About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, March 5, 2012

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 7 of 8 ]




ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-18



ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை
பகுதி 7 of  8





22. கீழே சில முக்கியமான ஸ்லோகங்களையும் அதன் விசேஷ அர்த்தங்களையும் [ஸ்ரீ ஸ்வாமிகள் அனுபவித்தபடி] பார்க்கலாம்.

ப்ரஸீத ஸுமஹா பாஹோ த்ராயஸ்வ ஹரிஸத்தமா !

லங்கிணி ஹனுமாரைப் பார்த்து சொல்கிறார்:


”பெருந்தோளுடையவரே! என் மீது அருள் புரியும் ! 
சாந்தரான வானரச்ரேஷ்டரே! என்னைக் காத்தருளும் !!


இந்த வரியை நாமும் சொல்லி ஆஞ்ஜநேயரைப் பிரார்த்தித்துக் கொள்ளலாம் என்று ஸ்வாமிகள் சொல்லிவிட்டு, அவர் பாராயணம் செய்யும்போது இந்த வரியை 5 அல்லது 6 தடவைகள் படிப்பார்.


ஸர்க்கம் 4 - ஸ்லோகம் 3 


சத்ருக்களின் இடங்களுக்கு நுழையும் போது இடது காலை முதலில் வைக்க வேண்டும் என்று, ஹனுமார் தன் இடது காலை வைத்து லங்கைக்குள் புகுந்தார். 


இதை follow செய்து தான் Military இல் Left  Right என்று சொல்லி March செய்கிறார்கள்.


ஸர்க்கம் 12 - ஸ்லோகம் 10 


“அனிர்வேத: ஸ்ரீயோ மூலம் அனிர்வேத: பரம் ஸுகம்
அனிர்வேதோ ஹி ஸததம் ஸர்வார்த்தேஷு ப்ரவர்தக:


மனம் தளராமையே செல்வத்திற்குக் காரணம். மனம் தளராமையே மேலான சுகம். எப்போதும் எல்லா விஷயங்களிலும் முயலும்படி செய்வது மனம் தளராமையே !





ஸர்க்கம் 11 - ஸ்லோகம் 42-44 


அந்தப்புரத்தில் ஸ்திரீகள் இருக்கும் இடங்களில் சீதாதேவியை ஹனுமார் தேடி வரும்போது, தனக்கு மனம் அடங்கியிருக்கிறது என்று சொல்லிவிட்டு, சீதாதேவி ஸ்திரீ ஜாதியைச் சேர்ந்தவளாக இருப்பதால், ஸ்திரீகள் இருக்கும் இடங்களில் தான், நான் போய்த்தேட வேண்டும். அதனால் தான் அந்த இடங்களுக்கு [மனம் மாறுதல் அடையக்கூடிய இடங்களுக்கு] போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது என்று சொல்லுகிறார்.


இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் நம் மனதிற்கு நாமே Certificate கொடுத்துக் கொள்ளக்கூடாது. மனது நம் Control இல் இருக்கிறது என்று ஸ்திரீகளுடன் பழகக்கூடாது. ஸ்திரீகளுடன் சங்கம் வைத்துக்கொள்ளக் கூடாது. காரணம் இல்லாமல் அவர்கள் இருக்கும் இடங்களுக்குப் போகக்கூடாது.


ஸர்க்கம் 13 - முக்கிய ஸ்லோகம் 60 


”நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை !
நமோஸ்து ருத்ரேந்த்ர யமானிலேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க மருத்கணேப்ய: !


இந்த ஸ்லோகத்தை ஆவர்த்தி செய்தால் காணாமல் போனவர் திரும்பி வருவார். விவாஹம் ஆகாதவர்களுக்கு விவாஹம் நடைபெறும். 


ஸர்க்கம் 13 - ஸ்லோகம் 65--68 படித்தால் கார்ய ஸித்தி ஏற்படும் 


ஹனுமார் எல்லா ரிஷிகளையும் தேவர்களையும் காரிய ஸித்தியை அளிக்கும்படி இந்த ஸ்லோகங்களில் வேண்டுகிறார்.


ஸர்க்கம் 13 - ஸ்லோகம் 53 


“யாவத் சீதாம் ஹி பஸ்யாமி .......... ”


சீதாதேவியைப் பார்க்கும்வரை விடாமல் திரும்பித் திரும்பி இந்த லங்கையில் தேடிக்கொண்டே இருப்பேன் என்று ஸ்ரீ ஹனுமார் சொல்லுகிறார். 


நாம் பலப்ராப்தி வரை (பலன் கிடைக்கும் வரை) பகவத் பஜனத்தை விடாமல் செய்து வரவேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். 


பலனை உத்தேசித்து எந்த ஸ்தோத்ரம், நாமஜபம் செய்தாலும் விடாமல் செய்ய வேண்டும். கண்டிப்பாக பலன் அடையலாம். 


ஸர்க்கம் 34 - ஸ்லோகம் 51 


நாஹமஸ்தி ததாதேவி யதா மாமவகக்சளி
விஸங்கா த்யஜ்யதா மேஷா ஸ்ரத்தஸ்வ வததோமம !

”நான் ராவணன் இல்லை. சந்தேகத்தை விடுங்கள். என் பேச்சில் நம்பிக்கை வையுங்கள்” என்று சீதாதேவியிடம் ஆஞ்ஜநேயர் சொல்லும் ஸ்லோகம். 


ஒருவரிடம் நாம் ஏதாவது முக்கிய காரியமாக பேசப்போனால், இந்த ஸ்லோகத்தை மனதினால் சொல்லிவிட்டு, பேச ஆரம்பித்தால், அவர்கள் நம் பேச்சைக் கேட்பார்கள்.


ஸ்ரீ ஸர்க்கம் 36 - ஸ்லோகம் 7 


”விக்ராந்தஸ்த்வம் ஸமர்த்தஸ்வம்
ப்ராக்ஞயஸ்த்வம் வானரோத்தம” 

ஸ்ரீ ஆஞ்ஜநேயரை சீதாதேவி இந்த வாக்கியத்தால் கொண்டாடுகிறாள். இந்த வரியை சொல்லிக்கொண்டு Interview க்குச் சென்றால் ஜயம் ஏற்படும்.

ஸர்க்கம் 39 - ஸ்லோகம் 16 

“அப்யர்கமபி பர்ஜன்யம் அபி வைவஸ்வதம் யமம்”


ஸ்ரீ ஆஞ்ஜநேயர் தேவியிடம் சொல்கிறார்: ”ஸ்ரீராமர் யமதர்மராஜனையும் தள்ளி நிற்கச் சொல்லுவார். யமனையும் ஜெயிப்பார்”. 

இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் கடுமையான வியாதியிலிருந்து  காப்பாற்றப்படுவோம்.

ஸர்க்கம் 62 - ஸ்லோகம் 1+2 

“அவ்யக்ர மனஸோ யூயம் மதுசேவத வானரா:
அஹமாவா ரயிஷயாமி யுஷ்மாகம் பரிபந்தின: “

ஸ்ரீ ஆஞ்ஜநேயர் இக்கரைக்கு வந்து மற்ற வானரர்களைப் பார்த்து, “வானரர்களே! கவலைப்படாமல் தேனைப் பருகுங்கள். உங்களுக்கு இடையூறு செய்பவர்களை நான் தடுத்து நிறுத்துகிறேன்” என்று சொல்லுகிறார். 

இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் ஆஞ்ஜநேயரைப் பஜித்து வந்துகொண்டு, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டும், பகவத் திருவடி தாமரையிலிருந்து பெருகும் தேனைப் பருகிக் கொண்டிருந்தால், நமக்கு வேறு ஒன்றும் தடைவராமல் மற்ற நம்முடைய லெளஹீக காரியங்களை ஸ்ரீ ஹனுமார் பார்த்துக்கொள்வார்; நாம் எதைப்பற்றியும் கவலைபடாமல் இருக்கலாம்.



தொடரும் 

22 comments:

  1. சத்ருக்களின் இடங்களுக்கு நுழையும் போது இடது காலை முதலில் வைக்க வேண்டும் என்று, ஹனுமார் தன் இடது காலை வைத்து லங்கைக்குள் புகுந்தார்.


    இதை follow செய்து தான் Military இல் Left Right என்று சொல்லி March செய்கிறார்கள்.

    அருமையான தத்துவ விளக்கம்..

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு.

    //சத்ருக்களின் இடங்களுக்கு நுழையும் போது இடது காலை முதலில் வைக்க வேண்டும் என்று, ஹனுமார் தன் இடது காலை வைத்து லங்கைக்குள் புகுந்தார்.


    இதை follow செய்து தான் Military இல் Left Right என்று சொல்லி March செய்கிறார்கள்.//

    புதுத் தகவல்.

    ReplyDelete
  3. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் சார்..

    http://minminipoochchigal.blogspot.in/2012/03/blog-post_05.html

    ReplyDelete
  4. ”நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாயதேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை !நமோஸ்து ருத்ரேந்த்ர யமானிலேப்யோநமோஸ்து சந்த்ரார்க மருத்கணேப்ய: !

    இந்த ஸ்லோகத்தை ஆவர்த்தி செய்தால் காணாமல் போனவர் திரும்பி வருவார். விவாஹம் ஆகாதவர்களுக்கு விவாஹம் நடைபெறும்.

