About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, March 8, 2012

காரடையார் நோன்பு 14.03.2012 புதன்கிழமை [ஸாவித்ரி கெளரி விரதம்]



மாசியும் பங்குனியும் கூடும் 

விசேஷமான நாள்
காரடையார் நோன்பு 
14.03.2012 புதன்கிழமை 
[ஸாவித்ரி கெளரி விரதம்]





காரடையார் நோன்பு 14.03.2012 புதன்கிழமை

நோன்பு சரடு கட்டிக்கொள்ள நல்ல நேரம்
காலை 9.25 முதல் 9.45 வரை

 சரடு கழுத்தில் கட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

தோ3ரம் க்3ருஹ்ணாமி ஸுப4கே3 ஸஹாரித்3ரம் த4ராம்யஹம்
ப4ர்த்து: ஆயுஷ்ய ஸித்4யர்த்த2ம் ஸுப்ரீதா ப4வ ஸர்வதா3

ஸ்லோகத்தின் அர்த்தம்:

ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும். 

கார் அரிசியை மாவாக்கி புதிய துவரம்பருப்புடன் சேர்த்து அடையாகத் தட்டி தெய்வங்களுக்கு நிவேதனம் செய்து நோன்பு செய்யப்படுவதால் காரடையார் நோன்பு என்று இதற்குப் பெயர்.

பெண்களுக்கும் அவர்களது கணவர்களுக்கும் நீண்ட ஆயுளையும் அன்பையும் வளர்க்கும் இந்த விரதத்தை முதன் முதலாக செய்து காட்டி, தனது கணவன் ஸத்யவானை யமனிடமிருந்து மீட்டாள் பதிவ்ருதையான ஸாவித்ரீ தேவி.




மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்க இருக்கும் நேரத்திற்கு சற்று முன்பாகவே, அதாவது மாசியிலேயே ஸுமங்கலிப் பெண்கள் நியமத்துடன் இருந்து இந்த விரதத்தைச் செய்ய வேண்டும்.

வீட்டில் தெய்வ ஸந்நதியில் கோலம் போட்டு, விளக்கேற்றி, வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலை வீதம் எண்ணி நுனி வாழை இலைகளாகக் கோலத்தின் மீது [நுனிப்பகுதி வடக்கு நோக்கி இருக்குமாறு] போட வேண்டும்.

அந்த இலைகளின் நுனிப்பகுதியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நடுவில் பூ கட்டிய மஞ்சள் சரடு ஆகியவற்றை வைத்து, இலையில் நடுப்பகுதியில் இரண்டு வெல்ல அடைகளும்@ வெண்ணெயும் வைக்க வேண்டும். [@ இதை வெல்லக் கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள்] 

குடும்பத்தில் வயதான பெண்களில் ஒருவர் மட்டும், தங்கள் இலையில் மட்டும், அம்மனுக்குக் கட்ட என்று ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.  

மொத்தம் போடப்பட்டுள்ள நுனி இலைகள் 1,3,5,7,9 என ஒற்றைப்படையில் வருமேயானால், ஒரு இலையை அதிகமாகப்போட்டு 2,4,6,8,10 என இரட்டைப்படையில் வருமாறு இலைகளைப் போட வேண்டும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு இலைக்கு முன்பாகவும் நின்று கொண்டு ஜலத்தினால் மும்முறை இலையைச்சுற்றி விட்டு,  


“உருகாத வெண்ணெயும் 
ஓரடையும் உண்டானாலும், 
ஒருக்காலும் என்னை விட்டு, 
என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்” 


ன்னும் வாக்கியங்களைச் சொல்ல வேண்டும்.  

பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் தெய்வ ஸந்நதியில் அமர்ந்து கொண்டு, ஒரு சரட்டினை அம்மனுக்குக் கட்டிவிட்டு, மற்றொரு சரட்டினை 


தோ3ரம் க்3ருஹ்ணாமி ஸுப4கே3 ஸஹாரித்3ரம் த4ராம்யஹம்
ப4ர்த்து: ஆயுஷ்ய ஸித்4யர்த்த2ம் ஸுப்ரீதா ப4வ ஸர்வதா3


என்ற ஸ்லோகம் சொல்லியபடி தானும் கழுத்தில் கட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கும் அதே போல கட்டி விட வேண்டும். 

