About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, March 12, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-4


மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
[தொடர்பதிவு]
பகுதி-4





பள்ளி வளாகத்திலேயே ஒரு மிகப்பெரிய அரசமரமும் வேப்ப மரமும் சேர்ந்து பின்னிப் பிணைந்தபடி இருக்கும். அதன் கீழே மேடைகட்டி பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டியிருப்பார்கள். பள்ளிக்குச் செல்லும் நாட்களில் இந்தப்பிள்ளையாரை அடிக்கடி வேண்டிக்கொண்டு, பிரதக்ஷணம் செய்வதுண்டு. 


ராஜன் ஹால், பெத்தாச்சி ஹால், சரஸ்வதி ஹால் என்ற மூன்றே மூன்று பெரிய கட்டடங்கள் தான் அன்று இருந்தன. பெரிய விளையாட்டு மைதானம் உண்டு. நான் 10th + 11th  படித்ததும், S.S.L.C Public Examinations எழுதியதும் சரஸ்வதி ஹால் மாடியில் தான்.


ஆண்கள் மட்டும் படிக்கும் மேல்நிலைப்பள்ளியாக அன்று இருந்தது, இன்று மகளிர் மட்டுமே படிக்கும் கல்லூரியாக மாறி, பல்வேறு மிகப்பெரிய புதிய கட்டடங்களுடன் ஜொலித்துக்கொண்டிருந்தாலும், இந்தப் பிள்ளையார் கோயில் மட்டும் அதே இடத்தில் மாற்றப்படாமல் இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

கோலிக்குண்டு, கில்லித்தாண்டு [கிட்டிப்புள்], பேப்பே பந்து விளையாட்டு, சடுகுடு, பம்பரம் விடுதல், பட்டம் விடுதல் போன்ற விளையாட்டுக்கள் பல ஆர்வத்துடன் வெளியே போய் விளையாடியதுண்டு. 



 
  

 



தாயக்கட்டம், பரமபதம், TRADE, ஆடுபுலி ஆட்டம் முதலியனவும் ரம்மி சீட்டாட்டமும் விரும்பி விளையாடியதுண்டு.  


 




வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களையும்
வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும்
’பரமபதம்’ என்ற விளையாட்டுக்கான படம்



இப்போதும்கூட இந்த ரம்மி சீட்டாட்டத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. சரியான ஆர்வமுள்ள ஆசாமிகள் செட் சேர்ந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும். விடியவிடிய நான் தூங்காமல் விளையாடிய நாட்களும் உண்டு.

நான் சீட்டுகளை புத்திசாலித்தனமாக கையில் அடுக்கி வைத்துக்கொள்வதும், அழகாக அடிக்கடி ஜெயித்து விடுவதும், என்னருகில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யமாகவும், அதுவே அவர்களுக்கு சீட்டுக்கட்டு விளையாடுவது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுக்கும் பாடமாகவும் உள்ளதாக பிறர் என்னிடம் அடிக்கடிச் சொல்லிப் பாராட்டுவது உண்டு.




சிறு வயதிலேயே தாயக்கட்டத்தில் பல புதுமைகளை நான் ஏற்படுத்தியதுண்டு. மூன்று பேர்கள் மட்டும் இருந்தால் 3 கட்டமும், 4 பேர்கள் சேர்ந்தால் 4 கட்டமும், 5 பேர்கள் என்றால் 5 கட்டமும்,  6 பேர்கள் என்றால் 6 கட்டமும் போட்டு விடுவேன்.



மூன்று பேர்கள் மட்டும் விளையாட


பொதுவாக நான்கு பேர்கள் விளையாட


ஐந்து பேர்கள் விளையாட


ஆறு பேர்கள் விளையாட

இதை மாத்தியோசித்து முதன் முதலாகக் கண்டு பிடித்த பெருமை என்னையே சேரும் என்பார்கள் என் நண்பர்கள். 


அதுபோல TRADE அட்டையும், ஊர்களும், பணங்களும் சிகரெட் அட்டைப்பெட்டிகளைக் கத்தரித்து, கலர் வண்ணங்கள் கொடுத்து நானே, செய்து விடுவேன். 


நான் செய்யும் அந்த TRADE விளையாட்டு அட்டைகளுக்கு சிறு வயதிலேயே எனக்கு நிறைய வரவேற்பு கிடைத்தன. பல நண்பர்களுக்கு அது போல கஷ்டப்பட்டு அழகாக செய்து கொடுத்துள்ளேன். 


இந்த வரவேற்புகளும் பாராட்டுக்களுமே பிற்காலத்தில் எனக்கு, ஒவ்வொன்றிலும் கற்பனைகளை ஏதாவது புகுத்தி, புதுமைகள் செய்ய வேண்டும் என்ற ஓர் எண்ணத்தை ஏற்படுத்தியது.  

நான் என் சிறுவயதில் செய்து மிகப்பிரபலமான இந்த TRADE விளையாட்டு சாதனங்களும், அதற்காக நானே உருவாக்கிய மிகச் சுலபமான விதிமுறை விளக்கங்களுமே, மற்றவர்களிடமிருந்து என்னை சுலபமாக அடையாளம் காட்டி பெருமைப்படுத்தியது.மாறுபட்ட என் சிந்தனைகளையும் தனித்திறமைகளையும் அனைவருக்கும் வெளிச்சப்படுத்தி காட்டியது. 


சின்ன வயதில் எனக்கு என் நண்பர்கள் வட்டத்தில் கிடைத்த இந்த மாபெரும் வரவேற்பே பள்ளியிலும் அலுவலகத்திலும் என் ஒவ்வொரு செயலிலும், சிறு மாற்றங்களை புதுமையாக நான் புகுத்த வழிவகுத்தது. அவைகளே எனக்குச் சின்னச்சின்ன வெற்றிகளைத் தேடித்தந்து மகிழ்வளித்தது. 


பிற்காலத்தில் இதுவே என் கற்பனை உருவாக்கங்களின் மூலம், அகில இந்தியப் போட்டிகளில் கலந்து கொள்ளவும், தேசிய விருதினை [ ALL INDIA LEVEL FIRST PRIZE - NATIONAL AWARD ] பெற்றிடவும் உதவியது.


நான் பெற்ற தேசிய விருது பற்றி மேலும் படங்களுடன் விபரங்கள் அறிய  இணைப்புகள் இதோ:

http://gopu1949.blogspot.in/2011/07/3.html

http://gopu1949.blogspot.in/2011/07/6.html

http://gopu1949.blogspot.in/2011/07/4.html



நான் அன்று குடியிருந்த பகுதியில், 50 க்கும் மேற்பட்ட நெருக்கமான வீடுகள் இருந்ததால், பல வயதினில் சிறுவர்களும், சிறுமிகளும் என்னைச் சுற்றி எப்போதும் இருப்பார்கள். 


’ஆட்டுக்கல் தாவாரம்’ என்ற ஓர் பொதுவான இடம் அங்கு இருக்கும். அதில் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும். குழவிகளும், உலக்கை ஒன்றும் தனியாக ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.காலை வேளையில் அந்தக்குடியிருப்பில் உள்ளவர்கள் அவற்றை இட்லி தோசை அடைக்கு மாவு அரைக்கவோ, சட்னி தொகையல் முதலியன அரைக்கவோ, உலக்கையால் இடித்து முறத்தால் மாவு சலிக்கவோ பயன் படுத்திக்கொள்வார்கள்.


தினமும் சாயங்காலமும், விடுமுறை நாட்களில் முழுவதுமாகவும் சிறுவர், சிறுமிகளாகிய நாங்களே, தாயக்கட்டம், TRADE முதலியன விளையாட அந்த இடத்தை முழுவதும் பயன்படுத்திக் கொள்வோம்.


இந்த சிறுவர் சிறுமிகளைப் பயன்படுத்தி, நானே கதை வசனம் எழுதி டைரக்‌ஷனும் செய்து பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதும் உண்டு. அங்கிருந்த 52 வீடுகளில் 37 ஆம் நம்பர் வீடு மட்டும் ஒரு ஒதுக்குப்புறமாக அமைந்து, வாசலில் ஒரு 4 அல்லது 5 பேர்கள் படுக்கும் அளவுக்கு ஒரு பெரிய திண்ணையுடன் இருந்ததால், அதையே நாங்கள் போடும் நாடகத்தை அரங்கேற்றும் மேடையாக ஆக்கிக் கொண்டதுண்டு.  


நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் முக்கியமாக ஐந்து பாடங்கள் மட்டுமே உண்டு. தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சமூகம் என்று பெயர்கள். 


சம்ஸ்கிருதம் அல்லது ஹிந்தி விருப்பப்பாடமாக எடுத்துக் கொள்ளலாம். அதில் சைபர் மார்க் வாங்கினாலும் பாஸ் தான் என்று வைத்திருந்தார்கள். 


இருப்பினும் எனக்கு ஓரிரு ஆண்டுகள் மட்டும் ஹிந்தி வகுப்புகள் எடுத்த ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். நன்கு சொல்லிக்கொடுத்து அதிலும் நிறைய மதிப்பெண்கள் எடுக்க வைத்தவர். 


அந்த ஹிந்தி பண்டிட் ஜீ, நல்ல உயரமாகவும், சற்றே மெலிந்தவராகவும், மூக்குக்கண்ணாடி அணிந்தவராகவும், லேசாக தொங்கும் தாடி வைத்தவராகவும், எப்போதும் வெள்ளைக்கலரில் கதர் சட்டை, கதர் பேண்ட் அணிந்தவராகவும் தூய்மையானவராகவும் இருப்பார். அவர் அன்று திருச்சி மலைக்கோட்டை உள் வீதியில் [இப்போது யானை கட்டுமிடம் அருகே] அப்போது குடியிருந்தார்.  


எவ்வளவு யோசித்தும் அந்த ஹிந்தி பண்டிட் பெயர் மட்டும் இப்போது எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். அவருடைய மகன் கூட அப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்வார்கள். அந்த சினிமா நடிகர் பெயரும் என்னால் இப்போது சொல்ல இயலவில்லை.

1965 இல் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் பிறகு ஹிந்தியும் பல வருடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போய் விட்டது. மாநில அரசாங்கமே ஆதரவு கொடுத்து நடத்திய இந்தப் போராட்டத்தில்,தமிழகத்தின் அனைத்துப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுமே ஈடுபடுத்தப்பட்டு வந்ததால், பல நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மிகவும் மோசமான நிலமை நீடித்தது.