    பலன் தரும் அருமையான ஸ்லோகப்பகிர்வுக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  5. நாம் ஆஞ்ஜநேயரைப் பஜித்து வந்துகொண்டு, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டும், பகவத் திருவடி தாமரையிலிருந்து பெருகும் தேனைப் பருகிக் கொண்டிருந்தால், நமக்கு வேறு ஒன்றும் தடைவராமல் மற்ற நமுடைய லெளஹீக காரியங்களை ஸ்ரீ ஹனுமார் பார்த்துக்கொள்வார்; நாம் எதைப்பற்றியும் கவலைபடாமல் இருக்கலாம்.

    அருமையான பயன் தரும் விளக்கம்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. I am daily chanting Navarathna sloka(9 important slokas from Sundrakandam). You are also mentioning the same slokam.
    I wish many can benefit from the post.
    நாம் ஆஞ்ஜநேயரைப் பஜித்து வந்துகொண்டு, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டும், பகவத் திருவடி தாமரையிலிருந்து பெருகும் தேனைப் பருகிக் கொண்டிருந்தால், நமக்கு வேறு ஒன்றும் தடைவராமல் மற்ற நமுடைய லெளஹீக காரியங்களை ஸ்ரீ ஹனுமார் பார்த்துக்கொள்வார்; நாம் எதைப்பற்றியும் கவலைபடாமல் இருக்கலாம்.
    true. 100% true.
    viji

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு... இப்பல்லாம் உங்க பகிர்வுகளில் நிறைய படங்கள் போட்டு கலக்கறீங்க!

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு... இப்பல்லாம் உங்க பகிர்வுகளில் நிறைய படங்கள் போட்டு கலக்கறீங்க!

    ReplyDelete
  9. மனம் தளராமையே செல்வத்திற்குக் காரணம். மனம் தளராமையே மேலான சுகம். எப்போதும் எல்லா விஷயங்களிலும் முயலும்படி செய்வது மனம் தளராமையே !//

    ஆம், மனபலம் மிகவும் முக்கியம்.
    தோல்வியை கண்டு துவளாமல் முன்னேறி சென்றால் தானே வெற்றி கிடைக்கும்.

    ReplyDelete
  10. சீதாதேவியிடம் ஆஞ்ஜநேயர் சொல்லும் ஸ்லோகம்.


    ஒருவரிடம் நாம் ஏதாவது முக்கிய காரியமாக பேசப்போனால், இந்த ஸ்லோகத்தை மனதினால் சொல்லிவிட்டு, பேச ஆரம்பித்தால், அவர்கள் நம் பேச்சைக் கேட்பார்கள்.//

    ஆஹா நல்ல செய்தி !

    நல்ல காரியங்கள் நடை பெற இதை சொல்லலாம்.

    நன்றி.
    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  11. நாம் பலப்ராப்தி வரை (பலன் கிடைக்கும் வரை) பகவத் பஜனத்தை விடாமல் செய்து வரவேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    மிக அருமையான வாழ்விற்கு பயனுள்ள பகிர்வு அளித்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  12. //”பெருந்தோளுடையவரே! என் மீது அருள் புரியும் !
    சாந்தரான வானரச்ரேஷ்டரே! என்னைக் காத்தருளும் !!
    ///

    நன்றி ....

    ReplyDelete
  13. இன்று நிறைய ஸ்லோகங்கள் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்

    ReplyDelete
  14. அருமை, அருமை, அருமை

    BETTER LATE THAN NEVER என்று சந்தோஷப் பட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. ?????---நல்லாருக்குது

    ReplyDelete
  16. படங்கள் மிகச்சிறப்பாக போடுகிறீர்கள் எல்லா ஸ்லோகங்களும் நிதானமாக ஒருநாள் படிக்கறேன் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  17. ”நான் ராவணன் இல்லை. சந்தேகத்தை விடுங்கள். என் பேச்சில் நம்பிக்கை வையுங்கள்” என்று சீதாதேவியிடம் ஆஞ்ஜநேயர் சொல்லும் ஸ்லோகம்.


    ஒருவரிடம் நாம் ஏதாவது முக்கிய காரியமாக பேசப்போனால், இந்த ஸ்லோகத்தை மனதினால் சொல்லிவிட்டு, பேச ஆரம்பித்தால், அவர்கள் நம் பேச்சைக் கேட்பார்கள்.// நம் ஆழ்மனதின் சக்தி அபாரமானது. முதல் படம்...அட்டகாசம்...ஜெய் ஆஞ்சனேயா.!!

    ReplyDelete
  18. அரிய தகவல்கள்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete