என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 3 மார்ச், 2012

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 5 of 8 ]
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-16ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை
பகுதி 5 of  816. சீதாதேவி அனுஷ்டித்த பதிவ்ரத்யத்தின் பலனாகத்தான் ஆஞ்ஜநேயர் வந்தார். இலங்கையில் சீதாதேவி அசோகவனத்தில் தனியாக இருக்கும்போது ராக்ஷஸிகள் “ராவணனை அனுசரித்தால் இலங்கைக்கு ராணியாகலாம்; இந்திரலோகத்திற்கு சமமான லங்கையில் ஐஸ்வர்யத்தை அனுபவிக்கலாம்” என்று ஆசை காட்டியும், அவர்கள் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாமலும், லங்கா ஐஸ்வர்யத்தை த்ருணமாக மதித்தும், ராவணனே நேரில் வந்தபோது, அவனைக் கடுமையாகப் பேசியும், பதிவ்ரத்யத்தை காப்பாற்றிக்கொண்டும், ஸ்ரீராம த்யானதோடே இருந்து வந்தாள் என்பதை கவனிக்க வேண்டும்.

லங்கா நகரத்தில் சீதாதேவி எப்படி இருந்து வந்தாளோ அப்படி பகவத் பக்தன், இந்தக் கலியுகத்தில் தர்மத்திற்கு விரோதமான ஆசைகளில் மனதை வைக்காமல் பகவந் நாமத்தை (ராம நாமத்தை) அனவரதம் ஜபித்துக் கொண்டும், ஸ்மரித்துக்கொண்டும் இருந்து வந்து ஜன்ம லாபத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். 

இந்தக் காரணங்களால், ஸ்ரீ வால்மீகி. ராமாயணத்தை “சீதாயாஸ் சரிதம் மஹத்” என்று பாலகாண்டத்தில் சொல்லியிருக்கிறார்.

17. ஸ்ரீ சீதாதேவி ஜீவாத்மாவாக இருந்து காட்டி நம் போன்றவர்கள் எப்படி வாழ்க்கையில் சுகத்திலும் துக்கத்திலும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை சுந்தரகாண்ட சரித்திரத்தில் அனேக இடங்களில் காட்டுகிறார்.

ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 27   

“தாம்தேவீம் தீனவதனாம் அதீனாம் பர்த்ரு தேஜஸா”

ஸ்ரீ சீதாதேவி கவலைக்குறியுள்ள முகம் உடையவளாக இருந்தாலும், ஸ்ரீராமரின் ஆற்றலை அறிந்திருந்ததால் கவலையற்றிருந்தாள். 

ஸ்ரீ ராமரையே நினைத்துக்கொண்டும், ராம நாமத்தையே ஸ்மரித்துக்கொண்டும் இருந்தால் நாமும் கவலையற்று இருக்கலாம்.

ஸர்க்கம் 19 - ஸ்லோகம் 22

ஆயச மானாம் துக்கார்தாம் ப்ராஞ்ஜலிம் தேவதாமிவ

சீதாதேவி தன் கூப்பிய கைகளுடன் இஷ்ட தேவதையை மனதார வேண்டிக் கொள்வதைப் போல் இருந்தாள்.

ஸ்ரீ அப்பைய தீக்ஷதர் அவர்கள், ஸ்ரீதுர்கா சந்த்ரகலா ஸ்துதி 15 ஆவது ஸ்லோகத்தில் ’ஸ்ரீ ருக்மணி தேவி விவாஹ சமயத்தில் தம்மை மணப்பதற்காக சிசுபாலன் வந்ததைக்கேட்டு, இராமயணத்தில் வந்த புலஸ்த்ய புத்ரனான ராவணன் தான் மறுபடியும் தனனை அபஹரிக்க சிசுபாலனாக வந்து விட்டான்; என்று நினைத்து, தேவியை ஸேவித்து தன் பயத்தைப் போக்கிக் கொண்டாள்’ என்று சொல்லியிருப்பதால், இங்கு சீதாதேவியும் துர்காதேவியைத்தான் வேண்டிக்கொண்டாள் என்பது புரிகிறது.

ஸர்க்கம் 26 - ஸ்லோகம் 50+51

ப்ரியான்ன ஸம்பவேத்துக்கம் அப்ரியான்னாதிகம் பயம் ....... 
நமஸ்தேஷாம் மஹாத்மனாம் !!

ஸ்ரீ சீதா தேவி பிரியம் - அப்ரியம் என்ற [விருப்பு வெறுப்பு] வேற்றுமை இல்லாமல் இருக்கிற மஹாத்மாக்களுக்கு நமஸ்காரம் செய்கிறாள். 

நாமும் கஷ்டப்படும்போதும் துக்கப்படும்போதும் மஹான்களை நமஸ்கரித்து சேவிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஸர்க்கம் 28 - ஸ்லோகம் 17

“இதீவ தேவீ பஹுதா விலப்ய ஸர்வாத்மனா ராமம் அனுஸ்மரந்தி”

துக்கத்தில் இருக்கும்போதும் எப்போதும் ஸ்ரீராமரையே நினைத்துக் கொண்டிருந்தாள்.   

ஸர்க்கம் 31 - ஸ்லோகம் 18

“ஸவயம் ப்ரஹர்ஷாம் பரமம் ஜகாம ஸர்வாத்மனா ராமம் அனுஸ்மரந்தி”

ஆஞ்ஜநேயரின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த போதும், எப்போதும் ராமனையே நினைத்துக் கொண்டு இருந்தாள்.

எந்த Situation னிலும் நாமும் ஸ்ரீ தேவியைப்போல் எப்போதும் ஸ்ரீ ராமரை நினைத்துக்கொண்டும், ராம நாமத்தை சொல்லிக்கொண்டும் இருக்க வேண்டும். 

ஸர்க்கம் 32 - ஸ்லோகம் 11

“ராமேதி ராமேதி ததைவ புத்யா விசிந்த்ய வாசா ப்ருவதி தமேவ
தஸ்யானு ரூபாம் ச கதாம், தமர்த்தமேவம் ப்ரவஸ்யாமி ததா ச்ருனோமி”

சீதாதேவி ராமா! ராமா! என்று மனதில் சிந்தித்துக்கொண்டும், வெளியே வார்த்தைகளாலும் அவர் பெயரையே சொல்லிக்கொண்டும் இருந்ததால், ஆஞ்ஜநேயர் மூலம் ராமரைப்பற்றி கேட்கிறாள். 

நாமும் ராம நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தால் ராமாயண கதையை மஹான்கள் மூலம் கேட்க சந்தர்ப்பம் கிடைக்கும்.தொடரும்       

19 கருத்துகள்:

 1. ஸ்ரீ சீதாதேவி ஜீவாத்மாவாக இருந்து காட்டி நம் போன்றவர்கள் எப்படி வாழ்க்கையில் சுகத்திலும் துக்கத்திலும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை சுந்தரகாண்ட சரித்திரத்தில் அனேக இடங்களில் காட்டுகிறார்//
  அற்புதமான ஆன்மீகத்தொடர்!
  நன்றி ஐயா!

  காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 2. எந்த Situation னிலும் நாமும் ஸ்ரீ தேவியைப்போல் எப்போதும் ஸ்ரீ ராமரை நினைத்துக்கொண்டும், ராம நாமத்தை சொல்லிக்கொண்டும் இருக்க வேண்டும்.


  நாமத்தின் மகிமை அருமை

  பதிலளிநீக்கு
 3. சீதாதேவி ராமா! ராமா! என்று மனதில் சிந்தித்துக்கொண்டும், வெளியே வார்த்தைகளாலும் அவர் பெயரையே சொல்லிக்கொண்டும் இருந்ததால், ஆஞ்ஜநேயர் மூலம் ராமரைப்பற்றி கேட்கிறாள்.

  நாமும் ராம நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தால் ராமயண கதையை மஹான்கள் மூலம் கேட்க சந்தர்ப்பம் கிடைக்கும்.//

  ராம நாமம் சொல்வோம்.
  நலம் பல பெறுவோம்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அற்புதமான பாடங்கள்.....
  உத்வேகத்தை அதிகரிக்கும்...நன்றி.

  பதிலளிநீக்கு
 5. //நாமும் ராம நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தால் ராமயண கதையை மஹான்கள் மூலம் கேட்க சந்தர்ப்பம் கிடைக்கும்.//

  அருமை. சீதா தேவியைப்போல நாமும் ராம நாமத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

  நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 6. ஸ்ரீ ராமரையே நினைத்துக்கொண்டும், ராம நாமத்தையே ஸ்மரித்துக்கொண்டும் இருந்தால் நாமும் கவலையற்று இருக்கலாம்.


  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 7. ஸ்ரீ சீதாதேவி ஜீவாத்மாவாக இருந்து காட்டி நம் போன்றவர்கள் எப்படி வாழ்க்கையில் சுகத்திலும் துக்கத்திலும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை சுந்தரகாண்ட சரித்திரத்தில் அனேக இடங்களில் காட்டுகிறார்.

  பின்பற்றினால் பயனுண்டு..

  பதிலளிநீக்கு
 8. சீதாதேவி ராமா! ராமா! என்று மனதில் சிந்தித்துக்கொண்டும், வெளியே வார்த்தைகளாலும் அவர் பெயரையே சொல்லிக்கொண்டும் இருந்ததால், ஆஞ்ஜநேயர் மூலம் ராமரைப்பற்றி கேட்கிறாள்.

  நாமும் ராம நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தால் ராமயண கதையை மஹான்கள் மூலம் கேட்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

  அற்புதமான ரமநாமத்தைப் பற்றி அதிஉன்னதமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 9. நாமும் ராம நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தால் ராமயண கதையை மஹான்கள் மூலம் கேட்க சந்தர்ப்பம் கிடைக்கும்

  Very very eaqerly waiting for a chance.

  Thanks for making me chant RAMA Tharaka mantram.
  viji

  பதிலளிநீக்கு
 10. //லங்கா நகரத்தில் சீதாதேவி எப்படி இருந்து வந்தாளோ அப்படி பகவத் பக்தன், இந்தக் கலியுகத்தில் தர்மத்திற்கு விரோதமான ஆசைகளில் மனதை வைக்காமல் பகவந் நாமத்தை (ராம நாமத்தை) அனவரதம் ஜபித்துக் கொண்டும், ஸ்மரித்துக்கொண்டும் இருந்து வந்து ஜன்ம லாபத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.//

  நல்ல அறிவுரை. ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தால் நமக்கு நல்லவையே நடக்கும்.

  பதிலளிநீக்கு
 11. நம் கஷ்டகாலத்தில் மகான்கள் கடவுள்கள் நாமாக்கள் அந்தக் கஷ்டத்தைக் குறைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 12. ஹரே ராம ஹரேராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.

  பதிலளிநீக்கு
 13. ராம தூதனின் பாதம் பணிவோம்.

  எந்த பயமும் இல்லாமல் வாழ்வோம்.

  பதிலளிநீக்கு
 14. ஹே ராம் னு படத்துல எப்பூடி பளிச்சுனு போயி போயி வருது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) ஹிந்தி எழுத்தெல்லாம் சூப்பராப் படிப்பீங்க போலிருக்கு. வெரி குட் .... சபாஷ் :)

   நீக்கு
 15. நம்மை முழுமையாக ஆண்டவனிடத்தில் அர்ப்பணித்துவிட்டால் மத்ததெல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் சரணாகதி தத்துவம்தான் உன்னதமானது.

  பதிலளிநீக்கு
 16. லங்கா நகரத்தில் சீதாதேவி எப்படி இருந்து வந்தாளோ அப்படி பகவத் பக்தன், இந்தக் கலியுகத்தில் தர்மத்திற்கு விரோதமான ஆசைகளில் மனதை வைக்காமல் பகவந் நாமத்தை (ராம நாமத்தை) அனவரதம் ஜபித்துக் கொண்டும், ஸ்மரித்துக்கொண்டும் இருந்து வந்து ஜன்ம லாபத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். // இந்த பாகத்திற்கான மெஸேஜாக இதைக்கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு