About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, March 23, 2012

ஒலிகள் தரும் வலிகள்



ஒலிகள் தரும் வலிகள்

நாம் சாலையில் செல்லும் போது பல வாகனங்களின் ஒலிகளைக் கேட்டிருப்போம். பெரும்பாலான ஒலிகள் நம் காதுகளுக்குத் தொல்லை கொடுப்பதாகவே உணர்வோம். 

எல்லா வாகனங்களிலுமே எஞ்சின் இயங்குவதால் ஏற்படும் ஒலியைக் குறைப்பதற்கு SILENCER என்று சொல்லப்படும் கருவிகளைப் பொருத்தியிருப்பார்கள். அதையும் மீறி ஒலிகள் ஏற்பட்டு நமக்குத் தொல்லை கொடுப்பதுண்டு. 

மோட்டார் சைக்கிள்களில் [BIKE] இந்த சைலன்ஸர் என்ற கருவி சரியாகப் பொருத்தப்படாமல் இருந்தாலோ அல்லது பொருத்தப்பட்ட அது கீழே தனியாக விழுந்துவிட்டாலோ ஒரே டப....டப....டப...டப என்று பேரிரைச்சலை உண்டு பண்ணி விடுவதை நம்மில் பலரும் அறிவோம்.

இந்த சைலன்ஸர் என்ற கருவியின் உள்ளே சேரும் கார்பன் கரியை அவ்வப்போது சுத்தம் செய்து பராமரிக்காவிட்டால், அது நம்மில் பலரையும் காலில் பழுக்கப்பழுக்க சூடு போட்டு விடுவதும் உண்டு.








[மிகவும் உயரத்தில் விமானங்கள் பறக்கும் போதே, ஒலியைக் கட்டுப்படுத்தும் கருவிகள் அதில் வைத்திருந்துமே, அதன் ஒலியை நாம் இங்கு தரையிலிருந்து கேட்க முடிகிறது.]

ஆகாய விமானங்களில் இந்த ஒலியைக் கட்டுப்படுத்தும் கருவியே  SOUND BARRIER என அழைக்கப்படுகிறது. இந்த சவுண்ட் பேரியர் என்ற கருவியை நம்மில் பலரும் இதுவரை பார்த்திருக்க வாய்ப்பு இருக்காது. அதை இதோ இங்கே இப்போது படத்தில் பாருங்கள்:

Actual photos of the  sound barrier  



This phenomenon only  happens at the instant an 
Aircraft breaks the sound  barrier 




And it literally  appears like the aircraft 
goes through a wall.  


பறக்கும் விமானம் ஒரு சுவற்றில் மோதுவது 
போன்ற அரிய தோற்றம் இது




பறக்கும் ஆகாய விமானத்தில் ஒலிக்கட்டுப்பாட்டு 
கருவிகள் செயல்படாமல் போகும் சமயங்களில் மட்டுமே 
இத்தகைய அரிய காட்சிகளை நாம் காணமுடியுமாம்.






38 comments:

  1. வாவ்.. என்ன ஒரு அற்புதமான புகைப்பட காட்சிகள்.. பதிவும் அது கொண்ட சாரம்சமும் அருமை..

    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  2. அருமையான புகைப்படங்கள்.வித்தியாசமான பகிர்வு.

    ReplyDelete
  3. காணக்கிடைக்காத அருமையான படங்களின் பகிர்வும், தகவல்களும் வியக்கவைக்கின்றன்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. அதிக ஒலியும் கூட சுற்றுப்புறத்தை மாசு படுத்தும் காரணி.. கட்டுப்படுத்துதல் அவசியம்..

    ReplyDelete
  5. வணக்கம்! ” ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும் ” இப்போதோ நிறைய பேர் வலி கொடுக்கிறார்கள். மண்ணிலும் விண்ணிலும் ஒலியைக் கட்டுப்படுத்தும் சைலன்ஸர்களைப் பற்றிய தகவல்களை படத்தோடு தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. arputhamaana padangal!
    arumai!
    arumai!

