About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, March 31, 2012

வாழ்க்கைத்துணை வாய்ப்பதெல்லாம் .......... !


சிரித்து வாழ வேண்டும்


அன்புடையீர்,


வணக்கம்.

விசித்திர அப்பனும் .... விபரீதப் பிள்ளையும் ! என்ற தலைப்பில் நான் ஒருசில ஆங்கில நகைச்சுவைத் துணுக்குகளை தமிழாக்கம் செய்து 29.04.2012 அன்று வெளியிட்டிருந்தேன்.

அதைப்படித்து மகிழ்ந்த மும்பையில் இருக்கும் என் நண்பர் ஒருவர், அவருக்கு மின்னஞ்சல் மூலம் ஆங்கிலத்தில் வந்திருந்த ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளை எனக்கு அனுப்பியுள்ளார். 

முடியுமானால் இவற்றையும் தமிழாக்கம் செய்து வெளியிடுங்கள் என்ற அன்புக்கட்டளையும் இட்டுள்ளார்கள்.. 

கணவன் மனைவி என்ற மிகவும் புனிதமான, தெய்வீகமான, ஆத்மார்த்தமான, மிகுந்த நம்பிக்கைக்கு உரிய, சுகானுபவம் தரக்கூடிய ஓர் உறவை கேலிசெய்யும் விதமாக உள்ள அவைகளில் பலவற்றை தமிழாக்கம் செய்து வெளியிட எனக்கு விருப்பம் இல்லாததால், அவற்றில் பலவற்றை நான் தள்ளுபடிசெய்து தனியே ஒதுக்கிவிட்டேன். 

ஏதோ அவற்றில் கொஞ்சமாவது நாகரீகமாக இருப்பவைகளை மட்டும் [மொத்தம் 11 மட்டுமே] இங்கு தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளேன். 


கணவன் மனைவி இருவருக்குமே அவரவர்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற்போல வாழ்க்கைத்துணை ஏற்பட்டு விடுவதில்லை. அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்பதே உண்மை. 


ஏதோ ’அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை’ என்று தங்கள் மனதை தாங்களே சமாதானப் படுத்திக்கொண்டுதான், பெரும்பாலான தம்பதிகள் இன்று அனுசரித்துப்போய்,பலவிஷயங்களில் தங்களுக்கு முழுவிருப்பம் இல்லாவிட்டாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொண்டு வாழவேண்டியவர்களாகத் தான் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

இந்தப்பதிவினைப் படிப்பவர்கள் என்னை தயவுசெய்து தவறாக ஏதும் நினைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவற்றில் உள்ள நகைச்சுவைக் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு ஏதும் இல்லை. இவை என் சொந்தக் கருத்துக்களும் இல்லை.

ஒருசில தேவையான மாற்றங்களுடன் தமிழாக்கம் மட்டுமே என்னால் செய்யப்பட்டுள்ளது.  

படிக்கும் அனைவரும் தயவுசெய்து யாரோ எழுதிய நகைச்சுவையாக மட்டுமே இவற்றை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்
vgk


1) 

செல்போனில் கணவன் மனைவியிடம்:

”என் செல்லமே!
எங்கே இருக்கிறாய் இப்போது?
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

மனைவி:

”ஐ யம் டையிங்”  [I am Dying] 

கணவன்: [சந்தோஷத்துடன் குதித்துக்கொண்டே] :

"நீ இல்லாமல் நான் இனி எப்படி வாழ்வேன், மை டியர் ஸ்வீட்டி?”

மனைவி:

”முட்டாள் தனமாக ஏதாவது உளறாதீர்கள்.

நான் ப்யூட்டி பார்லரில் என் தலைமுடிக்கு 
“டை” [DYE] அடித்துக்கொண்டிருக்கிறேன்.”

[அவள் “ஐ யம் டையிங” என்று சொன்னதை ”அவள் இறந்து கொண்டு இருப்பதாக” இந்தக் கணவர் புரிந்து கொண்டு விட்டார், போலும்]


2)

செல்போனில் ஒரு மனைவி மிகுந்த கோபத்துடன் தன் கணவரிடம்:

”எங்கே போய்த்தொலைந்தீர்கள்?. ரொம்ப நேரமாகக் காணோம்?”

ஊர் சுற்றும் கணவன் [சமாளித்தபடியே]:

அன்பே! அன்றொரு நாள் நகைக்கடைக்கு நாம் சென்றோமே!

நீ கூட ஒரு வைர நெக்லஸ் உனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று சொன்னாயே! 


நான் கூட என்னிடம் தற்சமயம் அதை வாங்கித்தரும் அளவுக்குப் பணம் இல்லை; இருப்பினும் என்றாவது ஒரு நாள் அது உனக்கே சொந்தமாகும் என்று சொன்னேனே! 


நினைவிருக்கிறதா?

அந்தக்கடையில் அந்த நெக்லஸ் இப்போதும் உள்ளதா அல்லது வேறு ஏதாவது புதிய டிசைனில் வந்திருக்கிறதா, என்று தான் உனக்காக நான் ஆசை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மனைவி:

ஆஹா! நீங்களே என் தங்கம் .... வைரம்!  உங்களுக்குத் தான் என் மீது எவ்வளவு ஆசை!! நான் அதே கடைக்கு அடுத்த கடையில் தான் உள்ளேன்; இதோ வந்து விடுகிறேன். அங்கேயே இருங்கோ!!!

[எங்கேயோ ஊர் மேய்ந்து கொண்டிருக்கும் கணவனுக்கு இதைக்கேட்டதும் மயக்கமே வந்து விட்டது]


3)

ஒரு விமானக்கம்பெனி ஒரு சலுகை அறிவிப்பு தந்திருந்தது. அதாவது குறிப்பிட்ட ஒரே ஒரு நாள் மட்டும், விமானப் பயணம் செய்யும் கணவனுக்கு மட்டும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் போதும்;  மனைவி இலவசமாகவே கணவனுடன் பயணம் செய்யலாம், என்று அறிவிப்பு.

அடித்துப்பிடித்து அனைவரும் டிக்கெட் வாங்கி விட்டனர்.

ஜோடிஜோடியாக மிகவும் ஜாலியாக விமானத்தில் இன்பப்பயணம் போய் விட்டு உல்லாசமாக ஊர் திரும்பி விட்டனர்.

ஒரு வாரம் கழித்து, தொலைபேசிமூலம் மனைவிகளை மட்டும் தொடர்புகொண்டு, ”இந்தப்பயணம் அவர்களுக்கு எவ்வாறு திருப்தியாக அமைந்தது” என்று பேட்டி எடுத்தனர் விமானக் கம்பெனியார்.

.................
.........................
...............................
.......................................
..................................................
...........................................................
..................................................................

”எந்தப்பயணம்?” என்றனர் தொடர்பு கொள்ளப்பட்ட அனைத்து மனைவிமார்களும்.
.

4)

கணவன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மனைவியிடம் டாக்டர் சில அறிவுரைகள் கூறினார்:

1)  நல்ல சத்துள்ள ஆகாரமாக அவருக்கு அளியுங்கள்.


2) நல்ல மனநிலையில் எப்போதும் அவர் சந்தோஷமாக இருக்கும்படி  
    மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.


3) உங்கள் பிரச்சனைகள் எதையும் அவரிடம் சொல்லாதீர்கள்


4) டி.வி. சீரியல் நீங்களும் பார்க்க வேண்டாம். அவரும் பார்க்க வேண்டாம்.


5) புத்தாடைகளோ நகைகளோ கேட்டு அவரை நச்சரிக்க வேண்டாம்.


6) இவற்றையெல்லாம் ஓர் ஆண்டுக்கு மட்டும் கடைபிடியுங்கள் போதும். 
 அவர்  பிழைத்து பழையபடி நல்லாவே ஆகிவிடுவார். கவலை வேண்டாம்.

திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் கணவர் மனைவியிடம் கேட்கிறார்:

”டாக்டர் உன்னிடம் என்ன சொன்னார்?”
.
மனைவி:

”நீங்கள் உயிருடன் இருக்க கொஞ்சமும் சான்ஸே இல்லை என்று சொன்னார்.”5)

ஒரு மனைவி தன் செல்போனில் சிம்கார்டை மாற்றி விட்டு தன் கணவருடன் பேசி அவரை வியப்பில் ஆழ்த்த நினைத்தாள்.

கணவர் ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது, மனைவி சமையல் அறையில் சிம் கார்டை மாற்றி விட்டு புது நம்பரோடு பேசுகிறாள்:

”ஹலோ .... டார்லிங்க்”

க்ணவர் தன் குரலை மிகவும் மெதுவாக்கிக்கொண்டு

“நான் சிறிது நேரத்திற்குப்பின் உன்னை மீண்டும் அழைக்கிறேன்.


உன் குரல் தேன் போல என் காதினில் இனிமையாகப் பாய்கிறது. 


என் வாயை அடிக்கடி ஊமையாக்கிவிடும் என்னவள், இப்போது கிச்சனில் இருப்பதால், என்னால் உன்னுடன் இப்போது மகிழ்ச்சியுடன், சுதந்திரமாகப் பேசமுடியாமல் உள்ளது, 


வெரி ஸாரி டியர்; 


புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்................”


6)

ஒரு கணவர், தன் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவளின் போட்டோவைக் குறிவைத்து கத்திகளை விட்டெறிந்து கொண்டிருந்தார்.

ஒரு கத்தியும் சரியாக அவளின் படத்தின் மேல் படாமல் குறி தவறிப்போய் கீழே விழுந்து கொண்டே இருந்தன.

அப்போது எதிர் பாராதவிதமாக அவர் மனைவியிடமிருந்து ஓர் செல்போன் அழைப்பு.

மனைவி: 
“இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்”

கணவரின் நேர்மையான பதில்:

”மிஸ்ஸிங் யூ”7)

கணவரிடம் ஒருவர் பேட்டியெடுக்கிறார்.

பேட்டியாளர்:
”நீங்கள் இன்று பல லக்ஷங்களுக்கு அதிபதி ஆனதற்கு எதைக்காரணமாக நினைக்கிறீர்கள்?”

கணவர்:
”எல்லாவற்றிற்குமே என் மனைவியே காரணம் என நினைக்கிறேன்.”

பேட்டியாளர்:        
”அப்படியா, மிக்க மகிழ்ச்சி! 
திருமணத்திற்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள்?”

கணவர்:
”பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தேன்”.


8)

எப்போது பார்த்தாலும் செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும் தன் கணவரிடம் மனைவி ஆசையுடன் கூறுகிறாள்:

”நான் ஒரு பெண்ணாக, உங்களின் மனைவியாக இல்லாமல் அந்த்ச் செய்தித்தாளாகவே இருக்கலாம் போல் தோன்றுகிறது. அப்போதாவது என்னை எப்போதும் உங்கள் கரங்களால் தழுவிக்கொண்டிருக்கும் பாக்யம் பெறுவேன், அல்லவா!”

கணவர்:

”நானும் அதையே தான் எதிர்பார்க்கிறேன். நீ செய்தித்தாள் போல இருந்தால்தான் நல்லது. நானும் தினமும் உன்னைத் தூக்கி எறிந்துவிட்டு புதியதாக மறுநாள் வேறொன்றை அனுபவிக்க செளகர்யமாக இருக்கும்.”


9)

HELL [ஹெல்] = ந ர க ம்.

ஹெல்லுக்குச் சென்ற ஓர் கணவர் அங்கிருந்து பூலோகத்தில் உள்ள தன் மனைவிடம் செல்போனில் பேச அங்கிருந்த குட்டிப்பிசாசு ஒன்றிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.

குட்டிப்பிசாசும் தன் செல்போனை அவருக்குக் கொடுத்து உதவுகிறது.

பேசிமுடித்த அவர், செல் போனில் பேசியதற்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று கேட்கிறார்.

“ HELL TO HELL FREE " என்கிறது அது.

[ஒரு நரகத்திலிருந்து வேறொரு நரகத்துடன் பேசுவதால் இலவசம் தானாம்]  .
10)

டாக்டர்: 
”தங்கள் கணவருக்கு பரிபூரண ஓய்வும் அமைதியும் இப்போது தேவை.மேடம். இந்தாருங்கள், அதற்கான தூக்க மாத்திரைகள்.”

மனைவி:
நான் எப்போது இதை அவருக்குத் தர வேண்டும்?

டாக்டர்:
இந்த மாத்திரைகள் அவருக்கு அல்ல;  தங்களுக்கு மட்டுமே.
11)

மனைவி கண்வரிடம்:

”நீங்கள் நிறைய புதுத்துணிமணிகளும், புதிய நகைகளும் எனக்கு வாங்கித்தருவதாக நேற்று இரவு சொப்பணம் கண்டேனுங்க!”

கணவர்:

”நானும் அதே கனவு கண்டேன். ஒரு சின்ன வித்யாசம் மட்டுமே.

அதாவது நான் உனக்கு வாங்கித்தந்த அனைத்து ஜவுளி+நகைகளுக்கான பணம் முழுவதையும் உங்க அப்பாவே கொடுப்பது போல எனக்கு கனவில் வந்தது.”
37 comments:

 1. மொழிபெயர்ப்பு அற்புதம்...

  நல்ல காமடி போங்க

  ReplyDelete
 2. கணவரின் நேர்மையான பதில்:

  ”மிஸ்ஸிங் யூ”
  "வாழ்க்கைத்துணை வாய்ப்பதெல்லாம் ....
  ஆண்டவன் அளிக்கும் அற்புத வரம்!

  ReplyDelete
 3. நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.. எனக்குத் தெரிந்த ஒரு தம்பதி கேலியாகப் பேசிக் கொள்வதைக் கேட்டால் ஆச்சர்ய்மாய் இருக்கும். ஆனால் அவர்கள் அந்நியோன்யமாய் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 4. எல்லாமே ரசிக்கும்படி இருந்தன. வாய்விட்டு சிரித்தேன். நீங்கள் சொன்னவிதமும் ரசிக்க வைத்தது.

  ReplyDelete
 5. ரசித்தேன்..... நகைச்சுவைக்காக சரி......

  ReplyDelete
 6. நகைச்சுவை என்ற பார்வையுடன் ரசிக்கத் தகுந்தவையே.தமிழாக்கம் நன்றாக இருக்கிறது.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 7. எல்லாமே ரசிக்கும்படி இருந்தன. வாய்விட்டு சிரித்தேன். நீங்கள் சொன்னவிதமும் ரசிக்க வைத்தது

  ReplyDelete
 8. VGK அவர்களுக்கு வணக்கம்!
  மற்றவர்களுக்காக போலியாக வாழ்பவர்களைப் பற்றிய நல்ல நகைச்சுவைக் காட்சிகள். முன்னுரையாக நீங்கள் சொன்ன வார்த்தைகள் கோடி பெறும்.

