என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 9 மார்ச், 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] - 1



மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
[தொடர்பதிவு]




அழைப்பு (1):
அழைத்தவர்: அவர்கள் உண்மைகள் 



அழைப்பு (2):
http://minminipoochchigal.blogspot.in/2012/03/blog-post_05.html
அழைத்தவர்: திருமதி ஷக்தி ப்ரபா 

என்னைத் தொடர்பதிவிட அழைத்த இருவருக்கும் 
நன்றி கூறிக்கொண்டு ஆரம்பிக்கிறேன்.



பெருங்’குடி’ மகன்களையும், ’குடி’வெறியர்களையும், அந்தக்குடிப்பழக்கம் மறக்க இப்போதெல்லாம் மன நோய் மருத்துவ மனைகளுக்குக் கூட்டிச் சென்று ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள். 

அந்தக்காலத்தில் நான் என் குடியை மறக்கவே என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்களாம். 

ஆமாங்க, நாலு வயது வரை நான் குடித்துக்கொண்டே இருப்பேனாம், தாய்ப்பாலை. 

நாலு வயது முடிந்ததும், ஐந்து வயது முடிந்து விட்டதாகச் சொல்லி என்னை முதல் வகுப்பில் [ First Standard ] கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்களாம், மிகமுக்கியமாகத் ’தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தவே’. 

இப்போது போல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். LKG UKG எல்லாம் வராத காலம் அது. மிகச்சுலபமாக ஆரம்பப்பள்ளிகளில் First Std. அட்மிஷன் கிடைத்த பொற்காலம். 5 வயது நிரம்பி விட்டதாக வாயால் சொன்னால் போதும். உடனே பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மிகச் சுலபமாகச் சேர்த்துக் கொள்வார்கள்.  

வாத்யாராகப் பார்த்து உத்தேசமாக நமக்கென ஓர் பிறந்த தேதியை நிர்ணயித்து அதை பள்ளி ரிஜிஸ்டர்களில் பதிவு செய்து விடுவார். அதற்கும் நாம் பிறந்த சரியான தேதிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருக்காது. 

அந்த வாத்யாரோ அல்லது தலைமை ஆசிரியரோ நிர்ணயிக்கும் தேதியே கடைசிவரை நம் தலையெழுத்தை நிர்ணயிக்க எல்லா இடங்களிலும் உதவும். என் வயது இது போல 10 மாதங்கள் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது நாலு வயதும் இரண்டு மாதங்களும் மட்டுமே முடிந்திருந்த எனக்கு ஐந்து வயது முடிந்து விட்டதாக பதிவு செய்து விட்டனர். 10 மாதங்கள் என் வயதைக் கூட்டி விட்டனர். 

அவர்களாகவே என் பிறந்த நாள் என்று முடிவு செய்த நாள், என் தாயாரின் கர்பத்தில் நான் ஜனித்த நாளாக இருக்கலாம் என பிற்காலத்தில் நானே என்னை சமாதானம் செய்து கொண்டேன். 


அதன் பலனாக 10 மாதங்கள் முன்பாகவே நான் பணி ஓய்வு பெற்று வரும்படியாக ஆகிவிட்டது.   10 மாதச்சம்பளம் + போனஸ் + மற்ற சலுகைகள் என சுமார் ஆறு லட்சங்களுக்கு மேல் நஷ்டமானது. 

பெரும்பாலும் நவராத்திரி சமயம் ‘விஜயதஸமி’ என்ற நல்ல நாளில் நெல்லைப்பரப்பி அதில் பள்ளி ஆசிரியர் குழந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டு ‘ஓம் நமோ நாராயணாய நம:’ என்று ஏதோ வாயால் சொல்லச் சொல்லி, நெல்லின் மேல் எழுத வைப்பார்கள். பிள்ளயார் சுழி போட வைத்து, பிறகு முதல் எழுத்தான ‘அ’ என்பதை ஒரு பத்து முறை எழுத வைப்பார்கள். அத்தோடு சரி. 

சிலேட் என்று ஒரு சிறிய கரும்பலகை அதன் இரண்டு பக்கங்களிலும் பாடங்கள் எழுதுவதற்கு தோதாக இருக்கும். அதில் எழுத ‘பல்பம்’ எனப்படும் ’சிலேட்டுக்குச்சி’ என்று ஒன்று உண்டு. 




அதாவது சாக்பீஸ் என்ற தடித்த எழுதுகோல் குட்டி போட்டது போல இருக்கும் இந்த பல்பம் என்கிற சிலேட்டுக்குச்சி. சாக்பீஸ் போல பட்டை அடிக்காது. கூர்மையாக சிலேட்டில் எழுத செளகர்யமாக இருக்கும்.  

இந்த சிலேட் என்ற கரும்பலகையில் இரண்டு விதமானவைகள் உண்டு. ஒன்று கல்லு சிலேட், மற்றொன்று தகர சிலேட்டு. கல் சிலேட் கனமாக இருக்கும். காலில் தப்பித்தவறி விழுந்து விட்டால், கால் நகமே பெயர்ந்தோ கருரத்தம் குழம்பியோ போய் விடும். அதே நேரம் கீழே தப்பித்தவறி விழுந்த, கல் சிலேட்டும் உடைந்து போகும். 


தகர சிலேட் அது போல இல்லாது Weightless ஆக இருக்கும். எவ்வளவு முறை கீழே போட்டாலும் உடையாது. ஆனால் இரண்டு சிலேட்டுகளிலுமே கீழே போடப்போட, சிலேட்டைச்சுற்றி போடப்பட்டிருக்கும் மரச்சட்டம் [FRAME]  தனியாக பிரிந்து வந்து விடுவதும் உண்டு.






இது தவிர ஆனா ஆவன்னா அட்டை என்று ஒன்று இருக்கும். 

ணில், டு,  லை,  க்கள்,  ரல்,  ஞ்சல்,  லி,  ணி,  வர், 
ட்டகம், ணான், ஒளவை” என கலர் கலர் படங்களும், பெரிய எழுத்துக்களும் ஒருபுறமும், மறுபுறம் தமிழின் எல்லா [உயிர், மெய், ஆயுத] எழுத்துக்களும் எழுதப்பட்டிருக்கும். 


இந்த சிலேட்+ சிலேட்டுக்குச்சி + ஆனாஆவன்னா அட்டை + இவற்றை போட்டுச் செல்ல ஒரு பை, அவ்வளவு தான். 




குழந்தைகள் இவற்றைக் கொண்டு போனால் போதும். இந்தக்காலம் போல குழந்தைகள், வேறு எதுவும் பாரம் தூக்க வேண்டியது இல்லை




நாளையும் தொடரும்

89 கருத்துகள்:

  1. பள்ளிப்பயணம் சுவாரசியமாகப் போகிறதே.. மேலும் படிக்க காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. சுவையாக ஆரம்பித்து இருக்கிறது பள்ளி நினைவுகள்.... மீதி நாளைக்கா??? அச்சச்சோ... சரி காத்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  3. பள்ளிக்குச்சென்ற மலரும் நினைவுகள் மலர்ந்து மண்ம் பரப்பி மன்ம நிறைக்கின்றன்,,,

    பதிலளிநீக்கு
  4. "பெருங்குடிமகனே..ஹாஹ்..ஹா
    பெருங்குடிமகனே ..யே..யே..யே"

    காரணம் சுவை ஐயா..
    அடடே..தொடரும் போட்டு விட்டீர்களே..சரி தொடருகிறேன்..

    பதிலளிநீக்கு
  5. என் குழ்ந்தைகள் சிலேட்டுக்குச்சியை தின்றுவிடுவார்கள்..

    ஒருவர் எப்பவும் காதிலோ மூக்கிலோ போட்டுக்கொண்டு சாதனை புரிந்து வருவார்கள்..

