About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, January 16, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-2 of 16 [2-6]

 என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 

 









திருமதி அன்புடன் மலிக்கா அவர்கள்

 

வலையில் சிக்கிய சுறாக்களும்... புறாக்களும்...


 


பச்சைத்தமிழன் திரு. பாரி தாண்டவமூர்த்தி அவர்கள்


***************************************************************************************

    வலைப்பூவின் பெயர் : vai.gopalakrishnan

பதிவரின் பெயர் : வை.கோபாலகிருஷ்ணன்

எழுதியவை: 47
பின்தொடர்பவர்கள்: 30 
எனக்கு பிடித்த பதிவு: 
**************************************************************************************
 



திரு. தமிழ்வாசி - பிரகாஷ் அவர்கள்


பதிவர் பெயர்: வை. கோபால கிருஷ்ணன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2011
படித்ததில் பிடித்தது:
(எட்டு பாகங்கள்)

திரு. வேடந்தாங்கல் - கருண் அவர்கள்

 


சாதாரணமானவன் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று சொல்பவர். ஒரு மூத்தக் குடிமகன்(ர்).  


 




திருமதி லக்ஷ்மி அவர்கள்


வை. கோபால கிருஷ்ணன்...... VAI. GOPALAKRISHNAN. இவரின் சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள்  பலதும் பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆகி இருக்கிறது. அனுபவம் என்று சாப்பாடு பற்றிய தலைப்பு.    மூக்குத்தி  தொடர்பில் நகைச்சுவை சொல்கிறார். டிஸ்மிஸ் நல்லாயிருக்கு.

 

 






தொடரும்
இவர்கள் அனைவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள்.

 


நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் நால்வர்:


1) திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்


2) திரு. RVS அவர்கள்


3) திரு. மோஹன்ஜி அவர்கள்


4)  கவிஞர் திரு. யாதோ S. ரமணி அவர்கள்




என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

33 comments:

  1. மலர்சரங்களை ஏந்தியுள்ள பட்டு கரங்கள் அழகு ...

    தோட்ட மலர்கள் மணம் வீசுகின்றன ..

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.... அழகிய மலர்... பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பதிவின் நோக்கமும் உள்ளீடுகளின் தோற்றமும் புரியாமல் தடுமாறுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி January 16, 2015 at 5:56 AM

      வாங்கோ, வணக்கம் ஐயா.

      //பதிவின் நோக்கமும் உள்ளீடுகளின் தோற்றமும் புரியாமல் தடுமாறுகிறேன்.//

      பதிவின் நோக்கம்:
      =================

      1] அண்ணன் காட்டிய வழி என்பதுபோல, ஐயா தாங்கள்
      காட்டிய வழியே தான்.... நம் பதிவுகளின் எண்ணிக்கையை
      சற்றே அதிகரித்தல். [உதாரணம்: என் சிறுகதை
      விமர்சனப்போட்டிகள் அனைத்திலும் கலந்துகொண்ட
      தாங்கள் இன்றும் அவற்றைப்பற்றி அவ்வப்போது வாரம்
      ஒன்று வீதமாவது வெளியிட்டு வருகிறீர்கள் :) சமீபத்தில்
      தாங்கள் வெளியிட்டுள்ள VGK-15 ’அழைப்பு’
      http://swamysmusings.blogspot.com/2015/01/vgk-15.html]

      2] வலைச்சர ஆசிரியராக இருந்து அன்று நம்மைக் கண்டு
      கொண்டவர்களை நாமும் இன்று கண்டு கொள்ளுதல்.
      கெளரவித்தல். சிறப்பித்தல். நன்றி கூறுதல்.

      3] எதிலும் நான் ஓர் புதுமையைப் புகுத்தினால் மேலும் பலருக்கு ’அட .. நாமும் இதுபோல செய்யலாமே’ என்ற எண்ணமும், எழுச்சியும் ஏற்பட்டு, அவர்களின் பதிவு எண்ணிக்கைகளை உயர்த்தவும் இது பயன் படக்கூடும். பரோபகார சிந்தனை. :)

      4] என்னை இதுவரை கண்டுகொண்டுள்ள
      நூற்றுக்கணக்கான வலைச்சர ஆசிரியர்களின்,
      அறிமுகங்கள் பல இடங்களில் சிந்திச்சிதறிக் கிடப்பவற்றை ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில் கொண்டு வருதல். எனக்கு இது என்றும் ஓர் நிரந்தர ஆவணமாகப் பயன்படக்கூடும் அல்லவா ?

      5] வலைச்சரத்தில் நான்கு ஆண்டுகளுக்குள் 100
      முறைகளுக்கு மேல் பல்வேறு வலைச்சர ஆசிரியர்களால்
      நான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதே ஓர் மிகப்பெரிய சாதனையாக நான் நினைத்து மகிழ்கிறேன்.

      6] அந்த 100ஐ, 108 ஆக நீடித்து தங்களையும் 106வது நபராகக் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளேன். இந்தத்தொடரின் இறுதிப்பகுதியில் [பகுதி 16 of 16] தாங்களும் தோன்றப் போகிறீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.

      7] அன்று வலைச்சர ஆசிரியராக இருந்த பல பதிவர்கள்
      இன்று எங்கோ காணாமல் போய் உள்ளதாகத் தெரிகிறது.
      நானும் அதுபோல விரைவில் காணாமல் போனாலும்
      போகலாம். அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. அதற்குள், ஏற்கனவே மனதில் திட்டமிட்டு விட்ட இதை எப்படியும் வெளியிட்டு விடவேண்டும் என்பதே என் அடிப்படை நோக்கமாகும்.

      உள்ளீடுகளின் தோற்றம்:
      ========================

      ’என் வீட்டுத்தோட்டத்தில் .... ’ என்ற தலைப்பானது, நான்
      இதுவரை என் வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ள சுமார் 700 பதிவுகளையும் என் வீட்டுத்தோட்டத்தில் மலர்ந்துள்ள அழகிய மலர்களாக கற்பனை செய்துள்ளேன்.

      அவற்றை [அந்தப்பூக்களை] பல்வேறு வலைச்சர
      ஆசிரியர்கள் ஆவலுடன் எடுத்துச்சென்று,
      வலைச்சரத்தில் தொடுத்துள்ளதாகவும், பூச்சரமாக
      ஆக்கிக் கொடுத்துள்ளதாகவும் சொல்லியுள்ளேன்.

      //புரியாமல் தடுமாறுகிறேன்.//

      இப்போது ஓரளவு தங்களுக்கும் புரிந்திருக்குமே ! :)

      அன்புடன் VGK

      Delete
    2. விளக்கத்திற்கு மிக்க நன்றி, வைகோ அவர்களே.

      Delete
  4. வலைச்சரத்தில் தங்கள் மலர்களைத் தொடுத்தவர்களைக் கொண்டு தாங்கள் ஒரு மலர்ச்சரம் தொடுத்து அறிமுகப்படுத்துவது ஒரு சிறப்பான செயல். மனம் நிறைந்த பாராட்டுகள் இன்றைய மலர்ச்சரத்தில் இடம்பெற்றவர்களுக்கு.

    ReplyDelete
  5. எதையும் முழுமையாகத் திட்டமிட்டுப் பின்
    தொடர்வதே தங்கள் பல வெற்றி இரகசியங்களில்
    முக்கியமானது என அறிவேன்
    2/16 என்பதையே அதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்
    என் நினைக்கிறேன்

    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு. பாராட்டுகள்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. பலரையும் சிறப்பித்து கொண்டு வருகிறீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. அருமையான படங்கள். வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியவர்களுக்கு சொன்னவர்களுக்கு மலர்ச்சர வரவேற்பு அருமை.
    எதை செய்தாலும் புதுமையாக செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அருமையா மலர்கள்...அதை மலர்களே கோர்க்கின்றன...

    வலைச்சர அறிமுக மலரும்...அம்மலரே தன்னை தொடுத்தவர்களை அறிமுகம் செய்வது அழகு....அழகான யோசனையும் கூட...வாழ்த்துக்கள் ஐயா தங்களின் புதுமைக்கு.

    ReplyDelete
  10. உங்கள் திறமைக்கு இவை ஒரு உதாரணம். பாராட்டுகள் வை.கோ. ஐயா.

    ReplyDelete
  11. அருமையான தொகுப்பு. லக்ஷ்மி அவர்கள் இப்போதெல்லாம் எழுதுவதில்லை. சாந்தியிடம் கூடக் கேட்டேன்.(அமைதிச் சாரல்) உங்கள் வீட்டுத் தோட்டத்து மலர்கள் மணம் வீசுகின்றன.

    ReplyDelete
  12. மற்றொரு கண்ணும் ஆபரேஷன் செய்திருப்பதாகப் படித்தேன். உடல் நலத்திலும் கவனம் வைக்கவும்.

    ReplyDelete
  13. உங்களைப் பற்றி 'வலைச்சரத்தில்' சொன்னவர்கள் என்று சொன்னதோடு போகாமல் அவர்களின் புகைப்படங்களையும்
    கேட்டு வாங்கிப் போட்டு இங்கு நீங்கள் அவர்களை அறியாதோருக்கு அறிமுகப்படுத்துவது இன்னும் சிறப்பு.
    உங்கள் கற்பனையில் உதித்த இந்த concept-ஏ அற்புதம். (தன்னை தெரியாதோருக்கு அறிமுகப்படுத்தியவர்களை நன்றி மறவாமல்
    அவர்களைத் தெரியாதோருக்கு தான் அறிமுகப்படுத்துதல்)
    ஆற்றுப்படுத்தலின் வழி ஆற்றுப்படுத்துதல்.

    அத்துடன் சிறப்பான அர்த்தம் கொடுப்பதற்காக அவர்கள் ஆசையுடன் கொண்டிருக்கும் வலைத்தளப் பெயருக்கான காரணங்களையும் கேட்டு வாங்கிப் போட்டீர்களென்றால் அவர்களின் அறிமுகமும் முழுமையடையும். சுவையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

    இந்தப் பகுதிக்கான வலைத்தளப் பெயர்கள்:

    அன்புடன் மலிக்கா
    பச்சைத் தமிழன்
    தமிழ்வாசி



    இதெல்லாம் குறித்து வேறு வைத்திருக்கிறீர்களே, அதான் பெரிய விஷயம்.

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா...
    மிக அருமையான தொகுப்பு...
    உங்களின் வலைப்பூவை வலைச்சர ஆசிரியர்கள் மூலமாக நீங்களே ரீவைண்ட் செய்து பார்ப்பது வித்தியாசமான பகிர்வு...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்வாசி பிரகாஷ் January 16, 2015 at 7:22 PM
      //வணக்கம் ஐயா...//

      வாருங்கள், வணக்கம்.
      /
      //மிக அருமையான தொகுப்பு... உங்களின் வலைப்பூவை வலைச்சர ஆசிரியர்கள் மூலமாக நீங்களே ரீவைண்ட் செய்து பார்ப்பது வித்தியாசமான பகிர்வு...//

      வலைச்சர நிர்வாகக்குழு உறுப்பினரான தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் மிகவும் மகிழ்வளிக்கின்றன. மிக்க நன்றி.

      ’தமிழ்வாசி’ என்ற தங்களின் பெயர் காரணத்தைப்பற்றி மேலே திரு. ஜீவி ஐயா அவர்கள் கேட்டுள்ளார். முடிந்தால் தாங்களே இதற்கு இங்கேயே மீண்டும் வருகை தந்து பதில் அளித்தால் நாங்கள் அனைவரும் தெரிந்துகொள்ள எதுவாகும்.

      அன்புடன் VGK

      Delete
  15. கோபு அண்ணா

    பவழமல்லி மலர்களின் மணமும், மலர்களை ஏந்தியுள்ள மழலைகளும் அருமை.

    என் வீட்டுத் தோட்டத்தில் தொடர் என்னைப் போன்ற அறிமுகம் இல்லாத வலைத்தள எழுத்தாளர் (!)களுக்கு அருமையான வாய்ப்பு.

    புதுமைகளை புகுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான்.

    உங்களிடமிருந்து எங்களுக்குக் கிடைக்கவேண்டிய பொக்கிஷங்கள் ஏராளம். அதனால் உடல் நிலையிலும் கொஞ்சம் கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.

    வணக்கத்துடனும்,
    வாழ்த்துக்களுடனும்,
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  16. என் வீட்டுத் தோட்டத்தில் தொடர் எங்களுக்குப் பலவற்றை அறிய உதவுகின்றது. பலவற்றைப் புதுமையாகச் செய்துள்ளீர்கள். உங்கள் திறமை வியக்க வைக்கின்றது. அருமை. நாங்கள் கற்க னிறையவே இருக்கின்றது. தொடருங்கள். தொடர்கின்றோம். இன்னும் நிறைய கற்க வேண்டி.

    வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  17. இந்த பதிவை சுருக்கமாகச் சொன்னாலும் சுவையாகவே சொன்னீர்கள். முனைவர் பழனி.கந்தசாமி அவர்களது சந்தேகத்திற்கு தாங்கள் தந்த விளக்கம் அருமையிலும் அருமை. இந்த தொடர் சோர்ந்து இருக்கும் பதிவர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  18. அன்பு நண்பர் வை.கோ

    புதுமையாகப் பதிவுகள் படைப்பதில் தங்களீன் கை வண்ணம் மிளிர்கிறது. தங்களை அறிமுகம் செய்தவர்களை இங்கு அறிமுகம் செய்வது அருமையான சிந்தனை. நற்செயலும் கூட.

    நட்பு வட்டம் கூடும். நட்புகள் பெருகும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete


  19. புதுமையாகப் பதிவுகள் படைப்பதில் தங்களீன் கை வண்ணம் மிளிர்கிறது. தங்களை அறிமுகம் செய்தவர்களை இங்கு அறிமுகம் செய்வது அருமையான சிந்தனை. நற்செயலும் கூட.

    நட்பு வட்டம் கூடும். நட்புகள் பெருகும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete


  20. புதுமையாகப் பதிவுகள் படைப்பதில் தங்களீன் கை வண்ணம் மிளிர்கிறது. தங்களை அறிமுகம் செய்தவர்களை இங்கு அறிமுகம் செய்வது அருமையான சிந்தனை. நற்செயலும் கூட.

    நட்பு வட்டம் கூடும். நட்புகள் பெருகும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  21. enna algu anna alagu pookkal. nagaarave manam varavillai.
    neeraiya eluthunngal padikka arvamai ullen.be careful about your health too.
    viji

    ReplyDelete
  22. வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியவர்களுக்கும்
    மலர்ச்சர வரவேற்பு அருமை.
    எதை செய்தாலும் புதுமையாக செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா..

    மேலும் பல படைப்புகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துகள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வலைச்சரத்தில் தங்களை அறிமுகப் படுத்தியவர்களையும் இங்கு பெருமையுடன் நினைவு கூர்ந்தது சிறப்பு

    ReplyDelete
  24. வலைச்சரத்தில் நான்கு ஆண்டுகளுக்குள் நூற்று எட்டு
    முறைகளுக்கு மேல் பல்வேறு வலைச்சர ஆசிரியர்களால்
    அறிமுகம் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய சாதனைபுரிந்த தங்களுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:44 PM

      //வலைச்சரத்தில் நான்கு ஆண்டுகளுக்குள் நூற்று எட்டு
      முறைகளுக்கு மேல் பல்வேறு வலைச்சர ஆசிரியர்களால்
      அறிமுகம் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய சாதனைபுரிந்த தங்களுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

      108ம் நம்பர் வீட்டிலிருந்து புறப்பட்டு இங்கு வந்துள்ள தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      Delete
  25. வலைச்சரத்துல ஒங்கள அறிமுகப்படுத்தியவங்களயும் மறக்காம இங்கன சொல்லினீங்க. பூக்கள் படங்கலா நல்லாருக்குது. அந்த குஞ்சு குளுவாங்கல்லா பூ மால கட்டிகிட்டு இருக்காகளா

    ReplyDelete
  26. வலைச்சரத்தில் தங்களை அறிமுகம் செய்தவர்களை நாங்களும் அறிய தந்தது நிறைய பதிவர்களைத்தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்பாக இருக்கு.

    ReplyDelete
  27. நல்ல ரிடர்ன் கிஃப்ட். வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. வலையுலகில் சாதனைபுரிந்த தங்களுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete