என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 30 மார்ச், 2012

ரதியும் மன்மதனும் !


மதன த்ரயோதசீ 04.04.2012 புதன்கிழமை





சைத்ர சுக்லபக்ஷ த்ரயோதசியான 04.04.2012 புதன் அன்று மாலை கணவன் மனைவி இருவரும் மன்மதனை, அவர் மனைவி ரதி தேவியுடனும், நண்பன் வஸந்த [ருது] தேவனுடனும், கரும்பில் ஆவாஹனம் செய்து பூஜை செய்து, கீழ்க்கணடவாறு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். 

வஸந்தாய நமஸ்துப்4யம் வ்ருக்ஷ கு3ல்ம லதாஸ்ரய!
ஸஹஸ்ரமுக ஸம்வாஸ காமரூப நமோஸ்துதே
[நிர்ணயஸிந்து - 67]

நமோஸ்து பஞ்ச பா3ணாய ஜக3தா3ஹ்லாத3 காரிணே
மன்மதா2ய ஜக3ந் நேத்ரே ரதிப்ரீதி ப்ரியாத தே 

என்று ப்ரார்த்தனை செய்துகொண்டு; 

க்லீம் காமதே3வாய நம:
ஹ்ரீம் ரத்யை நம:
ஸ்மர ஸரீராய நம:
அநங்கா3ய நம:
மன்மதா2ய நம:
காமாய நம:
வஸந்த ஸகா2யநம:
ஸ்மராய நம:
இக்ஷு சாபாய நம:
புஷ்பாஸ்த்ராய நம:

என்று 10 நாமாக்கள் சொல்லி மன்மதனை நினைத்து தம்பதிகளாக ஸ்வாமி ஸன்னிதியில் நமஸ்காரம் செய்யலாம். 

இதனால் கணவன் மனைவிக்குள் மேன்மேலும் அன்பும் பிரேமையும் அதிகரிக்கும். 



Best of Luck


oooOooo






05.04.2012 வியாழக்கிழமை “பங்குனி உத்திரம்”
இது பற்றிய தனிப்பதிவு வெளியிட உள்ளேன்.




oooOooo


09.04.2012 திங்கட்கிழமை
ஸங்கடஹர சதுர்த்தி


ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபக்ஷ சதுர்த்திக்கு [பெளர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது திதி] ஸங்கடஹர சதுர்த்தி என்று பெயர். கணபதியின் முக்கியமான 32 திரு உருவங்களில் ’ஸங்கடஹர கணபதி’ என்பவரும் ஒருவர். 



இன்று பகல் முழுவதும் உபவாஸம் இருந்து, மாலையில் சந்திரன் உதயமானதும், ஸங்கடஹர கணபதியை அபிஷேகம், அர்ச்சனை, ஸ்தோத்ர பாராயணம் மூலம் உபாஸித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 21 முறை சொல்லி ப்ரார்த்தனை செய்வதால் அனைத்து ஸங்கடங்களும் [இன்னல்களும்] விலகும்.

க3ணாதி4 பஸ்த்வம் தே3வேஸ!
சதுர்த்2யாம் பூஜிதோமயா
கஷ்டாந் மாம் மோசயேஸாந!
ஸர்வமிஷ்டம் ச தே3ஹிமே 

oooooOooooo


10.04.2012 செவ்வாய்க்கிழமை
ஸ்ரீ வராஹ ஜயந்தி


ஹிரண்யாக்ஷன் என்னும் அஸுரன் பூமியைப் பாய்போல் சுருட்டி கடலுக்கடியில் வைத்தபோது, எம்பெருமான் ஸ்ரீ வராஹமூர்த்தியாக அவதரித்து, பூமியை மீட்டெடுத்து பிரதிஷ்டை செய்து ஹிரண்யாக்ஷனை ஸம்ஹரித்தார்.



இவ்வாறு வராஹ அவதாரம் செய்த நாளான இன்று, தாயாருடன் சேர்த்துள்ள ஸ்ரீ லக்ஷ்மீ வராஹ மூர்த்தியாக த்யானம் செய்து பாகவத்திலுள்ள ஸ்ரீ வராஹ அவதார கட்டம் பாராயணம் செய்து வராஹ மந்த்ரம் ஸ்தோத்ரம் சொல்லி பூஜை செய்து, பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகள், கடலை போன்றவைகளை வெல்லம் சேர்த்து வேக வைத்து, நிவேதனம் செய்யலாம்.

இதனால் வஸிப்பதற்கு சொந்தமாக நாம் விரும்பும் நிலம் [பூமி] க்ருஹம் [வீடு] கிட்டும். மேலும் நிலம், மனை மற்றும் க்ருஹம் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். அனைத்துப் ஸுகங்களையும் அனுபவித்து இறுதியில் தமிழில் ’வீடு’ என்று கூறப்படும் மோக்ஷமும் கிட்டும்.