    பதிலளிநீக்கு
  6. குழந்தைகள் இவற்றைக் கொண்டு போனால் போதும். இந்தக்காலம் போல குழந்தைகள், வேறு எதுவும் பாரம் தூக்க வேண்டியது இல்லை


    வீட்டுப்பாடத்தை ஸ்கூலிலேயே எழுதிக்காட்டிவிடுவதால் சிலேட்டையும் பென்கிலையும் டீச்சர் கிட்டே கொடுத்துவிடுவேன்.. அவங்க வாங்கி மேஜை டிராயரில் வைத்துப்பூட்டி வைத்து அடுத்த நாள் கொடுப்பார்கள்..

    இப்போது பிள்ளைகளின் எடையை விட கூடுதலான சுமை சுமக்கிறார்கள்..
    அந்தப் பையை நம்மால் தூக்கமுடியாது, கனக்கும்..

    பதிலளிநீக்கு
  7. மலரும் நினைவுகள் சுகமான ராஜபாட்டையில் சென்று கொன்டிருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  8. பள்ளிப்பயணம் சுவாரசியமாகப் போகிறதே.. மேலும் படிக்க காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. படிக்க ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது-தொடரவும்

    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  10. வெள்ளிகிழமை அப்புறம் சனி, ஞாயிறு லீவ் நாட்கள்..திங்கட்கிழமை ஸ்கூலுக்கு அவ்வளவு லேசில் கிளம்ப மாட்டேன், நான்..கண்ணில் ஜலம் முட்டி மோதிக்கொண்டு வரும்..வயிறு வலிக்கிறது என்று ஒரு திங்கள் கிழமை மட்டம் போட்டேன்..’ஆஸ்பத்திரி போலாம் வா’ என்றார்கள்! ‘இது ஏதடா கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாய் இருக்கிறதே என்று அன்று பயந்திருந்தேன்..ஒரே பொய்யை ஒவ்வொரு திங்கட்கிழமையுமா சொல்ல முடியும்?

    பதிலளிநீக்கு
  11. தொடர் பதிவே தொடராகவா?பேஷ் பேஷ்..

    அழைப்பு விடுத்தவர்களின் புரஃபைல் போட்டோவுடன் பெயரை வெளியிட்டு இருப்பது புதுமை சார்.

    பிறருக்கு தாங்கள் அளிக்கும் மரியாதையை தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.உதாரணத்துக்கு ஏறிவந்த் தோணி...

    இருங்க சார் பதிவை முழுதாக படித்துவிட்டு வருகின்றேன்.

    பதிலளிநீக்கு
  12. அந்தக்காலத்தில் நான் என் குடியை மறக்கவே என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்களாம். //
    அடடா என்னா ட்விஸ்ட் என்னா ட்விஸ்ட்..

    // எனக்கு ஐந்து வயது முடிந்து விட்டதாக பதிவு செய்து விட்டனர். 10 மாதங்கள் என் வயதைக் கூட்டி விட்டனர்.//முன்பெல்லாம் இது சர்வசகஜமாக நடந்ததுதான்.நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    //இந்த சிலேட்+ சிலேட்டுக்குச்சி + ஆனாஆவன்னா அட்டை + இவற்றை போட்டுச் செல்ல ஒரு பை, அவ்வளவு தான்.
    // இதெல்லாம் இப்பொழுது மியூஸியத்தில் பார்க்கவேண்டியவைகளாகி விட்டன.//

    ரொம்ப சுவாரஸ்யமாக உள்ளது.இப்படி சிறு சிறு பதிவுகளாக போடும் பொழுது ஒரு எழுத்து விடுபடாமல் படிப்பது மட்டுமல்ல ஒன்றுக்கு இரண்டு முறை படித்து சிலாகிக்கவும் வசதியாக உள்ளது.தொடருங்கள் சார்.

    நாளை ஆறு மணிக்காக வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  13. எனக்கு ஐந்து வயது முடிந்து விட்டதாக பதிவு செய்து விட்டனர். 10 மாதங்கள் என் வயதைக் கூட்டி விட்டனர்.//
    This was happened to me also.
    My actual date of birth still I dontknow.
    Only birth star, Tamil month is being adopted now.
    What todo?

    Intersting. like to read further.
    viji

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வை.கோ

    அருமையான மலரும் நினைவுகள் - பகிர்வு நன்று. இவை அனைத்துமே நம் வயதினை ஒத்தவர்கள் மகிழ்ச்சிட்யுடன் அனுபவித்தது தான். எழுதிய நடை நன்று. கற்பனை கலவாத நிகழ்வுகள். மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. அன்பின் வை.கோ - குடியை மறக்க இவ்வளவு எளிதான வழி தெரியாமல் குடிமகன்கள் படும் பாடு .... ஹா ஹா ஹா - நான்கு வயது இரு மாதங்களிலேயே குடியினை விட்ட வை.கோ வாழ்க.

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வை.கோ 5 வயதென்று வாயால் சொல்லி பள்ளியில் சேர்ந்தமை அக்காலங்களில் இயல்பாக நடக்கும் செயல். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  17. அன்பின் வை.கோ - பிறப்புச் சான்றிதழ இல்லாத அக்கால கட்டத்தில் - எளிதாக பள்ளியில் சேர்ந்தோம் - இக்காலத்தினையும் நினைத்தால் - அக்காலம் பொற்காலம் வை.கோ - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  18. அன்பின் வை.கோ - நமது பிறந்த தேதியினை நிர்ணயித்த அக்கால ஆசிரியர் செய்த செயல் ந்ன்மையா தீமையா - ஆறு இலட்சம் நஷ்டம் . ம்ம்ம்ம்ம்ம் - ஒன்றும் செய்ய இயலாது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  19. அன்பின் வை.கோ - தாயாரின் கர்ப்பத்தில் ஜனித்த நாளை பிறந்த தேதியாகக் கொண்டது நன்றே. இயல்பான தேதி இது தான். சரியான நாள் இது தான். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  20. அன்பின் வை.கோ - விஜயதஸமி - பள்ளிக்குச் சென்ற முதல் நாள் - ஆனா எழுதிய முதல் நாள் - மறக்க இயலாத மலரும் நினைவுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  21. அன்பின் வை.கோ - சிலேட் - குச்சி - நினைது நினைத்து மகிழ்ந்தேன் - அக்கால சிலேட்டும் குச்சீயும் - இரண்டினைத் தவிர வேறொன்றும் கொண்டு செல்லும் மூட்டையினைத் தூக்கும் கொட்டுமை இல்லாத காலம் அது. - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  22. அன்பின் வை.கோ - பள்ளியில் சேர்ந்த நாள் முதல் பல ஆண்டுகட்கு - சிலேட் குச்சி அட்டை கொண்ட பையினைத் தவிர வேறொன்றும் க்ண்டிராத நாம் படிப்பில் சளைத்தவர்கள் அல்ல - இன்றைய சூழ்நிலையினை சற்றே எண்ணிப் பார்த்தேன். ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  23. அன்பின் வை,.கோ - தொடரினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  24. அன்பின் வை.கோ = நேரம் கிடைக்கும் போது படித்து, கருத்துக் கூறவும்.

    நான் பள்ளியில் சேர்ந்த கதை

    http://cheenakay.blogspot.in/2007/11/5.html

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  25. மிகவும் ரசித்து படிக்க முடிந்தது சார்.இப்படியான பதிவுகளை பின் வரும் தலைமுறையினர் படிக்க நேரிடும்போது அவர்களுக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  26. சிரிக்கவும், சிந்திக்கவும், படிப்பினை தருவதாகவும்,
    'உள்ளது உள்ளபடி' நகைச்சுவைப் பகிர்வுகள் அருமை.. பாராட்டுக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  27. சுவாரசியமான விஷயங்கள் சார்..:)

    பதிலளிநீக்கு
  28. அருமையான நினைவுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  29. சிலேட்டும், பல்பமும் நானும் உபயோகித்திருக்கிறேன். வீட்டில் தான்.

    நல்ல சுவாரசியமாக போய்க் கொண்டிருந்தது. தொடரும்னு போட்டுட்டீங்களே சார்.....

    பதிலளிநீக்கு
  30. ஐ..... சிலேட்டு, குச்சி, தண்ணீர் பேக்.. ஆஹா.. அந்த பொன்னாட்களை நினைவு படுத்திட்டீங்களே :-))

    பதிலளிநீக்கு
  31. //இந்த சிலேட் என்ற கரும்பலகையில் இரண்டு விதமானவைகள் உண்டு. ஒன்று கல்லு சிலேட், மற்றொன்று தகர சிலேட்டு. கல் சிலேட் கனமாக இருக்கும்தகர சிலேட் அது போல இல்லாது Weightless ஆக இருக்கும். எவ்வளவு முறை கீழே போட்டாலும் உடையாது. ஆனால் இரண்டு சிலேட்டுகளிலுமே கீழே போடப்போட, சிலேட்டைச்சுற்றி போடப்பட்டிருக்கும் மரச்சட்டம் [FRAME] தனியாக பிரிந்து வந்து விடுவதும் உண்டு.//

    நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு சார். எனகெல்லாம் சிலேட் வைத்திருந்த ஞாபம்மட்ட்டும்தான் இருந்தது உங்களின் எழுத்தால் பழயை ஞாபங்கள் மீண்டும் வருகின்றன. ஆரம்பமே நன்றாக உள்ளது. உங்கள் பள்ளிக்கு நான் லேட் ஸாரி சார்

    பதிலளிநீக்கு
  32. என்னை என் வாய்தான் கெடுத்தது.. சினிமா போஸ்டர் எல்லாம் பார்த்து படிக்கப்போக .ஏன் இன்னும் ஸ்கூல்ல போடலன்னு’ எங்க தெரு டீச்சர் இழுத்துகிட்டு போயிட்டாங்க.. சினிமா ஒருத்தர் வாழ்க்கையைக் கெடுக்கும்னு அப்பதான் புரிஞ்சுகிட்டேன்!

    பதிவிட அழைத்தவர்கள்ஐ மரியாதை செய்த புதுமை அசத்தல்!

    புதுமையாய் சிந்திக்கும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு,

    பதிலளிநீக்கு
  33. எழுத்து என்று வந்து விட்டால் எதையும் அனுபவித்து எழுதறது தான் உங்க வழக்கம்ன்னு எல்லா நேரங்களிலும் தெரியறது. அதான் வேணும். அது வரமும் கூட.

    உங்கள் பள்ளி நாட்கள் பற்றிய விவரிப்புகளும் அவ்வாறே இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆறு பகுதிகள் என்றால் கேட்கவே வேண்டாம். சிரிப்பும் கும்மாளமும் தான். கூடச் சேர்ந்து கும்மி அடிக்கறதுக்கு நிறைய சுவாரஸ்யங்கள் தட்டுப்படும்ன்னு இப்பவே தெரியறது.

    தகர ஸ்லேட்டை விட மா ஸ்லேட் தான் எழுதறத்துக்கு சுகமா இருக்கும். அதுவும் பழுப்பு நிறத்தில் நுனியில் மட்டும் வெள்ளையாய் பால் குச்சின்னு ஒரு பல்பம் இருக்குமே, அதுனாலே எழுதினா எழுத்தும் பால் வெள்ளைலே இருக்கும் இல்லையா? அடடா! பல்பங்களிலும் எத்தனை வகை?.. குண்டா மூணு பட்டையோட, ஒவ்வொரு பட்டைக்கும் ஒரு கலர்ன்னு மூணு கலர்லே, எந்தக் கலர் வேணுமோ அந்தக் கலர்ப் பக்கம் திருப்பி எழுதற மாதிரி இருக்குமே, அந்த பல்பம் தான் பல்பங்களின் ராஜா இல்லையா?

    ஜமாயுங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. அருமையான துவக்கம்
    தற்கால கல்விச் சூழலில் வளரும் பிள்ளைகளுக்கு
    தெரியாத பல விஷய்ங்களை மிக அழகாக
    விரிவாக விளக்கிச் சொன்னவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  35. ஹா ஹா !! என்னவொரு ஆரம்பம்.

    //அந்தக்காலத்தில் நான் என் குடியை மறக்கவே என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்களாம். //

    இப்படி சொல்லி எல்லா நேயர்களையும் தள்ளாட வைத்து விட்டீர்கள்.

    நானும் சிறு வயதில் சிலேட்டு குச்சியை மூக்கில் போட்டு கொண்டு ,நீங்களும் என் அண்ணாவும் பஞ்சு டாக்டரிடம் கூட்டி சென்றது நன்றாக
    நினைவிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  36. //அதாவது சாக்பீஸ் என்ற தடித்த எழுதுகோல் குட்டி போட்டது போல இருக்கும் இந்த பல்பம் என்கிற சிலேட்டுக்குச்சி. //

    ரசித்தேன்....

    //அணில், ஆடு, இலை, ஈக்கள், உரல், ஊஞ்சல், எலி, ஏணி, ஐவர், ஒட்டகம், ஓணான், ஒளவை” என கலர் கலர் படங்களும், பெரிய எழுத்துக்களும் ஒருபுறமும்,//

    கண்முன் படமாய் விரிகிறது.,..


    ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும்....என் பள்ளிப் பருவத்தை குறைப்பிரசவக் குழந்தையாய்
    பெற்றெடுத்தேன் என்பதே உண்மை. நானும் தொடர்பதிவாக இரண்டு மூன்று அத்தியாயங்கள் எழுத
    நினைத்து அப்புறம் விட்டுவிட்டேன். நீங்கள் தொடர்பதிவாக மெதுவாக அசைபோடுவது. எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  37. ஆரம்பமே சுவாரஸ்யம். தொடர்கின்றேன்....

    பதிலளிநீக்கு
  38. இரண்டு சிலேட்டுகளிலுமே கீழே போடப்போட, சிலேட்டைச்சுற்றி போடப்பட்டிருக்கும் மரச்சட்டம் [FRAME] தனியாக பிரிந்து வந்து விடுவதும் உண்டு.//

    எங்கள் வீட்டில் நிறைய இந்த சிலேட்டு மரச்சட்டங்கள் இருக்கும்.

    சகோதர, சகோதரிகள் உடைத்த சிலேட்டு சட்டங்கள்.

    பதிலளிநீக்கு
  39. I do remember the days of plastic frame and wooden frame. I am so fond of the traditional slate (kal) and the one my father bought for me lasted with me for nearly 10 years till it was broken during a shifting activity. The slates saved many trees and also the hard earned money of parents.

    பதிலளிநீக்கு
  40. அந்த காலத்தில் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளியில் விடுவார்கள். உள்ளே சென்ன்றபின் வெளியே வரும் நினைவும் இருக்காது. நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. தொடர்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
  41. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ள எல்லோருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து ஓர் தனிப்பதிவே தந்துள்ளேன்.

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    தலைப்பு:

    இயற்கை அழகில் ’இடுக்கி’
    இன்பச் சுற்றுலா

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  42. ரிஷபன் said...
    //என்னை என் வாய்தான் கெடுத்தது.. சினிமா போஸ்டர் எல்லாம் பார்த்து படிக்கப்போக .ஏன் இன்னும் ஸ்கூல்ல போடலன்னு’ எங்க தெரு டீச்சர் இழுத்துகிட்டு போயிட்டாங்க.. சினிமா ஒருத்தர் வாழ்க்கையைக் கெடுக்கும்னு அப்பதான் புரிஞ்சுகிட்டேன்!//

    இதுவும் அருமையான அனுபவம் தான்.

    //பதிவிட அழைத்தவர்கள்ஐ மரியாதை செய்த புதுமை அசத்தல்!//

    மிக்க நன்றி, சார்.

    //புதுமையாய் சிந்திக்கும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு//

    நான் உங்களிடமிருந்து கற்றுக் கொண்ட பல நல்ல விஷயங்களை விடவா? ;)))))

    பதிலளிநீக்கு
  43. ஆரம்பமே சுவாரசியமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  44. //RAMVI said...
    ஆரம்பமே சுவாரசியமாக இருக்கு.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்.
    தயவுசெய்து தொடர்ந்து படியுங்கள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  45. பெருங்குடி // ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டு அடுத்த வரியை படித்ததும் சிரித்தே விட்டேன் .
    சிறிய பதிவாக இருந்தாலும் ரசித்து கமேண்ட வசதியா இருக்கு .
    பள்ளியில் உங்களுக்கு பிறந்த தேதியை நிர்ணயம் செய்தது போல்
    நான் படித்த பள்ளியில் ஏஞ்சலின் இல்முதலில் இருக்கும் E அவர்களே
    எடுத்து விட்டார்கள் .சிலேட்டு குச்சி என்னுடன் படித்த மாணவன் மூக்கில் போட்டு செய்த அட்டகாசம் இன்னும் மறவேன் .அதன் வாசம் தான் சார் பிள்ளைகளை முகர்ந்து பாக்க வைப்பது .

    பதிலளிநீக்கு
  46. ஒளவை”

    இதை நினைத்தாலே எனக்கு இன்னமும் சிரிப்பு வரும் அவ்வை
    என்று சொல்வதற்கு பதில் ஒ -ள -வை என்றே நான் நெடுநாட்கள் கூறி வந்தேன் என்று அம்மா சொல்வாங்க

    பதிலளிநீக்கு
  47. angelin said...
    //பெருங்குடி .... ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டு அடுத்த வரியை படித்ததும் சிரித்தே விட்டேன் .
    சிறிய பதிவாக இருந்தாலும் ரசித்து கமேண்ட வசதியா இருக்கு .
    பள்ளியில் உங்களுக்கு பிறந்த தேதியை நிர்ணயம் செய்தது போல்
    நான் படித்த பள்ளியில் ஏஞ்சலின் இல்முதலில் இருக்கும் E அவர்களே
    எடுத்து விட்டார்கள் .சிலேட்டு குச்சி என்னுடன் படித்த மாணவன் மூக்கில் போட்டு செய்த அட்டகாசம் இன்னும் மறவேன் .அதன் வாசம் தான் சார் பிள்ளைகளை முகர்ந்து பாக்க வைப்பது .

    angelin said...
    ஒளவை”

    இதை நினைத்தாலே எனக்கு இன்னமும் சிரிப்பு வரும் அவ்வை
    என்று சொல்வதற்கு பதில் ஒ -ள -வை என்றே நான் நெடுநாட்கள் கூறி வந்தேன் என்று அம்மா சொல்வாங்க//

    அன்புள்ள நிர்மலா,

    ஒரே மூச்சில் ஒரே நாளில் இந்தத்தொடரின் அனைத்து ஏழு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்து விட்டு, அன்புடன் வருகை புரிந்து, அழகாகக் கருத்துக்கள் கூறியுள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள,
    கோபு

    பதிலளிநீக்கு
  48. //அதாவது சாக்பீஸ் என்ற தடித்த எழுதுகோல் குட்டி போட்டது போல இருக்கும் இந்த பல்பம் என்கிற சிலேட்டுக்குச்சி///
    இந்த வரிகள் ரசிக்க வைத்தது சார்!

    நான் பள்ளிக்குச்செல்ல ஆரம்பித்த 1992-1993 அந்த வேளையில் கூட பள்ளி சேர்க்கை இத்தனை கெடுபிடியாக இல்லை! அந்த அளவுக்கு புத்தக பாரமும் இல்லை! இப்பொழுது தான் பாவம் பிள்ளைகள்! அருமையான் நினைவூட்டல் சார்! நானும் சிலேட் பல்பம் உபயோகித்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யுவராணி தமிழரசன் November 25, 2012 9:34 PM

      அன்புள்ள யுவராணி,

      வாங்கோ, வணக்கம்.

      ***அதாவது சாக்பீஸ் என்ற தடித்த எழுதுகோல் குட்டி போட்டது போல இருக்கும் இந்த பல்பம் என்கிற சிலேட்டுக்குச்சி***

      //இந்த வரிகள் ரசிக்க வைத்தது சார்!//

      தங்கள் ரசனைக்கு என் நன்றிகள்.

      //நான் பள்ளிக்குச்செல்ல ஆரம்பித்த 1992-1993 அந்த வேளையில் கூட பள்ளி சேர்க்கை இத்தனை கெடுபிடியாக இல்லை! அந்த அளவுக்கு புத்தக பாரமும் இல்லை! இப்பொழுது தான் பாவம் பிள்ளைகள்!//

      ஆமாம். இப்போது தான் LKG சேர்ப்பதற்கே கெடுபிடிகள் மிகவும் அதிகமாக உள்ளன. இது பெற்றோர்களுக்கு. புத்தக பாரம் குழந்தைகளுக்கு.

      //அருமையான் நினைவூட்டல் சார்! நானும் சிலேட் பல்பம் உபயோகித்திருக்கிறேன்!//

      மிகவும் சந்தோஷம் யுவராணி.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  49. நன்ராக ஞாபகம் வருகிறது. நீங்கள் சொல்வது பிற்காலங்களிலும்
    பிறந்த தேதி வகையராக்கள் பள்ளி சேர்க்கும் போது ஏதோ தோராயமாக எழுதிவிடுவார்கள். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்.1945 இல் கம்பல்ஸரி எஜுகேஷன் ஸிஸ்டத்தில்
    எனக்கு வேலை கொடுத்தார்கள். சட்டத்துக்கு பயந்தும்,மத்தியான சாப்பாட்டுக்காகவும் ஏழைக்குழந்தைகள் அட்மிஷனுக்கு வந்தனர். வயதை
    ஏதோ அஞ்சுலேர்ந்து ஏழு வரைக்கும் தேதி மாத்தி எழுது என்று
    தலைமை உத்தரவு போட்டது. என்ன எழுதினோம் என்று மறு நாள் கேட்டால் மறந்து விடும். அப்படி ஒரு தேதி எழுதி
    அட்மிஷன் செய்தோம். நானே ஒரு அரை டிக்கெட்.
    ஆனால் அந்தக் குழந்தைகள் ஒரு 4,5, வகுப்புகள் கூட படித்திருக்க மாட்டார்கள். அபராதத்துக்கு பயந்து வந்தவர்கள்.
    யாரிடம் பர்த் ஸர்டிபிகேட் இருந்திருக்கும்?
    அழகா நினைவு கூர்ந்து எழுதியுள்ளீர்கள். பெரிசா லக்ஷணமா
    நானும் கொஞ்சம் என்கதையும் கூடவே இல்லையா? ரஸிக்க ஒரு அழகான பதிவு.

    பதிலளிநீக்கு
  50. அ ன்னா ஆவன்னா, இ ன்னா ஈ வென்னா இப்படி கூட ஒரு முறை இருந்ததில்லையா?நல்ல வேளை குடி மறந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  51. Kamatchi December 14, 2012 2:23 AM

    வாங்கோ மாமி. நமஸ்காரம்.

    அ ன்னா ஆவன்னா, இ ன்னா ஈ வென்னா இப்படி கூட ஒரு முறை இருந்ததில்லையா? //

    ஆமாம், அதே அதே! எல்லா எழுத்துக்கும் ஓர் அண்ணா சேர்த்து மரியாதையாக நீட்டித்தான் சொல்லுவோம்.

    //நல்ல வேளை குடி மறந்தீர்கள்.//

    கேலியா? போங்கோ மாமி, நேக்கு வெட்கமாக்கீதூஊஊஊ

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்
    கோபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  52. முதல் பாராட்டு: மார்ச் மாதப் பதிவுக்கு இன்னமும் பின்னூட்டம் பெறுவதற்கு!

    இரண்டாவது பாராட்டு: 'குடியை மறக்க பள்ளிக் கூடத்தில் சேர்த்தார்கள் என்று தடாலடியாக ஆரம்பித்து ஒரு தொடர் பதிவு எழுதியதற்கு!

    பழைய ஸ்கூலும் ச்லேட்டும் பலப்பமும் நினைவுக்கு வந்தன.
    அடுத்த பகுதியை படிக்க விரைகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan December 16, 2012 11:56 PM

      வாங்கோ திருமதி ரஞ்ஜினி மேடம், வணக்கம்.

      //முதல் பாராட்டு: மார்ச் மாதப் பதிவுக்கு இன்னமும் பின்னூட்டம் பெறுவதற்கு!//

      என் முதல் நன்றி, மார்ச் மாதப்பதிவுக்கு இன்னமும் வந்து பின்னூட்டம் அளித்துள்ளதற்கு.

      //இரண்டாவது பாராட்டு: 'குடியை மறக்க பள்ளிக் கூடத்தில் சேர்த்தார்கள் என்று தடாலடியாக ஆரம்பித்து ஒரு தொடர் பதிவு எழுதியதற்கு!//

      ஆமாம். அப்படித்தான் என் அம்மா, அக்கா எல்லோரும் என்னிடம் சொல்லி கேலி செய்வார்கள். அதனால் அதையே தடாலடியாக ஆரம்பித்து எழுதினேன் .. எழுதினேன் .. எழுதிக்கொண்டே போனேன். நான் சொல்லியவற்றை விட சொல்லாமல் விட்டுப்போனவைகளும் நிறைய உள்ளன.

      //பழைய ஸ்கூலும் ச்லேட்டும் பலப்பமும் நினைவுக்கு வந்தன.//

      ஆம். அவற்றையும் அந்த நாட்களையும் நாம் என்றுமே மறக்கத்தான் முடியாது.

      //அடுத்த பகுதியை படிக்க விரைகிறேன்.//

      ஆஹா சந்தோஷம். மிக்க நன்றி. அன்புடன் VGK

      நீக்கு
  53. நான் இந்த பதிவை படித்து முன்பே கருத்து தெரிவித்து இருக்கிறேன்.

    மறுபடியும் படிக்கும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.
    என் மாமனார் காலத்தில் 55 வயதில் பணி ஒய்வு பெறும் வயது வரம்பு இருந்தது, ஆனால் அவர்கள் 7 வருடம் அதிகமாய் வேலைப் பார்த்தார்கள்.

    பதிலளிநீக்கு
  54. கோமதி அரசு February 6, 2013 at 5:13 PM

    வாருங்கள் திருமதி கோமதி அரசு மேடம். வணக்கம்.

    திருமணம் ஆகி வெற்றிகரமாக 40 ஆண்டுகளை இன்று 07.02.2013 முடித்துள்ள தங்களுக்கும், தங்கள் கணவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்.

    நாங்களும் இப்போது 03.07.2012 அன்று தான் 40 ஆண்டுகளைப்பூர்த்தி செய்தோம்.

    இல்வாழ்க்கையில் உங்களை விட நாங்கள் 7 மாதங்கள் சீனியர் போலிருக்கு. மகிழ்ச்சி.

    //நான் இந்த பதிவை படித்து முன்பே கருத்து தெரிவித்து இருக்கிறேன்.
    மறுபடியும் படிக்கும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.//

    கவனித்தேன். மீண்டும் வருகைக்கு நன்றிகள்.

    //என் மாமனார் காலத்தில் 55 வயதில் பணி ஒய்வு பெறும் வயது வரம்பு இருந்தது, ஆனால் அவர்கள் 7 வருடம் அதிகமாய் வேலைப் பார்த்தார்கள்.//

    அந்தக்காலத்தில் ஒருசிலருக்கு இதுபோலெல்லாம் வாய்ப்புகள் அமைவதும் உண்டு தான். நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

    மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி, மேடம். மீண்டும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  55. நாலு வயது முடிந்ததும், ஐந்து வயது முடிந்து விட்டதாகச் சொல்லி என்னை முதல் வகுப்பில் [ First Standard ] கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்களாம், மிகமுக்கியமாகத் ’தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தவே’.

    ஓஹோ அதுதான் இவ்வளவு ரசனையான எழுத்துக்கு இப்பவும் பூஸ்ட் ஊட்டிகிட்டு இருக்கா. பேஷ், பேஷ்.இப்பல்லாம் தாம் அம்மாக்கள் அழகு கெட்டுடும்னு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே மறுக்கிறாங்களே?என்ன கொடுமை இல்லே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் April 2, 2013 at 7:29 AM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம். தங்களை நான் இந்தப்பதிவினில் காண்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..;)

      *****நாலு வயது முடிந்ததும், ஐந்து வயது முடிந்து விட்டதாகச் சொல்லி என்னை முதல் வகுப்பில் [ First Standard ] கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்களாம், மிகமுக்கியமாகத் ’தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தவே’. *****

      //ஓஹோ அதுதான் இவ்வளவு ரசனையான எழுத்துக்கு இப்பவும் பூஸ்ட் ஊட்டிகிட்டு இருக்கா. பேஷ், பேஷ்.//

      எனக்குத் தெரியவில்லை. எதுவும் நீங்க சொன்னாக்கரெக்டா இருக்கும்ன்னு நம்புகிறேன். ;)

      //இப்பல்லாம் தாம் அம்மாக்கள் அழகு கெட்டுடும்னு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே மறுக்கிறாங்களே? என்ன கொடுமை இல்லே?//

      நேக்குத்தெரியாதூஊஊஊஊ. இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரமாக்கும். ஹூக்க்க்க்கும். ;)))))

      நீக்கு
  56. இப்போது போல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். LKG UKG எல்லாம் வராத காலம் அது. மிகச்சுலபமாக ஆரம்பப்பள்ளிகளில் First Std. அட்மிஷன் கிடைத்த பொற்காலம். 5 வயது நிரம்பி விட்டதாக வாயால் சொன்னால் போதும். உடனே பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மிகச் சுலபமாகச் சேர்த்துக் கொள்வார்கள்.

    இது கேட்க்கவே ஆச்சரியமான விஷயமா இருக்கு. இப்பல்லாம் நினச்சுக்கூட பாக்க முடியாது. ஜாதி மதம், வயசு அப்பா அம்மாவின் படிப்புன்னு என்னல்லாமோ கேட்டு ஒரு வழி பண்ணிடுறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் April 2, 2013 at 7:32 AM

      *****இப்போது போல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். LKG UKG எல்லாம் வராத காலம் அது. மிகச்சுலபமாக ஆரம்பப்பள்ளிகளில் First Std. அட்மிஷன் கிடைத்த பொற்காலம். 5 வயது நிரம்பி விட்டதாக வாயால் சொன்னால் போதும். உடனே பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மிகச் சுலபமாகச் சேர்த்துக் கொள்வார்கள். *****

      //இது கேட்க்கவே ஆச்சரியமான விஷயமா இருக்கு. இப்பல்லாம் நினச்சுக்கூட பாக்க முடியாது. ஜாதி மதம், வயசு அப்பா அம்மாவின் படிப்புன்னு என்னல்லாமோ கேட்டு ஒரு வழி பண்ணிடுறாங்க.//

      ஆமாம் பூந்தளிர். இப்போ குழந்தைகளுக்கு LKG Admission வாங்குவதே பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமாகத்தான் உள்ளது என்று கேள்விப்படுகிறேன்

      நீக்கு
  57. இந்த சிலேட் என்ற கரும்பலகையில் இரண்டு விதமானவைகள் உண்டு. ஒன்று கல்லு சிலேட், மற்றொன்று தகர சிலேட்டு. கல் சிலேட் கனமாக இருக்கும். காலில் தப்பித்தவறி விழுந்து விட்டால், கால் நகமே பெயர்ந்தோ கருரத்தம் குழம்பியோ போய் விடும். அதே நேரம் கீழே தப்பித்தவறி விழுந்த, கல் சிலேட்டும் உடைந்து போகும்.

