About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, March 7, 2012

ஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்




ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்

நிறைவுப் பகுதி-20

ஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்தர 
சதநாம ஸ்தோத்ரம்

ஸ்ரீ கணேசாய நம: அஸ்ய ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரஸ்ய ஸ்ரீ சேஷ ரிஷி: அனுஷ்டுப்சந்த: ஸ்ரீ கிருஷ்ணோ தேவதா, ஸ்ரீ க்ருஷ்ண ப்ரீத்யர்தே ஸ்ரீக்ருஷ்ணாஷ்டோத்தர சதநாம ஜபே விநியோக: சேஷ உவாச


1. ஸ்ரீ க்ருஷ்ண: கமலாநாதோ வாஸுதேவஸ்ஸநாதன:
வஸுதேவாத்மஜ: புண்யோ லீலாமானுஷவிக ரஹ:


2. ஸ்ரீ வத்ஸ கெளஸ்துபதரோ யசோதா வத்ஸலோஹரி:
சதர்புஜாசக்ராஸி கதாசங்காத்யுதாயுத:


3. தேவகீநந்தனஸ் ஸ்ரீசோ நந்த கோபப் ப்ரியாத்மஜ:
யமுனாவேக ஸம்ஹாரீபலபத்ரப் ப்ரியானுஜ:


4. பூதனாஜீவித ஹரஸ் சகடாஸுர பஞ்ஜன:
நந்தவ்ரஜ ஜனாநந்தி சச்சிதாநந்த விக்ரஹ:


5. நவநீத விலிப்தாங்கோ நவநீத நடோநக:
நவநீத நவாஹாரோ முககுந்த ப்ரஸாதக:


6. ஷோடசஸ்ஸ்த்ரீ சஹஸ்ரேசஸ் திரிபங்கீ மதுராக்ருதி:
சுகவாக ம்ருதாப் தீந்துர் கோவிந்தோ யோகினாம் பதி:  


7. வத்ஸவாட சரோநந்தோ தேனுகாஸுரபஞ்ஜன:
த்ருணீக்ருத த்ருணாவர்தோ உமலார்ஜுன பஞ்சன:


8. உத்தால தாலபேத்தா ச தமாலச்யா மலாக்ருதி:
கோப கோபீச்வரோ யோகீ கோடிஸுர்ய ஸமப்ரப:



9. இளாபதி: பரம்ஜ்யோதிர், யாத வேந்ரோ யதூத்வஹ:
வனமாலீ பீதாவாஸா: பாரிஜாதா பஹாரக:


10. கோவர்தனாசலோத்தார்த கோபாலஸ் ஸர்வபாலக:
அஜோநிரஞ்சஜன: காமஜனக: கஞ்ஜலோசன:  



11. மதுஹா மதுரா நாதோ த்வாரகா நாயகோ பலீ
ப்ருந்தாவானாந்த ஸஞ்சாரீ துளஸீதாம் பூஷண:


12. ஸ்யமந்தக மனோஹர்தா நர நாராயணாத்மக:
குப்ஜா க்ருஷ்டாம் பரதரோ மாயீ பரமபூருஷ:


13. முஷ்டிகாஸுரசாணூர மல்லயுத்த விசாரத:
ஸம்ஸாரவைரீ கம்ஸாரி முராரிர் நரகாந்தக:


14. அனாதி ப்ரஹ்மசாரீச க்ருஷ்ணாவ்யஸனகர்சக:
சிசுபாலசிரஸ்சேத்தா துர்யோதன குலாந்தக:


15. விதுராக்ரூர வரதோ விஸ்வரூப ப்ரதர்சக:
ஸத்யவாக் ஸத்ய ஸங்கல்பஸ் ஸத்யபாமாரதோ ஜயீ 


16. சுபத்ரா பூர்வஜோ விஷ்ணுர் பீஷ்மமுக்தி ப்ரதாயக:
ஜகத்குரு ஜகந்நாதோ வேணுநாத விசாரத:


17. வ்ருஷபாசுர வித்வம்ஸீ பாணாசுரபலாந்தக:
ய்திஷ்டிர ப்ரதிஷ்டாதா பர்ஹி பர்ஹா வதம் ஸக:


18. பார்த்த ஸாரதி ரவ்யக்தோ கீதாம்ருத மஹோததி:
காலிய பணமாணிக்ய ரஞ்ஜித ஸ்ரீபதாம்புஜ:


19. தாமோதரோ யக்ஞய போக்தாதான வேந்த்ர விநாசக:
நாராயண: பரம்ப்ரம்ம பன்னகா சனவாஹன:


20. ஜலக் க்ரீடாஸமாஸக்த கோபீ வஸ்த்ராப ஹாரக:
புண்யஸ்லோகஸ் தீர்தபாதோ வேத வேத யோத யாநிதி:


21. ஸர்வதீர்த்தாத்மக: ஸர்வக்ரஹரூபி பராத்பர:
ஏவம் ஸ்ரீ க்ருஷ்ண தேவஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம்

 

பலஸ்ருதி


1. க்ருஷ்ணேன க்ருஷ்ண பக்தேன ச்ருத்வா கீதாம்ருதம் புரா
ஸ்தோத்ரம் க்ருஷ்ண ப்ரியகரம் க்ருதம் தஸ்மான் மயாபுரா


2. க்ருஷ்ண நாமாம்ருதம் நாம ப்ரமானந்த தாயகம்
அத்யுபத்ரவது: ககனம் பரமாயுஷ்ய வர்த்தனம்


3. தானம் ச்ருதம் தபஸ் தீர்த்தம் யத்க்ருதம் த்விஹ ஜன்மனி
படதாம் ச்ருன்வதாம் சைவ கோடிகோடி குணம்பவேத்


4. புத்ர ப்ரதம், அபுத்ரானாம் அகதீனாம் கதிப்ரதம்
தனாவஹம் தரித்ரானாம் ஜயேச்சூனாம் ஜயாவஹம் 


5. சிசூனாம் கோகுலானாம் ச புஷ்டிதம் புஷ்டிவர்தனம்
வாதக்ரஹ ஜ்வராதினாம் சமனம் சாந்திமுக்திதம்


6. ஸமஸ்த காமதம் ஸத்ய: கோடிஜன்மாக நாசனம்
அந்தே க்ருஷ்ண ஸ்மரணதம்ப வதாப பயாபஹம் 


7. க்ருஷ்ணாய யாதவேந்த்ராய ஞானமுத்ராய யோகினே
நாதாய ருக்மிணீசாய க்ரஹ பாக்ஸர்வ ப்ரியதமோ பவேத்


8. இமம் மந்த்ரம் மஹாதேவ ஜபன்னேவ திவானிசம்
ஸர்வக்ரஹானு க்ரஹ பாக் ஸர்வ ப்ரியதமோ பவேத்


9. புத்ர பெளத்ரை: பரிவ்ருத:ஸர்வஸித்தி ஸம்ருத்திமான்
நிர்விச்ய போகான் அந்தேபி கிருஷ்ண ஸாயுஜ்ய மாப்னுயாத்
இதி ஸ்ரீ நாரத பஞ்ச ராத்ரே ஞானாம்ருத ஸாரே
உமா மஹேஸ்வர ஸம்வாதேதரணிசேஷ ஸம்வாதே
ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டோத்த்ர சதநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்


ஸ்ரீ பகவானுடைய இனிய திருநாமங்களே இந்த கோரமான கலியுகத்தில் மாந்தர்களைக் கடைத்தேற்ற வல்ல எளிய ஸாதனம்.

ஸ்ரீ நாரத பஞ்சராத்ரத்தில் உள்ள ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரத்தின் பலச்ருதி 3 ஆவது ஸ்லோகப்படி, “நாம் செய்யும் எந்தப் பாராயணங்களும், புண்ணிய காரியங்களும், இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பதாலும், சிரவணம் செய்வதாலும் கோடி, கோடி மடங்கு செய்ததாக ஆகும்” என்று சொல்லப்பட்டுள்ளது. 

இதை மனதிற்கொண்டு ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அவர் வாழ்நாளில் தினம் பாராயணம் செய்து வந்ததால், நாமும் இந்த ஸ்தோத்ரத்தை தினம் பாராயணம் செய்து வந்தோ அல்லது சிரவணம் செய்து வந்தோ உய்வு பெறவேண்டும்.






ஹரே ராம ஹரே ராம 
ராம ராம ஹர ஹரே !

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண 
க்ருஷ்ண க்ருஷ்ண ஹர ஹரே !!

சுபம்

[ ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பற்றிய 
இந்தத் தொடர் இத்துடன் நிறைவடைகிறது ]

ooooooooooooooooooooooooooooooooooooooooo

ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா பற்றியும், 
தனது ஸத்குருநாதரான ஆங்கரை பெரியவா என அழைக்கப்படும் 
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பற்றியும், 
அவரின் சிஷ்யரும், உபந்யாசகருமான 
திரு. கணபதி ஸுப்ரமணியன் அவர்கள் சொல்லியுள்ளது பற்றி 
படங்களுடன் படிக்க இணைப்பு: http://valmikiramayanam.in/?page_id=2

ooooooooooooooooooooooooooooooooooooooooo

ஓர் முக்கிய அறிவிப்பு

நாளைய தினம் 08.03.2012  
வியாழக்கிழமை இரவு
‘மாசி+பங்குனி மாதங்கள் கூடும் 
நன்நாளில் செய்யப்படும் 
மிகவும் விசேஷமான 
‘காரடையான் நோன்பு’ 
பற்றிய சிறப்புத் தகவல்கள் 
வெளியிடப்பட உள்ளன.

வரும் 14.03.2012 புதன்கிழமையன்று 
கொண்டாடப்பட இருக்கும் மேற்படி 
காரடையான் நோன்பு 


அனுஷ்டிக்க இருப்பவர்களுக்கு 
அதில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன.
படித்துப்பயன் பெறுமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  


இப்படிக்கு 
தங்கள் பிரியமுள்ள
vgk

27 comments:

  1. படங்களுடன் ரொம்பவே அழகான பகிர்வாக இருந்தது சார்.

    காரடையான் நோன்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

    நோன்பை அனுஷ்டிக்க வேண்டிய நேரத்தை (இந்த ஆண்டின்) குறிப்பிட்டால் எனக்கு உதவியாக இருக்கும் சார்.

    ReplyDelete
  2. கோவை2தில்லி said...
    //படங்களுடன் ரொம்பவே அழகான பகிர்வாக இருந்தது சார்.

    காரடையான் நோன்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

    நோன்பை அனுஷ்டிக்க வேண்டிய நேரத்தை (இந்த ஆண்டின்) குறிப்பிட்டால் எனக்கு உதவியாக இருக்கும் சார்.//

    தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

    நோன்பு பற்றிய முழுத் தகவல்களும் [நேரம் உள்பட] அதில் இடம்பெறும். vgk

    ReplyDelete
  3. “நாம் செய்யும் எந்தப் பாராயணங்களும், புண்ணிய காரியங்களும், இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பதாலும், சிரவணம் செய்வதாலும் கோடி, கோடி மடங்கு செய்ததாக ஆகும்”

    அருமையான பயனுள்ள பகிர்வுகல்.. நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  4. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹர ஹரே !
    ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹர ஹரே

    அமிர்தமயமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள் ஐயா,

    ReplyDelete
  5. படங்களும் பகிர்வும் நிறைவளித்தன.. இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. பக்தி மார்க்கத்தில் பயணிக்க செய்கிறீர்கள்..

    ReplyDelete
  7. படங்களுடன் அழகான அற்புதமான பகிர்வாக இருந்தது.

    காரடையான் நோன்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

    அன்புடன் எம்.ஜே.ராமன்.

    ReplyDelete
  8. காரடையார் நோன்பு பற்றி விளக்கம் மட்டும்தானா.?நோன்புக் கொழுக்கட்டை( அடை)கிடையாதா/--இனிப்பு ,உப்பு இரண்டும்!

    அழகான படங்களுடன் நிறைவான பதிவு,

    ReplyDelete
  9. ஸ்ரீ பகவானுடைய இனிய திருநாமங்களே இந்த கோரமான கலியுகத்தில் மாந்தர்களைக் கடைத்தேற்ற வல்ல எளிய ஸாதனம்.//

    நம்மை கடைத்தேற்ற வல்ல எளிய முறை இறைவன் திருநாமங்கள் தான் மிக மிக உண்மை.

    துளசியும், பவளமல்லியும் பக்தி சுவை கூட்டுகிறது.

    கண்ணனின் அற்புதலீலைகளின் படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது.
    நன்றி சார்.

    ReplyDelete
  10. பவழ மல்லி கவர்ந்து இழுத்தது - உங்கள் பதிவினைப் போலவே....

    ReplyDelete
  11. குழந்தைக்கண்ணனின் படங்கள் அத்தனையும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல அழகோ அழகு. பகிர்வுக்கு மிகவும் நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  12. 250 - வது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..

    பவள மல்லியாய் , துளசியாய்
    ஸ்ரீ கிருஷண பகவானுடைய அஷ்டோத்திரம் பாடி அற்புதமாய் மலர்ந்து மணம் பரப்பி மனம் நிறைத்த
    அழகான பதிவுகள் அனைத்துக்கும் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. மனம் கவர்ந்த பதிவு!

    பகிர்வுக்கு நன்றி ஐயா!

    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  14. 250 .வது வெற்றிகர அருமையான பதிவுக்கு மனம் நிறைந்த சந்தோஷ வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  15. Aha Aha Ahaha........
    Ethanai kanan, kalvan,kavalan,kunju, kutty, chellam,manamohana.......
    I need time a lot of time to enjoy every bit.
    Very very precious post sir,
    By the by congragulations. For the worth 250 posts.
    Let me prey God to give you energy to do like this more and more.
    Eagerly waiting for the nonbu post.
    viji

    ReplyDelete
  16. கொள்ளை அழகு..........................................................என் கண்ணன்.....

    விரதம் உண்டு. தகவலுக்கு waiting.

    ReplyDelete
  17. pictures are very nice.thanks for a very good post.

    ReplyDelete
  18. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  19. பதிவும் அழகான படங்களும் அருமை

    ReplyDelete
  20. ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்த கிருஷ்ணனே சந்தோஷத்தின் பிம்பம்.

    ReplyDelete
  21. மனதுக்கு நிறைவான பதிவு. நன்றி

    ReplyDelete
  22. அப்படியே கிருஷ்ணாவதாரத்தை புகைப்படத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்.

    நன்றியோ நன்றி.

    லயாக்குட்டிக்கு ஏற்கனவே கிருஷ்ணர் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    இனி அவளுக்குக் காட்ட அருமையான புகைப்படங்கள், எடுத்துச் சொல்ல நல்ல, நல்ல விஷயங்கள்.

    தன்யனானேன்.

    கோபு அண்ணா, இப்ப எல்லாம் நான் உங்க வலைத் தளத்தில் பின்னூட்டம் கொடுக்கும் போது அவள் பக்கத்தில் இருந்தால், உங்கள் புகைப் படத்தைப் பார்த்ததுமே ‘கோபு தாத்தா’ என்கிறாள்.

    ReplyDelete
  23. @Jayanthi Jaya

    //லயாக்குட்டிக்கு ஏற்கனவே கிருஷ்ணர் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இனி அவளுக்குக் காட்ட அருமையான புகைப்படங்கள், எடுத்துச் சொல்ல நல்ல, நல்ல விஷயங்கள்.

    தன்யனானேன்.

    கோபு அண்ணா, இப்ப எல்லாம் நான் உங்க வலைத் தளத்தில் பின்னூட்டம் கொடுக்கும் போது அவள் பக்கத்தில் இருந்தால், உங்கள் புகைப் படத்தைப் பார்த்ததுமே ‘கோபு தாத்தா’ என்கிறாள்.//

    ஜெயா பாட்டி ஒருவேளை என்னை மறந்துவிட்டாலும், பேத்தி லயாக்குட்டி மறக்காமல் என்னை நினைவூட்டுவாள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    பட்டுச்செல்லம், குட்டித்தங்கம் நம் லயாக்குட்டிக்கு என் அன்பான ஆசிகள். :)))))))))))

    ReplyDelete
  24. இந்தவாட்டி நெறய படங்க இருக்குது. அல்லாமும் நல்லாகீது.

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)

      Delete
  25. நீங்கள் சொல்லி இருக்கும் ஸ்லோகங்களை எல்லாம் பெரிய நோட்புக்கில் எழுதி சாமி பிறையில் கண்படும் இடத்தில் மாட்டி இருக்கேன். தினசரி நாலு ஸ்லோகங்களாவது சொல்லமுடியும் இல்லையா.

    ReplyDelete
  26. ஸ்லோகங்களுடன் இதுவரை பார்த்தவற்றைவிட அற்புதப் படங்கள்..நெட்டில் என்னதான் கொட்டிக்கிடந்தாலும் வண்ணக்கதம்பமாய் கட்டி அழகுபடுத்துவது...உங்கள் திறமை..

    ReplyDelete