என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 4 மார்ச், 2012

நேத்து ராத்திரி ....... யம்மா !


நேத்து ராத்திரி .... யம்மா !



இரண்டு பெண்மணிகளுக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை. ஆனால் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு இலாகாக்களில் பணிபுரிபவர்கள். இருவரும் ஆருயிர்த்தோழிகள். 

சாப்பாட்டு இடைவேளையில் கேண்டினில் நேருக்கு நேர் சந்தித்து அரட்டை அடிப்பார்கள். மற்ற நேரங்களில் சாட் [சுட்டி] மூலம் ஏதாவது தொடர்பு கொண்டு பொழுதைக் கழிப்பதும் உண்டு.


இவ்வாறு அலுவலக நேரத்தில் நடந்த அவர்களின் சுட்டி உரையாடல் ஒன்றை இப்போது பார்ப்போமா?

பெண் 1 : எனக்கு நேற்று மாலையும் இரவும் மிகவும் நல்லபடியாகவே அமைந்தது. உனக்கு எப்படிடீ?

பெண் 2 : நேற்றைய இரவுப்பொழுது எனக்கு வீணாகிப்போனதுடீ. என் கணவர் வீட்டுக்கு வந்தார். 

இரவு சாப்பாட்டை மூன்றே நிமிடங்களில் முடித்துக் கொண்டார். அடுத்த இரண்டே நிமிடங்களில் படுத்துத்தூங்கி குறட்டை விட ஆரம்பித்து விட்டார். 

உனக்கு மட்டும் எப்படி சந்தோஷமாக இருந்தது என்று சற்று விபரமாகத்தான் சொல்லேன்; நமக்குள் எதற்கு ஒளிவு மறைவுகள் ?

பெண் 1: எனக்கு நேற்று மிகவும் அதிர்ஷ்டமான இரவாகவே அமைந்தது.  என் கணவர் வீட்டுக்கு வந்தார். வந்ததும் என்னை ஆசையுடன் வெளியே அழைத்துச்சென்றார். 

இரவு மிக அருமையான விருந்து போன்ற ஸ்பெஷல் சாப்பாட்டு வகையறாக்களை, ஒரு புதுக் காதலர்கள் போல ஹோட்டலில் தனி அறையில் குளிர்சாதன வசதியுடன் மிகவும் ஜாலியாக சாப்பிட்டோம். 

அதன் பிறகு ஒரு மணிநேரம் ஜாலியாகப் பேசிக்கொண்டே நடந்து சென்றோம். 

வீட்டுக்கு வந்ததும் வீடு பூராவும் என் கணவர் மெழுகுவர்த்திகளை ஏற்றி வீட்டை அலங்கரித்தார். 

இரவு நீண்ட நேரம் தூங்காமல் பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். 

தேவலோகக் காட்சிகள் போல ஒரே சந்தோஷமான பகிர்வுகள் தான் நேற்று எங்களுக்குள்; உண்மையிலேயே நேற்றைய இரவை என்னால் மறக்க முடியாதுடீ. அது நல்லதொரு புது அனுபவமாகவே எனக்கு இருந்ததுடீ.


இந்தப்பெண்மணிகளின் கணவர்கள் இருவரும், அதே நேரத்தில் தனியே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதையும் பார்க்கலாமா?

கணவர் 1 : நேற்று சாயங்காலம்+இரவு எப்படிப்பா கழிந்தது?

கணவர் 2 : சூப்பராக படு நிம்மதியாகக் கழிந்தது!


வீட்டுக்கு வந்தேன். இரவு உணவு டைனிங் டேபிள் மேல் ரெடியாக இருந்தது. 


நன்றாக சாப்பிட்டேன். உடனே போய்ப் படுத்தேன். 


நிம்மதியாகத் தூங்கினேன். அடடா! மிக அருமையான தூக்கம். 


அது சரி!  உனக்கு எப்படி ?

கணவர் 1 : அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறாய்? அது ரொம்பவும் கொடுமையப்பா! 

நேற்று மாலை வீட்டுக்கு வந்தேனா! இரவு சமையலே தயாராகவில்லை.  

நான் மின்சாரக் கட்டணம் கட்ட மறந்து விட்டதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. 

வேறு வழியில்லாமல் என் மனைவியை வெளியே சாப்பிட ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிப்போகும்படி ஆகிவிட்டது. 

அதில் எக்கச்சக்க செலவாகி என் பர்ஸே காலியாகி, திரும்பி வர பஸ்ஸுக்கோ ஆட்டோவுக்கோ கூட பணமில்லாத நிலையாகி விட்டது. 

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருவரும் பொடி நடையாக நடந்தே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். 

வீட்டுக்கு வந்தால் மீண்டும் ஒரே இருட்டு.  மின்சார சப்ளை தான் துண்டிக்கப்பட்டு விட்டதே ! 

பிறகு மிகவும் கஷ்டப்பட்டு, தட்டுத்தடுமாறி பல மெழுகுவர்த்திகளை ஏற்றி வீடு பூராவும் பல இடங்களில் நானே வைக்கும்படியாகி விட்டது. 

மின்விசிறி சுழலாமல் காற்று வராததால் என்னால் நிம்மதியாகத் தூங்கவே முடியவில்லை. ஒரே கொசுக்கடி வேறு. 

மிகவும் கடுப்பாகிப்போய் இருந்த என்னிடம், என் மனைவி ஏதேதோ அர்த்தமில்லாமல் ஒரு மணி நேரத்திற்கு மேல் உளறிக்கொண்டே இருந்து மேலும் என்னை வெறுப்பேற்றி விட்டாள். 

எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நானும் மண்டையை ஆட்டிக் கொண்டிருக்கும்படியானது. 






”மொத்தத்தில் நேத்து ராத்திரி .... யம்மா; 
நரக வேதனை தான் ... யம்மா”.



-o-o-o-O-o-o-o-

24 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு...
    ஒரு முறை கேபிள் எரிந்து போய் நாங்கள் பட்ட அவஸ்தை நினைவு வருகிறது...
    katri வெயில் பகல் எல்லாம் வீட்டில் உஷ்ணத்தில் புழுங்கி விட்டு-மாலை a .c .காரில் நகர்வலம் போய் ஆச்வாசப்படுதிக்கொண்டு ,அவ்வப்போது e b க்கு போன் பண்ணி நிலவரம் கேட்டு dinner ஹோடெல்லில் சாப்பிட்டு,பிறகு பீச்சில் உட்கார்ந்து நள்ளிரவுக்கு மேல் வீடு வந்தோம்...ஒரு வழியாக கிர்றேண்டும் வந்தது.... அது இன்வேர்ட்டர் இல்லாத காலம்!

    பதிலளிநீக்கு
  2. செம காமெடி.படித்து ரசித்து சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. யம்மா யம்மா அல்ல..

    ஸ்..யப்பா என்ன ஒரு லொள்ளு.

    மாற்று சிந்தனைகள். அம்மாடியோவ்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  4. மனைவிகளின் கோணத்திலும் கணவர்களிலும் கோணத்திலும் சொன்ன விஷயம் அருமையான நகைச்சுவை! மிக ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  5. வேறு வேறு பார்வைகள்...
    கோணங்கள் புதிது..
    பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. அதேதான் வேறு வேறு பார்வைகள் வேரு வேறு கோணங்கள் அவரவர் இடத்தில் இருந்து பார்த்தாதானே தெரியும்?

    பதிலளிநீக்கு
  7. அட, இப்படி ஒரு அனர்த்தப் புரிதலா? அசத்தல். பகிர்வுக்கு மிகவும் நன்றி வை.கோ சார்.

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான பார்வை. காமெடி தான்...

    பதிலளிநீக்கு
  9. :( பாவம் அந்தப் பெண்மணி....
    இப்படியெல்லாம் இன்னொருவனிடம் அலுத்துக் கொள்வதற்கு அவளிடமே இயல்பாக இருக்கலாமே...மனைவி தோழியுமாகி போவாள் அல்லவா!

    :(

    என்னவோ போங்க!

    பதிலளிநீக்கு
  10. என்னா ஒரு வில்லத்தனம்.அதுக்குதான் மனசார செய்றிங்களான்னு கேட்டு கன்பார்ம் பண்ணிக்கணும்

    பதிலளிநீக்கு
  11. ஹா ஹா ! நன்றாக சிரித்து விட்டு சிந்திக்க வேண்டிய பதிவு.
    ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொருவர் பார்வையிலும் வேறுபடும்.அதற்கு தகுந்தார் போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  12. ஒருவருக்குக் கொண்டாட்டம்

    மற்றொருவருக்குத் திண்டாட்டம்.

    ஹஹஹஹஹஹஹஹஹஹஹா

    பதிலளிநீக்கு
  13. ஹாஹா தலப்பு பாத்து ஏமாந்தனே ஆம்புள புள்ள பேச்சு பொம்புளபுள்ள பேச்சு செம ஜாலிதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 19, 2015 at 2:28 PM

      //ஹாஹா தலப்பு பாத்து ஏமாந்தனே ஆம்புள புள்ள பேச்சு பொம்புளபுள்ள பேச்சு செம ஜாலிதா//

      ஜாலிலோ ஜிம்கானா தானோ!!!!.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  14. இருவரின் கோணங்களிலிருந்தும் பார்க்கும்போது நகைச்சுவையாக தோன்றினாலும் யதார்த்தம் இதுதான்.

    பதிலளிநீக்கு
  15. அம்மா ஜாலின்னா ஐயா காலி..ஐயா ஜாலின்னா அம்மா காலி...என்ன ஒரு கான்ட்ராஸ்ட். எல்லாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது என்பது உண்மைதான் போலும்.

    பதிலளிநீக்கு