    இந்த சிலேட்டு, சிலேட்டுக்குச்சி பத்தில்லாம் கேள்விப்பட்டிருக்கேன். பாத்ததில்லே. இப்ப இந்த பதிவு மூலமா தெரிஞ்சுக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் April 2, 2013 at 7:36 AM

      *****இந்த சிலேட் என்ற கரும்பலகையில் இரண்டு விதமானவைகள் உண்டு. ஒன்று கல்லு சிலேட், மற்றொன்று தகர சிலேட்டு. கல் சிலேட் கனமாக இருக்கும். காலில் தப்பித்தவறி விழுந்து விட்டால், கால் நகமே பெயர்ந்தோ கருரத்தம் குழம்பியோ போய் விடும். அதே நேரம் கீழே தப்பித்தவறி விழுந்த, கல் சிலேட்டும் உடைந்து போகும்.*****

      //இந்த சிலேட்டு, சிலேட்டுக்குச்சி பத்தியெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். பாத்ததில்லே. இப்ப இந்த பதிவு மூலமா தெரிஞ்சுக்க முடிந்தது.//

      ஓஹோ, இதிலிருந்தே உங்களின் வயதினை ஓரளவு என்னால் அனுமானிக்க முடிகிறது.

      பிறகு அதனை நான் சரிபார்த்துக்கொள்வேனாக்கும். ஹூக்க்க்கும். ;)))))

      நீக்கு
  58. இந்த சிலேட்+ சிலேட்டுக்குச்சி + ஆனாஆவன்னா அட்டை + இவற்றை போட்டுச் செல்ல ஒரு பை, அவ்வளவு தான்.

    எவ்வளவு நல்ல விஷயம் இல்லியா? இப்பல்லாம் கழுதை மாதிரி பொதி சுமந்து குழந்தகள் முதுகே கூனல் விழுந்தாப்போல ஆயிடுச்சி.புத்தக மூட்டைகள் அவ்வளவு ஹெவி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் April 2, 2013 at 7:38 AM

      *****இந்த சிலேட்+ சிலேட்டுக்குச்சி + ஆனாஆவன்னா அட்டை + இவற்றை போட்டுச் செல்ல ஒரு பை, அவ்வளவு தான்.*****

      //எவ்வளவு நல்ல விஷயம் இல்லியா? இப்பல்லாம் கழுதை மாதிரி பொதி சுமந்து குழந்தகள் முதுகே கூனல் விழுந்தாப்போல ஆயிடுச்சி.புத்தக மூட்டைகள் அவ்வளவு ஹெவி.//

      ஆமாம். இது விஷயத்தில் குழந்தைகளை நினைத்தால் மிகவும் பாவமாகத்தான் உள்ளது. பெரியவர்களாகிய நம்மாலேயே தூக்க முடியாத அளவுக்கு ஹெவியாகத்தான் உள்ளது. ;(

      நீக்கு
  59. அதன் பலனாக 10 மாதங்கள் முன்பாகவே நான் பணி ஓய்வு பெற்று வரும்படியாக ஆகிவிட்டது. 10 மாதச்சம்பளம் + போனஸ் + மற்ற சலுகைகள் என சுமார் ஆறு லட்சங்களுக்கு மேல் நஷ்டமானது.

    அது என்னமோ உண்மைதான். ஆனா லஷங்கள்க்கும் மேலான நட்பு கள் கிடைச்சிருக்காங்களே. அது எவ்வள்வு சந்தோஷமானவிஷயம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் April 2, 2013 at 7:43 AM

      *****அதன் பலனாக 10 மாதங்கள் முன்பாகவே நான் பணி ஓய்வு பெற்று வரும்படியாக ஆகிவிட்டது. 10 மாதச்சம்பளம் + போனஸ் + மற்ற சலுகைகள் என சுமார் ஆறு லட்சங்களுக்கு மேல் நஷ்டமானது.*****

      //அது என்னமோ உண்மைதான்.//

      அப்பாடீ, ஒத்துக்கிட்டீங்களே, ஆறுதலாக உள்ளது.

      //ஆனா லஷங்கள்க்கும் மேலான நட்பு கள் கிடைச்சிருக்காங்களே. அது எவ்வளவு சந்தோஷமானவிஷயம்?//

      வாஸ்தவம் தான். அதுவும் தங்களின் அதிகப்பிரியத்துடன் கூடிய ஆத்மார்த்தமான புதிய நட்புக்கிடைத்துள்ளது நான் செய்த பாக்யம் தான்.

      அதுவே சுமார் 50 லக்ஷங்களுக்கு சமமாக [ அதற்கும் மேலேயே கூட ] இருக்கக்கூடும். விலை மதிப்பில்லாத பொக்கிஷம் தான். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

      நீக்கு
  60. அட்டையிலே ஹரி நமோத்துச்சித்தமோ என்னவோ எழுதியிருக்கும். அதை சொல்லச் சொல்வார்களே.ஞாபகம் வருகிறதா? மேளம் கொட்ட ஊர்வலமாக ஸ்கூலுக்கு பசங்கள் போகும். அங்குள்ள பசங்களுக்கு மிட்டாய் வழங்கி, உறவினருக்கு சாப்பாடுபோட்டு,அவர்களிடம் அன்பளிப்பு வாங்கி எல்லாம் பிள்ளை குழந்தைகளுக்குத்தான். ஒண்ணொண்ணாய் ஞாபகம் வருகிறது.
    அன்பும் ஆசிகளும்

    பதிலளிநீக்கு
  61. Kamatchi April 10, 2013 at 6:19 AM

    வாங்கோ, நமஸ்காரம். இங்கு திடீர் விஜயம் செய்திருக்கிறீர்களே!
    சந்தோஷமாக உள்ளது.

    //அட்டையிலே ஹரி நமோத்துச்சித்தமோ என்னவோ எழுதியிருக்கும். அதை சொல்லச் சொல்வார்களே.ஞாபகம் வருகிறதா?//

    ஞாபகம் உள்ளது.