  ReplyDelete
 9. விளக்கமான முன்னுரைக்கு நன்றி! :-)
  படங்கள் அருமை. ஒரே ஒரு ஜோக்குக்கு மட்டும் என் முந்தைய பதிவில் ஒரு அடிஷன் போட்டிருக்கிறேன் - இந்தச் சுட்டியில்!! :-))

  ReplyDelete
 10. சுட்டி: http://middleclassmadhavi.blogspot.in/2011/05/blog-post_26.html

  ReplyDelete
 11. middleclassmadhavi said...
  //விளக்கமான முன்னுரைக்கு நன்றி! :-)
  படங்கள் அருமை. ஒரே ஒரு ஜோக்குக்கு மட்டும் என் முந்தைய பதிவில் ஒரு அடிஷன் போட்டிருக்கிறேன் - இந்தச் சுட்டியில்!! :-))

  middleclassmadhavi said...
  சுட்டி: http://middleclassmadhavi.blogspot.in/2011/05/blog-post_26.html//

  நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது.

  தங்கள் பதிவினை மீண்டும் ஒருமுறை இன்று போய் படித்தேன். மகிழ்ச்சி. மீண்டும் ஒரு பின்னூட்டம் அங்கும் அளித்துள்ளேன்.

  தாங்கள் கொடுத்துள்ள அடிஷன் ரஸிக்கும் படியாகவே உள்ளது.

  இவர் இங்கு மனைவியின் புகைப்படத்தினை வைத்துக்கொண்டு எவ்வாறெல்லாம் நடந்துகொள்கிறாரோ அவ்வாறெல்லாம் நடந்து கொள்ள அந்த மனைவிக்கு உரிமையுள்ளது தானே! ;)))))

  மிக்க நன்றி, மேடம். vgk

  ReplyDelete
 12. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து தங்களின் அழகான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பித்துள்ள

  திருவாளர்கள்:
  ==============

  01. மனசாட்சி Sir அவர்கள்
  02. ரிஷபன் Sir அவர்கள்
  03. சென்னை பித்தன் Sir அவர்கள்
  04. விச்சு Sir அவர்கள்
  05. பழனி. கந்தசாமி Sir அவர்கள்
  06. சீனி Sir அவர்கள்
  07. தி. தமிழ் இளங்கோ Sir அவர்கள்

  மற்றும்

  திருமதிகள்:
  ===========

  01. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்
  02. கோவை2தில்லி Madam அவர்கள்
  03. ராஜி Madam அவர்கள்
  04. லக்ஷ்மி Madam அவர்கள்
  05. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  ReplyDelete
 13. மொழிபெயர்ப்பு அற்புதம்...
  உங்கள் முன்னுரை இன்னும் அற்புதம்.
  அன்புடன் எம்.ஜே.ராமன்

  ReplyDelete
 14. Manakkal said...
  //மொழிபெயர்ப்பு அற்புதம்...
  உங்கள் முன்னுரை இன்னும் அற்புதம்.
  அன்புடன் எம்.ஜே.ராமன்//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

  Sir,

  Thanks a lot for the help extended to me to bring out this post. vgk

  ReplyDelete
 15. படித்தேன்! சிரித்தேன்!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 16. Seshadri e.s. said...
  படித்தேன்! சிரித்தேன்!
  -காரஞ்சன்(சேஷ்)//

  மிக்க நன்றி, சார்.

  ReplyDelete
 17. நல்ல நகைச்சுவைகள் ரசித்தேன்.

  நகைச்சுவையை நகைச்சுவையாகப் பார்த்திட்டால் பிரச்சனை இல்லை, அதைத்தாண்டி அலசி ஆராயக்கூடாது... எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.

  போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து.

  ReplyDelete
  Replies
  1. athira November 4, 2012 1:06 AM
   //நல்ல நகைச்சுவைகள் ரசித்தேன்.//

   ரொம்ப சந்தோஷமாக உள்ளது, அதிரா.

   //நகைச்சுவையை நகைச்சுவையாகப் பார்த்திட்டால் பிரச்சனை இல்லை, அதைத்தாண்டி அலசி ஆராயக்கூடாது...//

   அதே அதே சபாபதே ! அதிரபதே !! ;)))))

   //எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.//

   ஆஹா! என்னுடன் ’அதி’ரஸம் பகிர்ந்து கொண்ட ’அதி’ராவும் அழகு, அதிராவின் எண்ணங்களும்
   அதைவிட அழகூஊஊஊஊஊஊ.

   மிக்க மகிழ்ச்சி அதிரா.

   //போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து.//

   அடடா! போதும் போதும் என இங்கு பின்னூட்டங்களை நிறுத்திட்டீங்களே அதிரா ! ;(

   பிரியமுள்ள
   கோபு அண்ணன்

   Delete
 18. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

  அன்புடையீர்,

  வணக்கம்.

  31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இதுவரை, 2011 ஜனவரி முதல் 2012 மார்ச் வரையிலான 15 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

  என்றும் அன்புடன் VGK

  ReplyDelete
 19. எல்லா ஜோக்குகளுமே வெறும் நகைச்சுவைக்காக எழுத பட்டது தானே. சிரிச்சாச்சு

  ReplyDelete
  Replies
  1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 மார்ச் வரை முதல் பதினைந்து மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 20. நல்ல ஜோக்ஸ்தான். நீங்கள் பீடிகை போட்டது போல் ஒன்றும் தவறாக இல்லை.

  இதெல்லாம் நம் வாழ்க்கையில் நடக்காத வரை மகிழ்ச்சி தான்.

  நல்லவேளை நான் தப்பித்தேன். ரமணி சார் நல்ல மனுஷர்.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

   அன்புள்ள ஜெயா,

   வணக்கம்மா !

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 மார்ச் வரை முதல் பதினைந்து மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 21. ஏங்க புருசன் பொஞ்சாதிகள இம்பூட்டு கலாச்சினீங்க.

  ReplyDelete
  Replies
  1. mru October 20, 2015 at 11:32 AM

   வாங்கோ முருகு, வணக்கம்.

   //ஏங்க புருசன் பொஞ்சாதிகள இம்பூட்டு கலாச்சினீங்க.//

   நான் கலாய்க்கவில்லை. இதெல்லாம் ஆங்கிலத்தில் வந்த ஜோக்குகள். அவற்றில் நான் ரஸித்து மகிழ்ந்த சிலவற்றை மட்டும், தமிழில் மொழியாக்கம் செய்து, சற்றே நகைச்சுவையுடன், உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன்.

   Delete
 22. ஏங்க புருசன் பொஞ்சாதிகள இம்பூட்டு கலாச்சினீங்க.

  ReplyDelete
 23. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

  அன்புள்ள (mru) முருகு,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 மார்ச் மாதம் வரை, முதல் பதினைந்து மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

  ReplyDelete
 24. கணவன் மனைவி ஜோக்குகளின் வரிசை சில ரசிக்கும்படி இருக்கு.

  ReplyDelete
 25. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 மார்ச் மாதம் முடிய, என்னால் முதல் 15 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 26. மொழி பெயர்ப்பு என்று தோன்றவில்லை...2,3,4 ரசித்தேன்..

  ReplyDelete
 27. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  271 out of 750 (36.13%) within
  8 Days from 26th Nov. 2015.
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

  அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 மார்ச் மாதம் வரை, என்னால் முதல் 15 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 28. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 மார்ச் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 15 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 29. ஜோக்குகளைப் படித்தேன். என்னவோ இப்போல்லாம் இந்த கணவன்-மனைவி ஜோக்குகள் பிடிப்பதில்லை. உண்மை நிலவரம், இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதனாலா என்று தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழன் January 24, 2018 at 5:32 PM

   வாங்கோ .... வணக்கம்.

   //ஜோக்குகளைப் படித்தேன். என்னவோ இப்போல்லாம், இந்த கணவன்-மனைவி ஜோக்குகள் பிடிப்பதில்லை.//

   எனக்கும் அப்படியேதான். :)

   //உண்மை நிலவரம், இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதனாலா என்று தெரியவில்லை.//

   ஒருவேளை அப்படியும் இருக்கலாம்.

   Delete