About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, March 14, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-6



மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
[தொடர்பதிவு]
பகுதி-6




என் வகுப்பு ஆசிரியர்களைத் தவிர, வெவ்வேறு பாடங்களை நடத்த வரும் மற்ற ஆசிரியர்களில் ஒருசிலரும், மிகவும் சிறப்பாகவே வகுப்புகள் நடத்தி பாடங்கள் கற்றுக்கொடுத்தார்கள்:


அவர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இருவர்:


1) திரு. N. வேங்கடநாராயணன் அவர்கள்: 


விஞ்ஞானம் [SCIENCE] நடத்த வரும் ஆசிரியர். அன்றைய இளைஞர். சினிமா நடிகர் நெப்போலியன் போல நல்ல உயரம். மாநிறம். PANT  க்குள் SHIRT ஐ IN  பண்ணிக்கொண்டிருப்பார். வெகு அழகாகப் பாடம் நடத்துவார். VERY SINCERE + HARD WORKING TYPE. வகுப்பறையில் வெட்டிப்பேச்சுகள் பேசி நேரத்தை வீணாக்காதவர், இவர்.
      
2) திரு. G. கணேசன் அவர்கள்:  


கணிதம் நடத்த வரும் ஆசிரியர். [MATHEMATICS TEACHER - IX Std. வரை] 
சிவப்பாக குள்ளமாக சற்றே இரண்டை மண்டைபோல தலை உள்ளவர்.


A*A = A ஸ்கொயர் என்று சொல்லித்தருவார். அப்போ G*G = G ஸ்கொயர் தானே ஸார், என்பான் ஒரு குறும்பான மாணவன். 


ஏனென்றால் அந்த ஆசிரியர் பெயர் GG [G. GANESAN].  நாளடைவில் பள்ளியில் அவர் பெயரே ”G ஸ்கொயர்” என்று மாறிவிட்டது. 


இவர்கள் இருவருமே திருச்சி திருவானைக்கா பகுதியில் உள்ள மாம்பழச்சாலையில் இன்றும் குடியிருப்பதாக கேள்விப்பட்டேன். அவ்வப்போது கடைவீதிகளில் எங்காவது கண்ணில் தென்படுபவர்கள். 




என்னுடன் படித்து, என் நினைவில் இன்றும் உள்ள, ஒரு சில நண்பர்கள்

என்னுடன் ஒண்ணாவது மட்டும் படித்த பூபதி சிவப்பாக அழகாக ராஜா போல இருப்பான். மிகவும் நல்லவன். அதன் பிறகு வெவ்வேறு வகுப்புகளுக்கும், பள்ளிகளுக்கும் மாறிப்போய் விட்டாலும், I.T.I படித்து விட்டு, BHEL இல் ARTISAN FITTER ஆகப்பணியில் சேர்ந்தான். என்னைப்போலவே அவனும் இப்போது BHEL லிருந்து பணி ஓய்வு பெற்று விட்டான்.  ’திருவானைக்கா’வில் இப்போது வசித்து வருகிறான். 


நான் ஓய்வு பெற்ற நாளன்று அவனை என் வீட்டுக்கு அழைத்து வந்து என் பெரிய அக்காவிடம் அறிமுகப்படுத்தினேன். 54 ஆண்டுகளுக்குப் பிறகு அவனை மீண்டும் சந்திக்கிறாள். உடனே என் பெரிய அக்கா புரிந்து கொண்டு விட்டாள். ’உன்னுடன் ஒண்ணாங்கிளாஸ் பட்டம்மா டீச்சரிடம் படித்த பூபதியா இவன்’ என்று கேட்டு, மிகவும் சந்தோஷப்பட்டாள்.  


என் பெரிய அக்காவுக்கு ஞாபக சக்தி மிக மிக மிக மிக அதிகம். மஹா கெட்டிக்காரியும் அதிர்ஷடக்காரியும் கூட.  இப்போதும் என் வீட்டருகே தான் இருக்கிறார்கள். எங்கள் குடும்பத்திற்கே வழிகாட்டியும், ஆலோசகரும், இன்றும் கூட அவளே தான்.

என்னுடன் 9th + 10th மட்டும் படித்த ஸ்ரீநிவாஸன். கருத்த நிறம். ஸ்ரீகிருஷ்ணர் போல மினுமினுப்பாக இருப்பான். இவனிடம் எனக்கு மிகுந்த பிரியம் உண்டு. அவனுக்கு புத்திசாலித்தனம் சற்று அதிகம். 


வெல்வெட் போல மின்னும் கரும்பச்சைக் கலரில் அரை டிராயரும், வெள்ளையில் சட்டையும் போட்டு வருவான். அவனின் அரைக்கை சட்டை முடியும் இடம் கீழே, இருபுறமும் சற்று வழித்து விட்டது போல தைக்கப்பட்டிருக்கும். 


வகுப்பறையில் இவன் அருகே நான் உட்காருவதில், எனக்கு மிகவும் ஆசையாகவும், பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். திருச்சி காசியப்பா ராவுத்தர் ஸ்டோரில் அவன் அப்போது குடியிருந்தான். பிறகு 11th Std. படிக்க வேறு ஊருக்குச் சென்று விட்டான். எனக்கு அவன் பிரிவு அன்று தாங்கமுடியாத இழப்பாக இருந்தது.  அவன் நினைவாகவே நான் பலநாட்கள் வருந்தியதும் உண்டு..


இப்போது எந்த ஊரில் அவன் எப்படி இருக்கிறானோ?  


நான் அன்று மிகவும் நேசித்த, என் உயிர் நண்பா! நீ எங்கிருந்தாலும் வாழ்க!

என்னுடன் ஐந்தாவது முதல் எட்டாவது வரை மட்டுமே சேர்ந்து படித்தவன் செல்லமணி. இவனும் மிகவும் நல்லவன். கெளரவமான ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனும் அதன் பிறகு வேறு ஏதோ ஊருக்குப் படிக்கப்போய் விட்டான். 

செல்லமணி பிறகு ஒருநாள் BHEL திருச்சியில் வேலைக்கு சேர இருந்தான். Wrtten Test, Personal Interview இரண்டிலும் தேர்வாகி விட்டான். துரதிஷ்ட வசமாக Medical Test இல் Unfit செய்துவிட்டார்கள். அது ஒரு பெரிய கொடுமை. வெளியே சொல்லிக்கொள்ள முடியாத ஒரு ரகசியமான விஷயம.  பிறவி முதலே அவனுக்கு இருந்த ஓர் அதிசயக் குறைபாடு. என்னிடம் மட்டும் கூறி கண் கலங்கினான்.

அந்தப்பிறவி குறைபாட்டால் அவனுக்கு இதுவரையும், இனிமேலும் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்று, எந்த அரசு மருத்துவரிடமும் சான்றிதழ் வாங்கித்தர முடியும் என்று மிகவும் போராடிப் பார்த்தான். 

BHEL மருத்துவ மனை அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனுக்கு BHEL இல் வேலை கிடைக்காததில் அவனை விட நான் மிகவும் வருத்தப்பட்டேன். பிறகு ஏதோ மாநில அரசு வேலை கிடைத்துப்போய் விட்டதாகக் கேள்வி.  


என் அன்புச் செல்லமணி! நீ இன்று எங்கிருந்தாலும் வாழ்க! 

G. சீத்தாராமன். இவன் நன்கு படிக்கக்கூடியவன். எப்போதும் வகுப்பில் முதல் மாணவனாக வருவான். கையெழுத்து மிக அழகாக அச்சடித்தது போல இருக்கும். இவனும் நானும் ஒரே குடியிருப்பில் குடியிருந்தவர்கள்.


எனக்கும் இவனுக்கும் அடிக்கடி படிப்பு விஷயத்திலும், கையெழுத்துப் போட்டிகளிலும் மோதல் ஏற்படுவதுண்டு. இவன் பிறருடன் சகஜமாகப் பழகவே மாட்டான். என்னைவிட மிகவும் RESERVED TYPE. இவன் பள்ளிப்படிப்பு முடிந்ததும், மேல்படிப்புக்குச் சென்னை சென்று விட்டான். BSNL இல் அவன் வேலை பார்ப்பதாக பிறகு வேறு ஒருவன் சொன்னான். 


நடராஜன் என்று மற்றொருவன். இவனும் என்னைப்போலவே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உடையவன். டால்மியாபுரத்தில் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். என்னுடன் BHEL இல் வேலை பார்த்த திருமதி கோதாவரி நடராஜன் என்பவள் தான் இவன் மனைவி என்று எனக்கு பல வருடங்கள் கழித்தே பிறகே, அவனுடன் பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது அவன் சொல்லியே எனக்குத் தெரியவந்தது. 


இப்போது இந்த நடராஜன் என்பவர் உயிருடன் இல்லை. அவர் மறைவுக்குப்பின் இவர் மனைவியும், சென்னையில் உள்ள தன் மகள் + மாப்பிள்ளையுடன் சேர்ந்து வாழ எண்ணி,  BHEL சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள். 


இராமனாதன் என்று ஒரு மாணவன் எப்போதும் வகுப்பறையில் என் பக்கத்திலேயே உட்கார ஆசைப்படுவான். ஒருமுறை நான் எழுதும் நோட்புக்கில் பக்கம் தீர்ந்து விட்டது. எனக்கு உடனே என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவசரமாக ரஃப் நோட்டைத் தேடினேன். இதை கவனித்த அவன் தன்னுடைய புது நோட் [40 பக்கம் நோட் - அப்போது 10 பைசா தான் அதன் விலை] ஒன்றை எனக்குக் கொடுத்து உதவினான். 