நான் பள்ளியில் படிக்கையில் எனக்கு கணிதப்பாடம் தான் மிகவும் பிடித்ததாக இருந்தது. கணக்கு என்றால் மட்டும் எனக்கு அல்வா சாப்பிடுவது போல. அதில் தான் முழு மதிப்பெண்கள் சுலபமாகப்பெற முடியும். 


அநேகமாக எல்லாத் தேர்வுகளிலும் கணக்கில் [COMPOSITE MATHS] 100 க்கு 100 வாங்கி விடுவேன். மீதிப்பாடங்களில் 60 முதல் 80 மதிப்பெண்கள் வரை பெற்று விடுவேன். அந்தக்காலத்தில் கணிதம் தவிர எதிலுமே 100 க்கு 100 மதிப்பெண்கள் தரவே மாட்டார்கள். 

இந்தப்பாடங்களைத் தவிர, ஓவியம், நெசவு, நீதி போதனை போன்ற வகுப்புக்களும் வாரம் ஓரிரு பீரியட் சொல்லித்தருவார்கள். அவற்றில் எனக்கு ஓவிய வகுப்பு மிக மிகப் பிடிக்கும். 

ஸ்ரீரங்கத்தில் குடியிருந்த திரு. நரசிம்ஹ ராவ் என்ற ஆசிரியர் ஓவிய வகுப்பு எடுக்க வருவார். அவரே எல்லா பீரியடுகளும் வந்து ஓவியமே சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்க மாட்டாரா என என்னை ஏங்க வைக்கும். 


எங்களை விட்டு கரும்பலகையில் ஏதாவது சாக்பீஸால் கிறுக்கிவிட்டுப் போகச் சொல்வார். அதில் அழகாக ஒரு ஓவியத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விடுவார். சமீபத்தில் ஓர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் காலமாகி விட்டதாக செய்தித்தாளில் அவரின் புகைப்படத்துடன் கூடிய செய்தியினைப் பார்த்துவிட்டு, கண்ணீர் விட்டு அழுதேன். 

ஆங்கிலக் கையெழுத்துப்போட்டி, தமிழ் கையெழுத்துப் போட்டி, ஓவியப்போட்டி என்று ஆண்டு தோறும் பல போட்டிகள் நடத்துவார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று போட்டிகளில் முதல் அல்லது இரண்டாம் பரிசு எனக்கே கிடைத்து விடும். 


முதன் முதலாக நான் ஏழாவது படிக்கும் போது எனக்கு ஓவியப்போட்டிக்கு கிடைத்த முதல் பரிசு “வீரகேசரியின் யாத்திரை” என்ற கதைப் புத்தகம். 


ராக்ஷஸ சிலந்திகளின் வகைகள், அவற்றின் வாழ்க்கை, அவற்றினால் ஏற்படும் தாக்குதல் போன்றவை கதையுடன் கலந்து மிகச்சிறப்பாக ஓர் மர்ம நாவல் போல, எங்கோ வேறொரு கற்பனை உலகத்திற்கு நம்மை இட்டுச்செல்வதாக இருக்கும். அருமையான பொருத்தமான படங்களும் அதில் இருக்கும். 


தன் காதலி மாயக்கன்னியின் விருப்பத்திற்காக, ராஜா சிலந்தி மற்றும் ராணி சிலந்தியைப் பிடித்து வர கதாநாயகன் வீரகேசரி பல மலைகள், பல காடுகள், பல குகைகள், பல சமுத்திரங்கள் தாண்டி மிகவும் கஷ்டப்பட்டு பல வீர தீர சாகஸங்கள் செய்வான் அந்தக்கதையில்.


அந்த முழுக் கதை புத்தகத்தையும், அந்த சிறிய வயதில் நான் ஒரு 100 முறையாவது படித்து மகிழ்ந்திருப்பேன். மற்ற என் நண்பர்களுக்கும் அந்தக்கதையைச் சொல்லியிருப்பேன். 

அதற்குக்காரணம் எனக்கு கதைகள் என்றால் பிடிக்கும் என்பது மட்டுமல்ல. புதுப்புத்தகங்களை முகர்ந்து பார்த்தால் ஒரு வாசனை அடிக்குமே, அது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு என் வீட்டில் புதுப்புத்தகங்களே நான் SSLC படித்து முடிக்கும் வரை வாங்கித் தந்தது இல்லை. 

வாங்கித்தரக்கூடாது என்ற எண்ணம் இல்லை அவர்களுக்கும்.  என் இளமையில் நான் வறுமையை அனுபவிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை. 

ஏற்கனவே படித்து முடித்த மாணவர்களிடமிருந்து பழைய புத்தகங்களை பேரம் பேசி பாதி விலைக்கு வாங்கித்தருவார்கள். அவைகள் ஏற்கனவே யாரிடமாவது பாதி விலைக்கு வாங்கப்பட்ட அறுதப்பழசாகவே இருக்கும். 


அந்தப் பாடாவதி புத்தகங்களில் முதல் 5 பக்கங்களும் கடைசி 5 பக்கங்களும் இல்லாமல், சுருண்டு மடிந்து, பார்க்கவே அசிங்கமாகத்தான் இருக்கும். அதை எனக்கு என் வீட்டார் வாங்கித்தருவதற்குள், என் காலாண்டுத் தேர்வே நெருங்கி விட்டிருக்கும்.  

நீதி நியாயம் தர்மம் சாஸ்திரம், சம்ப்ரதாயம் என்று பேசிப்பேசி, மிகவும் கெளரவமாக வாழ்ந்து வந்ததால், என்னை என் பெற்றோர்களால், என் ஆசைப்படி நன்கு படிக்க வைக்க முடியவில்லை. 


நான் SSLC படித்து முடிக்கும் வரை என் வீட்டில் மின்சார இணைப்பே கிடையாது. அகல், சிம்னி, லாந்தர், தெருவிளக்கின் மங்கிய ஒளி இவைகளில் மட்டுமே, நான் படித்த எல்லாப் படிப்புகளுமே.

என் மனதில் நிறைவேறாத ஆசையாக மனதில் ஆழமாகப் படிந்து போய் விட்ட இந்த புதுப்புத்தக வாசனை மோகத்தால், என் குழந்தைகள் மூவருக்கும், புத்தம் புதிய புத்தகமாக, ஒவ்வொரு புத்தகத்திலும் இரண்டு இரண்டு பிரதிகளாக வாங்கி அழகாக நானே பைண்ட் செய்து, அவர்களின் பெயர்களில் செய்து வைத்திருந்த ரப்பர் ஸ்டாம்ப்களை ஆங்காங்கே குத்தி, பள்ளிக்கு அனுப்பி வைப்பேன். 

மற்றொரு செட் புத்தகங்களை பத்திரமாக வீட்டில் வைத்திருப்பேன். இடையே காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளின் போது ஒரு வேளை அவர்கள் புத்தகங்களில் ஏதாவது தொலைந்து போய் விட்டால் கொடுப்பதற்காகவே எல்லாவற்றிலும் இரண்டு இரண்டாக வாங்கி வைத்து விடுவேன்.  


அதுபோன்று தொலைந்து போகும் நேரங்களில் கடைக்குச் சென்றால் அந்தப்புத்தகம் கிடைக்காது என்பதால், நான் வாங்கும் போதே இரண்டு செட் ஆக வாங்கிவிடுவது வழக்கம். 

மறு வருடம் அவைகளை அப்படியே ஏழைக்குழந்தைகள் யாருக்காவது அன்பளிப்பாக இலவசமாக அளித்து விடுவேன். 


நன்றாகப் படிக்கும் ஏழைக்குழந்தைகள் யாராவது என் வீட்டுக்கு வந்தால் என்னால் முடிந்த உதவிகளை அவர்கள் கேட்காமலேயே அளிப்பது என் வழக்கம். 


நோட்டு, பேனா, பென்சில், ஸ்கெட்ச்பென் செட், கலர் பாக்ஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், அழிரப்பர், பென்சில் சீவும் கருவி [Sharpener], அட்டை போடும் Brown Paper முதலிய அவர்களுக்குத் தேவைப்படும் எதையாவது வாங்கிக்க் கொடுக்காமல் அனுப்புவது இல்லை. 


படிப்பு சம்பந்தமாக வேறு எது வேண்டுமானால் என்னிடம் தயங்காமல் வந்து கேள் என்றும் சொல்லுவேன். பாடங்களில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் என்னால் முடிந்த வரை சொல்லிக் கொடுப்பதும் உண்டு. 

நான் வேலைக்குப்போய் பல ஆண்டுகள் கழித்த பிறகு கோபி என்றொரு சிறுவன் என் வீட்டருகே குடியிருந்தான். அவன் அப்பாவுக்கு சாதாரண வேலை தான். பெரிய குடும்பம், அவன் அம்மாவுக்கு நிரந்தரமான வியாதி. படுத்த படுக்கையாகி குடும்பமே மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதே நேரம் அந்த கோபி என்ற பையன் XII Std. இல் School First வந்தான். 

அவன் என்னிடம் வந்து தன் மதிப்பெண்களைக் காட்டினான். மிகவும் சந்தோஷத்துடன் ‘ஒரு புது பேனா செட்’ அளித்தேன். ஒரு கிலோ சாக்லேட் வாங்கி அவனிடம் கொடுத்தேன். முதலில் வாங்க மறுத்தான். நான் வற்புருத்திய பிறகு ”தங்கள் ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்கிறேன், சார்” என்று பெற்றுக்கொண்டான். 

நிறைய வட்டிக்கு பணம் வாங்கி அவன் தந்தை அவனை மெடிகல் காலேஜ் படிக்க வைத்தது எனக்கு பலநாட்களுக்குப் பிறகு தான் தெரிய வந்தது. அடுத்தவரிடம் எந்த உதவியும் கேட்காமல், என் பெற்றோர்களைப் போலவே, மிகவும் கெளரவமாக வாழ நினைத்தவர்கள் அவர்கள். 

இன்று அந்தப்பையன் நன்கு படித்து முன்னேறி, அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறான். இதைக் கண்டு களிக்க அவன் தாயார் மட்டும் இப்போது உயிருடன் இல்லை. 

சமீபத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அவனுக்கு திருமணம் திருச்சியில் நடந்தது. கஷ்டப்பட்ட பையன் படித்து முன்னேறி இன்று செளகர்யமாக இருப்பதைக் கேட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. 


நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கவே என் குடும்பப் பொருளாதார நிலை மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருந்ததால், என்னைப் போலவே இளமையில் வறுமையால் வாடுபவர்களிடம் ஒருவித பாசம் என்னையறியாமல் ஏற்பட்டு விடுகிறது.   அவர்களுக்கு என்னால் இயன்ற சிறுசிறு உதவிகள் செய்ய என் மனம் எப்போதும் விரும்புவதுண்டு.

அதுபோல என்னுடன் பணியாற்றிய மிக நெருங்கிய நண்பர் ஒருவர். அவருக்கு அடுத்தடுத்து இரண்டே பெண் குழந்தைகள். மூத்தவள் +2, இளையவள் +1 படித்து வந்தார்கள். இருவருமே நன்கு படிக்கக் கூடியவர்கள். அவர்கள் பிறந்து மிகச்சிறிய குழந்தைகளாக இருக்கும் போதே, இந்த இரு பெண் குழந்தைகளிடமும் எனக்கு நல்ல பழக்கமும் பாசமும் உண்டு.  


பள்ளிப் படிப்பைத் தவிர பொதுக்கட்டுரைகள், கவிதைகள் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் சமயங்களில் மூத்தவள் என்னிடம் அடிக்கடி வந்து ஏதாவது சந்தேகங்கள் கேட்டு, என் சிறுசிறு ஆலோசனை உதவிகளைப் பெற்றுக்கொண்டு, நன்றி கூறிவிட்டுச் செல்வதுண்டு.

English Medium படித்த அந்த மூத்த பெண் +2 வில் பள்ளியிலேயே முதலிடம் பெற்றாள். எங்கள் நிறுவனத்தின் House Journal இல் அவளின் புகைப்படத்தை வெளியிட்டு, குடியரசுத் திருநாள் அன்று எங்கள் நிர்வாக இயக்குனர் அவர்கள் கையால் ஏதோ ஒரு பரிசும் கொடுத்து அவளை கெளரவித்தார்கள்.

House Journal இல் அந்தக்குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்த நான் அதை அழகாக வெட்டி எடுத்து, அதன் அருகே ஒரு 1 கிராம் தங்க நாணயத்தை வாங்கி வந்துப் பதித்து ஒரு Transparent Plastic Folder இல் அவற்றை வைத்து With Best Wishes என்று எழுதி என் கையொப்பமிட்டு Frame போட்ட சிறிய படம் போல ஆக்கி, அந்தப்பெண் குழந்தையை அழைத்து Sweets உடன் அந்த தங்க நாணயத்தைக் கொடுத்தேன். 

அவளுக்கும் அவளின் பெற்றோருக்கும் மட்டில்லா மகிழ்ச்சி. நமது நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூட இவ்வளவு மதிப்பு வாய்ந்த பரிசைக் கொடுக்கவில்லை. ஆனால் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் என்று சொல்லி மகிழ்ந்தார்கள்.     

அடுத்த ஆண்டு அவளின் தங்கையும் [என் நண்பரின் 2 ஆவது மகளும்] இதே போல +2 இல் School First வந்து அசத்தி விட்டாள். சென்ற ஆண்டு அவளின் அக்காவுக்கு மட்டும் நான் பரிசளித்து இவளுக்கு கொடுக்காமல் இருந்தால் அது நியாயமாகுமா என நினைத்து, மீண்டும் ஒரு 1 கிராம் தங்க நாணயம் வாங்கி அதே போல அமர்க்களமாக அதை பரிசுப்பொருளாக்கி அந்தக்குழந்தைக்கும் கொடுத்தேன். 

அந்தக் குழந்தைகள் இருவருக்கும் கல்யாணமாகி ஆளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து, துபாயில் ஒருத்தியும், சிங்கப்பூரில் ஒருத்தியும் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.இருவரும் சின்னக் குழந்தையிலிருந்து என்னிடம் ஆசை ஆசையாக கதைகள் கேட்டவர்கள். இப்போதும் மின்னஞ்சல் மூலம் அவ்வப்போது என்னைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.


சமீபத்தில் வேறு ஒரு பெண் தன் கணவர் + 2 சின்னக் குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார், கொழுந்தன் ஓர்பொடி அவர்களின் குழந்தைகள் என ஒரு 10 பேர்களை அழைத்துக்கொண்டு பெங்களூரிலிருந்து வேனில் கிளம்பி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள வரஹூர் பெருமாள் கோயிலுக்கு, குழந்தைகளுக்கு முடியிறக்கப்போய் விட்டு, அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு நேராக என் வீட்டுக்கு அனைவரையும் அழைத்து வந்திருந்தாள். இவளின் பெற்றோரும் என் வீட்டருகே BHEL Colony இல் குடியிருந்தவர்களே. 


வீட்டுக்கு வருவதற்கு 10 நிமிடங்கள் முன்பு ஃபோன் செய்து, ”இதுபோல 10 பேர்கள் வருகிறோம், வெயில் மிக அதிகமாக உள்ளது. நாங்கள் தங்கி சற்று ஓய்வு எடுத்துப்போக வீட்டில் AC போட்டு 2 மணி நேரங்கள் மட்டும் நாங்கள் தங்க எங்களுக்கு உதவிட முடியுமா?  குழந்தைகளுக்கு மட்டும் சாதம் பருப்பு நெய் தெளிவான ரஸம் மட்டும் தேவைப்படும். மற்றபடி நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் வருகிறோம்; உங்கள் ஆத்திலிருந்து [வீட்டிலிருந்து] புறப்படும் போது காஃபி மட்டும் தேவைப்படும், OK யா” என்றாள். மிகவும் ஸ்வாதீனமாகப் பேசிப்பழகக்கூடிய டைப் தான் அவள்.


வந்தவர்களுக்கு ஒரு ஹாலை ஒழித்துக்கொடுத்து SPLIT AC போட்டு ஜில்லென்று வைத்து விட்டேன். வந்தவர்களில் பாதி பேர் வந்ததும், நான் கொடுத்த ப்ளாஸ்டிக் பாய்களை விரித்துக்கொண்டு, வரிசையாகப் படுத்துக்கொண்டனர். வேறு அறையில் இருந்த என்னிடம் தன் மாமனாரை மட்டும், கூட்டி வந்து அறிமுகம் செய்து வைத்தாள், அந்தப்பெண். 


“இவர் பெயர் கோபாலகிருஷ்ணன், இவரிடம் பல திறமைகள் உண்டு, ஆனால் எதையும் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார். என் அப்பாவுடன் சேர்ந்து ஒரே வகுப்பில் SSLC வரை படித்த க்ளாஸ்மேட். என் அப்பாவும் இவரும் ஒரே ஆபீஸில் வேலை பார்த்தவர்கள். BHEL டவுன்ஷிப்பிலும் எங்கள் இருவரின் வீடும் ஒரே பில்டிங்கில் தான் இருந்தது. இவர் மட்டும் அன்று உதவி செய்யாமல் இருந்திருந்தால், நான் எஞ்சினீரிங் காலேஜ் சேர்ந்திருக்கவே முடியாது” என்று சொல்லி கண் கலங்கி விட்டாள். 


அவளிடம் ”நீ என்னம்மா கடைசியாக ஏதோ புதுக்கதை சொல்கிறாய்” என்றேன் நான். 


அதற்கு அவள் “உதவி செய்த நீங்கள் அதை மறந்திருக்கலாம் மாமா, உதவி பெற்ற நான் அதை எப்படி மறக்க முடியும்? +2 படிப்பு முடிந்து எஞ்சினீரிங் காலேஜ் சேர Paying Seat அட்மிஷனும் கிடைத்த போது என் அப்பாவிடம் போதிய பணம் கைவசம் இல்லை. மறுநாள் தான் பணம் கட்ட கடைசி நாள்; 


எங்கெல்லாமோ முயற்சித்த என் அப்பா, கடைசியாக முதல் நாள் இரவு உங்களை சந்தித்து ’அவசரமாக ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாளை காலை 11 மணிக்குள் கொடுத்து உதவிட முடியுமா, ஒரே மாதத்தில் திரும்பத் தந்து விடுகிறேன்’ என்று சொல்லிக் கேட்டாராம்; 


எதற்கு ஏன் என்று எதுவும் கேட்காமல் நீங்கள் உடனடியாக அவர் கேட்ட 50000 பணத்தை புது கரன்சி நோட்டுகளாக பீரோவிலிருந்து எடுத்து, ஸ்வாமி படத்தின் மேல் வைத்து விட்டுக் கொடுத்து விட்டீர்களாம்; 


அந்தப் பணத்தைக் கட்டித்தான் நான் இஞ்சினீரிங் காலேஜ் படிக்க சேர முடிந்தது. பிறகு கேம்பஸ் செலெக்‌ஷனில் வேலையும் கிடைத்தது. கல்யாணமும் ஆச்சு. 2 குழந்தைகளும் பிறந்தாச்சு. பல வெளிநாடுகளுக்கும் கணவரோடு வேலை விஷயமாகப் போய் வந்தாச்சு. மீண்டும் அடுத்தவாரம் கூட வெளிநாடு செல்லப்போகிறேன்; 


இது எல்லாவற்றிற்குமே மூல காரணம் தாங்கள் அன்று என் அப்பாவிடம் கொடுத்து உதவிய பணம் தானே மாமா; நீங்களும் அன்று தராமல் இருந்திருந்தால் நான் எப்படி இஞ்சினீரிங் படிப்புக்குச் சேர்ந்து படித்திருக்க முடியும்? “ என்று சொல்லி நிறுத்தினாள். 


நான் யோசித்துப்பார்த்தேன். அவள் தந்தை ஒரே ஒருமுறை தான், ஏதோ அவசரத்தேவை என்று என்னிடம் பணம் கேட்டு வாங்கிச்சென்றார். பிறகு ஒரிரு மாதம் கழித்து ஏதோ ஆபீஸ் பி.எஃப் லோன் போட்டுத் தந்து விட்டார் என்பது ஸ்வப்பனம் போல என் நினைவுக்கும் வந்தது.  


அந்தக் காலக்கட்டத்தில் என்னிடம் பணம் கேட்டு யாராவது வந்தால் அவர்களுக்கு முடிந்தவரை எப்படியாவது உதவி செய்யவே நான் நினைப்பேன். கொடுக்கும் பணம் திரும்பி வருமா வராதா என்றெல்லாம் யோசிக்கவே மாட்டேன். 


ஒருசிலரிடம் கொடுத்த ஒரு சில சிறிய தொகைகள் கடைசிவரை வராமல் போனதும் உண்டு. ரூபாய் 50 முதல் ரூபாய் 1000 வரையாக இருந்தால், நானாக திரும்பக் கேட்கவும் மாட்டேன்.  அவர்களாகக் கொடுத்தால் தான் உண்டு.   அந்தக் காலக்கட்டத்தில் என்னை நேரில் சந்தித்து, என்னிடம் உதவி என்று கேட்டவர்களுக்கு என்னால் ‘இல்லை’ என்று சொல்ல எப்போதுமே தோன்றியதில்லை.

என்னைப்பற்றி நன்கு புரிந்து வைத்துள்ள ஒருசில தாய்மார்கள் நான் பயன்படுத்தும் பல பேனாக்களில் ஒன்றினை தங்கள் குழந்தைக்கு தேர்வு எழுத ஆசீர்வதித்துத் தரச்சொல்லி கேட்டுப் பெற்றுகொண்டு செல்வதும் உண்டு. 


அவர்களுக்கு என் மீது ஏதோ ஒரு நம்பிக்கை.  ”உங்கள் கையால் ஒரு பேனா கொடுத்தால் என் குழந்தை சுலபமாக தேர்வில் வெற்றி பெற்று நிறைய மதிப்பெண்கள் பெற முடியும்; உங்கள் கை மிகவும் ராசியானது” என்று சொல்வார்கள். 


இன்றுவரை கூட ஒருசிலர் [தற்சமயம் மதுரையில் வாழும் திருமதி பிரேமா நாகராஜன் + தற்சமயம் சென்னையில் வாழும் திருமதி ஆண்டாள் இராகவன் போன்றோர்] இதே வழக்கத்தை கடைபிடித்து வருவது எனக்கே மிகவும் ஆச்சர்யமாக தான் உள்ளது.

நன்றாகப் படிக்கும் இதுபோன்ற குழந்தைகளை நாம் அவ்வப்போது ஊக்கப்படுத்தி, உற்சாகப் படுத்தி வந்தால் அது அவர்களை மேலும் மேலும் சிறப்படையச் செய்வதாக இருக்கும் என்பதற்காக மட்டுமே ஒருசில நிகழ்ச்சிகளை இங்கு தெரிவித்துள்ளேன்..  

நாளையும் தொடரும்

59 comments:

  1. இந்த வரவேற்புகளும் பாராட்டுக்களுமே பிற்காலத்தில் எனக்கு, ஒவ்வொன்றிலும் கற்பனைகளை ஏதாவது புகுத்தி, புதுமைகள் செய்ய வேண்டும் என்ற ஓர் எண்ணத்தை ஏற்படுத்தியது.


    அந்த பாராட்டுரைகள் செய்யும் மாயம் உணர்ந்து பார்த்தவர்களுக்கு புரியும்..

    ReplyDelete
  2. 1965 இல் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் பிறகு ஹிந்தியும் பல வருடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போய் விட்டது.

    ஹிந்தி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பறிக்கப்பட்டதும் அல்லாமல் அந்த போராட்டத்தில் அட்டைதாங்கி கோஷம் எழுப்பி ஊர்வலம் போகும் துர்ப்பாக்கிய நிலை நினைத்தால் எரிச்சலாக வருகிறது...

    ReplyDelete
  3. நன்றாகப் படிக்கும் ஏழைக்குழந்தைகள் யாராவது என் வீட்டுக்கு வந்தால் என்னால் முடிந்த உதவிகளை அவர்கள் கேட்காமலேயே அளிப்பது என் வழக்கம்.

    இன்றும் நாகளும் தொட்ர்ந்து வருகிறோம்..

    படிப்பு என்று உதவி கேட்டுவிட்டால் தயங்காமல் காலம் தாழ்த்தாமல் செய்துவிடுவோம்..
    ஆதிவாசி குழந்தைகளுக்கு நோட்டு பென்சில் ஆகியவற்றை நூற்றுக்கணக்கில் வாங்கி வழ்ங்க குடும்பத்தோடு நாங்கள் எடுத்துச்சென்ற போது தொகுதி எம்.எல். ஏ . அவர்களை அழைததுவந்து அவரைக் கொடுக்கவைத்து பத்திரிகையில் போட்டோ வரவைத்த கயமைத்தனத்தினால் நொந்துபோய் அடுத்தமுறை நிறுத்திவிட்டோம்..

    ReplyDelete
  4. உங்கள் திறமைகளும் ,உதவும் குணமும் பிரமிக்க வைக்கிறது சார். திருஷ்டி போடச்சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. உங்கள் உதவும் மனப்பானமை கண்டு வியந்து நிற்கிறேன்.

    பதிவில் நீங்கள் கொடுத்திருக்கும் லின்கை சுட்டிப்பார்த்து பிரமித்து நிற்கிறேன்.மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள்!தொடருங்கள்!

    ReplyDelete
  6. இத்த்னை திறமைகள் கொட்டிக்கிடப்பதால்தான் சாதாரணமானவர் என்று அறிமுகப்படுத்திக்கொள்ள முடிகிறதோ!

    ReplyDelete
  7. Aha arumaiyana pathivoo.
    Ward by ward I want to give comment and appreciation. But as usual ........
    O.K.
    I never seen the 4 and 5 and 6 face of dayakattam....
    very strange.
    Nice post sir. I enjoy every bit.
    viji

    ReplyDelete
  8. அந்தக் காலக்கட்டத்தில் என்னிடம் பணம் கேட்டு யாராவது வந்தால் அவர்களுக்கு முடிந்தவரை எப்படியாவது உதவி செய்யவே நான் நினைப்பேன். கொடுக்கும் பணம் திரும்பி வருமா வராதா என்றெல்லாம் யோசிக்கவே மாட்டேன்.

    தங்கமான மனமும் ராசியான கைகளினால் அளித்த உதவிகளும் கொண்ட தங்க்க்கைக் காரருக்கு அநேக நமஸ்காரங்கள் ஐயா.

    ReplyDelete
  9. தங்களின் சிறப்பான ஆசிகளினால் எந்தளத்தின் வேர்டு வெரிபிகேஷன் எடுக்கமுடிந்தது ஐயா...

    மனம் நிறைந்த நன்றிகள் ஐயா வழிகாட்டலுக்கு...

    ReplyDelete
  10. இத்தனை திறமைகள் ஒருங்கே அமையப்பெற்ற தங்களுடன் நானும் கலந்துகொண்டது போன்ற உணர்வுகளைத்தந்த பகிர்வுகள் ஐயா.

    மீண்டும் பள்ளிக்கு அழைத்துச்சென்று
    பட்டம்விட்டு, பரம்பதம் விளையாடி, கோலிக்குண்டு அடித்து நாடகம் நடத்தும் தங்களைத் தரிசிக்க ஆவல் எழுகிறதே !

    ReplyDelete
  11. தங்களது திறமைகளும், உதவும் மனப்பான்மையும் மெய்சிலிர்க்க வைக்கிறது....

    பாராட்டுகள் சார்.

    ReplyDelete
  12. பிரமித்துப்போனேன்.-உங்கள் எல்லையற்ற திறமகளைப்பார்த்துமட்டுமல்ல;உங்கள் தங்க மனசையும் பார்த்து!வாழ்த்துகள்

    ReplyDelete
  13. //இப்போதும்கூட இந்த ரம்மி சீட்டாட்டத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. சரியான ஆர்வமுள்ள ஆசாமிகள் செட் சேர்ந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும். விடியவிடிய நான் தூங்காமல் விளையாடிய நாட்களும் உண்டு.
    //

    :)

    //இதை மாத்தியோசித்து முதன் முதலாகக் கண்டு பிடித்த பெருமை என்னையே சேரும் என்பார்கள் என் நண்பர்கள்.
    //

    அட! நிஜமாகவே unique :)

    எத்தனை விருதுகள்! அங்கீகாரங்கள்...வியந்தேன்....
    நாடகத் திறமைகள்.... மிகுந்த கலையருள் உடையவராக இருக்கிறீர்கள்.
    சந்தோஷமும், மரியாதையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.

    //எவ்வளவு யோசித்தும் அந்த ஹிந்தி பண்டிட் பெயர் மட்டும் இப்போது எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.//

    ஹ்ம்ம்...

    //என் இளமையில் நான் வறுமையை அனுபவிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.
    /

    ஹ்ம்ம்...

    எத்தனை எத்தனை perspectives sir...வியக்கிறேன்...
    உங்களின் வறுமை...கஷ்டப்பட்டு படித்தது...அதன் பாதிப்பு, புத்தகத்தின் புதிய பக்கங்களின் வாசம்,
    பணம் கெட்டு வந்தால் இல்லை என்று சொல்லாத மனம்....

    உங்களை பற்றிய நல்ல அறிமுகமாக இத்தொடர் உதவுகிறது. நன்றி.

    ReplyDelete
  14. தாங்கள் வளர்ந்து ஆளாகிய விதம் தெரிகிறது, கோபால்ஜி!

    படிப்பதற்கு வெறும் வார்த்தைக் கோர்வைகள் தான்! ஆனால் அத்தனைக்குள்ளும் ஒளிந்திருக்கும் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கும் ஒளிகாட்டும் தீபமாய் சுடர்விடுகிறது!
    அதுவும் சாதாரண நிலையிலிருந்து வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் என்றால், அவர்கள் சமூகத்திற்கு தரும் சேதியே தனி! அந்தத் தனித்துவம் தங்களிடம் தாராளமாய் குடிகொண்டிருக்கிறது..

    நல்ல அனுபவங்களை தன்னுள் தானே என்று விழுங்கிக் கொள்ளாமல் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நன்றி எதற்கென்றால் பகிர்ந்தவை பாடமாய் இருப்பதால் தான்!

    ReplyDelete
  15. அன்பின் வை.கோ - மனம் மகிழ்கிறது - நெகிழ்கிறது. தங்களுக்கும் எனக்கும் பலப்பல ஒற்றுமைகள் இருந்திருக்கின்றன - இருக்கின்றன. ஒவ்வொன்றையும் படிக்கும் போது என்னுடன் ஒப்பு நோக்கி அசை போட்டேன். பளிச்சிடும் திறமைகளூம், செயல்களும் பாராட்டுக்குரியவை. இத்தனை வயதிற்கப்புறமும் மலரும் நினைவுகளாக மனதில் நிழலாடும் போது - எண்ணி எண்ணி மகிழ்வது யாருக்கும் கிடைக்காத ஒன்று. இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளியிட்டிருக்கலாமோ? நீளம் அயர்வினைத் தருகிறது. நல்வாழ்த்துகள் வை.கோ- நட்புடன் சீனா.

    ReplyDelete
  16. பாசஞ்சர் ரயில் மாதிரி ஆரம்பிச்ச உங்களின் இந்த பதிவு இப்போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது என்றாலும் பலதகவல்களை அள்ளித்தந்து செல்கின்றது வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  17. தங்களது திறமைகள், நினைவாற்றல், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கும் மனது எல்லாமே ஆச்சரியப்படுத்துகின்றன சார்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  18. உதவி யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் காலத்திற்கு செய்யும் உதவி பெரிது அதை நீங்கள் செய்து இருக்கிறீர்கள் அதை எங்களுக்கு தெரிவிப்பதன் மூலம் நாங்களும் செய்ய ஒரு தூண்டு கொலை இருந்து இருக்கிறீர்கள் ......

    உங்களின் மனித நேயம் காணு வியப்பில்லை எனக்கு .....

    உங்கள் வழியில் நாங்களும் நாளை .........( இன்றே ) புறபடுகிறோம் ............

    ReplyDelete
  19. உங்கள் திறமைகள், உதவும் மனபான்மை, எல்லாம் வியக்க வைக்கிறது.

    தாயத்தில் புதுமை, பாராட்டுக்கு தகுதியானவர் தான் நீங்கள்.

    என் குழந்தைகளின் பாடப் புத்தங்களை அடுத்தவருடம் ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவேன்.
    என் குழந்தைகள் பைண்ட் செய்து கொடுத்த புத்தங்களை கிழிக்காமல் நன்கு வைத்து இருப்பார்கள்.

    உங்கள் ராசிகைகளில் பேனா வாங்கி நன்கு படித்தி புகழ் பெறட்டும்.
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. உங்கள் திறமைகள் வியக்க வைக்கின்றன.
    சேவை பணிக்கும் உதவும் நல்மனத்துக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. உண்மையிலேயே நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்தான்! அடுத்தவர் படுதுயர் செவி மடுத்து அதைத் துடைத்திட துணை புரிந்த பண்புளம் கண்டு மகிழ்கிறேன்! அந்த நாளிலேயே மாத்தியோசித்த மாமனிதர்!சாதனைகள் தொடர இறைவனை இறைஞ்சுகிறேன்!

    அருமையான பகிர்வுக்கு நன்றி!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  22. நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கவே என் குடும்பப் பொருளாதார நிலை மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருந்ததால், என்னைப் போலவே இளமையில் வறுமையால் வாடுபவர்களிடம் ஒருவித பாசம் என்னையறியாமல் ஏற்பட்டு விடுகிறது. அவர்களுக்கு என்னால் இயன்ற சிறுசிறு உதவிகள் செய்ய என் மனம் எப்போதும் விரும்புவதுண்டு.

    அருமை ஐயா. வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. bringing all the nostalgic moments of my childhood days. I too remember the 'thinnai theatre' days when we friends used to do screenplay, direction of some self created comedy dramas.

    ReplyDelete
  24. அன்பும் ஆதரவும் மட்டுமே நல்ல குழந்தைகளை நல்ல குடிமகன் களாக உருவாக்குகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனை போற்றும் வகையில் தங்களின் மேன்மைமிகு செயல்களை இங்கு வெளியிட்டதன் மூலம் பலரும் தூண்டப்படுவார்கள் என்று நம்புகிறேன். நன்றி சார்.

    ReplyDelete
  25. உங்கள் மலரும் நினைவுகள் (பள்ளிகூட நாட்கள் பற்றி) மிகவும் சுவாரசியமாக உள்ளன...

    நீங்கள் விளையாடிய பல விளையாட்டுக்களை இன்றைய தலைமுறை கேள்வி பட்டிருக்கக்கூட மாட்டார்கள்...

    ReplyDelete
  26. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ள எல்லோருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து ஓர் தனிப்பதிவே தந்துள்ளேன்.

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    தலைப்பு:

    இயற்கை அழகில் ’இடுக்கி’
    இன்பச் சுற்றுலா

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  27. நீங்கள் வேண்டுமானால் உங்களை சாதாரணமானவர் எனறு கூறிக்கொள்ளலாம்,ஆனால் எங்களைப்பொறுத்த வரையில் நீங்க உயர்ர்ர்ர்ந்த மனிதர்.
    பதிவின் ஒவ்வொரு வரிக்கும் உங்களைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது,ஆனால் அந்த தகுதி இல்லாததால் வணங்குகிறேன்.

    ReplyDelete
  28. RAMVI said...
    நீங்கள் வேண்டுமானால் உங்களை சாதாரணமானவர் எனறு கூறிக்கொள்ளலாம்,ஆனால் எங்களைப்பொறுத்த வரையில் நீங்க உயர்ந்த மனிதர்.
    பதிவின் ஒவ்வொரு வரிக்கும் உங்களைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது,ஆனால் அந்த தகுதி இல்லாததால் வணங்குகிறேன்.//

    தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    நான் இப்போதும் மிகச் சாதாரணமானவனே தான்.

    யாரும் என்னை மிகச்சுலபமாக தொடர்பு கொள்ள முடியும்.

    என்னால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யவே நினைப்பதுண்டு.

    சில நேரங்களில் வேறு சில குறுக்கீடுகளால், உதவி செய்ய நான் மனதால் நினைத்தாலும், செயல்பட முடியாத சூழ்நிலைகள் ஏற்படுவதும் உண்டு.

    ReplyDelete
  29. //ஒருசில தாய்மார்கள் நான் பயன்படுத்தும் பல பேனாக்களில் ஒன்றினை தங்கள் குழந்தைக்கு தேர்வு எழுத ஆசீர்வதித்துத் தரச்சொல்லி கேட்டுப் பெற்றுகொண்டு செல்வதும் உண்டு. //

    இப்பவே அட்வான்ஸ் புக்கிங் .எனக்கும் ஒரு பேனா எடுத்து வைங்க
    எப்படியும் உங்களை சந்திப்பேன் என் மகளுக்கு ஒரு பேனா வேண்டும்

    ReplyDelete
  30. இப்பதிவில் ஒவ்வொரு சம்பவமும் பிரமிக்க வைத்தது .

    ReplyDelete
  31. angelin said...
    *****ஒருசில தாய்மார்கள் நான் பயன்படுத்தும் பல பேனாக்களில் ஒன்றினை தங்கள் குழந்தைக்கு தேர்வு எழுத ஆசீர்வதித்துத் தரச்சொல்லி கேட்டுப் பெற்றுகொண்டு செல்வதும் உண்டு.*****

    //இப்பவே அட்வான்ஸ் புக்கிங்.
    எனக்கும் ஒரு பேனா எடுத்து வைங்க
    எப்படியும் உங்களை சந்திப்பேன் என் மகளுக்கு ஒரு பேனா வேண்டும்//

    நிச்சயமாகத் தரப்படும், சந்தோஷமாக.


    angelin said...
    //இப்பதிவில் ஒவ்வொரு சம்பவமும் பிரமிக்க வைத்தது//



    அன்புள்ள நிர்மலா,

    ஒரே மூச்சில் ஒரே நாளில் இந்தத்தொடரின் அனைத்து ஏழு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்து விட்டு, அன்புடன் வருகை புரிந்து, அழகாகக் கருத்துக்கள் கூறியுள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள,
    கோபு

    ReplyDelete
  32. தங்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஒன்றொன்றும் என்னை வியக்க வைக்கிறது சார். தங்களது நட்பு கிடைத்தது என்னை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது! தங்களின் ஆசிர்வாதம் அனைத்து வளர்ந்து வரும் எதிர்கால தலைமுறைக்கும் அவசியம் தேவை! தங்களிடம் சொன்னதே தான் சார்! இருப்பவர்கள் அனைவருக்கும் கொடுத்துதவ மனம் வருவதில்லை! ஆனால் என்ன ஏதென்று கூட கேட்காமல் தாங்கள் கொடுத்துதவிய பணம் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றி அமைத்திருக்கிறது என்பதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது! தங்களது பணி தொடரட்டும் சார்!

    எனக்கும் தங்களிடம் பேனா வாங்க ஆசையாக உள்ளது சார்! படிப்பில் சாதிக்க வேண்டிய காலம் கடந்துவிட்டாலும் பரவாயில்லை சார்! வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய தருனங்கள் நிறைய இருக்கிறது! தங்களை சந்திக்கும் தருணம் எனக்கு அமைந்தால் நிச்சயம் நானும் பேனா கேட்பேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ யுவராணி, வணக்கம்.

      //தங்களிடம் சொன்னதே தான் சார்! இருப்பவர்கள் அனைவருக்கும் கொடுத்துதவ மனம் வருவதில்லை! ஆனால் என்ன ஏதென்று கூட கேட்காமல் தாங்கள் கொடுத்துதவிய பணம் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றி அமைத்திருக்கிறது என்பதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது! தங்களது பணி தொடரட்டும் சார்!//

      ஏதோ அன்றையதினம் என்னிடம் ரொக்கமாக வீட்டில் பணம் இருந்தது.

      இவர் தன் பெண்ணை எஞ்சினீரிங் காலேஜ் சேர்க்க பணம் கேட்டு என்னிடம் வந்தாலும் வரலாம் என வேறொரு நண்பர் எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார்.

      என்னுடன் SSLC வரை ஒன்றாகவே படித்தவர். எங்கள் அலுவலகத்திலேயே ஒரே துறையில் வேறு செக்‌ஷனில் பணியாற்றியவர். டவுன்ஷிப்பில் என் வீட்டு அருகிலேயே குடியிருந்தவர். எங்கள் இருவரின் மனைவிகளும் சினேகிதிகளே. [இப்போது அவரும் பணி ஓய்வு பெற்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ளார்]

      அன்று தன் பெண்ணை பொறியியல் படிப்பில் சேர்க்க வேண்டி என்னிடம் பணம் கேட்டுள்ளார்.

      அதனால் படிப்பு விஷயமாக ஒரு சிறிய உதவி செய்யும் பாக்யம் எனக்குக் கிடைத்தது.

      அவர்களைப்பொறுத்தவரை அது ஒரு Timely Help.
      பிறகு ஓரிரு மாதங்களில் பணத்தையும் Prompt ஆகத் திருப்பியளித்து விட்டார்.

      //எனக்கும் தங்களிடம் பேனா வாங்க ஆசையாக உள்ளது சார்! படிப்பில் சாதிக்க வேண்டிய காலம் கடந்துவிட்டாலும் பரவாயில்லை சார்! வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய தருணங்கள் நிறைய இருக்கிறது! தங்களை சந்திக்கும் தருணம் எனக்கு அமைந்தால் நிச்சயம் நானும் பேனா கேட்பேன்!//

      சந்தோஷமாக உள்ளது யுவராணி. சந்திக்கும் தருணம் அமைந்தால், தாங்கள் ஒருவேளை கேட்க மறந்து விட்டாலும், எனக்கு ஞாபகம் வந்தால், கட்டாயம் நானே உங்களுக்குப் பேனா கொடுக்கிறேன். கவலைப்படாதீங்கோ.

      நான் அளிக்கும் அதே பேனாவுடன் தாங்கள் ஓர் வங்கி அதிகாரியாக பணி ஏற்கும் வாய்ப்பு அமையலாம் என நான் நம்புகிறேன். ALL THE BEST, YUVARANI ;)))))

      பிரியமுள்ள
      VGK


      Delete
    2. ///////
      நான் அளிக்கும் அதே பேனாவுடன் தாங்கள் ஓர் வங்கி அதிகாரியாக பணி ஏற்கும் வாய்ப்பு அமையலாம் என நான் நம்புகிறேன். ALL THE BEST, YUVARANI ;)))))
      ///////////////////////
      மிக்க நன்றி சார்! அத்தருணத்திற்காக காத்திருக்கிறேன்!

      Delete
    3. யுவராணி தமிழரசன் January 3, 2013 11:51 PM
      ///////
      நான் அளிக்கும் அதே பேனாவுடன் தாங்கள் ஓர் வங்கி அதிகாரியாக பணி ஏற்கும் வாய்ப்பு அமையலாம் என நான் நம்புகிறேன். ALL THE BEST, YUVARANI ;)))))
      ///////////////////////
      //மிக்க நன்றி சார்! அத்தருணத்திற்காக காத்திருக்கிறேன்!//

      அந்த நாளும் விரைவில் வந்திடும். கவலை வேண்டாம்.

      ”அந்த நாளும் வந்திடாதோ”

      என் கவிதை இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html

      அன்புடன்
      கோபு

      Delete
  33. எவ்வளவு விஷயங்கள்? உதவும் பண்பு, எல்லாம் மலைக்க வைக்கிறது. திருப்பித் திருப்பிப் படிக்கத் தூண்டுகிறது. எவ்வளவு மெச்சினாலும் தகும்.

    ReplyDelete
    Replies
    1. Kamatchi December 14, 2012 3:18 AM
      //எவ்வளவு விஷயங்கள்? உதவும் பண்பு, எல்லாம் மலைக்க வைக்கிறது. திருப்பித் திருப்பிப் படிக்கத் தூண்டுகிறது. எவ்வளவு மெச்சினாலும் தகும்.//

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      தங்களின் அன்பான வருகையும் அழகான கோர்வையான கருத்துக்களும், அதுவும் இந்தப்பதிவின் ஒவ்வொரு பகுதிக்கும் தாங்கள் பொறுமையாக எழுதியுள்ள பின்னூட்டங்களும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.

      நன்றியோ நன்றிகள்.

      பிரியமுள்ள
      கோபாலகிருஷ்ணன்

      Delete
  34. உங்களது பன்முகத் திறமை வியக்க வைக்கிறது.

    உங்களுக்குள் ஒளிந்திருக்கும் 'உதவும் மனமும், குணமும்' இந்த பதிவில் வெளி வந்துள்ளது.

    எத்தனை பேருக்கு எப்படியெல்லாம் உதவி இருக்கிறீர்கள்!
    ஒரு அற்புதமான மனிதரை தெரிந்து கொண்ட திருப்தி!

    ReplyDelete
    Replies
    1. Ranjani Narayanan December 17, 2012 1:23 AM

      வாங்கோ திருமதி ரஞ்ஜனி மேடம், வணக்கம்.

      //உங்களது பன்முகத் திறமை வியக்க வைக்கிறது.

      மிக்க நன்றி, மேடம்.

      //உங்களுக்குள் ஒளிந்திருக்கும் 'உதவும் மனமும், குணமும்' இந்த பதிவில் வெளி வந்துள்ளது.

      எத்தனை பேருக்கு எப்படியெல்லாம் உதவி இருக்கிறீர்கள்!//

      நான் எப்போதுமே மிகச்சாதாரணமானவன் தான். ஏதோ சிலருக்கு அப்போது நான் உதவக்கூடிய எண்ணத்தினையும், பண வசதியினையும், சந்தர்ப்பத்தையும் பகவான் கொடுத்திருந்தான் என்று மட்டுமே சொல்லலாம்..

      //ஒரு அற்புதமான மனிதரை தெரிந்து கொண்ட திருப்தி!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      Delete

  35. கோலிக்குண்டு, கில்லித்தாண்டு [கிட்டிப்புள்], பேப்பே பந்து விளையாட்டு, சடுகுடு, பம்பரம் விடுதல், பட்டம் விடுதல் போன்ற விளையாட்டுக்கள் பல ஆர்வத்துடன் வெளியே போய் விளையாடியதுண்டு

    இன்னிக்கு எந்தக்குழந்தைகளுக்கு இதுபோல சந்தோஷமான விளையாட்டுக்கள் விளையாட கிடைக்கிறது? எல்லாக்குழந்தைகளுமே கம்ப்யூட்டர் கேம்சுக்கே அடிமை ஆகிட்டாங்களே. எவ்வளவு வேதனையான விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் April 2, 2013 at 8:12 AM

      வாங்கோ, பூந்தளிர், வணக்கம்

      *****கோலிக்குண்டு, கில்லித்தாண்டு [கிட்டிப்புள்], பேப்பே பந்து விளையாட்டு, சடுகுடு, பம்பரம் விடுதல், பட்டம் விடுதல் போன்ற விளையாட்டுக்கள் பல ஆர்வத்துடன் வெளியே போய் விளையாடியதுண்டு*****

      //இன்னிக்கு எந்தக்குழந்தைகளுக்கு இதுபோல சந்தோஷமான விளையாட்டுக்கள் விளையாட கிடைக்கிறது? எல்லாக் குழந்தைகளுமே கம்ப்யூட்டர் கேம்ஸ்க்கே அடிமை ஆகிட்டாங்களே. எவ்வளவு வேதனையான விஷயம்.//

      ஆமாம். மிகவும் வேதனையான விஷயம் தான். காலம் மாறிப்போச்சு

      Delete
  36. நோட்டு, பேனா, பென்சில், ஸ்கெட்ச்பென் செட், கலர் பாக்ஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், அழிரப்பர், பென்சில் சீவும் கருவி [Sharpener], அட்டை போடும் Brown Paper முதலிய அவர்களுக்குத் தேவைப்படும் எதையாவது வாங்கிக்க் கொடுக்காமல் அனுப்புவது இல்லை.

    உண்மையிலேயே மிக மனித நேயம் உள்ளமனசு அந்த வயசிலேயே வாய்க்கபெற்றிருக்கிரீங்க. இது ஆண்டவன் அருள்தான்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் April 2, 2013 at 8:15 AM

      *****நோட்டு, பேனா, பென்சில், ஸ்கெட்ச்பென் செட், கலர் பாக்ஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், அழிரப்பர், பென்சில் சீவும் கருவி [Sharpener], அட்டை போடும் Brown Paper முதலிய அவர்களுக்குத் தேவைப்படும் எதையாவது வாங்கிக்க் கொடுக்காமல் அனுப்புவது இல்லை.*****

      //உண்மையிலேயே மிக மனித நேயம் உள்ளமனசு அந்த வயசிலேயே வாய்க்கபெற்றிருக்கிரீங்க. இது ஆண்டவன் அருள்தான்.//

      மிகவும் சந்தோஷம். நம் எண்ணங்கள் செயல்கள் எல்லாமே ஆண்டவன் அருளால் மட்டுமே நல்லதாக அமைகிறது.

      Delete

  37. “இவர் பெயர் கோபாலகிருஷ்ணன், இவரிடம் பல திறமைகள் உண்டு, ஆனால் எதையும் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார். என் அப்பாவுடன் சேர்ந்து ஒரே வகுப்பில் SSLC வரை படித்த க்ளாஸ்மேட். என் அப்பாவும் இவரும் ஒரே ஆபீஸில் வேலை பார்த்தவர்கள். BHEL டவுன்ஷிப்பிலும் எங்கள் இருவரின் வீடும் ஒரே பில்டிங்கில் தான் இருந்தது. இவர் மட்டும் அன்று உதவி செய்யாமல் இருந்திருந்தால், நான் எஞ்சினீரிங் காலேஜ் சேர்ந்திருக்கவே முடியாது” என்று சொல்லி கண் கலங்கி விட்டாள்.

    அன்னிக்கே உங்களை நன்கு புரிந்து கொண்டவர்கள் இருந்திருக்காங்க. இன்னிக்கு நாங்களுமே உங்களை நன்கு புரிஞ்சுக்க முடியுது. அதுக்கு உங்க பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் April 2, 2013 at 8:18 AM

      *****“இவர் பெயர் கோபாலகிருஷ்ணன், இவரிடம் பல திறமைகள் உண்டு, ஆனால் எதையும் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார். என் அப்பாவுடன் சேர்ந்து ஒரே வகுப்பில் SSLC வரை படித்த க்ளாஸ்மேட். என் அப்பாவும் இவரும் ஒரே ஆபீஸில் வேலை பார்த்தவர்கள். BHEL டவுன்ஷிப்பிலும் எங்கள் இருவரின் வீடும் ஒரே பில்டிங்கில் தான் இருந்தது. இவர் மட்டும் அன்று உதவி செய்யாமல் இருந்திருந்தால், நான் எஞ்சினீரிங் காலேஜ் சேர்ந்திருக்கவே முடியாது” என்று சொல்லி கண் கலங்கி விட்டாள்.*****

      //அன்னிக்கே உங்களை நன்கு புரிந்து கொண்டவர்கள் இருந்திருக்காங்க. இன்னிக்கு நாங்களுமே உங்களை நன்கு புரிஞ்சுக்க முடியுது. அதுக்கு உங்க பகிர்வுக்கு நன்றி//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல்வேறு சந்தோஷமான கருத்துப் பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், பூந்தளிர்.

      Delete
  38. உங்களின் உதவும் குணம் மிகவும் மெச்சத்தகுந்தது.

    ReplyDelete
  39. இப்போதும்கூட இந்த ரம்மி சீட்டாட்டத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. சரியான ஆர்வமுள்ள ஆசாமிகள் செட் சேர்ந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும். விடியவிடிய நான் தூங்காமல் விளையாடிய நாட்களும் உண்டு.//

    நானும் சூப்பரா விளையாடுவேன்.
    ஆனா இப்ப காசிக்குப் போனபோது நாங்க ரெண்டு பேரும் சீட்டாட்டத்த விட்டுட்டோம்.

    திருச்சிக்கே வீடு மாத்திண்டு வந்து தினமும் உங்க கூட வந்து உக்காந்து பேசிண்டு இருக்கணும் போல இருக்கு கோபு அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya June 18, 2015 at 3:13 PM

      **இப்போதும்கூட இந்த ரம்மி சீட்டாட்டத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. சரியான ஆர்வமுள்ள ஆசாமிகள் செட் சேர்ந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும். விடியவிடிய நான் தூங்காமல் விளையாடிய நாட்களும் உண்டு.**

      //நானும் சூப்பரா விளையாடுவேன்.//

      ஆஹா, சூப்பர். இங்கு என் ஆத்துக்காரி, என் அக்காக்கள், என் பெரிய அண்ணா, என் இரு அத்திம்பேர்கள் என அனைவருமே ஒருகாலத்தில் சீட்டு ஆடுவோம். இருப்பினும் மரியாதை நிமித்தம் சிலர் ஆடும்போது சிலர் கலந்து கொள்வது கிடையாது.

      //ஆனா இப்ப காசிக்குப் போனபோது நாங்க ரெண்டு பேரும் சீட்டாட்டத்த விட்டுட்டோம்.//

      அடப்பாவமே ! :)

      //திருச்சிக்கே வீடு மாத்திண்டு வந்து தினமும் உங்க கூட வந்து உக்காந்து பேசிண்டு இருக்கணும் போல இருக்கு கோபு அண்ணா.//

      நினைப்பதெல்லாம் ........ நடந்துவிட்டால் ........
      :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
      தங்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளுக்கு மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  40. சின்னபுள்ளல வெளயாடிய வெளயாட்டுகள கூட சொல்லினிங்க பட்டம் வுடுரது பள்பரம் கில்லிதண்டா தாயகட்டம்னு எதயுமே வுட்டு வெக்கலேபோல

    ReplyDelete
    Replies
    1. அவையெல்லாம் அந்தக்காலத்து விளையாட்டுகள். பொழுதுபோக்குகள். இப்போது குழந்தைகளுக்கு உள்ளது போல டீ.வி., மொபைல் போன், வீடியோ கேம்ஸ், கணினி என்ற எதுவுமே அன்று கிடையாதே. :)

      Delete
  41. அந்தக்காலத்தில்தான் எத்தனைவிதமான விளையாட்டுக்கள்.உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய விளையாட்டுகள். இன்றோ எல்லாமே வீடியோ கேமிற்குள்ளேயே அடங்கி விட்டதே. கம்ப்யூட்டரில் சீட்டு விளையாட்டு ஸாலிடர் கேம் விளையாடுவதுண்டா.

    ReplyDelete
  42. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களையும்
    வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும்
    ’பரமபதம்’ என்ற விளையாட்டுக்கான படம்/// ரிவர்ஸ் கியர் போட்டாப்பல இருக்கு.

    பிற்காலத்தில் இதுவே என் கற்பனை உருவாக்கங்களின் மூலம், அகில இந்தியப் போட்டிகளில் கலந்து கொள்ளவும், தேசிய விருதினை [ ALL INDIA LEVEL FIRST PRIZE - NATIONAL AWARD ] பெற்றிடவும் உதவியது.// அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா?



    ReplyDelete
  43. உங்க கிட்ட உள்ள திறமைகள் நினச்சா பிரமிப்பா இருக்கு...உங்களுக்கு இன்னும் சரியான அங்கீகாரமே கிடைக்கலை ஸார்... வலைப்பதிவை எவ்வளவு பேரு படிக்குறாங்க. ரொம்பவே கம்மிதான்.. கல்கி..தினமலர் வாரமலரில் எழுதுவதை தொடர்ந்திருக்கலாமே..இன்னும் பல பேரு உங்க திறமையை தெரிஞ்சுக்கணுமே நல்ல வாய்ப்பாக இருந்திருக்குமே.. ஞாபகசக்தி எழுத்து திறமை..உதவி செய்யும் மனிதாபிமானம் எல்லாமே வெளியே தெரியாமகுடத்துள் விளக்காகவே இருக்கீங்களே ஸார்... என் ஆதங்கத்தை சொன்னேன்...ப்ளீஸ் டோண்ட் மிஸ்டேக் மீ...

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... October 23, 2016 at 12:43 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்க கிட்ட உள்ள திறமைகள் நினச்சா பிரமிப்பா இருக்கு...//

      மிகவும் சந்தோஷம். :)

      //உங்களுக்கு இன்னும் சரியான அங்கீகாரமே கிடைக்கலை ஸார்...//

      ’போதும் என்ற மனம்’ படைத்தவன் நான். அதனால் இதுவரை எனக்குக் கிடைத்துள்ளவைகளே எதேஷ்டம் என நினைத்து மகிழ்ச்சியுடன் மிகவும் மனத் திருப்தியுடன் மட்டுமே உள்ளேன்.

      //வலைப்பதிவை எவ்வளவு பேரு படிக்குறாங்க. ரொம்பவே கம்மிதான்..//

      அதனால் பரவாயில்லை. வலைப்பதிவினில் குறிப்பாக என்னுடைய படைப்புக்களை ஆர்வத்துடன் படிப்பவர்கள் அதிகம். அதைவிட மிகவும் சிரத்தையுடன் வாசித்து அதற்கு, டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் ஆக இல்லாமல், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் வோட் அளிக்க வேண்டிய நிர்பந்தங்களும் இல்லாமல், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்குமாறு விரிவாகவும், மனம் திறந்தும் பின்னூட்டக்கருத்துக்கள் அளிப்பவர்களும் மிகவும் அதிகம்.

      நான் தொடர்ந்து வலைத்தளத்தில் மிகவும் உற்சாகமாக எழுதிக்கொண்டிருந்ததன் அடிப்படை நோக்கமே, இதுபோன்ற மிகச்சிறப்பான பின்னூட்டங்களை என் எழுத்து ரஸிகர்களாகிய வாசகர்களிடமிருந்தும், பிற மிகத் திறமைகள் வாய்ந்த பதிவர்களிடமிருந்தும் எதிர்பார்த்து மட்டுமே.

      //கல்கி.. தினமலர் வாரமலரில் எழுதுவதை தொடர்ந்திருக்கலாமே.. இன்னும் பல பேரு உங்க திறமையை தெரிஞ்சுக்கணுமே நல்ல வாய்ப்பாக இருந்திருக்குமே.. ஞாபகசக்தி எழுத்து திறமை.. உதவி செய்யும் மனிதாபிமானம் எல்லாமே வெளியே தெரியாம குடத்துக்குள் இட்ட விளக்காகவே இருக்கீங்களே ஸார்... என் ஆதங்கத்தை சொன்னேன்... ப்ளீஸ் டோண்ட் மிஸ்டேக் மீ...//

      இதில் நான் உங்களை மிஸ்டேக் செய்துகொள்ள என்ன உள்ளது? உங்களின் ஆதங்கத்தை நீங்கள் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நானும் 2005 முதல் 2010 வரை தமிழின் பல்வேறு வார + மாத இதழ்களில் தொடர்ச்சியாக எழுதியுள்ளேன்.

      அதன்பிறகு பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்ப, எனக்குப் பொறுமை இல்லாததாலும், வலைப்பதிவினில் நான் 02.01.2011 முதல் எழுதத் தொடங்கி விட்டதாலும், எனக்கேயுள்ள ’போதும்’ என்ற மனத்தினாலும் என்னை நானே பத்திரிகை உலகிலிருந்து விடுவித்துக்கொண்டு விட்டேன்.

      பத்திரிகைகளில் எழுதுவதால் கிடைக்கும் சன்மானத்தைவிட, புகழைவிட, கண்ணுக்குத் தெரியாத பாபுலாரிடியைவிட, வலைப்பதிவினில் எழுதும்போது, பலரும் என்னைக் கவரும் விதமாக, உடனுக்குடன் கொடுத்துவந்த மிகச்சிறந்த பின்னூட்டங்களையே நான் மிகப்பெரியதோர் சன்மானமாகவும், மிகப்பெரிய அங்கீகாரமாகவும் நினைத்து மகிழ்ந்து வந்துள்ளேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என்னைக் கொஞ்சம் மனம் திறந்து பேச வாய்ப்பளித்துள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  44. ஆஹா... நீங்கள் சிறுவயதில் ஆடிய எல்லா விளையாட்டுக்களையும் (கோலி, கில்லி.. உறவினர்களோடு ரம்மி-செட்டு சேக்கறது அப்புறம் 88, ASS) நானும் விளையாடியிருக்கேன். எல்லாவற்றையும் நினைவுபடுத்திவிட்டீர்கள்.

    தாயக்கட்டை - உண்மையிலேயே BRILLIANT. இந்த மாதிரி எனக்குத் தோன்றியதே இல்லை. 7-8 வருடங்களுக்கு முன்புகூட இந்த விளையாட்டு விளையாடும்போது, 3 பேரோ அல்லது 2 பேரோ இருந்தாலும், அந்த 4 பேருக்கான தாயக்கட்டை விளையாட்டுதான் விளையாடினோம்.

    ஹிந்தி பண்டிட் பற்றியும் அவர் மகன் பற்றியும் நீங்கள் அடுத்த அடுத்த இடுகையில் நினைவுக்கு வந்து சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கறேன். அந்த நடிகர் 'சசிகுமார்'. அவர் மனைவியும் 'சசி' என்று ஆரம்பித்ததாக ஞாபகம். இருவரும் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்கள். சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவியைக் காப்பாற்ற முயன்று நடிகர் சசிகுமாரும் இறந்தார் என்று படித்த ஞாபகம். அந்த சசிகுமார்தான் நீங்கள் சொல்லும் ஹிந்தி பண்டிட்டின் மகனா என்பது எனக்குத் தெரியவில்லை.

    எனது மனதை மிகவும் தொட்டது, நீங்கள் உபயோகித்த பழைய பாட புத்தகங்கள் (புதிதாக வாங்க வசதியில்லாததால்). அதைவிட மிகவும் பிரமித்தது, ரெண்டு ரெண்டு செட்டாக புதுப் புத்தகங்கள் வாங்கி, ஒருவேளை தொலைந்துவிட்டால் இன்னொன்று இருக்கட்டும் என்று பிள்ளைகளுக்காக வாங்கியது. ரொம்ப systematic person நீங்க. இப்போ உள்ள பசங்கள்லாம், ஏதோ இது பெற்றோர்களின் responsibility என்று நினைத்து, 'அம்மா.. புத்தகம் தொலைஞ்சுபோச்சு. புதுசு வேணும்'னு சொல்லி, பிரச்சனையை பெற்றோர்கள்ட திருப்பிடறாங்க. ம்ம். என்ன செய்ய.

    படிப்புக்காகவும், மற்றவர்களுக்காகவும் நீங்கள் உதவி செய்தது மனதை நெகிழ்விப்பதாக இருந்தது. என் மாமனாரும், படிப்புக்கு என்று யார் வந்து கேட்டாலும், உடனே பணம் கொடுத்துவிடுவார். ஆட்டோக்காரன் 10 ரூ அதிகம் கேட்டாலும் கொடுத்துடுவார்.

    என்னிடம் அதற்கு, 'நாம 10 ரூபாய் இழப்பதால் ஏழையாக மாட்டோம். அவனும் 10 ரூபாய் அதிகம் வாங்கி மாளிகை கட்டிவிடமாட்டான்' என்பார். அவர் என்னுடன் பசுபதினாத் கோவிலுக்கு வந்திருந்தபோது (முக்தினாத் பிரயாணம்), நான் சாளிக்கிராமங்களை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்கினேன். அவர், எனக்கும் வாங்குங்கோ என்றார். நான் பேரம் பேசும்போது அவரும் கூட இருந்தார். அப்போதே என்னிடம், 'பெருமாள் வாங்கறோம். பேரம் பேசாதீங்கோ. அவன் கேட்பதைக் கொடுத்துடுங்கோ' என்றார். இவையெல்லாம் எனக்கு ஞாபகம் வந்துடுத்து. உங்கள் எழுத்தில் நிறைய படிப்பினை இருக்கு.

    முன்பின் தெரியாத பெண்ணிற்கும் உதவியிருக்கீங்க. மற்றவர்களின் திறமையை, சொந்தக் காசு (1 பவுன்) செலவழித்து ஊக்கப்படுத்தும் விதமா பாராட்டியிருக்கீங்க. இதை எதுவும் எதிர்பார்த்துச் செய்யாதது, என் மனதைக் கவர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் January 25, 2018 at 3:08 PM

      வாங்கோ ஸ்வாமீ .... வணக்கம்.

      //ஆஹா... நீங்கள் சிறுவயதில் ஆடிய எல்லா விளையாட்டுக்களையும் (கோலி, கில்லி.. உறவினர்களோடு ரம்மி-செட்டு சேக்கறது அப்புறம் 88, ASS) நானும் விளையாடியிருக்கேன். எல்லாவற்றையும் நினைவுபடுத்திவிட்டீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி !

      //தாயக்கட்டை - உண்மையிலேயே BRILLIANT. இந்த மாதிரி எனக்குத் தோன்றியதே இல்லை. 7-8 வருடங்களுக்கு முன்புகூட இந்த விளையாட்டு விளையாடும்போது, 3 பேரோ அல்லது 2 பேரோ இருந்தாலும், அந்த 4 பேருக்கான தாயக்கட்டை விளையாட்டுதான் விளையாடினோம்.//

      பொதுவாக அனைவரும் வரைவது நான்கு பேருக்கான தாயக்கட்டம் மட்டுமே. பிறகு என்னுடன் அன்று பழகிய நண்பர்கள், இதில் நான் புகுத்திய புதுமைகளான இவற்றை, அவர்கள் போய் செட்டில் ஆன பல ஊர்களிலும் பரப்பி விட்டிருக்கலாம்.

      //ஹிந்தி பண்டிட் பற்றியும் அவர் மகன் பற்றியும் நீங்கள் அடுத்த அடுத்த இடுகையில் நினைவுக்கு வந்து சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கறேன். அந்த நடிகர் 'சசிகுமார்'. அவர் மனைவியும் 'சசி' என்று ஆரம்பித்ததாக ஞாபகம். இருவரும் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்கள். சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவியைக் காப்பாற்ற முயன்று நடிகர் சசிகுமாரும் இறந்தார் என்று படித்த ஞாபகம். அந்த சசிகுமார்தான் நீங்கள் சொல்லும் ஹிந்தி பண்டிட்டின் மகனா என்பது எனக்குத் தெரியவில்லை. //

      இருக்கலாம். தாங்கள் சொல்வது ஒருவேளை சரியாகவும் இருக்கலாம். இதை நானும் என் சிறு வயதில் கேள்விப்பட்டுள்ள ஸ்வப்ன ஞாபகம் மட்டும் எனக்கும் கொஞ்சமாக உள்ளது. சினிமா நடிகர்கள் + நடிகைகள் பற்றிய, அவர்களின் பெர்சனல் லைஃப் செய்திகளில் எனக்கு, எப்போதுமே எந்தவொரு ஈடுபாடுகளும் கிடையாது. அதனால் எனக்கு இதுபற்றிய மேல் அதிக விபரங்கள் தெரியவில்லை.

      >>>>>

      Delete
    2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //எனது மனதை மிகவும் தொட்டது, நீங்கள் உபயோகித்த பழைய பாட புத்தகங்கள் (புதிதாக வாங்க வசதியில்லாததால்). அதைவிட மிகவும் பிரமித்தது, ரெண்டு ரெண்டு செட்டாக புதுப் புத்தகங்கள் வாங்கி, ஒருவேளை தொலைந்துவிட்டால் இன்னொன்று இருக்கட்டும் என்று பிள்ளைகளுக்காக வாங்கியது. ரொம்ப systematic person நீங்க. இப்போ உள்ள பசங்கள்லாம், ஏதோ இது பெற்றோர்களின் responsibility என்று நினைத்து, 'அம்மா.. புத்தகம் தொலைஞ்சுபோச்சு. புதுசு வேணும்'னு சொல்லி, பிரச்சனையை பெற்றோர்கள்ட திருப்பிடறாங்க. ம்ம். என்ன செய்ய.//

      இதை அன்று எனக்குச் சொல்லிக்கொடுத்தவர், எனக்கு மேல் அதிகாரியாக 1984 முதல் 1996 வரை இருந்த One Mr. K.M.Balasubramanian, M.A., B.Com., L.L.B., அவர்கள். இன்றும் அவர் திருச்சி உறையூரில் தான் இருக்கிறார். He was not only my immediate Boss but also my Best Friend & Well Wisher. மிகவும் தங்கமான மனிதர். என்னை மேற்கொண்டு படிக்கத் தூண்டி விட்டவரும் அவரே. என்னைவிட 15 வயதுகள் மூத்தவர்.

      //படிப்புக்காகவும், மற்றவர்களுக்காகவும் நீங்கள் உதவி செய்தது மனதை நெகிழ்விப்பதாக இருந்தது. என் மாமனாரும், படிப்புக்கு என்று யார் வந்து கேட்டாலும், உடனே பணம் கொடுத்துவிடுவார். ஆட்டோக்காரன் 10 ரூ அதிகம் கேட்டாலும் கொடுத்துடுவார்.//

      ஆமாம். நம்மிடம் ஓரளவு வசதி வாய்ப்புகள் இருக்கும் போது, நம்மைவிட கொஞ்சம், ஏழை எளியோர்களிடம் இரக்கம் கொண்டு உதவி செய்யத்தான் வேண்டும். அதனால் அவர்களுக்கு ஓர் சந்தோஷமும், நமக்கு ஓர் மனத் திருப்தியும், புண்ணியமும் சேரும்.

      //என்னிடம் அதற்கு, 'நாம 10 ரூபாய் இழப்பதால் ஏழையாக மாட்டோம். அவனும் 10 ரூபாய் அதிகம் வாங்கி மாளிகை கட்டிவிடமாட்டான்' என்பார். அவர் என்னுடன் பசுபதினாத் கோவிலுக்கு வந்திருந்தபோது (முக்தினாத் பிரயாணம்), நான் சாளிக்கிராமங்களை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்கினேன். அவர், எனக்கும் வாங்குங்கோ என்றார். நான் பேரம் பேசும்போது அவரும் கூட இருந்தார். அப்போதே என்னிடம், 'பெருமாள் வாங்கறோம். பேரம் பேசாதீங்கோ. அவன் கேட்பதைக் கொடுத்துடுங்கோ' என்றார். இவையெல்லாம் எனக்கு ஞாபகம் வந்துடுத்து. உங்கள் எழுத்தில் நிறைய படிப்பினை இருக்கு.//

      பேரம் பேச வேண்டிய இடத்தில் நாம் தாராளமாகப் பேசலாம். எல்லோரிடமும், எல்லாப் பொருட்களிலும் பேசுவது அவ்வளவாக அழகல்ல. தங்கள் மாமனாரின் குணம் எனக்கும் பிடித்துள்ளது.

      //முன்பின் தெரியாத பெண்ணிற்கும் உதவியிருக்கீங்க. மற்றவர்களின் திறமையை, சொந்தக் காசு (1 பவுன்) செலவழித்து ஊக்கப்படுத்தும் விதமா பாராட்டியிருக்கீங்க. இதை எதுவும் எதிர்பார்த்துச் செய்யாதது, என் மனதைக் கவர்ந்தது.//

      நான் உதவிய அந்த பெண்கள் யாரும், எனக்கு முன்பின் தெரியாதவர்கள் அல்ல. ஒவ்வொருவரையும் எனக்கு அவர்கள் பிறந்தது முதலாகவே நன்கு தெரியும். அவர்கள் என் நண்பர்கள் + சக ஊழியர்களின் குழந்தைகள் மட்டுமே.

      +2 படிப்பில் School First வந்த அக்கா + தங்கை இருவருக்கும் நான் அன்று கொடுத்த அன்பளிப்பு ஒவ்வொரு கிராம் தங்கக் காசுகள் மட்டுமே. தாங்கள் சொல்லியுள்ளது போல ஒவ்வொரு பவுன் தங்கம் அல்ல.

      அன்புடன் கோபு

      Delete
    3. கோபு சார். எழுத்துப் பிழை. மனதில் ஒரு கிராம் என்று எழுத வந்து, 1 பவுன் என்று எழுதியிருக்கிறேன் போலிருக்கு. உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலைப் பார்த்தபிறகுதான் நான் எழுதியதைப் பார்த்தேன். (We also know 1 gm itself is a very big prize)

      Delete
    4. நெல்லைத் தமிழன் January 26, 2018 at 8:36 PM

      //கோபு சார். எழுத்துப் பிழை. மனதில் ஒரு கிராம் என்று எழுத வந்து, 1 பவுன் என்று எழுதியிருக்கிறேன் போலிருக்கு. உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலைப் பார்த்தபிறகுதான் நான் எழுதியதைப் பார்த்தேன். (We also know 1 gm itself is a very big prize)//

      பரவாயில்லை ஸார், நானும் புரிந்து கொண்டேன். அவர்களின் அந்த மிகப்பெரிய சாதனைகளுக்கு ஒரு பவுன் தங்கமே கூட கொடுக்கலாம்தான். ஆனால் என்னுடைய அன்றைய பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுத்திருக்காது என நினைக்கிறேன்.

      இருப்பினும் இதில் அன்று அன்பளிப்புக் கொடுத்த எனக்கும், பெற்றுக்கொண்ட அந்தக் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் அதிக மகிழ்ச்சியாகவே இருந்தது.

      Delete