About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, March 1, 2012

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 3 of 8 ]


ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-14


ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை

பகுதி 3 of  87. ஸ்ரீ ஆஞ்ஜநேயர் கஷ்டம் வரும் நேரத்திலெல்லாம் ராமர் கதையைத் தான் சொல்கிறார். 

ராம கதை ம்ருத சஞ்ஜீவினி என்பதைக் காட்டுகிறது.

நாக மாதாவான கரஸையை உபாயத்தால் வென்றார். ராம கதையை அவளுக்குச் சொன்னார்.

முன்பு ராம கதையைச் சொல்லித்தான், ஸ்வயம் பிரபை குகையிலிருந்து வெளியே வந்தார்கள்.

சம்பாதி முன்னால் ராம கதையைச் சொல்லி, சீதாதேவி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டார்.

அசோகவனத்தில் தேவியிடம் ராம கதையைச் சொல்லி ஆஸ்வாசப்படுத்தினார்.

யுத்த காண்டத்திலும் அனேக இடங்களில் ராமகதை சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே மாதிரி நாமும் ராமர் கதையை எப்பொழுதும் ஸ்மரணம் செய்து கொண்டிருந்து சிரமங்கள் நீங்கி க்ஷேமம் அடைய வேண்டும்.  

8. 100 யோஜனை உள்ள ஸமுத்திரத்தைத் தாண்டி, அமராவதி நகரம் மாதிரி உள்ள லங்கையைப் பார்த்தார் என்று முதல் ஸர்க்கத்தில் ஸ்ரீ வால்மீகி பூர்த்தி செய்கிறார். “அமராவதி” என்று ஏன் சொல்கிறார் என்றால், எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், ராவணன் ஒரு தப்பு (மஹாபாபம்) செய்ததால் நிச்சயம் அழிந்து விடுவான் என்று காட்டத்தான்.

9. நம் முன்னோர்கள், தகப்பனார் இவர்கள் செய்த நல்ல காரியங்கள், புண்ணியங்கள் பையன்களையும் அவர்கள் வாரிசுகளையும் காப்பாற்றும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  

உதாரணங்கள்:

i)சகரனால் உண்டாக்கப்பட்ட சமுத்ர ராஜன் சகர வம்சத்தில் வந்த ராமருடைய கார்யத்துக்காக சென்ற ஆஞ்ஜநேயருக்கு உதவி செய்யும்படி, மைனாக மலையைத் தூண்டிவிட்டது.

ii)வாயு பகவான் உதவியால் மைனாகமலை இந்திரனுக்கு பயந்து வரும்போது, சமுத்திரத்திற்குள் இறக்கையுடன் போய் மூழ்கி ஒளிந்து கொண்டதால், வாயு புத்ரனான ஹனுமாருக்கு உதவி செய்தது. சமுத்திரத்தின் நடுவில் கிழங்குகளையும், பழங்களையும் அர்ப்பணம் செய்து இளைப்பாறும் படியும் சொல்லிற்று.

iii) தசரதனின் சினேகிதராக இருந்ததால் ஜடாயு ராவணனை எதிர்த்து சீதா தேவியை காப்பாற்ற முயன்றது. ராமருக்கு சமாசாரத்தைச் சொல்லிவிட்டு தன் உயிரை விட்டது. ஸ்ரீ ராமரால் சொர்க்கத்தையும் அடைந்தது.   

10. சீதா தேவியைப்பார்த்து “அம்மா! நீங்கள் அழாதீர்கள். கஷ்டங்கள் தீர்ந்து விடும்” என்று ஸ்ரீ ஆஞ்ஜநேயர் சொல்கிறார்.எந்த ஒரு பக்தனுக்கு அம்பாளைப் பார்த்து “அழாதீர்கள்” என்று சொல்லும் பாக்யம் கிடைத்திருக்கிறது?

அதே போல சுந்தர காண்டத்தை பாராயணம் செய்தால் ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் க்ருபையால் நம் கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.தொடரும்  

20 comments:

 1. //எந்த ஒரு பக்தனுக்கு அம்பாளைப் பார்த்து “அழாதீர்கள்” என்று சொல்லும் பாக்யம் கிடைத்திருக்கிறது?//

  சிலிர்க்க வைத்தது.

  அருமையாக இருக்கு.தொடர்ந்து படித்து பயன் பெறுகிறோம்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. அருமையான பதிவு.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 3. சுந்தரகாண்டம் எங்கு பாராயணம் செய்ததாலும் அங்கு ஆஞ்சநேயர் அருள் நிறைந்திருக்கும்! நமது துன்பங்கள் குறையும்! இதை நான் உணர்ந்திருக்கிறேன்!

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு. தொடர்கிறோம்.

  ReplyDelete
 5. ராம கதை ம்ருத சஞ்ஜீவினி என்பதை
  பல உதாரணங்களுடன் நிறுவியிருப்பது பாராட்டுக்குரியது..

  ReplyDelete
 6. நம் முன்னோர்கள், தகப்பனார் இவர்கள் செய்த நல்ல காரியங்கள், புண்ணியங்கள் பையன்களையும் அவர்கள் வாரிசுகளையும் காப்பாற்றும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

  மாதா பிதா செய்தது மக்களுக்கு...

  பண்ணிய பயிரில் புண்ணியம் தெரிந்ததே !!!!

  ReplyDelete
 7. எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், ராவணன் ஒரு தப்பு (மஹாபாபம்) செய்ததால் நிச்சயம் அழிந்து விடுவான் என்று காட்டத்தான்.

  முப்பது கோடி வாழ்நாளை முயன்றுடையவன் தான் செய்த
  மஹாபாபத்தால் உயிர்நீக்க நேரிட்டதே!

  ReplyDelete
 8. அன்புள்ள வை.கோபாலகிருஷ்ணன் சார் என்ற குறும்புகார இளைஞரே ,இனிய நினைவு அலைகளைத் தொடர்பதிவாக்கும்படி சகோதரி ராஜி அன்புடன் கேட்டு கொண்டதால் நான் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்பதை எழுதியுள்ளேன். இதை தொடர் பதிவாக நேரம் இருந்தால் மட்டும் எழுத உங்களை அன்புடன் அழைக்கிறேன். http://avargal-unmaigal.blogspot.com/2012/03/blog-post.html

  ReplyDelete
 9. Avargal Unmaigal said...
  //அன்புள்ள வை.கோபாலகிருஷ்ணன் சார் என்ற குறும்புகார இளைஞரே,

  இனிய நினைவு அலைகளைத் தொடர்பதிவாக்கும்படி சகோதரி ராஜி அன்புடன் கேட்டு கொண்டதால் நான் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்பதை எழுதியுள்ளேன்.

  இதை தொடர் பதிவாக நேரம் இருந்தால் மட்டும் எழுத உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

  http://avargal-unmaigal.blogspot.com/2012/03/blog-post.html//

  தங்களின் அன்பான அழைப்புக்கு மனமார்ந்த நன்றிகள், நண்பரே!

  நிச்சயமாக தொடர்பதிவிட முயற்சிக்கிறேன்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 10. அதே மாதிரி நாமும் ராமர் கதையை எப்பொழுதும் ஸ்மரணம் செய்து கொண்டிருந்து சிரமங்கள் நீங்கி க்ஷேமம் அடைய வேண்டும்.//

  ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை அல்லவா!
  ராமர் கதையை படித்து நலம் பெறுவோம்.

  நன்றி சார்.

  ReplyDelete
 11. அதே போல சுந்தர காண்டத்தை பாராயணம் செய்தால் ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் க்ருபையால் நம் கஷ்டங்கள் நிவர்த்தியாகும்
  With your writings, I am able to read this maha kaviyam.
  Thanks for sharing.
  viji

  ReplyDelete
 12. //அதே போல சுந்தர காண்டத்தை பாராயணம் செய்தால் ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் க்ருபையால் நம் கஷ்டங்கள் நிவர்த்தியாகும்./// நன்றி....இதுவரை படித்ததில்லை... படிக்க வேண்டும்.

  ReplyDelete
 13. இராமாயணம் பாராயணம் செய்தால் சகல துன்பங்களும் விலகும் என்பது நிதரிசனம்.

  ReplyDelete
 14. சுந்தர காண்டம் பாராயணம் செய்தால் சகல நன்மை களும் நம்மை வந்து சேரும் எனபதை அழகா சூல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 15. எந்த ஒரு பக்தனுக்கு அம்பாளைப் பார்த்து “அழாதீர்கள்” என்று சொல்லும் பாக்யம் கிடைத்திருக்கிறது?//

  மெய் சிலிர்க்குது இந்த வரிகளைப் படிக்கும் போது.

  ReplyDelete
 16. நம் முன்னோர்கள் செய்த புண்ணியம் நம்மை எப்படி காக்குமோ அதுபோல நாம் செய்யும் புண்ணிய பலன்கள் நம் வாரிசுகளை சென்றடையும். நல்ல கருத்து.

  ReplyDelete
 17. அதே போல சுந்தர காண்டத்தை பாராயணம் செய்தால் ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் க்ருபையால் நம் கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.//பலருக்கு அனுபவப்பூர்வமான உண்மை.

  ReplyDelete