திருச்சியில் மிகப்பிரபலமாக இருந்த ’அம்மாமி அப்பளம் டிப்போ’ உரிமையாளரின் மகன் அவன். கால் செருப்பு லேசாக அறுந்து போனாலே அப்படியே தூக்கி எறிந்து விட்டு, வேறு புது செருப்பு வாங்கிப் போட்டுக்கொண்டு வருவான். வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவன். 


ஆனாலும் என்னிடம் அவனுக்கு ஒரு தனி பிரியம் உண்டு. என்னை விட்டு அவன், பள்ளியில் வகுப்பறையில் பிரிந்ததே இல்லை. இப்போது எங்கே எந்த ஊரில் இருக்கிறானோ! அந்த அம்மாமி அப்பளக் கடையையும் அங்கு இப்போது காணோம்.  


என் மீது அளவற்ற பிரியம் கொண்டிருந்த இராமநாதா! நீ இன்று எங்கிருந்தாலும் வாழ்க!!


கோபாலகிருஷ்ண மூர்த்தி என்று ஒரு பையன். இவனுடைய அப்பா வேணுகோபால மூர்த்தி என்று பெயர். எங்கள் பள்ளியிலேயே சமூகவியல் ஆசிரியராக பணியாற்றியவர். தினமும் தன் பையனையும் அழைத்துக்கொண்டு, பெரிய டபடபா சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வருவார்.


இந்த கோபாலகிருஷ்ண மூர்த்தி என்ற பையனும் என்னிடம் மிகவும் பிரியத்துடன் இருப்பான். அவனுக்குப் பூனைக்குட்டி போன்ற அழகான முகம். நல்ல சிவப்பாகவும் இருப்பான். ஒரு பவுன் தங்க நாணயம் போன்ற BRITTA என்ற சிறிய ரவுண்ட் பிரிட்டானியா பிஸ்கட் தினமும் நிறைய விரும்பிச் சாப்பிடுவான். 


தீர்ந்து போய் விட்டால் நான் சாப்பிட மதியம் வீட்டுக்குப்போய் வரும் போது வாங்கி வரச்சொல்லி காசு கொடுப்பான். எனக்கும் அவ்வப்போது பிஸ்கட் கொடுப்பான். பிறகு அவன், அவன் தந்தை போலவே, அதே பள்ளியில் ஆசிரியராகி விட்டதாகக் கேள்விப்பட்டேன்.  

P.S. கணேசன், R.ஜெயக்குமார், குமார், சந்தான கிருஷ்ணன், சத்யமூர்த்தி, N. நாகநாதன், N.சந்திர சேகரன், பூபதி ஆகியோர் என்னுடனேயே ஒரே பள்ளியில் படித்து விட்டு, பிறகு என்னுடனேயே BHEL இல் வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு பணிகளில் அமர்ந்தவர்கள். 


அலுவலகத்தில் அவ்வப்போது நாங்கள் எங்களுக்குள் சந்திக்கும் போது எங்கள் பள்ளி நாட்களையும், ஆசிரியர்களையும் பற்றி பேசி மகிழ்வோம்.  இப்போது கடந்த 2 வருடங்களில் அநேகமாக அனைவருமே பணி ஓய்வு பெற்று விட்டனர். 


இதில் சிந்தாமணி கடைவீதியில் அந்த நாட்களில் குடியிருந்த சந்தானகிருஷ்ணனும், சத்யமூர்த்தியும் அண்ணன் தம்பிகள். இருவரும் போலீஸ்காரர் ஒருவரின் பிள்ளைகள்.

எனக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்தும், என்னால் அன்று SSLC [அப்போது XI Std. என்பதே SSLC] க்கு மேல் தொடர்ந்து படிக்க முடியாத குடும்ப சூழ்நிலை இருந்தது. 


நான் அன்று SSLC பொதுத்தேர்வில் வாங்கியிருந்த நல்ல மதிப்பெண்களுக்கு, திருச்சி அரியமங்கலத்தில் இப்போதும் மிகப்பிரபலமாக உள்ள SESHASAYEE INSTITUTE OF TECHNOLOGY இல் ENGINEERING DIPLOMA படிக்க மிகச்சுலபமாக அட்மிஷன் கிடைக்கும் என்றும், மூன்று வருடங்களுக்கும் சேர்த்தே ரூபாய் 1000 மட்டுமே செலவாகும் என்றும், அதே படிப்பு படித்த நிறைய பேர்கள் என்னிடமும் என் பெற்றோர்களிடமும் எடுத்துக்கூறினார்கள். 


S.I.T. இல் என்னை சேர்க்கச் சொல்லி மிகவும் வற்புருத்தி, உடனடியாக அங்கு முதல்வர்களாக இருந்த ஸ்ரீ சுந்தரம் + ஸ்ரீ அனந்த நரஸிம்மாச்சார் ஆகிய இருவர்களில் யாரையாவது ஒருவரைப் போய் சந்திக்கச்சொல்லி ஆலோசனைகள் கூறினார்கள். இருந்தும் என் பெற்றோர்களால் அவ்வளவு பணம் செலவழித்து என்னை அங்கு சேர்க்க அப்போது இயலவில்லை.


SSLC PUBLIC EXAMS முடிந்த தேதி 04.04.1966. மறுநாள் ஒரே ஒரு நாள் மட்டும் வீட்டில் சும்மா இருந்தேன். 


பிறகு கார்த்திகேயன் என்ற ஒருவன் சொன்னபடி, 06.04.1966 இல் ஒரு சாதாரண வேலைக்குச் சென்று சேர்ந்து விட்டேன். அங்கு நான் ஈட்டிய மிகக்குறைந்த ஊதியத்தின் ஒரு பகுதி எனக்கு ENGLISH TYPEWRITING LOWER +HIGHER + HIGH SPEED படிக்க மிகவும் உதவியது. 


மீதிப்பணத்தை வீட்டுச்செலவுக்கும் என்னால் கொடுத்து உதவ முடிந்தது. அங்கு நான் சிறு வயதில் மிகக்கடுமையாக உழைத்ததில் நிறைய உல்க அனுபவங்களை என்னால் கற்றுகொள்ள முடிந்தது. 


பிறகு சிவராமன் என்ற என் நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி, 01.01.1968 முதல் வேறு ஒரு கம்பெனி வேலைக்கு மாறிப்போனேன். அங்கும் என்னால் பல உலக விஷயங்களை நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. 


அங்கு மிகப்பெரிய மீசையுடன் வேலை பார்த்த ’ஜான்பேட்டா’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ’பெரியண்ணன்’ என்ற பெரியவரிடம், மிகவும் திக்கான 3 பரி, 5 பரி சணல் கயிற்றை, சணல் பந்துகளிலிருந்து, கத்தி அல்லது ப்ளேடு இல்லாமலேயே கையால் எப்படி அறுப்பது என்ற கலையைக் கற்றுக் கொண்டேன்.  இப்போதும் அதுபோல என்னால் வெறும் கையால் சணல் கயிறுகளை அறுக்க முடியும். இதை நுட்பமாகப் கவனிப்பவர்கள் வியந்து தான் போவார்கள்.


இதன் நடுவில் 1970 செப்டெம்பர் அக்டோபரில் பெரம்பலூரில் மதன கோபாலபுரத்தில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் [SBI] TEMPORARY CLERK-CUM-TYPIST AGAINST LEAVE VACANCY வேலை கிடைத்தது. 


அங்கும் சென்று சுமார் 40 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வேலை பார்த்தேன். 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் இடைவெளி கொடுத்து மேலும் 15 நாட்கள் நீட்டித்து வாய்ப்பளிப்பார்கள்.  அந்த 40 நாட்களில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை மட்டும் தனியாக ஒரு 10 அத்யாயங்கள் கூட எழுதலாம்.


இதற்கிடையே திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திருச்சி BHEL லில் WRITTEN TEST, PERSONAL INTERVIEW, MEDICAL TEST முதலியவற்றிற்கு எனக்கு அழைப்பு வந்தது. பெரம்பலூரிலிருந்து அவ்வப்போது வந்து இவற்றையும் ATTEND செய்து விட்டுப்போனேன். பிறகு BHEL திருச்சியிலிருந்து PERMANENT APPOINTMENT ORDER தபாலில் வந்ததும்,  03.11.1970 அன்று பெரம்பலூர் ஸ்டேட் பேங்க் வேலையை நானே ராஜிநாமா செய்துவிட்டு திருச்சி BHEL இல் LOWER DIVISION CLERK [LDC] ஆக 04.11.1970 அன்று நிரந்தரப் பணியில் சேர்ந்து விட்டேன். 

பிறகு எனக்கு திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் பிறந்து அவர்களில் ஒருவர் படிப்பு முடிந்து வேலைக்கே சென்று விட்ட பிறகு, மீதி இருவரும் முறையே உயர்நிலைப் பள்ளியிலும், ஆரம்பப்பள்ளியிலும் படித்து வரும் போது, எனக்கு மேற்கொண்டு என் படிப்புகளைத் தொடர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

அப்போது எனக்கு வயது 40. சென்னைப் பல்கலைக் கழகத்தில் CORRESPONDENCE COURSE   இல் சேர்ந்து சரியாக 3 ஆண்டுகளில் ARREARS  ஏதும் வைக்காமல் ஒரே ATTEMPT இல் B.Com., ENGLISH MEDIUM - II CLASS இல் பாஸ் செய்தேன். 


