கனி கிடைக்கும் வரைக் காத்திருப்போம்
முன்னொரு காலத்தில் பூலோகத்தில் ஓர் குழந்தை இருந்தது.
சொர்க்கத்தில் கடவுள் திருக்கரங்களால் மனிதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு ஆப்பிள் பழம் வீதம் வினியோகிக்கப்படுவதாக அது கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தது.
தானும் கடவுள் கையால் ஆப்பிள் பழம் வாங்கிக்கொள்ளும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்ற ஆவலில் சொர்க்கத்திற்குச் சென்றது.
அங்கு மிகப்பெரிய க்யூ வரிசையில் மனிதர்கள் நின்றவாறு, கடவுளிடமிருந்து ஆப்பிள்களை பெற்றுச்செல்லும் அழகினைக் கண்டு வியந்து போய் தானும் அந்தக் க்யூ வரிசையின் கடைசியில் சேர்ந்து கொண்டு நின்றது.
அது அவ்வாறு க்யூவில் நிற்கும் போது அதன் மனதில் பலவித சந்தோஷமான எண்ணங்கள், ஆவல்கள்.
நடக்கபோகும் செயலால் கடவுள் கையால் தனக்கோர் பழம் கிடைக்கவுள்ள பாக்யத்தை மனதில் அசைபோட்டு மகிழ்ந்தது.
அந்தக்குழந்தையின் முறையும் வந்தது. கடவுளை நெருங்கிவிட்ட அது தன் மிகச்சிறிய இரு கரங்களையும், மிகவும் பக்தி சிரத்தையுடன் குவித்தபடி பெளவ்யமாகவே நீட்டியது.
கடவுளால் அந்தக்குழந்தையின் சிறிய கையில் பெரிய ஆப்பிள் பழம் ஒன்று கொடுக்கப்பட்டது.
துரதிஷ்டவசமாக அந்த ஆப்பிள் பழத்தின் கனம் தாங்க முடியாத குழந்தையின் கைகளிலிருந்து அந்தப்பழம் கைநழுவி கீழே சேற்றில் விழுந்து விட்டது.
குழந்தைக்கு இது மிகவும் ஏமாற்றத்தை அளித்தது.
கடவுளின் அருகே இருந்த தேவதைகள் அந்தக் குழந்தையைப் பார்த்து “உனக்கு கடவுள் திருக்கரங்களால் வேறு ஒரு ஆப்பிள் பழம் கிடைக்க வேண்டும் என்று நீ விரும்பினால், மீண்டும் இதே க்யூ வரிசையின் கடைசியில் போய் நின்று கொண்டு மீண்டும் உன் வாய்ப்பு வரும்போது வந்து பெற்றுச்செல்லலாம்” என்று அந்தக் குழந்தைக்கு ஆறுதலும் ஆலோசனைகளும் கூறினர்.
பூலோகத்திலிருந்து புறப்பட்டு சொர்க்கத்திற்கு வந்து மிக நீண்ட நேரம் காத்திருந்தும் பழம் கிடைக்காமல் போனதால், திரும்பவும் வெறும் கையுடன், கடவுள் கையினால், பழம் ஏதும் பெறாமல் பூலோகம் செல்ல விரும்பாத அந்தக்குழந்தை, மீண்டும் அந்த மிக நீண்ட க்யூ வரிசையில் போய் நின்று கொள்ள முடிவு செய்தது.
இந்த முறை அந்த க்யூ சென்ற முறையைவிட மிக நீளமாகவே இருந்தது.
கடவுள் கையினால் கொடுக்கப்பட்ட ஆப்பிள்களை எடுத்துக்கொண்டு, முகம் பூராவும் மகிழ்ச்சிப் பரவஸத்துடன் பலரும் தன்னைக் கடந்து செல்வதை அந்தக் குழந்தை க்யூவில் நின்றபடியே கவனித்து வந்தது.
அநேகமாக எல்லோருக்கும் முதல் முறையிலேயே, கடவுள் கையால் சுலபமாகக் கிடைத்து விட்ட ஆப்பிள், தனக்கு மட்டும் கிடைக்காமல் இப்படி ஆகிவிட்டதே என நினைத்து அந்தக்குழந்தையின் மனம் சற்றே வாடிப்போனது.