-oooOooo-   
சுபம்
-oooOooo-        

  

  



25 கருத்துகள்:

  1. புதிய தகவல்கள்... பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சுவாரசியமான தகவல்கள்...இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.
    வரப்போகும் பதிவுகள் பற்றிய தகவலுக்கும் நன்றி ...

    பதிலளிநீக்கு
  3. தம்பதிகள் ஒற்றுமைக்கு இப்படி ஒரு பூஜை இருக்கிறதா...தகவல் புதிது!

    பதிலளிநீக்கு
  4. ”மதனத்ரயோதசி ’ கேள்விப்பட்டதே இல்லை! நன்றி.

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே புதிய தகவல்கள். மதனத்ரயோதசி பற்றியும் பொருத்தமான கரும்பும் கலக்கல் செய்தி.

    பதிலளிநீக்கு
  6. பல அறிய தகவல்களைப் பகிரும் உங்கள் பதிவுகள் தனி சுவாரசியம்

    பதிலளிநீக்கு
  7. மதன த்ரயோதசி நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.தகவல்களுக்கும் பகிர்விற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  8. அட ராமா இப்போது உள்ள அன்பே தாங்க முடியவில்லை..

    உங்களை நம்பி இந்த மதன த்ரயோதசி பதிவை எங்க வீட்டு மாமியிடம் காண்பிக்கிறேன். அதை பின் கிடைக்கும் பலனை போட்டோ எடுத்து அனுப்புகிறேன். அன்பினால் என் உடம்பில் எங்கெங்கு வீக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள்தான் கணக்கிட்டு சொல்ல வேண்டும்


    *******பலருக்கும் தெரியாத அல்லது அறியாத விஷயங்கள் உங்கள் தளத்தில் "பொக்கிஷம்" போல கிடைக்கின்றன. உங்களது இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்*********

    பதிலளிநீக்கு
  9. சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்திவழிபாடு பகிர்வு பயன்மிக்கது ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீ வராஹ ஜயந்தி பற்றிய அருமையான பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப சுவாரசியமான தகவல்கள்...இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.
    வாழ்த்துகள்..
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  12. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அரிய பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பித்துள்ள என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய

    திருமதிகள்:
    -----------

    01. கோவை2தில்லி Madam அவர்கள்

    02. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்

    03. லக்ஷ்மி Madam அவர்கள்

    04. ராஜி Madam அவர்கள்

    05. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்

    06. கோவைக்கவி வேதா.இலங்காதிலகம் Madam அவர்கள்

    மற்றும்

    திருவாளர்கள்:
    ==============

    01. ஸ்ரீராம் Sir அவர்கள்

    02. சென்னை பித்தன் Sir அவர்கள்

    03. விச்சு Sir அவர்கள்

    04. ரிஷ்பன் Sir அவர்கள்

    05. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்

    06. ’அவர்கள் உண்மைகள்’ அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்

    vgk

    பதிலளிநீக்கு
  13. Great Post. Varaha jayanthi is new to me. Thanks for the information, Awaiting for your Panguni utharam post.
    ]viji

    பதிலளிநீக்கு
  14. viji said...
    //Great Post. Varaha jayanthi is new to me. Thanks for the information, Awaiting for your Panguni utharam post.
    ]viji//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மேடம்,

    பங்குனி உத்திரப்பதிவு நாளை 2/4/12 மதியம் 3 மணிக்கு வெளியாகும்.

    பதிலளிநீக்கு
  15. சங்கடஹர = சங்கடங்களை நீக்கும்
    அருமையான வாக்கியம். துக்க நாஸ்தி, சகப்பிராப்தி. இதற்காகத்தானே நாம் அனைவரும் அல்லாடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  16. வடக்கே நிறய பேரு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பாங்க.

    பதிலளிநீக்கு
  17. நல்ல, பயனுள்ள தகவல்கள்.

    மன்மதன், ரதியை பூஜிக்க இன்னும் 10 மாதங்கள் காத்திருக்க வேண்டுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 19, 2015 at 12:58 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //நல்ல, பயனுள்ள தகவல்கள். //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ.

      //மன்மதன், ரதியை பூஜிக்க இன்னும் 10 மாதங்கள் காத்திருக்க வேண்டுமே.//

      அவ்வாறு காத்திருக்கும் இன்னும் 10 மாதங்களில் மேலும் ஓர் குழந்தையையே பெற்றுக்கொள்ளலாம். அதனுடன் சேர்ந்தே தாங்கள் ரதி மன்மதனை பூஜிக்கலாம். :))))))

      இது எப்படியிருக்கு ! :)

      நீக்கு
  18. இது பற்றியுள் இதுவரை கேள்வி பட்டதில்லை. ஸ்ரீவராஹர் படங்கள் நல்லா இருக்கு. உங்க பக்கம் வந்தாலே புதுசு புதுசா நெறய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது.

    பதிலளிநீக்கு
  19. படங்கள் அழகு...சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்திவழிபாடு ஸ்லோகம் பலருக்கும் பலனுள்ளதாக இருக்கும்!!!

    பதிலளிநீக்கு