About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, February 3, 2012

கரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]


நித்ய பாராயணங்கள்

[அள்ளிப்பருகிட மிகச்சுலபமாக ஜூஸ் 
வடிவில் சுருக்கித்தரப்பட்டுள்ளன]

நமக்கு பரமோபகாரம் செய்திருக்கும் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய நன்றிக்கடமை, அவர்களால் அருளிச் செய்யப்பட்ட ஸ்தோத்ரங்களை முழுவதுமாக பாராயணம் செய்ய முடியாதவர்கள், ஒவ்வொரு ஸ்தோத்ரத்திலும் முக்கியமான ஒரு ஸ்லோகத்தையாவது தினம் பாராயணம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ பரமாசார்யாள் அவர்களே உபதேசம் செய்த ஸ்லோகங்களை, பக்த ஜனங்கள் தினமும் பாராயணம் செய்து, ஸ்ரீ ஆச்சார்யாள் அவர்களின் பூர்ண க்ருபைக்கும் பாத்திரர்களாகி, பரம்பொருளின் அருளையும் பூர்ணமாகப் பெற்று பரம க்ஷேமத்தையும் அடையும் பொருட்டு, முழுக்கரும்புக்கு பதிலாக சுவையான சுலபமான கரும்பு ஜூஸ் போல அள்ளிப்பருகிட இங்கே அவை வடிகட்டித் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.  


[ முக்கியமான 1+15=16 ஸ்லோகங்களின் மிகமுக்கிய வரிகள் மட்டும்]  




 தோடகாஷ்டகம்:





விகிதா ந மயா 
விஸதைககலா

ந ச கிஞ்சன காஞ்சன
மஸ்தி குரோ !

த்ருதமேவ விதேஹி 
க்ருபாம் சஹஜாம்

பவ ஸங்கர 
தேஸிக மே சரணம் !!  

1/12. கணேச பஞ்சரத்னம்





முதா கராத்தமோதகம் 
ஸதா விமுக்திஸாதகம்

கலாதராவதம்ஸகம்
விலாஸிலோகரக்ஷகம்!

அநாயகைகநாயகம்
விநாஸிதேபதைத்யகம்

நதாஸுபாஸுநாஸகம்
நமாமி தம் விநாயகம் !!

2/12. ஸுப்ரமண்ய புஜங்கம்





மயூராதிரூடம்
மஹாவாக்யகூடம்

மனோஹாரிதேஹம்
மஹச்சித்தகேஹம்!

மஹீதேவதேவம் 
மஹாவேதபாவம்

மஹாதேவபாலம்
பஜேலோகபாலம்!!

3/12. சூர்ய த்யான ஸ்லோகம்





அருணோருணபங்கஜே நிஷண்ண:
கமலே(அ)பீதிவரெள கரைர்ததான:!

ஸ்வருசாஹித மண்டலஸ்த்ரிநேத்ர:
ரவிராகல்ப ஸதா குலோ(அ)வதாத்வ:!!



நாளை தொடரும்

23 comments:

  1. கரும்பை எப்படி உண்டாலும் இனிப்புதான். அதிலும் சாறு பிழிந்து குவளையில் கொடுத்தால் குடிக்கச் சொல்லியாத் தரவேண்டும்? அற்புதமானப் பாராயணத் தோத்திரங்களுக்கு அநேக கோடி நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  2. அற்புதமான பாராயண தோத்திரங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!
    நல்ல பதிவு!

    என் வலையின் புதிய முகவரி;-
    http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. பரம்பொருளின் அருளைப்பெற சுவையான கரும்பு ஜீஸ்.அள்ளிப்பருகி பயன் பெற்றுக்கொள்கிறோம் சார்,பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. ஜூஸ் க்கு பணிவான வணக்கம்.

    ReplyDelete
  6. பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகங்களை அழகாக தொகுத்து தருவதற்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  7. சுவையுடன் பயனும் தரக்கூடிய ஜூஸ்.....

    தொடர்ந்து தாருங்கள்....

    ReplyDelete
  8. பாராயணம் ஸ்லோகங்களை சேமித்து வைத்து விட்டேன் சார் ! நன்றி !

    ReplyDelete
  9. பயனுள்ள மந்திரங்களை தெரிவிப்பதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  10. அன்பின் வை.கோ

    பரமாச்சார்யாளின் ஸ்தோத்திரங்களில் முக்கியமான ஒன்றையாவது தினம் பாராயணம் செய்ய வேண்டும் - அருமையான சிந்தனை - ஆன்மீகப் பணியில் இவைகளைப் பகிர்வதற்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  11. Karumbu chaaru miga arumai. Matra koppaigalayum paruga chelgiren :-)

    ReplyDelete
  12. தோடகாஷ்டகம் பிரதோஷ வேளைகளில் பாடுவார்கள்..

    அற்புதப் பகிர்வுகள். வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. ஸுப்ரமண்ய புஜங்கம்

    உடற்குறைபாடுகளைப் போக்கும் வல்லமை பெற்றது..

    ReplyDelete
  14. நல்ல ஸ்லோகங்கள். பொறுமையாக சொல்லவேண்டும்.

    ReplyDelete
  15. கரும்பை பிழிந்து ஜூஸாகவே தந்துட்டீங்க.கொஞ்சமாவது தினமும் படிக்கலாம்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் May 28, 2015 at 10:10 AM

      //கரும்பை பிழிந்து ஜூஸாகவே தந்துட்டீங்க. கொஞ்சமாவது தினமும் படிக்கலாம்னு தோணுது.//

      இதுபோல மனதுக்குத் தோன்றியதே .... புண்ணியம்தான். :)

      Delete
  16. கரும்பு ஜூஸ்ன்ன உடனே என்னமோ நினைச்சேன்.

    சூப்பர்.

    இனி வெளியில் டூர் போகும் போதெல்லாம் ஸ்லோக புத்தகங்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

    அதான் உங்க வலைத்தாளம் இருக்கே.

    அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  17. இன்னாமோ கரும்பு ஜூஸுதான் கெடைக்குமானிட்டு வந்தேன். இன்ன சொல்லினிங்கனு வெளங்கிக்க ஏலலே.

    ReplyDelete
    Replies
    1. mru October 17, 2015 at 10:35 AM

      வாங்கோ முருகு, வணக்கம்.

      //இன்னாமோ கரும்பு ஜூஸுதான் கெடைக்குமானிட்டு வந்தேன்.//

      நேரில் நாம் சந்திக்க நேர்ந்தால் நிறையவே கரும்பு ஜூஸ் நான் உங்களுக்கு வாங்கித் தருகிறேன். :)

      //இன்ன சொல்லினிங்கனு வெளங்கிக்க ஏலலே.//

      என் பதிவுகளில் சுமார் 100 to 150 ஹிந்துமத ஆன்மீக விஷயங்களாக மட்டுமே இருக்கும். விளங்கினவரை ஏதாவது எழுதுங்கோ, போதும். சுத்தமாக விளங்காத பதிவுகளுக்கு ஐந்துமுறை கேள்விக்குறி ?????போட்டுவிட்டுப்போங்கோ. உங்களுக்கு மட்டுமே இந்த விசேஷ சலுகை என்னால் தரப்பட்டுள்ளதாக்கும் ! :)

      பிரியமுள்ள குருஜி

      Delete
  18. தோடகாஷ்டகம், கணேச பஞ்சரத்னம்( முதாகராந்த மோதகம்) இந்த ஸ்லோகம் பெரியவங்க ராகம் போட்டு சொல்லும்போது அவ்வளவு சுகானுபவமாக இருக்கும்.
    சுப்ரமண்ய புஜங்கம், சூரிய த்யான ஸ்லோகம் எல்லாவற்றிலருந்தும் முக்கியமான வரிகளை கொடுத்தது சிறப்பு ஈசியாக தினசரியும் சொல்ல முடியும்

    ReplyDelete
  19. முழுக்கரும்புக்கு பதிலாக சுவையான சுலபமான கரும்பு ஜூஸ் போல அள்ளிப்பருகிட இங்கே அவை வடிகட்டித் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. //ஜூஸ் முதல் கிளாஸே இனிமை. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  20. படித்துப் பயன்பெற வேண்டிய பதிவு!

    ReplyDelete