எனக்கு மட்டும் இது போல ஆனதற்கு நான் என்ன பாவம் செய்தேனோ என நினைத்து வருந்தியது, அந்தக்குழந்தை.
இந்த முறை கடவுள் கையால் தரப்படவுள்ள அந்த ஆப்பிள் பழத்தை. எப்படியும் நாம் நழுவ விட்டுவிடக்கூடாது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்தக்குழந்தை தனக்குள் நினைத்துக்கொண்டது.
மீண்டும் அந்தக்குழந்தைக்கான வாய்ப்பு வந்தது. கடவுள் திருக்கரங்களால் இந்த முறையும் ஆப்பிள் பழம் குழந்தைக்குக் கொடுக்கப்பட்டது.
கடவுள் குழந்தையிடம் இப்போது பேசலானார்:
குழந்தாய்! நான் ஏற்கனவே ஒரு ஆப்பிள் பழத்தை உன் கைகளில் கொடுக்கும் போது தான் கவனித்தேன்; அந்த ஆப்பிள் பழம் அழுகலானது என்று.
அதை உனக்கு நான் கொடுக்க விரும்பாததால் தான் அதை உன் கைகளிலிருந்து உடனே கீழே விழுமாறு செய்தேன்.
உனக்குப்போய் ஓர் அழுகிய ஆப்பிள் பழத்தைக்கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை.
மேலும், இங்கு இருக்கும் ஆப்பிள்களிலேயே மிகச்சிறந்ததோர் ஆப்பிளையே உனக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன்.
ஆனால் நீ சென்ற முறை என்னிடம் வந்த நேரத்தில் அந்த மிகச்சிறந்த ஆப்பிள் இவ்விடம், இல்லாமல் தோட்டத்தில் காயாகிக் கனியாகும் பருவத்தில் வளர்ந்து கொண்டிருந்தது.
அது கனிந்து என் கைகளுக்குக் கிடைத்து, அதை நான் உன் கைகளில் தரும் வரையிலான நேரத்தில் தான், நான் உன்னை மிகப்பெரிய இந்தக் க்யூ வரிசையில் மீண்டும் காத்து நிற்கும்படிச் செய்தேன்.
இதோ இது தான், இப்போது உன் கையில் நான் கொடுத்துள்ளது தான், அந்த மிகச்சிறந்த ஆப்பிள்.
இது போன்ற ஒரு மிகச்சிறந்த ஆப்பிள் இதுவரை விளைந்ததே இல்லை,
உனக்குத் தான் அதிர்ஷ்டம், அதை நன்கு எஞ்ஜாய் செய்து அனுபவி”
எனச்சொல்லி அந்தக் குழந்தையை அனுக்கிரஹித்து அனுப்பினார்.
-ooooooooooOoooooooooo-
நம் சிந்தனைக்கு:
நாம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற (Commitment), நம் 100 சதவீத அர்பணிப்புகளைக் காட்டி (Dedication) முழு முயற்சிகளுடன் உண்மையாக உழைத்தாலும் ( Full Efforts with Sincere and Hard work ) கூட, சில நேரங்களில், காலதாமதங்களும், தவறுகளும், தோல்விகளும் (Delay, Mistakes + Failure) தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து விடுகின்றன. நமக்கு வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போய் விடுவதும் உண்டு.
கடவுள் நமக்கு இதைவிட மேலும் சிறப்பான ஏதோ ஒன்றை நாளை தரவிருப்பதால் தான், இன்று இது இப்படி நிகழ்ந்துள்ளது என்று உணர்ந்து நம் மனதை நாமே சமாதானம் செய்து கொள்ளப் பழக வேண்டும்.
கஷ்டமோ சுகமோ, யாருக்கு எதை எப்போது எங்கே எப்படித்தர வேண்டும் என்பது அந்தப் பரம்பொருளுக்குத் தெரியும் என்பதை நாம் என்றும் மறக்கக் கூடாது.
நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவை, என்றோ ஒருநாள் கடவுளால், நம் தகுதிக்கு ஏற்றவாறு கட்டாயம் தரப்பட்டே தீரும்.
அதுவரை அமைதியாகக் காத்திருப்போம்.
"WAIT FOR YOUR TURN" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் படித்தது.
தகுந்த மாற்றங்களுடன் தமிழாக்கம் மட்டுமே என்னால் செய்யப்பட்டது. vgk
உண்மை.கடவுள் நமக்காக நல்லதையே செய்ய எண்ணுகிறார் என்னும் நம்பிக்கை நமக்கு வேண்டும்.அருமையான கதை
பதிலளிநீக்குவணக்கம்! எல்லாம் நன்மைக்கே என்ற தத்துவத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
பதிலளிநீக்குமுன்பு ஒரு முறை எனக்கு மின்னஞ்சலில் இது வந்த போது படித்தேன். நன்றாக தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது.பகிர வேண்டிய நல்லதொரு விஷயம். நன்றி
பதிலளிநீக்குகாத்திருந்தால் நல்ல விசயமே நடக்கும். அந்த பொறுமை நமக்கு இல்லாமல் போய்விடுகிறது.
பதிலளிநீக்குநல்ல கருத்து கொண்ட சிறுகதை.... சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குகாத்திருக்கும் பொறுமை மட்டுமே நம்மிடம் இல்லை எனத் தோன்றுகிறது....
அருமையான கதை
பதிலளிநீக்குஅருமையான விளக்கம்
மனதில் மிக ஆழமாய் பதிந்துவிட்டது
தொடர்ந்து தர அன்புடன் வேண்டுகிறேன்
முன்பு இது எனக்கு இமெயிலில் வந்த போது படித்து இருக்கிறேன். உங்கள் எழுத்தில் இதை படிக்கும் போது நன்றாக இருக்கிறது..படிக்காதவர்கள் படிக்க நீங்கள் பகிர்ந்த ஒரு நல்லதொரு பதிவு
பதிலளிநீக்குநல்ல கதை...நல்ல கருத்து...
பதிலளிநீக்குநான் எப்போதுமே சொல்வது உண்டு...
ஏதாவது ஒன்று தட்டிப்போனால்
"ஏதோ ஒரு காரணத்தால் தான் தட்டிபோய்விட்டது...இது கிடைத்தால் பிறகு வர்தப்படுவோம்...அல்லது இதை விட நல்லது வர இருக்கிறது " என்று...
அது நிஜமோ என்னவோ...மனதை நிலைப்படுத்தும்...
மிக அருமையான கரு கொண்ட கதை. கதை கேட்க மிகவும் பிடிக்கும் மீராவிற்கு இது போனஸ் இன்னிங்க்ஸ். காலம் கனியும் வரை காத்திரு ; கடவுள் யாருக்கு எதை எப்போது தரவேண்டுமோ அதை அப்போது தருவார் எனும் அருமையான கருத்து கதைவடிவில் படிக்கும்போது உள்ளத்தில் உறுதியாய் நிற்கும். அருமையான் பதிவை அளித்ததற்கு மிகவும் நன்றி Gopu Sir.
பதிலளிநீக்குமேலும் இதுபோன்ற சிந்தனை கரு கதை கேட்க அவளை இருக்கிறேன்.
கடவுள் நமக்கு இதைவிட மேலும் சிறப்பான ஏதோ ஒன்றை நாளை தரவிருப்பதால் தான், இன்று இது இப்படி நிகழ்ந்துள்ளது என்று உணர்ந்து நம் மனதை நாமே சமாதானம் செய்து கொள்ளப் பழக வேண்டும்.
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவை, என்றோ ஒருநாள் கடவுளால், நம் தகுதிக்கு ஏற்றவாறு கட்டாயம் தரப்பட்டே தீரும்.
பதிலளிநீக்குஅதுவரை அமைதியாகக் காத்திருப்போம்.
Yes. Will wait.
Nice post sir.
viji
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற மனப்பான்மை இருக்கும்வரை இழந்தவற்றுக்காய் வருத்தம் எழாது. அருமையானக் கருத்தை ஒரு குழந்தைக்கதை மூலம் எளிமையாய்ப் புரியும்விதத்தில் தமிழாக்கம் செய்து, தேவையான சிந்தனைகளையும் தொகுத்து வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சார்.
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு. ”எல்லாம் நன்மைக்கே” என்ற வாக்கியத்தை உறுதிப்படுத்துகிறது இந்த கதை...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி சார்.
இங்கு இருக்கும் ஆப்பிள்களிலேயே மிகச்சிறந்ததோர் ஆப்பிளையே உனக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன்.
