About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, March 28, 2012

ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !


31.03.2012 சனிக்கிழமைக்கான விசேஷங்கள்

1) அசோகாஷ்டமி


அசோகம் என்றால் மருதாணி. இன்றைய தினம் அசோகம் என்னும் மருதாணிச் செடியை அல்லது மருதாணி மரத்தை பூஜை செய்து ஏழு மருதாணி இலைகளை கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச்சொல்லி சாப்பிட்டு விடவேண்டும். இதனால் மனதில் உள்ள துக்கமும் துன்பமும் விலகி ஸுகம் கிட்டும்.

த்வா மஸோக நராபீ4ஷ்ட மது4மாஸ ஸமுத்3ப4வ
பிமா3மி ஸோக ஸந்தப்தோ மாமஸோகம் ஸதா3குரு

எச்சரிக்கை:
[மருதாணி இலைகளை சாப்பிடும் வழக்கம் உண்டா? 
என்பது எனக்கும் சந்தேகமாகவே உள்ளது. 
இது ஓர் ஆன்மிக மாத இதழில் நான் படித்த தகவல் மட்டுமே - vgk]2) ஸ்ரீ ராம நவமி 

சைத்ர மாஸி நவம்யாம் து 
ஜாதோ ராம: ஸ்வயம் ஹரி: 
புநர்வஸ்வ்ருஷ ஸம்யுக்தா ஸா திதி2: ஸர்வ காமதா3
ஸ்ரீராம நவமீ ப்ரோக்தா கோடி ஸூர்ய க்3ரஹாதி4கா 
[நிர்ணய ஸிந்து - 64]

அயோத்யா தசரதராஜனுக்கும் கெளஸல்யா தேவிக்கும், பகவான் மூத்த குமாரனாக ஸ்ரீராமராக சித்திரை மாதம் நவமி திதியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் கடக லக்னத்தில் நடுப்பகலில் ஐந்து க்ரஹங்கள் உச்சமாக இருக்கும்போது அவதரித்தார். இந்த நாள் கோடி ஸூர்ய க்ரஹணங்களைப் போன்ற புண்யங்களைத் தரும் நாள். இதைக்கொண்டாடுவதே ஸ்ரீ ராம நவமியாகும். 


ஸ்ரீ ராமாவதாரம் கர்போத்ஸவம் ஜனனோத்ஸவம் என்று இரு வகையாகக் கொண்டாடப்படுகிறது. 


இராவணன், கரன், தூஷணன், திரிசிரஸ், மாரீசன், சுபாகு, தாடகை, விராதன், கபந்தன் போன்ற அஸுரர்களிடமிருந்து முனிவர்களையும் தேவர்களையும் காப்பாற்ற ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதரிக்கப்போகிறார் என்று தெரிந்து கொண்ட மஹரிஷிகள், கெளஸல்யாவின் கர்ப்பவாஸத்தைக் கொண்டாடினார்கள்.


அதுதான் கர்ப்போத்ஸவம். அதாவது ஸ்ரீராமநவமிக்கு முன்பாக ஒன்பது நாட்கள் [23.03.12 முதல் 31.03.12 வரை] நவமியை ஸ்ரீமத்ராமாயண பாராயணம் ப்ரவசனம் செய்து கொண்டாடுவது கர்போத்ஸவம் எனப்படும்.


ஸ்ரீராமர் பிறந்த நாளிலிருந்து [31.03.12 முதல் 08.04.12 வரை] ஒன்பது நாட்கள் ஸ்ரீமத் ராமாயண பாராயணம், ப்ரவசனம் முதலியவைகளுடன் கொண்டாடுவது ஜனனோத்ஸவம். இந்த உத்ஸவ நாட்களில் ஸ்ரீமத் ராமாயணம் பாராயணம் செய்வதும் ஸ்ரீமத் ராமாயண கதையை ஸதாசாரமுள்ளவர்கள் மூலம் கேட்பதும் அனைத்து ஸுகத்தையும் தரும்.