பிறகு அடையில் ஒன்றை தனது கணவருக்கு என்று தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, கணவரிடம் அதைக் கொடுத்து சாப்பிடச்சொல்ல வேண்டும்.  தானும் மற்றொரு அடையைச் சாப்பிட வேண்டும்.

தயார் செய்த அடையில் [கொழுக்கட்டைகளில்] இரண்டு அடைகளை [கொழுக்கட்டைகளை] மறுநாள் காலையில் பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும். 




இவ்விதம் காரடையான் நோன்பைச் செய்வதால், நோன்பு செய்யும் பெண்களுக்கும், அவர்களது கணவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும்.  அன்பு பெருகும்.




[இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள பல தகவல்கள் 
ஒரு ஆன்மிக மாத இதழில் 
நான் சமீபத்தில் படித்து அறிந்து கொண்டவை vgk]




பின் குறிப்பு : 

இந்த வெல்லக்கொழுக்கட்டை மற்றும் உப்புக்கொழுக்கட்டையை புதிதாகச் செய்பவர்கள், அவற்றை எப்படிச்செய்ய வேண்டும் என்ற பக்குவத்தை, இதை நன்றாக செய்து அனுபவமுள்ளவர்களிடம், தயவுசெய்து கேட்டுத் தெரிந்து கொண்டு செய்யவும். 

அப்போது தான் அது பூப்போல மிருதுவாகவும். வாய்க்கு ருசியாகவும், சாப்பிடத் திருப்தியாகவும் அமையும்.

இல்லாவிட்டால் ஒரேயடியாக ரப்பர் பேப்பர் வெயிட் [RUBBER PAPER WEIGHT] போல கடினமாக அமைந்து விடும்.  


கையினால் புட்டுச் சாப்பிட முடியாமல் காய்ந்து போன கோந்துக்கட்டி போல [GUM]  கெட்டியாகி வாய்க்கு ருசிப்படாமல், பற்களில் ஈஷிக்கொண்டு படாதபாடு படுத்திவிடும். 


ஆசையாக சாப்பிட வாயில் போடும் போது,  தப்பித்தவறி காலில் விழுந்து விட்டால் கால் நகத்தையே பெயர்த்து விடும். 

மறுநாள் பசு மாட்டுக்குக் கொடுக்கும் போது அதுவும் அசை போட்டு சாப்பிட மிகவும் கஷ்டப்படும். அல்லது ’எனக்கு இது வேண்டவே வேண்டாம்’ என மறுத்து விடவும் கூடும்.  

இது நகைச்சுவைக்காக மட்டும் நான் எழுதவில்லை. 

எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும். 

அவ்வாறு ருசியாக பதமாக அமையாமல் போய்விட்டால், அதை செய்ய நாம் உபயோகித்த மூலப்பொருட்கள், நம் கஷ்டமான உழைப்பு, பொன்னான நேரம், அதற்கான எரிபொருள் எல்லாமே வீணாகிவிடும் அல்லவா! 

அதனால் தான் சொல்கிறேன்.  தயவுசெய்து யாரும் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்.   

நல்லபடியாக வாய்க்கு ருசியாக, பூப்போல மிருதுவாக கொழுக்கட்டைகள் அமைய என் அன்பான வாழ்த்துகள்.  

தீர்க்க சுமங்கலி பவ !

அன்புடன் vgk
08.03.2012

-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-O-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-

நன்றி அறிவிப்பு


சமீபத்தில் நம்மிடையே ஒரு மிகச்சிறந்த மஹானாக விளங்கி, மிகவும் எளிமையாக வாழ்ந்து, பலருக்கும் நல்வழி காட்டி அருளிய ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அவர்கள் பற்றியும், அவரின் அதிஷ்டானம் அமைந்திருக்கும் இடம் பற்றியும், பக்தி மார்க்கம், ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை, ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை, ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் முதலியன பற்றி ஸ்ரீ ஸ்வாமிகள் அவ்வப்போது சொன்ன கருத்துக்களையும் 14 .02.2012  முதல் 07.03.2012 வரை இருபது சிறிய பகுதிகளாகப் பிரித்து பதிவிட்டிருந்தேன்.

இந்த ஸத் விஷயப் பதிவுகளுக்கு அவ்வப்போது அன்புடன் வருகை தந்து, அருமையான கருத்துக்கள் கூறி, சிறப்பித்து ஊக்கமளித்த என் அன்புக்குரிய அனைத்துப் பதிவுலக தோழர்களுக்கும், தோழிகளுக்கும், நண்பர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


வருகை தந்து சிறப்பித்தவர்கள்

திருமதிகள்:
============


கீதமஞ்சரி அவர்கள்
ஷக்திப்ரபா அவர்கள்
ரமாரவி [ராம்வி] அவர்கள்
விஜி அவர்கள்
கோவை2தில்லி அவர்கள்
சந்த்ரவம்சம் அவர்கள்
உஷா ஸ்ரீகுமார் அவர்கள்
மீரா அவர்கள்
இராஜராஜேஸ்வரி அவர்கள்
தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் [ஆச்சி] அவர்கள்
கோமதி அரசு அவர்கள்
லக்ஷ்மி அவர்கள்
கோவைக்கவி அவர்கள்
மாதேவி அவர்கள்
அதிரா அவர்கள்
மாலதி அவர்கள்


திருவாளர்கள்:
================


பழனி.கந்தசாமி அவர்கள்
ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்
வெங்கட் நாகராஜ் அவர்கள்
மணக்கால் அவர்கள்
G. கணேஷ் அவர்கள்
கே,பி.ஜனா அவர்கள்
ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள்
ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள்
சென்னை பித்தன் ஐயா அவர்கள்
ரிஷபன் அவர்கள்
அப்பாதுரை அவர்கள்
நம்பிக்கை பாண்டியன் அவர்கள்
’அவர்கள் உண்மைகள்’ அவர்கள்
புல்வர் இராமாநுசம் ஐயா அவர்கள்
ஸ்ரீனிவாசன் ராமகிருஷ்ணன் அவர்கள்
தமிழ்விரும்பி ஆலாசியம் அவர்கள்


 அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.




இந்த ஸத்விஷயத் தொடர்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் [பகுதி 1 முதல் 20 வரை] மிகுந்த ஆர்வத்துடன்,தவறாமல் வருகை தந்து சிறப்பித்துள்ள கீழ்கண்ட ஐந்து பதிவர்களுக்கும், அவர்களின் ஈடுபாட்டினை மிகவும் பாராட்டி, என் நெஞ்சார்ந்த கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


 திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்

 திருமதி விஜி அவர்கள்

  திருமதி கோமதி அரசு அவர்கள்

  திருமதி கோவை2தில்லி அவர்கள்

  திருமதி ஷக்தி ப்ரபா அவர்கள் 



அனைவருக்கும்
என் அன்பான 
வாழ்த்துகள்+நன்றிகள்

அனைத்துப் பெண்மணிகளுக்கும் 
சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்


பின்குறிப்பு

இந்தத் தொடர் பதிவுகளை மிகுந்த ஈடுபாட்டுடன் படித்து வருபவரும், ஏற்கனவே தன் வீட்டிலேயே பகவானுக்கு கல்யாண உத்ஸவங்களை, ஆண்டுதோறும் வெகு சிறப்பாகக் கொண்டாடி வருபவருமான பக்தை ஒருவருக்கு, இந்தத்தொடரினை படிக்க ஆரம்பித்ததிலிருந்து பலவிதமான சுகானுபவங்கள் ஏற்பட்டு, நாளுக்கு நாள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மனநிம்மதியுடனும் இருப்பதாக மனம் மகிழ்ந்துபோய், நெகிழ்ச்சியுடன் மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்துள்ளார்கள். 

இந்தப்பதிவின் பூர்த்தியை உத்தேசித்து, ஸ்ரீ ஆஞ்ஜநேயருக்கு வடைமாலை சார்த்தி கொண்டாட வேண்டிக்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். 

அவர்கள் சொல்லிய பலவித சந்தோஷ அனுபவங்களைக் கேட்ட எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதுடன், எல்லாம் அந்த ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அவர்களின் அனுக்கிரஹம் தான் என்பதும் நன்கு புரிந்தது. 

நம்பினவர்களுக்கு, எல்லாமே எப்போதுமே, நல்லதே தான் நடக்கும் என்பதற்கு, இதுவே கண்கூடான சாட்சியாக என்னால் உணரமுடிகிறது.


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்


[ நாளை இரவு ”என் பள்ளிக்கூட அனுபவங்கள்” [தொடர்பதிவு] வெளியிடப்படும் ]

34 comments:

  1. காரடையார் நோன்பு பற்றிய தகவல்கள் அருமை....

    நேரம் சொன்னது நல்லதாகப் போயிற்று. நிறைய பேருக்குப் பயன்படும்..

    அடுத்த பதிவினை [பள்ளி நினைவுகள்] எதிர்நோக்கி....

    ReplyDelete
  2. இவ்விதம் காரடையான் நோன்பைச் செய்வதால், நோன்பு செய்யும் பெண்களுக்கும், அவர்களது கணவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அன்பு பெருகும்.//

    காரடையான் நோன்பு பற்றிய செய்திகள் படங்கள் எல்லாம் மிக மிக நேர்த்தியாக அழகாய் இருந்தது.

    நன்றி.

    ReplyDelete
  3. காரடையான் நோன்பைப்பற்றிய மிக நல்ல தகவல்களை...சிரத்தை யுடனும் நகைச்சுவை கலந்தும் சுவாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள் ...நன்றி.

    ReplyDelete
  4. ம‌றுநாள் காலை இரு அடைக‌ளை ப‌சுவுக்கு த‌ர‌வேண்டுமென்ற‌து புதிய‌ செய்தி! ந‌ன்றி... நேர‌ம் ப‌ற்றிய‌ எச்ச‌ரிக்கைக்கும்

    ReplyDelete
  5. //“உருகாத வெண்ணெயும்
    ஓரடையும்//
    நினைக்கும்போதே நாக்கில் நீர் ஊருகிறதே..
    அருமையான விளக்கம்!

    ReplyDelete
  6. ஸாவித்ரி கெளரி விரதம்]"

    மிகப் பயனுள்ள சிறப்பான பகிர்வுகளுக்கு நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  7. அனைத்துப் பெண்மணிகளுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்


    சிறப்பான வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  8. விசேஷமான பகிர்வுகளைச் சிறப்புற படங்களுடன் சிரத்தையாக அளித்து அருமையான ஸ்லோகத்தையும் தந்த நிறைவான பகிர்வுகள்..

    ReplyDelete
  9. கார் அரிசியை மாவாக்கி புதிய துவரம்பருப்புடன் சேர்த்து அடையாகத் தட்டி தெய்வங்களுக்கு நிவேதனம் செய்து நோன்பு செய்யப்படுவதால் காரடையார் நோன்பு என்று இதற்குப் பெயர்.

    ஓ.. தகவல் தெரிந்து கொண்டேன்.

    மறுநாள் பசு மாட்டுக்குக் கொடுக்கும் போது அதுவும் அசை போட்டு சாப்பிட மிகவும் கஷ்டப்படும். அல்லது ’எனக்கு இது வேண்டவே வேண்டாம்’ என மறுத்து விடவும் கூடும்.

    ஹா..ஹா.. பக்தி ரசத்தில் நகைச்சுவையும் கலந்து தருகிறீர்கள்.
    செய்வது பூஜை ஆனாலும் பிரசாதம் ஆனலும் அதில் நேர்த்தி இருக்கவேண்டிய அவசியம் புரிகிறது,

    ReplyDelete
  10. காரடையான் நோன்பைப்பற்றிய மிக அருமையான பயன்தரும் தகவல்களை...சிரத்தையுடனும் நகைச்சுவை கலந்தும் சுவாரஸ்யமாக படைத்துள்ளீர்கள் ...நன்றி.வாழ்த்துகள்.. பாராட்டுகள்..

    ReplyDelete
  11. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  12. எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும்.//

    பயனுள்ள பதிவு! தங்களின் படைப்புகளும் அனைவரும் ரசித்து படிக்கும் வண்ணம் உள்ளன!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  13. காரடை நோன்பு பதிவு பக்தி பூர்வமாக இருக்கிறது. மனதில் பதியுமாறு எழுதி இருக்கிறீர்கள். ஆனால் நான் சுவைத்தது காரடை பற்றிய எழுத்துகள்..
    திருமணம் ஆன புதிதில் என் கண்வர் நான் செய்த அடைகளினால் பட்ட சிரமம் மறக்க முடியாத சம்பவம்.
    அவர் என் மாமியாரிடம் கடிதமெழுதி,
    மாமியார் எனக்கு அடுத்த நோம்புக்குள் நல்லபடியாகச் செய்யக் கற்றுக் கொடுத்தார்.:)
    மிகவும் நன்றி. காராமணிப் பயறு குறிப்பிடவில்லையே?

    ReplyDelete
  14. முதலில் 14.03.2012 நோன்பு என்று நினைவு படுத்தியதற்கு நன்றி .

    வழக்கம் போல் படங்கள் விளக்கம் அளிக்கின்றன . எழுத்துக்கள் நல்லதொரு படம் போல் அலங்கரிக்கின்றன .


    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  15. //எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும். //

    true..

    post is very nice and informative.thanks for sharing.

    ReplyDelete
  16. அரிய விஷயங்கள்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  17. //அவ்வாறு ருசியாக பதமாக அமையாமல் போய்விட்டால், அதை செய்ய நாம் உபயோகித்த மூலப்பொருட்கள், நம் கஷ்டமான உழைப்பு, பொன்னான நேரம், அதற்கான எரிபொருள் எல்லாமே வீணாகிவிடும் அல்லவா!//

    எனக்குன்னே சொன்ன மாதிரியே இருக்கே!!!

    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  18. Aha very fine. Everybody knows this nonbu. Of course from their respective mother and mother-in-law. But they may not aware of the slokam.
    This is the must one to follow. Thanks for giving here at right time.
    Sir,
    I have seen your thanks post.
    It is we who thank you for the fine post and make us read the Sundarakandam along with fine photos. So on behalf of all I thankyou sir.
    viji

    ReplyDelete
  19. RAMVI said...
    //எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும். //

    true..

    post is very nice and informative.thanks for sharing.//

    தாங்களும் “ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்” பற்றிய பதிவுகளுக்கு [பாகம் 1 முதல் 17 வரை] தொடர்ச்சியாக வருகை தந்து கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியிருந்தீர்கள்.

    பிறகு ஏதோ கணினி பிரச்சனையால் கடைசி 2-3 நாட்களுக்கு மட்டும் தங்களால் வர இயலவில்லை என்பதை நானும் நன்கு புரிந்து கொண்டேன்.

    இன்று கூட விட்டுப்போன அந்தப் பதிவுகளுக்குக் கூட பின்னூட்டம் அளித்துள்ளீர்கள்,

    மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் என் கூடுதல் நன்றிகள், மேடம். ;)))))

    ReplyDelete
  20. காரடையான் நோன்பு பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.

    நேரத்தை சொன்னதற்கு மிகவும் நன்றி சார்.

    கடைசியில் எழுதியுள்ள நகைச்சுவை விஷயங்களையும் ரசித்தேன். என் முதல் நோன்பின் போது அடையை பற்றி என் அம்மா வில்லாம, வேர்த்து விடாம வந்ததா என்று கேட்டிருக்கிறார்.

    ReplyDelete
  21. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி மகிழ்வித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  22. viji said...
    //Aha very fine. Everybody knows this nonbu. Of course from their respective mother and mother-in-law. But they may not aware of the slokam.//

    ஸ்லோகத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிவித்துள்ள அழகான கருத்துக்கு மிக்க நன்றி

    //This is the must one to follow. Thanks for giving here at right time.//

    நேரத்துக்குத் தகுந்த பதிவு என்று நேரம் பார்த்து சொல்லியுள்ளது அருமை. நன்றி.

    Sir,
    //I have seen your thanks post.
    It is we who thank you for the fine post and make us read the Sundarakandam along with fine photos.//

    அந்த சுந்தரகாண்ட ஸ்லோகம் போன்றே அழகானதொரு வாக்கியம் சொல்லியுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.

    So on behalf of all I thank you sir.
    viji//

    இந்தப்பதிவுகளால் விசேஷமான அதிகப் பலனடைந்ததாகக் கூறிய தாங்கள், எல்லோர் சார்பிலும் நன்றி கூறியிருப்பது மிகப்பொருத்தமாகவும் சந்தோஷம் தருவதாகவும் உள்ளது.

    தங்கள் நன்றிகளுக்கு என் நன்றிகள். vgk

    ReplyDelete
  23. காரடையான் நோன்பு பற்றிய விளககம் மற்றும் அது குறித்த ஸ்லோகம் மற்றும் நாவில் நீருரவைக்கும் படங்கள் அனைத்தும் மிக அருமை.

    ReplyDelete
  24. காரடை நோன்பு நான் காத்து வரும் நோன்பாகும். இதனைப் பற்றிய சில தகவல்கள் தெரிந்திருந்தாலும் சிலது தெரியாதவை. இலையின் நுனியில் சரடை வைத்ததில்லை. புதிய தகவல்கள்......காரடை நோன்பு சாவித்ரி செய்ததாகவும், சாபத்தால் பூவுலகில் பிறந்த பார்வதி தேவியும் செய்ததாகவும் சொல்வதுண்டு. மிகுந்த நன்றி.....

    ReplyDelete
  25. ஸ்வாமிகளின் நினைவும் வாழ்வும் எங்களுக்கும் நம்பிக்கையும் அமைதியும் ஊட்டுவனவாய் இருந்தது. நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.

    ReplyDelete
  26. இந்தப் பண்டிகையை எங்கள் பக்கம் வேறு மாதிரியாக "மங்கிலிய நோன்பு" என்று கொண்டாடுவோம்.

    ReplyDelete
  27. காரடையான் நொன்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது

    ReplyDelete
  28. நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வெண்டும்.சுந்தர காண்டம் எப்பொழுதும் படிப்பேன். இருந்தாலும் அதன் அளவிட முடியாத சிறப்புகளைப் பற்றிய விஷயங்களையும் தெரிந்து கொண்டேன்.

    நோன்பு அடை நன்றாகவே செய்வேன். இப்ப மாட்டுப் பொண்ணும் சேர்ந்துண்டுட்டா.

    ReplyDelete
  29. வாள எலயில இன்னாமே பலகாரம்லா இருக்குது இன்னாமோ வெரதம் பத்திலா சொல்லினிங்க

    ReplyDelete
    Replies
    1. அதன் பெயர்: வாழை இலை

      பலகாரம் பெயர்:
      இனிப்புக் கொழுக்கட்டை + காரக் (உப்புக்) கொழுக்கட்டை

      பிள்ளையார் கொழுக்கட்டை வேறு ... அதற்கு மூக்கு உண்டு.

      இது வேறு இதற்கு மூக்கெல்லாம் கிடையாது. தட்டையாக ரெளண்டாக வடைபோல தட்டிச் செய்வார்கள்.

      Delete
  30. காரடையான் நோன்பு விவரங்களுக்கு நன்றி

    ReplyDelete
  31. காரடையான் நோன்பு குறித்து முழு விபரங்களை அறியத்தந்த இடுகை மிகவும் சுவாரசியமானது.

    ReplyDelete