பதிலளிநீக்குஅருமையான கதை
அருமையான விளக்கம்
நல்ல கருத்துள்ள கதை. ரசித்தேன்.
பதிலளிநீக்குஇந்த என் சிறுகதைப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து,
பதிலளிநீக்குஅழகான பல கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள என் அருமைத்
திருவாளர்கள்:
=============
01. தி.தமிழ் இளங்கோ Sir அவர்கள்
02. விச்சு Sir அவர்கள்
03. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்
04. ரமணி Sir அவர்கள்
05. ‘அவர்கள் உண்மைகள்’ அவர்கள்
06. ரிஷபன் Sir அவர்கள்
07. G M B Sir அவர்கள்
திருமதிகள்:
===========
01. ராஜி Madam அவர்கள்
02. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்
03. மீரா Madam அவர்கள்
04. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்
05. விஜி Madam அவர்கள்
06. கீதமஞ்சரி Madam அவர்கள்
07. மாலதி Madam அவர்கள்
08. கோவை2தில்லி Madam அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன் தங்கள் vgk
காலம் கனியும்போதுதான் எதுவும் நடக்கும். ஆனால் மனிதனுக்கோ பொறுமையில்லை. இப்போதே வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறான். அவன் நோக்கம் நிறைவேறுவதில்லை.
பதிலளிநீக்குகடவுள் நமக்கு தரவேண்டும் என்று நினைத்து விட்டால் அதை யாராலும் தடுக்க மடியாது. அதே சமயம் வேண்டாம் என்று நினைத்து விட்டால் யாராலும் தரவும் முடியாதுதான்
பதிலளிநீக்குவாவ். எல்லாம் நன்மைக்கே என்ற தத்துவத்தை மிகவும் அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
பதிலளிநீக்குநமக்கு வந்து சேர வேண்டியது பொறுமையாக இருந்தால் வந்து சேர்ந்து விடும். இறைவனிடமிருந்து நமக்கு வந்து சேர வேண்டியதை யாராலும் தடுக்க முடியாது.
அந்த பச்சபுள்ளய ஏமாத்தாம வேர நல்ல பழத்த கொடுத்த ஆண்டவரு கருணை உள்ளவரு. அளுகல் பளம் கெடச்சிருந்தா அந்த புள்ளமனசு கஸ்டப்பட்டிருக்கும்ல.
பதிலளிநீக்குmru October 20, 2015 at 11:21 AM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்.
//அந்த பச்சபுள்ளய ஏமாத்தாம வேர நல்ல பழத்த கொடுத்த ஆண்டவரு கருணை உள்ளவரு. அளுகல் பளம் கெடச்சிருந்தா அந்த புள்ளமனசு கஸ்டப்பட்டிருக்கும்ல.//
கஷ்டப்பட்டு படிச்சு புரிந்துகொண்டு, அழகாகச் சொல்லிட்டீங்கோ. மிக்க நன்றிம்மா.
யாருக்கு எதைக்கொடுக்கவேண்டும் என்று அந்த கருணை உள்ள ஆண்டவருக்குத்தான் தெரியும். ஆனாலும் அந்தக்குழந்தை மறுபடியும் பொறுமையாக பெரிய க்யூவில் போய் நின்றதே.
பதிலளிநீக்குஆண்டவனே ஞானப்பழம் அல்லவா? patience has its rewards....குழந்தை பொறுமையாக இருக்கக் கற்றுக்கொள்கிறதல்லவா? பெண்குழந்தை என்பதால் ஆண்டவனும் இரண்டாம் முறை பார்க்க மனம் விரும்பியிருக்கலாம்!!
பதிலளிநீக்கு//கஷ்டமோ சுகமோ, யாருக்கு எதை எப்போது எங்கே எப்படித்தர வேண்டும் என்பது அந்தப் பரம்பொருளுக்குத் தெரியும் என்பதை நாம் என்றும் மறக்கக் கூடாது.
பதிலளிநீக்குநமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவை, என்றோ ஒருநாள் கடவுளால், நம் தகுதிக்கு ஏற்றவாறு கட்டாயம் தரப்பட்டே தீரும்.
அதுவரை அமைதியாகக் காத்திருப்போம். // அருமை!