About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, March 2, 2012

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 4 of 8 ]


ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-15



ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை
பகுதி 4 of  8



11.சுந்தர காண்டத்தில் ராமாயணத்தின் எல்லாக் காண்டங்களும் அடங்கியுள்ளன. அதனால் தான் இதற்கு இவ்வளவு பெருமை. ராமர் கதை முழுவதும் இதில் பல இடங்களில் வந்து விடுகிறது.

12.தர்மத்தில் நம்பிக்கையுடனும், ஆகார நியமம்களை அனுஷ்டித்தும், உலகத்தில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறான விஷயங்களில் நாமும் ஈடுபடாமலும் இருந்து வந்தால், எப்படி இலங்கையில் ஸ்ரீ விபீஷ்ணன் ஒருவர் மட்டும் ஸ்ரீ ராமரிடத்தில் பக்தியுடன் இருந்த காரணத்தால், ஸ்ரீ ஆஞ்ஜநேயர் இலங்கையில் எல்லாவற்றையும் எரிக்கும் போது, விபீஷணரின் அரண்மனையை மட்டும் எரிக்காமல் விட்டாரோ, அதே போல இந்தக் கலியுகத்தில் நற்குணத்துடன் பகவானிடம் பக்தி செய்பவனை, கண்டிப்பாகக் காப்பாற்றுவார் என்று தெரிந்து கொள்ளலாம்.

13.சீதாதேவி ஆஞ்ஜநேயரிடம் “மறைவான இடத்தில் சற்று இளைப்பாறி விட்டுப் போ” என்று சொல்கிறாள். நம் கார்யமாக ஒருவர் செல்கிறார் என்றால் ‘ஸ்ரமத்தைப் பார்க்காமல்’ என்று தானே நாமெல்லாம் சொல்வோம்? ஆனால் சீதாதேவி சொல்வது எப்படி இருக்கிறது! பகவானின்/அம்பாளின் கருணை மனுஷ்யர்களுக்கு வருமா?

14.சீதை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணினாள். அப்படிச் செய்திருந்தால் அவளுக்கு ஆஞ்ஜநேயரின் தரிசனம் கிடைத்திருக்குமா? 

எவ்வளவு துக்கம் வந்தாலும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. பல வருஷங்கள் கஷ்டங்களை அனுபவித்தாலும் ஒரு நாள் சுகம் வரும். இந்த நம்பிக்கையுடன் ஜீவித்திருக்க வேண்டும். ஆனால் துக்கத்தை அனுபவிக்கும் போதும் பாபகார்யங்களைச் செய்யவேகூடாது. அப்போது தான் சுகம் வரும்.

15.ஆஞ்ஜநேயர் சீதையிடம் “சுக்ரீவனின் வானர சைன்யத்தில் என்னைக் காட்டிலும் பலசாலிகள் இருக்கிறார்கள். என்னைவிட தாழ்ந்தவர்கள் ஒருவரும் இல்லை” என்று சொல்கிறார். இப்படிப்பட்ட வினயம் வரணும்.

அவர் இதை உணர்ந்து சொல்கிறாரே தவிர, அவையடக்கத்திற்காகக் கூறவில்லை. 

தன்னிடம் யோக்யதை ஒன்றுமே இல்லை, நான் மிகவும் சாதாரணமானவன் தான்,  என்று உணர்ந்து சொல்பவரிடத்தில் தான், எல்லா யோக்யதைகளும் இருக்கும். 

ஆஞ்ஜநேயருக்கு இந்த பாவனை வந்ததற்குக் காரணம் அவர் ‘100 யோஜனை விஸ்தீரணமான ஸமுத்திரத்தைத் தாண்டி வந்தோம்’ என்ற எண்ணமே இல்லாமல் இருந்தார். 

மேலும், அவர் தன்னைவிடத் தாழ்ந்தவர்கள் ஒருவரும் இல்லை என்று சொல்வதற்குக் காரணம், ‘என்னை விட எளியோர் யாரும் இல்லை; அதனால் தான் என்னை தூதராக அனுப்பியிருக்கிறார்’ என்று சொல்கிறார்.




தொடரும்   

25 comments:

  1. இந்தக் கலியுகத்தில் நற்குணத்துடன் பகவானிடம் பக்தி செய்பவனை, கண்டிப்பாகக் காப்பாற்றுவார்

    ReplyDelete
  2. எவ்வளவு துக்கம் வந்தாலும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. பல வருஷங்கள் கஷ்டங்களை அனுபவித்தாலும் ஒரு நாள் சுகம் வரும். இந்த நம்பிக்கையுடன் ஜீவித்திருக்க வேண்டும். ஆனால் துக்கத்தை அனுபவிக்கும் போதும் பாபகார்யங்களைச் செய்யவேகூடாது. அப்போது தான் சுகம் வரும்.

    அருமையான பகிர்வுகள்...

    ReplyDelete
  3. இப்படிப்பட்ட வினயம் வரணும்.
    அவர் இதை உணர்ந்து சொல்கிறாரே தவிர, அவையடக்கத்திற்காகக் கூறவில்லை.
    தன்னிடம் யோக்யதை ஒன்றுமே இல்லை, நான் மிகவும் சாதாரணமானவன் தான், என்று உணர்ந்து சொல்பவரிடத்தில் தான், எல்லா யோக்யதைகளும் இருக்கும்.

    விநயம் அனுமனின் தனிக்குணம்...

    ReplyDelete
  4. மிக் உன்னத்மான வாழ்வியல் தத்துவங்களை ரச்னையுடன் பகிர்ந்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  6. தன்னிடம் யோக்யதை ஒன்றுமே இல்லை, நான் மிகவும் சாதாரணமானவன் தான், என்று உணர்ந்து சொல்பவரிடத்தில் தான், எல்லா யோக்யதைகளும் இருக்கும்
    What a real ward!!!!!!
    Nice post sir.
    viji

    ReplyDelete
  7. //ஆனால் துக்கத்தை அனுபவிக்கும் போதும் பாபகார்யங்களைச் செய்யவேகூடாது. அப்போது தான் சுகம் வரும்.//

    அருமை..

    //தன்னிடம் யோக்யதை ஒன்றுமே இல்லை, நான் மிகவும் சாதாரணமானவன் தான், என்று உணர்ந்து சொல்பவரிடத்தில் தான், எல்லா யோக்யதைகளும் இருக்கும்.//

    சிறப்பான விஷயம்.
    நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  8. Sir By mistake I hit wrong button and I deleted your msg. if you can send it back again. Really im sorry

    ReplyDelete
  9. ‘என்னை விட எளியோர் யாரும் இல்லை; அதனால் தான் என்னை தூதராக அனுப்பியிருக்கிறார்’ என்று சொல்கிறார்.//

    என்ன ஒரு பணிவு! என்ன ஒரு விநயம்!

    அனுமன் மிக மிக உயந்தவர். அவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

    நன்றி பகிர்வுக்கு சார்.

    ReplyDelete
  10. nice post gopu sir :-) thank you

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு சார்.

    //நற்குணத்துடன் பகவானிடம் பக்தி செய்பவனை, கண்டிப்பாகக் காப்பாற்றுவார்//

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  12. ரொம்ப ரொம்ப அருமையான தெரிந்து கொள்ள வேண்டிய அரிய குணங்கள்....கடைபிடிக்க வேண்டியது.... நன்றி.....ரொம்ப நன்றி.

    ReplyDelete
  13. ரொம்ப ரொம்ப அருமையான தெரிந்து கொள்ள வேண்டிய அரிய குணங்கள்....கடைபிடிக்க வேண்டியது.... நன்றி.....ரொம்ப நன்றி.

    ReplyDelete
  14. பணிவே உயர்ந்தவனுக்கு லட்சணம்.

    ReplyDelete
  15. அனுமாரிடம் நாம் கற்றுக் கொள் நிறய நல்ல விஷயங்கள் இருக்கு

    ReplyDelete
  16. தன்னிடம் யோக்யதை ஒன்றுமே இல்லை, நான் மிகவும் சாதாரணமானவன் தான், என்று உணர்ந்து சொல்பவரிடத்தில் தான், எல்லா யோக்யதைகளும் இருக்கும். //

    எங்க கோபு அண்ணா மாதிரி

    ReplyDelete
  17. அனுமார் சாமிபத்தி சொல்லினிங்க பெல கமண்டு அல்லாரும் அததான சொல்லினாங்க

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா :)

      Delete
  18. சுந்தர காண்டத்தில் ராமாயண கதை முழுவதுமே அடங்கி இருப்பது நல்ல விஷயம் ஆஞ்சனேயரின் மகிமைகள் சைல்லி மாளாதுதான்

    ReplyDelete
  19. தன்னிடம் யோக்யதை ஒன்றுமே இல்லை, நான் மிகவும் சாதாரணமானவன் தான், என்று உணர்ந்து சொல்பவரிடத்தில் தான், எல்லா யோக்யதைகளும் இருக்கும். /// ஆணித்தரமான உண்மை.

    ReplyDelete
  20. தன்னிடம் யோக்யதை ஒன்றுமே இல்லை, நான் மிகவும் சாதாரணமானவன் தான், என்று உணர்ந்து சொல்பவரிடத்தில் தான், எல்லா யோக்யதைகளும் இருக்கும்.


    அதனால் தான் தாங்கள் நான் சாதாரணமானவன் என்று கூறிக் கொள்கிறீர்களோ! அருமையான பதிவு!

    ReplyDelete
  21. சுந்தர காண்டமே அருமை.விளக்கம் அதை விட.

    ReplyDelete
    Replies
    1. Rengarajan V February 28, 2020 at 11:16 AM

      //சுந்தர காண்டமே அருமை.விளக்கம் அதை விட.//

      வாங்கோ வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Sir.

      [ I hope you are from 2D, Sivashakthi Towers ! ]

      Delete
  22. சுந்தர காண்டமே அருமை.விளக்கம் அதை விட.

    ReplyDelete
    Replies
    1. Rengarajan V February 28, 2020 at 11:16 AM

      //சுந்தர காண்டமே அருமை.விளக்கம் அதை விட.//

      வாங்கோ வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Sir.

      [ I hope you are from 2D, Sivashakthi Towers ! ]

      Delete