என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 15 மார்ச், 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறைவுப் பகுதி-7



மீண்டும் பள்ளிக்குப் போகலாம்


[தொடர்பதிவு]


நிறைவுப் பகுதி-7





முன்பகுதி முடிந்த இடம்:


இந்த B.Com., CONTACT SEMINAR CLASS களுக்கு, நான் திருச்சி ஜமால் முகமது காலேஜுக்குப் போய் வந்த போது [1990] R. விஜயலக்ஷ்மி என்ற ஒரு சின்னப்பெண். அவளுக்கு JUST 17 + வயது தான் ஆகியிருந்தது.  அவள் என்னிடம் மிகவும் பிரியத்துடன் ஒட்டி உறவாட ஆரம்பித்தாள்.  


அவளுக்கு நான் வைத்த பெயர் ஜிமிக்கி + சொக்கி. எனக்கு மிகவும் பிடித்தமான பெரிய சைஸ் ஜிமிக்கிகளை காதில் அணிந்திருப்பாள். வட்ட முகத்துடன், வாளிப்பான உருவத்துடன், நிதான உயரத்தில், திக் மெரூன் கலரில் ஒயிட் காலர் வைத்த சட்டையும், குட்டைப்பாவாடையும், சமயத்தில் சுடிதாரும் அணிந்து வருவாள். 


oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
அடுத்த இறுதிப்பகுதி இதோ தொடர்கிறது...
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


வகுப்பில் என் அருகில் யார் அமர்ந்திருந்தாலும் அவர்களை பிடிவாதமாக எழுப்பி விட்டு இவள் [ஜிமிக்கி] என்னருகில் உட்கார்ந்து கொள்வாள்.  உரிமையுடன் என் நோட்டு, புஸ்தகம், நான் வைத்திருக்கும் ஒரு டஜன் பேனாக்கள் எல்லாவற்றையும் எடுத்து ஆராய்ச்சி செய்வாள். 


மாலையில் வகுப்பு முடிந்த பிறகும், நான் வகுப்பைவிட்டு வெளியே கிளம்பும் போது தான், அவளும் வெளியேறுவாள். 


நான் வேறு யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தாலும், பாத்ரூம் பக்கம் போய் விட்டாலும், எனக்காக அவள் காத்திருப்பாள். 


பிறகு சுப்ரமணியபுரம் டி.வி.எஸ். டோல்கேட் பஸ் ஸ்டாப்பில் நான் போய் பஸ் ஏறச் செல்லும் போதும், பசுமாட்டைக் கன்னுக்குட்டி முட்டிமோதித் தொடர்வது போல என்னுடன் தொடர்ந்தே வருவாள். 


நடுரோட்டில் காலை இடறுவதுபோல இவள் ஏன் என்னுடன் ஒட்டி உரசிக் கொண்டு நிழல் போல தொடர்ந்து வருகிறாள்? என நினைத்தேன். இருப்பினும் அவளிடம் நான் ஒன்றும் கேட்கவில்லை.


முதல் நாள் அங்கு வந்து நின்ற எந்த பஸ்ஸிலுமே அவள் ஏறவில்லை. ஒரு அரை மணி நேரத்திற்கும் மேலாக இதை கவனித்த நான் அவளிடம் “நீங்கள் எங்கே போக வேண்டும், ஏன் இந்த பஸ்கள் எதிலுமே நீங்கள் ஏறவில்லை?” எனக்கேட்டேன். 


அதற்கு அவள் “நீங்கள் BHEL Township தானே போகப்போகிறீர்கள், தஞ்சாவூர் மொஃபஸல் பஸ்ஸில் போகாமல் என்னுடன் BHEL வரை போகும் சாதா 128 ரூட் டவுன் பஸ்ஸில் வரமுடியுமா சார்? என்று மிகுந்த தயக்கத்துடன் கேட்டாள்.  


”ஏனம்மா? என்ன விஷயம்? என்று நான் கேட்டேன். 


கண் கலங்கியபடி தன் சொந்தக்கதையைச் சொல்லி என்னையும் கண் கலங்க வைத்து விட்டாள்.


அவள் தந்தை பொன்மலை ரெயில்வேயில் வேலை பார்த்தவராம். இவள் அவருக்கு ஒரே பெண்ணாம். ஆறு மாதங்கள் முன்பு அவள் தந்தை திடீரென காலமாகி விட்டாராம். என்னைப் பார்த்தால் அவள் தந்தை ஞாபகம் தான் அவளுக்கு வருகிறதாம்.


+2  படிப்பு முடித்திருந்த அவளுக்கு 18 வயதுகள் பூர்த்தியான பிறகு கருணை அடிப்படையில் ரெயில்வேயில் வேலை தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். 


அம்மாவும் இவளும் மட்டும் திருச்சி to BHEL செல்லும் வழியில் உள்ள ரெயில் நகர் என்ற பகுதியில் தனியாக வசித்து வருகிறார்களாம்.


இவளுக்கு வெளியுலகப் பழக்கமே சுத்தமாகக் கிடையாதாம். பஸ்ஸில் ஏறி தனியாகப் பயணம் செய்தது கூடக் கிடையாதாம். அவள் தந்தை இருந்தவரை வீட்டில் மிகவும் செல்லமாக வளர்ந்த பெண்ணாம்.  


CONTACT SEMINAR CLASS இல் எங்களுடன் படித்த மற்ற யாரோ சில பெண்மணிகளிடம் அவள் விசாரித்ததில் நான் BHEL AREA விலிருந்து வருவதாகவும், ”அவர் மிகவும் நல்லவர், போகும் போது அவர் துணையுடன் போ” என்று ஆலோசனை சொன்னார்களாம். 


அதனால் நான் அவளுடன் டவுன் பஸ்ஸில் துணைக்கு வர வேண்டுமாம். தஞ்சாவூர் செல்லும் மொஃபஸல் பஸ் என்றால் அவள் குடியிருக்கும் ரெயில் நகர் பகுதியில் அந்த பஸ்கள் நிற்காதாம். அதனால் நானும் அவளை விட்டுவிட்டு வேறு ஏதாவது மொஃபஸல் பஸ்ஸில் ஏறக்கூடாதாம். 


பலவித அன்புக்கட்டளைகள் இடத்தொடங்கி விட்டாள். அவளின் மிகவும் நியாயமான இந்த சோகக்கதைகளைக் கேட்டதும், அவள் மேல் நான் மிகவும் இரக்கம் கொண்டேன்.


இவ்வாறு படிக்கப்போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அழகிய பெண் குழந்தை என்னுடன் ஒட்டிக்கொண்டதில், பெண் குழந்தையே பிறக்காத எனக்கும் மனதுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. 


அடுத்து வந்த கும்பல் குறைவாக இருந்த தஞ்சாவூர் மொஃபஸல் பஸ்ஸில் அவளையும் ஏறச்சொல்லி, நானும் ஏறிக்கொண்டு, அவளை நேராக என் வீட்டுக்கு அழைத்துச் சென்று, என் மனைவியை அறிமுகப்படுத்தி விட்டு, டிபன் காஃபி சாப்பிடச் சொல்லி வற்புருத்தினேன். மிகவும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டாள்.  


பிறகு வேறு ஒரு பஸ் பிடித்து, அவளை பத்திரமாக அவள் வீட்டுக்குக் கொண்டு போய் சேர்த்து விட்டு வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு தைர்யம் சொல்லி, அவளுக்கு இருந்த வெளியுலக பயத்தை நாளடைவில் போக்கினேன். 


பிறகு 18 வயது பூர்த்தியான பிறகு அவளுக்கு கருணை அடிப்படையில் ரெயில்வேயில் வேலை கிடைத்து, மதுரையில் போய் பணியில் சேரும்படி ஆனது. அதன் பின் அவளுக்குக் கல்யாணமும் ஆகிவிட்டது. அவளுக்குப்பிறந்த ஒரே பெண் குழந்தை இப்போது 9th or 10th படிக்கிறாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொன்மலைக்கே பணிமாற்றமும் கிடைத்து திருச்சிக்கே வந்து விட்டாள். 


இடையில் 1997 முதல் 2006 வரை ஒரு பத்து ஆண்டுகள் இவளை நான் நேரில் சந்திக்க முடியவில்லை.


01.03.2007 முதல் 15.03.2007 வரை திருச்சி தேவர் ஹாலில் நடைபெற்ற ”பாண்டுரங்க விட்டல்தாஸ் மஹராஜ் ஸ்ரீ ஜெயகிருஷ்ண தீக்ஷதர்” அவர்களின் சங்கீத உபன்யாசத்திற்கு நான் சென்று, அவர் கூறும் முக்கியக் கருத்துக்களை சுவாரஸ்யமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த போது,  என் அருகில் யாரோ வந்து என்னை லேஸாகத் தட்டி அழைப்பதை கவனிக்கலானேன். 



 


நீண்ட இடைவெளிக்குப்பின், இந்த ஜிமிக்கிப்பெண் சொக்கி தான், தன் கணவருடன் வந்து என்னை அழைத்தவள். அங்கிருந்த மிகப்பெரிய ஹாலில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நடுவில் இருக்கையில் அமர்ந்திருந்த என்னை, கும்பலின் மத்தியில் எப்படி இவள் அடையாளம் கண்டுபிடித்தாள் என நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். 


அவள் கணவரை எனக்கும், என்னை அவள் கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.   அன்று முதல் இன்று வரை என் வீட்டுக்கு அடிக்கடி அவள் வந்து போய்க்கொண்டு இருக்கிறாள். சமீபத்தில் கூட ஒரு நாள் இங்கு என் வீட்டுக்கு வந்திருந்தாள்.  


இவளைப்போலவே திருமதி. கமலம், திருமதி. ஜெயலக்ஷ்மி என்று இருவர் BHEL இல் வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்துக்கொண்டு என்னுடன் அதே 3 வருஷங்கள் B.Com., படிக்க CONTACT SEMINAR CLASS க்கு வந்திருந்தார்கள். 


அவர்கள் இருவரும் என்னைவிட 7 அல்லது 8 வயது மட்டுமே சிறியவர்கள். 


அவர்கள் இருவரும் கூட என்னிடம் அன்று முதல் மிகுந்த நட்புடன் பழக ஆரம்பித்து இன்று வரை குடும்ப நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள்.


நாங்கள் மூவரும் ஒரு சில ஞாயிற்றுக்கிழமைகளில் எங்களுக்குள் யாராவது ஒருவர் வீட்டில் கூடி GROUP STUDY செய்யும் வழக்கம் உண்டு. எனக்குத் தெரிந்த ராஜூ என்ற M.Com., படித்த நண்பர் ஒருவரை 2 or 3 ஞாயிற்றுக்கிழமைகளில் வரவழைத்து, B.Com., OPEN UNIVERSITY EXAM பழைய வினாத் தாள்களில் வந்திருந்த ACCOUNTANCY EXAM. QUESTIONS களை அவரிடம் கொடுத்து, ஒவ்வொரு PROBLEM ஆக SOLVE செய்யச் சொல்லி நாங்கள் மூவரும் அதை கவனித்து, குறிப்புகள் எடுத்து கற்றுக் கொண்டோம். 


அதன் பிறகு அந்த ஜிமிக்கி என்பவள் இவற்றையெல்லாம் தனியாகக் என்னிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்வாள்.


அதுபோலவே என்னுடன் பல்வேறு CORRESPONDENCE COURSE இல் படித்த ரெயில்வேயில் பணியாற்றிய ரெங்கராஜன் என்பவர் ஒருவர் [இவர் என்னை விட வயதில் சற்று பெரியவர்], வேறொருவர் மதுரை LIC யில் பணியாற்றியவர். இந்த இருவரும் கூட என்னுடன் நீண்ட நாட்கள், கடிதத்தொடர்புகள் + தொலைபேசித் தொடர்புகள் வைத்துக் கொண்டிருந்தார்கள்.        


நான் படித்த B.Com., + MA (Sociology) + PGD in PMIR ஆகிய மூன்று படிப்புகளிலுமே STATISTICS  என்ற ஒரு SUBJECT இருந்தது. எவ்வளவு தான் படித்தாலும் எனக்கு விளங்காமலும், புரியாமலும் என்னைப் பாடாய்ப்படுத்தி, மண்டைகாய வைத்தது அந்த STATISTICS என்ற பாடம் மட்டும். 


”நீலா” என்று ஒரு பெண். திருவானைக்கா ஐயன் தெருவில் வசித்து வந்தாள். கல்லூரிப்படிப்பு முடித்து விட்டு வேலைவாய்ப்புகளைத் தேடி நியூஸ் பேப்பரைப்பார்த்து பல இடங்களுக்கு அவள் மனுச் செய்து வந்து கொண்டிருந்த [1992] காலம் அது .


எனக்குப் புரியாத STATISTICS பாடங்களை அவளிடம் போய்க்கேட்டால் ஓரளவுக்குச் சொல்லித்தருவாள் என்று அவளுடைய பெரியப்பா பையன் ஒருவர் என்னிடம் கூறினார். நானும் ஒரு எட்டு ஞாயிற்றுக்கிழமைகள், அவர்கள் வீட்டுக்குப்போய் பாடம் கற்று வந்தேன்.          


மதியம் வீட்டில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, BHEL Township லிருந்து, வேகாத வெயிலில் மதியம் 11.45  க்குப் புறப்பட்டு, 2 பஸ்கள் மாறி, திருவானைக்கா பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ஐயன்தெரு கடைசியில் இருந்த அவர்கள் வீட்டை நான் நடந்து சென்று அடையும் போது மணி 1.45 ஆகிவிடும். வியர்த்துக் கொட்டும் எனக்கு. கையில் ஒரு புஸ்தகப்பை. அந்தப்பையில் புஸ்தகங்கள், நோட்டுகள், பேனாக்கள், சின்ன விசிறி, குடிநீர் பாட்டில், முகம் துடைக்க ஒரு துண்டு, கர்சிப் முதலிய எல்லாம் செட்டாக எடுத்துக்கொண்டுதான் போவேன். 


அவர்கள் வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும் என்னை வரவேற்று அவர்கள் வீட்டு மண் தரையில் அமரவைத்து, கையில் ஒரு பெரிய பனை ஓலை விசிறியைக் கொடுத்து, "முகத்தையெல்லாம் வியர்வை போகத்துடைத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் விசிறிக் கொண்டு ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு பாடம் ஆரம்பிக்கலாம்" என்று மிகுந்த அன்புடன் சொல்லுவாள், அந்த நீலா. 


மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மிகவும் பொறுமையாக எனக்குப் புரியும் படியாக பாடம் சொல்லித் தருவாள். பிறகு ஏதாவது டிபனும் காஃபியும் கொடுத்து சாப்பிடச்சொல்லி வற்புருத்தி அதன் பிறகே என்னை என் வீட்டுக்கு அனுப்பி வைப்பாள். 


எனக்கு அவளால் பாடம் நடத்தப்படும் போது, கூடவே ஒரு கட்டிலில் உடல்நிலை சரியில்லாத அவளின் தகப்பனாரும்,  மிகவும் சாதுவான அவளின் தாயாரும், ஒரு தம்பியும், தங்கையும் இருப்பார்கள். 


பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, அவர்கள் குறுக்கே ஏதாவது பேசினாலோ, சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ இவளுக்கு மிகவும் கோபம் வந்து விடும். 


எல்லோரும் பெட்டிப்பாம்பாக அடங்கியே இருப்பார்கள். இந்த வயதிலும் நான் படிப்பைத் தொடர்வதிலும், ஆர்வமாக பாடம் சொல்லிக்கொள்ள சின்னப் பெண்ணான தன்னை நாடி வருவதிலும் அவளுக்கு ஒரு சந்தோஷம் இருக்கவே செய்தது என்பதை நான் புரிந்து கொண்டேன். 


சற்று நடுத்தர வயதிலும், படிப்பில் மிகவும் ஆர்வத்துடன் இருந்த என்னை, அவள் பலமுறை பாராட்டியும் இருக்கிறாள்.


நான் அவர்கள் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ஏதாவது நிறைய தின்பண்டங்களும் பழங்களும் வாங்கிச்செல்வேன். அவள் தந்தையிடம் கொடுப்பேன். 


பிறகு 3 பல்கலைக் கழகத் தேர்வுகளிலும் வெற்றி பெற்ற நான் நிறைய மதிப்பெண்கள் [70% to 80%] வாங்கியது, அவள் எனக்குக் கற்றுக்கொடுத்த அந்த STATISTICS என்ற பாடத்தில் தான்.  


என் மனைவியுடன் அவர்கள் வீட்டுக்குச்சென்று குருதக்ஷணையாக ஒரு பெருந்தொகையைக் கொடுத்தபோது அதை வாங்க அந்தப்பெண் கெளரவமாக மறுத்து விட்டாள். ஏழ்மையிலும் நேர்மை + வைராக்யம் கொண்ட நல்ல பெண். மிகவும் ரோஷக்காரி அவள். மிகவும் பெருந்தன்மையானவளும் கூட.


பிறகு அவர்கள் வீட்டுக்கு அத்யாவஸ்யமாகத் தேவைப்பட்ட குக்கர் முதலிய ஒருசில எவர்சில்வர் பாத்திரங்களாக வாங்கித் தந்து விட்டு வந்தோம். அவள் சார்பில் அவளின் தாயார் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக்கொண்டார்கள்.  பிறகு தான் எனக்கு மனம் சமாதானம் அடைந்தது. 


எனக்கு குருவாக இருந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளில் 8*3=24 மணிநேரங்கள் எனக்குப் பாடம் நடத்திய அந்த நீலாவை என்னால் என்றும் மறக்கவே முடியாது. பிறகு அவளுக்குத் திருமணம் ஆகி ஏதோவொரு வெளிநாட்டில் தற்போது இருப்பதாக, சமீபத்தில் அவளின் பெரியப்பா பையன் மூலம், கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். 

இன்றும் கூட எனக்கு I C W A I என்ற COSTING படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் உள்ளது. இந்த என் ஆர்வத்திற்கு என் தற்போதைய உடல்நிலையும், வீட்டில் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இல்லாமையும் மிகவும் முட்டுக் கட்டைகளாக உள்ளன. அதனால் என் ஆசையை தற்போதைக்கு ஒத்திப்போட்டு வைத்துள்ளேன்.

எப்போதும் எந்த வயதிலும் ஏதாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும், மன நிம்மதியையும் தரும்.  அப்போது தான் நம் வாரிசுகளே நம்மை மதிப்பார்கள். நாமே நம் வாரிசுகளுக்கு ஓர் முன்னுதாரணமாகவும் திகழலாம்.


நாம் கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். படிப்பறிவு + அனுபவப்பட்டறிவு இரண்டுமே வாழ்க்கைக்கு மிகவும் தேவை தான்.   


மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் உடனடியாக ஏதாவது படிக்க ஆரம்பித்து விடுங்கள். முயன்றால் முடியாதது ஏதும் இல்லை. 




 

அதிர்ஷ்டமும், வசதி வாய்ப்புக்களும் இருப்பவர்கள் சிறு வயதிலேயே நிரந்தர கல்வியில் சேர்ந்து [REGULAR COLLEGE STUDIES] தொடர்ந்து, எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவையும் படித்து விடுவதே நல்லது. அதில் அதிகமாக தொல்லை ஏதும் கிடையாது.


ஆனால் இந்த அஞ்சல்வழிக் கல்வி கற்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அதற்கு மிக மிகப் பொறுமை வேண்டும். படிக்கணும், பாஸ் செய்யணும் என்ற வெறி வேண்டும். படிக்க வேண்டும் என்ற ஆசையும் சிரத்தையும் வேண்டும். உண்மையாக நாம் அதற்காக உழைத்தே ஆக வேண்டும்.