இதில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் கொடுத்து உற்சாகப்படுத்தி தூண்டுகோலாக இருந்தவர் எனக்கு 1983 முதல் 1995 வரை மேலதிகாரியாக இருந்த திரு. K.M. BALASUBRAMANIAN Sir அவர்கள். 1995 இல் அவர் பணிஓய்வு பெற்றபின் தற்சமயம் திருச்சி உறையூர் சாலை ரோடு ருக்மணி தியேட்டருக்கு எதிர்புறம் உள்ள தேவாங்கு நெசவாளர் காலணியில் குடியிருக்கிறார்.

B.Com., முடித்த உடனேயே நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் M.A., [SOCIOLOGY] சேர்ந்து அதையும் இரண்டே வருடங்களில் ARREARS ஏதும் வைக்காமல் ஒரே ATTEMPT இல் முடித்தேன். 

இதற்கிடையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் POST GRADUATE DIPLOMA IN PERSONNEL MANAGEMENT and INDUSTRIAL RELATIONS என்ற இரண்டு வருடப்படிப்பிலும் சேர்ந்திருந்தேன். 

அதையும் இரண்டே ஆண்டுகளில் PROJECT WORK SUBMISSION உள்பட முடித்தேன். இந்த மூன்று படிப்புகளிலுமே என்னால் II Class தான் வாங்க முடிந்தது. 


40 வயதிலிருந்து 46 வயதுக்குள், வேலையும் பார்த்துக்கொண்டு, குடும்பத்தேவைகளையும் கவனித்துக்கொண்டு, வயதான என் அன்புத் தாயாரின் காலடியில் நான் வாங்கிய மூன்று டிகிரிகளையும் வைத்து வணங்கும் பாக்யம் கிடைத்ததே! ;) - அதுவே மிகப் பெரிய விஷயம் அல்லவா! 

அண்ணாமலைப் பல்கலைக் கழக இரண்டாம் ஆண்டுத் தேர்வுகளும், மதுரை காமராஜ் பல்கலைக்கழக முதலாம் ஆண்டுத் தேர்வுகளும் ஒரே நாட்களில் நடைபெற இருப்பதாக EXAM TIME TABLE வந்து விட்டது. 


நல்ல வேளையாக இதில் காலையும் அதில் மாலையும் தேர்வுகள் எனப் போட்டிருந்தது. இது போல ஒரே நாளில் இரண்டு வேளைகளிலும் இரண்டு வேவ்வேறு பல்கலைக்கழகத் தேர்வுகள் என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக எழுதும்படி ஆனது. 


இரவெல்லாம் சுத்தமாகத் தூங்காமல் பாடங்களை வாசித்து மனதில் ஏற்றிக்கொள்வேன்.  காலையில் என் தாயாரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, ஹால் டிக்கெட், பேனா முதலியவைகளை அவர்கள் கையில் கொடுத்து ஆசீர்வதித்துப் பெற்றுக்கொண்டு மிகவும் சீக்கரமாகவே பஸ் பிடித்து புறப்பட்டுப் போவேன்.


இந்தத் தேர்வு ஓரிடம்; அந்தத் தேர்வு வேறிடம் [Different Centers in Tiruchi]. காலை 9.30 முதல் 12.30 வரை ஓரிடத்தில் 3 மணி நேரம் தொடர்ச்சியாக மாங்கு மாங்கென்று தேர்வு எழுதுவேன். 


உடனே சாப்பிடக்கூட இடைவெளி இல்லாமல் காஃபி மட்டும் குடித்து விட்டு, ஓர் ஆட்டோ பிடித்து அந்த இன்னொரு தேர்வு மையத்துக்குப்போய் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 3 மணி நேரம் தொடர்ச்சியாக மாங்கு மாங்கென்று வேறொரு தேர்வு எழுதித்தள்ளுவேன். 


கை விரல்கள் எல்லாம் மிகவும் சோர்வாகப் போய் விடும். இதுபோல அடுத்தடுத்து 3 நாட்கள் கஷ்டப்பட்டேன். 


RESULT வந்து எல்லா SUBJECTS களிலும் FULL PASS IN FIRST ATTEMPT என்று பார்த்ததும் என் கை விரல்களின் வலிகளும், சோர்வும் பறந்தே போய் விட்டன. இந்த இனிய நிகழ்ச்சிகளை என்னால் எப்போதுமே மறக்க முடியாது.       

இந்த CORRESPONDENCE படிப்புகளுக்கு CONTACT SEMINAR CLASS என்று வருடத்திற்கு 4 அல்லது 5 முறைகள் சனி ஞாயிறுகளில் நடைபெறும். அவற்றில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லாவிட்டாலும், நான் சோம்பல் படாமல் ஆர்வமாக கலந்து கொள்வதுண்டு. பள்ளிக்கூடப் படிப்புக்கு மீண்டும் செல்வது போல ஒரு வித சந்தோஷம் ஏற்படுவதுண்டு.

இதற்காக சனி ஞாயிறுகளில் திருச்சியிலிருந்து விடியற்காலம் 4 மணிக்குக் கிளம்பி மதுரை வரை கூட நான் சென்று வந்ததும் உண்டு. இந்த CONTACT SEMINAR CLASS களுக்கு பல ஊர்களிலிருந்தும் பல பெண்கள் + பல ஆண்கள் என 20 வயது முதல் 60 வயது வரை பலரும் வந்து கலந்து கொள்வார்கள். 

மிகவும் வேடிக்கையாகவே இருக்கும். இதில் எனக்கு பலரது புதிய அறிமுகங்கள் கிடைத்தன. பலரின் புதிய நட்புகள் கிடைத்தன. பள்ளியில் CO-EDUCATION படிக்காத எனக்கு, என் அருகே யார் யாரோ அறிமுகம் இல்லாத பெண்கள் வந்து அமர்ந்து பேச்சுக் கொடுத்தது, முதலில் மிகவும் வியப்பாக இருந்தது. 

இதில் யார் மாணவர்? யார் ஆசிரியர்? என்றே தெரியாமல் இருக்கும். PROFESSOR அல்லது LECTURER உள்ளே நுழைந்து வருகிறார் என்று எண்ணும் போது, வருபவரும் சிரித்துக்கொண்டே என் அருகில் பாடம் கேட்க STUDENT  ஆக அமர்வதுண்டு.

என்னையே சிலர் PROFESSOR அல்லது LECTURER என்று எண்ணி ஏமாந்ததும் உண்டு. பாடங்களை நாமே வீட்டில் படித்து விட்டு, நமக்குள்ள சந்தேகங்களை மட்டும் கேட்டு நிவர்த்தித்துக் கொள்ளவே இந்த CONTACT SEMINAR CLASS வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். வகுப்பு ஆரம்பித்ததும் விவாதங்கள் சூடு பிடித்து எங்கெங்கோ செல்லும்.

அவைகள் எல்லாமே மிகவும் சுவையான சுகமான அனுபவங்கள் தான்.


இந்த B.Com., CONTACT SEMINAR CLASS களுக்கு, நான் திருச்சி ஜமால் முகமது காலேஜுக்குப் போய் வந்த போது [1990-1992 ] R. விஜயலக்ஷ்மி என்ற ஒரு சின்னப்பெண். அவளுக்கு JUST 17 +  வயது தான் ஆகியிருந்தது.  அவள் என்னிடம் மிகவும் பிரியத்துடன் ஒட்டி உறவாட ஆரம்பித்தாள்.  


அவளுக்கு நான் வைத்த பெயர் ஜிமிக்கி + சொக்கி. எனக்கு மிகவும் பிடித்தமான பெரிய சைஸ் ஜிமிக்கிகளை காதில் அணிந்திருப்பாள். வட்டமான முகத்துடன், வாளிப்பான உருவத்துடன், நிதான உயரத்தில், திக் மெரூன் கலரில் ஒயிட் காலர் வைத்த சட்டையும், குட்டைப்பாவாடையும், சமயத்தில் சுடிதாரும் அணிந்து வருவாள்.




இந்தத்தொடர் நாளையும் தொடரும், 
ஆனால் நாளையுடன் முடியும்.

62 comments:

  1. நான் தான் முதல் பெஞ்ச்.படிச்சுட்டு அப்புறமா வர்ரேன்.

    ReplyDelete
  2. பள்ளிகூட நண்பர்கள்...G Square ...படித்த உடனே வேலை...ஜிமிக்கி...
    எல்லாமே படிக்க படிக்க சுவாரசியம்

    ReplyDelete
  3. என் பெரிய அக்காவுக்கு ஞாபக சக்தி மிக மிக மிக மிக அதிகம். மஹா கெட்டிக்காரியும் அதிர்ஷடக்காரியும் கூட. இப்போதும் என் வீட்டருகே தான் இருக்கிறார்கள். எங்கள் குடும்பத்திற்கே வழிகாட்டியும், ஆலோசகரும், இன்றும் கூட அவளே தான்.
    //இப்படி ஒரு தம்பி கிடைக்க அக்கா கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!

    ReplyDelete
  4. அப்பப்பா.. எத்தனை ஞாபக சக்தி உங்களுக்கு!!..

    சிறு வயசு சினேகிதர்களின் பெயர்களை இன்னும் ஞாபகம் வெச்சுருக்கீங்களே.. அக்கா பெயரைக் காப்பாத்திட்டீங்க :-))

    கல்லூரியில் எங்க துறைத்தலைவரின் பெயர்ச்சுருக்கம் T.G அதையே Tangent Galvanometreன்னு அவருக்குத் தெரியாம அவரைக் கலாய்ப்போம். உங்க G ஸ்கொயர்டு மாதிரி :-))

    ReplyDelete
  5. இனிஷியலைக்கூட மறக்காமல் இருக்கின்றீர்களே!வியப்பாக உள்ளது.நாளைக்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  6. 40 வயதிலிருந்து 46 வயதுக்குள், வேலையும் பார்த்துக்கொண்டு, குடும்பத்தேவைகளையும் கவனித்துக்கொண்டு, வயதான என் அன்புத் தாயாரின் காலடியில் நான் வாங்கிய மூன்று டிகிரிகளையும் வைத்து வணங்கும் பாக்யம் கிடைத்ததே! ;) - அதுவே மிகப் பெரிய விஷயம் அல்லவா!

    தாயாரின் பாசம்மிக்க ஆசியே மிகபெரிய பலம்..

    நானும் என் தாயரின் ஆசியே முதல் மதிப்பெண் வாங்க உதவியாக இருந்ததாக எண்ணுவதுண்டு..

    என் பிள்ளைகள் தேர்வு ச்மயம் பிரார்த்தனைகள் செய்வதுன்டு

    ReplyDelete
  7. சற்றே வறுமை வெப்பம் தாக்கியபோதும் எதிர் நீச்சல் போட்டு தடைக்கற்களையே படிக்கற்களாக்கி வெற்றி பெற்று வாழ்வில் முன்னேறியதை எத்தனை பாராட்டினாலும் போதாது...

    ReplyDelete
  8. அனைத்து ஆசிரியர்கள், தோழ்ர்கள் என்று நினைவில் கொண்டு வாழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  9. சிறு வயதில் மிகக்கடுமையாக உழைத்ததில் நிறைய உல்க அனுபவங்களை என்னால் கற்றுகொள்ள முடிந்தது. /

    கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை என்பதற்கு வாழும் உதாரணம்.. வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. RESULT வந்து எல்லா SUBJECTS களிலும் FULL PASS IN FIRST ATTEMPT என்று பார்த்ததும் என் கை விரல்களின் வலிகளும், சோர்வும் பறந்தே போய் விட்டன.
    இந்த இனிய நிகழ்ச்சிகளை என்னால் எப்போதுமே மறக்க முடியாது. /

    இனிய தருணங்கள்.. பட்ட பாடுக்குக் கைமேல் கிடைத்த பரிசாயிற்றே

    ReplyDelete
  11. படிக்கப் படிக்க அற்புதமாகவும், மலைப்பாகவும் இருந்தது.
    அன்புடன் எம்.ஜே.ராமன்.

    ReplyDelete
  12. ஆஹா! பிரமாதம் சார். எவ்வளவு நினைவாற்றல்...உங்கள் அக்காவுக்கும் தான். கொஞ்சம் இரவல் கொடுங்க சார்.

    40 வயதுக்கு மேலும் படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால் தூள் கிளப்பி இருக்கீங்க...

    ReplyDelete
  13. வாழ்வின் மிக முக்கிய பகுதிகளை அருமையாகக் கோர்த்து கிட்டத்தட்ட ஒரு மினி சுயசரிதை எழுதி விட்டீர்கள். ஆரம்ப காலத்தில் அவதிப்பட்டவர்கள் இக்காலத்தில் அதை சிந்தித்துப் பார்க்கும்போது ஏற்படும் நிறைவு அலாதி. அதை மற்றவர்களுடன் பகிர்தல் இன்னும் மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. அஹா.. ஜிமிக்கி சொக்கி பத்தி படிக்க ஆவலா இருந்தேன். சிநேகிதி என்றால் எந்த வயதிலும் ஒரு அழகான உறவுதான். வகுப்புத் தோழி..:)) சீக்கிரம் அடுத்ததை போஸ்ட் பண்ணுங்க கோபால் சார்.:)

    ReplyDelete
  15. Arumaiyana padivoo.
    The way you writedown is very interesting sir.
    I think you might also had on those days mentally.
    viji

    ReplyDelete
  16. 40 வயதிலிருந்து 46 வயதுக்குள், வேலையும் பார்த்துக்கொண்டு, குடும்பத்தேவைகளையும் கவனித்துக்கொண்டு, வயதான என் அன்புத் தாயாரின் காலடியில் நான் வாங்கிய மூன்று டிகிரிகளையும் வைத்து வணங்கும் பாக்யம் கிடைத்ததே! ;) - அதுவே மிகப் பெரிய விஷயம் அல்லவா! //

    மிக பெரிய விஷ்யம் தான் சார்.
    அம்மாவின் ஆசிகள் உங்களை இந்த அளவுக்கு வளர்ச்சியடைய செய்து இருக்கிறது.

    உங்கள் நினைவாற்றலுக்கு பாராட்டு.
    வாழ்த்துக்கள்.

    இளையவர்கள் உங்கள் பள்ளி அனுபவத்தை படித்தால் மனம் தளராமல் தங்கள் படிப்பை வெற்றிகரமாய் முடித்து வாழ்வில் வெற்றி அடையலாம்.

    ReplyDelete
  17. உங்கள் வாழ்வின் வெற்றிகள் அசரவைக்கின்றன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. விடாமுயற்சி வெற்றி தரும்
    என்பதற்கு தாங்கள்தான் சரியான எடுத்துக்காட்டு!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. இதில் யார் மாணவர்? யார் ஆசிரியர்? என்றே தெரியாமல் இருக்கும். PROFESSOR அல்லது LECTURER உள்ளே நுழைந்து வருகிறார் என்று எண்ணும் போது, வருபவரும் சிரித்துக்கொண்டே என் அருகில் பாடம் கேட்க STUDENT ஆக அமர்வதுண்டு.

    உங்கள் கதைகள் ஏன் அத்தனை சுவாரசியமாய் இருக்கின்றன என்று இப்போதுதான் புரிகிறது.

    ReplyDelete
  20. அவளுக்கு நான் வைத்த பெயர் ஜிமிக்கி + சொக்கி. எனக்கு மிகவும் பிடித்தமான பெரிய சைஸ் ஜிமிக்கிகளை காதில் அணிந்திருப்பாள். வட்டமான முகத்துடன், வாளிப்பான உருவத்துடன், நிதான உயரத்தில், திக் மெரூன் கலரில் ஒயிட் காலர் வைத்த சட்டையும், குட்டைப்பாவாடையும், சமயத்தில் சுடிதாரும் அணிந்து வருவாள்.

    சரியான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்கள்.

    ReplyDelete
  21. வெல்வெட் போல மின்னும் கரும்பச்சைக் கலரில் அரை டிராயரும், வெள்ளையில் சட்டையும் போட்டு வருவான். அவனின் அரைக்கை சட்டை முடியும் இடம் கீழே, இருபுறமும் சற்று வழித்து விட்டது போல தைக்கப்பட்டிருக்கும்.

    கேரக்டர் கதைகள் எழுதலாம் நீங்கள்.
    இது முடிந்ததும் அவ்வப்போது எழுதுங்களேன்.

    ReplyDelete
  22. அன்பின் வை.கோ - அருமையான நினைவாற்றல் - எத்த்னை ஆண்டுகள் கழித்து - பால்ய வ்யதில் பழகிய நண்பர்கள் / ஆசிரியர்கள் - துவக்கப் பள்ளி நண்பர்கள் - உயர் நிலைப் பள்ளியில் இருந்து வெளியேறிய பின்னர் - படித்ததும் - பல வேலைகளுக்குச் சென்றதும் - பல்வேறு பட்டப் படிப்புகள் படித்ததும் - வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல் பட்டதும் - அத்தனையும் பாராட்டத் தக்க செயல்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  23. Very interesting recall of past events in your early life. Remarkable memory.

    ReplyDelete
  24. பழைய பள்ளி நண்பர்களை நினைவு கூர்ந்திருப்பது பாராட்டத்தக்கது. இதை அவர்கள் படித்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்

    ReplyDelete
  25. ஆசிரியர்கள் பற்றியும் தோழர்கள் பற்றியும் சுவாரஸ்யமான பகிர்வு!

    ReplyDelete
  26. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. தங்களின் நினைவாற்றல் எழுத்தாற்றலைப் பீட் அடித்து விட்டது!
    சூப்பர் சார்..சூப்பர்!

    ReplyDelete
  28. மலைப்பாக இருக்கிறது; தொடர்கிறேன்.

    ReplyDelete
  29. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

    ReplyDelete
  30. உங்கள் பதிவை படித்த பின் நானும் புதிதாக ஏதாவது படிக்க வேண்டும் போல தோன்றுகிறது. ஆனால் இங்கு படிப்பதற்கு அதிக செலவழிக்க வேண்டும் என்ற யோசனையும் வருகிறது அந்த பணத்தை சேர்த்து வைத்தால் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவுமே என்ற எண்ணம் தான் மனதில் எழுகிறது...ஹூம்ம்ம்ம்ம்ம்ம்

    உங்கள் கடும் உழைப்பை பார்த்து வியக்கிறேன்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. உங்கள் உழைப்புக்கும் நினைவாற்றலுக்கும் ஜே!!

    மிகவும் சுவாரஸ்யம். நாளையோடு இந்தத் தொடரை முடித்து விடுவீர்களா? :-(

    ReplyDelete
  32. you remembered everyone. How happy your friends will be when they happen to read your post.

    ReplyDelete
  33. அருமையான அனுபவங்கள். பகிர்விற்கு நன்றி சார்

    ReplyDelete
  34. உங்க நண்பர்களையெல்லாம் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி... :)

    //நான் அன்று மிகவும் நேசித்த, என் உயிர் நண்பா! நீ எங்கிருந்தாலும் வாழ்க!
    //

    //என் மீது அளவற்ற பிரியம் கொண்டிருந்த இராமநாதா! நீ இன்று எங்கிருந்தாலும் வாழ்க!!

    //

    இந்த வரிகளெல்லாம் ரொம்ப பிடித்திருந்தது.... :)

    ஆஹா ஜிமிக்கி நல்ல பேர் தான் :P ... தொடர்கிறேன்.

    ReplyDelete
  35. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ள எல்லோருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து ஓர் தனிப்பதிவே தந்துள்ளேன்.

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    தலைப்பு:

    இயற்கை அழகில் ’இடுக்கி’
    இன்பச் சுற்றுலா

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  36. ரிஷபன் said...
    *****இதில் யார் மாணவர்? யார் ஆசிரியர்? என்றே தெரியாமல் இருக்கும். PROFESSOR அல்லது LECTURER உள்ளே நுழைந்து வருகிறார் என்று எண்ணும் போது, வருபவரும் சிரித்துக்கொண்டே என் அருகில் பாடம் கேட்க STUDENT ஆக அமர்வதுண்டு.*****

    //உங்கள் கதைகள் ஏன் அத்தனை சுவாரசியமாய் இருக்கின்றன என்று இப்போதுதான் புரிகிறது.//

    என் எழுத்துலக மானஸீக குருநாதர் ஆகிய தாங்கள் இவ்வாறு சொல்வது காதில் தேன் பாய்வதாக உள்ளது, சார். மிக்க ந்னறி, சார்.


    ரிஷபன் said...
    *****அவளுக்கு நான் வைத்த பெயர் ஜிமிக்கி + சொக்கி. எனக்கு மிகவும் பிடித்தமான பெரிய சைஸ் ஜிமிக்கிகளை காதில் அணிந்திருப்பாள். வட்டமான முகத்துடன், வாளிப்பான உருவத்துடன், நிதான உயரத்தில், திக் மெரூன் கலரில் ஒயிட் காலர் வைத்த சட்டையும், குட்டைப்பாவாடையும், சமயத்தில் சுடிதாரும் அணிந்து வருவாள்.*****

    //சரியான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்கள்.//

    ஆமாம் சார். ஏதோ கொஞ்சமாவது படிப்பவர்களுக்கு ஓர் சஸ்பென்ஸ் + விறுவிறுப்பு + எதிர்பார்ப்பு இருக்க வேண்டாமா, சார்! ;)))))

    ரிஷபன் said...
    *****வெல்வெட் போல மின்னும் கரும்பச்சைக் கலரில் அரை டிராயரும், வெள்ளையில் சட்டையும் போட்டு வருவான். அவனின் அரைக்கை சட்டை முடியும் இடம் கீழே, இருபுறமும் சற்று வழித்து விட்டது போல தைக்கப்பட்டிருக்கும். *****

    //கேரக்டர் கதைகள் எழுதலாம் நீங்கள்.

    இது முடிந்ததும் அவ்வப்போது எழுதுங்களேன்.//

    ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி, சார். முயற்சிக்கிறேன். எல்லாமே தங்களின் ஊக்குவிப்பினால் வந்ததே!

    ReplyDelete
  37. நண்பர்களைப்பற்றி, அவர்கள் பெயர் உட்பட, நினைவு வைத்துக்கொண்டு சுவாரசியமாக எழுதியிருக்கீங்க.

    40 வயதாகிவிட்டதே என்று இல்லாமல் முயன்று படித்து இத்தனை பட்டங்கள் வாங்கியது மிகவும் பாராட்டபடவேண்டிய விஷயம்.

    ReplyDelete
  38. //RAMVI said...
    நண்பர்களைப்பற்றி, அவர்கள் பெயர் உட்பட, நினைவு வைத்துக்கொண்டு சுவாரசியமாக எழுதியிருக்கீங்க.

    40 வயதாகிவிட்டதே என்று இல்லாமல் முயன்று படித்து இத்தனை பட்டங்கள் வாங்கியது மிகவும் பாராட்டபடவேண்டிய விஷயம்.//

    தங்களின் அன்பான வருகைக்கும்,
    பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    இன்று 01.05.2012 ஒரே நாளில் இந்தத் தொடர் முழுவதையும் மட்டுமல்லாமல், மேலும் சில பதிவுகளையும் தாங்கள் படித்து கருத்துக்கள் கூறவில்லையா, அதே போலத்தான், நான் படித்ததும்.

    உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.
    நன்றிகள்.

    ReplyDelete
  39. //எங்கள் குடும்பத்திற்கே வழிகாட்டியும், ஆலோசகரும், இன்றும் கூட அவளே தான்//

    ஆண்டவனின் அனுக்ரகாம் தான் சார் .நீங்க ரியல்லி blessed person

    ReplyDelete
  40. ஒவ்வொரு நண்பரையும் பெயருடன் நினைவு கூர்ந்து அவர்களை வாழ்த்திய விதம் மிக அருமை .

    ReplyDelete
  41. angelin said...
    *****எங்கள் குடும்பத்திற்கே வழிகாட்டியும், ஆலோசகரும், இன்றும் கூட அவளே தான்*****

    //ஆண்டவனின் அனுக்ரகாம் தான் சார்

    நீங்க ரியல்லி blessed person//

    ஆமாம். என்னிடம் இன்றுவரை மிகவும் பாசத்துடன் உள்ளவர்கள்.

    என் அக்காவுக்கு
    6 பிள்ளைகள் + 6 நாட்டுப்பெண்கள்,
    2 பெண்கள் + 2 மாப்பிள்ளைகள்,
    5 பேரன்கள் + 9 பேத்திகள் +
    1 கொள்ளுப்பேரன்

    இருப்பினும் இன்றும் நானே அவர்களுக்கு முதல் குழந்தை போல.

    அபார சம்சாரி. ஒரு நாள்கிழமைகளையும் குறைக்காமல் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

    லக்ஷக்கணக்கில் பணமாகவே எடுத்துக்கொண்டு, தனியாகவே ஜவுளிக்கடைக்கும், நகைக்கடைகளுக்கும் சென்று, சூப்பராக எல்லாம் வாங்கி வருவார்கள். சாமர்த்தியசாலி, புத்திசாலி, அதிர்ஷ்டசாலி, அதிகம் படிக்காவிட்டாலும், கணக்கு வழக்குகளிலும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் திறமைசாலியான குடும்ப நிர்வாகி.

    angelin said...
    //ஒவ்வொரு நண்பரையும் பெயருடன் நினைவு கூர்ந்து அவர்களை வாழ்த்திய விதம் மிக அருமை//

    அன்புள்ள நிர்மலா,

    ஒரே மூச்சில் ஒரே நாளில் இந்தத்தொடரின் அனைத்து ஏழு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்து விட்டு, அன்புடன் வருகை புரிந்து, அழகாகக் கருத்துக்கள் கூறியுள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள,
    கோபு

    ReplyDelete
  42. எப்படி அத்தனை நண்பர்களின் பெயரையும் நினைவு வைத்துக் கொண்டுள்ளீர்கள்? உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.

    காலத்தில் படிக்க முடியாமல் பிறகு குழந்தைகள் பிறந்த பிறகு படித்து பட்டம் பெற்றது என் சொந்தக் கதையை நினைவு படுத்தியது.

    பலருக்கும் உங்கள் அனுபவங்கள் பாடங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Ranjani Narayanan December 17, 2012 1:46 AM

      வாங்கோ, திருமதி ரஞ்ஜனி மேடம், வணக்கம்.

      //எப்படி அத்தனை நண்பர்களின் பெயரையும் நினைவு வைத்துக் கொண்டுள்ளீர்கள்? உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.//

      ஏதோ ஓரளவு நினைவாற்றல் இன்றுவரை நீடிக்கிறது.அவர்கள் என்னுடனோ அல்லது நான் அவர்களுடனோ நெருங்கிப் பழகியுள்ளதால் இன்றும் அவர்களை என்னால் மறக்க முடியவில்லை. அவர்கள் நினைவினில் இன்னும் நான் இருப்பேனா என எனக்குத்தெரியாது.

      //காலத்தில் படிக்க முடியாமல் பிறகு குழந்தைகள் பிறந்த பிறகு படித்து பட்டம் பெற்றது என் சொந்தக் கதையை நினைவு படுத்தியது.//

      காலத்தில் படிக்காமல் விட்டதால் நான் இழந்தவை ஏராளம் மேடம். ஏதோ ஓர் ஆத்ம திருப்திக்காகப் படித்தேனே தவிர அதற்கான முழுப்பலன்களை என்னால் அனுபவிக்க முடியாமல் போனது.

      //பலருக்கும் உங்கள் அனுபவங்கள் பாடங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.//

      அதில் எனக்கும் ஓர் சிறிய சந்தோஷமே.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      Delete
  43. ஒரு நண்பரைக்கூட மறக்காமல் நினைவு கூறியிருந்தவிதம் நெகிழ்ச்சி. 40 வயசுக்குமேலும் குடுப்பச்சுமைகள் கூடியிருந்த சமயத்தில் கூட சிறப்பாக படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கீங்க. இதெல்லாம் படிக்கும் பலருக்கும் ஒரு பாடமாக வே இருக்கும்.ரொம்ப நல்லா சொல்லிட்டு வரீங்க. நான் ரொம்ப ரசிச்சுப்படிச்சுட்டு வறேனாக்கும்.

    ReplyDelete
  44. பூந்தளிர் April 3, 2013 at 8:18 AM

    வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

    //ஒரு நண்பரைக்கூட மறக்காமல் நினைவு கூறியிருந்தவிதம் நெகிழ்ச்சி.//

    ஒருசிலரை எவ்வளவு நாட்கள் ஆனாலும் மறக்கத்தான் முடிவது இல்லை.

    //40 வயசுக்கு மேலும் குடுப்பச்சுமைகள் கூடியிருந்த சமயத்தில் கூட சிறப்பாக படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கீங்க.//

    படிப்பின் மேல் இருந்த ஆர்வமும் வெறியும் மட்டுமே காரணம்.

    / இதெல்லாம் படிக்கும் பலருக்கும் ஒரு பாடமாகவே இருக்கும்.ரொம்ப நல்லா சொல்லிட்டு வரீங்க.//

    சந்தோஷம்.

    //நான் ரொம்ப ரசிச்சுப்படிச்சுட்டு வறேனாக்கும்.//

    என் எழுத்துக்களில் தங்களுக்கு உள்ள் ரஸனை + ஈடுபாடு பற்றி எனக்குத்தெரியாதா பூந்தளிர்.

    கொடுக்கப்படும் பின்னூட்டங்களிலிருந்தே ஒருவர் எவ்வளவு தூரம் ஈடுபாட்டுடன் படித்துள்ளார் என்பதை என்னால் துல்லியமாக உணரமுடியும்.

    தங்களின் அன்பான வருகைக்கும், ரஸித்துப்படித்துக் கருத்துக்கள் சொல்லியிருப்பதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், பூந்தளிர்.

    ReplyDelete
  45. உங்களுடைய அபார நினைவுத் திறன் மலைக்க வைக்கிறது. தாங்கள் பகுதி நேரப் படிப்பில் மூன்று பட்டங்களை பெற்றது பெரிய சாதனை. பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  46. எப்படித்தான் இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வெச்சுண்டு இருக்கேளோ தெரியலை.

    என்னால இவ்வளவு கோர்வையா எழுத முடியமான்னு சந்தேகமா இருக்கு.

    உங்களுக்கும், எனக்கும் நிறைய ஒத்துமை இருக்கு. நானும் உங்கள மாதிரி 45 வயசுலதான் எம்.ஏ தமிழ் மற்றும் எம்.பில் படித்தேன். வழக்கம் போல் ஆபீஸ், வீட்டு வேலை எல்லாவற்றையும் செய்து கொண்டு.

    ReplyDelete
  47. நண்பர்களதான் நெனப்புல வச்சிருக்கீங்கனு பாத்தா அவங்க போட்டுகிட்டு வார டிரஸ் கூடவா நெனப்பில வச்செக்க மிடியும். படிப்பிலயும் செமயா ஸ்கோரு பண்ணிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. mru October 19, 2015 at 4:13 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //நண்பர்களதான் நெனப்புல வச்சிருக்கீங்கனு பாத்தா அவங்க போட்டுகிட்டு வார டிரஸ் கூடவா நெனப்பில வச்செக்க மிடியும்.//

      அந்த அளவுக்கு அவனுடன் (என்னுடன் 9th + 10th மட்டும் படித்த ஸ்ரீநிவாஸன் என்பவனுடன்) நான் அன்று மிகவும் பாசத்துடன் பழகி வந்தேன்.

      //படிப்பிலயும் செமயா ஸ்கோரு பண்ணிருக்கீங்க.//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      Delete
  48. எல்லா வாத்தியார்களின் பெயர்கள் நண்பர்களின் பெயர்களையும் நினைவில் வைத்திருந்து நீங்கள் சொல்வதுபோல எங்களுடய பள்ளி நினைவுகளை நினைவில் கொண்டு வரவே முடியலயே.

    ReplyDelete
  49. ஒரு மரத்தில் குடியிருந்த பல விதப் பறவைகள்...பரந்த அனுபவம்தான் உங்களுடையது...

    ReplyDelete
  50. அருமையான அனுபவப் பகிர்வுகள்!

    ReplyDelete
  51. உங்கள் அக்கா, உங்களோட 1ம் வகுப்பு சினேகிதனை அடையாளம் கண்டுகொண்டது ரொம்ப ஆச்சர்யம்தான். அவங்க வயசு, 50+ வருஷத்துக்கு முன்ன பார்த்த ஆளை ஞாபகம் வச்சுக்கணும்னா... வாவ்.. (அவங்க இப்போ 80+ல இருப்பாங்களே)

    உங்கள் பால்ய நண்பர்கள் ஸ்ரீனிவாசன், செல்லமணி, ராமனாதம் போன்றோர்கள் அப்புறம் தொடர்பு கொண்டாங்களா?

    எஸ் எஸ் எல் சிக்கு அப்புறம் நீங்க படிக்க முடியாமல் (பணத்தின் காரணமா), சிலபல ஆரம்ப வேலைகளைச் செய்து கடைசியில் BHEL நிறுவனத்துல சேர்ந்துட்டேன்னு சொல்லியிருக்கீங்க. நீங்க ஒரு வேலைல சேர்ந்தது உங்க அப்பாவுக்கு நிம்மதியாயிருந்திருக்கும். (இதனைப் படிக்கும்போது உங்களுக்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்ட உணர்வு தோணுது. 25-27 வயதுலயே. எப்படி உங்களுக்கு அதுக்குள்ள மெச்சூரிட்டி வந்தது? அதைப்பற்றி ஏதாகிலும் எழுதியிருக்கீங்களா? பணத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு செலவுக்கு கேட்பீங்களா இல்லை அப்பா ரொம்ப நாள் உங்களோட இல்லையா?)

    வேலைக்குப் போய், திருமணமாகி, அப்புறம் மூத்த பையனே ஒரு வேலைக்குப் போனப்பறம் (40க்குள்ளேயா அல்லது 45ஆ) நீங்கள் படிப்பில் ஆர்வம் கொண்டு பி.காம், எம்.ஏ, பி.ஜி டிப்ளமா இவற்றைப் படித்ததை நினைத்து எனக்கு ஆச்சர்யம். இதனால் உங்களுக்கு, வேலையில் பிரயோசனம்-ப்ரொமோஷன் போன்றவை, என்று நினைத்துச் செய்தீர்களா இல்லைனா, மற்ற பொழுதுபோக்கு இல்லாத காலம் என்பதால், நாம படிச்சா, நம்ம பசங்களும் படிப்பாங்க என்று நினைத்துப் படித்தீங்களா?

    இதை எழுதும்போது 89ல் நடந்த சம்பவம் ஞாபகம் வருது. அப்போ சென்னையில் ஒரு ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். மதிய உணவு நேரம். ரிசப்ஷனில் ரொம்பப் பெரிய பணக்காரப் பையன், ஆனால் படிப்பு அதிகமில்லை, சும்மா வீட்டுல இருக்கவேண்டாம்னு வேலைக்குச் செல்பவன், ரிசப்ஷனிஸ்டா இருந்தான். நான் மற்றும் என் நண்பன். அப்போ ஒரு ஜோசியக்காரப் பையன் உள்ளே நுழைந்தான். (தெலுகு). எங்க மூணு பேர்ட்டயும், ஒரு பூவை மனசுல நினைச்சுக்கோங்க, பழத்தை நினைங்க போன்று பலவற்றைச் சொல்லி, சட் சட் என்று எங்ககிட்ட சொல்லிட்டான். நாங்க அதீத ஆச்சர்யம். அப்போ அவன்ட, இது என்ன சித்து வேலையா என்று கேட்டோம் (மனத்தைப் படிச்சுச் சொல்றயா என்று). அவனிடம், சரி.. நாங்கள் என்ன படித்திருக்கிறோம், எவ்வளவு படிப்போம் எதிர்காலத்தில் என்று கேட்டோம். அதற்கு அவன், ரிசெப்ஷனிஸ்ட் முகத்தைப் பார்த்து, 'இவருக்கு சரஸ்வதி கடாட்சம் இல்லவே இல்லை. இவர் நல்ல படிப்பு படித்திருக்கவே முடியாது' என்றான் (ரிசெப்ஷனிஸ்ட் செக்கச் செவேல்னு நடிகர் மாதிரி, கைல தங்க வாட்ச், செயின் எல்லாம் போட்டிருப்பார்). அப்புறம் என்னைப் பார்த்து, நீங்க, 'இன்னும் படிக்கணும், இன்னும் படிக்கணும்'னு ஒவ்வொரு சமயமும் ஆரம்பிப்பீங்க, ஆனால் உங்களால் இப்போது உள்ளதைவிட அதிகமாகப் படிக்கமுடியாது என்று சொன்னான். இந்த மாதிரி அவன் சொன்னது எங்களுக்கு ரொம்ப அதிசயமா இருந்தது. (அதுக்கேத்தபடி நான் வேறு அதிக குவாலிபிகேஷன் படிக்கவே இல்லை.. ஆரம்பித்ததும் முடிந்ததில்லை).

    உங்கள் கான்டாக்ட் செமினார் அனுபவமும், படிப்பு அனுபவமும் மிகவும் ரசனையா எழுதியிருக்கீங்க. அதுவும், கல்யாணமாகி,பெரிய குழந்தைகள்லாம் இருக்கறவர், இப்படி மாங்கு மாங்கென்று செமினார்லாம் அட்டென்ட் செய்து, தொடர்ந்து இரண்டு பரீட்சைகள் ஒரு நாளில் என்று 3-4 நாட்கள் எழுதியது அதிசயம்தான்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் January 25, 2018 at 4:43 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //உங்கள் அக்கா, உங்களோட 1-ம் வகுப்பு சினேகிதனை அடையாளம் கண்டுகொண்டது ரொம்ப ஆச்சர்யம்தான். அவங்க வயசு, 50+ வருஷத்துக்கு முன்ன பார்த்த ஆளை ஞாபகம் வச்சுக்கணும்னா... வாவ்.. (அவங்க இப்போ 80+ல இருப்பாங்களே)//

      என் பெரிய அக்காவான அவளுக்கு ஞாபக சக்தி என்னைவிட மிகவும் அதிகம். இப்போது அவங்களுக்கு வயது 78+ ஆகிறது. என்னோடு 1-ம் கிளாஸ் படித்த பூபதி என்பவன், என் பணி ஓய்வின் போது (24.02.2009) நான் கொடுத்திருந்த இரவு விருந்துக்கு வருகை தந்திருந்தான். அப்போது என் பெரிய அக்கா அவனை சந்தித்துப்பேச நானே ஏற்பாடு செய்தேன்.

      //உங்கள் பால்ய நண்பர்கள் ஸ்ரீனிவாசன், செல்லமணி, ராமனாதன் போன்றோர்கள் அப்புறம் தொடர்பு கொண்டாங்களா?//

      இல்லை. அவர்கள் இப்போது எந்தெந்த ஊர்களில் உள்ளார்களோ, தெரியவில்லை.

      //எஸ் எஸ் எல் சிக்கு அப்புறம் நீங்க படிக்க முடியாமல் (பணத்தின் காரணமா), சிலபல ஆரம்ப வேலைகளைச் செய்து கடைசியில் BHEL நிறுவனத்துல சேர்ந்துட்டேன்னு சொல்லியிருக்கீங்க. நீங்க ஒரு வேலைல சேர்ந்தது உங்க அப்பாவுக்கு நிம்மதியாயிருந்திருக்கும். (இதனைப் படிக்கும்போது உங்களுக்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்ட உணர்வு தோணுது. 25-27 வயதுலயே. எப்படி உங்களுக்கு அதுக்குள்ள மெச்சூரிட்டி வந்தது? அதைப்பற்றி ஏதாகிலும் எழுதியிருக்கீங்களா?//

      நான் BHEL வேலைக்குச் சேர்ந்த தேதி: 04.11.1970. அப்போது என் வயது 19+

      எனக்கு 22+ வயது ஆகும் போதே திருமணம் ஆகிவிட்டது. என் திருமண நாள்: 03.07.1972. என்னவளுக்கு அப்போது 18+ வயது மட்டுமே.

      எனக்கு முழு மெச்சூரிடி வராவிட்டாலும், எனக்கு 20 வயதுக்குள்ளாகவே, நிறைய சபலங்களும், ஆசைகளும், பேரெழுச்சியும், அந்த இன்பங்களைக் காண வேண்டும் என்ற பேராவலும் ஏற்பட்டு விட்டன. :)))))

      >>>>>

      Delete

    2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //பணத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு செலவுக்கு கேட்பீங்களா இல்லை அப்பா ரொம்ப நாள் உங்களோட இல்லையா?)//

      நான் BHEL இல் L.D.C. யாக வேலைக்குச் சேர்ந்த போது எனக்கு முதன் முதலாக அடிப்படைச் சம்பளம் ரூ. 140 மட்டுமே. வருட இன்க்ரீமெண்ட் ரூ. 4 மட்டுமே. Scale of Pay 140-4-160. இதர பஞ்சப்படி, வீட்டுவாடகைப்படி எல்லாம் சேர்த்து ரூ. 100 மட்டும் கிடைத்தது. ஓவர் டைம் பணமாக மாதம் ரூ. 50 க்கு மேல் 100க்குள் கிடைக்கும். எல்லாம் சேர்த்து மாதம் சுமார் 300 to 325 கிடைத்து வந்தது.

      அப்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 20 மட்டுமே. ஒரு பவுன் (8 கிராம்) ரூ.160 மட்டுமே.

      நான் சேர்ந்த பிறகே, BHEL இல் வருடம் ஒருமுறை போனஸாக ரூ. 1800 வரை கொடுக்கத் துவங்கியிருந்தார்கள். இரண்டாம் வருடம் முதல் எனக்கும் முழு போனஸ் கிடைக்க ஆரம்பித்தது.

      என் தினப்படி பஸ் சார்ஜ் + கேண்டீன் டோக்கன் முதலியவற்றிற்கு மட்டும் தனியாக ஒரு 100-150 எடுத்து வைத்துக்கொண்டு மீதியை அப்பாவிடம் கொடுத்து விடுவேன்.

      நான் BHEL வேலைக்குச் சேர்ந்த பிறகு என் அப்பா நாலரை ஆண்டுகள் மட்டுமே இருந்தார். எனக்குக் கல்யாணம் ஆகி சுமார் 34 மாதங்கள் மட்டுமே இருந்தார். என் மூத்த பிள்ளை பிறந்து அவன் 10 மாதக்குழந்தையாய் நடப்பதையும் பார்த்து விட்டார். என் அப்பா காலமான நாள்: 30.04.1975 அப்போது என் வயது 25+ மட்டுமே. நான் என் பெற்றோருக்கு கடைசி பிள்ளை ஆனதால், எனக்கு நினைவு தெரிந்து என் அப்பாவுடன், நான் சேர்ந்து இருந்த நாட்கள் மிகவும் கம்மியே. சுமார் 15 வருடங்கள் [1961--1975] மட்டுமே இருக்கலாம்.

      >>>>>

      Delete

    3. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)

      //வேலைக்குப் போய், திருமணமாகி, அப்புறம் மூத்த பையனே ஒரு வேலைக்குப் போனப்பறம் (40க்குள்ளேயா அல்லது 45ஆ)//

      1974 மார்ச்சில் பிறந்த என் மூத்தபிள்ளை தன் 18-19 வது வயதிலேயே, முதலில் சென்னை, பிறகு பெங்களூர், பிறகு துபாய் என வேலைக்குப் போய் விட்டான்.

      அவனுக்கும் நான் சிறு வயதிலேயே (03.05.1998) திருமணம் செய்து வைத்து விட்டேன். அதனால் என் 49+ வயதில் எனக்கு முதல் பேத்தி (18.07.1999 இல்) பிறந்து, நான் தாத்தா என்ற பிரமோஷனும் வாங்கிவிட்டேன்.

      >>>>>

      Delete

    4. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)

      //நீங்கள் படிப்பில் ஆர்வம் கொண்டு பி.காம், எம்.ஏ, பி.ஜி டிப்ளமா இவற்றைப் படித்ததை நினைத்து எனக்கு ஆச்சர்யம். இதனால் உங்களுக்கு, வேலையில் பிரயோசனம்-ப்ரொமோஷன் போன்றவை, என்று நினைத்துச் செய்தீர்களா இல்லைனா, மற்ற பொழுதுபோக்கு இல்லாத காலம் என்பதால், நாம படிச்சா, நம்ம பசங்களும் படிப்பாங்க என்று நினைத்துப் படித்தீங்களா?//

      பள்ளிப்படிப்புடன் தடைபட்டு விட்ட என் படிப்பைத் தொடர்ந்து, நான் படிக்க வேண்டும் என்ற ஏதோவொரு உந்துதலுடன் கூடிய ஆர்வம் + சமூக அந்தஸ்து வேண்டி + என் நலம் விரும்பிகள் சிலரின் தூண்டுதல் + ஒருவேளை, என் பணி ஓய்வுக்கு முன்பாவது ஆபீஸர் ஆவதற்கானதொரு வாய்ப்பு ஏற்படலாம் என்றதொரு சின்னதொரு சபலம் + நம்பிக்கை .... இவையெல்லாம் சேர்ந்து என்னை மேற்கொண்டு படிக்க வைத்தன.

      அதனால் எனக்கு எந்தவொரு மானிடரி பெனிஃபிட்ஸ்ஸும் இல்லாமல், ஒரு பெருமைக்காக மட்டுமே, மிகுந்த போட்டாப் போட்டிகளுக்கு இடையே, பணி ஓய்வுக்கு ஓராண்டுக்கு முன்பு OFFICER POST எனக்கு அளிக்கப்பட்டது. 25.07.2007 அன்று கிடைக்கும் என மிகவும் நான் எதிர்பார்த்தேன். கடைசி நேரத்தில் ஓர் மஹானுபாவர் செய்த கிரிமுரி வேலைகளால், ஏதோ ஒருவித DIRTY POLITICS ஆல், அந்த ஆண்டு, அந்த நாளில் எனக்குக் கிடைக்காமல் போனது.

      எல்லாம் நன்மைக்கே என நானும் நினைத்துக்கொண்டேன். இருப்பினும் 25.07.2008 அன்று சற்றும் நான் எதிர்பாராமலேயே எனக்கு ACCOUNTS OFFICER / FINANCE (CASH) என்ற பதவி உயர்வு அளிக்கப்பட்டு கெளரவிக்கபட்டேன். ஒரு லோயர் டிவிஷன் கிளர்க் ஆக சேர்ந்து 20 ஆண்டுகளில் ஓர் சூப்பர்வைஸர் ஆகி, அடுத்த 15 ஆண்டுகளில் சீஃப் சூப்பர்வைஸரும் ஆகி கடைசி ஓர் ஆண்டு மட்டும் EXECUTIVE ஆக, எனக்குப் பிராப்தம் கிடைத்தது. இதற்கு மேல் எனக்கும் எந்தவொரு பெரிய எதிர்பார்ப்புகளும் கிடையாது.

      என் அலுவலகத்தில் சூப்பர்வைஸர் ஆவதும், பிறகு எக்ஸிக்யூடிவ் ஆவதும் மிக மிக கஷ்டமான கண்டங்கள். கிடைக்க வேண்டிய DUE உள்ளவர்களில் மிகவும் வடிகட்டி 5 to 10% மட்டுமே தருவார்கள்.

      இதற்கு வெறும் QUALIFICATION மட்டுமே போதாது. ஆனால் பல்வேறு Higher Qualifications களும் நிச்சயமாகத் தேவைப்படும். நாம் மாங்கு மாங்குன்னு வேலை செய்தால் மட்டும் போதாது. Interview Performance, நம் Marks in Confidential Reports, Capability, Seniority, Our Special Achievements, Suitability, காக்காபிலிடி போன்ற பல Factors, HOD’s Recommendations, Political Pressure, Caste feelings, Quota Systems என பலவும் விளையாடி நம்மை மிகவும் வெறுக்கடித்துக்கொண்டே இருக்கும். நாம் நம் பிரமோஷன் விஷயமாக எந்தவொரு எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ளவும் முடியாது. ஒவ்வொரு வருஷமும் July 24 விடிய விடிய தூங்காமல் Final List of Promotions இறுதி முடிவு எடுப்பார்கள். July 25 காலையில் Promotion Orders கொடுப்பார்கள். இவை கடைசி நிமிடம் வரை பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டவைகளாகவே இருக்கும்.

      >>>>>

      Delete

    5. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (5)

      //இதை எழுதும்போது 89ல் நடந்த சம்பவம் ஞாபகம் வருது. அப்போ சென்னையில் ஒரு ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். மதிய உணவு நேரம். ரிசப்ஷனில் ரொம்பப் பெரிய பணக்காரப் பையன், ஆனால் படிப்பு அதிகமில்லை, சும்மா வீட்டுல இருக்கவேண்டாம்னு வேலைக்குச் செல்பவன், ரிசப்ஷனிஸ்டா இருந்தான். நான் மற்றும் என் நண்பன். அப்போ ஒரு ஜோசியக்காரப் பையன் உள்ளே நுழைந்தான். (தெலுகு). எங்க மூணு பேர்ட்டயும், ஒரு பூவை மனசுல நினைச்சுக்கோங்க, பழத்தை நினைங்க போன்று பலவற்றைச் சொல்லி, சட் சட் என்று எங்ககிட்ட சொல்லிட்டான். நாங்க அதீத ஆச்சர்யம். அப்போ அவன்ட, இது என்ன சித்து வேலையா என்று கேட்டோம் (மனத்தைப் படிச்சுச் சொல்றயா என்று). அவனிடம், சரி.. நாங்கள் என்ன படித்திருக்கிறோம், எவ்வளவு படிப்போம் எதிர்காலத்தில் என்று கேட்டோம். அதற்கு அவன், ரிசெப்ஷனிஸ்ட் முகத்தைப் பார்த்து, 'இவருக்கு சரஸ்வதி கடாட்சம் இல்லவே இல்லை. இவர் நல்ல படிப்பு படித்திருக்கவே முடியாது' என்றான் (ரிசெப்ஷனிஸ்ட் செக்கச் செவேல்னு நடிகர் மாதிரி, கைல தங்க வாட்ச், செயின் எல்லாம் போட்டிருப்பார்). அப்புறம் என்னைப் பார்த்து, நீங்க, 'இன்னும் படிக்கணும், இன்னும் படிக்கணும்'னு ஒவ்வொரு சமயமும் ஆரம்பிப்பீங்க, ஆனால் உங்களால் இப்போது உள்ளதைவிட அதிகமாகப் படிக்கமுடியாது என்று சொன்னான். இந்த மாதிரி அவன் சொன்னது எங்களுக்கு ரொம்ப அதிசயமா இருந்தது. (அதுக்கேத்தபடி நான் வேறு அதிக குவாலிபிகேஷன் படிக்கவே இல்லை.. ஆரம்பித்ததும் முடிந்ததில்லை).//

      இதைப்படிதத்தும் எனக்கு ஓர் மிகச்சிறிய கதை நினைவுக்கு வந்தது. எனது நண்பன் ஒருவன் வேறு ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தான். அவன் ஒருநாள், திடீரென்று, தன் சக ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும், அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்து விட்டான். அவனிடம் பலரும் அருள் வாக்கு சொல்லச் சொல்லி அவனை நாடி அவன் வீட்டுக்கே வந்து போய்க்கொண்டு இருந்தனர்.

      ஒரு நாள் காலையில் அவனுடன் வேலை பார்க்கும் ஒருவன் அவனை நாடி வந்தான். நானும் அப்போது அங்கு அமர்ந்திருந்தேன். வந்தவன் “ஸ்வாமி என் ஆபீஸ் மேஜை டிராயரில் ஓர் ஒஸத்தியான பேனா வைத்திருந்தேன். அதைக் காணோம். அது எனக்குத் திரும்பக்கிடைக்குமா?” என்று கேட்டான்.

      தன் கண்களை உருட்டியபடி அவனைப்பார்த்த அந்த அருள் வாக்கு சொல்லும் நண்பன் “அது உனக்குக் கிடைக்காது; நீ வேறு பேனா வாங்கிக்கொள்” என்றான். இவனிடம் வந்து அருள் வாக்கு கேட்ட அவனும், “சரி” என்று சொல்லிப் புறப்பட்டுப் போய் விட்டான்.

      பிறகு நான் என் நண்பனிடம் “எப்படி அவ்வளவு உறுதியாக அந்தப் பேனா கிடைக்காது” என்று அவனிடம் சொன்னாய் எனக் கேட்டேன்.

      அதற்கு அவன் என் காதருகே வந்து “அந்த பேனாவை அவன் டிராயரிலிருந்து கிளப்பியதே நான் தான்” என்றான்.

      இது எப்படி இருக்கு ! :)))))

      >>>>>

      Delete
    6. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (6)


      //உங்கள் கான்டாக்ட் செமினார் அனுபவமும், படிப்பு அனுபவமும் மிகவும் ரசனையா எழுதியிருக்கீங்க. அதுவும், கல்யாணமாகி,பெரிய குழந்தைகள்லாம் இருக்கறவர், இப்படி மாங்கு மாங்கென்று செமினார்லாம் அட்டென்ட் செய்து, தொடர்ந்து இரண்டு பரீட்சைகள் ஒரு நாளில் என்று 3-4 நாட்கள் எழுதியது அதிசயம்தான்.//

      காண்டாக்ட் செமினார் க்ளாஸ் அட்டெண்ட் செய்வதற்காகவே திருச்சியிலிருந்து, விடியற்காலம் 4 மணிக்குள் புறப்பட்டு, மதுரை வரை போய், நான் சனி + ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் இருந்த, இராஜராஜேஸ்வரி லாட்ஜில் ரூம் போட்டு தங்கின நாட்களும் பல உண்டு.

      ஒன்ஸ் படிக்க என்று இறங்கிவிட்டால், இதுபோலெல்லாம் செய்து, எப்படியாவது பாஸ் செய்வதே நம் நோக்கமாக இருக்கணும்.

      அன்புடன் கோபு

      Delete
    7. “அந்த பேனாவை அவன் டிராயரிலிருந்து கிளப்பியதே நான் தான்” - இது நிஜமா நடந்த நிகழ்ச்சி போலிருக்கு. நீங்க 'கதை'னு ஆரம்பிச்சிருக்கீங்களே. எப்போதுமே, தெரியுமோ தெரியாதோ, ஒருவர் கையில் ரேகையைப் பார்த்து சும்மா ஒன்று ரெண்டு அடிச்சுவிட்டா, பார்க்கிறவங்கள்லாம் அவங்க கையைக் காட்ட ஆரம்பிச்சுடுவாங்க (என் உறவினன், பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, இப்படிச் செய்து எல்லாப் பெண்களும் கையைக் கொடுத்துடுவாங்கன்னு சொல்லியிருக்கான்).

      எப்போதும்போல், 'காக்காபிலிட்டி' போன்ற சொல் நயத்தையும், உண்மையாக எழுதுவதையும் (பேராவலும்...) ரசித்தேன். நன்றி.

      Delete
    8. நெல்லைத் தமிழன் January 26, 2018 at 8:45 PM

      //எப்போதும்போல், 'காக்காபிலிட்டி' போன்ற சொல் நயத்தையும், உண்மையாக எழுதுவதையும் (பேராவலும்...) ரசித்தேன். நன்றி.//

      எங்கும் எதிலும் ’காக்காபிலிட்டி’க்கு மட்டுமே அதிக செல்வாக்கு உள்ளதாக நான் பலமுறை என் அலுவலக அனுபவங்களால் உணர்ந்துள்ளேன்.

      சிலர் நம் வாயைக்கிளறி, நாம் மனம் திறந்து சொல்லும் சில உண்மைகளை, மேலிடத்தின் கவனத்திற்கு காது மூக்கு வைத்துக் கொண்டுபோய், நம்மைப்பற்றி போட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

      உண்மையாக ஆபீஸ் வேலைகளை சின்ஸியராகப் பார்ப்பவர்களைவிட KKTK வேலை செய்து பிழைப்பவர்களே அதிகம்.

      வெளியில் நம்முடன் மேல் அதிகாரிகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசுபவன் கூட, அங்கு உள்ளே போனதும், அவரிடம் KKTK வேலை செய்து விடுவான்.

      KKTK என்றால் ’காலைக் கழுவி தண்ணீர் குடித்தல்’ என்பதாகும்.

      எதற்கெடுத்தாலும் அதிகாரியின் காலைக் கழுவி அந்தத் தண்ணீரை குடிக்கத் தயாராக இருக்கும் மிகக்கேவலமான ஜன்மங்கள், இவர்கள்.

      இவன்களுக்கெல்லாம் எந்தப் பிரமோஷனும் தங்கு தடையின்றி, உரிய நேரத்தில் கிடைத்து விடுவது உண்டு.

      ’நன்கு வேலை செய்பவனுக்கு வேலையைக்கொடு ... வேலை செய்யாமல் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டு OB அடிப்பவனுக்கு பிரமோஷனைக்கொடு’ என்பது சில அலுவலங்களில் உள்ள எழுதப்படாத சட்டமும் கொள்கையுமாகும்.

      Delete