    //மேளம் கொட்ட ஊர்வலமாக ஸ்கூலுக்கு பசங்கள் போகும். அங்குள்ள பசங்களுக்கு மிட்டாய் வழங்கி, உறவினருக்கு சாப்பாடுபோட்டு, அவர்களிடம் அன்பளிப்பு வாங்கி எல்லாம் பிள்ளை குழந்தைகளுக்குத்தான். ஒண்ணொண்ணாய் ஞாபகம் வருகிறது.
    அன்பும் ஆசிகளும்//

    இதெல்லாம் போகப்போக குறைந்து விட்டது. நான் படிக்கும்போது ஒரு பணக்காரப் பையனை யானையில் ஏற்றி, மாலையெல்லாம் போட்டு கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

    தங்களின் அன்பான் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நமஸ்காரங்களுடன்
    கோபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  62. நல்லா சிறப்பான பள்ளிப் பயணம். எங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கும் மேல் பள்ளி இறுதி சர்டிஃபிகேட்டில் போட்டிருக்கு. :))) அதான் பாஸ்போர்ட், வோட்டர் ஐடி எல்லாத்துக்கும். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Geetha SambasivamJanuary 14, 2014 at 8:45 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்லா சிறப்பான பள்ளிப் பயணம். எங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கும் மேல் பள்ளி இறுதி சர்டிஃபிகேட்டில் போட்டிருக்கு. :))) அதான் பாஸ்போர்ட், வோட்டர் ஐடி எல்லாத்துக்கும். :))))//

      அப்போ நாமெல்லாம் ஒரே கட்சிதான் போலிருக்கு. ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  63. இந்தப் பதிவு எனக்கு அந்த கால பள்ளி நாட்களை ஞாபகப் படுத்தி விட்டது.அப்பொழுதெல்லாம் பர்த் சர்டிபிகேட் எல்லாம் கிடையாதே? எனக்கும் பள்ளி கணக்குப்படி ஒரு வயது கூட போட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  64. Radha Balu May 23, 2014 at 4:14 PM

    வாங்கோ, வணக்கம்.

    //இந்தப் பதிவு எனக்கு அந்த கால பள்ளி நாட்களை ஞாபகப் படுத்தி விட்டது.அப்பொழுதெல்லாம் பர்த் சர்டிபிகேட் எல்லாம் கிடையாதே? எனக்கும் பள்ளி கணக்குப்படி ஒரு வயது கூட போட்டிருக்கும்.//

    ஆஹா, அப்படியா ! நீங்களும் அப்போ நம்ம கட்சி தானா? சந்தோஷம். ;)

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - VGK

    பதிலளிநீக்கு
  65. என்னையும் இப்படித்தான் ஒரு வருடம் முன்னால் சேர்த்தி விட்டார்கள். இப்படி சேரும் பசங்களுக்கு பிறந்த தேதி போட ஒரு ரூல் இருக்கிறது. அதவது ஜூன் 15 ம் தேதி, பொருத்தமான வருடம் போட்டு ஐந்து வயது முடிந்து விட்டதாகக் காட்டுவார்கள். என் ஜாதகப்படி பிறந்த தேதி 14-7-1935. ஸ்கூல் ரிக்கார்டுபடி பிறந்ந தேதி 15-6-1934.

    பதிலளிநீக்கு
  66. :))) இந்த பதிவுக்கு நான் ஏற்கனவே 5பின்னூட்டங்கள் போட்டிருக்கேனாக்கும்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் June 5, 2015 at 11:00 AM

      //:))) இந்த பதிவுக்கு நான் ஏற்கனவே 5பின்னூட்டங்கள் போட்டிருக்கேனாக்கும்!!!!!//

      தெரியும். பார்த்தேன். மீண்டும் மீண்டும் படித்து மகிழ்கிறேன். :))))) தேங்க் யூ !

      நீக்கு
  67. அதன் பலனாக 10 மாதங்கள் முன்பாகவே நான் பணி ஓய்வு பெற்று வரும்படியாக ஆகிவிட்டது. 10 மாதச்சம்பளம் + போனஸ் + மற்ற சலுகைகள் என சுமார் ஆறு லட்சங்களுக்கு மேல் நஷ்டமானது. //

    ஆபீஸ் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா.
    நானும் சரியாக ஒரு வருடம் முன்பு பணி ஓய்வு பெற்று விட்டேன்.

    நஷ்டம் சுளையாக ஏறக்குறைய 12 முதல் 13 லட்சங்கள்.

    பசிச்சவன் பழங்கணக்கு பார்த்த கதை தான்.

    பதிலளிநீக்கு
  68. ஒரு ஐம்பது அறுபது வருடங்களில் தான் எத்தனை மாற்றங்கள் உலகத்தில். இது நாம் சிறுவயதில் இருந்த போது இருந்த விஷயங்கள் அனைத்துமே வெகு தூரத்தில் சென்று அழிந்துவிட்டது போலத் தோன்றுகிறது. தங்களது இந்தப் பிரத்தியேகப் பதிவு என்றென்றும் 'பழைய பள்ளிக் கூடத்தையும் கற்பித்தலையும் அதன் முறையையும்' படம் வரைந்து பாகங்களைக் குறி...என்பது போல காலங்கள் தாண்டியும் இணையத்தில் மாறாது இனிவரும் சந்ததிகளுக்கு நல்ல உதவியாக இருக்கும் என்றும் கட்டியம் கூறலாம்.

    இப்போதே கல் சிலேட்டு, தகர சிலேட்டு, பிளாஸ்டிக் சிலேட்டு எல்லாம் போய் நோட்டு சிலேட்டு வந்து அதுவும் போய் கண்ணாடி சிலேட்டு வந்தாச்சு.....மீண்டு வரும்......யுகங்கள் கடந்து மீண்டும் மீண்டும் கல்சிலேட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயஸ்ரீ ஷங்கர் July 4, 2015 at 4:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒரு ஐம்பது அறுபது வருடங்களில் தான் எத்தனை மாற்றங்கள் உலகத்தில். இது நாம் சிறுவயதில் இருந்த போது இருந்த விஷயங்கள் அனைத்துமே வெகு தூரத்தில் சென்று அழிந்துவிட்டது போலத் தோன்றுகிறது. தங்களது இந்தப் பிரத்தியேகப் பதிவு என்றென்றும் 'பழைய பள்ளிக் கூடத்தையும் கற்பித்தலையும் அதன் முறையையும்' படம் வரைந்து பாகங்களைக் குறி...என்பது போல காலங்கள் தாண்டியும் இணையத்தில் மாறாது இனிவரும் சந்ததிகளுக்கு நல்ல உதவியாக இருக்கும் என்றும் கட்டியம் கூறலாம்.//

      ஓரளவு என்னுடைய சமவயதில் உள்ளவர்களுக்கும், என்னைவிட ஓர் 10-12 ஆண்டுகள் குறைவாகவே உள்ளவர்களுக்கும்கூட, இவற்றையெல்லாம் அனுபவபூர்வமாக ரசித்துப்படித்து, புரிந்துகொண்டு, மகிழ முடியும். தாங்களும் இதனைப் புரிந்துகொண்டு இங்கு பேசியுள்ளது மிகவும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. :)

      //இப்போதே கல் சிலேட்டு, தகர சிலேட்டு, பிளாஸ்டிக் சிலேட்டு எல்லாம் போய் நோட்டு சிலேட்டு வந்து அதுவும் போய் கண்ணாடி சிலேட்டு வந்தாச்சு.....மீண்டு வரும்......யுகங்கள் கடந்து மீண்டும் மீண்டும் கல்சிலேட்டுக்கள்..!//

      தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  69. ஐயயோ குருஜி நாலு வயசுவர அப்மி கிடக்கல பாலு குடிச்சீங்களா படிக்கயிலயே சிரிப்பாணி பொத்துகிச்சி. சிலேடு குச்சுனு இன்னாலாமோ சொலாலினிங்க இன்னாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 19, 2015 at 2:49 PM

      வாங்கோ முருகு, வணக்கம்.

      //ஐயயோ குருஜி நாலு வயசுவர அப்மி கிடக்கல பாலு குடிச்சீங்களா படிக்கயிலயே சிரிப்பாணி பொத்துகிச்சி. //

      :))))))))))))))))))))))

      //சிலேடு குச்சுனு இன்னாலாமோ சொலாலினிங்க இன்னாது//

      Slate + Slate Pencil as shown in the picture :) தெரியாதா? பார்த்ததே இல்லையா? ஆச்சர்யமாகத்தான் உள்ளது. :)
      தங்கள் அம்மியிடம் கேளுங்கோ ... சொல்லுவாங்க.

      நீக்கு
  70. மீண்டும் பள்ளிக்கு நாங்ளும் சென்றோமே ஆனா என்ன ஒண்ணு எங்களுக்கெல்லாம் சுவையான ரசனையான அனுபவங்கள் என்று சொல்லிக்கொள்ளும்படி ஏதுமே இல்லையே. அப்படியே இருந்திருந்தாலும் உங்களைப்போல அதை சுவைபட சொல்லத்தெரியாதே.

    பதிலளிநீக்கு
  71. வாத்யாரே..உங்களோட திடகாத்திர உருவத்துக்கு காரணம் இப்பதான் புரியுது. இந்த இடுகை என்னை 1967ல நான் BHEL தமிழ் மீடியம் ஸ்கூல்ல 1ம் வகுப்பு போனதை ஞாபகப் படுத்துது. நன்றி

    பதிலளிநீக்கு
  72. ஹா ஹா.. இந்த குழந்தை ரொம்ப குறும்பு கார குழந்தையாக இருக்கே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராப்தம் June 11, 2016 at 11:55 AM

      //ஹா ஹா.. இந்த குழந்தை ரொம்ப குறும்பு கார குழந்தையாக இருக்கே..//

      :)))))))))))))))))))))))))))

      வாங்கோ சாரூ, வணக்கம்மா.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  73. பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... October 20, 2016 at 1:39 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நானும் ஆஜர்.. )))))//

      தொடர்ச்சியாக இதன் அடுத்த அடுத்தப் பகுதிகளையும் படியுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      நீக்கு
  74. இந்த 7 பகுதித் தொடர் 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்', மிகவும் பிடித்திருந்ததனாலும், ரசித்துப் படித்ததனாலும் இவ்வளவு வருடங்களாகிவிட்டாலும் பின்னூட்டம் இடறேன். முதல்ல மொத்தமா பகுதி 7ல எழுதலாமான்னு நினைத்தேன். அப்புறம் அந்த அந்தப் பகுதில ரசித்ததை எழுதலாம்னு தோணித்து.

    உங்களை ஸ்கூலில் கொண்டு தள்ளிய காரணத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க. உங்க அக்கா கொண்டுவந்து விட்டதையும் படிக்கும்போது, பின்பு அக்காவைப் பற்றி எழுதுவதையும் அவரை முடிந்தபோது போய்ப் பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு வருவதையும் புரிந்துகொள்ளமுடிந்தது.

    எனக்கும் உங்களைப்போல், 5 மாச இடைவெளி (உண்மை பிறந்த தினத்துக்கும் ரெகார்டில் இருப்பதற்கும்). நான் செய்திகளில் (பல வருடங்களுக்கு முன்பு) படித்திருக்கிறேன். ஆதார பூர்வ ரெகார்டு இருந்ததால் (பிறந்த தினத்துக்கு), பிற்காலத்தில் ஒருவர் கேஸ் போட்டு, தன்னுடைய பிறந்த தினத்தை உண்மைப் பிறந்த தினமாக மாற்றி அரசு வேலையில் 10 மாதமோ 1 வருடமோ நீட்டித்திக்கொண்டார்னு.

    சிலேட் - அப்படியே என்னுடைய ஆரம்பக் கல்வி காலத்துக்குக் கொண்டுபோய்ட்டீங்க. உங்க இடுகைல, டீடெயில்ஸ்க்கு நீங்கள் கொடுக்கற முக்கியத்துவம்தான், இடுகையை ரசிக்கவும் ஒன்றிப்போகவும் வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் January 24, 2018 at 7:20 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //இந்த 7 பகுதித் தொடர் 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்', மிகவும் பிடித்திருந்ததனாலும், ரசித்துப் படித்ததனாலும் இவ்வளவு வருடங்களாகிவிட்டாலும் பின்னூட்டம் இடறேன். முதல்ல மொத்தமா பகுதி 7ல எழுதலாமான்னு நினைத்தேன். அப்புறம் அந்த அந்தப் பகுதில ரசித்ததை எழுதலாம்னு தோணித்து.//

      தங்களுக்கே மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்வதில் நான் தன்யனானேன். இந்தப் பதிவினை நான் வெளியிட்டு சுமார் ஆறு ஆண்டுகள் ஆகியும், இன்றும் தங்களைப் போன்ற ஊன்றிப்படிக்கும், உண்மையான வாசக ரஸிகர் ஒருவரிடமிருந்து பின்னூட்டம் கிடைத்திருப்பதே என் எழுத்துக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக நினைத்து நானும் மகிழ்கின்றேன். தனித்தனியே பின்னூட்டமிட இருக்கும் தங்களுக்கு நானும் தனித்தனியே வரிக்கு வரி பதில் அளிப்பது என முடிவு செய்து விட்டேன். :)

      //உங்களை ஸ்கூலில் கொண்டு தள்ளிய காரணத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க.//

      நான் எதைப்பற்றி எழுத ஆரம்பித்தாலும், அதில் இந்த நகைச்சுவை என்பது ஆடோமேடிக் ஆக நர்த்தனமாடி வருவது ஓர் அனிச்சை செயலாக நிகழ்ந்து விடுகிறது. அதுவே என் ஸ்பெஷாலிடியாகவும் அமைந்துள்ளதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

      //உங்க அக்கா கொண்டுவந்து விட்டதையும் படிக்கும்போது, பின்பு அக்காவைப் பற்றி எழுதுவதையும் அவரை முடிந்தபோது போய்ப் பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு வருவதையும் புரிந்துகொள்ளமுடிந்தது.//

      ஏதோ எங்கள் ஊரிலேயே, எங்கள் தெருவிலேயே, நடந்து செல்லும் தூரத்திலேயே என் பெரிய அக்கா அவர்களும் குடியிருப்பதால் அடிக்கடி நேரில் போய் சந்திக்க முடிகிறது. தினமும் தொலை பேசியிலும், நாங்கள் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டே இருப்பதும் உண்டு. ’பாசமலர்’ படத்தில் சாவித்ரி சிவாஜிக்குத் தங்கை. இங்கு எனக்குத் தமக்கை. அது ஒன்றுதான் இதில் உள்ள வித்யாசமாகும்.

      //எனக்கும் உங்களைப்போல், 5 மாச இடைவெளி (உண்மை பிறந்த தினத்துக்கும் ரெகார்டில் இருப்பதற்கும்). நான் செய்திகளில் (பல வருடங்களுக்கு முன்பு) படித்திருக்கிறேன். ஆதார பூர்வ ரெகார்டு இருந்ததால் (பிறந்த தினத்துக்கு), பிற்காலத்தில் ஒருவர் கேஸ் போட்டு, தன்னுடைய பிறந்த தினத்தை உண்மைப் பிறந்த தினமாக மாற்றி அரசு வேலையில் 10 மாதமோ 1 வருடமோ நீட்டித்திக்கொண்டார்னு.//

      இருக்கலாம். எனக்கு அந்த சாமர்த்தியங்கள் ஏதும் இல்லை. நான் என்ன செய்வது?

      //சிலேட் - அப்படியே என்னுடைய ஆரம்பக் கல்வி காலத்துக்குக் கொண்டுபோய்ட்டீங்க. உங்க இடுகைல, டீடெயில்ஸ்க்கு நீங்கள் கொடுக்கற முக்கியத்துவம்தான், இடுகையை ரசிக்கவும் ஒன்றிப்போகவும் வைக்கிறது.//

      பலரும் இங்கு பல கருத்துக்கள் சொல்லியிருக்கலாம். தங்களின் தனித்தன்மை வாய்ந்த, வாசிப்புகள் + கருத்துக்களில் என்னையும் ஒன்றிப்போக வைத்து விடுகிறீர்கள். :)

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்வாமீ !

      அன்புடன் கோபு

      நீக்கு