ஸ்ரீராமர் விசுவாமித்ரருடன் சென்ற போதும், பதினான்கு ஆண்டுகள் வனவாஸமுமாக பெரும்பாலும் காட்டிலேயே வஸித்ததால் வெப்பத்தைப்போக்க, விசிறி தானம் செய்து, நீர்மோரும் பானகமும் தானம் செய்யலாம்.


ஸ்ரீ ஸீதாராமர் க்ருபையால் குடும்பத்தில் விரைவில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். 3) ஒற்றுமையைத்தரும் ஸ்ரீ ராமர் விக்ரஹம் - படம் - தானம்


ஸ்ரீ ராமநவமியன்று [31.03.2012] ஸ்ரீராம விக்ரஹத்தாலோ, தங்க/வெள்ளி பிரதிமைகளினாலோ, ஸ்ரீராமர் படத்திலோ, ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை முறையாக பூஜை செய்து, ராம விக்ரஹம், ராமபிரதிமை,ராம பட்டாபிஷேகப்படம் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை, தொடர்ந்து பூஜை செய்ய விரும்புபவர்களுக்கோ அல்லது அருகில் உள்ள கோயிலுக்கோ பஜனை மடத்துக்கோ தானம் செய்யலாம்.   

ஸ்ரீராமர் அருளால் குடும்பத்தில் கணவன்+மனைவி; பெற்றோர்+குழந்தை; அண்ணன்+தம்பி ஆகியவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும்.

விக்ரஹம், பிரதிமை, படமானது அழகான ஸ்ரீராமர், தனது இடது பக்கத்தில் ஸ்ரீஸீதாதேவியுடன் அமர்ந்து, தனது வலது கையால் ஞான முத்திரை காண்பித்து, இடது கையால் ஸ்ரீஸீதாதேவியை அணைத்துக்கொண்டு, வீர ஸிம்மாஸனத்தில் அமர்ந்து கொண்டு இருப்பவராகவும், ஸ்ரீராமருக்கு இரண்டு பக்கங்களிலும் பரதரும், சத்ருக்னரும் வெண்சாமரம் வீசுபவர்களாகவும், அம்பு + வில்லுடன் ஸ்ரீ லக்ஷ்மணரும் மற்றும் ஆஞ்ஜநேயருடன் இருக்கும் விக்ரஹம் அல்லது படம் தான், தானம் தரவும் பூஜை செய்யவும் சிறந்தது.  இவ்வாறான படமோ விக்ரஹமோ கிடைக்காத பக்ஷத்தில், எந்த மாதிரியான ஸ்ரீ ராமர் படத்தையோ விக்ரஹத்தையோ பிரதிமையையோ தானம் செய்யலாம். 


ஸ்ரீராம விக்ரஹத்தை அல்லது படத்தை 9 நாட்களோ அல்லது ஒரே ஒரு நாளோபூஜை செய்து, ஸ்ரீ ராம நவமீ புண்யகாலே ராம விக்3ரஹ [ ஸ்ரீஸீதாராம சித்ர பட2 ] தா3னம் கரிஷ்யே என்று சொல்லி கீழ்க்கண்ட ஸ்லோகமும் சொல்லி ஸ்ரீராமபக்தியுள்ளவருக்கு தானமாகத் தந்து விட வேண்டும்.


இமாம் ஸ்வர்ணமயீம் ராம ப்ரதிமாம் ச ப்ரயத்னத:
ஸ்ரீராம ப்ரீதயே தா3ஸ்யே ராமப4க்தாய தீ4மதே
ப்ரீதோ ராமோ ஹரத்வாஸு பாபாநி சுப3 ஹூநிமே
அநேக ஜன்ம ஸம்ஸித்3தா4நி அப்4யஸ்தாநி மஹாந்தி ச 

இமாம் ஸ்ரீராம ப்ரதிமாம் ஸ்ரீ ராமசந்த்ர ப்ரீதிம் காமயமான:
ஸ்ரீ ராமசந்த்ர ஸ்வரூபாய ஸம்ப்ரத3தே3

இதனால் ஸ்ரீ ஸீதாராமரின் அருள் கிட்டும். ஒற்றுமை ஏற்படும். ஏழரை நாட்டு ஜன்மச்சனியின் தொல்லை போன்றவைகள் விலகும். நீண்ட ஆயுளும் மன நிம்மதியும் கிட்டும், விட்டுப்பிரிந்தவர்கள் விரைவில் ஒன்று சேருவார்கள் என்கிறது ’நிர்ணய ஸிந்து’ என்ற புஸ்தகம். 


2
=
ஸ்ரீராமஜயம்

ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   சுபம்

29 comments:

 1. அசோகாஷ்டமி என்ற ஒன்றை இது வரை நான் கேள்விப்பட்டதே இல்லை.இது எனக்கு புதுத் தகவல்.

  ஸ்ரீ ராம நவமி பற்றிய விளக்கங்களும் அருமையான தரிசனமாக ஸ்ரீ இராமர் குடும்ப சமேத படங்களும் தந்து அறியாத தகவல்களையும் அறிய வைத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 2. ஸ்ரீராமரின் அழகான படங்களும் தகவ்ல்களும் மனசுக்கும் கண்ணுக்கும் விருந்து.

  ReplyDelete
 3. நல்ல தகவல்கள்.....

  அசோகாஷ்டமி - எனக்கும் புதிய தகவல்.....

  ReplyDelete
 4. நல்லதகவல்களுக்கு நன்றி

  ReplyDelete
 5. ஓஒ..ஸ்ரீராம நவமி வருகிறதா?பேஷ்..பேஷ்...

  ReplyDelete
 6. ராமாயணம் சீரியல் யூட்யூப்பில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். லவ-குச கதை மனதை உருக்குகிறது.

  ReplyDelete
 7. ஸ்ரீராமநவமி, அசோகாஷ்டமி பற்றிய தகவல் அருமை. பொதுவாக மருதாணி இலைகளை யாரும் உண்ணுவதில்லை.

  ReplyDelete
 8. இந்த நாள் கோடி ஸூர்ய க்ரஹணங்களைப் போன்ற புண்யங்களைத் தரும் நாள். இதைக்கொண்டாடுவதே ஸ்ரீ ராம நவமியாகும்.

  சிறப்பான தகவல்கள் அளித்த பகிர்வுகள் இனிய நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 9. இராமபிரானின் படங்கள் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 10. I too recently read it in a book about Ashokastami.
  Very good post about Ramayanam. I will surly give a frammed Ramar picture as you mentioned to the nearby temple. Thanks Sir. It is new to me. To adopt what ever is punniya karyam is good no?
  I will certainly adopt it.
  viji

  ReplyDelete
 11. I too recently read it in a book about Ashokastami.
  Very good post about Ramayanam. I will surly give a frammed Ramar picture as you mentioned to the nearby temple. Thanks Sir. It is new to me. To adopt what ever is punniya karyam is good no?
  I will certainly adopt it.
  viji

  ReplyDelete
 12. I too recently read it in a book about Ashokastami.
  Very good post about Ramayanam. I will surly give a frammed Ramar picture as you mentioned to the nearby temple. Thanks Sir. It is new to me. To adopt what ever is punniya karyam is good no?
  I will certainly adopt it.
  viji

  ReplyDelete
 13. அசோகாஷ்டமி இதுவரை நானும் கேள்விப்பட்டதில்லை.

  ராம நவமியையொட்டிய தகவல்களும் கேள்விப்படாதவை.

  அதேபோல அந்த மருதாணிக் கைகளில் மறைந்திருக்கும் கண்ணா யார் என்றும் தெரியவில்லை.உதவவும்.

  நன்றி விஜிகே.

  ReplyDelete
 14. அரிய தகவல்கள்.நன்றி.ஏப்ரில் 1ஆம் தேதியும் ராம நவமியாமே!(ஒரு நாள் வைணவர்களுக்கு ஒருநாள் ஸ்மார்த்தர்களுக்கு!)