பல்கலைக்கழகங்களுக்கு பணம் கட்டிவிட்டால் மட்டும் போதாது. மனுக்களை பூர்த்தி செய்யும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். அதில் கேட்கப்படும் தகவல்களை தெளிவாக அழகாக எழுதப் பொறுமை வேண்டும்.  படிக்கச் சேருபவர்கள் அடிக்கடி விலாசம் மாறுபவர்களாக இருக்கக்கூடாது. 


பல்கலைக்கழகங்களுடனான நம் தொடர்புக் கடிதங்கள் அத்தனைக்கு XEROX எடுத்து ஒரு FILE இல் சோம்பல் படாமல் போட்டு வைக்க வேண்டும். 


பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படும், நம் போட்டோ ஒட்டிய அடையாள அட்டைகள் [IDENTITY CARD], தேர்வு மனுக்கள் [APPLICATION FOR APPEARING FOR EXAMINATIONS],    தேர்வுக்கான நுழைவு அனுமதிச்சீட்டு [HALL TICKETS], தேர்வு அட்டவணைகள் [EXAMINATION TIME TABLE], அவ்வப்போது வரும் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் [EXAM MARK SHEETS] அவ்வப்போது நாம் அனுப்பும் பணத்திற்கான அத்தாட்சி ரசீதுகள் [XEROX COPY OF THE DEMAND DRAFTS],  அஞ்சல் வழிக்கல்விக்கான தொடர்பு வகுப்புகள் நடக்கும் இடங்கள், நாட்கள் மற்றும் நேரங்கள் சம்பந்தமாக வரும் அட்டவணைகள்   [CONTACT SEMINAR CLASS DATE + TIME + VENUE DETAILS], இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்துப் பாடங்களிலும் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் [MODEL QUESTION PAPERS OF THE PAST 5 YEARS IN ALL SUBJECTS], நம்முடைய தற்போதைய படிப்புக்கான அனைத்து புத்தகங்கள், நோட்டுக்கள் [ALL STUDY MATERIALS ...... BOOKS + NOTES] இவற்றையெல்லாம் தேடாமல் அழகாக ஒரே இடத்தில், ஒரு தனி பெட்டியில் எப்போது தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.


’அனைத்துப் பொருட்களுக்கு ஓர் இடம்; அந்தந்த இடத்தில் அந்தந்தப்பொருட்கள்’   [A PLACE FOR EVERYTHING AND EVERYTHING IN ITS PLACE] என்ற HOUSE KEEPING CONCEPT மிக முக்கியமாக இருக்க வேண்டும்.   


இது போல ஒரு ஒழுங்கு இல்லாவிட்டால் அவசரமாக ஏதாவது தேடும் போது அது கிடைக்காமல் எரிச்சல் தான் ஏற்படும். நமது பொன்னான நேரமும் நமது அருமையான ஆற்றலும் அனாவஸ்யமாக வீணாகும். இவையெல்லாம் நாம் தொடர நினைக்கும் நம் படிப்புக்கு முட்டுக்கட்டை போட்டு விடக்கூடும்.


அதுபோல நாம் வங்கிக்குச் சென்று கேட்பு காசோலை எனப்படும் DEMAND DRAFT வாங்கும் போது கீழ்க்கண்ட ஒரு சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 


வங்கியில் வேலை பார்ப்போர் அவருடைய வேலை பளுவினாலும் கவனக்குறைவாலும் ஒரு சில தவறுகள் செய்ய நேரிடலாம். 


நாம் தான் அவற்றைக் கையோடு கண்டுபிடித்து சரி செய்து வாங்கி வரவேண்டும். அவ்வாறு செய்யாது போனால் பிறகு நஷ்டப்படப்போவது நாம் மட்டுமே தான்.


1) DD யில் தேதி, மாதம், வருடம் சரியாகப்போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


2) ON DEMAND PAY TO _________________________________


என்ற இடத்தில், பல்கலைக்கழகத்தின் தேவைக்குத் தகுந்தபடி சரியாக எழுதப்பட்டுள்ளதா? எழுத்துப்பிழை ஏதும் உள்ளதா? என உறுதி செய்து கொள்ள வேண்டும்.


இதில் நாம் படிப்புக்காக பணம் கட்ட ஒரு மாதிரியும், தேர்வுக்காக பணம் கட்ட ஒரு மாதிரியும், இதர அபராத தொகைகள் செலுத்த வேறு ஒரு மாதிரியும் இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக விதி முறைகள் கையேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். 


For Example: 


DD is to be drawn in favour of The Vice Chancellor, .......................... University 
[for Term Fees /  Penalty for Late Payment / Issue of Duplicate Identity Card etc.,] 


DD is to be drawn in favour of The Controller of Examinations,  ............................. University
[ for Exam Fees / Mark sheets / Result etc.,]


அது போல மிகச்சரியாக DD யார் பெயரில் எடுக்கணுமோ அவர் பெயரில் தான் எடுக்கப்பட வேண்டும்.  மாற்றி தவறாக எடுத்து அனுப்பினால் நமக்குத்தான் தொல்லை. நாம் தேர்வு எழுத முடியாமல் போகும். ஹால் டிக்கெட் நமக்கு கிடைக்காமல் போகும்.


3) நாம் கட்ட வேண்டிய தொகை சரிதானா? அதற்குத்தான் DD வாங்கியுள்ளோமா? அந்தத் தொகை DD யில் சரியாக எண்ணாலும், எழுத்தாலும் தவறு ஏதும் இல்லாமல் எழுதப்பட்டுள்ளதா? என்பதையும் உற்றுப்பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.


4) நாம் வாங்கிய DD க்கு பணம் பெற்றுக் கொள்ளக்கூடிய ஊர் இடம் வங்கியின் கிளை முதலியன பல்கலைக்கழகத்தாரால் சொல்லியபடி DD யில், வங்கியினர் எழுதியுள்ளார்களா என்பதையும் நாமே ஒருமுறை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். [Name of Payable Branch]


5) DD யின் அடிபாகத்தில் வங்கி அதிகாரி கையொப்பம் இட்டுள்ளாரா, ரப்பர் ஸ்டாம்ப் வைத்துள்ளாரா என்பதையும் கட்டாயம் நாம் கவனிக்க வேண்டும். அப்போது தான் நாம் வாங்கிய அந்த DD செல்லுபடியாகும். சில சமயங்களில் வங்கியினர், அவசரத்தில் அதிகாரியின் கையெழுத்து ஏதும் இல்லாமலேயே DD ஐ நம்மிடம் கொடுத்து விடுவார்கள். அது பல்கலைக் கழகத்தினரால் REJECT செய்யப்பட்டு, DUE DATE எல்லாம் முடிந்த பிறகு நமக்கே திரும்ப வரக்கூடும். நாம் தான் DD வாங்கி அனுப்பும் போதே இவற்றையெல்லாம் கவனித்து சரி பார்க்க வேண்டும். 


6) நாம் பணம் கட்டி வங்கியில் DD வாங்கும் போது, DD கொடுக்கும் கிளையின் விபரங்களும் தலைப்பகுதியில் எங்காவது அச்சிட்டோ அல்லது ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இட்டோ இருக்க வேண்டும். [Details of DD Issuing Branch] 


7) மேற்படி ஆறு விஷயங்களையும் சரி பார்த்து திருப்தியான பிறகே வங்கியை விட்டு நாம் வெளியேறி, நேராக அதை XEROX செய்யப்போக வேண்டும். DD யின் பின்புறம் மறக்காமல் நம் ‘பல்கலைக்கழக சேர்க்கை எண்ணை’  [ENROLLMENT NUMBER] நாம் எழுத வேண்டும்  


மீண்டும் தொடர்ந்து கல்வி கற்க விரும்புவோர், அந்தப்பாடங்கள் சம்பந்தமான சந்தேகங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வெட்கமோ கூச்சமோ படவே கூடாது. 


வயதில் மிகச்சிறியவரோ, பெரிய்வரோ, ஆணோ பெண்ணோ யாரிடம் போனால் அதற்கான தகுந்த விளக்கங்கள் கிடைக்குமோ அவரிடம் செல்லத் தயங்கவே கூடாது/ 


நான் இதை இப்போது சொல்வதற்கான காரணம் நான் இதுபோல வெட்கப்பட்டு, கூச்சப்பட்டு வாழ்க்கையில் இழந்தவைகள் ஏராளம். 


என்னைவிட மிகச்சிறிய பையனான M.Com., பட்டதாரியான ராஜூ என்பவரிடம் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் ACCOUNTANCY கற்றுக்கொண்ட போதும், என்னைவிட மிகச்சிறிய பெண்ணான நீலா என்பவரிடம் எட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் [அதுவும் அவர்கள் வீட்டுக்கே நான் போய் அமர்ந்து கொண்டு ] 8*3=24 மணி நேரங்கள் STATISTICS கற்ற போதும், எனக்கு மிகவும் கூச்சமாகவும், வெட்கமாகவும் தான் உணர முடிந்தது. 


நான் யாரிடமும் எந்த உதவிகளையும் கேட்டுப்பெற என்றும் விரும்பாதவனாகவே வளர்க்கப் பட்டிருந்தேன். 


பிறருடன், அதுவும் பெண்களுடன் நேருக்கு நேர் பேசவே மிகவும் கூச்சப்படுவேன். அது போல ஒரு சுபாவம் எனக்கு. அவர்களாகவே என்னை நன்கு புரிந்து கொண்டு என்னுடன் பழக ஆரம்பித்தால் நானும் அவர்களுடன் மட்டும் நன்கு பழகுவதுண்டு. 


இருப்பினும் பாடம் புரிந்து கொள்ளப்பட வேண்டும், படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்ன்னேற வேண்டும் என்று நாம் இறங்கும் போது, இதிலெல்லாம் நாம் பிடிவாதமாக இல்லாமல்,   நம்மை நாமே கொஞ்சம் மாற்றிக்கொண்டே ஆக வேண்டியதாக உள்ளது என்பதை அனைவரும் உணரத்தான் வேண்டும்.


ராஜூ என்பவரையாவது நாங்கள் மூவரும் எங்கள் வீட்டுக்கே மூன்று நாட்கள் அழைத்து, அவருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து, மூன்றே மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில், ஓரளவு பாடங்கள் நடத்தச்சொல்லி, ACCOUNTANCY பாடத்தின் அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். 


நீலா என்ற பெண்ணின் வீட்டுக்கு நானே அல்லவா செல்ல நேர்ந்தது! 


அதுவும் நான் மட்டுமே தனியாக அல்லவா செல்ல நேர்ந்தது!! 


அவர்கள் அறிவுடன் அளித்த பாடவிளக்கங்கள் மட்டுமின்றி, அன்புடன் அளித்த டிபன்+காஃபி யையும் எட்டு ஞாயிற்றுக்கிழமைகளின் நான் சாப்பிட அல்லவா நேர்ந்தது!!! 


நான் சாப்பிட மறுத்தால் அவளுக்கு மஹா கோபம் அல்லவா வந்தது !!!! 


முதல் நாள், நான் தவிர்க்க நினைத்து முயற்சித்தபோதே அவளுக்கு மிகவும் கோபம் வந்து விட்டதே!. 


என் வீட்டில் என் கையால் செய்து தரும் டிபன் + காஃபி யை ஏற்க நீங்கள் மறுத்தீர்களானால், பாடம் படிக்க என் வீட்டுக்கு நீங்கள் இனி வர வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாளே!! 


மிகவும் கூச்ச சுபாவம் உள்ள, அதுவும் பிறர் வீடுகளில் சாப்பிட்டே பழக்கமில்லாத என் நிலைமையைச் சற்றே சிந்தித்துப்பாருங்கள். 


நான் 40 வயதுக்கு மேல் 46 வயதுக்குள் 3 பல்கலைக்கழகத்தில் படித்து 3 வெவ்வேறு பட்டம் பெற்றது போல நீங்களும் சற்றே முயற்சித்து, அதற்காக கடுமையாக உழைத்தால், மிகச்சுலபமாக வெற்றி பெறலாம். காலம் கடத்தாமல் சிறு வயதிலேயே நிறைய படித்து வைத்துக்கொண்டால் அது நமக்கு உரிய பலனை, உரிய நேரத்தில் நிச்சயமாகத் தரும். 




அதுபோலெல்லாம் எதுவும் படித்து தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள், இந்தப் பதிவையாவது படித்து விட்டு ஏதாவது பின்னூட்டமாவது இடுங்களேன்.  அதுவே ஒரு மிகச்சிறந்த சாதனையாகத் தான் இருக்கும்.

-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-o-o-o-


 







[ "மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற இந்தத் தொடர் பதிவினை தொடர விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அவர்களின் அனுபவத்தினை எழுதித் தொடரலாம். 


நான் யாருக்கும் குறிப்பாக இந்தத் தொடர்பதிவினைத் தொடருமாறு அழைப்பிதழ் கொடுத்து தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. 


என்னை இந்தத் தொடர்பதிவிட அழைப்பு விடுத்த “அவர்கள் உண்மைகள்” மற்றும் ”திருமதி ஷக்திப்ரபா” இருவருக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். வணக்கம்.]



பிறகு வேறொரு பதிவில் மீண்டும் சந்திப்போம்


இந்த என் ஏழு தொடர்பதிவுகளையும் படித்து 
அவ்வப்போது கருத்துக்கள் கூறியுள்ள ஒவ்வொருவருக்கும், 
என் அடுத்த பதிவினில் நன்றி கூறுவேன்.


என்றும் தங்கள் அன்புள்ள
வை. கோபாலகிருஷ்ணன்

65 கருத்துகள்:

  1. படித்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் படிக்கப் ப‌டிக்க மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது. நிச்சயம் அந்த சமயங்களில் நமக்கு நிறைய‍ கடைசி வரைத் தொடர்ந்து வரக்கூடிய நட்புகள் கிடைப்பது இயற்கை!! ஆனால் பெறாத மகள் கிடைத்தது பெரிய வரம்.

    அனுபவங்கள் மட்டுமல்ல, உங்களின் ஆலோசனைகள் அனைத்துமே முத்தானவை!!

    பதிலளிநீக்கு
  2. மனதிலிருந்து வந்த கருத்துக்கள் என்பது படிக்கும் பொழுது நன்றாகவே புரிந்தது வை.கோ சார். உங்கள் உழைப்பைப் பாராட்டுகிறேன். ஏறி வந்த ஏணியின் படிகளை அங்கீகரித்து நன்றி சொன்னதற்கும் பாராட்டுக்கள். ஒரு முன்னுதாரணம் நீங்கள். தேர்ந்த போல் ஆலோசனைகள் கொடுத்திருப்பதும் உபயோகமானது.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் அனுபவங்களை நினைவில் நிறுத்தி, எங்களுடன் 7 பதிவுகளாய் பகிர்ந்து கொண்டு படிக்க உற்சாகமூட்டிய உங்களுக்கு நன்றி.

    ஒவ்வொரு பகுதியிலும் நல்ல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இந்தப் பதிவு பலருக்கு வாழ்க்கைப்பாடமாக அமையும்.சொக்கி நீலா முதலியவர்கள் உங்கள் மனதில் மட்டுமல்ல எங்கள் மனதிலும் பதிந்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  5. அனுபவங்களுடன் ஆலோசனைகளையும் அள்ளித்தந்தி இருகின்றீர்கள்.கவனத்தில் கொள்ள வேண்டியது.

    இந்த தொடர் நிறைவுற்றதும் த்சோ..முடிந்து விட்டதே என்று மனதில் நினைத்தேன்.அத்தனை சுவாரஸ்யங்களுடன்,வீட்டிலுள்ள அப்பா,மாமா அட்வைஸ் பண்ணுவதுபோல் அருமையான ஆலோசனைகள் தந்து இருக்கின்றீர்கள்.

    இது போன்ற அனுபவங்களை அவ்வப்பொழுது வெளியிடுங்கள்.மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. எனது மற்றும் ஷக்திபிரபா அழைப்பை ஏற்று இந்த தொடர்பதிவை எழுதிய உங்கள் முயற்சிக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த தொடரின் ஆரம்ப பகுதிகளின் மூலம் பல மலரும் நினைவுகளை எங்களுக்கு தூண்டிவிட்ட நீங்கள் இறுதி 2 பதிவுகள் மூலம் பல அனுபவபாடங்களை உங்கள் மூலம் கற்று கொண்டேன். இந்த கடைசி இரண்டு பகுதிகளின் மூலம் நாம் அடுத்தவர்களுக்கு எப்படி உதவவேண்டும் அதே நேரத்தில் வெட்கப்படாமல் நமக்கு வேண்டிய உதவிகளை வயது வித்தியாசம் பாராமல் கேட்டு வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன் Old wood best to burn, old wine to drink, old friends to trust, and old authors to read என்று சொல்வது உங்கள் எழுத்தின் முலம் உண்மையாக இருக்கிறது.

    A man is not old as long as he is seeking something என்று சொல்வதற்கேற்ப உங்களிடம் ஒரு தேடுதல் இருக்கிறது.அதனால்தான் வயது ஆனாலும் இன்றும் இளைஞராக ( குறும்புகார இளைஞன்) இருக்கிறிர்கள்.உங்கள் இறுதி பதிவுகளை படித்த போது உங்களை ஒரு வயதான மனிதராக (Everyone is the age of their heart) என்னால் நினைக்க முடியவில்லை. ஒரு பக்குவப்பட்ட நல்ல மனதுள்ள இளைஞருக்கு இளைஞராக தெரிகிறிர்கள். Age is Just Number என்று சொல்லவது உங்கள் விசயத்தில் உண்மையாகவே இருக்கிறது


    உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன் உங்கள் பதிவுகளை நான் நிழல் போல தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன் என்று நான் சொன்னது அது போல நான் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் நான் வேலைக்கு செல்லும்போது உங்கள் பதிவுகளை படித்துவிட்டு அவசர அவசரமாக போவதால் அந்த நேரத்தில் பதில் கருத்துக்களை சொல்லமுடியாமல் போகிறது. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்,


    A man is not old until regrets take the place of dreams


    பலருக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு மீண்டும் எனது நன்றிகள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. Sort of an autobiography, tracing your education from elementary to college level, with wonderful tips along the way. Some of the events that you described happened in my life too. Looking back, it's a mystery how we crossed over several hurdles (challenges) along the way. Yes, ultimately, the journey itself is the destination! What is even more surprising is that how so many decades have passed by in between!

    பதிலளிநீக்கு
  8. நல்ல அனுபவங்களை எல்லோரோடும் பகிர்ந்து கொண்டீர்கள்.

    எல்லோருக்கும், படிக்கும் ஆவலை தூண்டி, அதற்கு தேவையான ஆலோசனைகளையும் கூறி நல்ல ஒரு சேவை செய்து இருக்கிறீர்கள்.

    உங்கள் அனுபவங்களை வழிகாட்டியாக கொண்டு வாழ நினைத்தால் இன்றைய தலைமுறை உயர்வடைவார்கள்.

    உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சார் உங்கள் அனுபவங்களை சுவாரசியமாக பகிர்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.இன்னமும் படிப்பின் மேல் உள்ள உங்கள் ஆர்வத்திற்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
    மிகப் பெரிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. எப்போதும் எந்த வயதிலும் ஏதாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும், மன நிம்மதியையும் தரும். அப்போது தான் நம் வாரிசுகளே நம்மை மதிப்பார்கள். நாமே நம் வாரிசுகளுக்கு ஓர் முன்னுதாரணமாகவும் திகழலாம்.

    நிதர்சனமான வாழ்வியல் தத்துவம்...

    சொன்னால் கேட்காத பிள்ளைகள் நம்மைப் பார்த்துத்தானே கற்கிறார்கள் !

    பதிலளிநீக்கு
  11. அதுபோலெல்லாம் எதுவும் படித்து தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள், இந்தப் பதிவையாவது படித்து விட்டு ஏதாவது பின்னூட்டமாவது இடுங்களேன். அதுவே ஒரு மிகச்சிறந்த சாதனையாகத் தான் இருக்கும்.

    இப்போதைக்கு இந்த சாதனைகள் நிறைவான சாதனைகள்..

    பதிலளிநீக்கு
  12. இவ்வாறு படிக்கப்போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அழகிய பெண் குழந்தை என்னுடன் ஒட்டிக்கொண்டதில், பெண் குழந்தையே பிறக்காத எனக்கும் மனதுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.

    அழகான நட்பு !

    பதிலளிநீக்கு
  13. ஏழ்மையிலும் நேர்மை + வைராக்யம் கொண்ட நல்ல பெண். மிகவும் ரோஷக்காரி அவள். மிகவும் பெருந்தன்மையானவளும் கூட.

    விலைமதிக்கமுடியாத அருமையான பெண்...மீண்டும் அவரைச் சந்தித்தது நிறைவு..

    பதிலளிநீக்கு
  14. ஆனால் இந்த அஞ்சல்வழிக் கல்வி கற்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.

    உண்மை நிலையை சிறப்பாக உணர்த்திய அருமையான பகிர்வுகளுக்கு மனம் நிறைந்த இனிய் பாராட்டுக்கள்.வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  15. அன்பின் வை.கோ - பெண் குழந்தை இல்லாத சிந்தனையினை ஜிமிக்கி மாற்றினாளோ ! வங்கியில் ட்ராஃப்டிற்கு வரைவோலை எனச் சொல்வார்கள் - அதில் கையெழுத்திடும் அலுவலர் ரப்பர் ஸ்டாம்ப் வைக்க மறந்து விட்டாலும் அவ்வரைவோலை வங்கியினால் ஏற்றுக் கொள்லப்படும். இருப்பினும் அதனைச் சரி பார்த்துக்கொள்வது நல்ல செயல்.

    பதிலளிநீக்கு
  16. //எப்போதும் எந்த வயதிலும் ஏதாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும், மன நிம்மதியையும் தரும். அப்போது தான் நம் வாரிசுகளே நம்மை மதிப்பார்கள். நாமே நம் வாரிசுகளுக்கு ஓர் முன்னுதாரணமாகவும் திகழலாம்.

    நாம் கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். படிப்பறிவு + அனுபவப்பட்டறிவு இரண்டுமே வாழ்க்கைக்கு மிகவும் தேவை தான். //

    நல்ல செய்தியைக் கொடுத்திருக்கிறீர்கள். 'அனுபவப்பட்ட ஒரு மனிதனின் வார்த்தைகள்; கேளுங்கள்' என்பதற்காகத் தான் இதற்கு முன் எழுதிய ஆறு பகுதிகளும் போலிருக்கு.

    மனத்தில் பட்டதை மற்றவர்களும் தெரியப்படுத்த வேண்டும் என்கிற ஆர்வத்தில் பொறுமையாக ஏழு அத்தியாங்கள் எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான அனுபவங்கள். மனதைத்தொடும் வரிகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  18. "இவ்வாறு படிக்கப்போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அழகிய பெண் குழந்தை என்னுடன் ஒட்டிக்கொண்டதில், பெண் குழந்தையே பிறக்காத எனக்கும் மனதுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது."
    இம்மாதிரி நல்ல எண்ணம் நிறைய பேருக்கு வராது.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்! நானும் நீங்கள் படித்த அதே தேசிய உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி முடிய படித்தவன்தான். தலைமை ஆசிரியர் பூவராக அய்யங்கார், மற்றும் ஆசிரியர்கள் என்.வி.என்., ஜி.ஜி., கே.எஸ்.கணபதி. ( எம்.எல்.சி யாக இருந்தவர்), மாலி என்ற மகாலிங்கம்., கடம் சுந்தரராஜன்., ஹிந்தி பண்டிட் ( அரவிந்தர் ஸ்டைல்)., ராஜகோபால் பிள்ளை ( உடற் பயிற்சி).- எல்லோரும் நினைவில் வருகிறார்கள். எனக்கும் பள்ளி இறுதி வகுப்பிற்கு ( 1971 – 72 ) வகுப்பு ஆசிரியர் ஆர்.ஸ்ரீ தான். மற்றும் சரஸ்வதி ஹால்., பிள்ளையார் கோயில் மரம் ( காந்தி வைத்தது ) என்று மறக்க முடியாத பள்ளி நினைவுகள். நீங்கள் என்னை விட ரொம்ப, ரொம்ப சீனியர் என்று நினைக்கிறேன். அந்த நாளைய தேசிய உயர்நிலைப் பள்ளி நாட்களின் நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள். நன்றி! ( மின் வெட்டு மற்றும் இண்டர்நெட் பிரச்சினையால் தொடர்ந்து படிகக முடியாத தங்கள் பள்ளி அனுபவங்களை இப்போது ஒரே தடவையாக படித்து முடித்தேன்)

    பதிலளிநீக்கு
  20. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்திலும் அறிமுகப்படுத்த வாய்ப்பமைந்தமைக்காக மிகவும் மகிழ்கிறேன் வை.கோ.சார்.நேரமிருக்கும்போது வந்து பாருங்கள். நன்றி.

    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  21. வயதில் மிகச்சிறியவரோ, பெரிய்வரோ, ஆணோ பெண்ணோ யாரிடம் போனால் அதற்கான தகுந்த விளக்கங்கள் கிடைக்குமோ அவரிடம் செல்லத் தயங்கவே கூடாது/

    அனுபவங்கள் மட்டுமல்ல, உங்களின் ஆலோசனைகள் அனைத்துமே முத்தானவை

    பதிலளிநீக்கு
  22. சாதாரணமாக நினைத்துத்தான் தங்களது “மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொடர்பதிவு)” படிக்க ஆரம்பித்தேன். தங்கள் மனதிலிருந்து எந்த ஒழிவு, மறைவும் இல்லாமல் எழுதியிருப்பதாலோ என்னவோ, கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது.

    உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை சார். உலகில் நல்லவர்கள் குறைந்து வரும் இன்றைய சூழலில் உங்களைப்போன்றவர்கள் இருப்பது மிகவும் ஆறுதலாக இருக்கின்றது.

    உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் மிகவும் உயர்ந்தவை.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் ஒவ்வொரு அனுபவமுமே எங்களுக்கு பாடம் தான்.நிறிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

    என் கணவர் தன்னுடைய பள்ளி நினைவுகளை எழுதும் போதே எனக்கும் ஆசையாக இருந்ததால் நானும் என் பள்ளி நினைவுகளை எழுதி வைத்துள்ளேன்.
    நீங்களும் யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று சொல்லியுள்ளதால் நான் இந்த தொடர்பதிவை தொடரலாம் என்று நினைக்கிறேன் சார்.

    விரைவில் பதிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் வலைப் பதிவில் என்னைப் பற்றி நான் குறிப்பிடும்போது , பள்ளி இறுதி வகுப்பில் நான் படித்த வருடத்தை மாற்றி சொல்லி விட்டேன். நான் S.S.L.C படித்த சரியான வருடம் 1970 – 71 என்பதே சரி. தவறுக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  25. ஆஹா! icwai படிக்க ஆசையா!
    நான் Inter வரை படித்து பின், என் துறையையே வேறு படிப்புக்கு ஆர்வத்தின் பெயரில் மாற்றிக்கொண்டுவிட்டேன்.

    உண்மை தான் படிப்புக்கு வயதேது!

    ஆனாலும் ஒரு ஆண்மகன் படிப்பதற்கும் பெண் படிப்பதற்கும் நிறைய வித்தியாச்ம உண்டு. நாங்கள் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து எச்ச சொச்ச நேரத்தில் படித்து...அப்பப்ப்பா!

    ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம் உங்கள் பதிவுகள்....

    தொடர்ந்து 7 பகுதிகளாக பிரித்து வெளுத்து வாங்கிவிட்டீர்கள். மிக மிக மிக நன்றி...உங்களையும் அறிந்து கொள்ள உதவிய பதிவுகள்...

    பதிலளிநீக்கு
  26. கிடைத்த ஒரு சிறு விடுப்பில் தங்களின் தொடர் பதிவினை ஒரே மூச்சில் படித்துவிட்டேன். படிக்க வேண்டிய அனுபவங்கள். தொடர் பதிவிற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  27. I just opened the post. But read it without stopping at a stretch.
    Really very interesting. The advises given by are very practical.
    Very nice sir.
    Happy reading your post.
    viji

    பதிலளிநீக்கு
  28. ஐயா வை கோ அவர்களே!
    உம்மை வாழ்த்த வயதிருக்கிறது
    வார்தைகள்தான் நான் கற்ற தமிழிலும்
    இல்லை!
    வாழ்க்கைப் பாதையில் நீங்கள் ஒரு
    நல் வழிகாட்டி
    வாழ்க வளமுடன்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  29. ஜிமிக்கி suspense நெஞ்சைத்தொட்டு விட்டது...
    distance education இல் படிக்க விரும்புவோருக்கு இந்தப்பதிவு ஒரு சிறந்த வழிகாட்டி .
    நல்ல ஒரு தொடர் !!!
    மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  30. நானும் நீங்கள் படித்த அதே தேசிய உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி முடிய படித்தவன்தான். தலைமை ஆசிரியர் முதலில் கே. குருசாமி அடுத்து பூவராக அய்யங்கார், மற்றும் ஆசிரியர்கள் பீவீ ஸ்ரீனிவாசன், டீ.எஸ். ரங்காச்சாரி, ராஜமய்யங்கார், கே.எஸ்.கணபதி. ( எம்.எல்.சி யாக இருந்தவர்), கடம் சுந்தரராஜன்., ஹிந்தி பண்டிட் ரத்ன சர்மா, பி.கே.NAகரத்ன சர்மா, கணீத ஆசிரியர் என். ஸ்ரீனிவாசய்யர், ராஜகோபால் பிள்ளை ( உடற் பயிற்சி).- எல்லோரும் நினைவில் வருகிறார்கள். மற்றும் சரஸ்வதி ஹால்., பிள்ளையார் கோயில் மரம் என்று மறக்க முடியாத பள்ளி நினைவுகள். அந்த நாளைய தேசிய உயர்நிலைப் பள்ளி நாட்களின் நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள். நன்றி!

    மறக்க முடியாத ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிரது.அந்த பள்ளீயில் நான் SSLC (1961) யில் 480/600 வாங்கி ஜில்லாவில் முதல் rank வாங்கினேன்.எனக்கு தங்கபதக்கம் தேவர் ஹாலில் தரும்போது, பெண்களீல் முதலாக வந்த கல்யாணீக்கும் 438/600 தங்கபதக்கம் தந்தார்கள். தினத்த்ந்தியில் “சபாஷ் கல்யாணீ அதிக மார்க்குகள் வாங்கினாள்; கல்வி அதிகாரி பாராட்டு” என பெரிய தலைப்பிட்டும், என்னுடைய செய்தியை “ராமனுக்கு பரிசு” என பொடி எழுத்தில் மிக மிக கீழாக போட்டிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  31. இந்த பதிவை தொடர்ந்து மிக நுணுக்கமாக படித்தவர்களுக்கு இறுதியில் கண் கலங்காமல் இருந்தால் அது ஆச்சர்யமே .
    இப்பொழுது நிறைய பேர் வெவ்வேறு காரணங்களால் கல்லூரி படிப்பு தொடர முடியாதவர்கள் அஞ்சல் வழியில் சேர்ந்து விட்டு பாதியில் விட்டு விடுகின்றனர். அவர்களுக்கு இந்த பதிவே ஒரு வழிகாட்டி.

    மொத்தத்தில் இந்த வலைப்பூவே ஒரு பல்கலை கழகம்.

    பதிலளிநீக்கு
  32. நிறைவுப்பகுதியை உடனடியாக என்னால் படித்து கருத்தினைப் பதிய முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

    மிகநல்ல பதிவு ஐயா! அனுபவப் பாடம்! பகிர்ந்த ஆசிரியருக்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  33. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ள எல்லோருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து ஓர் தனிப்பதிவே தந்துள்ளேன்.

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    தலைப்பு:

    இயற்கை அழகில் ’இடுக்கி’
    இன்பச் சுற்றுலா

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  34. ரிஷபன் said...
    *****வயதில் மிகச்சிறியவரோ, பெரிய்வரோ, ஆணோ பெண்ணோ யாரிடம் போனால் அதற்கான தகுந்த விளக்கங்கள் கிடைக்குமோ அவரிடம் செல்லத் தயங்கவே கூடாது*****

    //அனுபவங்கள் மட்டுமல்ல, உங்களின் ஆலோசனைகள் அனைத்துமே முத்தானவை//

    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  35. எப்போதும் எந்த வயதிலும் ஏதாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும், மன நிம்மதியையும் தரும். அப்போது தான் நம் வாரிசுகளே நம்மை மதிப்பார்கள். நாமே நம் வாரிசுகளுக்கு ஓர் முன்னுதாரணமாகவும் திகழலாம்.

    அருமையான கருத்துகள். அருமையான பதிவு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  36. 7 நாட்களில் 7 பதிவுகளில் உங்கள் வாழ்கை அனுபவங்களிலிருத்து நாங்கள் நிறைய தெரிந்து கொண்டோம் சார்.

    இந்த பதிவில் தபால் வழி கல்வி கற்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை மிகத்தெளிவாக நீங்க கொடுத்துள்ளது அனைவருக்கும் பேருதவியாக இருக்கும். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  37. RAMVI said...
    7 நாட்களில் 7 பதிவுகளில் உங்கள் வாழ்கை அனுபவங்களிலிருத்து நாங்கள் நிறைய தெரிந்து கொண்டோம் சார்.

    இந்த பதிவில் தபால் வழி கல்வி கற்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை மிகத்தெளிவாக நீங்க கொடுத்துள்ளது அனைவருக்கும் பேருதவியாக இருக்கும். மிக்க நன்றி.//

    தங்களின் அன்பான வருகைக்கும், ஆர்வமாக அனைத்துப்பகுதிகளையும் ஒரே மூச்சில், ஒரே நாளில் படித்து முடித்து விட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் பின்னூட்டம் கொடுத்து உற்சாகப் படுத்தியுள்ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.

    நன்றி நன்றி நன்றி.
    ரொம்ப சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  38. உங்களின் இந்த பதிவு நிறைய பேருக்கு ஒரு வழிகாட்டியாகும் .
    எல்லா விஷயங்களிலும் ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றீர்கள் சார்
    உங்கள் அனுபவத்தின் பகிர்வுகள் எங்களுக்கு கிடைத்த வரப்ரசாதம் .

    பதிலளிநீக்கு
  39. angelin said...
    //உங்களின் இந்த பதிவு நிறைய பேருக்கு ஒரு வழிகாட்டியாகும் .
    எல்லா விஷயங்களிலும் ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றீர்கள் சார்
    உங்கள் அனுபவத்தின் பகிர்வுகள் எங்களுக்கு கிடைத்த வரப்ரசாதம்.//

    அன்புள்ள நிர்மலா,

    ஒரே மூச்சில் ஒரே நாளில் இந்தத்தொடரின் அனைத்து ஏழு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்து விட்டு, அன்புடன் வருகை புரிந்து, அழகாகக் கருத்துக்கள் கூறியுள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள,
    கோபு

    பதிலளிநீக்கு
  40. நல்லதொரு அனுபவப் பகிர்வு. ஆரம்பம் மடிசார் மாமியிடம் என்று தொடங்கி இப்ப நீலா என்னும் ரீச்சர் வரை கற்ற அனுபவம், கூடப்படித்த நண்பர்களுடனான தொடர்பு, கற்றுக்கொடுத்த அத்தனை ஆசியப்பெருந்தகையினர், நண்பர்களின் பெயர் விபரங்களுடன் படிக்கும்போது இடம்பெற்ற மகிழ்வான வருத்தமான நிகழ்வுகளையும் அருமையாக படம்பிடித்துக்காட்டியதுபோல அழகாக தொகுத்துத் தந்திருக்கின்றீர்கள்.

    மேலும் படிக்கமுடியாமல் நிதி நிலையால் வேலைக்குச்சென்ற அனுபவம் மனதை நெருடியது. போராடி முன்னுக்கு வந்தகதை
    அருமையாக இருக்கிறது என்று சொல்வதே எனக்குப் போதாமல் இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிப்பகுதிவரை நல்ல ஒரு வீடியோப் படம் பார்த்த நிறைவைத் தருகிறது.

    இன்னும் படிக்கவேண்டும் என்னும் உங்கள் ஆவல் கண்டு இப்படியும் ஒரு படிப்பு வெறியா என்று ஆச்சரியப்படுகிறேன்.
    இக்கால இளஞ்சந்ததியினர் அவசியம் படிக்கவேண்டிய பதிவு.

    வாழ்த்துக்கள் அண்ணா!
    பகிர்வுக்கும் மனம்நிறைந்த நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இளமதி, வாருங்கள், வணக்கம்.

      இதன் ஏழு பகுதிகளையும் படித்து விட்டு இங்கு அன்புடன் வருகை தந்து ஆவலுடன் கருத்துக்கள் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      மிகவும் சந்தோஷமும் நன்றிகளும் தங்கச்சி.

      பிரியமுள்ள,
      VGK அண்ணா

      நீக்கு
  41. //எப்போதும் எந்த வயதிலும் ஏதாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும், மன நிம்மதியையும் தரும்//


    ரெம்ப அழகா சொன்னீங்க சார். எந்த வயதிலும் கற்கும் ஆர்வம் மனிதனை இளமையாக வைத்திருக்கும்னு ஒரு ஆங்கில பழமொழி படிச்சு இருக்கேன். மேற்கத்திய நாடுகள்ல நான் வியந்த விசயங்களில் இதுவும் ஒண்ணு. நம்ம ஊர் போல படிக்கவோ சில வேலைக்களுக்கு போகவோ வயது வரம்புனு அங்க இல்ல, அங்க உள்ள மக்களும் அப்படி நினைக்கறதில்ல. இங்கயும் உங்களை போல சிலர் அப்படி இருக்கறது கேக்க ரெம்ப சந்தோசமா இருக்கு. உங்க பள்ளி நாள் நினைவுகளையும், உங்க ஆசிரியர்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க. இந்த தொடரை ரசித்து படித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி “அப்பாவி தங்கமணி” மேடம் அவர்களே,

      வாருங்கள். வணக்கம். நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //ரொம்ப அழகா சொன்னீங்க சார். எந்த வயதிலும் கற்கும் ஆர்வம் மனிதனை இளமையாக வைத்திருக்கும்னு ஒரு ஆங்கில பழமொழி படிச்சு இருக்கேன்.//

      ஆமாம் மேடம், அது தான் உண்மையும் கூட.

      //இந்த தொடரை ரசித்து படித்தேன்//

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள் மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  42. நிறைய அனுபவங்கள்.. பள்ளிக்கூடம் முழுசும் படிச்சி பிரமிப்பா இருக்கு!

    பதிலளிநீக்கு
  43. உஷா அன்பரசு November 22, 2012 9:31 AM
    //நிறைய அனுபவங்கள்.. பள்ளிக்கூடம் முழுசும் படிச்சி பிரமிப்பா இருக்கு!//

    தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். vgk

    பதிலளிநீக்கு
  44. அப்பாடா! ஒரே மூச்சில் உங்கள் ஏழு பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன்.
    உங்களுக்கு கல்வி கற்க உதவிய ஆசிரியர்களிலிருந்து தொடங்கி, வகுப்பு நண்பர்களை குறிப்பிட்டு, உங்கள் வறுமை நிலையையும் அதனால் அந்த நிலையில் இருப்பவர்களிடம் உங்களுக்கு இயல்பாகத் தோன்றும் உதவும் குணத்தையும் மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள்.
    மறுபடி கல்வி கற்க ஆரம்பித்து அங்கு சந்தித்தவர்களையும், உங்களுக்கு கல்வி கற்பிக்க முன் வந்த இளம் பெண் நீலா பற்றியும்
    படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. படித்து முடித்த பின்தான் ஏழு பகுதிகளையும் படித்து விட்டதே தெரிந்தது.

    தொய்வில்லாத சரளா நடையில், உங்கள் நகைச்சுவையையும் கலந்து தொடர் பதிவாக கொடுத்து எல்லோர் மனங்களையும் கவர்ந்து விட்டீர்கள்.

    பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!

    படித்தவுடன் ஒரு மன நிறைவு வந்தது பாருங்கள், அதை சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை!

    பதிலளிநீக்கு
  45. Ranjani Narayanan December 17, 2012 2:08 AM

    வாங்கோ திருமதி ரஞ்ஜினி மேடம். வணக்கம்.

    இன்று ஒரே நாளில் ஒரே மூச்சாக இந்தப்பதிவின் ஏழு பகுதிகளையும் படித்து ரஸித்து பின்னூட்டமிட்டுள்ளது, தங்களின் மிகப்பெரிய சாதனை தான். என் மனமார்ந்த நன்றிகள்.

    //மறுபடி கல்வி கற்க ஆரம்பித்து அங்கு சந்தித்தவர்களையும், உங்களுக்கு கல்வி கற்பிக்க முன் வந்த இளம் பெண் நீலா பற்றியும்
    படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. படித்து முடித்த பின்தான் ஏழு பகுதிகளையும் படித்து விட்டதே தெரிந்தது.//

    ஆம், ஒரு எட்டு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் எனக்கு குருவாக இருந்து STATISTICS பாடம் போதித்த அந்த இளம் பெண் நீலாவை என்னால் மறக்கவே முடியாது. மிகவும் நல்ல பொண்ணு. இப்போ திருமணம் ஆகி ஏதோ வெளிநாட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்களைப்பார்த்து சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த என் உண்மைக்கதையில் அவள் ஓர் சுவாரஸ்யமான கதாபாத்திரம் தான். அவளின் ஏழ்மை, நேர்மை, ரோஷம், தாராள குணம், கண்டிப்பு + கறார் நான் அவளிடம் மிகவும் ரஸித்தவை.

    //தொய்வில்லாத சரளா நடையில், உங்கள் நகைச்சுவையையும் கலந்து தொடர் பதிவாக கொடுத்து எல்லோர் மனங்களையும் கவர்ந்து விட்டீர்கள்.

    பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!

    படித்தவுடன் ஒரு மன நிறைவு வந்தது பாருங்கள், அதை சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை!//

    இதைத்தாங்கள் சொல்லிக்கேட்க என் மனமும் மிக்க மகிழ்ச்சியடைகிறது, மேடம். ரொம்ப ரொம்ப சந்தோஷம் + நன்றிகள் மேடம்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  46. தொய்வில்லாத சரள நடை என்பது சரளா நடை ஆகிவிட்டது.தவறுக்கு மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  47. Ranjani Narayanan December 19, 2012 12:09 AM
    //தொய்வில்லாத சரள நடை என்பது சரளா நடை ஆகிவிட்டது. தவறுக்கு மன்னிக்கவும்!//

    அடடா, இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள்?

    நான் மிகவும் ரஸிக்கும் சினிமா நடிகை கோவை சரளாவும், நம் அன்புக்குரிய பதிவர் கோவை மு. சரளா அவர்களும் கோபித்துக்கொள்ளாமல் இருந்தால் சரியே. ;))))))

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  48. நான் 40 வயதுக்கு மேல் 46 வயதுக்குள் 3 பல்கலைக்கழகத்தில் படித்து 3 வெவ்வேறு பட்டம் பெற்றது போல நீங்களும் சற்றே முயற்சித்து, அதற்காக கடுமையாக உழைத்தால், மிகச்சுலபமாக வெற்றி பெறலாம். காலம் கடத்தாமல் சிறு வயதிலேயே நிறைய படித்து வைத்துக்கொண்டால் அது நமக்கு உரிய பலனை, உரிய நேரத்தில் நிச்சயமாகத் தரும்.

    நிறைவுப்பகுதி வரை நிதானமாக படிச்சு முடிச்சுட்டேன். பலவிஷயங்கள் தெரிஞ்சுக்க முடிந்தது. நீங்க மேலும் மேலும் படிக்க ஆசைப்பட்டதுக்கு உங்களுக்கு கிடைத்த ஆசிரியர்களும் திறமையானவங்களாகவே கிடைச்சு உங்களை ஜொலிக்க வச்சிருக்காங்க. ஒவ்வொரு பகுதியுமே ரொம்ப நால்ல் இருந்தது. பகிர்வுக்கு நன்றி. இனி நீங்க கொடுத்திருக்கும் அடுத்த லிங்க் பக்கம் போறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் April 3, 2013 at 8:28 AM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

      *****நான் 40 வயதுக்கு மேல் 46 வயதுக்குள் 3 பல்கலைக் கழகங்களில் படித்து 3 வெவ்வேறு பட்டம் பெற்றது போல நீங்களும் சற்றே முயற்சித்து, அதற்காக கடுமையாக உழைத்தால், மிகச்சுலபமாக வெற்றி பெறலாம். காலம் கடத்தாமல் சிறு வயதிலேயே நிறைய படித்து வைத்துக்கொண்டால் அது நமக்கு உரிய பலனை, உரிய நேரத்தில் நிச்சயமாகத் தரும். *****

      //நிறைவுப்பகுதி வரை நிதானமாக படிச்சு முடிச்சுட்டேன்.//

      மிகவும் சந்தோஷம்மா.

      //பலவிஷயங்கள் தெரிஞ்சுக்க முடிந்தது.//

      மிக்க மகிழ்ச்சி.

      //நீங்க மேலும் மேலும் படிக்க ஆசைப்பட்டதுக்கு உங்களுக்கு கிடைத்த ஆசிரியர்களும் திறமையானவங்களாகவே கிடைச்சு உங்களை ஜொலிக்க வச்சிருக்காங்க.//

      ஆமாம். பெரும்பாலும் மிக நல்ல திறமை வாய்ந்த ஆசிரியர்களாகவே எனக்கு அமைந்திருந்தார்கள்.

      //ஒவ்வொரு பகுதியுமே ரொம்ப நல்லா இருந்தது. பகிர்வுக்கு நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றி.

      //இனி நீங்க கொடுத்திருக்கும் அடுத்த லிங்க் பக்கம் போறேன்.//

      ஆஹா, சந்தோஷம். இதன் அடுத்த பகுதியில் எல்லோருக்கும் நன்றி சொல்லியிருக்கிறேன். அதையும் பாருங்கோ.

      தலைப்பு: இயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா
      http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

      அதன் பிறகு நான் சொன்ன புதிய பதிவுக்குப்போங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும் பகுதி-1 முதல் பகுதி-7 வரை சிரத்தையாகப்படித்து, ரஸித்து, கருத்துக்கள் கூறி, உற்சாகப் படுத்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், பூந்தளிர்.

      நீக்கு
  49. அருமையான தொடர். அதுவும் கடைசிப் பகுதியில் கூறியிருக்கும் குறிப்புகள் அனைவருக்கும் பயன்படக்கூடியவை.

    பதிலளிநீக்கு
  50. இன்றும் கூட எனக்கு I C W A I என்ற COSTING படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் உள்ளது. இந்த என் ஆர்வத்திற்கு என் தற்போதைய உடல்நிலையும், வீட்டில் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இல்லாமையும் மிகவும் முட்டுக் கட்டைகளாக உள்ளன. அதனால் என் ஆசையை தற்போதைக்கு ஒத்திப்போட்டு வைத்துள்ளேன்.//

    இதே தான். எனக்கும் வாழ்நாள் முடிவதற்குள் Ph.d பட்டம் வாங்க வேண்டும் என்று மிகுந்த ஆசை. ம். பார்ப்போக். நம் ஆசை நிறைவேறுகிறதா என்று.

    பதிலளிநீக்கு
  51. படிப்பு பத்தி சொல்லின வெசயங்க அல்லாமே ரொம்ப நல்லாருந்திச்சி. உங்க படிக்குர ஆர்வமும் இன்னும் கொறயவேல்லனும் வெளங்கிட்டேன். ரொம்ப நிறைவா இருந்திச்சி. பமள்ளிக்
    கு போகலாம் பதிவு

    பதிலளிநீக்கு
  52. மிகவும் நிறைவான பகிர்வு படிபுபுக்கு வயது ஒருதடை இல்லைதான். ஆர்வமும் விடா முயற்சியும்தான் தேவை என்று அழகாக புரிய வச்சிருக்கீங்க. அப்பவே படிக்க ஆசைப்படுபவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளையும் செய்திருக்கேங்க. ரியலி க்ரேட்

    பதிலளிநீக்கு
  53. வாத்யாரே என்று நான் உரிமையுடன் அழைப்பதற்கு முழுத்தகுதியானவர்தான் என்பது இந்தப் பதிவில் எல்லோர்க்கும் தெளிவாகிவிடும். அருமையான அனுபவத்தொடர். முத்தாய்ப்பான முடிவு.. நன்றி.

    பதிலளிநீக்கு
  54. நீங்கள் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை (ஜிமிக்கி என்ற பெண்) இங்கு வெளியிட்டிருக்கலாம் (ஒருவேளை அனுமதி வாங்கவில்லையோ தெரியலை)

    நீலா என்ற STATISTICS சொல்லித்தந்த பெண் என் மனதை மிகவும் கவர்ந்தார். என்ன ஒரு உபகாரம், தன் மதிப்பு உள்ள பெண் அவர். நிச்சயம் அவர் தன் வாழ்வில் உயர்ந்திருப்பார். எங்கிருந்தாலும் அவரைப் போன்ற நல் மனம் கொண்டவர்கள் வாழ்க.

    அஞ்சல் வழிக்கல்விக்கான முக்கியத் தகவல்களை இணைத்துள்ளது உங்கள் perfection ஐக் காட்டுகிறது.

    மொத்தத்தில் இந்த 7 இடுகைகள் சேர்ந்த தொடர் மிகவும் இன்டெரெஸ்டிங்க் ஆக இருந்தது.

    இவ்வளவு ஆர்வமாக இருப்பவரை 'படிக்கவேண்டாம்' என்று இப்போது யார் சொன்னது. படியுங்கள். It will keep you busy. You will also forget physical health related problems. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  55. எனக்கு இந்தத் தொடர் மிகவும் பிடித்திருந்ததனால், ஒவ்வொரு பகுதிக்கும் என் கருத்தை எழுதினேன்.

    நல்லா எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் January 26, 2018 at 8:58 PM


      //நீங்கள் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை (ஜிமிக்கி என்ற பெண்) இங்கு வெளியிட்டிருக்கலாம் (ஒருவேளை அனுமதி வாங்கவில்லையோ தெரியலை)//

      அவளிடம் நான் இப்போது அனுமதி வாங்கவும் இல்லை. வாங்குவதாகவும் இல்லை. மேலும் அன்று என் கண்களுக்குக் காட்சியளித்த சின்னப் பெண்ணான சொக்கி/ஜிமிக்கி யாக இன்று அவள் இல்லை. அப்போது என்னிடம் அவளைப் படமெடுத்து வைத்துக்கொள்ள கேமரா/மொபைல் போன்ற வசதி வாய்ப்புகளும் இல்லை.

      மேலும் வெகு சமீபத்தில் [22.01.2018] எடுக்கப்பட்ட, அதை இப்போது இங்கு நான் வெளியிட்டால் அது இந்தக் கட்டுரையில் உள்ள என் வர்ணனைகளுக்குப் பொருத்தமாகவும் இருக்காது.

      //நீலா என்ற STATISTICS சொல்லித்தந்த பெண் என் மனதை மிகவும் கவர்ந்தார். என்ன ஒரு உபகாரம், தன் மதிப்பு உள்ள பெண் அவர். நிச்சயம் அவர் தன் வாழ்வில் உயர்ந்திருப்பார். எங்கிருந்தாலும் அவரைப் போன்ற நல் மனம் கொண்டவர்கள் வாழ்க. //

      ஆமாம். அவள் மிகவும் நல்ல பெண். கெட்டிக்காரியும்கூட. என் மேற்படிப்புகள் ஒருவழியாக முடிந்த பிறகு, அவளை நானும் என் மனைவியும் ஒருநாள் போய் சந்தித்து நன்றி கூறிவிட்டு வந்தோம். அதன்பின் அவளை நான் மீண்டும் சந்திக்கும் ப்ராப்தம் எனக்கு அமையவே இல்லை. சமீபத்தில் மும்பையில் பேங்க் அதிகாரியாக இருக்கும் அவளின் சித்தப்பா பையன் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் விசாரித்தேன். அவள் கல்யாணம் ஆகி குவைத்தில் இருப்பதாகச் சொன்னார். சந்தோஷப்பட்டுக்கொண்டேன். நான் அவளிடம் டியூஷன் படிக்கும் காலத்தில் அவர்கள் குடியிருந்த வீட்டில் இப்போது அவளைச் சேர்ந்தவர்கள் யாரையுமே காணோம்.

      //அஞ்சல் வழிக்கல்விக்கான முக்கியத் தகவல்களை இணைத்துள்ளது உங்கள் perfection ஐக் காட்டுகிறது.//

      ஆமாம். இன்றும் கூட அது சம்பந்தமான அனைத்து அடசல் பேப்பர்களும் என் வீட்டில் எங்கோ பரணையில் நான் வைத்துள்ளேன்.

      //மொத்தத்தில் இந்த 7 இடுகைகள் சேர்ந்த தொடர் மிகவும் இன்டெரெஸ்டிங்க் ஆக இருந்தது.//

      மிக்க மகிழ்ச்சி ஸார்.

      //எனக்கு இந்தத் தொடர் மிகவும் பிடித்திருந்ததனால், ஒவ்வொரு பகுதிக்கும் என் கருத்தை எழுதினேன்.
      நல்லா எழுதியிருக்கீங்க.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஒவ்வொரு பகுதியையும் மட்டுமல்லாமல் அனைவரின் கருத்துக்களையும், அதற்கு நான் எழுதியுள்ள பதில்களையும் சிரத்தையுடன் வாசித்து எழுதியுள்ள கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.

      //இவ்வளவு ஆர்வமாக இருப்பவரை 'படிக்கவேண்டாம்' என்று இப்போது யார் சொன்னது. படியுங்கள். It will keep you busy. You will also forget physical health related problems. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. இப்போதும் எதையாவது நான் படித்துக்கொண்டுதானே இருக்கிறேன். :)))))

      அன்புடன் கோபு

      நீக்கு
  56. மிகவும் சுவைபட அந்த நாள் நிகழ்ச்சிகளை மலரும் நினைவாக எழுதி இருக்கிறீர்கள் .உங்களின் கல்வியாசை, விடாமுயற்சி ,மெய் வருத்தம் பாராமல் உழைத்தது எல்லாம் வெகுவகப் பாராட்டத்தகுந்தது . ஒரு பெருந்தொகையைத் தேவைப்பட்ட காலத்தில் கொடுத்து உதவியது எவ்வளவு அருங் குணம் ! நீங்கள் ஓர் உயர்ந்த மனிதர்! எல்லாவற்றையும்
    இவ்வளவு விவரமாய் நினைவில் வைத்திருப்பது சிலர்க்கே சாத்தியம் . சாந்துணையும் கற்க வேண்டும் என்னும் உங்கள் கருத்து போற்றற்குரியது . நான் 36 ஆம் வயதில் புலவர் பட்டமும் 68 ஆம் அகவையில் இந்தி டிப்லோமாவும் பெற்றேன் . 92 வயதில் மலையாளம் கற்றுக்கொண்டிருக்கிறேன் .பெருமைக்காகச் சொல்லவில்லை . உங்கள கருத்தும் என் கருத்தும் ஒத்திருக்கின்றன என்பதைத் தெரிவிப்பதற்காகத் தான் .

    பதிலளிநீக்கு
  57. சொ.ஞானசம்பந்தன் January 24, 2019 at 6:39 PM

    வாங்கோ ஐயா, நமஸ்காரங்கள் + வணக்கம்.

    //மிகவும் சுவைபட அந்த நாள் நிகழ்ச்சிகளை மலரும் நினைவாக எழுதி இருக்கிறீர்கள். உங்களின் கல்வியாசை, விடாமுயற்சி ,மெய் வருத்தம் பாராமல் உழைத்தது எல்லாம் வெகுவாகப் பாராட்டத்தகுந்தது.//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா

    //ஒரு பெருந்தொகையைத் தேவைப்பட்ட காலத்தில் கொடுத்து உதவியது எவ்வளவு அருங் குணம் ! நீங்கள் ஓர் உயர்ந்த மனிதர்!//

    என்னால் அன்றையதினம் செய்ய முடிந்துள்ள ஒரு சின்ன உதவிதான். வெகு சீக்கரமாகவே (ஓரிரு மாதங்களுக்குள்) பணமும் எனக்கு, PROMPT ஆக திரும்பி வந்துவிட்டது. இருப்பினும் அவர்களுக்கு அன்று அது ஓர் TIMELY HELP ஆக இருந்துள்ளது. அதனால் நான் அந்த சம்பவத்தை, அப்போதே மறந்தும்கூட, அவர்களால் மறக்க முடியாமல், இன்றுவரை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் நினைவூட்டி நன்றி செலுத்தி வருகிறார்கள்.

    //எல்லாவற்றையும் இவ்வளவு விவரமாய் நினைவில் வைத்திருப்பது சிலர்க்கே சாத்தியம்.//

    ஏதோ இறையருளாலும், தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசியாலும், எனக்குக் கொஞ்சம் ஞாபகசக்தி அதிகமாகவே, இன்றுவரை இருந்து வருகிறது.

    //சாந்துணையும் கற்க வேண்டும் என்னும் உங்கள் கருத்து போற்றற்குரியது.//

    இன்றும் இந்தக்கால சிறுவர், சிறுமியர்களை குருவாக ஏற்று, இந்த கம்ப்யூட்டர், மொபைல் ஸ்மார்ட் போன், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற எத்தனை எத்தனையோ சிறு சிறு விஷயங்களையும், நவீன சாதனங்களையும் இயக்க வேண்டி, நாம் கற்கத்தான் வேண்டியுள்ளது. வயதானாலும்கூட நம்மை நாமே, காலத்திற்கு ஏற்ப அப்-டேட் செய்துகொள்ள வேண்டியதும் மிகவும் அவஸ்யமாகத்தான் உள்ளது.

    //நான் 36 ஆம் வயதில் புலவர் பட்டமும் 68 ஆம் அகவையில் இந்தி டிப்லோமாவும் பெற்றேன் . 92 வயதில் மலையாளம் கற்றுக்கொண்டிருக்கிறேன் .பெருமைக்காகச் சொல்லவில்லை . உங்கள கருத்தும் என் கருத்தும் ஒத்திருக்கின்றன என்பதைத் தெரிவிப்பதற்காகத் தான்.//

    தாங்கள் தாராளமாகப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உங்களை நினைத்து நானும் பெருமைப்படுகிறேன் + [கொஞ்சம் பொறாமையும் படுகிறேன். :)))))]. தங்களின் சாதனை மிகப்பெரிய மகத்தான சாதனை ஐயா. என்னைப்போன்றவர்களுக்கு மட்டுமல்ல .... இளைஞர்களுக்கும் தாங்களே வழிகாட்டியாக விளங்குகிறீர்கள். கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    அன்புடன் கோபு
    珞

    பதிலளிநீக்கு