About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, February 18, 2012

மனதின் அழுக்குகள் மறையஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-3

ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீமத் ராமாயணம் உபந்யாசம் சொல்ல ஆரம்பிக்கும் முன் ’உபோத்காதம்” முன்னுரையாக ஸ்வாமிகள் கீழ்க்கண்டவாறு சொல்வது வழக்கம். 

ப்ரம்மா முதலில் ஸ்தாவரஸ்ருஷ்டி அதாவது மரம் செடி கொடிகளை ஸ்ருஷ்டித்து விட்டு, மிருகங்கள், பக்ஷிகள், பூச்சி வகைகளையும் ஸ்ருஷ்டித்தார். 


இவைகளில் திருப்தியடையாமல் மனித ஸ்ருஷ்டி செய்தவுடன் தான் சந்தோஷப்பட்டார்.  ஏனென்றால் மனிதனைத்தவிர மற்ற ஸ்ருஷ்டிகளுக்கு ஆறாவது அறிவாகிய [பகுத்தறிவு, கூர்மபுத்தி] இல்லாததினால் பகவத் பஜனம் செய்து ஞானத்தை அடைந்து புனர்ஜன்மா (திரும்பித் திரும்பி அம்மா கர்பத்தில் பிறப்பு எடுக்காமல் இருப்பது) வராமல் தடுத்துக் கொள்ள முடியாது.

மாட்டு வண்டியில் நிறைய பாரத்தை ஏற்றி மாட்டை அடித்து ஓட்டிக்கொண்டு போவார்கள். அவைகள் அந்த மாதிரிக் கஷ்டங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் முடியாது. தொழிற்சங்கங்கள் ஏற்படுத்திக்கொண்டு தங்கள் குறைகளைச்சொல்லி [Strike] வேலை நிறுத்தம், கொடிபிடித்தல், பொதுக்கூட்டங்களில் பேசுதல் போல காரியங்களைச் செய்ய முடியாது. 


மனிதர்கள் தங்களுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்கிக்கொள்ள நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள முடியும். பகவத் பஜனம் செய்வது, பகவானுடைய நாம ஸங்கீர்த்தனம் செய்வது / கேட்பது, பூஜை செய்வது, அவதார ரகசியங்களைச் சிந்திப்பது போன்ற நற்காரியங்களைச் செய்து, இன்று நமக்கு மிகவும் அபூர்வமாகக் கிடைத்துள்ள மனுஷ்ய ஜன்மாவை கடைசியாக ஆக்கிக் கொள்ள முடியும்.


ப்ரம்மா ஏன் நம்மைப்படைத்தார், படைக்காமல் இருந்திருந்தால் கஷ்டமே இருந்திருக்காதே என்று மனிதர்கள் நினைக்கிறார்கள்.  நம் பூர்வஜன்ம கர்மாவை அனுசரித்து கஷ்டங்கள் [சுகமும் துக்கமும்] ஏற்படுகிறது.


பகவான் நம்மை ஸ்ருஷ்டிக்கும் முன் வேதம் மற்றும் தர்ம சாஸ்திரங்களை ஏற்படுத்தியிருக்கிறார். 


எப்படி ஒருவன் புதிதாக தன் வீட்டை நகரத்திற்கு தூரத்தில் உள்ள, சரியான பாதைகளும், அக்கம்பக்கத்தில் நிறைய வீடுகளும் இல்லாத இடங்களில் கட்டி, கிரஹப்ரவேச பத்திரிகை அனுப்பும் போது, அத்துடனேயே எப்படி புது வீட்டுக்கு வருவது என்று ஒரு [ Diagram ] வரைபடம் வைத்து அனுப்புவது போல, நாம் கஷ்டப்படாமல் இருப்பதற்கு, வேதம், தர்மசாஸ்திரம் என்கிற DIAGRAM மும் கொடுத்தனுப்புகிறார்.


க்ரஹப்பிரவேச பத்திரிக்கையுடன் இருக்கிற DIAGRAM என்பதை நாம் போகும்போது எடுத்துக்கொண்டு போகாமல் வீட்டைக் கண்டுபிடித்து விடலாம் என்று வெகு அலட்சியமாகப் போய், அந்தப்பேட்டை முழுவதும் சுற்றிவிட்டு, சரியான பாதையை வழிகாட்ட ஜனங்கள் யாருமே இல்லாமல், வீட்டையும் நம்மால் சரிவர கண்டுபிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு அலைந்துவிட்டு, திரும்பி வரும்படி நேரிடும் அல்லவா! இதில் கிரஹப்பிரவேசத்திற்கு அழைத்தவரின் மேல் நாம் தப்பு ஏதும் சொல்லமுடியாது. 


அதேபோல் வேதம் + தர்ம சாஸ்திரப்படி [கடவுளால் அளிக்கப்பட்டுள்ள DIAGRAM படி] நம் வாழ்க்கையை நாம் அனுசரித்து நடத்தாவிட்டால் கஷ்டங்கள் தான் நிறைய ஏற்படும். நாம் செய்த தவறுக்கு பகவான் காரணம் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


பூமி வேண்டுமா? பூமிகாந்தன்; பணம் வேண்டுமா? வக்ஷஸ்தலத்தில் [மார்பில்] மஹாலக்ஷ்மி; அழகு வேண்டுமா? மன்மதனுக்கு பிதா; ஆரோக்யம் வேண்டுமா? தன்வந்த்ரி; வித்தை வேண்டுமா? வேதாந்த ப்ரவர்த்தகன். ஆகையால் நாம் பகவானையே எப்போதும் எதற்கும் பூஜிக்க வேண்டும்.    


நாம் இப்போது செய்யப்போகும் [கதாஸ்ரவணம் என்ற] காரியத்தின் பெருமையை தெரிந்து கொள்வது நல்லது. ’வைகுண்டத்திலிருந்து அவதாரம்’ என்றால் ’கீழே இறங்கி வருதல்’  என்று அர்த்தம்.


துஷ்ட சம்ஹாரமும் சிஷ்ட பரிபாலணமும் மட்டும் அவதாரத்தின் லக்ஷ்யம் இல்லை. கலியுகத்தில் பூலோகத்தில் பிறக்கும் ஜனங்கள் தன்னுடைய அவதாரக் கதைகளைப் படித்து, கேட்டு, சிந்தனம் செய்து, உய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தில் தான் ஸ்ரீராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணனாகவும் மற்றும் பல அவதாரங்கள் எடுத்து கதைகளை விஸ்தாரப்படுத்தினார்.


ஸ்ரீமத் ராமாயணத்தைக் கேட்கும் போது, கதை சொல்பவர் கீழ்க்கண்டவாறு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை வர்ணிப்பார்:


சிரஸ்ஸில் ஜடை, மார்பினில் மான்தோல், இடுப்பில் மரவுரி, இடது கையில் கோதண்டம், வலது கையில் அர்த்த சந்திரபாணம், ஸ்யாமளமான காந்தி, முதுகில் அம்பராத்தூணி, ஸாந்தமான வர்ச்சஸுடன், ஸீதாஸமேதனாய், லக்ஷ்மண ஸேவிதனாய், தண்டகாரண்ய பூமியில், நடமாடும் கல்பக விருக்ஷமாய், கோதண்டராமன் ப்ரகாசிக்கிறான். தண்டகாரண்ய பூமியில் மஹரிஷிகள் தரிஸனம் செய்து நமஸ்கரிக்கிறார்கள்.

இவ்வாறு பகவானின் அவதாரத் தோற்றத்தை வர்ணித்துச் சொல்வதனால், இது கேட்பவர்களின் காது வழியாக மனதிற்குள் புகுந்து, அவர்களுடைய மனதில் ஜன்மஜன்மாவாகப் படிந்து தேங்கியிருக்கிற, பாபங்களாகிய அழுக்குகள் துடைக்கப்படட்டும் என்பதற்காகவே சொல்லப்படுகிறது. 


இவ்வாறு பாபங்களாகிய அழுக்குகள் துடைக்கப்படும் போது, மனதாகிய கண்ணாடியில் பகவான் பளிச்செனப் பிரகாசிப்பார்.  


தொடரும்  

25 comments:

 1. இன்றைய காலைப்பொழுது இனிதே விடிந்தது, தங்கள் தயவால். மனம் நிறைத்தப் பதிவு. அறிந்துகொள்ள இன்னும் நிறைய உள்ளன. படங்களுடனான தெய்வீகப் பகிர்வுக்கு மிகவும் நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 2. Aha
  Very nice.
  Early in the morning read a very good post.
  viji

  ReplyDelete
 3. நன்றி.... வேறு என்ன சொல்வது! நன்றி.

  ReplyDelete
 4. நீங்கள் ஆன்மீகப் பதிவுகள் துவங்கியதில் இந்த பதிவுதான் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.நன்றி.

  ReplyDelete
 5. ஒவ்வொரு வரியுமே அருமை.எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அத்புதமான விஷயங்கள்.

  //இவ்வாறு பாபங்களாகிய அழுக்குகள் துடைக்கப்படும் போது, மனதாகிய கண்ணாடியில் பகவான் பளிச்செனப் பிரகாசிப்பார். //

  சிறப்பான வரிகள்..

  இந்தப்பதிவு பளிச்சென்று மனதில் பதிந்து விட்டது வை.கோ.சார்.மிக்க நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 6. நல்ல பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது சார்.

  தொடரட்டும் தங்கள் ஆன்மீக பதிவுகள்.

  ReplyDelete
 7. பாபங்களாகிய அழுக்குகள் துடைக்கப்படும் போது, மனதாகிய கண்ணாடியில் பகவான் பளிச்செனப் பிரகாசிப்பார்.

  பதிவில் பிரகாசிக்கும் முத்தாய்ப்பான வரிகள் ஜொலிக்கின்றன...

  ReplyDelete
 8. கிரஹப்ரவேச பத்திரிகை அனுப்பும் போது, அத்துடனேயே எப்படி புது வீட்டுக்கு வருவது என்று ஒரு [ Diagram ] வரைபடம் வைத்து அனுப்புவது போல, நாம் கஷ்டப்படாமல் இருப்பதற்கு, வேதம், தர்மசாஸ்திரம் என்கிற DIAGRAM மும் கொடுத்தனுப்புகிறார்.

  அருமையாய் வரைபடம் மனதில் வரைந்து பதிந்த ரசனையான வரிகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. பூமி வேண்டுமா? பூமிகாந்தன்;
  பணம் வேண்டுமா? வக்ஷஸ்தலத்தில் [மார்பில்] மஹாலக்ஷ்மி;
  அழகு வேண்டுமா? மன்மதனுக்கு பிதா; ஆரோக்யம் வேண்டுமா? தன்வந்த்ரி; வித்தை வேண்டுமா? வேதாந்த ப்ரவர்த்தகன்.

  ஆகையால் நாம் பகவானையே எப்போதும் எதற்கும் பூஜிக்க வேண்டும்.

  மனதில் பதிந்துகொள்ளவேண்டிய உன்னத பயன்மிகு பகிர்வுகள்.. நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 10. கேட்பவர்களின் காது வழியாக மனதிற்குள் புகுந்து, அவர்களுடைய மனதில் ஜன்மஜன்மாவாகப் படிந்து தேங்கியிருக்கிற, பாபங்களாகிய அழுக்குகள் துடைக்கப்படட்டும் என்பதற்காகவே சொல்லப்படுகிறது.


  மிக அருமையான தெளிவான விளக்கம்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. நன்றிகள்...

  ReplyDelete
 11. போங்க ஸார்..படிச்சா சாமியாராப் போயிடுவோமோன்னு பயமாயிருக்கு?

  ReplyDelete
 12. நல்ல பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது சார்.

  தொடரட்டும் தங்கள் ஆன்மீக பதிவுகள்.

  ReplyDelete
 13. கிரஹப்ரவேச பத்திரிகை அனுப்பும் போது, அத்துடனேயே எப்படி புது வீட்டுக்கு வருவது என்று ஒரு [ Diagram ] வரைபடம் வைத்து அனுப்புவது போல, நாம் கஷ்டப்படாமல் இருப்பதற்கு, வேதம், தர்மசாஸ்திரம் என்கிற DIAGRAM மும் கொடுத்தனுப்புகிறார்.

  very nice example.

  ReplyDelete
 14. அருமையான பதிவு.
  நிறைய விஷயங்கள்.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 15. மனிதர்கள் தங்களுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்கிக்கொள்ள நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள முடியும். பகவத் பஜனம் செய்வது, பகவானுடைய நாம ஸங்கீர்த்தனம் செய்வது / கேட்பது, பூஜை செய்வது, அவதார ரகசியங்களைச் சிந்திப்பது போன்ற நற்காரியங்களைச் செய்து, இன்று நமக்கு மிகவும் அபூர்வமாகக் கிடைத்துள்ள மனுஷ்ய ஜன்மாவை கடைசியாக ஆக்கிக் கொள்ள முடியும்.//

  உண்மை, உண்மை.
  நல்ல விஷயங்களை உங்கள் பதிவின் மூலம் படித்து வருவதே புண்ணியம் தான்.

  இணையம் வேலை செய்யவில்லை, சில நாட்கள் அதனால் பதிவை தொடர்ந்து படிக்க முடியவில்லை.

  இனி தொடர்ந்து படிக்க வேண்டும்.

  ஊர் பயணங்கள் வேறு இடையில் படிக்க முடியாமல் இருக்கிறது.

  எல்லா பதிவுகளையும் முடிந்த போது படித்து விடுகிறேன்.

  ReplyDelete
 16. மனதின் அழுக்குகள் அகன்றாலே போதும், நாம் ஆண்டவனை அணுகி விட்டோம் என்று பொருள்.

  ReplyDelete

 17. துஷ்ட சம்ஹாரமும் சிஷ்ட பரிபாலணமும் மட்டும் அவதாரத்தின் லக்ஷ்யம் இல்லை. கலியுகத்தில் பூலோகத்தில் பிறக்கும் ஜனங்கள் தன்னுடைய அவதாரக் கதைகளைப் படித்து, கேட்டு, சிந்தனம் செய்து, உய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தில் தான் ஸ்ரீராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணனாகவும் மற்றும் பல அவதாரங்கள் எடுத்து கதைகளை விஸ்தாரப்படுத்தினார்.

  ராமாயணம் மனுஷா எப்படி வாழவேண்டும் என்பதை சொல்கிரது. மஹாபாரதம் நாம் எப்படி வாழக்கூடாது என்று சொல்கிரது. என்று தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 29, 2015 at 6:13 PM

   **துஷ்ட சம்ஹாரமும் சிஷ்ட பரிபாலணமும் மட்டும் அவதாரத்தின் லக்ஷ்யம் இல்லை. கலியுகத்தில் பூலோகத்தில் பிறக்கும் ஜனங்கள் தன்னுடைய அவதாரக் கதைகளைப் படித்து, கேட்டு, சிந்தனம் செய்து, உய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தில் தான் ஸ்ரீராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணனாகவும் மற்றும் பல அவதாரங்கள் எடுத்து கதைகளை விஸ்தாரப்படுத்தினார்.**

   //இராமாயணம் மனுஷா எப்படி வாழவேண்டும் என்பதை சொல்கிறது. மஹாபாரதம் நாம் எப்படி வாழக்கூடாது என்று சொல்கிறது ..... என்று தோன்றுகிறது.//

   ஒரேயடியாக அப்படிச்சொல்லிவிட முடியாது. எதிலும் நல்லவைகளும் உண்டு, நல்லது அல்லாததும் உண்டு. நாம் நமக்கு எது நல்லதோ அதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு வாழ்ந்தால் நல்லதாகவும், நிம்மதியாகவும் இருக்கக்கூடும், என நான் நினைக்கிறேன்.

   தங்களின் அன்பு வருகைக்கும், யோசிக்க வைக்கும் அழகுக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete
 18. அவைகள் அந்த மாதிரிக் கஷ்டங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் முடியாது. தொழிற்சங்கங்கள் ஏற்படுத்திக்கொண்டு தங்கள் குறைகளைச்சொல்லி [Strike] வேலை நிறுத்தம், கொடிபிடித்தல், பொதுக்கூட்டங்களில் பேசுதல் போல காரியங்களைச் செய்ய முடியாது. //

  எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டீர்கள்.

  நம் படைப்பின் அருமையை உங்கள் இந்த வரிகள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.

  ReplyDelete
 19. கமண்டுக மூலமா வெசயம் வெளங்குதான்னு பாத்தேன் யாருமீ பாவ புண்ணியத்துக்கு பயந்து வாளனும்னு தோணுது.

  ReplyDelete
  Replies
  1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   Delete
 20. புதுவீட்டு கிருஹபிரவேசத்துக்கு டயகராம் பாக்காம வழிகண்டுபிடித்து போகமுடியாதது போல தர்மசாஸ்த்திரப்படி நாம் நடக்க பகவான் டயக்ராம் போட்டுதந்திருப்பதை உணர்ந்து நடக்கணும். சரியான உதாரணம்

  ReplyDelete
 21. படிப்பினையுடன் கூடிய பதிவு. படங்கள் அழகு...

  ReplyDelete
 22. //இவ்வாறு பகவானின் அவதாரத் தோற்றத்தை வர்ணித்துச் சொல்வதனால், இது கேட்பவர்களின் காது வழியாக மனதிற்குள் புகுந்து, அவர்களுடைய மனதில் ஜன்மஜன்மாவாகப் படிந்து தேங்கியிருக்கிற, பாபங்களாகிய அழுக்குகள் துடைக்கப்படட்டும் என்பதற்காகவே சொல்லப்படுகிறது.
  // அருமை! நன்றி ஐயா!

  ReplyDelete
 23. அருமையான பதிவு. மிக்க நன்றி.

  ReplyDelete