  ReplyDelete
 15. சுந்தர்ஜி said...
  //அசோகாஷ்டமி இதுவரை நானும் கேள்விப்பட்டதில்லை.//

  பாம்பு பஞ்சாங்கத்தில் பாருங்கள்.
  போட்டுள்ளது.

  இருப்பினும் இதுவரை இது பற்றிய விபரங்கள் மட்டும் நமக்குத் தெரியாமல் இருந்து வந்துள்ளது.

  //ராம நவமியையொட்டிய தகவல்களும் கேள்விப்படாதவை.//

  தங்களின் கூற்று எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

  ஊறவைத்த பாசிப்பருப்பு+ வெள்ளரிப்பிஞ்சு கலவை,
  பானகம், நீர்மோர் மட்டுமாவது சாப்பிட்டுள்ளீர்களா? அல்லது அதுவும் கிடையாதா?

  எங்கள் ஊருக்கு வாங்கோ! அமர்க்களமாக எல்லாம் கிடைக்கும்.

  பனைஓலை விசிறியால் [மின் வெட்டினால் பாதிப்பானாலும்] விசிறிக்கொண்டே பார்த்து மகிழலாம்.

  //அதேபோல அந்த மருதாணிக் கைகளில் மறைந்திருக்கும் கண்ணா யார் என்றும் தெரியவில்லை. உதவவும்.//

  அது மட்டும் சஸ்பென்ஸ்.

  [நீங்கள் ஏதாவது கேட்டு, நான் ஏதாவது உளறி விடப்போகிறேனோ என பயமாக உள்ளது ஸ்வாமி]

  யாரும் நோக்காத ஒன்றை நீங்கள் உற்று நோக்கியுள்ளது எனக்கு மகிழ்வளிக்கிறது.

  நீண்ட நாட்களுக்குப்பின் வந்துள்ளீர்களே என நினைத்து சந்தோஷப்பட்டால், ஏதேதோ ”உதவவும்” என்று கேட்டு என்னை தர்ம சங்கடப்படுத்துகிறீர்களே, ஐயா!

  //நன்றி விஜிகே.//

  அடுத்தடுத்து பல புதிய விஷயங்கள் இது போலவே வெளியிட உள்ளேன்.

  தங்கள் அபூர்வ வருகைக்கு மிக்க நன்றி. சந்தோஷம்.

  ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

  ReplyDelete
 16. சென்னை பித்தன் said...
  //அரிய தகவல்கள்.நன்றி.ஏப்ரில் 1ஆம் தேதியும் ராம நவமியாமே!(ஒரு நாள் வைணவர்களுக்கு ஒருநாள் ஸ்மார்த்தர்களுக்கு!)//

  ஆமாம் ஐயா!

  ஸ்மார்த்தர்களுக்கு (விபூதிப்பட்டை அணிபவர்களுக்கு) 31.03.2012 சனிக்கிழமை அன்று ஸ்ரீ ராம நவமி என்றும்

  வைஷ்ணவர்களுக்கு [நாமம் அணியும் ஐயங்கார்களுக்கு] 01.04.2012 ஞாயிறு அன்று ஸ்ரீ ராம நவமி என்றும் தான் பாம்புப் பஞ்சாங்கத்தில் போட்டுள்ளது.

  புனர்பூச நக்ஷத்திரக் கணக்குப்படியும், நவமி திதி கணக்குப்படியும், பெரும்பகுதி சனிக்கிழமை தான் உள்ளது.

  மறுநாள் ஞாயிறு அன்று காலை 9.30 மணி வரை மட்டுமே நவமி உள்ளது. நக்ஷத்திரம் பூசம் ஆகி விடுகிறது.

  [போதாயன அமாவாசை மற்றும் சர்வ அமாவாசை போல இதிலும் ஏதோ கணக்குகள் உள்ளன போலும்]

  அன்புடன் vgk

  ReplyDelete
 17. ஸ்ரீராமரின் அழகான படங்களும் தகவல்களும் பார்க்கப் பார்க்க படிக்கப் படிக்க பரவசம்.
  அன்புடன் எம்.ஜே.ராமன்

  ReplyDelete
 18. அகோகாஷ்டமி புதிய தகவல். ஸ்ரீராம நவமியையொட்டி நல்ல பல தகவல்களை தந்ததற்கு நன்றி சார்.

  ReplyDelete
 19. அந்த மருதாணிக்கை சமாச்சாரம் யூகித்துவிட்டேன். அது நமக்குள்ளேயே இருக்கட்டும்.

  ராமநவமி என்றால் பானகம் நீர்மோர் சமாச்சாரம் வரைதான் தெரியும். ராமரின் பர்த் டே தெரியும். மற்ற விஷயங்கள்தான் புச்சு என்று சொல்ல வந்தேன்.

  டபுள் தேங்ஸ் விஜிகே.

  ReplyDelete
 20. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய

  திருமதிகள்:
  ===========

  01. ராஜி Madam அவர்கள்
  02. லக்ஷ்மி Madam அவர்கள்
  03. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்
  04. கீதமஞ்சரி Madam அவர்கள்
  05. விஜி Madam அவர்கள்
  06. கோவை2தில்லை Madam அவர்கள்

  மற்றும்

  திருவாளர்கள்:
  ==============

  01. ரிஷ்பன் Sir அவர்கள்
  02. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்
  03. ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி Sir அவர்கள்
  04. பழனி. கந்தசாமி Sir அவர்கள்
  05. சுந்தர்ஜி Sir அவர்கள்
  06. சென்னை பித்தன் Sir அவர்கள்
  07. மணக்கால் ஜே. ராமன் Sir அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  ReplyDelete
 21. VGK அவர்களுக்கு வணக்கம்! ராமநவமி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. தி.தமிழ் இளங்கோ said...
  //VGK அவர்களுக்கு வணக்கம்! ராமநவமி வாழ்த்துக்கள்!//

  வணக்கம் ஐயா. ஸ்ரீராமநவமி வாழ்த்துகள்.

  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!

  ஸ்ரீராமஜயம். ஸீதாராமஜயம்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 23. உற்புதமான படங்கள் தெரிந்திராத நிறய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது

  ReplyDelete
 24. அசோகாஷ்டமி முற்றிலும் புதிய தகவை.

  அருமையான படங்கள்.

  ராமர் பட்டாபிஷேகப் படம் ரொம்ப, ரொம்ப சூப்பர்.

  ReplyDelete
 25. படங்கலா ரொம்ப நல்லாகீது. மருதாணி எல சாப்புடலாமா அது வெசமில்ல

  ReplyDelete
  Replies
  1. mru October 20, 2015 at 11:23 AM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //படங்கலா ரொம்ப நல்லாகீது.// சந்தோஷம் :)

   //மருதாணி எல சாப்புடலாமா அது வெசமில்ல//

   நான் கொடுத்துள்ள எச்சரிக்கையைப் படித்துப்பாருங்கோ. நீங்களும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கோ, முருகு.

   இந்தப் போட்டியில் வெற்றிபெற்று பரிசு வாங்க வேண்டிய நேரத்தில் (விஷமான ?) விஷப்பரிக்ஷையாக மருதாணி இலைகளைச் சாப்பிடாதீங்கோ. :)

   Delete
 26. அசோகாஷ்டமி பற்றி இதுவரை தெரிஞ்சிருகலை. ஸ்ரீராமர் படங்களும் தகவல்களும் நல்லா இருக்கு.

  ReplyDelete
 27. நல்ல தகவல்கள்...அசோகம் என்றால் - மருதாணி...புதிய தகவல். நன்றி...

  ReplyDelete
 28. மருதாணித் தகவல் அதிசயமாகவும் புதியதாகவும் உள்ளது! அதன்பின் ஏதாவது விளக்கம் கிடைத்ததா?

  ReplyDelete