    ReplyDelete
  7. வாவ்1படங்கள் அருமை.!பைக்கில் சைலன்ஸரைக் கழட்டி விட்டுச் சில இளைஞர்கள் பறப்பார்கள் பாருங்கள்!சப்தம் தாங்க முடியாது.

    ReplyDelete
  8. Fine post sir, and the pictures are awesome.
    viji

    ReplyDelete
  9. அருமையான தகவல்களும், புகைப்படங்களும், இரண்டுமே பிரமாதம் சார்.

    ReplyDelete
  10. அற்புதமான படங்கள்....
    பைக் சப்தங்கள் தான் வலி தருகிறதா என்ன?
    வித விதமான reverse horn சப்தங்கள் எந்த அளவு எரிச்சலும் மன உளைச்சலும் எற்படுதுகிருது...பாருங்கள்...

    நாய் ஊளை இடுவது போல ஒரு கார் அலறுகிறது...குழந்தை அழுவது போல இன்னொரு வண்டி கதறுகிறது...ஒரு கார் அய்யய்யோ அய்யய்யோ... என்றே கத்துகிறது...இதெல்லாம் பாதசாரிகளையும்,பிற வாகன ஓட்டிகளையும் தூக்கி வாரிப்போ டசெய்து விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றன

    ReplyDelete
  11. Usha Srikumar said...
    //அற்புதமான படங்கள்....//

    மிக்க நன்றி, மேடம்.

    //பைக் சப்தங்கள் தான் வலி தருகிறதா என்ன?
    வித விதமான reverse horn சப்தங்கள் எந்த அளவு எரிச்சலும் மன உளைச்சலும் எற்படுதுகிருது...பாருங்கள்...

    நாய் ஊளை இடுவது போல ஒரு கார் அலறுகிறது...குழந்தை அழுவது போல இன்னொரு வண்டி கதறுகிறது...ஒரு கார் அய்யய்யோ அய்யய்யோ... என்றே கத்துகிறது...இதெல்லாம் பாதசாரிகளையும்,பிற வாகன ஓட்டிகளையும் தூக்கி வாரிப்போ டசெய்து விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றன//

    தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தான் மேடம்.

    நானே இவற்றைக்கேட்டு அடிக்கடி பயந்தும் எரிச்சலாகியும் போனதுண்டு.

    என் வீட்டுக்குள் நான் இருந்தாலே [இரண்டாவது மாடியில் சாலையை நோக்கிய வீடு] சாலையில் எழுப்பப்படும் இதுபோன்ற அலறல்களைக் கேட்கும் துர்பாக்யம் அடிக்கடி ஏற்படுவதும் உண்டு.

    இவற்றிற்கெல்லாம் எப்போது தான் தடை போடப்போகிறார்களோ!

    தங்களின் அன்பான வருகைக்கும் அவஸ்யமான பயனுள்ள கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  12. உங்களுடைய வித்தியாசமான பதிவு என்னைக் கவர்ந்தது.. (ஓ.. அதை ரொம்ப சத்தமா சொல்லிட்டேனா.. சாரி)

    ReplyDelete
  13. படங்கள் மிக அருமை..

    ReplyDelete
  14. அருமையான கலெக்‌ஷன்.

    ReplyDelete
  15. nice post, Gopu Sir. Some young boys purposely does for that extra effect but whatever it is they can never beat a bullet but only cause noise pollution. One such bike is roaming in our area too and I see it almost in every area we have stayed in. I always used to worry for the heart patients, new born and sick people because I hate that sound while having a terrible migraine headache. But such bikes I wonder how they escape the ears of the traffic police!

    ReplyDelete
  16. ஏதோ ஆங்கில படம் பார்ப்பது போல இருந்தது!

    ReplyDelete
  17. புகைப்படங்கள் அருமை!

    ReplyDelete
  18. அருமையான புகைப்படங்கள்! தகவல்களும் அருமை!

    ReplyDelete
  19. great!super!

    முற்றிலும் வித்தியாசமான பதிவு.அறியாத தகவலைத் தெரிந்து கொண்டும் பார்த்தும் ரசித்தேன்

    ReplyDelete
  20. இதுவரை இப்படியொரு காட்சி கண்டதுமில்லை. இதுபற்றி அறிந்ததுமில்லை. அரியப் புகைப்படங்களை அறிவியல் தகவல்களுடன் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி சார்.

    ReplyDelete
  21. படங்கள் அருமை
    எப்படி எடுத்தீர்?
    இதுவரைக் காணத காட்சி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  22. படங்கள் அருமை
    எப்படி எடுத்தீர்?
    இதுவரைக் காணத காட்சி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  23. நல்ல புகைப்படங்கள்....

    ஒலிகள் தரும் வலிகள்.... தாங்கமுடியாத வலி அது. :(

    ReplyDelete
  24. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து கருத்துக்கள் கூறி மகிழ்வித்துள்ள

    திருவாளர்கள்:
    =============

    01. கவிதை காதலன் அவர்கள்
    02. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
    03. சீனி அவர்கள்
    04. சென்னை பித்தன் ஐயா அவர்கள்
    05. ரிஷ்பன் சார் அவர்கள்
    06. பழனி.கந்தசாமி ஐயா அவர்கள்
    07. விச்சு அவர்கள்
    08. ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள்
    09. கே.பி. ஜனா அவர்கள்
    10. அவர்கள் உண்மைகள் அவர்கள்
    11. வெங்கட் நாகராஜ் அவர்கள்
    12. புலவர் சா. இராமாநுசம் ஐயா அவர்கள்

    திருமதிகள்:
    ===========

    01. ஸாதிகா அவர்கள்
    02. இராஜராஜேஸ்வரி அவர்கள்
    03. விஜி அவர்கள்
    04. கோவை2தில்லி அவர்கள்
    05. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்
    06. மீரா அவர்கள்
    07. மனோ சுவாமிநாதன் அவர்கள்
    08. ராஜி அவர்கள்
    09. கீதமஞ்சரி அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

    என்றும் அன்புடன் தங்கள்
    vgk

    ReplyDelete
  25. படங்களுடன் ஒலிகள் புதுவிதமான பகிர்வு.

    ReplyDelete
  26. புதிய தகவல்கள்... பிரமிப்பாய் இருக்கிறது. நன்றி...

    ReplyDelete
  27. @மாதேவி +
    @ஷக்திப்ரபா

    தங்கள் இருவரின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    vgk

    ReplyDelete
  28. ஹா ஹா ஒலிமயமான பதிவு.

    ReplyDelete
  29. ஒலி கொடுத்தால் வலி கிடைக்கும்.

    ஆனா இப்ப ஒலி வலியா இல்ல இருக்கு.
    காது ஜவ்வு கிழிஞ்சிடும் போல இருக்கு.

    ஒலி மயமான எதிர்காலம், ஒளி மயமான எதிர்காலத்துக்கு எதிரியாச்சே.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya June 19, 2015 at 12:17 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா !

      //ஒலி கொடுத்தால் வலி கிடைக்கும்.
      ஆனா இப்ப ஒலி வலியா இல்ல இருக்கு.
      காது ஜவ்வு கிழிஞ்சிடும் போல இருக்கு.

      ஒலி மயமான எதிர்காலம், ஒளி மயமான எதிர்காலத்துக்கு எதிரியாச்சே.//

      ஆஹா, தாங்கள் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர் என்பதை கடைசியில் (கடைசி வரிகளில்) நிரூபித்துவிட்டீர்கள்,ஜெ. :)

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  30. படங்களே சூப்பரா கத சொல்லுதாபோல இருக்குது

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா :)

      Delete
  31. ஒலிகள் பற்றிய விழிப்புணர்வு பதிவா. படங்கள் எல்லாம் கலக்கல்

    ReplyDelete
  32. இது ஒரு புதிய செய்தி. படங்களையும் முதல் முறையாகப் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  33. ஒலிகள் தரும் வலிகள்- படங்களும் தகவல்களும் அருமை!

    ReplyDelete