றைச் செய்திருக்கின்றீர்கள் . தெரியாதபல விடயங்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது

    பதிலளிநீக்கு
  10. மும்மூர்த்திகளைப் பற்றி தனியாக ஒரு சிறப்பு பதிவு போடுங்கள் Gopu சார். இன்று தீட்சிதர் வாழ்க்கை வரலாற்றில் கேற்றிரத புதிய தகவலை தெரிந்து கொண்டேன். மற்ற இருவர் வழக்கை வரலாற்றையும் விரிவாக படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பஞ்சமி சிறப்பு தகவல்கள் அருமை. நன்றி Gopu சார்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி .... என்றோ படித்த வாழ்கை வரலாறு மறுபடியும் நினைவு கொணர்ந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. முத்துஸ்வாமி தீக்ஷிதர் பற்றி பல புதிய தகவல்கள் எழுதியுள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. முத்துஸ்வாமி தீக்ஷிதர் பற்றிய நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் சார். 27ம் தேதி விஷேசங்களும் புதிதாக தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  14. இசைய சிறப்பித்த‌வர்களை பதிவில் சிற‌ப்பித்திருக்கிறீர்கள்!
    அரிய தகவல்களுடன் நல்லதொடு பதிவு!

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரைப்பற்றி தகவல்கள் அருமை. நான் இப்போதுதான் அறிந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. ரிஷபன் said...
    *****குருகுஹா’ என்னும் நாமாவைச்சொல்லிக்கொண்டே திருத்தணி மலையில் ஏறிக்கொண்டிருந்த ஸ்ரீ தீக்ஷிதரின் எதிரில் தோன்றிய ஒரு முதியவர் [முருகன்] ”வாயைத்திற” என்று சொல்லி கற்கண்டை, ஸ்ரீ தீக்ஷிதரின் வாயில் போட்டு மறைந்து போனார்.

    அந்த க்ஷணமே ஸ்ரீ தீக்ஷிதரின் வாக்கிலிருந்து ’ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி’ என்று நாதவாணி துள்ளி வந்தது. அதுமுதல் ”குருகுஹ” என்னும் முத்திரையைப் பதித்து ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினார்.*****

    //சிலிர்க்கிறது படிக்கும்போதே.//

    தங்களின் அன்பான முதல் வருகையும் அழகான கருத்துக்களும் என்னையும் சிலிரிக்க வைத்து விட்டன, சார்

    ரிஷபன் said...
    *****பாற்கடலிலிருந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றிய நன்நாளே ஸ்ரீபஞ்சமி அல்லது லக்ஷ்மி பஞ்சமி எனப்படுகிறது.*****

    //ஆன்மீக தகவலுக்கு நனறி//

    தங்கள் நன்றிக்கு மிக்க நன்றி சார்.
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  17. வெங்கட் நாகராஜ் said...
    //இவரது கீர்த்தனைகள் அப்பப்பா... ஆனந்தம். அவரைப் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//

    மிக்க நன்றி, வெங்கட்.

    பதிலளிநீக்கு
  18. raji said...
    //ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வரலாற்றில் நான் அறிந்திராத சில விஷயங்களையும் அறிந்து கொண்டேன்.
    அது தவிர 27/03/12 அன்று உள்ள விஷேஷங்கள் எனக்கு புதிய தகவல்.அதைப் பற்றியும் கூறி எடுத்துரைத்தமைக்கு நன்றி//

    மிகவும் சந்தோஷம் மேடம்.

    raji said...
    //தீக்ஷிதர் கிருதியில் மரகத வல்லி பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.அதையும், மறைந்த சங்கீத மேதை மஹாராஜபுரம் அவர்கள் பாடிக் கேட்க வேண்டும்.சொல்லவே வார்த்தைகள் இல்லை.காம்போதி மனம் கரைக்கும்.//

    கர்நாடக இசையில் அதிக ஞானம் கொண்டுள்ள தங்களுக்கு இந்தப்பதிவு மிகவும் பிடிக்கலாம் என்று நானே எதிர்பார்த்தேன். தங்களின் ஆத்மார்த்தமான அழகிய கருத்துக்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    மிக்க நன்றி, மேடம்.

    //raji said...
    ஹரி ஹ்ருதய வாஸினி,மோகினி என்ற வரியில் மனம் பக்தியில் மூழ்கும்//

    அந்த தீக்ஷிதர் கிருதிகளின் வரிகளை மிகவும் ரஸித்து, லயித்து, ஈடுபாட்டுடன் எழுதியுள்ளீர்கள்.

    தங்களின் இசை ஞானத்தை வணங்கி வாழ்த்துகிறேன்.

    அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

    vgk

    பதிலளிநீக்கு
  19. தி.தமிழ் இளங்கோ said...
    //வணக்கம்! பக்தியோடு தங்களால் எழுதப்பட்ட ஸ்ரீ முத்துஸ்வாமி தீஷிதர் பற்றிய வரலாறு தெரிந்து கொண்டேன்.//

    வணக்கம் ஐயா!
    தங்களின் தொடர் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது ஐயா.

    //கடம் வாசிப்பவர் படம் பார்த்ததும், திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் எனக்கு எட்டாம் வகுப்பு ஆசிரியராக இருந்த கடம் சுந்தரராஜன் ( T.S.S ) சார் ஞாபகம் வந்தது. நன்றி!//

    எனக்கும் TSS அவர்களை மிக நன்றாகவே தெரியும், சார். நான் அவரிடம் நேரிடையாகப் படித்த்து இல்லை.

    ஆனால் அவர் கடம் வாசித்து, நான் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

    தனி ஆவர்த்தனமாக செய்யப்படும்
    கடம், கஞ்ஜீரா, மேளம், தவுல் போன்ற வாத்யங்கள் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

    அந்தக்கலைஞர்களின் 10 விரல்களும் நன்கு வேலை செய்யும். தலை தனியே நன்கு ஆடும். முகபாகமும் மாறும். நான் இதையெல்லாம் மிகுந்த ஈடுபாட்டுடன் ரஸிக்கக்கூடியவன்.

    வாத்திய இசையுடன் கூட [கேலிச் சித்திரங்கள் போல] கேரக்டர் அனலைஸ் செய்து ரஸிப்பதில் எனக்கு மிகவும் ஆசை உண்டு.

    தங்கள் வருகை+கருத்துக்கள் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. நன்றி ஐயா.
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  20. தனிமரம் said...
    //மும்மூர்த்திகளின் வரலாற்றை சுவையாக் தொகுத்து அத்துடன் பஞ்சமீயின் சிறப்பையும் சொன்னீர்கள் ஐயா!//

    தங்களின் வருகை+கருத்துக்களுக்கு மிக்க நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  21. சந்திரகௌரி said...
    //சிறப்பான பணி ஒன்றைச் செய்திருக்கின்றீர்கள் . தெரியாதபல விடயங்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  22. Mira said...
    //மும்மூர்த்திகளைப் பற்றி தனியாக ஒரு சிறப்பு பதிவு போடுங்கள் Gopu சார். இன்று தீட்சிதர் வாழ்க்கை வரலாற்றில் கேற்றிரத புதிய தகவலை தெரிந்து கொண்டேன். மற்ற இருவர் வழக்கை வரலாற்றையும் விரிவாக படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பஞ்சமி சிறப்பு தகவல்கள் அருமை. நன்றி Gopu சார்.//

    தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    தாங்கள் சொன்னத் தகவல்கள் திரட்ட முடிந்தால் பதிவிட முயற்சிக்கிறேன்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  23. Shakthiprabha said...
    //நன்றி .... என்றோ படித்த வாழ்கை வரலாறு மறுபடியும் நினைவு கொணர்ந்தீர்கள்.//

    தங்களின் Busy Schedule க்கு இடையே இங்கு இப்போது வருகை தந்துள்ளதற்கு மிக்க நன்றி, ஷக்தி.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  24. kg gouthaman said...
    //முத்துஸ்வாமி தீக்ஷிதர் பற்றி பல புதிய தகவல்கள் எழுதியுள்ளீர்கள். நன்றி.//

    இசைப்பிரியரான தங்களின் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது, சார்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  25. கோவை2தில்லி said...
    //முத்துஸ்வாமி தீக்ஷிதர் பற்றிய நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் சார். 27ம் தேதி விஷேசங்களும் புதிதாக தெரிந்து கொள்ள முடிந்தது.//

    மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  26. நம்பிக்கைபாண்டியன் said...
    //இசைய சிறப்பித்த‌வர்களை பதிவில் சிற‌ப்பித்திருக்கிறீர்கள்!
    அரிய தகவல்களுடன் நல்லதொடு பதிவு!//

    அன்பான வருகை + அழகிய கருத்துக்களுக்கு, மிக்க நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  27. விச்சு said...
    //ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரைப்பற்றி தகவல்கள் அருமை. நான் இப்போதுதான் அறிந்துகொள்கிறேன்.//

    அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  28. முத்துசுவாமி தீக்ஷதரின் கதையை சுவையாக சொல்லி இருக்கிரீர்கள்...
    குரு குஹா...என்ற signature ஐ கொண்ட அவர் கீர்த்தனைகள் அத்தனையும் அருமை...

    பதிலளிநீக்கு
  29. Usha Srikumar said...
    //முத்துசுவாமி தீக்ஷதரின் கதையை சுவையாக சொல்லி இருக்கிரீர்கள்...
    குரு குஹா...என்ற signature ஐ கொண்ட அவர் கீர்த்தனைகள் அத்தனையும் அருமை...//

    தங்களின் அன்பான வருகையும், தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பற்றிய அருமையான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வித்தன, மேடம்.

    தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். vgk

    பதிலளிநீக்கு
  30. இவரது கீர்த்தனைகள் அப்பப்பா... ஆனந்தம். அவரைப் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. பாற்கடலிலிருந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றிய நன்நாளே ஸ்ரீபஞ்சமி அல்லது லக்ஷ்மி பஞ்சமி எனப்படுகிறது.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  32. Lakshmi said...
    //இவரது கீர்த்தனைகள் அப்பப்பா... ஆனந்தம். அவரைப் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//

    தங்களின் அன்பான வருகைக்கும் ஆனந்தமான கீர்த்தனைகள் பற்றிய கருத்துக்களுக்கும், மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  33. இராஜராஜேஸ்வரி said...
    //பாற்கடலிலிருந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றிய நன்நாளே ஸ்ரீபஞ்சமி அல்லது லக்ஷ்மி பஞ்சமி எனப்படுகிறது.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

    தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், மிக்க நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  34. முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வரலாறு தெய்வீகமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  35. நானும் மரகதவல்லீம் பாட்டு கேட்டிருக்கேன. ஆனா யாரு எழுதினாங்க என்கிர விபரம் இப்பதான் தெரிஞ்சுண்டேன்

    பதிலளிநீக்கு
  36. கி.பி. 1775 ஆம் ஆண்டு மன்மத வருஷம் பங்குனி மாதம் கிருத்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார். //

    ஐ நானும் பிறந்தது மன்மத வருஷத்தில்.

    அருமையான தகவல்களுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னப்பலேந்தே கத்துகிட்டாதா பாட்டு வரும்போல

      நீக்கு
  37. சின்னபுள்ளிலேந்தே கத்துகிட்டாதான் நல்லா பாட வரும்போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 20, 2015 at 11:12 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //சின்னபுள்ளிலேந்தே கத்துகிட்டாதான் நல்லா பாட வரும்போல.//

      அப்போ ..... உங்களுக்கு நல்லா பாட வரும் என்று நினைக்கிறேன்.

      { நீங்களும் சின்னப்புள்ளை தானே! :) }

      நீக்கு
  38. ஸ்ரீ முத்துஸ்லாமி தீஷிதர் பற்றிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. இசை மும்மூர்த்திகளில் ஒருவர்...இவர் குறித்த பல செய்திகள் இந்தப்பதிவில்தான் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு